Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

ஆ. சதாசிவம் (தொகுப்பாசிரியர்)

---------------------------------------------------

சாகித்திய மண்டல வெளியீடு

ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

ஈழத்துப்

பூதன்றேவனார்

காலந் தொடக்கம்

கலாநிதி

நடேசபிள்ளை

காலம் வரையும்

இலங்கையில்

வாழ்ந்த சிறந்த

தமிழ்ப் புலவர்களின்

கவிதைக்

களஞ்சியம்

தொகுப்பாசிரியர்

ஆ. சதாசிவம்

---------------------------------------------

ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

தொகுப்பாசிரியர்

ஆ. சதாசிவம்

வெளியீடு:

சாகித்திய மண்டலம்

135, தர்மபால மாவத்தை

கொழும்பு 7

---------------------------------------------

பதிப்பு - 1966

பதிப்புரிமை

பதிப்பகம்:

திருமகள் அழுத்தகம்

சுன்னாகம்.

--------------------------------------------

பொருளடக்கம் பக்கம்

அணிந்துரை vii

சிறப்புப் பாயிரம் xv

முகவுரை xvii

1. சங்ககாலம் 1

2. யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் காலம் 1216-1621 8

3. போர்த்துக்கேயர் காலம் 1621-1658 77

4. ஒல்லாந்தர் காலம் 1658-1796 92

5. ஆங்கிலேயர் காலம் 1796-1947 131

6. தேசிய எழுச்சிக்காலம் 1948- 429

பிற்சேர்க்கை 503

புலவர் அகராதி 551

நூல் அகராதி 556

செய்யுள் அகராதி 566

---------------------------------------------

அணிந்துரை

இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரும்

சாகித்திய மண்டலச் செய்ற்குழு உறுப்பினருமாகிய

திரு. வி. செல்வநாயகம் அவர்கள்

அளித்தது.

ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் 'ஈழத்துத் தமிழ்க் கவிதை களஞ்சியம்' என்னும் இந்நூல், பல நூற்றாண்டுகளாக இந்நாடு தமிழிலக்கியப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. ஈழநாட்டுப் புலவர்கள் இயற்றிய பல பிரபந்தங்களுட் சிலவே அச்சிடப்பட்டுள்ளன. அங்ஙனம் அச்சிடப்பட்டுள்ளனவற்றுட் பெரும்பாலானவை ஒரு முறை மட்டும் பதிப்பிக்கப்பட்டமையால், அந்நூற் பிரதிகள் அருகியே காணப்படுகின்றன. அவற்றையும் ஏட்டு வடிவிலுள்ள ஏனை நூல்களையுந் தேடிப்பெற்று, அவற்றிலுள்ள செய்யுட்களுட் சிலவற்றைத் திரட்டி நூல்வடிவில் உதவிய கலாநிதி ஆ. சதாசிவம் அவர்களின் தமிழ்த்தொண்டும், அதனை அச்சிடுதற்கு வேண்டிய பணத்தை உதவி ஊக்கிய இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் பணியும் பாராட்டற் குரியவை. ஈழநாட்டுத் தமிழிலக்கிய வளத்தினை வரலாற்று முறைப்படி ஆராய்வதற்கும், ஈழத்துத் தமிழ்ப் பிரபந்தங்களின் இலக்கியச் சிறப்பினை மட்டிடுவதற்கும் சிறந்த கருவியாக இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலிலே தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்களுட் பல கற்பனை வளமும் ஓசைச் சிறப்பும் வாய்க்கப் பெற்றவை. நாயக்கர் காலப்பிரிவிலும் ஆங்கிலேயர் காலப்பிரிவிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த பெரும் புலவர்கள் இயற்றிய செய்யுட்களோடு ஒப்பிட்டுப் பாராட்டக்கூடிய அத்துணைச் சிறப்பு வாய்ந்த செய்யுட்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. அத்தகைய செய்யுட்களை இயற்றிய புலவர்களையும் எம்முடைய நாடு தோற்றுவித்துள்ளது என்பதை நாம் அறிந்து பெருமிதம் கொள்ளுதற்கும், எம்முடைய நாட்டில் வாழ்ந்த புலவர்களை நாம் போற்றுவதோடு அவர்கள் இயற்றிய நூல்களையுந் தனிச்செய்யுட்களையும் நாம் தேடிப் பெற்றுப் படித்து அனுபவிப்பதற்கும் இந்நூல் ஒரு கருவியாகின்றது. எம்முடைய நாட்டில் எழுந்த நூல்களுள் இன்னும் அச்சிடப்படாதனவற்றைத் தக்க முறையிலே ஆராய்ந்து அச்சிடுவதற்கு வேண்டிய ஊக்கத்தை இந்நூல், தமிழறிஞர்களிடையே எழச்செய்யும் என்பதில் ஐயமில்லை. இலங்கைச் சாகித்திய மண்டலம் தொடர்ந்து இத்தகைய பணிகளுக்குப் பொருளுதவி செய்து வருமாயின், அது எம்முடைய இலக்கியத்துக்குப் பெரும் பணி புரிந்ததாகும்.

வி.செல்வநாயகம்.

14.9.1966.

-----------------------------------------------------------------------

அணிந்துரை

யாழ்ப்பாணம், ஆறுமுக நாவலர் காவிய பாடசாலைத்

தலைமைத் தமிழ்ப் பண்டிதர்

வித்துவான் ந. சுப்பையபிள்ளை அவர்கள்

அளித்தது.

கல்வி கேள்விகளால் அறிவில் மேம்பட்ட சான்றோர் புலவர் எனப்படுவர்; புலமையை யுடையவர் என்ற காரணத்தால் ஆகிய பெயர் இது; புலமை- அறிவு. புலவர்: கவி, கமகன், வாதி, வாக்கி என நால்வகையினர் எனவும், அவருள்ளே கவி என்பார் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என நால்வகைப்படுவர் எனவும் குணவீரபண்டிதர் தமது வெண்பாப் பாட்டியலிற் கூறுவர். புதியவாகச் செய்யுள் புனைந்து இயற்றவல்ல புலவரே 'கவி' என்றும், 'கவிஞர்' என்றும் வழங்கப்படுவர். கமகன் என்போர் ஒருவர் சொல்லிய நூலினை அல்லது செய்யுளைத் தாம் பயிலாதிருந்தும், விசேட ஞானமாகிய நுண்மதியாலாவது கல்வி கேள்விகளின் ஆற்றலினாலாவது அதன் மெய்ப்பொருளை விரித்து உரைக்கவல்ல புலவராவர். இத்தகைய புலமையினாற்றான் வில்லிபுத்தூரரை அருணகிரிநாதர் வென்றதும், வில்லிபுத்தூரர் குறைபாடுற்றுத் தோல்வியுற்றதும் என்று வரலாறு கூறும். வாதி என்போர் தாம் நிலைநாட்ட எடுத்துக் கொண்ட பொருளாகிய மேற்கோளினை (பிரதிஞ்ஞையை), ஏதுவும் (காரணமும்) எடுத்துக் காட்டும் (உதாரணமும்) காட்டித் தாபித்து முடித்து முறைப்படி வாதஞ் செய்தலால் எதிர்வாதஞ் செய்வோரை வெல்லவல்ல புலவராவர். ஆதிசங்கராசாரிய சுவாமிகள் அக்காலத்தில் ஏனைய மதத்தவர்களை வாதில் வென்று தமது அத்வைத மதத்தைத் தாபித்தமை இத்தகைய புலமையின் பாற்படும். வாக்கி எனப்படுவோர் தாம் விரித்துப் பேசலுற்ற பொருளை அவைக்களத்திலிருந்து கேட்போர் யாவருக்கும் இனிது விளங்கவும் சுவை ததும்பவும் சுருங்கிய சொல்லாற் பொருட் செறிவு பொருந்த விரித்துப் பிரசங்கிக்க வல்ல புலமையாளராவர். இவ்வகையினருள்ளே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் முதன்மையாளராக விளங்கியமை உலகப்பிரசித்தமானது.

இனி, ஆசுகவி முதலாகிய நால்வகைக் கவிஞருள்ளே ஆசுகவி என்போர் 'இவ்வெழுத்தாலே பாடுக, இச்சொல்லாலே பாடுக, இப்பொருள்பற்றிப் பாடுக, இவ்யாப்பினாலே பாடுக, இவ்வலங்காரம் பொருந்தப் பாடுக' என்பனபோல ஒருவர் கூறியபொழுது உடனே அவரெதிரே அவ்விதம் பாடி முடிக்கும் வல்லமையுடைய புலவராவர்; (ஆசு- விரைவாக, (ப்பாடவல்ல); கவி - கவிஞன்.) காளமேகப்புலவர் போல்வார் இவ்வகையில் முதன்மைபெற்று விளங்கியவர். மதுரகவிப்புலவராவர் ஓசையும் பொருளும் இனியவாய், முழுவதுஞ் செஞ்சொல்லாய், அலங்காரமும் பொருளுந் தெள்ளிதிற் புலப்பட, கேட்டோர் புகழும்படி செய்யுள் பாடுந் தகைமை யுடையவர். உதாரணமாக, ஓளவையார் பாடிய தனிப்பாடல்கள் பெரும்பாலன இவ்வகையின என்னலாம். சித்திரக்கவிப் புலவர் எனப்படுவோர் மாலைமாற்று, சக்கர பந்தம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, வினாவுத்தரம் முதலிய பலவகைப்படும் விசித்திரங்கள் அமையும்படி செய்யுளைச் சந்தங்கெடாமல், எழுத்துக் குற்றம் முதலிய ஐவகைக் குற்றமும் இன்றிப் பாடவல்ல புலவராவர். சித்திரக் கவியின் பாற்படுஞ் செய்யுள் வகைகளின் இலக்கணங்களை உதாரணத்துடன் தண்டியலங்காரம் முதலிய அணியிலக்கண நூல்களிற் காணலாம். வித்தாரகவி என்பார் பல செய்யுள் தொடர்ந்துவரும் தொடர்நிலைச் செய்யுள் அல்லது அடிபலவாய் விரிந்து செல்லும் தனிப்பாச்செய்யுள் ஆகிய இவற்றைப் பாடவல்ல கவிஞராவர். (தொடர் நிலைச் செய்யுள் - பதிகம் இரட்டைமணிமாலை கலம்பகம் முதலாகிய சிறுபிரபந்தங்களும், காவியங்களும். அடிபலவாய் விரிந்த தனிப்பாச் செய்யுள் - பத்துப் பாட்டிலுள்ள ஒவ்வொரு நூலும், உலா, மடல் போல்வனவும்). ஆசுகவி முதலிய நான்கு பெயர்களும் அவ்வப் புலவர்களின் அவ்வத்தகைமை வாய்ந்த செய்யுளுக்கும் பெயராக வழங்கப்படுவனவாகும்.

கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைப் புலவர்களும் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவிஞர்களுமாயுள்ள நம் முன்னோர் பலர் இவ் வீழ மண்டலத்தின் கண்ணே காலத்துக்குக்காலந் தோன்றி, தங்கள் புலமையினாலுங் கவிதைகளாலுந் தமிழ் மொழியைப் பேணி வளர்த்து வந்தார்கள் என்பது வரலாற்று நூல்களால் அறியப்பட்ட பல புலவர்களின் நூல்களின் பெயர் மாத்திரம் அறியத்தக்கனவாகி, அந்நூல்கள் வெளிவராமலும் கிடைக்கப்பெறாமலு மிருத்தல் எம்மவரது தவக்குறைவின் பயனே என்னலாம்.

இந்நிலைமையில்,புது நூலாக வெளிவருகின்றது 'ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்பது. இது சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியய்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளையுந் துருவித் தேடிப்பெற்று, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்துந் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துக் கூறும் முறையில், ஆக்கப்பட்டுள்ள புதியதொரு தொகுப்பு நூலாகும். இவ்வித நூலாக்கப் பணியானது, சங்ககாலப் புலவர்களுங் கடைச் சங்கத்தை அண்மிய காலத்துப் புலவர்களுமாகிய பற்பல புலவர்களுடைய தனிப்பாடல்களையும் நூல்களையும் முற்காலத்துள்ள அரசரும் புலவரும் போன்ற சான்றோர் 'பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு' எனத் தொகுத்து வைத்த அரும்பணி போன்றதொரு பெரும்பணியாகும். அவ்வாறு அப்பணி முன்னைச் சான்றோராற் செய்யப்பட்டிலதேல், பத்துப்பாட்டு முதலிய அறிவுக் களஞ்சியங்களாயுள்ள நூல்களும் பாடல்களும் நின்று நிலவாது எங்களுக்குக் கிட்டாமல் மறைந்தொழிதல் ஒரு தலையாகும். காலவிகற்பத்தால் ஈழத்துத் தமிழ் கவிதைகளும் அவற்றையாக்கிய யுலவர் விபரங்களுங் காலகதியில் மறைந்து வருவதைக் கண்டு, அவ்வாறு மறைந்துபடாமற் பாதுகாத்தலை நோக்கமாகக் கொண்டு, இத்தொகுப்பு நூலை யாக்கித்தந்த கலா நிதி திரு. ஆ. சதாசிவம் அவர்களின் இவ்வரும்பெருந் தொண்டு இக்கால நிலைக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததொரு பணியாக மெச்சத்தக்கதாகும்.

பழங்காலத்தைய ஏட்டுச்சுவடிகளையும் அச்சேறிக் கிடைக்கப்பெறாமல் மறைந்துள்ள நூல்களையும் பாடல்களையும் திசைதொறுஞ் சென்று பிரயாசப்பட்டுத் துருவித் தேடிப்பெற்று, இத் தொகுப்பு நூலை யாக்கிக்த் தந்த தொண்டின் அருமை பெருமைகள் திரு.சி.வை.தாமோதரம்பிள்ளை, தாட்சினணாத்திய கலாநிதி திரு. உ.வே. சாமி நாதையர் போன்றார்கன்றி எம்மனோர்க்கு எளிதிற் புலப்படத்தக்கனவல்ல. தமிழ்போசும் எல்லாச்சாகியத்தவரும் ஏற்றுப் போற்றத்தக்கவாறு சகல சாகியப் புலமையாளர்களுடைய கவிதைகளும் இந்நூலிற் கோவைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன.

வித்துவசிரோமணி பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்களாலியற்றப்பட்ட 'ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்' கி.பி. 1939ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனால், அக்காலத்திலும் அதன் பின்னரும் வாழ்ந்து மறைந்த தமிழ்ப்புலவர்களையும் அவர்களின் நூல்களையும் தனிப்பாடல்களையும் அந்நூலினால் அறிதல் இயலாது. அக் கவிதைகளையும் புலமையாளரையும் தொகுத்து அறியும் வாய்ப்பும் இந்நூலாற் பெறத்தக்க ஒரு விசேட பயனாகும்.

இக்களஞ்சிய நூலுள் எடுத்துக் காட்டப்பட்ட பொருள் விளங்கமுடியாத செய்யுட்களுக்குப் பொருட் விளக்கம் அல்லது அரும்பதப் பொருள் போன்ற பகுதியும் சேர்க்கப்படுமாயின், அது அச்செய்யுள்களின் அருமை பெருமைகளை உணரவும், அவற்றைப் போற்றி வழக்கில் எடுத்தாண்டு பயண் பெறவும் ஏதுவாகும். தமது அரும்பெரு முயற்சியின் பயனாகிய இக்களஞ்சிய நூலை உலகிற்குத் தந்துதவிய கலாநிதி திரு. ஆ. சதாசிவம் அவர்கள் மேலும் இத்தகைய பணிகளை நிறைவேற்றி வாழவும் நீண்ட ஆயுள், உடல் நலம், பொருள்நலம் முதலிய பேறுகளைப் பெற்று வாழவும் அருள்புரியும் வண்ணம் எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகின்றோம்.

ந. சுப்பையபிள்ளை

15.4.1966

-------------------------------------------------------------

சிறப்புப் பாயிரம்

புலவர் பாண்டியனார் அவர்கள் இயற்றியவை

நேரிசையாசிரியப்பா

ஒரு பொருள் குறித்த பலசொல் வகையும்

பலபொருள் குறித்த வொருசொல் வகையுமென்

றிருவகைப் பட்ட திரிசொற் கிளவி

செய்யுட் சொல்லெனச் செந்தமிழ் மொழிநூல்

பழந்தொல் காப்பின் பணித்தது கூறுவார் 5.

திழந்த மதியினோ டெழுந்தது கூறுவார்

எல்லா மொழியிலு மெளிமையு மருமையுங்

கல்லார்க் கல்லது வல்லார்க் கில்லென

நல்லா ரெல்லாம் நவில்வது கேளார்

ஆங்கில மொழிச்சொல் லாக்க மின்றும் 10.

யாங்கணும் பயிலா விலத்தின் மொழிச்சொலும்

அச்சொல் லடியு மாதலை நினையார்

திரிசொ லின்றேற் புதுச்சொல் லாக்கம்

புரித லரிதெனப் புலங்கொள லில்லார்.

மொழிவளங் காட்டுஞ் சொல்வள மெல்லாம் 15.

அழியாது காப்பது தழகிய செய்யு

ளல்ல தில்லையென் றறிதலு மறியார்

வழக்குச் சொல்லே கலைச்சொல் லல்ல

தெழுத்துச் சொல்லென வில்லையென் றுளறி

மொழியின் மரபு முதியோர் மரபு 20.

அழியக் கொன்றுசொல் லாக்கஞ் செய்யும்

புல்லறி வாளர் போலிப் படைப்பினர்

நல்லறி வாளரை நகைசெய் தெள்ளுவார்

இழிவடைக் காமமு மிழிவுடை வழக்குமே

பொருளெனக் கொண்டு புனையுரை வரைவார் 25.

புலன்வழிச் செல்லும் பொதுவியன் மக்கள்

பலர்வழிச் செல்ல•ம பான்மை யுடையார்

கனைதுளி பொழிந்துழிக் காளான் போலப்

புனைபெயர் கொண்டு போந்தவிந் நாளில்

அன்னை மொழியி னயர்வு பொறாது 30.

முன்னை மரவும் பின்னை யாக்கமும்

ஒருங்குடன் பேணி யுயர்வு காப்ப

வெழுந்த புலுமை யெழத்திய லாளருள்

தொழுந்தகை யிறைவன் றூய வருளால்

மரபுவழி திறம்பாப் புலவர் மாண்பு 35.

நிலைபெறு மாறு மவர்வாய் நிகழ்த்துஞ்

சொல்லும் பொருளு மோசையுஞ் சொரியும்

பல்வகை நயமும் பாங்குறு முணர்வும்

மல்குறப் பின்னர் வாழுந் தமர்க்கு

நல்விருந் தாக நண்ணுதல் காட்டு

மெடுத்துக் காட்டென விலங்கு மாற்றாற்

றெடுத்துப் பாச்சில தொகுத்து விளக்கி

யீழத் தரசர் காலமொ டியைய

வீழத்துப் பூதந் தேவன் முதலா

வீழத் தெழுந்த புலவர் திறங்குறித் 45.

தீழத் துத்தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

எனத்தொகை நூலொன் றியற்றின னம்ம

தனக்கிணை யில்லாத் தண்டதமிழ் மரபு

வனப்போடு நிலவும் வகைபுரி நல்லோன்

றொல்கட லிலங்கையிற் றோற்றி நிறுவும் 50.

பல்கலைக் கழகச் சொல்வலர் தம்முள்

வராலுகள் வயல்வள மருவு

மராலிச் சதாசிவ மெனும்பெய ரவனே.

கலி விருத்தம்

வேந்தர் போயினர் வேளிரும் போயினர்

ஈந்த வள்ளல்கள் யாவரும் போயினர்

போந்த தீங்கினைப் போக்கிநம் ஆண்டவன்

தீந்த மிழ்த்திறஞ் செல்விதிற் காக்கவே.

-------------------------------------------------

முகவுரை

நூற்பெயர்-

'ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்னும் இந்நூல் ஈழநாட்டில் வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட சிறந்த தமிழ்ப்பாடல்களின் தொகுதியாகும் தமிழ்மொழி வழங்கும் நாடுகள் பல. அந்நாடுகளுள்ளே தமிழகமும் ஈழத்தின் பகுதிகளும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழ்மொழியின் தாயகமாய் விளங்குகின்றன. முச்சங்கங்கள் மூலங்கன்னித்தமிழை வளர்த்த பெருமையைப் பாண்டி நாடு பெற்றது. அவ்வித சங்கங்களின் தோற்றத்துக்குத் தான் இருப்பிடமாய் அமையாதபோதும், பூதன்றேவனோர் முதலிய செந்தமிழ்ப் புலவர்களைப் பாண்டி நாட்டு மதுரையம்பதிக்கு அனுப்பி,செந்நாப்புலவர்களுடன் ஒக்க அமர்ந்து தீந்தமிழ்ச் செல்லோவியங்களைப் புனையச் செய்த பெருமையை ஈழவளநாடு பெற்றது. அத்துடன், பிற்காலங்களிலே தமிழகத்திற் பிறந்த செந்தமிழ்ப் புலவோர் பலரைத் தான் அழைத்து அவர்களைக்கொண்டு பாடுவித்து அவர்தஞ் செஞ்சுவைக் கவிதைகளின் உரிமையையும் பெற்றது ஈழம்.

ஈழத்துத் தமிழ்ப் புலவர்களால் யாக்கப்பட்ட செய்யுளிலக்கியங்களுந் தனிப்பாடல்களும் ஓழத்து இயற்கைச் சூழலினடியிற் றோன்றியவை, மக்கள் தம் பண்பாட்டினையும் வாழ்க்கை முறைகளையுந் தமிழ் மரபு பிறழாது கூறுபவை, ஈழத்துக்கே சிறப்பாகவுரிய நல்லை, நயினை, மாவை, கோணாமலை, கதிர் காமம் முதலிய நூற்றுக்கு மேற்பட்ட தலங்களின் பெருமையைப் பத்திரசம் ததும்ப உணர்த்துபவை, இந்து, இசுலாமிய, கிருஸ்தவத் தமிழ் மக்களது பண்பாட்டின் ஒருமையையுஞ் சிறப்பியல்புகளையுஞ் சொல்லோவியங்களில் வடித்துக்காட்டுபவை. இங்ஙனம் அமைந்த சிறப்புடன் நூற்றுநாற்பத்துமூன்று ஈழத்துத் தமிழ்ப் புலவர்களாற் பாடப்பட்ட செய்யுளிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என்பனவற்றினின்றுந் தெரிந்தெடுத்த தீஞ்சுவைக் கவிதைகளின் களஞ்சியமாகிய இந்நூலுக்கு 'ஈழத்துத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம்' எனப் பெயரிடப்பட்டது.

நூலமைப்பு -

இந்நூல் ஈழத்துக் கவிதைகளின் களஞ்சியமாக மட்டுமின்றி ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்று நூலாகவும் விளங்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. முந்நூற்றைம்பத்தெட்டுச் செய்யுள் நூல்களின் பெயர்கள் இந்நூலில் உள்ளன. அவற்றுள் நூற்றுநாற்பத்தேழு நூல்களிலிருந்துந் தனிப்பாடல்களிலிலுந்துஞ் செய்யுள்கள் தொகுக்கப்பட்டன. சில புலவர்களுக்குத் தனிப்பாடல்கள் மட்டுமே உள்ளன. சிறந்த சில புலவர்களின் பாடல்கள் இரண்டு அல்லது மூன்று நூல்களில்லிருந்துந் தேர்ந்தேடுக்கப்பட்டன.

பண்டுதொட்டு இன்றுவரையுமுள்ள நீண்ட காலப் பகுதியிலே காலத்துக்காலந் தோன்றித் தம் பூத•வுடலை நீத்துப் புகழடம்புடன் விளங்கும் புலவர் பெருமக்களின் பாடல்கள் அவர் வாழ்ந்தகால முறைப்படியே வரிசைப்படுத்தப்பட்டன. இம் முறையில் முதலில் அமைவது பூதன்றேவனாரின் (கி.பி.130) பாடல்- ஈற்றில் அமைவது இலக்கிய கலாநிதி சு. நடேசபிள்ளையின் (-1965) பாடல். காலத்தைத் திட்டமாக தெரிந்து கொள்ள முறடியாத சில புலவர்களின் பாடல்களம், உரிய காலத்திற் கிடையாத புலவர் சிலரின் பாடல்களும் இந்நூலின் பிற்சேர்கையிற் சேர்க்கப்பட்டன. அடுத்த பதிப்புகளில் அவை உரிய இடத்தைப் பெரும்.

ஒவ்வொரு புலவரின் பாடல்களின் முன்னுரையாக வரலாற்றுக் குறிப்புக்கள் சேர்க்கப்பட்டன. இக்குறிப்புகளிலே புலவரின் பெயர், அவர் வாழ்ந்த காலம், ஊர், எழுதிய செய்யுள் நூல்கள்மற்றும் இன்றியமையாக செய்திகள் என்பன சுருக்கமாக உள. இவ் வரலாற்றுக் குறிப்புகளை எழுதுவதற்குத் துணை புரிந்த நூல்கள் சதாசிவம்பிள்ளை எழுதிய பாவலர் சரித்திர தீபகமும், வித்துவான் கணேசையர் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதமுமாகும். அந்நூல்களிற காணப்படாத பல புலவர்கள் பற்றிய குறிப்புக்கள் அப்புலவர்களின் வழித் தோன்றிய பரம் பரையினரிடமிருந்து பெற்றுச் சேர்க்கப்பட்டன. காலத்தைப் பற்றிய செய்திகள் தெரிந்த அளவிற் கூறப்பட்டன. உதாரணமாக சிவசம்புப் புலவர் பிறந்த ஆண்டு 1852 எனவும் இறந்த ஆண்டு 1910 எனவுந்த திட்டமாகக் கூறப்பட்டன. சில புலவர்களின் இறந்த ஆண்டு மட்டும் அவர் யெர்க்-திலே கூறப்பட்டது. பீதாம்பரப் புலவர் 1819 என்பது அவர் 1819 என்னம் ஆண்டை உள்ளிட்ட காலப்பகுதியில் வாழ்ந்தார் எனப் பொருள்படும். இந்நூலிற் புலவர்களின் வரிசையமைந்த விதம் அவர் இறந்த ஆண்டை யொட்டியதாகும். உதாரணமாக முருகேச பண்டிதர் 1830 - 1900, தாமோதரம்பிள்ளை 1831-1901, திருஞானசம்பந்தப்பிள்ளை 1849 - 1901, வயித்தியலிங்கப்பிள்ளை 1852 - 1901, சபாபதி நாவலர் 1843 - 1903 என்போரது வரிசையை நோக்குக. ஓரே ஆண்டில் இறந்த பல புலவர்களை வரிசைப் படுத்தும்போது அவர் பிறந்த ஆண்டு வரிசையுங் கருத்திற் கொள்ளப்பட்டது.

இந்நூல் பெரும்பாலும் அரசியற்காலப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலம், யார்ப்பாணத் தமிழ்வேந்தர் காலம் 1261 - 1505, போர்த்துக்கேயர் காலம் 1505 - 1658, ஒல்லாந்தர் காலம் 1658 - 1796, ஆங்கிலேயர் காலம் 1796 - 1947, தேசிய எழுச்சிக் காலம் 1948 - என ஆறுகாலப் பகுதிகளாக இலக்கிய வரலாற்றாசிரியர் கோட்பாடு களுக்கேற்ப வகுப்பப்பட்டது. ஒவொரு காலப் பகுதியில் எழுந்த செய்யுளிலக்கியங்களின் பொதுவியல்பாக அக்காலத்திய அரசியல் நிலை, இலக்கியப் பண்பு என்பன இந்நூலின் அவ்வக்காலப் பகுதிக்கு முன்னுரையாகச் சுருக்கி விளக்கப்பட்டன. தமிழ் கூறும் நல்லுலகத்து இலக்கியத்தின் ஒரு கூறே ஈழத் தமிழிலக்கியம் என்பதனையும், தமிழிலக்கிய மரபு என்பது இரு நாட்டுக்கும் ஒன்றே என்பதனையும் உணர்த்துமுகமாகவே முதலாவது காலப்பகுதியைச் சங்ககாலம் என அழைத்தனம் என்க.

நூலிலுள்ள பிரபந்த இலக்கியங்கள்

பிரபந்தம் என்பது பிர - மிகுந்த, பந்தம் - கட்டு என்னும் இரு சொற்களாலாய தொடர். ஒவ்வொரு பிரபந்தமும் யாதாயினுமொரு கட்டினாற் கட்டப்படுவது என்பது பொருள். கலம்பகம் என்னும் இலக்கியம் பதினெட்டுத் துறைகளாற் கட்டப்படுதல் போன்று பிள்ளைத் தமிழும் பத்துப் பருவங்களாற் கட்டப்படுகின்றது. ஏனையவும் அன்ன. தமிழிலுள்ள பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகையின என்பர். பிற்காலத்திய சி பிரபந்தங்கள் இத் தொகுப்புள் அகப்பட்டில. ஈழத்துப் புலவர்களாற் பாடப்பட்ட பிரபந்தங்கள் முப்பதுக்கு மேற்பட்ட வகையின. அவையாவன - அகவல், அந்தாதி, அம்மானை, இரட்டைமணிமாலை, இருபாவிருபஃது, உலா, ஊஞ்சல், ஒருபாவொருபஃது, கலம்பகம், கலித்துறை கலிப்பா, கலிவெண்பா, காதல், காவியம், கும்மி, குறவஞ்சி, கோவை, சதகம், சிந்து,தூது, நான்மணி மாலை, பள்ளு, பிள்ளைத்தமிழ், புராணம், மடல், மான்மியம், மும்மணிமாலை, மும்மணிக்கோவை, விருத்தம், வெண்பா முதலியன. பின்வரும் நுல்கள்

ஒவ்வொரு வகைக்கும் எடுத்துக்காட்டுக்கள்.

அகவல் : அகவற் பாவினாற் படபபடுவது

நல்லைக் கந்தரகவல் 181

விநாயகரவல் 279

அந்தாதி: அந்தத்தை ஆதியாகவுடையது அந்தாதியாகும். ஒரு செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும், அசையாயினும், சீராயினும், அடியாயினும் அடுத்த செய்யுளி• முதலாக அமையும்படி பாடுவது. இது பெரும்பாலும் ஒரேவகைச் செய்யுளால் நூறு பாடல்கள் கொண்டுவரும்.

இணுவையந்தாதி 241

கதிர்காம முருகேசர் ஆறாதார சடாட்சர அந்தாதி 365

கல்வளையந்தாதி 108

காரைநகர்த் திண்ணபுரவந்தாதி 209

கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி அந்தாதி 307

சங்களையந்தாதி 190

சன்மார்க்கவந்தாதி 358

சிங்கைநகரந்தாதி 197

திரிகோணமலை அந்தாதி 142

நல்லையந்தாதி 134

பசுபதீசுரர் அந்தாதி 354

புலியூர் அந்தாதி 272

மறைசை அந்தாதி 108

மாவை அந்தாதி 191இ 235

வண்ணைநகரந்தாதி 197

வருத்தலைவிளான் மருதடி விநாயகர் அந்தாதி 490

வெல்லையந்தாதி 201.

அந்தாதி நூல்களுள் யமகம் அமைத்துப் பாடப்படுவன 'யமகவந்தாதி' எனப்படும்.

சிவதோத்திர யமக அந்தாதி 395

செந்தில் யமகவந்தாதி 244

திருச்சிற்றம்பல யமகவந்தாதி 235

திருநாகை நிரோட்ட யமகவந்தாதி 294

திருத்தில்லை நிரோட்ட யமகவந்தாதி 417

திருவேரக யமகவந்தாதி 244

நயினை நீரோட்ட யமகவந்தாதி 345

புலியூர் யமகவந்தாதி 129

சந்தம் வேறுபட்ட பத்துவகையான செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடவமைவது 'பதிற்றுப்பத்தந்தாதி' எனப்படும்.

இணுவைப் பதிற்றுப்பத்தந்தாதி 279

திருவிடைமருதூ‘ப் பத்தந்தாதி 232

அம்மானை : மூன்று பெண்கள் அம்மனைக்காய் எறிந்து விளையாடும்போது பாடும் பாடல்களாக அமைவது இப் பிரபந்தம். கொச்சைமொழிகள், உலக வழக்குச் சொற்கள் என்பன மிக்கும், ஒரு செய்தியையே மீட்டும்மீட்டுஞ் சொல்லும் பான்மையிலமைந்தும் நாடோடிப பாடல்களின் தன்மையிலமைவது அம்மானைப் பாட்டாகும். அடிவரையறையின்றித் தரவு கொச்சகத்தின் இலல்பிற்றாய்ப் பெரும்பாலும் அமைந்து வரும். அர்ச். யாகப்பர் அம்மானை 85

இரட்டைமணிமாலை : வெண்பாவுங் கலித்துறையுமாக அல்லது வெண்பாவும் விருத்தமுமாக இருப்பது பாக்கள் அந்தாதித் தொடையில் அமைவது.

கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டைமணி மாலை 307

சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலை 120

நாகைத்திருவிரட்டை மணிமாலை 406

பாற்கரசேதுபதி இரட்டைமணிமாலை 214

வண்ணைத் திருமகள் இரட்டைமணிமாலை 382

விரகந்தி விநாயகர் இரட்டைமணிமாலை 451

இருபாவிருபஃது : வெண்பாவும் ஆசிரியப்பாவும் முறையே அந்தாதியாய் வந்து இருபது செய்யுளாய் முடிவது.

வருத்தலைவிளான் மருதடி விநாயகர் இருபாவிருபஃது 490

உலா: இளமைப் பருவமுடைய தலைவனைக் குலம், குடிப்பிறப்பு, பரம்பரை முதலியவற்றால் இன்னானென்பது தோன்றக்கூறி, அவன் வீதியிற் பவனிவர, அவ்விடத்து நெருங்கியுள்ள பேதை முதலாகிய ஏழு பருவத்துப் பெண்களுங் கண்டு காதல் கொண்டதாக நேரிசைக கலிவெண்பாவாற் பாடுவது. தெய்வம், அரசர், உபகாரி, ஆசிரியர் என்போருள் ஒருவர்மீது பாடப்படுவது உலாப் பிரபந்தமாகம்.

நெல்லை வேலவருலா 160

ஊஞ்சல் (ஊசல்) : ஈழத்துப் புலவர்களாற் பெரிதுஞ் சிறப்பாகக் கையாளப்பட்ட பிரபந்தங்களுள் இதுவுமொன்றாகும். ஆசிரிய விருத்தத்தாலாதல், கலித்தாழிசையாலாதல் பொலிதருங் கிளையொடும் பொலிகவெனப் பாடுவது ஊசல்.

அல்வாய் விநாயகர் ஊஞ்சல் 477

கந்தவனநாதர் ஊஞ்சல் 174

கவணாவத்தை வைரவ ரூஞ்சல் 266

காலித் கதிரேச ரூஞ்சல் 266

குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல் 266

கச்திரசேகர விநாயக ரூஞ்சல் 218

சுனனாகம் ஐயனார் ஊஞ்சல் 161

திண்ணபுர ஊஞ்சல் 377

பத்திரகாளியம்மை ஊஞ்சல் 116

மயிலமணி ஊஞ்சல் 218

மயிலைச் சுப்பிரமணியர் ஊஞ்சல் 279

மாதகற் பிள்ளையா ரூஞ்சல் 266

மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல் 174

வடிவேலர் ஊஞ்சற்பதிகம் 382

வண்ணை நகரூசல் 197

வண்ணை செங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் 382

வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் ஊஞ்சல் 490

வீரபத்திரர் ஊஞ்சல் 180

வேலணை மகாகணபதிப்பிள்ளையார் திரு ஊஞ்சல் 261

ஒருபாவொருபஃது : அகலாவது, வெண்பாவாவது கலித்துறையாவது அந்தாதித் தொடையிலே பத்து வருவது.

புதுவை சிறீ மணக்குள விநாயகர் ஒருபாவொருபஃது 482

கலம்பகம் : ஒரு போக்கு அல்லது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, வெண்பா, கலித்துறையாகிய மூன்றும் முன்னும், புயவகுப்பு முதல் ஊசலீறாகிய பதினெண் பொருட் கூறுபாடுகள் பின்னுமாக மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறையாகிய பாவும் பாவினமுமமைய இடையிடை வெண்பாக் கலித்துறை விரவ அந்தாதித் தொடையாற் பாடுவது. இது தேவர்ககு நூறும், முனிவர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சருக்கு எழுபதும் வணிகர்க்கு ஐம்பதும் ஏனையோர்க்கு முப்பதுமாக அமையும்.

மறைசைக் கலம்பகம் 144

கலித்துறை : கலித்துறை யென்னும் பாவினத்தாற் பாடப்படுவது.

பாற்கர சேதுபதி கல்லாடக் கலித்துறை 237

வருத்தலைவிளான் மருதடி விநாயகர் கலிநிலைத்துறை 490

கட்டளைக் கலித்துறை 221

கலிப்பா: கலிப்பாவினாற் பாடப்படுவது.

சந்தர் கலிப்பா 307

கலிவெண்பா : கலிவெண்பாவினாற் பாடப்படுவது

நல்லைக் கலிவெண்பா 120

நீராவிக் கலிவெண்பா 134

வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் கலிவெண்பா 490

காதல் : கடவுள்மீது காதல் கொண்டதாகக் கவிபாடுவது

சித்திர வேலாயுதர் காதல் 104

காவியம் : நூலின் முகத்தில் வாழ்த்து, வணக்கம், வருபொருள் இவற்றினொன்று அமைய, தன்னிகரில்லாத் தலைவனொருவனுடைய வாழ்க்கையை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளும் பொருந்த அமைத்துப் பாடுவது பெருஞ்காப்பியம் என்பர். பெருஞ்காப்பிய விலக்கணத்திற் குறைபாடுடையது சிறுகாப்பியம் அல்லது காப்பியம் ஆகும்.

இருது சங்கார காவியம் 439

கஞ்சன் காவியம் 123

கண்ணகி வழக்குரை காவியம் 39

திருச்செல்வர் காவியம் 101

வல்லான் காவியம் 538

கீர்த்தனை : பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று அங்கங்கள் கொண்டதாய இசைப்பாடல் அமைந்த பிரபந்தங்கீர்த்தனையாகும். அனுபல்லவியில்லாமலுங் கீர்த்தனைகள் உண்ட. சிலவற்றிற் பத்து அல்லது பதினைந்து சரணங்களுக்கு மேலும் உள்ளன. சரணங்கள் யாவும் ஒரேவர்ன மெட்டையுடையவை.

கதிர்காம சுவாமி கீர்த்தனம் 409

கும்பிளாவளைப் பிள்ளையார் கீர்த்தனங்கள் 395

சிங்கைவேலன் கீர்த்தனைகள் 395

சிவதோத்திர கீர்த்தனை 180

நல்லைக்கந்தர் கீர்த்தனம் 181

நலவண்ணக் கீர்த்தனை 376

பெரியபுராணக் கீர்த்தனை 495

கும்மி : இசைப் பாட்டால் அமைந்த பிரபந்தங் கும்மியாகும். குத்துவிளக்கையோ கடவுளர் சிலையையோ நடுவில் வைத்து, அதனைச் சுற்றிப் பல பெண்கள் ஆடிவருகையில் அவர் வாயிலிரந்து வரும் பாடல்களாக அமைவது.

ஐம்புல வேடக்கும்மி 454

ஞான அகீதாக்கும்மி 360

ஞானக்கும்மி 161

மது மானிடக் கும்மி 382

யாழ்ப்பாண சுவதேசக் கும்மி 322

குறவஞ்சி : ஒரு குறத்தி குறி கூறுவதுங் குறவனுடன் பேசி அளவளாவுவதுமாகிய செய்திகள் தலைமைபெறப் பாடும் பிரபந்தங் குறவஞ்சியாகும். குறவஞ்சி - குறமகள். அவகல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கலிநெடில் விருத்தம் இவைகளிடையே சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது. குறவஞ்சி நாடகம் எனவும் இது பெயர் பெறும். குறிஞ்சி நிலத்துச் செய்திகளைக் குறவஞ்சி வருணிக்கும். சேரிவழக்கு முதலியன இதில் இடம்பெறும்.

திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி 160

நகுமலைக் குறவஞ்சி154

நல்லைக் குறவஞ்சி 134

நல்லைநகர்க் குறவஞ்சி 158

வண்ணைக் குறவஞ்சி 154

வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி 116

கோவை : காமவின்பத்தைப் பற்றி அகப்பொருளிலக்கணம் நானூறு கட்டளைக்

கலித்துறையாற் பாடுவது.

"முதற்பொருள் கருப்பொரு ளுரிப்பொருண் முகந்து

களவு கற்பெனும் வரவுடைத் தாகி

நலனுறு கலித்துறை நானூறாக

ஆறிரண் டுறுப்பும் ஊறின்றி விளங்கக்

கூறுவ தகப்பொருட் கோவை யாகம்"

(இலக்கண விளக்கப் பாட்டியல் 56)

அடைக்கலங் கோவை 169

அருளம்பலக் கோவை 174

கரவை வேலன் கோவை 108

திருநல்லைக் கோவை 371

பன்றிமலையரசன் கோவை 399

கோவை நூலுட் கூறப்படும் ஏதாவது ஒரு துறை பற்றி நூறு கட்டளைக் கலித்துறை பாடின் அந்நூல் 'ஒருதுறைக் கோவை' எனப்படும்.

ஈழமண்டல சதகம் 326, 338

சன்மார்க்க சதகம் 358

திருச்சதகம் 201

வீரபத்திரா சதகம் 180

நீதி நூறு 218

சிந்து : இது இசைப் பாட்டு வகைகளில் ஒன்று. பெரும்பாலும் மூன்று சீர்களைப் பெற்ற சிந்தடிகளால் ஆனதாற் சிந்து எனப்பட்டது. பிற்காலத்தில், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பவற்றையுடைய கீர்த்தனைகளைப் போலன்றி, அளவொத்து வரும் அடிகளையுடைய இசைப் பாடல்களைச் சிந்து என்று வழங்கினர்.

தூது : தலைவன் தலைவயிருள் விரகதாபத்தாலே துன்புற்ற ஒருவர் மற்றொருவர்பாற்றம் வருத்தத்தைக் தெரிவிக்கும்படி உயர்திணைப் பொருள்களையேனும் அஃறிணைப் பொருள்களையேனும் விடுப்பதாகத் கலிவெண்பாவிற் பாடப்படுவது.

கிள்ளைவிடு தூது 95, 138

பஞ்சவர்ணத் தூது 122

தத்தைவிடுதூது 212.

நான்மணிமாலை : வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகிய நான்கும் அந்தாதித் தொடையாய்வர நாற்பது செய்யுள் கொண்டது.

கதிரை நான்மணிமாலை 382

கந்தவனக்கடவை நான்மணிமாலை 454

நந்லை நான்மணிமாலை 307

பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை 244

புலோலி நான்மணிமாலை 244

பள்ளு : பள்ளு அல்லது உழத்தியர் பாட்டு கமத் தொழிலாளராகிய பள்ளர் அல்லது உழவர் தொழில் செய்யும் முறையையும் பள்ளனுக்கும் அவன் மனைவியராய மூத்தபள்ளி இளையபள்ளியருக்கும் இடையிலுள்ள குடும்பச்சச்சரவுளையுங் கூறும் நூலாகும். இது மருதநிலத்தை வருணிக்கும் பிரபந்தமாகும்.

கதிரை மலைப் பள்ளு 59

ஞானப் பள்ளு 79

தண்டிகைக் கனகராயன் பள்ளு 125

நவாலியூர் வன்னியசேகரன் பள்ளு 454

பறாளை விநாயகர் பள்ளு 108

பிள்ளைத் தமிழ்: ஒரு தலைவனது குழந்தைப் பருவத்தைப் பற்றிக் காப்பு முதலிய பத்துப் பருவங்களும் முறையே பொருந்தும்படி ஒவ்வொன்றிற்கும் பத்துச் செய்யுள் வீதம் ஆசிரியவிருத்தத்தாற் சிறப்பித்துப் பாடுவது. அவற்றுள், ஆண்பாற் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர், என்னும் பத்துப் பருவங்களுள் சிற்றில் சிறுபறை, சிறுதேர் என்பன வொழிப் தொழிந்தனவற்றோடு, அம்மானை, நீராடல், ஊசல், என்னும் மூன்றினையுஞ் சேர்த்துக் கூறப்படுவது பெண்பாற் பிள்ளைத் தமிழாகும்.

அவ்வாய் முத்துமாரியம்மை பிள்ளைத்தமிழ் 477

கதிர்காமமுரகன் பிள்ளைத்தமிழ் 521

சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் 122

நெல்லியவோடை அம்மாள் பிள்ளைக்கவி 159

பிள்ளைக்கவி124

புராணம் : பழைய வரலாற்றைக் கூறும் நூல் புராணம். புராணம் - பழைமை ; பூர்வகாலத்திலுண்டாயது. பழைய வரலாறு ஐந்து விதமாகப் பிரித்துக் கூறப்படும். அவையாவன - உலகத் தோற்றம், ஒடுக்கம், மன்வந்தரம், முனிவர் அரசர் மரபு, அவர் சரித்திரங்கள் என்பன. பிற்காலத்திய புராணங்களில் இவ்வகுப்பு முறை கைக் கொள்ளப்படவில்லை.

ஏகாதசிப் புராணம் 95

கதிர்காம புராணம் 450

சாதி நிர்ணய புராணம் 230

சிதம்பர சபாநாத புராணம் 235

சிவராத்திரிப் புராணம் 95

சீமத்தனி புராணம் 304

ஞானானந்த புராணம் 91

தக்கண கைலாச புராணம் 450

தக்கிண கைலாச புராணம் 27

திருக்கரைசைப் புராணம் 45

திருவாக்குப் புராணம் 266

புலியூர்ப புராணம் 120

வலைவீசு புராணம் 123

வியாக்கிரபாத புராணம் 72

மடல் : அறம், பொருள், வீட்டை யெள்ளி, அரிவையர் திறத்துறும் இன்பத்தையே வலியுறுத்திப் பாட்டுடைத் தலைவ னியற்பெயருக்குத் தக்க முழுது மொரே யெதுகையாகத் தனிச்சொலின்றிக் கலிவெண்பாவாய் மடலூரும் பெற்றியிற்றென்று பாடுவது.

அழகர்சாமி மடல் 172

மான்மியம் : மகிமை கூறுவது.

அருணாசல மான்மியம் 342இ 399

இராமநாத மான்மியம் 399

திருநாவலூர் மான்மியம் 342

நயினை மான்மியம் 345

விநாயக மான்மியம் 304

மும்மணிக் கோவை: நேரிசை ஆசிரியப் பாவும், நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் முறையே அந்தாதியாக முப்பது செய்யுள் வருவது.

ஈப்போ தண்­ர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை 382

கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி மும்மணிக்கோவை 307

வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை 269

மும்மணிமாலை: வெண்பாவும், கலித்தறையும் ஆசிரியமும் அந்தாதியாய் முப்பது செய்யுள் வருவது.

மயிலை மும்மணி மாலை 279

மாவை மும்மணி மாலை 371

விருத்தம் : விருத்தப்பாவாற் பாடப்படுவது விருத்தமாகும்

இலுப்பைக் கடவை கட்டாடி வயல் பிள்ளையார்விருத்தம் 335

இலுப்பைக் கடவை கட்டாடி வயல் சுப்பிரமணியர் விருத்தம் 335

நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம் 382

மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம் 279

முகியிதீன் ஆண்டகையவர்கள் பேரில் ஆசிரிய விருத்தம் 294

முன்னைநாதசுவாமி வடிவழகம்மை ஆசிரிய விருத்தம் 307

வடிவேலர் திருவிருத்தம் 382

வெண்பா: வெண்பா யாப்பினாற் பாடப்படுவது வெண்பா வென்னும் நூலாகும்.

கதிரைச் சிலேடை வெண்பா 454

காந்திவெண்பா 462

குடந்தை வெண்பா 218

சகுந்தலை வெண்பா 497

சனிவெண்பா 324

சாணக்கிய நீதி வெண்பா 309

திண்ணபுர வெண்பா 451

தேர் வெண்பா 268

நல்லை வெண்பா 134

நீர்வை வெண்பா 444

நூலாக்கத்துக்கு உறுதுணையாயினோர்:

தமிழ் சிங்களமாகிய மொழிகளிற் கவிதைக் களஞ்சியங்களைத் தொகுப்பித்து வெளியிட வேண்டுமென்று இலங்கைச் சாகித்திய மண்டலம் 1963ஆம் ஆண்டில் முடிவு செய்தது ; அம் முடிவிற்கேற்ப, சிங்களக்விதைக் களஞ்சியம் தொகுக்கும் பொறுப்பை மூன்று பல்கலைக் கழகங்களினின்றுந் தெரிந்தெடுத்த பேராசிரியர் மூவர் குழவினிடத்தும், தமிழ்க்கவிதைக் களஞ்சியந் தொகுக்கும் பொறுப்பை மண்டல உறுப்பினராகிய எம்மிடத்திலும் ஒப்புவித்தது. இந்திய சாகித்திய மண்டலத்தின் வேண்டுகோளுக்கினங்கி காலஞ்சென்ற பேராசிரியர் ரா.பி. கேதுப்பிள்ளை யவர்கள் 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற பெயரிலே தொகுப்பு நூலொன்றை வெளியிட்டனராகையின் ஈழத்தில் வெளியிடும் இத் தொகுப்பு நூலில் ஈழத்துத் தமிழ்ப் புலவர்களின் பாடல்கள் மட்டும் இடம் பெறல் வேண்டுமென்றும், இன்று உயிருடன் இல்லாத புலவர்களின் பாடல்களே இத் தொகுப்பில் அடங்க வேண்டுமென்றும் இலங்கைச் சாகித்திய மண்டலம் எம்மைக் கேட்டுக்கொண்டது. மண்டலத்தின் இவ் வேண்டுகோளுக்கமைய உருவாயதே இந்நூல்.

ஈழத்தின் பல பாகங்களிற் சிதறிக்கிடக்கும் பழைய ஏட்டுப் பிரதிகளையும் அச்சில் வெளிவந்த நூல்களையுந் தேடிப் பெற்றுக் கொள்வதில் எம்முடன் ஒத்துழைத்தோர் பலராவர். அவர் எல்லோர்க்கும் எமது மனப்பூர்வமான நன்றி உரியதாகுக. அவருட் குறிப்பாக, வித்துவான் பொன்.கனகசபை அவர்கள் இத் தொகுபபுநூல் ஆரம்பித்த காலத்தில், யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் வாழ்ந்துவரும் புலவர் பரம்பரையினரிடந் தாமே நேரிற் சென்று நூல்களைப் பெற்றும் சில புலவர்களின் தீஞ்சுவைப் பாடல்களைத் தெரிந்து தந்தும் உதவினார்கள். அவர்களுக்கு எமது நன்றி. யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் காலத்திலும் போர்த்துக்கேயர் காலத்திலும் ஈழத்தில் இயற்றப்பட்ட பல செய்யுணூல்களைத் தேடியலைந்த காலத்தில் எம்மை அங்ஙனம் அலைய விடாது தாம் பல்லாண்டுகள் அரிதிற் றேடித் சேகரித்து வைத்த பழைய நூற் பிரதிகள் அத்தனையும் எம்மிடம் ஒப்படைத்த கொழும்பு அரசாங்க மொழித்திணைக்களத்து மொழிபெயர்ப்பாளர் வித்துவான் எப்.எக்.சி. நடராச அவர்களின் வள்ளன்மையை மெச்சுவதோடு எமது நன்றியையுந் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்நூற் றொகுப்புவேலை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை தமது அரிய நேரத்தையும் பொருட் செலவினையும் பொருட்படுத்தாது இக்களஞ்சிய வெளியிட்டிற்கு உறுதுணையாயிருந்து வரபவர் இலங்கைச் சாகித்திய மண்டலத்து உறுப்பினராகயிருந்தவரும், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிலிருந்திச் சங்கத்தின் உப காரியதரிசியாகவும் ஈழத்துப் பண்டித கழகத்தின் செயலாளராகவும் கடமை யாற்றுபவருமாகிய மண்டிதர் செ. துரை சிங்கம் அவர்களாவர். அன்னாரின் ஒத்துழைப்பினால் இந்நூல் பெற்ற சிறப்புக்கள் பலவாகும். பிற வெளியீடுகளிற் காணப்படாத ஈழத்துப் புலவர்களின் வரலாறு, காலம் என்பனவற்றைப் பெற்றுத்தந்தும், இந்நூற் கையெழத்துப் பிரதியினைப் படித்துத் திருதங்கள் பல செய்தும், நூல் அச்சாகுங்கால் எம்முடனிருந்து அச்சுப்பிழைகள் ஏற்படாது பார்த்தும் இலக்கண வழுக்கள் முதலியனவற்றைக் களைந்தும் உதவிய பண்டிதரவர்களுக்கு யாம் மிகக் கடமைப் பாடுடையேம்.

இந்நூலுக்கு அணிந்துரை நல்கி சிறப்பித்த மூவராகிய எமது ஆசிரியர், பேராசிரியர் வி. செல்வ நாயகம் அவர்களுக்கும், ஈழத்துச் செந்தமிழ் மரபைப் பாதுகாத்து வளர்த்துவரும் முதுபெரும் புலவர்களாகிய வித்துவான் ந. சுப்பையபிள்ளை, புலவர் பாண்டியனார் ஆகியோருக்கும் எமது நன்றியறிதல் உரியதாகுக. இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் அழைப்பின்பேரில் இந்நூலை அச்சிடும் பொறுப்பை யேற்றுத் தமது பிற வெளியீடகளைப் போல் இந்நூலினையுஞ் சிறப்புற வெளியிட்ட சுன்னாகம் திரமகள் அழுத்தகத்தினருக்கும், சிறப்பாக மனேசர் திரு. மு. சபாரத்தினம் அவர்களுக்க எமது நன்றி உரியதாகுக.

ஈழத்துப் புலவர்களாற் பாடப்பட்ட செந்தமிழ்க் கருவூலங்களைத் தமிழ்கூறும் நல்லுலகத்துக்குச் சமர்ப்பிக்குஞ் சீரிய பணியை மேற்கொண்ட இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் இவ் வெளியீட்டைத் தமிழ்ப் பெருமக்கள் ஆதரிப்பரேல் மண்டலம் மேலும் பல நூல்களை வெளியிட அது தூண்டுதலாகும். இவ்வரிகையில் ஈழத்தெழுந்த தூது, பள்ளு, உலா, குறவஞ்சி முதலிய பிரபந்தங்களைத் தனித் தனி தொகுதி நூல்களாக வெளியிட வேண்டுமென்பது எமது அவா. அங்ஙனம் வெளிவரின் ஆராய்ச்சி மாணவர்க்கும் பிறர்க்கும் அது பெரிதும் பயன்படுவதோடு பழைய எமது நூல்கள் அழிந்துபோகாது பாதுக்கப்படும். இம் முயற்சிக்கு தமிழ் மக்களின் பூரண ஆதரவும் எல்லாம் வல்ல இறைவனின் தூண்டுதலுங் கிட்டுவனவாகுக.

ஆ. சதாசிவம்

இலங்கைப் பல்கலைக்கழகம்

கொழும்பு,

17.9.66

---------------------------------------------------------------

ஈழத்துத்

தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

1. சங்க காலம்

தமிழிலக்கிய வரலாற்றிற் சங்ககாலம் எனப்படுவது பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்னும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எழுந்த கி.மு 300 கி.பி 200 ஆசிய கால எல்லையிற் பாண்டிநாடடின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலமாகும். அக்காலத்திலே சேர சோழ பாண்டி நாடுகளிலும் ஈழத்தின் வட பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவோர் மதுரைக்குச் சென்று சிகாலம் அங்கு வாழ்ந்து தாம் பாடிய செய்யுள்களை அரங்கேற்றுவது வழக்கமாயிருந்தது. ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்ற தமிழ்ப் புலவர் பூதன்றேவனார் ஆவர். இவர் ஈழத்துப் பூதன்றேவனார் ஆவர். இவர் ஈழத்துப் பூதன்றேவனார் என அழைக்கப்படுவர். இவரையன்றி வேறும் ஈழத்துப்புலவர் சங்கத்திலமர்ந்திருந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

திருவளர் மதுரைத் தென்றமிழ்ச் சங்கப்

புலவரு ளொருவராய்ப் புவியிசை நாட்டிய

பூதந் தேவனார் முதலிய சான்றோர்

தோன்றுதற் கிடமாந் தொன்றுகொள் சீர்த்தித்

திரைவளை யீழத்து வடபால்........

என்பர் வித்துவான் கணேசையர்.

பூதன்றேவனார் காலம் கி.பி. 130 வரையிலாகும். இதன் விளக்கம் பின்வருமாறு. பூதன்றேவனாராற் பாடப்பட்ட மன்னருள் ஒருவன் பசும்பூட்பாண்டியன். இப்பசும்பூட்பாண்டியனைப் பரணரும் பாடியுள்ளனர். பரணர் பாடிய பிறவரசர் சேரன செங்குட்டுவன், கரிகாற் சோழன், அவன் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி முதலியோர். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் அமைத்தபோது ஈழநாட்டு மன்னன் கயபாகுவும் அங்கு சமுகமளித்திருந்தான் என்பதைச் சிலப்பதிகாரமும் சிங்கள வரலாற்று நூல்களுங் கூறுகின்றன. கயபாகுவின் காலம் கி.பி.114 - 136 வரையிலாகும். எனவே, கயபாகுவின் சமகாலத்தவனான செங்குட்டுவனைப் பாடிய பரணரும் பூதன்றேவனாரும் ஒரு காலத்தவர் என்பது போதரும்.

பூதன்றேவனார் ஈழத்தைவிட்டுச் சென்ற காலம் இதுவெனத் திட்டமாகக் கூறுதல் முடியாது. கி.பி. 67 - 111 இல் ஈழத்தை ஆண்ட சிங்கள மன்னனாகிய வசபாகு என்பான் யாழ்ப்பாணப் பகுதியையுங் கைப்பற்றி ஆண்டான் என்பதற்குத் திட்டவட்டமான ஆதாரங்கிடைத்துள்ளது. பருத்தித்துறைக்கு அண்மையில் வல்லிபுரம் என்னும் ஊரிற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று வசபாகுவின் ஆட்சிக் காலத்தில் அவன் ஈட்டிய வெற்றியைச் சுட்டுவதாய் உள்ளது. எனவே, பூதன்றேவனார் முதலிய பலர் அக்காத்தில் மதுரைக்குச் சென்றிருக்கலாம் என ஊகிக்கக் கிடக்கின்றது.

ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னருட் தலைசிறந்தோன் எல்லாள மன்னன். அவனது ஆட்சிகாலம் கி.மு. 205 - 161 ஆகும். தன் பிள்ளையிலும் பார்க்கப் பிரசைகள்மீது கூடிய அன்பு காட்டி 44 ஆண்டுகள் ஈழம் முழுவதையும் ஆண்ட இம் மன்னனே மனுச்சக்கரவர்த்தி என்றும் மனுநீதி கண்ட சோழன் என்றும் புகழப்படுபவன். இன்னும்,

'எல்லாள மன்னன் இருதயம் போலவும்'

எச் சோமசுந்தரப்புலவரும்,

'ஈ‘நன் னாட்டு மேவுதமி ழரசனாஞ்

சொல்லமர் நீதியி னெல்லாள னென்கோ!'

எனத் தென்கோவை ச.கந்தையாபிள்ளையும் கூறுவன காண்க.

இவ்வரலாறுகளை ஊன்றி ஆராயுமிடத்துக் கடைச்சங்க காலத்தில் ஈழத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்துவந்ததென்பதும், மனுநீதிகண்டசோழன் எனப் புகழப்படும் எல்லாளன் முதலியோர் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒருங்கே ஆண்டுவந்தனர் என்பதும், தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒரேயொரு புலவரவைக்களமாயிருந்த மதுராபுரியை நாடிப் பல பகுதிகளிலுமிருந்து புலவர்கள் சென்றனர் என்பதம் தெரியக்கிடக்கின்றன. எனவே ஈ‘த்துப் பூதன்றேவனார் முதலிய யாவருக்கும் பொதுவாகிய சங்க இலக்கிய மரபே ஈழத்துத் தமிழிலக்கிய மரபுமாகும்.

சங்கப்பாடல்கள் தூய தமிழ்ச் சொற்களாலானவை ; விழுமிய ஓசையும் பொருளுங் கொண்டவை ; இன்ன பொருளை இன்னவாறு பாடுக எனப் புலவோர் வகுத்துக் கொண்ட புவனெறி வழக்கை அடிப்படையாகக் கொண்டவை. அகம், புறம் என்றும் இருதிணையின் பாற்படுபவை அவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய அகத்திணைக் கூறுபாடுகளையும் வெட்சி, வஞ்சி, அழிஞை, தும்பை, வாகை என்னும் புறத்திணைக் கூறுபாடுகளையுங் கொண்டு விளங்குபவை சங்கப்பாடல்கள்.

ஈழத்துப பூதன்றேவனார்

கி.பி. 130

கடைச்சங்கப் புலவருள் ஒருவராய இவர் ஈழநாட்டிலிருந்து மதுரைக்குச் சென்று குடியேறியவர் எனக் கருதப்படுவர். தந்தையார் பெயர் பூதன் என்பது ; பூதனி• மகன் தேவன், பூதன்றேவன் என்றாயிற்று*. இவர் பரணரின் காலத்தவர். 'விசும்பிவர் வெகுண்டைப் பசும்பூட்பாண்டியன், பாடுபெறு சிறப்பிற் கூடல்' (அகநானூறு 231-12) என இவர் புகழ்ந்து கூறும் பசும்பூட்பாண்டியனை 'வில்கெழு தானைப் பசும்பூட் பாண்டியன்' (அகநானூறு 162-21) எனப் பரணரும் பாடியுள்ளனராகையின் இரு வரும் ஒருகாலத்தவர் என்பது முடிபு.

___________________________________________________

*பூதந்தேவ• எனக் கணேசையரின் நூல்களிற் காணப்படுகிறது.

அகநானூறு, குந்தொகை, நந்றிணை ஆகிய நூல்களிலே மொத்தம் ஏழு பாடல்கள் பூதன்றேவனாராற் பாடப்பட்டுள்ளன. அவை பாலை, குறிஞ்சி ஆகிய திணை வகையை விளக்குவன.

குறிஞ்சி

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகந்

தோழி சொல்லியது

முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை

ஓங்குவணர்ப் பெருங்குரல் உ­இய பாங்கர்ப்

பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும்

புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்

கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5

நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்

நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்

சென்றனன் கொல்லோ தானே குன்றத்து

இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்

கவுள்மலிபு இழிதருங் காமர் கடாஅம் 10

இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து

இருங்கல் விளரளை அசுணம் ஓர்க்குங்

காம்புபயில் இறும்பிற் பாம்புபடத் துவன்றிக்

கொடுவிரல் உளியங் கெண்டும்

வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே. 15

- அகநானூறு

தலைமகள் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச்

சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது.

வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து

அறியா னாகுதல் அன்னை காணிய

அரும்பட ரெவ்வம் இன்றுநாம் உழப்பினும்

வாரற்க தில்ல தோழி சாரற்

பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் 5

உண்கிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே

சிலம்பிற் சிலம்புஞ் சோலை

இலங்குமலை நாடன் இரவி னாமே.

- குறுந்தொகை - 360

பாலை

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத்

தோழி சொல்லியது

செறுவோர் செம்மல் வாட்டலுங் சேர்ந்தோர்க்கு

உறுமிடத்து உவக்கு முதவி யாண்மையும்

இல்லிருந்து அமைவோர்க்கு இல்லென்று எண்ணி

நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்

கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்ததோர் 5

படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்

கள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழீஇ

உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை

வெஞ்சுரம் இறந்தன ராயினும் நெஞ்சுருக

வருவர் வாழி தோழி பொருவர் 10

செல்வமங் கடந்து செல்வா நல்லிசை

விசும்பிவர் வெண்குடைப் பசும்பூட் பாண்டியன்

பாடுபெறு சிறப்பிற் கூட லன்னநின்

ஆடவண்டு அரற்று முச்சித்

தோடர் கூந்தல் மரீஇ யோரே.

- அகநானூறு - 231

பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளைச்

செலவு விலக்கியது.

சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்

அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்

பகலுங் கங்குலு மயங்கிப் பையெனப்

பெயலுறு மலரிற் கண்பனி வார

ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து 5

நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை

அடுமுரன் தொலைத்த நெடுநல் யானை

மையலங் கடா அஞ் -ருக்கிமதஞ் சிறந்து

இயக்குநர்ச் செகுக்கு மெய்படு நனந்தலைப்

பெருங்கை யெண்கினங் குரும்பி தேரும்

புற்றுடைச் சுவர புதலியவர் பொதியிற்

கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து

உடனுறை பழைமையிற் றுறத்தல் செல்லாது

இரும்புறாப் பெடையொடு பயிரும்

பெருங்கல் வைப்பின் மலைமுத லாறே.

- அகநானூறு 307

வினை தலைவைக்கப்பட்டவிடத்துத் தலைமகன்

பாகற்கு உரைத்தது

இன்றை சென்று வருவது நாளைக்

குன்றிழி யருவியின் வெண்தேர் முடுக

இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி

விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்

காலியற் செலவின் மாலை யெய்திச் 5

சின்னிரை வால்வளைக் குறுமகள்

பன்மா ணாகம் மணந்துவக் குவமே.

- குறுந்தொகை - 189

தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.

நினையாய் வாழி தோழி நனைகவுள்

அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென

மிகுவலி இரும்புவலிப் பகுவா யேற்றை

வெண்கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகைக்

கோடை யொற்றிய கருங்கால் வேங்கை 5

வாடுஞ் சினையிற் கிடக்கும்

உயர்வரை நாடனொடு பெயரு மாறே.

- குறுந்தொகை - 343

உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த

நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ்

வீடுறு நண்துகில் ஊடுவந்து இமைக்குந்

திருந்திழை யல்குற் பெருந்தோட் குறுமகள்

மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக்

கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி 5

மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த

இரும்பல் மெல்லணை யொழியக் கரும்பின்

வேல்போல் வெண்முகை விரியக் கரும்பின்

வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி

முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை

மூங்கி லங்கழைத் தூங்க ஒற்றும் 10

வடபுல வாடைக்குப் பிரிவோர்

மடவர் வாழியிவ் வுலகத் தானே

- நற்றிணை - 366

***

2. யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் காலம்

1216 - 1621

அரசியல் நிலை :

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஈழத்தின் வடபாகம் தமிழ் வேந்தரால் ஆளப்பட்டு வந்தது தென்னிலங்கையிற் சிங்களஇராச்சியங்கள் சிறப்புற்றிருந்த காலங்களில் வடபகுதியும் சிங்கள அரசுக்குட்பட்டது. 1044ல் இலங்கை முழுவதும் தமிழ் வேந்தராகிய சோழரின் ஆறுகைக்குட்பட்டது. அக்காலத்திற் பொலனறுவையே சோழராசதானியாக்கப்பட்டது. 1044 _ 1070 ஆகிய காலப்பகுதியிலே தமிழ்மக்கள் பெருந்தொகையாகத் திருக்கோணமலைப் பகுதியிற் குடியேறினர். எனவே, அப்பகுதியிற் பல சிவாலயங்களுங் கட்டப்பட்டன.

சோழருக்குப் பின் ஈழத்தை ஆண்ட மகாபராக்கிரம வாகுவின் காலத்திலிருந்து பாண்டிய அரச குடும்பங்களோடு சிங்கள அரசகுடும்பங்கள் மணவுறவு கொண்டன. இதன் பயனாகப் பொலனறுவையிலும் தம்பதேனியாவிலுமிருந்து அரசாண்ட சிங்கள அரசர்கள் தமிழர்களோடு நட்புறவு கொண்டிருந்தனர். 1215 இல் கலிங்க நாட்டிலிருந்து மாகன் என்பான் படையெடுத்துவந்து பொலனறுவையைக் கைப்பற்றி ஆண்டான். அடுத்த ஆண்டில் அவன் தம்பி சயபாகு வடஇலங்கையைக் கைப்பற்றி ஆண்டான். எனவே, 1216இலிருந்து வடஇலங்கையிலே தனியரசு நிலவலாயிற்று 1236இல் இரண்டாம் பராக்கிரமவாகு என்பான் தம்பதேனியாவைத் தலைநகராக்கி ஆண்டான். அவனது ஆட்சிக்காலத்திலே தமிழ் நாட்டிற் பாண்டியர் தலையெடுக்கலாயினர். 1251இல் முடிசூடிய சடாவர்ம சுந்தரபாண்டியன் 1258 இல் பெரியதொரு படையத் திருக்கோணமலையருகில் யாழ்ப்பணக் குடா நாட்டிலும் இறக்கிப் பொலனறுவையைக் கைப்பற்றி மாகனைத் தரத்தினான். இரண்டாம் பராக்கிரமவாகு சுந்தபாண்டியனுக்கு அடிபணிந்து திறைகொடுத்தான். அக்காலத்திலிருந்து ஈழம் முழுவதிலுந் தமிழ் மன்னராகிய பாண்டியரின் செல்வாக்கு உயர்ந்தது. 1284இல் மூன்றாம் பராக்கிரமவாகு முடிசூடினார். அவனது ஆட்சிக் காலத்திற் பாண்டிநாட்டை ஆண்ட மாறவர்மன் குலசேகர பாண்டியன்'ஆரியச் சக்கரவர்த்தி' என்னும் பட்டப் பெயருடை சேனைத்தலைவனை அனுப்பி ஈழத்தைத் கைப்பற்றிப் புத்தரின் புனிததந்தத்தை அபரிப்பித்தான். மூன்றாம் பராக்கிரமவாகுவின் அவைக்களப் புலவரே தேனுவரைப் பெருமாள் என்னும் இயற்பெயர்கொண்ட போசராச பண்டிதர். அவர் 1310 இல் சரசோதிமாலை என்னும் சோதிடநூலைத் தமிழிற் பாடினார்.

பாண்டிய மன்னனின் சேனைத் தலைவனாகிய ஆரியச் சக்கரவர்த்தி என்பான் 1284இல் யாழ்ப்பணத்தைக் கைப்பற்றி அங்கு தமியரசை அமைத்தான். அப்போதைய தலைநகரம் சிங்கைநகர் ஆகும். அவனுக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர் அனைவரும் 'ஆரியச் சக்கரவர்த்தி' என்னும் பட்டப்பெயர் சூடினர். 1621இல் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் வசமாகும்வரையும் ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் வட இலங்கையிலே தமிழரசு நிலவிற்று. யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின்படி ஆரியச் சக்கரவர்த்தி என்னும் பெயர் பூண்ட தமிழரசர் பன்னிருவராவர். இவர்கள் செகராசசேகரன், பரராசசேகரன் என்னும சிறப்புப் பெயரை மாறிமாறிப் பெற்றனர்.

1216-1450 வரையும் யாழ்ப்பணத்தின் தலைநகர் சிங்கை. 1450 - 1621 வரையும் நல்லூர் தலைநகராக விளங்கியது. இவ்வியாழ்ப்பாணத் தமிழ் மன்னருட் சிறந்தோர் சிங்கைக் செகராசசேகரனு• (1380 - 1414) நல்நூர்ப் பரராசசேகரனும் (1478 - 1519) ஆவர். இவ்விருவர் காலத்திலும் தமிழிலக்கியம் சிறப்புற்று வளர்ந்தது. இவர்களுட் சிங்கைச் செகராசசேகரன் தமிழகத்திலிருந்து தமிழ்ப் புலவர்கள் பலரை வருவித்து இங்குக் குடியேற்றினான். திருக்கோணமலைப் பகுதியில இவன் குடியிருத்திய புலவர்கள் சிறந்த தமிழிலக்கியங்களை இயற்றித் தமிழ் மொழியை வளம்படுத்தினர். எனவே,சிங்கைச் செகராசசேகரனின் வரலாறு பொன்னெழுத்துக்களாற் பொற்றிக்கப் படவேண்டியது.

இலக்கியப்பண்பு :

யாழ்ப்பாணத் தமிழ் வேந்தரின் ஆட்சிக்காலத் தொடக்கத்தில் எழுந்த நூல்கள், வடமொழி மொழி பெயர்ப்புகளாம்,இரகுவமிசம் முதலியன இவ்வகுப்புள் அடங்கும். தமிழகத்தில் வடமொழியின் செல்வாக்கு மிக்கிருந்த காலமும அதுவாகும். ஆயினும் ஈழத்தெழுந்த இம்மொழிப்பெயர்ப்பு நூல்களில்களிலே மிக்குள்ளது. நூல்களை இயற்றுவித்த பராக்கிரமவாகு, செகராசசேகரன், பரராசசேகரன் முதலியோர் நூல்களுட் புகுழ்ந்து கூறப்படுதல் குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற் கம்பன் சடையப்பவள்ளலையும் புகழேந்தி சந்திரன் சுவர்க்கியையும் நூலினுட் புகழ்ந்து கூறுதலும் ஈண்டு நோக்கத்தக்கது. தமிழகத்தில் விருத்தப்பா செல்வாக்குப் பெற்றிருந்ததுபோல் ஈழத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. எனவே, தமிழிலக்கியப் பொதுப் பண்புகளும் மரபுஞ் சிறிதும் நிலைதிரியாது ஈழத்துத் தமிழ்ப்புலவராற் போற்றப்பட்டன.

ஈழத்துத் தேசியப் பண்புகளை மிகுதியாகக் கொண்டது. திருக்கரசைப் புராணம் என்னும் காவியம். ஈழத்து மக்களின் வாழ்க்கை முறைகளும் மகாவலிகங்கையின் சிறப்பும் இல்நூலிற் றனியிடம பெறுகின்றன. கயபாகுவின் காலத்திலிருந்து (கி.பி. 114 - 136) ஈழத்துத் தமிழ் மக்களும் சிங்கள மக்களம் கண்ணகி வழிபாட்டி லீடுபட்டிருந்தனர். தமிழ் மக்கள் படித்துச் சுவைத்துவந்த சிலப்பதிகார காவியம் பொதுமக்களின் பிரார்த்தனைக்கென பழகு தமிழிற் 'கண்ணகி வழக்குரை' என்னும் பெயரிற் புதியதோர் காவியமாக ஆக்கப்பட்டது. தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஈழம் தன் பங்கைக் கொடுத்துதவியதற்குச் சாட்சியாக 'கண்ணகி வழக்குரை' நிலவுகின்றது. ஈழத்தெழுந்த மற்றொரு நூலான கதிரை மலைப் பள்ளு, பொதுமக்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்தம் இன்பதுன்ப வுணர்வுகளையும் படமிபிடித்துக் காட்டுகிறது. எனவே, யாழ்ப்பாணத் தமிழவேந்தர் காலத் தெழுந்த நூல்களுட் திருக்கரசைப் புராணம், கண்ணகி வழக்குரை, கதிரைமலைப்பள்ளு ஆகிய மூன்னும் ஈழவளநாட்டுக்கே சிறப்பாகவுரிய பண்புகள் பலவற்றைக் கொண்டு மிளிருகின்றன.

தேனுரைப்பெருமாள் என்னும் வழக்கு

போசராச பண்டிதர்

1310

ஈழத்தின் மத்திய பகுதியிலுள்ள குருநாகல் என்னும் நகரத்தின் அருகிற் சிங்கள மன்னரின் இராசதானியாய் விளங்கிய தம்பதேனியாவை ஆண்ட மூன்றாம் பராக்கிரமவாகுவின் அவைக்களப்புலவரால் 1310ஆம் ஆண்டில் இயற்றி அரங்கேற்றப்பட்டது சரசோதிமாலை என்னும் சோதிட நூல். இப்புலவரின் பெயர் 'தேனுவரைப் பெருமாளென்றோது பண்டித போசராசன்' எனப் பாயிரங் கூறுகின்றது. இவர் ஓர் அந்தணர்; வைணவ சயத்தவர். இவரின் தந்தையார் பெயர் சரசோதி.

ஈழத்தெழந்த தமிழ்நூல்களுட் காலத்தால் முந்தியதாகக் காணப்படுஞ் சரசோதிமாலை என்னும் இந்நூல் 934 விருத்தப்பாக்களாலானது. நூலின் முகத்திற் காணப்படும் பின்வருஞ் செய்யுள் நூலைப்பற்றிய பல குறிப்புக்களைக் கொண்டுள்ளது :

உரைத்தசக வருடமுறு மாயிரத் திருநூற்

றொருநாலெட் டினிலிலகு வசந்தந் தன்னிற்

றரித்திடுவை காசிபுதன் பனையி னாளிற்

றம்பைவளர் பராக்கிரம வாகு பூப

ளித்தருவையிற் சரசோதி மாலை யீரா

றெய்துபடல நூற்றொன்பான் முப்பா னான்காம்

விருத்தமரங் கேற்றினனோற் போச ராச

விஞ்சைமறை வேதியனாம் புலவ ரேறே.

சரசோதிமாலை

பாயிரம்

பூமாது மேவு தோளான் பொற்கம லத்து வாழு

மாமாது சேரு மார்பன் மாமணி நாட னெங்கோன்

காமானுஞ் செங்கை வள்ளல் கதிரவன் மரபில் வந்தோன்

பாமாலை சூடு மீளிப் பராக்ரம வாகு பூபன். 1

தம்பைகா வலவன் வாசத் தாதகி மாலை மார்பன்

செம்பொன்மால்வரையில் வெற்றிச் சினப்புலிபொறித்தவேந்தன்

அம்புரா சியினை மேனாள் அமுதெழக் கடைந்த மாயன்

கும்பமார் முலையார் மார்பன் கோரவாம் புரவி வீரன். 2

வாரண மெட்டும் பாம்பு மகிழ்வுற வளர்ந்த தோளான்

கோரவெஞ் சமரில் வென்று குலவிய வாகை வாளான்

சேரலர் மகுட ரத்நக் தேய்வுறத் சிவந்த தாளான்

பேருல கனைத்தும் வாழப் பிறந்தபூ ராட நாளான். 3

நீதியும் பொளையு மன்பு நெறியுமோர் வடிவ மானோன்

கோதிலா யிரமா மத்த குஞ்சரத் தானை ராசன்

மேதகு கருணை தன்னால் விளங்குமா முனிவன் றந்த

தாதுவின் பூசை யாலுஞ் சதக்கிரு தனைய தக்கோன். 4

திங்கண்மும் மாரி பெய்யச் சிறந்துயர் தரும மோங்கப்

பொஞ்குசீர் பரந்து வீசப் போற்றுசெங் கோல்வி ளங்கப்

பங்கயத் தாரோர் வாழ்த்தப் பாவலர் துதித்த மிக்க

மங்கல வளமே கூட மன்னவர் வணங்கிச் சூ‘. 5

சேனையும் பொருளும் வாழ்வு மேன்மையுஞ் சிறப்புஞ் சீருந்

தானமு நெறியு மோங்கத் தன்னுட னுதித்து வாழு

மானநால் வாகை வேந்த ரருந்திசை முழுதுஞ் காக்க

மானவேந் றரும னென்ன மாநிலம் புகழ வாழ்ந்து. 6

கனகமா மகுடஞ் சூடக் காசினி யனைத்துங் காக்குந்

தமிமதிக் குடைக்கீழ்ச் சிங்கா சனத்தின்மே லினிதி ருந்து

மனுநெறி நடாத்தி வாழு மங்கல வாண்டோ ரேழி

லினியசோ திடநன் னூலைத் தமிழினோ லியம்பென் றோத. 7

புண்டரீ கத்தார் மார்பன புகழ்ச்சர சோதி மைந்தன்

மண்டல மெண்ணுந் தேனு வரைப்பெரு மாளென் றோது

பண்டித போச ராசன் பரவுநற் குருவைப் போற்றித்

தண்டமிழ் விருத்தப் பாவாற் சரசோதி மாலை செய்தான். 8

அவையடக்கம்

கூறுசொற் புன்சொ லேனுங் கொள்கையின் பொருண லத்தால்

வீறுசேர் கேள்வி மிக்கோர் மீக்கொளற் பால தாகுஞ்

சேறெழ நடந்து சென்றுந் தேனுகர் சுரும்பு மொய்க்கு

நாறுசெங் கழுநீர் கொய்யு நலமெனப் புவியின் மாதோ. 9

பன்னாண் மொழிந்த வெனதுகவிப்

புன்சொற் பரந்து நிகழ்ந்திடவே

நன்னா வலர்தஞ் செழுஞ்சொற்க

ணனிமே தினியிற் சிறந்துவளவா

லன்னா வலர்கட் குபகாரம்

யான்செய் தமைய லமபுவிமே

லென்னா லுரைசெய யிந்நூலி

னேதஞ் சிறிது முரையாரே. 10

முன்னூ லுணர்த்த முனிவோர்கள்

முதலோர் மொழிந்த சோதிடமாம்

முன்னூ லுணர்ந்த முனிவோர்கள்

முதலோர் மொழிந்த சோதிடமாம்

பன்னூல் விளங்கும் பொருளதனைப்

பார்மே னிகழும் படியாக

வன்னூ லுரைத்த நெறிவழுவா

தாராய்ந் தூசி நுழைவழியின்

மென்னூல் செல்லுஞ் செயல்போலத்

தமிழ்நூ லிதனை விளம்பலுற்றேன். 11

நூலை ஆக்குவித்தோனாகிய மூன்றாம் பராக்கிரமவாகுவைப்

புகழும் இடங்கள் :

விவாககால நியதி

செம்பொனா லோன்சே யோரை

சிந்தபத் திலாப மேவக்

கம்பநீர்ப் புவனி மீது

கருதிய விவாகஞ் செய்யிற்

பைம்பொனாட் டரசர் கோமான்

பராக்ரம வாகு பூபன்

றம்பைநாட் டாரைப் போலத்

தலைமையும் வாழ்வு மாமே. 12

அக்கினி ஆதானம்

முந்துங் கருப்‘ தானமுதன்

மொழியுங் கரும நெறியொழுங்கி

னந்து தரிமால் பலியுடனே

நண்ணுங் கரும மெட்டகற்றத்

தந்த கருமம் பதினாறாய்த்

தமிழ்நூல் விளங்கப் புவிமீது

வந்த தேனு வரைப்பெருமாண்

மரையோர் திலகன் மொழிந்தனனே. 13

நெல் விதைத்தல்

துன்றி லாபமுட னாறு மூன்றினிற்

சுகத்து ளோர்கள்சுக மாயுளோர்

நின்ற கோணமுயர் கேந்தி ரங்களுற்

நெல்வி தைக்கினுயர் பயிரதா

மன்றன் மேவுதொடை யற்பு யாசலனை

வாழ்ப ராக்கிரம புயேசனை

யென்று மாசறவ ணங்கு மன்னர்கிளை

யெனவ ளர்ந்துசுக மெய்துமே. 14

மகுடம் புனைதற்கு யோக்கியர்

மரபும் புகழ்ந்த கொடையுந் தெளிந்த

மதியும் விளங்கு தனுவுந்

திரமுஞ் சிறந்த தொழிலும் மிகுந்த

திறலும் பரந்த சுரர்பா

லருளுங் குணங்கள் பலவும் பொருந்து

மறநற் பராக்ரம புயனைப்

பொருவுந் திறங்கொள் வரமன்னர் மௌலி

புனையுந் திறத்தர் மயிலே. 15

யுத்த யாத்திரை

வெங்கண் ணருக்கன் மதியோரை தன்னில்

விதியேழி ரண்டி லுறவே

யெங்கும் மதிக்க வெழுகின்ற மன்ன

ருடனே யெதிர்ந்த படைதா

னங்கண் புவிக்கு முதன்மன்ன னாக

வரையும் பராக்ரம புயேசன்

செங்கண் சிவந்த திசைமேவு மன்னர்

செறிசேனை யொத்து விடுமே. 16

ஆயுர் யோகம்

உரைபுகர் வியாழன் றிங்க ளோரையேழ் பத்தி னிற்க

வரநகர் மனைகள் செய்யில் வருடமா யிரமு நண்ணிப்

பருமணி நாட னெங்கள் பராக்ரம வாகு பூபன

றிருவடி பணிந்த மன்னர் பதிகள்போற் றிரம தாமே. 17

அபிசித்து முகூர்த்தம்

நாவினா லுலகோர் போற்று நற்கதிர் பரிதி யுச்சி

மேவினாற் குற்றம் யாவு மிகுந்திட ரெய்து மேனும்

பாவினாற் புனைந்த செஞ்சொற் பராக்ரம வாகு செங்கைக்

காவினா லேற்று ளோர்கள் கலியெனத் தணியு மன்றே. 18

குணாதிகம்

நேரான வெள்ளி குருவண்மை யோடு

நிலையான வோரை பெறவே

தீராத குற்ற முழுதுந் திரண்டு

செறினுஞ் சிறந்த நெறியாற்

பாராள வந்த வரமான மன்னர்

பரவும்ப ராக்ரம புயேசன்

பூராட நாளி லுலகோர்க் டங்க

ணனிதீமை போன்று விடுமே. 19

வேறு

செந்திரு வாழு மார்பன் சினவரன் பாத பத்த•

சுந்தரத் தரும நூலுஞ் சோதிட நூலுஞ் செய்தோ•

புந்தியிற் றெளிந்த கல்விச் சரசோதி போச ராசன்

பைந்தமிழ் விருத்தப் பாவா லோரை நூல் பகர லுற்றான். 20

திருமாலைப் போற்றும் இடங்கள் :

வேதத்தி னுண்மைப் பொருளாய் விதியாய் விரிந்த

பூதத்தி னோங்குஞ் செயலாய்ப் பொருள் யாவுமாகி

யோதத்தி னம்பே ருகக்கண் டுயிலுத் தமன்பொற்

பாதத்தை நாளும் பணிந்தன் புடனேந்து கிற்போம். 21

திருவெழுஞ் சிறப்பு னானைச்

செகமெலாந் தொழுது போற்று

மருவெழுங் கமல மீது

நடந்தருண் மகிமை யானைக்

கருவெழு பிறப்பி லானைக்

கருணையு மறிவு மொன்றோ

யுகவெழு காட்சி யானை

யுத்தமர் பணிவர் தாமே. 22

சிங்கை செகராசசேகரன்காலப் புலவர்கள்

1380 - 1414 (ஆட்சிகாலம்)

சிங்கைக் செகராசசேகரன்

சோமசன்மா

பண்டிதராசர்

கவிராசர்

சகவீரன்

கரசைப் புலவர்

சிங்கைச் செகராசசேகரன்

இவன் யாழ்ப்பாணத்தையாண்ட தமிழ் மன்னருள் முதன்மையானவன். இவனது தலைநகர் சிங்கை என்பது. இவன் தமிழ்ப் புலவர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலுந் திரக்கோணமலைப் பகுதியிலுங் குடியேற்றினான் என வராற்றுகள் கூறும். இவன் புலவர்கள் பலரை ஆதரித்து அவர்களைக் கொண்டு நூல்கள் பலவற்றை இயற்றுவித்தான் அந்நூல்களுள் இரண்டு இன்றும் இவனது பெயர்கொண்டு விளங்குகின்றன. அவற்றுள் ஒன்று செகராசசேகரம் என்னும் வைத்திய நூல் மற்றையது செகராசசேகர மாலை என்னுஞ் சோதிட நூல். முன்னையதன் ஆசிரியர் யாரென்பது புலப்படவில்லை.

செகராசசேகரம்

மணிதங்கு வரையு ளாதி

மன்னுயிர் படைத்த போது

பிணிதங்கு வகையு நோயின்

பேருடன் குணமுங் காட்டி

அணிதங்கு மருந்துங் காட்டு

மாயுரு வேதந் தன்னைக்

கணிதங்கு வகையால் வேதங்

கடந்தமா முனிவன் செய்தான். 1

செய்தவர் தமது நூலும்

தேர்ந்தோர் தெரிப்பும் பார்க்கிற்

பொய்தவம் புயர்ந்த பௌவம்

போலுமிங் கிதனை யாய்ந்து

வெய்தவ நோய்கள் தீர

விருத்தவந் தாகி யாகக்

கொய்தவ வொழுங்கி லேதான்

கோப்புறச் செப்ப லுற்றாம். 2

வியாதி வரும்வகை

ஆம்பொரு டன்னில் மண்மே

லறிவுசேர் மாந்தர் மேலே

தேம்புதல் பொருந்து நோய்தான்

சேயிழை யாலுந் தோ•றும்

வாம்பெருங் குற்ற மன்றி

வான்முறை யாலுந் தோன்றும்

தாம்பயில் பிழையால் வந்து

சார்வது சாற்று வோமே. 3

சாற்றிய மாதர் மேலே

தங்கிய காத லாலு

மூற்றமா மருத்தீட் டாலு

மோய்விலா நடையி னாலும்

போற்றிய தனங்கள் கெட்டுப்

போதலி னாலுஞ் சேட்டை

மாற்றிய பழைய பொல்லா

மலமிவை நிற்கை யாலும். 4

நின்றகா லங்க டன்னி

னீதிக ளாலும் பையு

ளொன்றவே நாளு முண்ணு

முண்டியிற் பொல்லாங் காலும்

மன்றநின் றலைவு செய்யும்

மனமிடை வாலும் போதச்

சென்றநீர்ப் பகையி னாலுஞ்

சீதளந் தன்னி னாலும். 5

உற்றதோ ருடலிற் சொன்ன

வுயர்குண வீனந் தன்னால்

முற்றவல் வியாதி யெல்லாம்

முதிரவே தோன்றும் போது

செற்றமாம் வாத பித்த

சேத்துமந் தன்னி லொன்றைப்

பற்றவே தோன்று மென்று

பகர்ந்தனர் முனிவர் தாமே. 6

சினவரி யேறு போலுந்

திடமுளா னுடைமை யுள்ளான்

கனமென வுலகங் காக்குங்

கருணையான் கதித்த சீரான்

இனமென வுலகங் கொள்ளு

மேற்றத்தான் தோற்றத் தான்மா

மனமதிற் றேய்வி லாதான்

வைத்திய னென்ன லாமே. 7

சேட்டுமசுரத்தி லரக்கெண்ணெய்

அருந்தவர் கோனான திரிசுடரை நாளும்

அர்ச்சனையே புரியவகை அறியா தொன்றும்

பொருந்துபிற விப்பிணியா லழுந்தும் வாகைப்

போக்கவகை யறியாத பொருவில் மாந்தர்

திருந்துகுரு தெரிசனையாற் பாவ மெல்லாந்

தீர்ந்தவகை யதுபோலச் செல்வி தாக

வருந்துமுட லிற்சுரமும் போகுஞ் சேட்டும

மானசுரத் தொடிளைப்பும் மாறிப் போமே. 8

நூலை ஆக்குவித்தோனாகிய சிங்கைக் செகராசசேகரனைப்

புகழம் இடங்கள் :

அங்காதிபாதம்

இயம்பிய குடலு மூனு மென்புநா டிகளு மற்றுஞ்

செய்பெறு சிங்கை நாடன் செகராச சேக ரன்றா

னுயர்ந்தவாள் வடக்க ராக முருட்டிய களத்தின் மீதே

அயஞ்சிறி துளது தீர அளந்துகண் டறிந்த தாமே. 9

முகவாதசன்னி

இட்டிடு மதற்குளென் சிற்றாம ணக்குபுங்

கிருப்பைவேம் பிவைக ளின்நெய்

இருகொத்து வீதமாய் விட்டுவற் றக்காய்ச்சி

யிதைமெழுகு பதம்வ டித்துச்

சட்டெனக் கஸ்தூரி யோடுபுகை யூறலுஞ்

சாதிலிங் கமுமொவ் வொன்று

சாரிரு கழஞ்செடுத் தேபொடித் திட்டபின்

தக்கவெள் ளுள்ளி முசிறின்

முட்டையின் றைலமிவை காற்படி யதிற்சேர்த்து

முன்னுகா சிடை யருந்தி

முறையுடன் மேற்பூச முகவாத சன்னியும்

முற்றுபல சன்னி வகையும்

திட்டமுறு வலிகளும் திகிலுற் றடங்கியே

செகராச சேகர னெனும்

சிங்கையா ரியனையெதி ரொன்னார்க ளென்னவே

திசைசெட் டகன்று விடுமே. 10

பாம்புக் கடி

பாரிலுள்ள சூத்திரனாம் பாம்பு புற்றிற்

பரிந்திருக்கு மிரையெடுக்கிற் பலவுந் தின்னு

மேருடனே தாடினாடிற் பத்ம ராக

மிலங்குமணி முடிபுனையு மிலங்கை வேந்தர்

சீரியபொன் றிறையளக்கச் செங்கோ லோச்சுஞ்

செகராச சேகரமன் சிங்கை மேவு

மாரியர்கோன் வெண்குடையி னிழலே செய்யு

மவனிதனைப் பார்த்துநின்றே யமர்ந்தா டும்மே. 11

சோமசன்மா

யாழ்ப்பாணத்துச் சிங்கைநக ரரசனான செகராச சேகரனால் இயற்றுவிக்கப்பட்டது செகராச சேகரமாலை என்னுஞ் சோதிட நூல். இந்நூலாசிரியர் பெயர் சோம சன்மா. தந்தையார் இராமேசசன்மா என நூற்சிறப்புப் பாயிரம் கூறுகின்றது. நூலெழுந்த காலம் செகராச சேகரனின் ஆட்சிக் காலமாகிய 1380 - 1414 ஆகும்.

நூலாசிரியராகிய சோமசன்மா என்பவர் இராமேச்சரத்தில் அரசுரிமை கொண்ட சேதுபதிகளின் வழித் தோன்றலாகிய செகராசசேகர மன்னனின் உறவினருள் ஒருவர் என்பது தெரிகின்றது.

செகராசசேகர மாலை என்னும் நூல் வடமொழி நூலொன்றின் மொழிபெயர்ப்பு எனக் கருதப்படுகிறது. இது ஒன்பது படலங்களையும் 290 விருத்தச் செய்யுள்களைங் கொண்டது. பின்வருஞ் சிறப்புப் பாயிரச் செய்யுள்களை நூலைப்பற்றி விளக்குவன:

ஐந்தருவு நவநிதியுங் குலமணியும்

பொன்முகிலு மாவு மொனறாய்

வந்தனைய கொடைக்குரிசில் வரியளிக

ளிசைகுலவு வனசத் தாமன்

சந்ததமுந் தருமநெறி கோடாத

தவப்பெருமான் றழைத்த கீர்த்திக்

கந்தமழை யாரியர்கோன் செகராச

சேகரமன் கங்கை நாடன்.

தன்கடவுட் சுருதிகளின் மனமெனுஞ்சோ

திடமதனைத் தலத்தின் மீது

மின்குலவு தென்கலையாற் றருகவென

வருள்புரிய விருத்தப் பாவாற்

பொன்குலவு செகராச சேகரமா

லையைச் செய்தான் பொருந்து மேன்மைத்

தொன்குலவு மிராசவிரா மேசனருள்

சோமனெனுஞ் சுருதி யோனே.

செகராசசேகரமாலை

கடவுள் வாழத்து

விநாயகர்

எழில்வாய்ந்த மணித்திகிரித் திருநெடுமா

லுந்தியின்வந் திணங்கு மாதித்

தொழில்வாய்த்த சதுர்முகத்தன் றிருச்சுருதிப்

பொருளாகுந் துய்ய கார்வண்

டுழிவாய்த்த தேனிதழிச் சிவனருளு

மைங்கரத்தா னுலக மெல்லாம்

பொழில்வாய்த்த மலர்சொரிந்து வாழ்த்தெடுக்கும்

பதமலர்கள் புகழ்தல் செய்வோம். 1

சிவபெருமான்

சங்கரனைப் பிறைவேணிப் பிணையிருங்கைப்

பிரசநறுந் தாமத் தாம

வங்கணனைப் புரமெரித்த வாடகவான்

கோதண்டத் தானை மானோம்

பங்கினனைக் கடுத்துளிக்குந் துளையெயிற்றுப்

பஃறலைவெம் பகுவாய் நாக

கங்கணனைக் கனலுநுதற் கண்ணானை

விண்ணவனைக் கருத்தில் வைப்பாம். 2

விட்டுணு

நாரணனைப் பயோததயி னனந்தலைவா

யனந்தமுடி நாகப் பாய்வா

ழாரணனைப் பிரசமுறை யணிகமலத்

திருப்பூத்த வாகத் தானைப்

பூரணனை மலர்ப்பூவைப் பொருவுருவப்

பொற்போனைப் புணரிப பாரேழ்

பாரணணைத் திகரிவிடாப் பங்கயக்கைப்

பெருமானைப் பணிதல் செய்வோம். 3

சரசுவதி

படிகநிறத் திருமேனிப் பவளவிதழ்ச்

செங்காந்தட் பைம்போ தங்கைக்

கடிகமழ்பூங் கருங்கூந்த விணைச்செந்தாட்

குவளைவிழித் கற்பின் பொற்பார்

வடிவுளவெண் டரளநகைக் கமலமலர்ப்

பீடிகைவாழ் மங்கை துங்கப்

பொடிமலரா லயனாவிற் புக்கிருப்பா

ளெமக்கன்பு புரிவா டானே. 4

அவையடக்கம்

வனைந்துமா முனிவோர் சொன்ன வடகலைச் சோதி டத்தைப்

புனைந்த தென் கலையாற் சட்டை பூட்டிய விதனைக் கேட்டு

முனிந்திட வேண்டா நல்லோர் முற்றுமா ராய்ந்து குற்ற

நினைந்த யகற்றி நன்காய் நிச்சயித் திடுகை நீரே. 5

நூலை ஆக்குவித்தோனாகிய சிங்கைச் செகராசசேகரனைப்

புகழும் இடங்கள்:

உபாகன்மம்

ஆவணி யோணம் புரணை யவிட்ட

மானிமா லத்திதி புரட்டை

மேவிய மாயன் முரசுபூ ரணைபுண்

மிளிர்கரஞ் சோனையாம் புதனிற்

சேவணி துவசன் சிங்கையெங் கோமான்

செயசெக ராசசே கரமன்

பூவணி புகழான் பயில்சதுர் மறைக்குப்

பொருந்துபா கன்மமாம் பொன்னே. 6

விவாகம்

மாதர் மைந்தரிவர் சம்ப்ர தாயமும்

வரும்பொ ருத்த நிமித்தமு

மோது கோசரமு மொன்ற நன்மணம

துறத னன்றென விசைத்தலாற்

சேது காவலவன் விஞ்சை விஞ்சுசெக

ராச சேகரன்மெய் திகழ்வதற்

கேது வானவரு மலர்மு கத்தெரிவை

யிவ்வி திப்படி யிசைத்திடே. 7

பொருத்ததோசாபவாதம்

எண்டிருந்து மிரண்டீரா றிருமுன்றெட்

டைந்தொன்பா னிராசி யாயும்

பண்டிகைக்கு மொழிக்கரக்கர் கணங்கூடு

கினுங்கிரகம் பயிட் புண்டேற்

றெண்டிரைக்குட் கண்டுயில்லால் செகராச

சேகரனுந் திருவு மென்ன

மண்டலத்தி னெடுங்கால மடமானும்

புமானுமிக வாழ்வ ரன்றே. 8

சித்தமுறு தினமாதி தீதெனினுந்

திரிகூடஞ் சிதைவுற் றாலுங்

சுத்தவிரு வோரோரைக் கதிபதியோர்

கிரகமாத் தோன்றி லான்ற

முத்தமிழ்ச்சேர் செகராச சேகரமன்

றிருமார்பின் முந்நூ லென்ன

மெத்துமியன் மயிலனையார் பைங்கழுத்தின்

மங்கலநாண் விளங்கு மின்னே. 9

புவனாந்தயோகம்

ஏதினன்பத் திடத்தடைய விலக்கினத்திற்

பொன்னுதிப்ப வேழி னான்கிற்

சோதிமதி யெழும்புவனாந் தத்திற்சங்

கிரகிக்கிற் றுலங்கும் பைந்தாட்

சீதமலர் நறுந்தெரியற் செகராச

சேகரமன் சிறநத கீர்த்தி

மேதினிமேல் வளர்ந்துலவுந் தகைமையெனத்

தானியங்கள் மிகுந்து மின்னே. 10

இரலை தேர்பயறு சோதி விட்டமுட

னிக்கி ரேவதி யிரும்பனை

குருவ தாயதிரி யுத்த ரங்களிறு

குலவு நாளிவையின் மின்னனாய்

பெருமை யானசிர வேட்டி தொக்கின்மிகு

பீடு றும்பெருக வென்றிசே

ரரிய வாரியர்கு லாதி பன்றெரியு

மம்ம றைப்பொரு றுரைக்குமே. 11

சாமரை, காளாஞ்சி, கெண்டிகை முதலியன கொள்ளல்

மன்னர் மன்னுசெக ராச சேகரமன்

மணவை யாரியவ ரோதயன்

பன்னு செந்தமிழ்வ ளம்பெ றற்குதவு

பரிசி லங்கவரி சித்தியாம்

பொன்னின் மிஞ்சியக ளாஞ்சி கெண்டிகைபொ

லன்க லம்பிறவு மாம்பரிச்

சின்ன முள்ளதொகை யாவு மிவ்விதி

சிறந்த றிந்துரைசெய் சேயிழாய். 12

சஞ்சீவினி மருந்துண்ணல்

திணைம டந்தையம் புயத்தொடைப் புயத்திடைத்

திகழ்செக ராசசே கரமன்

மணவை தந்தமா லிருபதாம் புயமென

மருவினர்க் காத்துயி ரளிக்குங்

குணமி குந்தசஞ் சீவினிக் காதிரை

குலவிய முறமடுப் பனுடந்

தணிவில் செங்கதிர் வாரம திருத்தைகள்

சார்ந்திடி னன்றெனச் சாற்றே. 13

இராச தரிசனம்

வையன்னு காத்தியா யனசூத் ரத்து

மன்னியகா சிபகோத்ர மருவு கேண்மைச்

செய்யசதுர் மறைவாய்மைக் காசி வந்த

செகராச சேகரனா மன்ன னாதி

துய்யபுகழ்ப் பூசுரமன் னவரைக் காணச்

சோபனஞ்சேர் மன்னவரைக் காண லாகும்

வெய்யவரும் வணிகர்குல வேந்தர்க் கன்றி

வேளாள வேந்தருக்காம் வெய்யோன் சேயே. 14

யுத்த யாத்திரை

அண்டபுரோ கிதனுதிப்ப வாறகத்திற்

கனற்கதிரோ னாகத் திங்க

ளெண்டருநா லிரண்டொழிய விகற்கேகி

னெடுந்தரங்க மிரங்கு கூலத்

தெண்டிரைசூழ் மணவையர்கோள் செகராச

சேகரமன் செவ்வேல் வென்றி

கண்டுதிறை புரிந்தவர்போ லும்பகரா

தஞ்சலிப்பர் கருத லாரே. 15

விண்ணொன்று புந்திகுருக் கவியிவர்கள்

கேந்திரத்து விளங்கத் தீயோர்

கண்ணொன்று மூன்றாறு பெற்றொளிர

வமர்க்கேகிற் கறைந்தாட் சூதப்

பண்ணொன்று சததணத்தார்ச் செகராச

சேகரமன் பகைஞர் தம்மிற்

னுண்ணென்று வெருவுதல்போல் விழியிணைக

டுயிலாவாந்த துன்ன லார்க்கே. 16

சகுனபலன்

பன்னம தமைந்து தயிலுமவ் விராசி

பாற்படிற் பழிப்பதா மென்றே

முன்னுற நடையு மிருக்கையு நிலையு

முயன்றவவ் விராசியிற் சேரிற்

றென்னவர் பரவும் பொலன்மணிக் கழலான்

செகராச சேகர னென்னு

மன்னவர் மன்னா மாதிகா ரணன்சீர்

மருவினர் நிகர்க்குமப் புவியே. 17

பண்டிதராசர்

இவரது ஊர் திருக்கோணமலை. தென்மொழி, வடமொழி ஆகிய இரண்டையும் அறிந்த இவர் கோணேசராலயத்து அருச்சகராயிருந்தார். சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோட் கிணங்கித் தக்கிண கைலாச புராணம் எனப்படும் கோணாசல புராணத்தை இயற்றினார். எனவே, இவரது காலம் சிங்கைச் செகராசசேகரனது காலமாகும்.

தக்கின கைலாச புராணத்துள் வரும் பின்வருஞ் சிறப்புப் பாயிரம் நூலைப்பற்றிய விளக்கங்களைக் கூறுகின்றது. இச்சிறப்புப பாயிரம் பாடியவர் கவிவீரராகவர்:

"மணிநிறக் கண்டன் வடபெருங் கயிலையின்

அணிநிறக் கொடுமுடி யாயிரத் தொருமுடி

படவரா வொதுக்கப் பறித்தினி திலங்கை

வடகட னடுவண் மாருதம் பதிப்ப

வருமுக் கோண மலைதென் கயிலைப்

பரமர்க் குருத்திரர் பதினொரு பேரும்

ஓருபது முகுந்தரு மொன்பது விரிஞ்சரும்

வருடற் கமடம் வழங்கிய மீனமும்

திருமலை தழுவிய தெசமுக நிருதனும்

பொருமலை மதரிப் புரவலர் பலரும்

பூசையொ டிறைஞ்சிய புராணநூற் கதையைத்

தேசிகன் சொற்படி தென்கலைப் படுத்தி

யந்தா தித்தொடை யடைவொடு தொடுத்து

நந்தா விருத்த நவையறக் கூறினன்

பொன்னாட் டைந்தரு பொருவரு கரதலன்

மறுநில நிருபரை வானிலத் திருத்தி

யுறுநில முழுவது மொருதனி புரப்போன்

தென்னிலங் காபுரித் திசைதொறு மருவும்

மின்னிலங் கியவேல் மேவலர் புயத்துப்

படவரா முடித்தலைப் பார்முழு தாண்ட

இடப வான்கொடி யெழுதிய பெருமான்

சிங்கை யாதிபன் சேது காவலன்

கங்கை நாயகன் கருங்கடற் சேர்ப்பன்

பௌவ மேற்றுயில் பராபரன் சூட்டிய

தெய்வ மாமுடிச் செகராச சேகரன்

அவனது காலத் தத்திரி கோணைச்

சிவனது கோயிற் சிவமறை முதலோன்

அருமறை யுபநிட மாகமஞ் சோதிடம்

விரிதமிழ் வரையற விளங்கிய குரவோன்

சேயினுந் திறலான் றயாநிதி யனையான்

முப்புரி நூற்பயன் முளரியந் தாமன்

செப்பரும் பண்டித ராசசி காமணி

என்னு நாமத் தெங்குரு பெருமான்

மன்னுநாற் கவியும் வல்லநா வலனே,"

இச் சிறப்பு பாயிரத்தினின்னுஞ் சிறிது வேறுபட்டதாகப் பின்வருஞ் சிறப்புப் பாயிரங்க காணப்படுகின்றது. அது பாழ்ப்பாணத்து நல்நூர் அரசகேசரியாற் பாடப்பட்டதெனப பழைய பதிப்பொன்று கூறுகின்றது :

மணிநிறக் கண்டன் மாண்புறு கயிலையி

னணிநிறக் கொடுமுடி யாயிரத் தோர்முடி

படவர வொதுங்கப் பறித்தரு மிலங்கை

வடகட னடுவண் மாதிர மதிப்ப

வருமுக் கோண மலைதென் கயிலை

பரனரு ளுருத்திரர் பதினொரு பேரு

மொருபது முகுந்தரு மொன்பது விரிஞ்சரும்

வருகடற் கடகம் வழங்கிய மீனமுந்

திருமலை தழுவிய தெசமுக நிருதனும்

பெருமத மலைகரிப் புலவர் பலரும்

பூசையோ டிறைஞ்சிய புராணநூற் கதையை

ஆசறு தமிழி லறைகுதி யென்றன

னருமறை யுபநிட மாகச் சோதிடம்

விரிகலை பலவும் விளங்கிய குரவன்

சேயினுந் திறலான் சிவநெறித் தவனுளான்

றாயினு மினியான் றயாநிதி யனையான்

முப்புரி நூற்பயன் மூரிய தாமன்

செப்பரஞ் சைவ ராச பாண்டிதன்

அந்தா தித்தொடை யடிகொடு தொடுத்து

நந்தா விருத்த நவையறக் கூறின

னன்னா டடைந்த நாரியர் கோமான்

பொன்னா டடைந்த பொருவரு காதலன்

மருவலர் தங்களை வானிலத் திருத்திப்

பொருவரு புவியை யொருகுடை புரப்போன்

றென்னிலங் கியவேல் மேலாம் புயத்து

பரவா முடித்த பார்முழு தாண்ட

விடலாண் வயமா விளங்கிய கொடியான்

சிங்கா சாரியன் சேது காவலன்

கங்கை நாடன் கற்றவர் திலகன்

ஆயுண் மறையுட னரிய சோதிடம்

பாய்திரைக் கடலுட் பலவு முணர்ந்தோன்

ஒப்பிலா முத்தமி ழோர்ந்த

செப்ப ருஞ்செக ராசசே கரனே.

பின்வருஞ் சிறப்புப்பயிரத்தைப் பாடியவர் கோணேச கல்வெட்டைப் பாடிய கவிராசர்.

நடிக்கும் பரத மியலிசை நாடக நாற்கவிதை

நொடிக்குமுன் பாடப்ர பந்தங் கணிதநன் னூல்சிநூல்

படிக்க நிகழ்த்தப் புராணா கமஞ்சொல் பரம்பரையாய்

வடிக்குந் தமிழ்வல்ல பண்டித ராசன் வரவித்தையே.

தக்கிண கைலாச புராணம்

பாயிரம்

பாரிலங்க கயிலாச புராணத்திற்

கேழ்சருக்கம் பயில்வித் தோங்கு

மாரமுத விருத்தகவி யறுநூற்று

முப்பானைந் தளவே யாகச்

சீரெழுத்துச் சொற்பொருள்யாப் பலங்கார

முதலியநூ றெரிக்க வல்ல

பேரிகழா வகைபகர்ந்தேன் றென்கயிலை

மலைநிலைமை பெரிதுந் தோன்ற. 1

ஈழமண்டலச்சருக்கம்

கலிவிருத்தம்

பாரு நாகமும் பைங்கிரி யுந்திரை

நீரு நேர்புடை சூழ நிமிர்ந்தெழு

மேரு மீதில்வி ளங்கிய சென்னியொன்

றார மாருதங் கொண்டிங் கமைத்ததே. 2

அமைத்த பொன்மலை யாதலி னப்பெயர்

சமைத்த வீழமி தென்று தழீஇயதா

லிமைத்த மாமணி யெங்கு மிலங்கலா

லுமைத்த நீர்வய லூருமி லங்கையே. 3

இலங்கு மாமணி யெய்தலி னாவலார்

துலங்கு மாதவர் சூழ வருதலாற்

பலன்கொ டாவர மெங்கம் பரத்தலாற்

பொலங்கொ ளீழமும் பொன்மலை போலுமே. 4

ஆங்க ரும்பு மலருங் கதலியும்

மாங்க னிக்குல முஞ்செவ் வருக்கையுந்

தேங்கு தேனுந் திரைத்த புனல்சிவ

னோங்கு பூசனைக் குய்ப்பவ ரொக்குமால். 5

செய்ய மாமணி யைத்திகழ் பச்சையுந்

துய்ய நீலமுஞ் சூழ்ந்தொளிர் கின்றது

வெய்ய வன்பரி வேடமு டன்பெரு

வைய மீதுவ யங்குதல் போலுமே. 6

மேனி லாவெறி சங்கும்வெண் முத்தமும்

வானி லாவொடு தாரகை மானலா

லான வாவியும் அம்புய ராசியும்

பானு வின்கடல் பாய்கதி ரொத்ததே. 7

ஆரண முழக்க மெங்கு மலைகடன் முழக்க மெங்கும்

வாரணஞ் சொரியுந் தான மறையவர்க் களிப்பர் தானம்

பூரண மாகு ஞானம் பொருந்திடா ததுவஞ் ஞானம்

நாரண னனைய பூவை நந்தன மெங்கும் பூவை. 8

பூவெலாந் துய்ய வாசம் புனமெலா முனிவர் வாச

மாவெலாங் குயிலி னோசை மலையெலாங் குயிலி னோசை

காவெலா முயர்ந்த தாழை கரையெலாங் கமழுந் தாழை

பாவெலா மரனார் தஞ்சீர் பகர்வரி தன்னோர் தஞ்சீர். 9

வரையெலா மார மாரம் வனமெலா நன்கார் நன்கார்

நிரையெலாஞ் சாலி சாலி நிலையெலாங் கன்னல் கன்னல்

தரையெலா நீல நிலந் தடமெல நாறு நாறுங்

கரையெலா மன்ன மன்னங் கடலெலா மீழ மீழம். 10

திருமலைச்சுக்கம்

கலிவிருத்தம்

மன்னிய வின்னிலை வான நாடருந்

துன்னிய முனிவரும் பிறருஞ் சோதியைச்

சன்னிதி வந்துகண் டிறைஞ்சித் தாண்மலர்

சென்னியிற் புனைந்துந் துயரஞ் சிந்தினார். 11

சிந்தைநீ சிந்தையிற் றெளியுஞ் சோதிநீ

யெந்தைநி யாயுநீ யெங்கட் காவிநீ

விந்துநீ நாதநீ மேலுங் கீழநீ

பந்தநீ வீடுநீ பகலு மல்லுநீ. 12

நீயலாற் பிறிதிலை நிலமு தற்பிறப்

பாயவைம் பூதங்க ளங்கங் காயினை

நாயக நின்பத நளினம் போற்றுதற்

கேயது பெருந்தவ மென்செய் தோமரோ. 13

திருநகரச்சுருக்கம்

வாருலவு முகிண்முலையு முத்தரிய

மணிமார்பு மலர்க்க ணோக்குங்

காருலவு சுரிகுழலு மொருபாகந்

திருமேனி கவின்று தோன்றச்

சீருலவு நதியரவு மதிமுடிமே

லொருபாகஞ் சிறக்கத் தோற்று

நீருலவு கயிலைமலைப் பெருமானை

மறவாதென் நினைவு நெஞ்சம். 14

காண்மின்க டென்கைலைப் பெருமான்றன்

றிருமேனி கருது மின்கள்

பேண்மின்கள் சந்நிதியிற் புகுமின்க

டொழுமின்கன் பேசு மின்கள்

கேண்மின்கள் கைலாச புராணமெனுஞ்

சிவகதையைக் கிளைக ளோடும்

வாண்மின்க ளுய்மின்க ளஞ்செழுத்தை

மறாவது வாழ்த்து மின்கள். 15

வேறு

வேண்டிய முத்தியின் விருப்ப மீக்கொள

வீண்டொரு புராணம திசைத்த காதலேன்

காண்டகு பொருளிலாக் கவிகள் யாவுநம்

மாண்டகைக் கன்பினா லருத்தி யாயதே. 16

வரந்தருந்த தென்கயி லாய மன்னிய

நிரந்தரன் னாளினை நினைந்து வார்த்துவோர்

புரந்தர னிமையவர் போற்ற நீள்வினை

துரந்தர னாவதுஞ் சொல்ல வேண்டுமோ. 17

தேவையின் மன்செக ராச சேகரக்

கோவையி னுதித்தசீர்க் குமார சூரிய

னாவியு முடலுமொத் தளித்த கல்விளின்

மேவிய காப்பியம் விமலற் காயதே. 18

கவிராசர்

இவரது ஊர் திருக்கோணமலை. இவர் கோணேசர் கல்வெட்டென வழங்குங் கோணேச சாசனத்தைப் பாடியவர். பண்டிதராசர் இயற்றிய தக்கிண கைலாச புராணத்துக்கு சிறப்புப் பாயிரம் அளித்தவர் இவரேயாகலின் இருவரும் ஒரே காலத்தவர். சிங்கைக் செகராசசேகரனின் வேண்டுகோட்கிணங்கிய பண்டிதராசர் தக்கிண கைலாச புராணத்தைப் பாடினராகையின் கவிராசர் வாழ்ந்த காலமுஞ் செராசசேகரனின் ஆட்கிக்காலமாகும்.

கோணேச சாசனம் திருக்கோணமலைத் தலவரலாறைக் கூறுகின்றது. பிற்காலத்திற் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் முதலியோர் இலங்கையைக் கைப்பற்றி ஆள்வார்கள் என்பதைத் தீர்க்கதரிசனமாக முன்னரே இச்சாசனத்திற் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோணேசர் கல்வெட்டென வழங்கம்

கோணேச சாசனம்

காப்பு

திருவளர் கோணையின் சீரை யோதிட

வொருபொரு ளென்னவிவ் வுலகம் யாவையுந்

தருமர னருள்புரி சாமி மும்மதம்

வருகரி முகனடி வழுத்தல் செய்குவாம். 1

தெய்வ வணக்கமுஞ் செயப்படுபொரும்

ஆக்கியோன் பெயரும்

சொல்லுற்ற சீர்க்குளக் கோட்டுமன்

சொல்லிய சொற்படியே

கல்வெட்டுப் பாடெனப் பாடின

னாதிக் கதைபொருளா

மல்லுற்ற கண்டர்தம் பொற்பாத

நெஞ்சி லழத்தியிகல்

வெல்லுற்ற சீர்க்கவி ராசவ

ரோதய விற்பன்னனே. 2

நூல்

திருமருவு மனுநீதி கண்ட சோழன்

கெமகிழுமரபில்வரு ராம தேவன்

தருமருவு திரிகயிலைப் பெருமை கேட்டுத்

தானுமவன் வந்ததுவு மவன்சேய் புன்பு

மருமருவு மாலயங்கள் கோபு ரங்கள்

மணிமதில்சூழ் மண்டபங்கள் மலிநீர் வாவி

கருமருவு முகினீர்சேர் திருக்கு ளஞ்செய்

காதையதுங் கல்வெட்டாய்க் கழறு வாமே. 3

சொல்லரிய திரிகயிலைப் பெருமை யெல்லாந்

தூயபுரா ணக்கதையிற் சொன்ன துண்டு

வல்லமைசேர் வன்னிமையு மற்றுந் தானம்

வரிப்பத்தா ராதியோர் வந்த வாறும்

நல்லதொரு பூசைவிதி நடத்து மாறும்

நடப்பதின்மே லினிநடக்கு நடத்தை யாவும்

சொல்லெனவே சோதிடத்தி னிலையே கண்ட

கவிராசன் வருங்காலஞ் சொல்லுஞ் சீரே. 4

சீரிலங்கு சோழவள நாடு தன்னி

லொருநாளைக் கிரண்டவணஞ் செம்பூச் சம்பா

ஏரிலங்கு மரிசிவர வதற்குத் தக்க

கறியமுது பலசெலவு மீத்தீ சற்குப்

பாரிலிந்தப் பூசைதனை நடத்து மெம்போற்

பணியினொடு மினிதாகப் பகிர்வா ராரென்

றேரிலங்கு குளக்கோடன் னெனுமிராசன்

நாற்கால்மண் டபத்திருந்தே யெண்ணி னானால். 5

வேறு

எப்போது முப்போது மிப்படித்தென்

கோணமலை யிறைவன் பூசை

தப்பாம னீவிர்செய்க தந்திரமந்

திரங்கிரியை தானா சார

மிப்படியே செய்திடுவீ ரிதுதவறி

னெளியவரை யிறைஞ்சி நிற்பீர்

மெய்ப்புடனிவ் வெல்லையுளோர் செய்தொழும்பு

தவனினிடர் மேவி வீழ்வார். 6

வேறு

வாரிவளஞ் சூழிலங்கை வேந்த ரானோர்

மகாகோணை நாதருக்க வளவர் வேந்தன்

பாரிலங்கு பூசைதனக் கீந்த சொர்னம்

பலவரவு மெடுத்தழிவு பண்ணு வாரேற்

கூரியதோர் குட்டமுதல் வியாதிக் காளாய்க்

கூட்டுமின்றி நாட்டவர்க ளீட்டு செம்பொன்

நேரிகலிற் கொள்ளைகொண்டு சூறை யாடி

நீகருமிப் பதியாள்வர் நியமந் தானே. 7

தானதிக வரசருட னமைச்சர் தாமுந்

தக்கபிர தானியொடு தருமஞ் செய்வோர்

ஆனநெறி முறைதவறா மறையோர் தாமு

மகலாத கற்புடைய வரிவை மாரும்

ஈனரொடு மூடர்மொழி தன்னைக் கேட்டே

யிவர்கள்புரி நெறிமுறையை யிகழு மந்நாள்

மானபர னாலயத்துப் பூசை தானு

மகிழ்ச்சிமங்க விகழ்ச்சியுமங் கெழும்புந் தானே. 8

எழுகிரணத் திரிகயிலைப் பெருமான் பூசை

யிப்படியே முறைதவறி நடக்குங் காலைப்

பழுதிறிகழ் கயவாகு வருவா னந்நாட்

பாசுபத ரிறப்பாபழ மறையோர் சேர்வர்

பொழுதுகுலக் கயவாகு ராச ராசன்

பூசைவிதிக் கேகனக நாடு மீந்து

தொழுதுநின்றே யாலயத்திற் றொழும்பு திட்டஞ்

சொல்லியவ னனுராச புரியிற் சேர்வான். 9

சேர்ந்தபின்னர் மறையோர்கள் கோணை நாதர்

திருப்பூசை வெகுகாலஞ் செய்யும் போதில்

மாந்தளிர்போன் மேமியுடைப் பறங்கி வந்து

மாகோணைப் பதியழிக்க வருமந் நாளில்

ஏந்ததென்பாற் கழனிமலை யென்றான் றுண்டாங்

கீசனுக்கு மாலயங் கியற்றப் பின்னர்

கோந்தறைசே ருலாந்தரசு வருமந் நாளிற்

குலவுசிங்க விரவிகுலங் குறைந்தே போகும். 10

போனபின்ன ரிலங்கைமுற்றும் வடுகராள்வார்

புகழிலங்கை தனிபுரக்கு முலாந்தா மன்னன்

தானிலங்கு மரசினுக்குத் தடையென் றெண்ணித்

தரியலனைக் கடலிடையே தள்ளி விட்டுத்

தேனமரு மலங்கல்புனை வடுகன் றானுந்

செப்பியமாற் றரசுமகிழ் கொண்ட கோணை

மானபர னகமிழ்பொற் கோயி லுக்குள்

மாதனத்து மீதுவைத்து வணங்கு வாரால். 11

வணங்குமரன் பூசைமுன்போல் நடக்கும் போது

மகாவிலங்கைப் பதியதனை மருவுஞ் சிங்க

னிணங்குநவ ரத்தினத்தாற் பொன்னான் முத்தா

லீசனுக்கு மாலயங் கியற்றுங் காலஞ்

சுணங்கவில்லை மானுடர்க்குத் துக்க மில்லைச்

சோம்பலில்லை நிதம்போக சுகமே வாழ்வார்

மணங்கமழுந் திரிகயிலைப் பெருமான் பாத

மனத்திரத்தி மகிழ்ச்சியுடன் வாழ்வார் மாக்கள். 12

மாதமதின் மும்மாரி பெய்யச் செந்நெல்

வளரவெழிற் சைவநெறி மனுநூ லோங்க

வோதரிய முற்கதையுஞ் சொன்னோம் பின்ன

ருற்றுவருங் கதையனைத்து முரைவ ழாம

லாதரவா யறுப்பது நாலா மாண்டி

லடைவுடைய சோதிடர்க ளெழுதி வைத்த

நீதிமொழிப் படிசொல்லோங் கோணை நாதர்

நித்தியமா மருள்சுருங்கு நியமம் போமே. 13

தானதிக வாரிதிற்பொற் கரையிற் கல்லாற்

சரிவரப்பொற் கோயில்கட்டிக் குளமுங் கட்டி

மானபர னாலயத்துச் சோலை தோப்பு

மண்டபநீ ராவிமணி மதிலுங் கட்டி

ஆனதிருப் பணியாறு பத்து நாலா

மாலயமுஞ் சுற்றிமிக வழகாய்க் கட்டித்

தானதிக வரனருளாற் பூசை யாதி

தவறாம னடத்தினனித் தரணி மீதே. 14.

மீதெழுந்து நாற்றிசைவு மதிலுங் கட்டி

வெளிக்கதவு மிரண்டிட்டு பூட்டும் போட்டாங்

காதிபர னாலயம்பொற் றகட்டால் வேய்ந்தாங்

கவிர்கிரணத் தேர்மூன்று மழகாய்ச் செய்தே

பாதிமதி தரித்தபர னருளி னாலே

பங்குளியுத் தரத்திருநாட் பவிசுங் கண்டோம்

நீதியுட னிப்படிநீர் தவறில் லாம

னிச்சயமாய் நடத்துமென்றா னிருபர் கோமான்.

மாறாத புயல்பாயு திருக்குளமும்

வயல்வெளியும் வருந்திச் செய்தே

வீறாக வென்மரபோர்க் கீயாமற்

கோணமலை விமலற் கீந்தேன்

பேறான பெரியோரே யிதற்கழிவு

நினைத்தவர்கள் பெட்பு நீங்கி

நிறாகப் போவரிது நிச்சயநிச்

சமயங்கோணை நிமல ராணை. 16

வேறு

ஆணையிது வரன்றொழும்பு செய்வோர் யாரும்

அவருவருக் கமைத்தபணி யவரெஞ் ஞான்றும்

கோணமலை நாதருக்குச் செய்கு வாரேற்

குற்றமின்றி மகிழ்ச்சியுடன் குணமாய் வாழ்வார்

நாணமுற்றுச் சொர்னமெத்திக் கூலி யாளை

நயந்தேவி யரன்பணியை நடப்பிப் பாரேல்

ஆணையினா லாக்கமுஞ்சந் ததியு மற்றாங்

கல்லலுற்று வறுமையினா லலைவா ரன்றே. 17

வேறு

அன்னவரன் பூசைவிதி யபிஷேகம்

விழாமுதல வழகாய்ச் செய்தால்

மின்னுநிறை விளக்கேற்றிக் கிராமதே

வதைபூசை விளங்கச் செய்தால்

இன்னலின்றி மாக்களெல்லா மிரநிதிசந்

ததிகளுட னினிதாய் வாழ்வார்

சொன்னவிந்த முறைதறில் விளைவழிந்து

துன்பமுற்றுச் சோரு மாக்கள். 18

மாதயவாம் வன்னிமையே தானம்வரிப்

பத்தவரே மற்று ளோரே

ஆதரவா யாலயமு மணிமதிலுங்

கோபுரமு மழகு வாய்ந்த

சேதமிலாப் பூங்காவுந் தினநடத்திக்

கொள்ளுமெனத் திட்டஞ் செய்து

காதலுடன் றிரிகயிலைப் பெருமைதனைக்

கண்டிதயங் கருணை பூத்தான். 19

வேறு

தானதிக பவநாசந் தன்னின் மூழ்கிச்

சரீரசுத்தி பண்ணித்தர்ப் பணமுஞ் செய்தே

யானதிரு மணிநீறு தரித்துக் கொண்டே

யதிகப்ட்டா டையையுடுத்தாங் கலல்பூ வேந்தி

மானபர னாலத்தை வலமாய் வந்து

வருபாதங் கழுவியுட்போய் வணங்கக் கண்டார்

போனவர சன்றிரும்பி வாராத் தன்மை

போய்ப்பாரும் பாசுபதர் புகுந்தே யென்றார். 20

என்றுசொலப் பாசுபத ரெங்கும் பார்த்தாங்

கிரத்னமணி வாயிலினின் றெட்டிப் பார்த்தார்

பொன்றயங்கு பதத்தருகோர் சிவக்கொ ழுந்து

புஷ்பித்தே யலர்ந்துநிற்கும் புதுமை கண்டு

மன்றல்மல ரோன்முதலா மமரர்க் கெட்டா

வன்பதவி கிடைத்ததுவோ வரசர் கோவே

யென்றவர்கள் வெளியில்வந்தே யெவர்க்குங் கூற

விருகண்­ர் மழைபொழிந்தா ரிருந்தோ ரெல்லாம்.21

சகவீரன்

இவராற் பாடப்பட்ட நூல் 'கண்ணகி வழக்குரை காவியம்' என்பதாகும். இந்நூல் வரம்பெறுகாதை முதலாகப் பதினைந்து காதைகள் கொண்டது. கண்ணகி பாண்டியனுக்கு வழக்குரைப்பதோடு நூல் முற்றுப் பெறுகியது. 2219 பாடல்கள் கொண்ட இந்நூல் அகவல், வெண்பா, சிந்து முதலிய யாப்புக்களால் ஆனது. நூற் காதைகள், பாடல்கள் என்பனவற்றின் எண்ணிக்கை பல ஏடுகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

அரங்கேற்று காதையில் உள்ள பின்வருஞ் செய்யுள்களிலிருந்து இந்நூலாசிரியரின் பெயர் சகவீரன் என்பத பெறப்படுகின்றது :

தரங்கேற்றும் வெண்டிரைசூழ் தரளமெறி புவியதனில்

அரங்கேற்றும் கதைபாட அவனியுளோர் கேட்டருள

இரங்கேற்று நல்லோர்முன் யானுரைத்த புன்சொலெனும்

அரங்கேற்றுகதைகள் தன்னை அவனியுள்ளோர்கேளுமெல்லாம்.

அவனிபயில் குடிநயினாப் பணிக்கனெனும் பவமிகுந்த

கவளமதக் களிற்றண்ணல் காங்கேசன் தேவையர்கோன்

தவனெனவி ளங்குபுகழ் சகவீரன் தாரணியில்

சிவனருளா லிக்கதைக்குச் செந்தமிழ்ப்பா மாலைசெய்தான்.

கண்ணகி வழக்குரை

வரம்பெருகாதை

இரவிகுலத் தேயுதித்த எண்ணரிய நரபாலன்

கரைபுரள நதிபெருஞ் காவிரிநன் னாடுடையோன்

வருகலியும் மருவலரும் வாழ்மனையிற் புகுதாமல்

அரசுநெறி தவறாமல் அவனிதனை ஆற்நாளில் 1

நாளவமே போகாமல் நல்லறங்க ளவைமுயன்று

காளைநெறிப் பூங்குழலார் கற்புநெறி யதுகாத்து

ஆளுகின்ற படிபுரக்கும் ஆராய்ச்சி மணிதூக்கிக்

காளமுகில் போலுதளங் கரிகாலன் திருநாட்டில். 2

நாட்டுகின்ற பூம்புகாரில் நற்குடியில் உள்ளவரின்

ஈட்டுகின்ற யால்மிகுந்த இல்வணிகர் மாசாத்தார்

கோட்டுசிலை வாணுதலார் கொடியிடையார் மனைவியுடன்

வாட்டமற வுடன் மகிழ்ந்தே வாழ்ந்திருக்குங் காலையிலே. 3

கப்பல்வைத்தகாதை

திருந்துபுகழ் வளர்வர்பிரான் திண்புயஞ்சேர் துங்கவேடன்

துரந்துசெல்லும் புறவினுக்குத் துணிந்துடலை யரிந்தபிரான்

பரிந்துதான் கன்றிழந்த பசுவினுக்குத் தன்மகனைப்

பொருந்தவுறு மனுவேந்தன் புரக்குமந்தப் புகார்நகரே. 4

புரக்குமந்தப் புகார்நகரிற் புரவலனுக் கொப்பா

இருக்குமந்த வசியர்தம்மில் இயல்புடைய வணிகேசன்

திரக்குலவு மானாகர் திருமங்களாங் கண்ணகையைப்

பரக்குபுகழ் மாசாத்தார் பாலகற்குப் பேசிவந்தார். 5

கப்பல்வைக்க வேணமென்று கட்டுரைக்க மீகாமன்

செப்புநீ பலகையுள்ள திசையைஎன்றார் மாநாகர்

அப்பொழுதே பரதவனும் ஆய்ந்துரைப்பான் தென்னிலங்கை

மெய்ப்படவே கொல்லமீழம் மிகுபலகை உள்ளதென்றான் 6

கடலோட்டுகாதை

வடவேட்டிற் பாரதத்தை மருப்பொன்றால் எழுதிமுன்னர்

அடலோட்டுக் கயமுகனை அமர்க்களத்திற் கொன்றபிரான்

படவோட்டு மீகாமன் பையரவின் மணிகொணர்ந்த

கடலோட்டுக் கதைபாடக் கரிமுகனே காத்தருள்வாய். 7

விடுவதென்றான் மீகாமன் வெகுண்டேது வார்த்தைசொல்வான்

கடலசரசன் என்றென்னைக் காசினியோ ரறியாரோ

கெடுகருமங் கருதிவந்தாய் கிளையோடு முனைவானில்

படமலைவேன் மீகாமா பாயைவிடாய் என்றுரைத்தான். 8

வெண்பா

போகவிடா தந்தப் போரில் வெடியரசை

வாகைபுனை மீகாமன் வாள்வலியால் - ஆகமுற

ஆர்த்துப் பொருமவரை ஆஞ்சவமர் வந்து

சேர்த்துக் கொடுவந்தான் சென்று. 9

கலியாணக்காதை

இட்டமுடன் கண்ணகையார் இனியமணம் முடிப்பதற்க

பட்டணத்தி லுள்ளவர்க்கும் பலதிசையி லுள்ளவர்க்கும்

மட்டவிழும் சீரகத்தார் வணிகேசர் தங்களுக்கும்

ஒட்டமுடன் வெள்ளிலைபாக் கொழுங்குறத்தா மிட்டனரே. 10

தானமிக்க கோவலரைத் தக்கநல்ல மணக்கோலம்

ஆனதிரு வாசியுமீட் டாபரண வகையணிந்து

கானமருஞ் சீரகத்தார் கழுநீர்த்தா மம்புனைந்து

ஈனமில்லா நன்னெறியே இசைந்தவித மிருந்னிரே. 11

மாதவி அரங்கேற்றம்

கதித்தெழுந்த வனைமுலைமேற் கதிர்முத்தின் கச்சணிந்து

பதித்தபொன்னின் நவரெட்ணப்பணிவகைகள் பல பூண்டு

மதித்தகருங் குழல்முடித்து வயிரநெற்றி மாலையிட்டு

எதிர்த்தவரை வெல்லுமணி மேகலையு மிறுக்கினளே. 12

தாளம்வல் லாசிரியன் தண்டமிழ்க்கு மாசிரியன்

மூழுமிய லாசிரியன் முத்தமிழ்க்கு மாசிரியன்

தோளுந் துணையுமென்னத் துடியிடையார் புடைசூ‘ப்

பாளைசெறி குழலிலங்கப் பலகைஉற்ற களரிதன்னில். 13

வேறு

தானே இயலிசை வாரமும் பாடித்

தன்னிசை யின்வழி நின்றுமி யாழே

தேனார் குழல்வழி நின்ற குழலும்

சிறந்து நின்றதோர் தாமந் திரிகை

நானா விதமன்னர் அந்தரங் கொட்ட

நன்னூல் வழியிந்த சீராகம் நிற்கத்

கானார் குழலவள் மாதவி சற்றே

கையோடு மெய்கால் அசைத்துநின் றாளே. 14.

தத்தித் தோம் ததிக்கிண தோம்

தக்குண தக்குண தக்குண தோம்

தத்தித் ததிகுதி செய்கிட தங்கிட

செங்கிட செங்கிட தாகிட தோம்

ஒற்றைச் சுற்றுடன் உய்ப்ப முழாவொடு

உற்ற கிடக்கை உடன் விதமும்

வைத்துச் சித்திர வுற்ற நடிப்பொடு

மாதவி சோழன்முன் னாடி ளே. 15.

இரங்கிய காதல்

கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில்

வானிறங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்கு

தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார்

தானிரங்க கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமேல்லாம். 16

வயந்தமாலை தூது

இங்கேதான் வந்ததுவும் யானுரைக்க நீர்கேளும்

அங்கேதான் மாதவியை ஆணதனில் வைத்தன்றீர்

சங்கேருங் கைமடவாள் தான்தந்த ஓலையிது

கொங்காருந் தாரானே கோவலரே எனக்கொடுத்தார். 17

வழிநடைக்காதை

போயினரே கோவலரும் பூவைநல்லாள் கண்ணகையும்

வேயனைய தோளசைய மென்காந்தள் விரல்தடிப்பத்

தூயநுதல் வேர்வரும்பத் துணைமுலைகுங் குமமழிப்பத்

தீயிலிடு மெழுகெனவே திருந்திழையார் சென்றனரே. 18

அடைக்கலக்காதை

அடைக்கலங்கா ணுமக்கென்று அருள்வணிகர் உரைத்ததன்பின்

இடைக்குலங்கள் விளங்கவரு மேந்திழையு மேதுரைப்பான்

மடைக்குள்வரால் குதிபாயும் வளம்புகார் வணிகேசா

தொடைக்கிசைந்த தோளாளே செல்லுவதேன் இவைகளெல்லம்.

கொலைக்களக்காதை

சொன்னமொழி எப்படியோ சொல்லாய்நீ தட்டானே

கன்னமிடுங் கள்வனெனிற் கண்காணத் திரிவானோ

இன்னபடி யென்றறியேன் இன்னானென் றறிவதற்கு

அன்னவனை நம்மிடத்தே அழைத்துவர வேணுமென்றார். 20

கொண்டுசென்று கைதொழுத கொலையானைப் பாகர்தமைக்

கண்டுமனம் களிகூர்ந்து காவலனு மேதுசொல்வான்

தண்டரளச் சிலம்பெடுத்துச் சாதித்த கள்வன்மிசை

உண்டிசையும் தான்மதிக்க யானைதனை யேவுமென்றான். 21

குஞ்சரமு மப்பொழுது கொல்லாமல் அவனுடைய

அஞ்சனத்தால் மிகவெருண்ட அணுகாமற் போனதுகாண்

வஞ்சமற்ற பேருடைய மாலகனே மழுவதனால்

விஞ்சைமிகுங் கள்வனுடன் வெட்டிவைக்க வேணுமென்றான். 22

உயிர்மீட்புக்காதை

பார்த்தாள் பயமுற்றாள் பங்கயச்செங் கைநெரித்தாள்

வேர்த்தாள் விழுந்தழுதாள் விதனப்பட் டீரோவென்றாள்

சேர்த்தாள் குறைப்பிணத்தைச் சேறுபடத் திருமுலைமேல்

ஆர்த்தாள் விழுந்தழுதாள் ஆருனக்குத் துணையென்றாள். 23

பண்ணாருந் தமிழ்தெரியும் பட்டினத்தில் வாழாமல்

மண்ணாளும் வாள்மாறன் மாமதுரை தன்னில்வந்து

எண்ணாதா ரியலிடத்தே என்னையுமே தனியிருத்திக்

கண்ணாலும் பாராமற் கைவிட்ட கன்றீரோ. 24

* உறங்கி விழித்தாற்போல் உயர்வணிகன் எழுந்திருந்து

என்னைநீ ரறியிரோ என்னுடைய எம்பெருமான்

உன்னைநா னறியேனோ என்னுடைய ஒண்ணுதலே

கண்ணுங் கறுப்புமெந்தன் காரிகையைப் போலிருப்பீர். 25

(* இப்பாடல் சில ஏடுககளில் இல்லை)

வழக்குரைத்தகாதை

கொடியிடையார் கண்ணகையும் கோவலரை விட்டகன்று

கடிகமழும் குழல்விரித்துக் கையில்ஒற்றைச் சிலம்பேந்தி

படியிலுள்ளோர் மிகவிரங்கப் பங்கயமாம் முகம்வாட

வடிபயிலும் மேல்மாறன் மதுரைமறு கேநடந்தாள். 26

மீனநெடுங் கொடிவிளங்க வெற்றிமன்னர் புடைசூ‘ச்

சோனைமத கரிபரியும் துங்கமணித் தேர்படையும்

தேனமரும் தொடைபுனைந்து செங்கனக முடியிலங்கை

மானபங்கம் பாராத வழுதிதிரு வாசலிலிதோ. 27

ஊரும் மதிக்குல மன்னா உலகா ளஅறியா ததென்னா

தாரு மனக்குவேம் பானாற் தடங்கா வும்வேம் பாய்விடுமோ

காருந் தருவும் நிகர்க்கும் கைக்கோ வலரை யேவதைத்தாய்

பாரி லரசர் கள்முன்னே பழிப டைத்தாய் பாண்டியனே. 28

சோரனென்று சொன்னாய்நீ தொல்வணிகர் பெருமானை

ஏரணியுங் கனகமுடி இரத்தினவித் தாரகனைக்

காரனைய கொடையானைக் காவலனைக் கள்வனென்றாய்

வாரிதலை யாகநின்ற வையகத்தோ ரறியாரோ. 29

மீனவனே என்றுசொல்ல வேல்வேந்தன் முகம்வாடி

மானபங்கம் மிகவாகி மதியழிந்து மன்னவனும்

ஆனபெரும் பழியெமக்கு அறியாமல் வந்ததென்று

தேனமருந் தொடைவழுதி செம்பொன்முடி சாய்ந்திருந்தான். 30

குளிர்ச்சிக்காதை

மாகனலை விலக்கியந்த மாதுநல்லாள் வழிநடந்து

கோபாலர் தெருவில்வரக் கொடியிடையா ரிடைச்சியர்கள்

தாமாகத் திரண்டுவந்து தையல்நல்லார் இடைச்சியர்கள்

வேல்விழியார் முலைதனக்கு வெண்ணெய்கொணர்ந் தப்பினரே.

வேறு

பாராய்நி யென்தாயே பராசக்தி ஆனவளே

ஆராலும் செய்தபிழை யத்தனையும் தான்பொறுப்பாய்

நேராக இவ்வுலகை நீகாத்துக் கொள்ளெனவே

நேராகப் புரமெரித்த நிமலனிட முள்ளவளே. 32

உள்ளவளே ஐவருக்கும் ஊழிமுத லானவளே

வள்ளஇடைப் பாகம்வைத்த வாணுதலே வாள்மாறன்

தெள்ளுதமிழ் மதுரைசுட்ட தேன்மொழியே யென்தாயே (யுன்)

பிள்ளைகள்தான் செய்தபிழை பேருலகில் நீ பொறுப்பாய். 33

கரைசைப்புலவர்

இவர் திருக்கரைசைப்புராணம் என்னும் நூலின் ஆசிரியர். திருக்கோணமலைக்கு அருகிலுள்ள மகாவலி கங்கைக் கரையிலே 'கரைசை *என வழங்கும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவது இந்நூல். கரைசையம்பதியானது 'அகத்தியத் தாபனம்' எனவும் அழைக்கப்படும்.

நூலாசிரியரின் இயற்பெயர் தெரியவில்லை. நூற்பாயிரத்துள்ளே குருவணக்கம், புராண வரலாறு என்னும் பகுதிகளுள் வரும் 'ஈசானச்சிவன் மலர்த்தாள் மறவாது', 'கொற்றங்குடிவாழும் பிரான் சரணத் துறுதிகொண்டே' முதலிய குறிப்புக்களினின்றும் இந்நூலாசிரியர் உமாபதி சிவாசாரியரின் சீடர்களுள் ஒருவர் என்பாருளர் எனக் கூறுவர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். "சிலர், எமாபதி சிவாசாரியர் பரமபரையிலுள்ளார் ஒருவர் என்பர்" எனக் கூறுவர் திருக்கோணமலை அகிலேசபிள்ளை. அவர் கூற்றின்படி தக்கிண கைலாச புராணத்தின்பின் எழுந்தது இந்நூல்.

உமாபதிசிவாசாரியர் 1304இல் கொடிக்கவி என்னும் நூலை இயற்றினர். எனவே 1380-1414இல் அரசாண்ட சிங்கைச் செகராசசேகர மகாராசாவின் வேண்டுகோளுக்கிணங்கிப் பண்டிதராசர் போன்ற ஒரு புலவராலே திருக்கரைசைப் புராணம் இயற்றப்பட்டது எனக் கோடல் பொருந்தும்.

ஈழத்தில் பெருமையையும் மகாவலிககங்கைச் சிறப்பையும் இந்நூலிற் பரக்கக் காணலாம்.

திருக்கரைசைப் புராணம்

கடவுள் வாழ்த்து

விநாயகர் துதி

பொன்னிரவி தனைவளைத்துப புகுந்துலவு

மொருநேமிப் பொற்றேர் மீது

மன்னிரவி யெனவிளங்கு சுதரிசன

மூவிலைவேல் வயங்கு சங்க

மின்னிரவி னிருள்கடியும் பிறைக்கோடும்

கரத்தேந்தி மேவா ருள்ளக்

கன்னிரவி மதம்பொழியுங் கரைசையில்வாழ்

கரிமுகனைக் கருத்துள் வைப்பாம். 1

_______________________

*கரைசை, கரசை, ஆகிய இரு வழக்குக்களும் நூல்களிற் காணப்படுகின்றன.

குருவணக்கம்

அண்டர்பிரா னடமாடுந் தில்லைமணி

மன்றதனி லகலா தென்றும்

விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்

பொருள்விளக்கும் விளக்க மாகித்

தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து

கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட

எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்

மறவாதென் னிதயந் தானே. 2

புராண வரலாறு

வண்ணமலி வடகைலைக் கொடுமுடியாந்

தென்கைலை மணியார் தம்மைத்

தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்

பொருட்டங்ஙன் சாரா நின்ற

கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்

கைவந்த கலச யோனி

அண்ணலுமுத் தரமுகமே யாகியமா

வலிகங்கை யாடும் போதில். 3

ஆங்கொருபே ரற்புதமா வசரீரி

வாசகத்தா லண்ண லார்த்தம்

பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்

குறுமுனிவ பயிலு கின்ற

வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை

யியல்பிவையா மீங்ங னீயு

மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென

வுவனறிய வுரைத்திட் டாரால். 4

அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்

சூதமுனி யருளிச் செய்த

மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்

தன்கலையின் விருத்தப் பாவாற்

றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென

வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி

ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்

பிரான்சரணத் துறதி கொண்டே. 5

இலங்கைச் சருக்கம்

தனிப்பணி யரசே யுன்றன்

றலையில்வா ழுலக மெல்லாம்

இனிச்சிறு கணத்தி னுள்ளே

யில்லையென் றாகு மந்தோ

மனத்தினி லருள்சு ரந்து

மல்கிய பணத்தி லொன்றைக்

குனித்தினி யொதுக்க வேண்டுங்

குவலயம் பிழைக்க வென்றார். 6

அம்மொழி கேட்ட பின்ன

ரடலராக் குலத்து வேந்துந்

தம்மது பணத்தி லொன்றைச்

சம்றொதுக் கிடவே கண்டு

பொம்மெனப் பலத்தான் மோதிப்

பொற்கிரிச் சிகரத் தொன்றைத்

தெம்மலி பவனன் றள்ளித்

தென்றிசைக் கடலில் வீழ்ந்தான். 7

ஒண்டரு மீரட்டி முப்பான் யோசனை விசால மாகி

அண்டியோ சனைதா னீள மைம்பதிற் றிரட்டி யாகி

மண்டிய புரிசை யேழாய் வாயில்க ளெட்ட தாகி

திண்டரு மொன்பான் கோடி சிவாலயந் திகழ்வ தாகி 8

ஆடகத் தமைத்த பித்தி யகப்புறம் புறப்பு றங்கண்

மேடகத் தெற்றி மாட மிளிர்மணி விமான கூடம்

பாடகப் புறந்தாட் கிள்ளைப் பனிமொழிப் பவள வாயார்

நாடகத் தரங்கந் துன்று நனிநெடு வீதி நண்ணி 9

காண்டகு மிடங்க டோறுங் கலிகைவா யவிழ்ந்த விழ்ந்து

பூண்டதேன் றிவலை சிந்திப் பொன்னிறப் பராகந் தெள்ளும்

நீண்டவான் கற்ப கத்தி னீழலஞ் சூழன் மேவி

ஈண்டரு மிலங்காத் தீப மீழமா யிசைந்த தன்றே. 10

அப்பதி யதனிற் பச்சை யணிமணி யடக தாகத்

துப்புறு முத்தம் வல்சி சொன்னவான் கலத்திற் சேர்த்தி

குப்புற வண்ட லாடுங் கோதையர் குழாங்க ளென்றா

லெப்பதியதற்கொப் பாமென் றியம்பிடுந் தகைமைத் தம்மா. 11

சுத்தவான் கதிரி னோடு தூமணிக் கதிருத் தோய்வுற்

றெத்திசை களினு மேற விரும்பகற் போது மல்கும்

நத்தமு மிந்திர நீல நகையிருட் பிழம்புங் கூடி

வைத்தபே ருலகிற் கேற மல்கிடு மிரவின் போ. 12

காடெலாங் கரிநல் யானை கரையெலாம் பவளக் குப்பை

நாடெலா மிரத்ன ராசி நகரெலாம் நல்லோர் சங்கம்

வீடெலாஞ் செம்பொற் கூரை வெளியெலாஞ் செந்நெற் குன்றங்

கோடெலாம் மஞ்ஞை யீட்டம் குழியெலாங் கழுநீர்ப் போது. 13

காவெலாம் மதன பாணங் கரையெலாஞ் சங்கச்சங்கம்

பூவெலாம் வண்டின் சாலம் புறவெலாம் நிரையி னீட்டம்

மாவெலா மன்னக் கூட்டம் மலையெலாங் காள மேகம்

நாவெலா மமிர்த கீத நதியெலா முதுநீர்த் தீர்த்தம். 14

தண்ணமர் சாலி முத்தும் தடங்கட லிப்பி முத்தும்

வண்ணவொண் பணில முத்தும் வரையறா வோல முத்தும்

கண்ணமர் கரும்பின் முத்துங் ககனமஞ் சீன்ற முத்தும்

வெண்ணில வில்லாப் போது மிகுநிலாக் கொழிக்கு மன்றே. 15

பணிலம்வெண் டிரையி னார்ப்பப் பவளமுந் தவள முத்தும்

மணிகளுஞ் சாந்தும் பூவும் மாலையும் பிறவும் வேய்ந்தும்

திணிமதிக் குடைக வித்துத் திரைக்குழாங் கவரி காட்ட

அணிமணி வீதி தோறு மாழியு முலாவு மாமால். 16

கொஞ்சிய கிள்ளை மென்சொற் கோதையர் சிலம்பி னார்பும்

வஞ்சியின் காஞ்சி யார்ப்பும் வாயறாத் தமிழி னார்ப்பும்

விஞ்சிய மள்ள ரார்ப்பும் விழாவெழு முழாவி னார்ப்பும்

அஞ்சிறை வண்டி னார்ப்பு மன்றியோ ரார்ப்பு மின்றால். 17

தெளிவுறு கிரணக் கற்றைச் செம்மணிப் பத்தி சேர்ந்து

குளிர்புனல் நதிக ளெல்லாங் குருதியி னாறு போலு

மொளிர்தரு மிப்பி யீன்ற வொண்ணிறத் தவள முத்தின்

வெளிநிலா வீங்கி யுப்பு வேலைபா லாழி யொக்கும். 18

ஊட்டு செஞ்சுடர் மணியினைத் தடியென வுகந்து

காட்டுத் தம்மிரு பதங்காளற் கவர்கின்ற கங்கந்

தோட்டுத் துண்டங்கொண் டுண்பதற் காமெனத் துணிந்து

கூட்டில் வைத்தன பறந்தன வாதரங் கூர்ந்து. 19

மடைகி டந்தவொள் வளவயற் றொளியறா வரம்பின்

கிடைகி டந்தசங் குதவிய முத்தெலாங் கண்டு

புடைகி டந்ததம் மண்டங்க டம்மொடு புகட்டி

யடைகி டந்தன சிறையகத் தடக்கியே யன்னம். 20

மாறில் பாளைகண் மலரிளங் கமுகினல் வாளை

யேறு பாய்தர வயலெலா முகுவன விளங்கா

யாறு பாய்வதென் றதிசய மெனக்கரும் பாலைச்

சாறு பாய்தர வளாவன கழனியிற் சாலி. 21

இன்ன லின்றியே யிணர்த்ததா ளிப்பனை யெவைவும்

பொன்னின் வீதியுட் பொலிநிலைத் தேர்க்குழாம் போலுங்

கன்னி மார்குழல் கூந்தலங் கமுகுகள் காட்ட

வன்ன பாளைக ளளிப்பன கமுகுக ளனந்தம். 22

கண்ணி லாவிய நறுந்தொடைக் காளையர் தங்கள்

வண்ண மாதர்கள் வதனமேற் புணர்கின்ற வைரம்

மண்ணி லாவிய வெண்ணிறக் கலைமதி யெழுச்சி

யுண்ணி லாவிய புனலிடைக் கண்டபி னொழிப்பார். 23

மஞ்சின் முத்தமு மரந்தையின் மரகத மணியும்

விஞ்சு செம்பொனும் வலவயிற் செம்மணி வேய்ந்தும்

மஞ்சொற் கம்பலை யாற்றினன் னீலமு மவிர்ந்தும்

பஞ்ச வன்னமே யிரவினும் பகலினும் பயிற்றும். 24

நல்நூர்ப் பரராசசேகரன் காலப் புலவர்கள்

1478 -1519 (ஆட்சிக்காலம்)

நல்லூர்ப் பரராசசேகரன்

......கதிரைமலைப்பள்ளு

அரசகேசரி

வையா

நல்லூர்ப் பரராசசேகரன்

1478 - 1519

இவர் யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்து அரசாண்ட மன்னர். தந்தையார் பெயர் கனகசூரிய சிங்கையாரியர் என்பது. அக் காலத்தில் யார்ப்பாணத்தின் தலைநகராயிருந்தது சிங்கை. 1450இல் தென்னிலங்கையை ஆண்ட ஆறாம் பராக்கிரமவாகுவின் மகன் சப்புமால் குமாரையன் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்துக் கனகசூரிய சிங்கை யாரியனைத் தோற்கடித்துச் சிங்கை நகரையுங் கைப்பற்றினான். அத்துடன் சிங்கைநகர் கைவிடப்பட்டுப் பரராசசேகரனாலே நல்லூர் தலைநகராக்கப்பட்டது.

புதிய தலைநகரான நல்லூரிலிருந்து பரராசசேகரன் ஆண்ட காலத்தில அவன் தம்பி சங்கிலி செகராச சேகரனும் (1519-1561) மருமகனான அரசகேசரியும் ஒரு தமிழ்ச் சங்கத்தைத் தாபித்தார்களென்றும் மதுரை முதலிய இடங்களிலிருந்து பல ஏட்டுப் பிரதிகளைத் தருவித்து அவற்றிற் படியெழுதித் தங்கள் தமிழ்ச்சங்க நூல் நிலையத்தில் வைத்தார்கள் என்றும் வரலாறுகள் கூறும்.

கவிவீரராகவமுதலியார் சபையிலே தாம் பாடிய வண்ணக்கவியை அரங்கேற்றியபோது பரராசசேகரன் பொற்கிழியும் மதயானையும் பரிசளித்தார் ; கவிவீரராகவ முதலியாரைப் புகழ்ந்து பல பாடல்களையும் பாடியுள்ளார். புவிச் சக்கரவர்த்தியாகவுங் கவிச் சக்கரவர்த்தியாகவும் இவர் விளங்கினார்.

பரராசசேகரன் தமிழகத்திலிருந்து புலவர்கள் பலரை வரவழைத்து யாழ்ப்பாணத்திற் குடியேற்றினார் என்றும் வரலாறுகள் கூறும். இவர்களுட் பன்னிருவர் வைத்தியர். அவர்கள் பரராசசேகர மகாராசாவின் வேண்டகோளுக்கிணங்கிப் பாடிய நூலே பரராசசேகரம் என்பது. இப்பரராசசேகரம் 12000 செய்யும் கொண்டது. இவற்றில் அச்சில் வந்தவை 8000 செய்யுள். அகத்திய வைத்திய சிந்தமாமணி, தன்வந்திரி வைத்திய சிந்தாமணி ஆசிய இரண்டையுந் தழுவி எழுந்தது இந்நூல் என்பர்.

கவிவீரராகவ முதலியார்மீது பாடியவை

விரகனா முத்தமிழ் வீர ராகவன்

வரகவி மாலையை மதிக்கும் போதெலாம்

உரகனும் வாணனும் ஒப்பத் தோன்றினாற்

சிரகர கம்பிதஞ் செய்ய லாகுமே. 1

இன்னங் கலைமகள் கைமீதிற் புத்தக மேந்தியந்தப்

பொன்னம் புயப்பள்ளி புக்கிருப் பாளென்ன புண்ணியமோ

கன்னன் களந்தைக் கவிவீர ராகவன் கச்சியிலே

தன்னெஞ்ச மேடெனக் கற்றான் கனமுத் தமிழையுமே. 2

புவியே பெறுந்திரு வாரூ ருலாவை புலவர்க்கெலாஞ்

செவியே சுவைபெறு மாறுசெய் தான்சிவ ஞானவனு

பவியே யெனுநங் கவிவீர ராகவன் பாடியநற்

கவியே கவியவ னல்லாத பேர்கவி கற்கவியே. 3

கையறுநிலை

முன்னாட்டுத் தவமுனியுஞ் சேடனும்வான்

மீகனுமுன் முன்னில் லாமற்

றென்னாட்டு மலையிடத்தும் பாரிடத்தும்

புற்றிடத்துஞ் சென்று சேர்ந்தார்

இந்நாட்டுப் புலவருனக் கெதிரிலையே

கவிவீர ராக வாநீ

பொன்னாட்டுப் புலவருடன் வாதுசெய்யப்

போயினையோ புகலு வாயே. 4

பரராசசேகரம்

சிறப்புப்பாயிரம்

ஏழாலை, ஐ. பொன்னையபிள்ளை அவர்கள் பதிப்பித்த பரராசசேகரம் என்னும் வைத்திய நூலுக்கு வித்துவான் சி. கணேசையர் அவர்கள் அளித்த சிறப்புப்பாயிரத்தின் ஒருபகுதி பின்வருமாறு :

திருவளர் மதுரைத் தென்றமிழ்ச் சங்கப்

புலவரு ளொருவராய்ப் புவியிசை நாட்டிய

பூதந் தேவனார் முதலிய சான்றோர்

தோன்றுதற் கிடமாந் தொன்றுகொள் சீர்த்தித்

திரைவளை யீழத்து வடபா லோங்கும்

யாழ்ப்பா ணத்து நல்லூர் நகரா

அரசிருந் தாண்டு பல்லுயிர் புரத்தலோ

டமையா துளமா ரருளது துரப்ப

நல்லுயிர்க் கினிது நாடியொர் சங்கந்

நிறீஇப் பன்னூ னீடுநுண் மதியின்

ஆய்தல் செய்தும் அவைபல வியற்றியும்

அருந்தமிழ் புரந்த திருந்துநல் லறிஞன்

பரராச சேகரப் பார்த்திபன் பெயரொடு

கிழமைகொண் டிலகிய; கெழுமிய தென்றிசைப்

பொருப்பன் முதலோர் புகன்றமுன் வைத்திய

நூல்கள் பலவுந் நுண்ணிதின் நோக்குபு

அவற்றிடை வேண்டுப வமைத்தும் மதியொடு

பொருந்துவ புகுத்தியும் பொற்பார் மக்கட்

கிணங்கக் கால தேயத் தியல்புகள்

நாடிப் பாவி னவிலவற் றினத்திற்

செய்துமுன் னூலினுந்த தலைமையொடு நிலவிய

பல்பிணிக் கமிழ்தெனப் பாரோ ரேத்தும்

பனுவல்.......

பாயிரம்

கடவுள் வணக்கம்

விநாயகர்

தாரணியோர் மிகப்புகழ்தன் வந்த்ரி செய்த

தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப்

பேரணியும் வாகடத்தைப பெரிது பேணிப்

பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்

சீரணியுந் திருமாலு மயனுங் காணாச்

சிவபெருமா னளித்தருளு மொருவெண் கோட்டுக்

காரணிமெய் யைங்கரத்து நால்வாய் முக்கட்

கடவுளிரு பதபுயங்கள் கருத்துக்கள் வைப்பாம். 1

செந்திரு நிறையொழி திகழுங் கிம்புரி

அந்தியின் மதியென வலர்ந்த கோட்டுடைச்

சுந்தர நிறைமதித் துதிக்கை யானையை

வந்தனை மலர்கொடு வணங்கி வாழ்த்துவாம். 2

சுப்பிரமணியர்

சூரனைத் துணைவரைச் சுற்றுஞ் சேனையைக்

கூரிய வேலினிற் குறைத்து வானவர்

வாரண மங்கையை வதுவை செய்திடுஞ்

சீரிய வேள்பதஞ் சிந்தை செய்குவாம். 3

சரசுவதி

வந்தளி மதுவுண மலர்வெண் டாமரை

அந்தநல் லாசன மமர்ந்து பல்லுயிர்

தந்தவர் நாவினிற் றரிக்கந் தன்மைசேர்

சுந்தர வாணியைத் தொழுது போற்றுவாம். 4

அந்தமி லாயுரு வேத மாயுயர்

சுந்தர மந்திரி சொல்கிந் தாமணிச்

சந்தநல் வடமொழி தமிழ்வ ளம்பெற

எந்தைதன் ளருளினா லியம்பு வாமரோ. 5

ஆயுளைக் கொடுக்கும் வேத மறையிலெட் டிலக்க மாகும்

மீயுயர் தமிழி னாயேன் விளம்புவ னெனநி னைத்தல்

பாயுயர் விழியி லாதான் பகலினைக் காட்டக் கண்ட

சேயுயர் செவியி லோர்க்குச் செப்பிய தன்மைத் தாமால். 6

பதிபசு பாசம் மூன்றும் பகர்ந்திடி லனாதி யாகும்

பதியரன் பாசஞ் சத்தி பசுவறி வாத்து மாவாம்

விதியதா லரனை யெண்ணி விளம்பிய வாயுள வேதம்

மதியதாய்ச் சொல்லும் வாக்கு மதித்திடி லவனே யாகும். 7

முத்தமா முனிவரான் மொழிகி ரந்தமாம்

அந்தநூ லென்னறி வளவிற் றாகுமோ

சிந்தையி லருள்சிறி துண்ட தாகலின்

இந்தநூ றமிழினாற் சிலவி யம்புகேன். 8

சிரோகத் தொகுப்பு

பூவுளோ னரியும் போற்றும் புங்கவ னிருதாள் போற்றி

மேவுநல் லாயுள் வேதம் விரித்துமுன் னூலோர் சொன்ன

தாவுமா மெண்சா ­ளந் தானுறுப் பெண்ணான் காகும்

பாவையே யதிலு ரோக முள்ளவா பகரக் கேளே. 9

கபாலகுட்டம்

ஒதிய கபால குட்ட மோரைந்திற் குறிகு ணங்கள்

தீதிலாச் சாத்தி யங்க ளசாத்தியஞ் செய்ம ருந்தும்

ஆதியா னுரைத்த வுண்மை யாயுரு வேதந் தன்னை

நீதியா யுரைக்கக் கேளீர் தமிழினால் நிகழத் தானே. 10

உதரரோக நிதானம்

இரசித மான சோதி யெழின்மிக மலையில் வாழும்

பரசிவ ளருளி னாலே பவமறு முனிவ னந்நாள்

உரைசெயு முதர ரோக முறுகுணங் கிரியை சொல்லக்

கரிமுக முடைய முக்கட் கணபதி துணைத்தாள் காப்பே. 11

உத்தம மாகச் சொன்ன வுறுபல கிரியைக் கெல்லாஞ்

சத்தியந் தீர்ந்து போகுந் தவறியே தீரா தாயின்

பத்திய தொந்த மென்று பலதான தருமஞ் செய்து

சித்தியாற் சிவனை வேண்டத் தீர்ந்திடு மறிந்தி டாயே. 12

பெருகிய வெகுந்தி னுக்குப் பேணியிங் குரைத்த வண்ணம்

மருவிய பதுமு கற்கு மன்னயிப் படிச்செய் யென்று

கிரணவெண் மதியின் கீறல் கிளர்சடை வைத்த வெம்மான்

அருளிய வண்ணந் தேர்ந்தே யகததியன் புவியிற் சொன்னான்.

அதிசாரரோக நிதானம்

கொள்ளுமுக் கழஞ்சு நெய்தான் குணமுறக் கொண்டு பின்னே

அள்ளுவெந் நீரே கொண்டா லதிசார வகைகள் யாவும்

அள்ளிலை நெடுவேற் செங்கை யறுமுக னருளி னாலே

தெள்ளிதாய்த் தீரு மென்று செந்தமிழ் மனிவன் சொன்னான்.

வாய்ரோகம்

இரட்சை

திரியதை யுண்ணாக் கதிலுற முன்னர்ச்

செப்பிய முறைவழு வாமற்

றேனன மொழியாய் வைத்தபி னகற்றித்

தீயினில் வெந்தநீ ரதனால்

பரிவுற வலசிக் கொப்பளித் திடுவாய்

பயின்முறை யைந்துநாட் செய்தே

பகர்ந்திடு வத்தி ராஞ்சனப் புகையைப்

பத்துநாட் காலைநன் மாலை

இருபது திரியும் புகைத்திடப் புண்போ

மியல்புளி யுப்பிவை நீக்கி

யேற்றநற் பசுப்பா னெய்யுடன் முருங்கை

யிலையதன் பிஞ்சுமே யாகும்

தெரிவுற வதற்பின் குளிர்ந்த நீர் மூழ்கச்

செப்பினான் றென்மலை யிருந்து

தீந்தமி ழாராய்ந் திலக்கணம் வகுத்த

செய்தவத் துயர்முனி தானே. 15

நூலை ஆக்குவித்தோனாகிய பரராசசேகரனைப்

புகழும் இடங்கள் :

சுரசூலையின் சிகிச்சை

பாரின் மேவுதிற லரச னானபர

ராச சேகரனை யண்டினோர்

சீரின் மேவிவளர் செல்வ மல்கவவ

ரின்மை தீருமது செய்கைபோல்

ஆரு மூழ்கினவர் கோரு கின்றசுக

மடைய நிள்பிணிக ளகலுமென்

றோரு மாயுண்மறை தேரு மாதவர்க

ளுண்மை கண்டறுதி யிட்டனர். 16

நயனரோகம்

சீர்மேவு நதிமதியும் பொதியுந் தூய

செஞ்சடைநஞ் சுடைக்கண்டன் றிருப்பா கஞ்கேர்

வார்மேவு களபமுலை மலைமான் கேட்ப

வண்மைபெற வுரைத்தமணி வாக டத்தைப்

பார்மேவு மரசர்குல திலக மான

பரராச சேகரன்மால் பருதி யேந்தி

ஏர்மேவு முலகுபுரந் தருளு நாளி

லிசைத்தனனைங் கரக்கரியை யிறைஞ்ச லுற்றே. 17

திரிபலைக்குழம்பு

சாய்த்திடுக வொன்பதுநன் முறைவ ழாமற்

றகடாக வுருக்கியதிற் சாய்த்து வாங்கி

வாய்த்துதென்றால் விழிக்குமருந் தெழுதுங் கோலாய்

வகுத்திடுவீ ரெனில் வண்மை வளரு மண்ணில்

பார்த்திவர்க ளேனுநோய் தொலைக்கு மீதே

பரராச சேகரன்மன் பணித்த செங்கோல்

காத்தபுவி யோர்களிரு ­க்கு மாபோற்

கண்ணினிரு ­க்குமிது திண்ணந் தானே. 18

தென்கதிரை வேலவரைப் போற்றும் இடங்கள் :

நயனரோகம்

இளநீர்க்குழம்பு - 2

................................

திமிர மெழுச்சி சேர்பல பிணியும்

கதிரை நன் னகர்வாழ் கதிர்வேன் முருகன்

பதமலர் நாளும் பணிந்து போற்றும்

அன்பினோர்க் குற்ற வன்பெரும் பவநோய்

தீர்ந்திடு மாறுபோற் றேய்ந்திடு மென்று

தெள்ளுசெந் தமிழின் றீஞ்சுவை தேரும்

அகத்திய முனிவ னருளின்

வகுத்தரை செய்த வாகடங் கூறுமே. 19

பற்சுரோணிதத்திற்கு

தேயும் பற்க ளசைவு குடைச்சல்போற்

செறுகு மேற்கெந்த தாளியுஞ் சுற்றதும்

ஆயும் பல்லிற் புழுவு மொழியுமே

யரிய சீனத்தின் காரமேற் றூவிட

தோயு மெண்ணெய் முறைப்படி செய்திடச்

சோதி சேர்வடி வேலன் கதிரையின்

மேய வண்ண லருள்பெறு வித்தகர்

மேன்மை யென்ன விளங்கிடும் பற்களே. 20

ஆக்கிரமசிங்கத் தைலம்

உண்டுடனே பூசிமுழுக் காட்டிப் பார்க்க

வோடுமே பதினெட்டுக் குட்டஞ் சூலை

மிண்டுபெரு வியாதிசன்னி பதினெட் டோடு

மெத்துவலி பதினெட்டங் கரப்பன் யாவும்

அண்டியவாய் வியாதிபதி னெட்டுப் புற்று

மடர்வாதஞ் சிங்கநோய் குறளை நோவும்

தொண்டர்வப் பிணியகற்றிக் கதிரை மேவும்

தூயனருண் முன்மாயை போலப் போமே. 21

நயனசஞ்சீவித் தைலம்

இவையோ ரொன்று கழஞ்சாறா

யிடித்தக் கரைத்து நற்பதத்தி

லிறக்கி வடித்து மேற்பொடிக

ளினிய ஞாழல் புனுகுசட்டம்

குவைசேர் பச்சைக் கர்ப்பூரங்

கோரோ சனையே கத்தூரி

கோட்டம் வகைக்குக் கழஞ்சிரண்ட

கூட்டிப் பொடித்து மேற்றூவி

நவசே ராது முழுகிவர

நயன ரோக மவற்றுடனே

நாடு மண்டை வரட்சியது

நாசி ரோகம் பீனிசமும்

சிவனார் நெற்றி விழியில்வருஞ்

சேயோற் குரிய கதிரைமலை

சேருந் தவத்தர் வினைபோலத்

தீர்ந்தே போமென் றுரைத்தனரே. 22

துத்தப்பொடி

செய்தே யெடுத்துப் பில்லமதிற்

சேரு மரைமண் டலமிடவே

தொய்யுந் தசைக ­ர்ப்படலந்

தோன்றா தோடிப் போமென்று

பொய்யர்க் கெட்டாக் கதிரைமலைப்

புனிதன் பொற்றாள் பூசிக்கும்

மொய்சேர் தவத்துக் கும்பமுனி

முன்னா ளருளிச் செய்ததுவே. 23

கரப்பன்ரோக நிதானம்

போய்விடுமே காமாலை கைப்புப்

புளிதவிரப் பத்தியமே புரியெந் நாளும்

மேவிடுமோர் காசினிடை கொண்டு வெந்நீர்

விரும்பிய பருகிவர வெயில லாவித்

தாவி நடை பயிலுமயில் மீதே யேறித்

தந்தையைச்சுற் றாமலெங்குந் தானே சுற்றும்

காவலன்றென் கதிரைவரை மருவும் வாசக்

கடம்பனரு ளால்நோயுங் கழன்று போமே. 24

...............

கதிரைமலைப்பள்ளு

ஈ‘த்தெழுந்த பள்ளுப் பிரபந்தங்களுட் காலத்தான் முந்தியது இதுவாகும். இக் கதிரைமலைப்பள்ளினைப் பின் பற்றியே தமிழகத்திற் பள்ளுப் பிரபந்தங்கள் எழுந்தன என்பர். இந்நூல் 130 செய்யுள்கள் கொண்டது. பிற்காலத்திய இடைச்செருகல்கள் சிலவுங் காணப்படுகின்றன.

இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை. 1478 - 1519இல் நல்லூரிலிருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் காலத்தது இந்நூல் என்பதற்குப் பல ஆராரங்களுள. பரராசசேகரனின் ஆணியின்படி பன்னிரு புலவரால் இயற்றப்பட்ட பரராசசேகரம் என்னும் வைத்தி நூலே 1தென்கதிரைவேலர்' பலவிடங்களிற புகழப்படுகிறார். இப் பன்னிருபுலவர்களுள் ஒருவரே 'கதிரைமலைப்பள்ளு'ப் பாடியிருக்ககூடு மென்பது எமது கருத்து. பரராசசேகரம் பாடிய புலவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாததுபோற் கதிரைமலைப்பள்ளின் ஆசிரியர் பெயருங் குறிப்பிடப்படவில்லை.

பரராசசேகரம், கதிரைமலைப்பள்ளு ஆகிய இரு நூல்களிலுமிருந்து தரப்படும் பின்வரும் இரு செய்யுள்களையும் ஆராயின் ஒருவரே இரண்டையும் பாடியிருக்கக்கூடம் என்பது உணரக்கிடைக்கிறது.

அன்பினாற் றன்னை வழிபடு மடியார்க்

கருவினைப் பிறவிநோ யறுத்தே

யாண்டுகொண் டருளிக் கதிரையின் மேவும்

அறுமுகன் சரணபங் கயங்கள்

துன்பற மலர்தூய் வழிபடல் புரிந்து

தூயபொற் கம்பியைக் காய்ச்சிச்

சொல்லுமுண் ணாக்கின் முனையுற வழுத்தித்

தோகையே பொட்டினாற் கழுத்தில்

தன்புற மிரண்டி லறிவுசெய் திப்பாற்

றகுபொரி காரமோ டிந்து

சார்ந்திட துரிசு துத்தநற் காயஞ்

சாரமிங் கிவைசம மாக

நிம்பமார் பழத்தின் சாறுவிட் டரைத்து

நீடெருக் கலையிற்பா றேய்த்த

நேரிய துகிலிற் பூசியே திரியாய்

நிகழ்த்திடு மாறினிக் கேண்மோ.

- பரராசசேகரம்

அண்டர் பணியத் தவமும் பயனும்

அருளி வினைக ளறுப்பவன்

அருள்வி ளங்கிய கரிமு கற்கிளைய

அறுமுகன் குகன் குருபரன்

எண்ட லம்புகழ் கதிரைக் கிறைவன்

என்றும் நினைப்பார்க் குரியவன்

இருட்டு வஞ்சகத் திருடரக் கொளித்

திருப்பவ னெமைப் புரப்பவன்

கொண்டல் வண்ணனுக் குரிய மருகன்

குமர னமர குஞ்சரி

கொழுநன் மாவலி கங்கை வயலிற்

கூடி யாடிப் பாடியே

தண்டை புலம்ப விடைகள் நோவத்

தரள வடங்கள சையவே

தாவித் திரிந்து தூவி நாற்றுத்

தன்னை நடவாரும் பள்ளிரே.

- கதிரைமலைப்பள்ளு

நூல்

கடவுள் வணக்கம்

சீர்கொண்டசெ ழுங்கம லந்தனில்

வாழ்மங்கையமா னும்புய மங்கையர்

சேரும்புவி மகிழ்வொடு செறிவாகி

ஏர்கொண்டவ னஞ்செறி மன்றினி

லேயைந்தொழில் கொண்டுந டம்புரி

ஈசனடியார்க்கு ளும்பசு பதிபாலன்

கூர்கொண்டொரு கொம்புந லந்திகழ்

மாதங்கமு கன்கர மைந்துடைக்

கோலந்திகழ் குரிசினிலிருபதம் மறவேனே

கார்கொண்ட கனம்படி யுந்தூய

கானந்திழ் கதிரையில் நிகழெதிர்

காலங்களினருள் செயுமுருகன்பள் ளிசைபாடவே.

பள்ளியா தத்தம் நாட்டுவளங் கூறல்

நஞ்சு போல்விழி மங்கையர் கூடி

நயங்கள் பேசி யிசைபாடி யாடி

பஞ்சு போலடி மெல்ல நடந்து

பணைத்த கொங்கை கனத்திடை தொய்ய

விஞ்சு கோதை விரித்து நறும்புனல்

மீது லாவிவி ளையாடக் கண்டு

மஞ்சு மஞ்சு மலையி லொளிக்கின்ற

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 2

வஞ்ச வஞ்சியர் கற்பழித் தோர்மறை

வாண ராருயிர் மாய்த்தவ ரேனும்

செஞ்சொல் வேத விதியால் வருபுனல்

தேவ தேவன் திருக்காசி மேவித்

தஞ்ச நீணதி யென்று மனத்துன்னித்

தர்ப்ப ணம்புரிந் தாலவர் தங்கள்

பஞ்ச பாதக மெல்லாந் தொலைக்கும்

பகீரதா கங்கை நாடெங்கள் நாடே. 3

காசில் பொற்சிலம் பின்சிக ரத்தைக்

கால்வ றித்தே யெறிந்திட வந்த

மாசில் தென்கோண மாமலையைச் சூழும்

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 4.

வரமு டைக்கபி லன்முன் னெரித்தநல்

வன்மைச் சாகர ரின்சுவர்க் கம்பெறப்

பரம னைத்தவம் பண்ணியே பெற்ற

பகீரதா கங்கை நாடெங்கள் நாடே. 5.

போத நாண்மலர் நாயக னார்நற்

புரந்த ரன்முதற் றேவர்கள் யாவர்க்கும்

மாத வர்க்கு மரிய தவம் வைக்கும்

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 6

மாய வஞ்சக் கொடும்பவர் மாய்ந்திட

வந்தே யங்கமெ டுத்தவர் போடப்

பாவந் தீர்த்துப் பரகதி யேற்றும்

பகீரதா கங்கை நாடெங்கள் நாடே. 7

செய்ய கேது தலையற்ற வந்நாள்

திருந்தும் பூசைகள் செய்து முடிப்போன்

வையம் போற்றிட நற்கதி யுற்றிடும்

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 8

நலம தாகவே பூசித்த பேர்க்கெந்த

நாளும் பாக்கிய மோட்சமி யாவும்

பலவி தத்தினு மீந்திடு கின்ற

பகீரதா கங்கை நாடெங்கள் நாடே. 9

கோவிற் றன்சொற்கீழ் மேலுல கெல்லாங்

கொள்ளும் வேலைக் கதிரையில் வேலன்

மாவி லூன்றிப் பதம்வைத்துக் காத்திடும்

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 10

அதிக பாவிக ளாயினு மெவ்வுயி

ராயினு மத்த லத்தி லிறந்தாற்

கதிக ருந்திருக் காசியைச் சூழும்

பகீரதா கங்கை நாடெங்கள் நாடே. 11

எங்கும் மாமணி விற்பொலி யுங்கதி

ரெங்குந் தாமரை யன்னம் படுமலர்

மங்கு றாதவ ளந்திக ழுந்திரு

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 12

திங்கள் தோறுமும் மாரிகள் பெய்யச்

சிறந்த சீருடன் தேனிசை செப்பப்

பங்க யத்தைக் குளங்கள் பரிக்கும்

பகீரதா கங்கை நாடெங்க நாடே. 13

அணியி ளங்கதி ராயிர முள்ள

வருக்கன் போய்க்குட பாலிடை மேவ

மணிகொ ணர்ந்து மணிவிளக் கேற்றிடு

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 14

காய்ச்சுத் தோய லுடன்சோறு மிட்டுக்

கடனுக் காகவே கைமரக் காலால்

பாய்ச்சியே செந்நெல் முத்தளக் கின்ற

பகீரதா கங்கை நாடெங்கள் நாடே. 15

வேணிச் சங்கரர் தொண்டர்க ளென்று

வீடு தோறு மிரப்பவர்க் கெல்லாம்

மாணிக்க மள்ளிப் பிச்சை கொடுத்திடும்

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 16

ஆரே னுந்தொழு வோர்க்கன்பு கொண்டவ

ராசை யின்படி யாக வருள்வோன்

பேர்பு கன்றிடு வோரையுங் காத்தவன்

பேசுங் கங்கை நாடெங்கள் நாடே. 17

பொன்னு லோகம் பொருவுநன் னாட்டின்

பொழிலிற் றோகை மயில்நின் றுலாவும்

வன்ன வேலன் கதிரைக் குமரேசன்

மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 18

அரசகேசரி

இவர் நல்லூரிலிருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் (1478-1519) மருகர். இவரியற்றிய நூல் இரகுவமிசம். இது வடமொழியில் பெயர்ப்பாகும். நல்லூரின் கீர்ப்பாகத்திலுள்ள நாயன்மார்கட்டிலுள்ள தாமரைக் குளத்தருகே ஒரு மேன்மாடத்திருந்து இந்நூலைப் பாடினால் என்பர். சோழ இராசதானியாகிய திருவாரூரிற்பரராசசேகர மகாராசாவின் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பட்டது.

இரகுவமிசதம் என்னும் இந்நூல் 2444 செய்யுள்களைக் கொண்டுள்ளது. எளிதிற் பொருள் விளங்க முடியாத சொன்னடையுடையது.

இரகுவமிசம்

நாட்டுப்படலம்

துழனி நன்னதித் திரைக்கரத் தடிபடாச் சூற்சங்

கழவி னைந்து கொண் டாற்றுபு தலைக்கொடு போகி

யெழநி மிர்ந்தன வளம்பல வீன்றுடன் வளர்க்குங்

கழனி மங்கைகைக் கையடை கொடுப்பன கால்கள். 1

கள்ள றாதன நறுமலர் கருத்தழி களியே

புள்ள றாதன வைகளும் போகலா வஞ்ச

முள்ள றாதன சரோருகங் கண்ணொரிந் துடையத்

துள்ள றாதன கழைபடு நித்திலத் தொகையே. 2

நோற்ற லும்பலன் பெறுதலுஞ் செயிரெனு நுவறீ

யாற்ற லும்புகழ் விளைத்தலும் பெரியவ ரடியே

போற்ற லும்வெளி றிகத்தலும் புதியநல் விருந்தே

யேற்ற லும்பத மிடுதலு மல்லதொன் றிலையே. 3

கயற்பி றங்கின பிறங்கின கண்கள்செங் கமல

மயற்பி றங்கின பிறங்கின முகங்களா ரத்தி

னியற்பி றங்கின பிறங்கின வெண்ணகை யெண்ணில்

வயற்பி றங்கின பிறங்கின மாதரார் வயினும். 4

அம்பொ னூபுர மரற்றின வரற்றின வன்னங்

கம்பு கையகத் தொலித்தன வொலித்தன கம்பு

தும்பி கோதையிற் றொனித்தன றொனித்தன சுரும்பு

பைம்பொ னார்வயிற் கலித்தன கலித்தன பழனம். 5

புரங்க ளாறிய வுயிரெலா மயக்குவ போர்வே

ளுரங்கொள் வாளியே யாயினு மாங்கொளி ரிழையார்

கரங்க ளாய்வன களைகளங் கவன்முதல் கடையிற்

சரங்க ளாதலின் யாதினும் பெண்மையே சான்ற. 6

இட்ட மெத்திய வெய்யவ ரிடுக்கண்வந் திறத்தான்

முட்ட வத்தலைப் பகைவரா குவரென முன்னோர்

பட்டு ரைத்தன காட்டுமா பாவாற் பரியுங்

கட்ட கட்டலைக் கொட்டைவான் சரோருகக் களையே. 7

ஊன்கொ டுத்திடும் வேற்கணார்க் கொதுங்கிடு மாம்பல்

கான்கொ டுத்திடுங் குவளைநாட் கமலமு விரண்டும்

வான்கொ டுத்திடு மன்னைய ரறுவரின் வழிபாற்

றேன்கொ டுத்திட முருகனின் வளர்த்தன செந்நெல். 8

தோன்று மப்பயிர் துகடப வெழுத்துசூன் முதிர்ந்திட்

டான்ற மாமர கதப்பொ• யவிழ்ந்தரும் வயிர

மீன்று நெட்டிலைத் தொடொறு மீர்ஞ்சுடர் முத்தங்

கான்று செம்பவ ளக்குலை காய்த்தன வன்றே. 9

கூறு வேழத்தி னரம்பையின் வளைத்தன குரல்க

ளுறு செய்திடத் தொடுத்தகூன் குயமொத்த வேனம்

பாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த்

தாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும். 10

தண்ணெ னீர்மையிற் றலைகளை தடங்கதிர் தழிஇய

வண்ண னீலத்தொ டரும்பவி ழாய்மலர்க் குமுதம்

வண்ண மாநில மடந்தைதன் மகமக வினைமைக்

கண்ணி னெற்றிவாய் முத்தமிட் டனவெனக் கவினும். 11

அருப்ப மாகில வருங்கதி ரகம்புற மசைமீ

மருப்பெய் தாமரை மதுத்தொடாத் தூற்றுபு மறிவ

விருப்பொ டேயுழு தொழிலக மறக்கலை மேலோன்

தருப்பை நீர்நிலத் தையன்மேற் றெளித்தமை தகுமால். 12

நன்னெ டுங்கழைக் கூத்தர்வா தியன்றென நனிதீங்

கன்ன லந்தழைத் தலைச்சிறு குரீஇயினங் கலப்ப

பன்ன ருந்தர ளங்கடா ளுகச்செழும் பவளச்

செங்நெ லங்கதிர்த் தலைதழீஇ வீழ்வன சேல்கள். 13

காலில் வீழவும் கணத்தலை வணக்கவு நடுக்க

மேல வாகவும் விட்டிடா வெந்தொழில் விளைத்தார்

வாலி தாகவே வளர்த்தன வருமையு மறந்தார்

கோல மள்ளரிற் கொடுந்தொழிற் கொடியரு முளரே. 14

வன்மையர் மள்ளரே மாத ராருமத்

தன்மைய ரென்னிற்பெண் டன்மை யென்கொலாம்

பொன்மைய நூபுரம் புலம்பக் கைக்கொளீஇ

யென்மய மார்ப€ணைத் தெடுத்தன் மேயினார். 15

அன்னனி கடத்துயி ரடுநர் கட்சிய

மின்னகு விளக்கென வுயிர்கண் மேல்விழப்

பன்னக மணிகளா லசைபைங் கூட்டிடு

கின்னக விளக்கமெத் திசையுங் கீறுமே. 16

பச்சடைப் பதுமத் தாதி பாங்குறப் பாய்காற் பாணி

நிச்சய மருத்துச் செய்ய நீலங்க ணோக்கி நெக்க

வச்சில தேரை வாய்விட் டரற்றமெல் லணையி னாய

கச்சப வெரிந்மீ தேறிக் கம்புசூல் கழிக்கு மாதோ. 17

குலமணி வாரிச் செம்பொற் குழிதொட்டு மூலங் கொள்ளும்

வலனுயர் வரிவிற் காமர் மகிழ்நர்த மலர்க்கை சேப்ப

விலவிதழ்க் கொடிச்சி நல்லா ரிருங்க­ர் கழூஉந லின்ப

நலனுறு நகிலச் சாந்தத் தப்புநன் னலத்த தன்றே. 18

இளைத்தநூன் மருங்குற் செல்வா யிடைச்சிய ரிருக்கை யாரத்

தளைத்தவான் கன்று கூய சேயொலித் தமரந் தாழக்

கிளைத்தகோ வலர்முல் லைத்தார் கிண்டுவண் டுபாங்கங் கூடத்

துளைத்தவேய்ங் குழற்சா தாரிதொம்மெனத் தொனிக்கு மன்றே.

கான்குழற் குறத்தி நல்லார் கணிமலர் கொள்ளு மோதைக்

கான்கிளைக் காப்புச் செய்தங் கண்டர்நின் றரற்று மோதை

தான்புனக் குறிஞ்சி யெங்குந் தழைத்தலிற் றார்விற் கால

வான்கலித் தனவென் றோகை மஞ்ஞைநின் றாலு மன்னோ.

குறிஞ்சித்திணை மயக்கம்

கடுப்பொதி நயன வாளிக் குறத்தியர் காமர் கண்ணி

தொடுப்பமென் னாக மாறிக் சூடல்புன் னாகஞ் சோரா

தெடப்பவிக் கார நேர்கொண் டீவவே யாரமேறக்

கொடுப்பநற்கண்டில் வெண்ணெய்கொள்வதோவாவின் வெண்ணெய்.

முல்லைத்திணை மயக்கம்

நீக்குமா னழைக்கு மாயர் நீடிசை நிறைய வூது

மூக்கமேன் றளவே யாலை யோதைய தளவே யுந்த

வாக்குதீங் கொன்றை மீன்பா டரவத்தீங் கொன்றை மாற்றத்

தேக்குவே யேனற் காப்பின் றிறத்தவே யகற்று மன்றே. 22

நெய்தற்றிணை மயக்கம்

கயற்குல வதோமு காநற் கழிக்கரைக் கைதை மென்னீ

றயற்கணி யடலை யாய்த்தா ரநற்கணி கொள்ளத் தேனை

நயக்கரு விளைகொண் டொண்பூ நவக்கரு விளைப்ப வேட்டை

வயற்கயல் குருகெ னாமா மலர்க்கயன் மருளு மாதோ. 23

அயனெழுச்சிப்படலம்

பன்னிசைப் பரவை யொன்று பாடகர் பரவை யொன்று

நன்னடர் பரவை யொன்று நாவலர் பரவை யொன்றே

கின்னரப் பரவை யொன்று கீதயாழ்ப் பரவை யொன்றங்

கின்னியப் பரவை தானென் றிவற்றினும் பரவை யேழே.

முற்ப்ட்டா ரடியு மொய்ம்பு முரிநெருக் கஞ்சி நொய்திற்

பிற்பட்டார் பதமு நோக்கிப் பிடிப்பது கொள்ள லல்லாற்

சொற்பட்டார் நிற்ற லென்று சொல்லுவ தன்றி யுன்டே

யெற்பட்டா ரணிகொ டாணை யிடைப்பட்டா ரியங்கறானே.

வேறு

நன்னடைப்பி டிக்குலங்க ணவ்வியங்க ணாரையே

வென்னிடைப்ப ரித்தல்செய்த மெல்லமெல்ல வேகின

சொன்னடைப்ப தம்வருந்தி டாச்சுமப்ப தன்றியே

சென்னடைக்கு டைந்தபோது பின்னையென்கொல் செய்வதே.

பரவுநல்லெ ழிற்கொடேப டைக்கணார்கண் மேவியே

விரவுவேலர் தம்மொடும்வி ளங்குவார்க ளாயினு

மிரவைவெல்லி யற்பசும்பொ னிட்டிழைத்த தட்டினா

லரவவல்கு லுக்குடைந்த தேருமன்ன வாமரோ. 27

நிறையுமுள்ள வேகயானை நீலமேக மென்னவா

யறையுமுள்ள மல்லவென் றயிர்க்குமேம ருப்பிணைப்

பிறையுமுள்ள மதமழைப்பி றப்புமுள்ள வோடைமின்

முறையுமுள்ள வுலகமஞ்சு முதிர்முழக்கு முள்ளவே. 28

தென்னிரந்த தேரைமேரு வென்றுசெப்ப லன்றியே

முன்னியங்கலொன்றுகொண்டு மல்லவென்ன முடியுமோ

பொன்னிலங்கு முடியனந்த முறும்விசும்பு புகுமரா

நன்னிலந்தோ டும்வரத்தி னாரிருக்கை நண்ணுமே. 29

சின்னத்தியங்கு மாருதச்சே றிப்பினிற்சி றக்குமா

வனைத்தையுந்தெ ரித்ததல்ல வென்னிலல்ல வாகுமோ

கனத்துறுந்து கட்கிளைத்த கல்லெனக்க லித்தமா

மனத்தையுந்த ணித்தசெல்க திக்கண்மெய்ம்ம றைந்தவே.

சேறணிந்த கும்குமத்த னத்தெறிந்து சேறமா

னீறணிந்த சுண்ணமேநி லம்புனைந்து போகுவார்

வீறணிந்த மெல்விழைப்ப ரம்பொறாது வீழ்த்துநீ

ளாறணிந்து மெல்லவேய னத்தினங்கொ துங்குவார். 31

வேறு

சேய செங்கைக் செழுங்குழன் மாதர்கண்

மேய வோரிரு நோக்கம் விளைத்தலா

லேய வன்புட னேகுவ மீளுவ

வாய வவ்வுழி யாடவ ராவியே. 32

விண்பு தைத்தயல் வெம்மத வேழமொன்

றெண்பு தைத்துவ ரத்தனி யென்செய்வாள்

பண்பு தைத்தவொர் சொல்லிதன் பங்கயக்

கண்பு தைத்துக் கடும்பய நீக்கினாள். 33

மெத்தும் பூரமக் கானிழன் மிக்கதாய்ச்

சித்தம் வவ்விக் கிடந்தவச் செந்நெறி

வித்த வெய்யிலி னோடும்வெண் ணித்திலப்

புத்த வெண்ணில வோடும் பொலிந்ததே. 34

வேறு

உழைமுகவுருக்கொடிங்களுச்சிக்கொண்டொளிரும் பால்வெண்

மழைமுகம் பொதிந்த வன்ன மாளிகை வதிதல் செய்யுந்

தழைமுக மாலை மார்பத் தருக்களு மநேகம் பாலிற்

குழைமுக மொளிர வைகுங் கொடிகளு மநேக மன்றே. 35

மணிக்கழ லரற்றா மாலை புரண்டிடா மருங்கு கோடா

வணிக்குழை யலம்பா குஞ்சி யசைந்திடா வங்கை யாடா

தணிக்கரும் விசையி னோடித் தளம்பிடா திரித்தி யார்க்குங்

கணிக்கருங் கதத்த வேகக் கடாமலை யதனைக் கண்டான்.

வேறு

மணப்பதுமப் பொகுட்டூறு மதுவந்தி யருந்தியினப்

பிணக்கினொடுங் கான்மயக்குந் தலைநடுக்கும் பெரிதாக

விணக்கினிமிர் கழைக்கரும்பு நனிகொடுத்தவிலைககரத்தின்

றணப்பறநின் றிருபாலுந் தள்ளாடுந் தடஞ்சாலி. 37

வையா

இவரது ஊர் யாழ்ப்பணம். இவர் வையாபுரிஐயர் எனவும் அழைக்கப்படுவர். செகராசசேகரன், பரராசசேகரன் ஆகிய இருவர் காலத்திலும் இவர் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவரியற்றிய நூல் வையாபாடல் என்பதாகும். இப்போது அச்சிடப்பட்ட வையாபாடலில் 105 செய்யுள்கள் காணப்படுகின்றன. இவற்றுட் பல சிதைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிற்காலத்திய இடைச் செருகல்கள் பல நூலினுட் காணப்படுகின்றமையிட்டுக் கூறுதற்கில்லை.

வையாபாடல்

திருவள ரிலங்கையின் சீரை யோதிட

வொருபொரு ளென்னவே யுலகம் யாவையுந்

தருமர னருள்புரி தங்கு மும்மதம்

வருகரி முகனடி வழத்தல் செய்குவாம். 1

நாவி லங்கையி னன்மொழி யுரைத்திட நலஞ்சேர்

கோவி லம்பெறு கோனகர் வளமெலாஞ் சிறக்க

மாவி ளஞ்செறி மல்லிகா வனமெனும் நகர்வாழ்

தேவன் மாமல ரடிகளை முடிமிசை சேர்ப்பாம். 2

இலங்கை மாநக ரரசியற் றிடுமர சன்றன்

குலங்க ளானதுங் குடிகள்வந் திடுமுறை தானும்

தலங்கள் மீதினி லிராட்சதர் தமையடு திறமும்

நலங்க ளாருநேர் நாடர சாதிவந் ததுவும். 3

மன்ன னானசூ ரியகுலத் தரசனை மாற்றிப்

பின்ன வர்பி றிவுசெய் தரசியற் றியது

மன்ன போதி னிலவர்க் கடையிடை யூறு

மின்ன காரண மென்றியா னிசைப்பதற் கெளிதோ. 4

பொதிய மாமலைப் புங்கவன் பெற்றருள் புதல்வ

னதிக சித்தெனு மன்னவன்றவத்தில்வந் துதித்தோன்

மதிமி குத்திடு முனிசுப திட்டுமுன் மொழிந்த

புதிய காதையை யன்னானடி போற்றியான் புகன்றேன். 5

நாவிநன் புனுகுநல் லமிர்துந் தேனுமே

ராவியு மதுவுன்பின் னகவி டார்களாள்

வாவிநன் பூநிகர் மற்றென்காதையை

யேவரு மறிவுளோர் கேட்க வேண்டுமாம். 6

இலங்கையின் மண்டலத் தோர்தன் காதையை

நலம்பெறு தமிழினா னடி யோதினான்

தலம்பெறு தசீசிதன் தனது கோத்திரத்

திலங்குவை யாவென விசைக்கு நாதனே. 7

வன்னி நாத• வாளதுகொண்டு தன்னுயிர் மடித்தா

னின்னி லங்கிளர் சௌமியம் யாவையு மாற்றி

முன்ன மென்னவே அரசுகா வலன்முறை புரிந்தா

ரன்ன நாள்வரை யானதிக் கதையென வறைந்தான். 8

கற்பி னோடெரி புகுந்திடுங் கன்னிய ருலகி

லற்பு தம்புரிந்த தருள நாச்சிமா ரானார்

அற்ப னாகிய வன்னி நாதனும் வளங்கூர்

இப்ப திக்கொரு தேவுரு வாகின னிருந்தான். 9

அன்ன தன்மைகள் மொழிந்திடி நாவுமொன் றதனா

னென்•ல் முற்றுமோ இயன்றதை இயம்பினே னெனது

கன்னி பாலக னருளினா லென்னலுங் கருவூர்

மன்னு நற்றவர் மகிழ்வுட னுறைந்தனர் மாதோ. 10

வைத்தியநாக முனிவர்

1616

இவரது ஊர் அளவெட்டி. வாழ்க்கையின் இறுதிக் காலத்தைத் தமிழ்நாட்டிற் சிதம்பரத்திற் கழித்தார். தென்மொழி, வடமொழியாகிய இருமொழிப் புலமையும் மிக்கவர். வடமொழியிலுள்ள வியாக்கிரபாத மான்மியத்தைத் தமிழிலே மொழிபெயர்த்து 'வியாக்கிரபாத புராணம்' என்னும் பெயரிற் பாடினார்.

வியாக்கிரபாத புராணம்

விநாயகர்

மாதங்க வரைவி லேந்தி மாலம்பாற் புரங்க ளெய்த

மாதங்க மொருபா லுற்ற வானவன் மைந்தன் வாழும்

மாதங்க மார்பி னான்றன் மருகனான் மங்கை முக்கண்

மாதங்க முகத்தி னான்றன் மலர்ப்பதம் வழுத்து வோமே.

நடராசர்

ஏதமில் கார ணத்தாற் மெவையு மாகி

ஆதியாய் நடுவா யீறா யநாதியா யாருளா யோங்குஞ்

சோதியோர் வடிவ மாகிச் சுடர்தொழச் சுடர்சேர் பொன்னின்

போதமார் சபையு ளாடும் புனிதனைப் போற்றல் செய்வாம். 2

முத்துராச கவிராயர்

1604-1619

இவர் சோழநாட்டிலுள்ள உறையூரிற் பிறந்தார். தந்தையார் பெயர் செந்தியப்பன். யாழ்ப்பாணத்து நல்லூரில் குடியேறிய இவர் கைலாயமலை என்னுந் நூலை இயற்றினார். இந்நூல் 310 கண்ணிகள் கொண்ட கலிவெண்பாவாலானது. நல்லூர்க் கைலாயநாதர் கோவிலைச் சிங்கையாரின் என்னுந் தமிழ் மன்னன் கட்டிப் பிரதிட்டை செய்த வரலாற்றை விரித்தும், யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றைச் சுருக்கியுங் கூறுவது இந்நூல். மாதகல், மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை முதனூல் இதுவே.

கைலாயமாலை

......................காவலனும் - போத

நகரி வலம்வந்து நானிலமும் போற்றப்

புகலுமணி மாளிகையிற் றண்ணளியு மெய்ந்நலனும்

ஒங்கநனி வீற்றிரந்தங் குன்னித் - தேங்கமழும்

புண்டரிக மார்பன் புகலுமது ராபுரியோன்

எண்டிசையு மேத்து மிராசமந்த்ரி - கொண்டதொரு

வேதக் கொடியன் விருதுபல பெற்றதுரை

கீதப் பிரவுடிகன் கிர்பையுள்ளான் - தீதற்ற 150

புந்தியுள்ளான் மேன்மையுள்ளான் புண்ணியமுள் ளான் புவியோர்

வந்திறைஞ்சும் பாத மகிமையுள்ளான்- முந்தரிபாற்

றோன்றி யகிலாண்ட கோடியெல்லாம் தோற்றமுற

ஈன்றோன் குலத்தி லெழுகுலத்தான் - சான்றோன்

புவனேக வாகுவென்னும் போரமைச்சன் றன்னை

நவமேவு நல்லூரி னண்ணுவித்துச் - சிவநேச

ஆகத்தான் றோன்று மனிசத்தான் னன்னமருள்

தாகத்தான் விஞ்சுந் தருமத்தான் - சோகந்தீர்

பாகீ ரதிகுலத்தான் பைம்பொன்மே ழித்துவசன்

பாகாரும் வேங்கைப் பருப்பதத்தான் - வாகாருங் 155

கார்காத்து விட்டதென்னக் காமுறுபொன் பற்றியென்னும்

ஊர்காத்து விட்டுவந்த வுச்சிதவான் - பேர்சாற்றில்

வாசவனேர் பாண்டி மழவனையுந் தம்பியையு

நேசமுறு மைத்துமை நேர்ந்ததுரை -பேசுபுகழ்ச்

சென்பகப்பேர் வாய்ந்த திறன்மழவ னோடுமவன்

நண்புபெறு தம்பியையு நானிலத்திற் - பண்புசெறி

தக்க பலவளமுஞ் சார்ந்துகல்வி நாகரிகம்

மிக்கதிரு நெல்வேலி மேவுவித்துத் - தக்கவர்கள்

எல்லாரு மேத்து மிரவிகுல மன்னவனார்

சொல்லும் பெயர்புனைந்த சுத்தபர - நல்லபுகழ் 160

சூழுங்கங் காகுலத்துத் துய்யதுளு வக்கூட்டம்

வாழும் படிக்குவந்த மாசின்மணி - ஏழுகடல்

சுற்றுபுவி முற்றுந் துதிக்குஞ் சுகபோசன்

கற்றவருக் கீயுந் கனகதரு- வெற்றிதரு

காவிமலர் மார்பன் கருதும்வெள் ளாமரசன்

மேவுகலை ஞான வினோததுரை - காவிரியூர்ச்

வைகுமயி லிட்டிதனில் வாழவைத்து - வையகத்து

முத்தமிழ் சேர்சித்தன் முகசீ தளவளங்க•

வைகுமயி லிட்டிதனில் வாழவைத்து - வையகத்து

முத்தமிழ் சேர்சித்தன் முகசீ தளவசனன்

சித்தச ருபன்மன் றிருச்சமுகன் - மெத்தியசீர் 165

வாலிநகர் வாசன் மருள்செறிவெள் ளாமரசன்

கோலமிகு மேழிக் கொடியாளன் - மூலமிகு

சென்பகமாப் பாணனையுந்த சேர்ந்தகுலத் தில்வந்த

தண்குவளைத் தார்ச்சந்த்ர சேகசனாம் - பண்புடைய

மாப்பாண பூபனையு மாசில்புகழ்க் காயனகர்ப்

பூப்பண னென்னவந்த பொன்வசியன் - கோப்பான

சீரகத்தார் மார்பன் செறிகனக ராயனையும்

பாரகத்துண் மேன்மை பலவுடைத்தாய் - நீரகத்தாய்த்

தொல்லுலகோர் நாளுந் தொகுத்துப் பிரித்துரைக்குந்

தெல்லிப் பழையிற் றிகழவைத்து - நல்விருதாய்க் 170

கோட்டுமே ழித்துவசன் கோவற் பதிவாசன்

சூட்டமலர்க் காவித் தொடைவாசன் - நாட்டமுறு

மாதிக்க வேளாள னாயுங் கலையனைத்துந்

சாதிக்க ரூப சவுந்தரியன் - ஆதித்தன்

ஓரா யிரங்கதிரோ டொத்தவொளிப் பொற்பணியோன்

பேரா யிரவனெனும் பேராசைச் - சீராருங்

கன்னல் செறிவாழி கமுகுபுடை சூழ்கழனி

துன்னு மிணுவில் துலங்கவைத்தப் . பொன்னுலகிற்

கற்பகநேர் கைத்தலத்தான் கச்சூர் வளம்பதியான்

மற்பொலியுந் தோட்குவளை மாலையினான் - பொற்பார் 175

நதிகுலவெள் ளாமரசன் நானிலத்தின் மேன்மை

அதிகபுகழ் பெற்றவழ காளன் - நிதிபதிபோல்

மன்னனிக ரான்மன்னன் மாமுத் திரைகள்பெற்ற

தன்னிகரில் லாதவிறற் றாட்டிகவான் - இந்நிலத்தில்

ஆலமுண்ட கண்ட னடியைமற வாதவள்ளல்

நீலகண்ட னென்னு நிருபனையு- மேலுமவன்

தம்பியரோர் நால்வரையுந் தான்பச் சிலைப்பளியி

லும்பர்தரு வென்ன வுகந்துவைத்துச் - செம்பதும

மாதுவள ருஞ்சிகரி மாநகர்வெள் ளாமரசன்

சாதுரியன் காவிமலர்த் தாரழகன் - ஓதுமொழி 180

உண்மையுள்ளான் கல்வி யுகப்புள்ள னூக்கமுள்ளான்

வன்மையுள்ளான் மேலும் வளமையுள்ளான் - திண்மைபெறு

மாரன் கனக மழவனைப்பின் னால்வருடன்

சேரும் புலோலி திகழவைத்துப் - பேரளகைக்

காவலனே செல்வன்மலர்க் காவியணி யும்புயத்தான்

பாவலருக் கின்பப் பசுமேகம் - பூவில்வரு

கங்கா கலத்துங்கன் கவின்பெறுமே ழிக்கொடியோன்

மங்காமல் வைத்த மணிவிளக்குச் - சிங்கார

கூபகநா டாளன் குணராச னற்சமுகன்

கூபகா ரேந்த்ரக் குரிசிலையுஞ் - சோபமுற 185

நண்ணக் குலத்தி னரங்குதே வப்பெயர்சேர்

புண்ய மகிபால பூபனையும் - மண்ணினிடைப்

பல்புரத்தி னல்வளமு மொவ்வாப் பலவளஞ்சேர்

தொல்புரத்தின் மேன்மை துலங்கவைத்து - வில்லில்

விசயன்போர் வீமனுயர் வீறுகொடைக் கன்னன்

இசையிற் பொறையி லியற்றருமன் - வசையற்ற

புல்லூர்த் தலைவன் புகழ்செறிவெள் ளாமரசன்

எல்லார்க்கு மேலா மிரத்னமுடிச் - செல்வமுறு

தேவரா சேந்த்ரனெனுஞ் செம்மறனை - யிந்நிலத்தற்

கோவிலாக் கண்டி குறித்துவைத்து - நாவிரியுஞ் 190

சீர்த்தியுறு செம்மல் செழுந்தொண்டை நாட்டரசன்

கோத்தமணப் பூந்தார்க் குவளையினா - னார்த்தகவிக்

கம்ப னுரைத்த கவியோ ரெழுபதுக்குஞ்

செம்பொனபி ஷேகஞ் செய்யுங்குலத்தான் - பைம்புயனேர்

மண்ணாடு கொண்ட முதலியெனு மன்னவனை

யுண்ணாட் டிருபாலை யூரில்வைத்து - விண்ணாட்

டிறைவணிகர் செல்வ னெழில்செறிசே யூரன்

நிறைபொறுமை நீதியக லாதான் - நறைகமழும்

பூங்காவி மார்பன் புகழுளவெள் ளாமரசன்

நிங்காத கீர்த்தி நிலையாளன் - பாங்காய் 195

இனியொருவ ரொவ்வா விருகுலமுந் துய்யன்

தனிநா யகனெனும்பேர் தாங்கு - மினியனை

மற்றுமுள பற்று நகர்வளமை சூழ்ந்திடுதென்

பற்று நெடுந்தீவு பரிக்கவைத்துச் - சுற்றுபுகழ்

வில்லவன்றன் வஞ்சி நகருறைவெள் ளாமரசன்

பல்லவனோ டிரண்டு பார்த்திவரை - நல்விளைவு

தாவுங் கழனிகளுஞ் சாற்றும் பலவளமு

மேவுவெறி நாட்டில் விளங்கவைத்துப் - பூவில்

தலையாரி சேவகரிற் றக்கவர்க டம்மை

நிலையாக நாட்ட நனைத்துச் - சிலைதரித்த 200

வல்லியமா தாக்கனென்னு மாசூர வீரியனைச்

சொல்லியமேற் பற்றுத் துலங்கவைத்து - நல்ல

இமையாண மாதாக்க னென்னு மிகலோனை

அமைவாம் வடபற்றி லாக்கி - இமயமறி

செண்பகமா தாக்கவெனுஞ் சீர்விறலோன் றன்னையிரு

கண்போலக் கீழ்ப்பற்றைக் காக்கவைத்து - ஒண்பயிலும்

வெற்றிமா தாக்கனெனும் வெய்யதிற லோனைமிக

உற்றிடுதான் பற்றி றுகந்துவைத்துச் - செற்றவரை

வென்ற படைவீர சிங்கனெனும் வீரியனைத்

தன்றிருச்சே னைக்குத் தலைமைசெய்து - துன்றிவரும் 205

ஆனை குதிரை யமரு மிடங்கடல்போற்

சேனை மனிதர் செறியிடமோ - டானவெல்லாம்

அங்கங்கே சேர்வித் தருட்டார காகணத்துட்

டிங்க விருந்தரசு செய்வதுபோற் -றுங்கமுறு

பூபாலர் வேந்த• புதியநக ராதிபதி

சாபாலங் காரந் தருராமன் - மாபா

ரதமாற்று மாயவன்போ லெய்துபகை மாற்று

மிதமாய்ந்த வீரர் வினோதன் - பதுமமலர்ப்

புங்கவனைப் போலப் புவிதிருத்தி யாண்டுவைத்த

சங்கச் சமூகத் தமிழாழன்- பொங்குந் 210

தரைராச தூயபுவி ராசன் - வரமார்

செயசிங்க வாரியனாம் செய்யகுல ராசன்

நயந்துபுவி யாண்டிருக்கு நாளில்.........

3. போர்த்துக்கேயர் காலம்

1621 - 1658

அரசியல் நிலை :

1505ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயர் இலங்கையின் தென்மேற்குப் பாகத்தை ஆட்சிபுரிந்து வந்தனரேனம், 1543ஆம் ஆண்டிலிருந்தே யாழ்ப்பாண அரசைக் கைப்பற்ற முயற்சி செய்தனர். அவர்கள் முயற்சி 1621 வரையுங் கைகூடவில்லை ; 1621இல் நல்லூரைக் கைப்பற்றி 1658 வரையும் அரசாண்டனர். இம்முப்பத்தேழு ஆண்டுகளில் ஈழத்தெழுந்த தமிழிலக்கியங்களைப்பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. ஞானப்பள்ளு, ஞானாந்த புராணம், அர்ச்.யாகப்பர் அம்மானை ஆகிய மூன்று கத்தோலிக்கமத நூல்கள் மட்டும் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் எழுந்தனவாகத் தெரிகின்றது. இவற்றுள் தொம்பிலிப்பு என்பார் எழுதிய ஞானானந்த புராணம் போர்த்துக்கேயர் காலத்துக்குப் பிற்பட்டதெனக் கூறுவாருமுளர். ஞானப்பள்ளு 1642இல் எழுந்தது என்பர் நல்நூல் சுவாமிஞானப்பிரகாசர். பேதுருப் புலவரால் இயற்றப்பட்ட அர்ச்.யாகப்பர் அம்மானை 1647இல் இயற்றப்பட்டது என அந்நூற் பாயிரங் கூறுகின்றது.

பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்கதிற் கத்தோலிக்கமதம் மக்களால் அனுட்டிக்கப்பட வரலாற்றை இந்நூல் கூறுகின்றன.

'பாண்டிக் கரையதனிற் பரதர்கள் கோத்திரத்தோர்

வேண்டுசந்தி யோகுகதை விருத்தப்பா வாயுரைத்தார்

வேறுமிது வன்றி வேண்டும் பெரியோர்கள்

கூறினார் மெத்தக் குறிப்பான காரியங்கள்

ஆனதெல்லாங் கற்றுணர்ந்து அற்பபுத்தி யோடுலகர்

தானறிய விக்கதையைச் சாற்றுகிறேன் கேட்டருளீர்.'

என யாகப்பர் அம்மானையில் வரும் அடிகளிலிருந்து பாண்டிநாட்டிலே கத்தோலிக்கமத நூல்கள் தமிழில் வழக்கிலிருந்தமை தெரிகின்றது. எனவே, போர்த்துக் கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்பே பாண்டி நாட்டுக் கத்தோலிக்கருக்கும் யாழ்ப்பாணத்தவருக்குமிடையே நெருங்கிய தொடர்பிருந்தமை புலனாகின்றது.

இலக்கியப் பண்பு :

போர்த்துக்கேயர் காலத் தமிழிலக்கியங்களில் வட சொற்கள் பெரிதும் பயின்றுள்ளன. அத்துடன் பேச்சு வழக்குச் சொற்களும் பெருமளவிற் கலந்துள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ் வேறுபாடு மக்களால் உணரப்பட்டிருந்ததை அக்கால நூல்கள் சுட்டுகின்றன. 'செந்தமிழாற் பள்ளினிசை தேனுலகிற் பாடுதற்கு' என ஞானப் பள்ளிலும், 'செந்தமிழைப் புன்றமிழாற் செப்பத் துணிந்துகொண்டு' என யாகப்பர் அம்மானையிலும் வரும் அடிகளை நோக்கும்போது செந்தமிழிற் கவிபுனையவேண்டுமென்னும் ஆசை புலவர்களுக்கிருந்ததாகத் தெரிகிறது.

அக்கால இலக்கியங்களெல்லாங் கத்தோலிக்க மத நூல்களாகையில் அவற்றிற் கூறப்படும் நாட்டு நகர வருணனைகளெல்லாம் உரோமாபுரி, செருசலேம் முதலிய மேல்நாட்டுக் கத்தோலிக்க புனித தலங்களைப் பற்றியனவாய் அமைந்துள்ளன. தேசீயக் கருத்துக்கள் அந்நூல்களிற் பொருந்தப்பெறவில்லை. ஞானப்பள்ளியிலே நாட்டுவளங் கூறும் பள்ளியர் ஈழத்தைப்பற்றிச் சிந்திக்காது உரோமாபுரியைப்பற்றியும், செருசலேமைப்பற்றியும் சிந்•க்கின்றனர். இந்நூலுக்கு முன்பு எழுந்ததாகிய கதிரை மலைப்பள்ளிலே 'மாவலிங்கை நாடெங்கள் நாடே' என ஈழநாட்டு வருணனைகள வருணிக்கப்படுகின்றன. எனவே, போர்த்துக்கேயர் காலத் தமிழ் நூல்கள் கூறும் பொருள் கிறித்துவ போதனைகளும் மேல்நாட்டு மக்கள் வாழ்க்கைமுறைகளுமாகும்.

அர்ச். யாகப்பர் அம்மானை யென்னும் நூல் இனிய ஓசையும் விழுமிய நடையுமுடைய இலக்கியமாக அமைந்திருப்பது நோககத்தக்கது.

...................

ஞானப்பள்ளு

1642

போர்த்துக்கேயர் ஈழத்தை ஆண்ட காலத்தில் எழுந்தது இந்நூல். இதன் காலம் 1642 என்பர் சுவாமி ஞாப்பிரகாசர். 'பேராபாராளும் பிடுத்துக்கால் மனுவென்றன் பிறதானம் வீசபே கூவாய் குயிலே' என இந்நூற் 'குயிற்சிந்து' என்னும் பகுதியில் வரும் தொடர் போர்த்துக்கேய மன்னனின் புகழைச் சுட்டுகிறது. பிடுத்துக்கால் - போ‘த்துக்கல்.

இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை. அவர் ஒரு கல்தோலிக்க கிறித்தவர். கத்தோலிக்க மதத்தின் பெருமையை விளக்குவது 'ஞானப்பள்ளு'. அது இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளது. பள்ளியர் தம் உரையாடலிற் பெருமிதத்தோடு கூறும் நாடுகள் 'றோமாபுரி நாடெங்கள் நாடே', 'செருசலைத்திரு நாடெங்கள நாடே' என முறையே விதந்துகூம் 'உரோமாபுரி', 'செருசலேம்' என்னும் கத்தோலிக்க புனித தலங்களாகும்.

நூல்

பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல்

அண்ட கோளமு மப்பாலே கண்கட்

டங்கி டாத ரூபலங் காரமும்

துண்ட வெண்பிறைச் சூரிய னும்மண்ணும்

தோற்றவே முன்னந் தானாயி ருந்தோன்

பண்டன் னாளிலைம் பூதமுஞ் செய்து

பணிந்த லோகத்தைப் பாவித்த கத்தனைத்

தெண்ட னிட்டுப் பரவத் தெரிந்த

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 1

ஏக மாகித் திரித்துவ மாகி

யெப்போ துமாகி யெல்ல மறிந்தோன்

தேக மானிட தேவனொன் றாகிச்

செகத்தி லேவந் திரட்சித்த நாளில்

நாக மான அர்ச்சிய சீஷ்சபை

அம்புவி யுள்ள மட்டா யிருக்க

ஓகை யாகத் தெரிந்துயர்ந் தோங்கு

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 2

மூவு லகும் படைத்த பிதாவின்

மூர்க்க மாகி யிருந்தமுன் னோர்க்காய்க்

காவ லனென முள்முடி சூட்டிக்

கரத்தி லுமொரு செங்கோல் பிடித்து

நாவ லம்பெறு நல்வாக் கருளி

நலஞ்சி றக்கத் தனியேல் முனிக்குத்

தேவ லோகந் திறந்துமுன் காட்டுஞ்

செருக லைத்திரு நாடெங்கள் நாடே. 3

எண்டி சையும் விளங்கும் பகலொளி

மேவி யேகுட பாலி டைந்தவின்

தெண்டி ரைப்புவி யோர்கள் தமக்காய்ச்

செருக லையிற் சுமந்த சிலுவையை

அண்டர் நாதன் திருத்தோளி லேவைத்து

ஆறிரு வர்க்கு முன்னிமுன் தோன்றி

உண்டு நன்மையிங் கேதானென் றோதும்

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 4

பூசிக் கும்வேளை கோயிற்குட் போகின்ற

புண்ணி யவாளர் தம்மை நயத்தி

நேசித் தோர்கள்நெ டுவளம் புக்கிய

நேர்ந்த வண்ணம் நிமல னிரங்கும்

ஆசித்தா யென்ன ஆண்ட வெனக்கு

மனைத்துயி ருக்கு மன்புள்ள கன்னியைத்

தேசத் தோர்கள் கெதிபெற வீன்ற

செருக லைத்திரு நாடெங்கள் நாடே. 5

ஆதிநா தன்மனு வானகா லத்தில்

அன்புவி யொன்று மாதித்தன் மூன்றும்

நீதிவா னத்தில் நின்றே யுலாவ

நிலவினுக் குள்ளொரு கன்னி பாலன்

ஏதிலாத கரத் தேந்தி நிற்பதை

ஏந்தல் கண்டு இருவிழி கூர

ஓதியே யெங்கு சாவித் தெளிந்த

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 6

அந்தமா தியொன் றில்லாத சோதி

யருள்பெ ருகஅபி றாமைக் கூவியுன்

மைந்த னானவ னைத்தரு வாய்பெலி

மாமுனி யென வாய்மைகள் கூறி

அந்தநா ளிற்பெலி பீட மேற்றி

அருஞ்சு தனையறுக் கின்ற நேரஞ்

சிந்தை கூரவே வானோன் விலக்குஞ்

செருக லைத்திரு நாடெங்கள் நாடே. 7

இந்நி லம்படைத் தாதிபி தாச்சுத

னிஸ்பிரீத் துச்சாந் தென்னுமாள் மூவர்

தன்னு டன்பெரு நேசமுண் டாகிய

சங்கை மாமுனி யின்னாசி யார்க்கு

நன்மை சேர்நெறி காட்டி விளங்க

நாளுங் கூளிக ளோடி நடுங்கத்

தன்னிக ரில்லான் வந்து களிக்கத்

தந்தறோ மானு நாடெங்கள் நாடே. 8

விண்ணு லாவிய கோள்வழி காட்ட

வேந்தர் வந்த விபரம றிந்து

எண்ணில் லாதகு ழந்தைக டன்னை

யிரக்க மின்றியி ருகூற தாக்கி

அண்ண லானுக்கு மைந்தனுக் குமொரு

அற்பு தந்தனை யாதிகாட் டாமற்

திண்ண மான நவங்கோடி செய்த

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 9

தோற்று மாமுனி வோருந் துதித்திடச்

சொல்லு லாவிச் சுருதி விளங்கும்

மாற்று யர்ந்தபொன் மாமுடி சூட்டி

மறைக்கெ லாந்தலை யான குருவோன்

ஏற்று நாத னரும்பாடு பட்ட

திதயம் நீங்கி யகலா திருக்க

ஊற்று லாவு கருணை விளங்கும்

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 10

முந்து மோட்சத் துக்கு நிகரென

மூவ ரேகன் முழுக்கின மாக்கிச்

சிந்து நாட்டி லிருக்கையிற் காட்டுஞ்

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 11

ஏங்கு மாந்த ரழுங்குரல் கண்டு

இளங்கு ழந்தை யுயிர்கவ ராதமன்

ஓங்கி யேயர சாண்டங் கிருக்கும்

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 12

மாகத் தன்வாச சந்தோஷ முற்றிடு

மாமுனி தனை மண்மே லிருத்தித்

தேகத் தோடா திவம்த்தைக் காட்டுஞ்

செருக லைத்திரு நாடெங்கள் நாடே. 13

கன்னி மாமரி தான்வீற் றிருந்த

கனக மாளிகை யானதை யானோர்

உன்னிநேர் கொண்டு வந்தங் கிருக்கும்

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 14

ஏந்திர வாவி யானதி லேவந்

திணையில் லாச்சம் மனசோர் குளிக்கச்

சேர்ந்த பேர்க்குத் திரள்பிணி நீங்குஞ்

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 15

செய்ய நோய்பிணி யுற்றவர்க் கெல்லாந்

தெருவு நீள நிழல்கொண்டு தீர்த்தோன்

உய்ய வேயர சாட்சி புரிந்த

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 16

துங்க ராச தவிகுலத் தோனுக்குந்

துய்ய தேசிக்கு மபிரா முக்குஞ்

செங்கை மேவி யகம்பு துளிர்த்த

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 17

காட்டில் வாழுங் கலைவேத மோதிக்

கடவு ளானைக் கருதியென் றன்றலை

ஓட்டின் மீதே சிலுவை யிருந்த

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 18

அறந்தெ ரிந்த முழுமல டானவ

ளாண்ட தானதுந் தொண்ணூறுஞ் சென்று

சிறந்தி டும்பெல வான்றனைப் பெற்ற

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 19

நற்றவஞ் செய்துமூ வாயிரம் பேரை

நாளு மேவல் நடத்து மேமியா

முற்ற நீதியக லாதிறை யீன்ற

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 20

குருக்க ளானவ ராறிரு பேருடன்

கொள்கை மாமரி யீன்ற குமாரன்

தெருக்கள் மீது அழுதுமுன் சென்ற

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 21

கள்ளன் பானின்ற காதலன் காதலி

காண வேயிரு பேரை யுசாவி

உள்ளன் பால ரரசி லிருப்பான

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 22

மங்கைபே ரின்மகா குற்றஞ் சாட்டியே

வந்த பேர்கள் மறுத்துரை யாமற்

செங்கை கொண்டு துரும்பால் வரைந்த

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 23

மாறில் லாதே தினம்புகழ்ந் தோதியே

மங்கை சீவனோ டாயிரங் காத

மூறு செய்யா தேமுவர் கொண்ட

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 24

ஏக நாதன் பிறந்தே வளர்ந்து

எமக்கு வேண்டி யிறந்தே யுயிர்த்துத்

தேக மானதுங் கண்ணாரக் கண்ட

செருச லைத்திரு நாடெங்கள் நாடே. 25

நற்கரு ணையிலெங் கோனி ருப்பதும்

நாடொறும் பூசை யேற்றிப் புகழ்வதும்

உற்ப வித்து உயிர்த்ததுங் கண்ட

றோமா னுபுரி நாடெங்கள் நாடே. 26

குயிற்சிந்து

அண்டபகி ரண்டமுயி ரெண்டிசையு மண்டலமு

மளவிட வருவேனென்னு கூவாய் குயிலே

துட்டமதி கண்டசுட ருண்டனைய பொருளெலாந்

தொகுத்தநன்மைச் சொரூபமென்று கூவாய் குயிலே.

எப்போது மிப்போது முப்போதுந் தானாகி

எல்லாம றிபவமென்று கூவாய் குயிலே

ஓப்பரிய வேகனு மூவருந் தானாகி

ஓயாதி ருப்பனென்று கூவாய் குயிலே. 28

தேவன்மா னிடனாகி மனுவைரட் சிக்கவந்த

ஜெகராஜ ராஜனென்று கூவாய் குயிலே

மூவுலகும் மகிழவே முப்போதுங் கன்னிகையார்

முன்மலையி லீன்றதெனக் கூவாய் குயிலே. 29

சத்தியவே தமதுஎத் திசைகள்தோ றும்முத்தி

தழைத்தோங்கி வாழவே கூவாய் குயிலே

உத்தமநன் நெறிநீதி யோங்கிய திருச்சபை

யுலகுதனில் வாழவே கூவாய் குயிலே. 30

சன்னாதி யின்னசி தேவனே மேலான

தவமுனிவன் வாழவே கூவாய் குயிலே

எந்நா ளெமக்கருள் பிரஞ்சீ•ஸ்குச் சவேரியா

ரின்பநாமம் விளங்கவே கூவாய் குயிலே 31

பேரான பாராளும் பிடுத்துக்கால் மனுவென்றன்

பிறதானம் வீசவே கூவாய் குயிலே

தழைவுபெற்ற யாழ்ப்பாண சத்தியகி றீஸ்தவர்கள்

சந்ததமும் வாழவே கூவாய் குயிலே

நேரான மன்னவர்கள் நேய அதிபதிகள்

நீடூழி வாழவே கூவாய் குயிலே. 32

பேதுருப்புலவர்

1647

இவரது ஊர் தெல்லிப்பழை. மதம் கத்தோலிக்க கிறித்தவம். இவரியற்றிய நூல் அர்ச். யாகப்பர் அம்மானை. 'மெய்த்தேவ புத்திரனார் தம்முடைய பற்றுடைய சீடருள்ளே பண்புடையார் யாகப்பர்' எனக் காப்புச் செய்யுள் கூறுகின்றது.

இந்நூல் பெருங்காப்பிய இலக்கணங்கள் பல பொருந்திய ஒரு காவியமாகும். நூலின் நோக்கம், அது எழுந்தகாலம் என்பனவற்றைப் பாயிரத்தின் பின்வரும் பகுதி விளக்குகின்றது.

ஆசிரியர் கோத்திரத்தோன் அன்புநெறி நீதியுள்ளோன்

சீரியபே துரென்போன் சிந்தைமிகக் கொண்டாடி

நம்புங் கிரணமென நானிலமெங் கும்விளங்குங்

கொம்பாஞ்ய தேயேசுக் கூட்டத்தி லுள்ளகுரு

தவசெபங்க ளிற்சிறந்த தன்மநெறி நீதியுள்ள

சுவாங்கறுவால் லூயிசென்னுந் தூயோ னுரைப்படிக்கு

எப்பொருட்குங் கர்த்தாவை ஏங்கும் நிறைவோனை

தப்பில்லா நீதியுரை தாய்மரியைப் பெற்றெடுத்து

ஆண்டா யிரமு மறுநூறு மாறேழும்

மீண்டுமோ ரஞ்சும் விளங்கவே சென்றவந்நாள்

கார்த்திகை மார்கழியாங் காணுமிரு மாதமதில்

கீர்த்தியுள்ள செந்தமிழாற் கிளத்தினா ரிக்கதையை

அந்தமுட னிதனை அம்மானைப் பாவனையாய்க்

செந்தமிழி னாலறியச் செப்பினார் யாவரும்

ஆனதினா லிந்த வரியகதை காரணமாய்

மாநகரோ ரேகேட்டு மகிழ்ச்சியது கொள்வீரே

இக்கதையைப் பாடினது என்னுடைய ஆசிரியன்

தக்கமன தாய்க்கேட்டுத் தற்பரனைப் போற்றிடுவீர்.

அர்ச். யாகப்பர் அம்மானை

தாராட்டு

மாணிக்கச் செப்பே வயிர மணிவிளக்கே

அணிப்பொன் னென்ன அழகு செறிபளிங்கே

மின்னாள் சலோமை விளங்குந் திரவயிற்றின்

பொன்னே யிரத்தினமே போற்றிசெறி புத்திரமே

கொஞ்சு கிளிக்குழந்தாய் கோகிலமே கோமளமே

அஞ்சாதே பஞ்சணையில் ஆரமுதே பள்ளிகொள்ளாய்

ஆராரோ தாராரோ வன்பனே பள்ளிகொள்ளாய்

சீரார் சலோமை திருமகனே பள்ளிகொள்ளாய்

தாயார் மிடிதீரத் தந்தை களிகூர

தூயமுளை யாகித் தொல்புவியில் வந்தீரோ

சூழிக் கிளைவழிக்குத் துங்கமணித் தீபமென

வாழு மிளங்குழந்தாய் வாழ்வாக்க வந்தீரோ

முன்னாட் சலோமையரும் முந்துசெப தேசும்

எண்ணாத் தவசுபண்ணி யீன்றெடுத்த புத்திரனே

கண்டுயில்தல் போதுங் கரும்பே பசுங்கிளியே

பெண்கொடியாள் பெற்றநல்ல பேரின்ப பாக்கியமே

ஓர்வார்த்தை சொல்லு முமைவளர்க்குந் தாதியர்க்கு

சீர்வாய்ந்த செல்லமிர்தத் தேனே யெனமடவார்

அன்பாக வாழ்த்தி அமிர்தமுறு கீதமொழி

பண்பான தாதியர்கள் பாடினர்கா ணம்மானை.

அரசன் சிறையிடலும் தேவதூதன் நீக்கலும்

விருத்தம்

விண்ணிருந்து திருமுணிவால் நரகில் விழ்ந்த

வெங்கபடப் பேயுடைய மிகுந்த பாவம்

பண்ணொழுங்கை யகத்தாக்கிக் கொடுமை மேலாய்ப்

பரனரளை நினையாத பாவி வேந்தன்

மண்ணொழுங்கி னாசையெல்லாம் நீத்தோர் தன்னை

வன்சிறையில் வையுமென்றான் வஞ்சர் கூடி

கண்ணடங்கா வாதையுடன் சிறைக்கூ டத்தே

கற்றவரைக் கொடுசென்றார் கருத்தி னோடே. 1

செய்யகரங் கால்களி லரசன் சொற்போற்

றிரந்துதளை தனைத்தொடுத்துச் சேமக் கூடம்

ஐயமற வங்கிருக்குங் கதவு தாளிட்

டருங்காவ லாளரெல்லா மடர்ந்து காக்க

துய்யவமை வொடுபொறுதி யுறுயாக் கோபின்

துங்கமா ணவர்சேமத் திருப்ப தாலே

வையமுள்ளோ ரையோன்வென் றபல மாக

மனதிரங்கி னாரவர்கள் மகிமை கேளீர். 2

மங்காத நீதிநெறி யாக்கோப் பென்னும்

மாதவன்றன் றிருச்சீஷர் வருந்தல் கண்டு

எங்கோனாங் கிறீஸ்திறைவ னிரக்க முற்று

இம்பருறை யெழிலாஞ்சு மாரை யேவ

அங்கேவந் திரவுதனி லாஞ்சு மார்கள்

அரசனிடுஞ் சேமமெல்லா மழித்தே யன்பாய்

இங்கேநீர் காவலிலே யிருக்க வேண்டாம்

எழுந்தேநீ ரேகுமென வியம்பி னாரே. 3

வானமதால் வந்தாஞ்சு காவல் நீங்க

மாதவத்தோ ரவ்விரவில் விடைபெற் றேக

ஆனபனிப் பகையுதித்த பின்ன ரந்த

அரசன்முன் சிறைக்கூடங் காத்தோர் சென்று

மீனவனே விழிதுயின்ற நேர மந்த

மெய்த்தவத்தர் விரைந்துசென்றா ரென்ற செய்தி

ஈனவர சன்கேட்டு மனம்பு ழுங்கி

இருந்தவனுஞ் செய்தவஞ்ச மியம்பு வாமே. 4

அம்மானை

பொன்னுலவு மன்னவரே போற்றும் பெரியோரே

இன்னுமீன்னுங் கேளு மியாக்கோ புடைகதையை

அன்னாட் பரலோகத் தாஞ்சாக நின்றவனை

தன்னாளி லவ்வேந்தன் சற்குணத்தை விட்டொழித்து

சாவும் நரகிலுள்ள சஞ்சலமு மெண்ணாமல்

கோபமிக வெகுண்டு கொதித்து விழிசிவந்து

எங்குலத்து மூதாக்க ளிக்கால மாகுமட்டும்

இங்குரைத்த காரணங்கள் ளேதென் றறியார்கள்

என்னூர் புதியு மெதரணுந் தான்டந்து

புத்தியு மன்பும் புகழும் புகன்றுநன்மை

எந்தவந்தா ரென்றுசொல்லி ஏந்தல் சினந்தெழுந்து

கத்துகடற் புவிக்குட் கண்டோர் கலக்கமுற

இத்துட்ட ரைக்கொலுமென் றியம்பினா ரம்மானை

செங்கோல் நிருபன் சினந்துரைத்த செய்திகண்டு

அங்கே யிருக்கு மசைச்ச ரெழுந்திருந்து

தானையுற்ற வெம்போர்த் தரியல்லர்கள் தம்மைவென்று

நானிலத்தை யாளும் நரபாலா கேட்டருள்வாய்

மின்னுந் தவத்துயர்ந்த மெய்ஞ்ஞான யோகிகளை

மன்னவனே கொல்லவென்றால் மாபெருமை யோவுமக்கு

மன்னர்க் கழகு மறுத்துவருங் காரியங்கள்

உன்னி யுடனே யுணருவது நீதமல்ல

மெய்பொய் மறிய விளங்குஞ் சிலநாளால்

ஐயந் தவிர்ப்போம் அருந்தவரை யவ்வளவுங்

காவலில் வைத்துக் கபடுகண்டால் நீத்தோரை

ஏவியுயிர் பறிப்ப தேந்தற் கியல்பெனவே

மந்திரிமா ரெல்லாரும் மனதிரங்க மன்னவனும்

இந்தமுனி வோரை யிட்டுவையுஞ் சேமமென்றான்

வேந்த னுரைக்க விடைகொண்டு ஏவல்செய்வோர்

போந்த தவத்தோரைப புன்மை மிகப்புரிந்து

மெய்க்காவல் செய்து மிகுந்த கடூரமுடன்

கைககாவ லோடு கடுஞ்சேமக் கூடமதில்

கொண்டுசென்று தீவிரத்திற் கோல முனிவருக்குக்

கண்டோ ரிரங்கக கரங்கா லிரும்புகொண்டு

செய்த விலங்கு திரளாக நாலாறு

கையினா லிடடிருக்கிக் கற்றவரைச் சேமமிட்டு

தாளிட் டடைத்துத் தறுகாமற் காவல்வைத்து

வாள்தொட்ட வீரர் வருத்தி விழித்திருந்து

தேயுவும் நீருஞ் சிறந்த வுயிரனைத்தும்

வாயுவும் போகாமல் வன்காவ லாயிருந்தார்

தீயரிடஞ் சிறைக்குட் சிட்டர் சலியாமல்

தூய கரங்குவித்துச் சோதி தனைநினைந்து

ஓதி வணங்கி யுவந்த பொறுதியுடன்

ஆதிக்கு வந்தவன்பா யங்கிருக்கும் வேளையிலே

விண்ணோன்றிருவுளத்தால் மேதினியில் வந்தாஞ்சு

எண்ணுங் குடதிசையி லேகியபின் சூரியனும்

சொல்லுக் கடங்காத சோதிச் சுடருடனே

அல்லிற் சிறையிருந்த அன்பரிடம வந்தணுகி

காலலுங் கட்டுங் கடுஞ்சிறையுங் கால்விலங்கும்

ஏவலும் மன்ன னிடும்வினைக ளானதெல்லாம்

பாரும் விரும்பும் படைத்த பரனருளால்

ஆரு மறியாம லக்கணத்தில் நீங்கியதே

ஆஞ்சுகள் வந்து அருங்காவல் தான்நீக்கி

காஞ்சன விண்ணிற் கடவுளிட மேகியபின்

நீத்தோர் விழிதுயின்று நித்திரையினா லெழும்பிப்

பார்த்தாப்போல் மெத்தப் பயந்தே யதிசயித்து

இக்காவல் நீங்கியது மிந்தப் புதுமைகளும்

எக்கால முமான ஏகன் செயலெனவே

ஆக மகிழ்ந்து அறிவாளர் தங்களிலே

போக விருள்நீங்கிப் பொங்குகதிர் தோன்றியதே

வாலக்க திருதிக்க வன்காவ லாளர்சென்று

கோலச் சிறையிருந்த கொற்ற குருமார்கள்

போனதினால் மெத்தப் புதுமையிது வென்றுசொல்லி

ஆனவர்க ளெல்லா மதிசயித்து நின்றாலும்

மன்னவனுக் கஞ்சி மனங்கலங்கித் தங்களிலே

என்னசெய்வோ மென்று இருந்தவரு மெண்ணமுற்றுக்

கொன்றாலும் விட்டாலுங் கொற்றவன் சித்தமென்று

வென்றி யரசனுக்கு விண்ணப்பஞ் செய்யலுற்றார்

பார்த்திபர்க ளேறே பகர்சிறையில் நீத்தோரைக்

காத்திருந்தோ மிவ்விரவிற் கண்ணுறக்கஞ் செய்தோம்நாம்

மாயமோ விஞ்சைகளோ வந்தவழி நாமறியோம்

தூயோரைக் காணோந் துலங்கு புரையதனில்

என்றமொழி கேட்டு ஏந்தல் சினந்தெழுந்து

நின்றவனுஞ் செய்தவஞ்ச நீதிகளே ளம்மானை.

முடிவுரை

அம்மானை

கானாவூர் தன்னிற் கலிலேய மாநகரிற்

றோணாத நீதிமொழி தோன்றும் வதுவைதனில்

சாடியிற் றண்­ர் தனைமதுவ தாக்கியுண்ட

பாடியிற் றோன்றும் பரனுக்கு வந்தசுத்தன்

முந்திய யாக்கோபு முத்தருக்கு முன்பிறந்த

சந்தியா கின்கதையைத் தாரணியி லுள்ளவர்கள்

மெச்சி யறியவென்று மேவுயாழ்ப் பாணமதில்

பச்சிலைப் பள்ளியென்னும் பற்றிற் கிளாலியிலே

நம்ப னருள்செறிந்து நானிலமுந் தான்விளங்கும்

கொம்பாஞ்ய தேசேசுக் கூட்டத்தி லுள்ளவர்கள்

செழிக்கு நதிசூழ்ந்த தென்கரையில முன்னாக

வெளிப்படச்செய் தவ்விடத்தில் மேவுங் கிரந்தமதைக்

கேட்டு மனமகிழக் கேளாதோர் கேட்டுவர

நாட்டுத் தமிழ்ப்படுத்தி நற்குருக்கள் தந்தவுரை

நெல்லி லுமியுமுண்டு நீரில் நுரையுமுண்டு

சொல்லில் வழுவுமுண்டு சூரியனிற குற்றமுண்டு

கல்லார் மனத்திலிருள் கற்றோர் கனம்விளக்கும்

எல்லா மறிவோ ரெனைப்பழுது சொல்லாமல்

கண்ட வினைநீக்கிக் கற்றோர்கள் முன்னேற்றி

அண்டர்சந்தி யாகுகதை யன்பா யவனியிலே

ஆசையுற்றுக் கேட்போ ரறிந்தெழுதி யேபடிப்போர்

வாசமுற்ற பூவைவிடின் வானுலகஞ் சேருவர்காண்

மாதமும் மூன்றுமழை மங்காம லேதினமும்

சேதமின் றிப்பெய்யுந திருந்துகி ளாலிநகர்

மேற்குத் தெருவில் விளங்குமந்த ஆலயத்தில்

ஆர்க்கு மொருவேத மகமகிழப் போதுவித்த

வேதமிக வாழி வேல்வேந்தர் தாம்வாழி

ஓது மறைக்குருக்க ளுற்ற கிறீஸ்தவர்கள்

சத்திய வேத சபைக்குரிய பேர்களெல்லாம்

நித்தியம் மேன்மேலும் நேசமாய் வாழியவே

கன்னியர்கள் கற்புக் கலங்கா திலடங்கவே

பன்னுதமிழ்ப் பாடும் பாவலர்கள் வாழியவே

பாதகத்தை விட்டொதுங்கிப் பராபரனை நெஞ்சில்வைத்து

தீதற் லுலகர்கதி சேர்ந்தென்றும் வாழியவே.

தொம்பிலிப்பு

இவரது ஊர் தெல்லிப்பழை. மதம் கத்தோலிக்க கிறித்தவம். இவர் வாழ்ந்த காலத்தைப் பற்றி யாதும் அறியமுடியவில்லை. தொம்தியோகு முதலியின் விருப்பப்படி கிறித்தவ மத விளக்கமாகிய ஞானானந்த புராணம் என்னும் ஒரு காவித்தை 1104 விருத்தப்பாவில் இவர் இயற்றினார். பின்வரும் பாவிலிருந்து புராணம் இயற்றப்படட வரலாறு தெரிகின்றது.

அல்லலுறு மஞ்ஞானத் திமிரந் தேய

வருள்ஞான விசுவாச விளக்க முந்நூற்

புல்லியசொற் சிறிதெடுத்து விருத்தப் பாவாய்

போந்தவுரோ மாபுரியின் சங்கத் தோராற்

தொல்லுலகி லுயர்ந்தகுரு குலத்து மன்னன்

றெந்தியோ கெனுமுதலி முயற்சி யாலே

தெல்லிநகர் வேளாளன் தொம்பி லிப்புச்

செந்தமிழிற் காப்பியமாய்ச் செய்தான் மன்னோ.

ஞானானந்த புராணம்

என்றினைய நிகழ்ந்தவண்ண மருளப்ப

னன்னைதன்பா லிசைப்பா வெய்தி

பொன்னுடலம் வெயர்பொடிப்பப் பொருமியுள்ளம்

பறையடிப்பப் புலன்வாய் விம்ம

நின்றனன்மெய் தள்ளாடி நெடுந்தாரை

கண்பனிப்ப நிலத்தில் வீழ்ந்து

துன்றுமல ரடியிறைஞ்சித் தோன்றல்படுந்

துயரமெலாஞ் சொல்ல லுற்றான்.

***

4. ஒல்லாந்தர் கலம்

1658-1769

அரசியல் நிலை :

ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து யாழ்ப்பாண வரசை 1658இற் கைப்பற்றி 138 ஆண்டுகளாக ஆண்டு வந்தனர். அக்காலத்தில் அவர் கோட்டைகளைக் கட்டுதல், நிலவளவைப் பகுதியைச் சீர்திருத்தல், தேசவளமை என்னும் தமிழ்மக்களின் நியாயப்பிரமாணங்களைத் தொகுத்து வெளியிடல் முதலிய நற்கருமங்களைச் செய்வதிற் காலத்தைக் கழித்தனர். எனவே, நாட்டில் சமாதானம் நிலவிற்று. ஒல்லாந்தர் தமது சமயமான புரொடத்தாந்து கிறித்தவத்தை மக்களிடையே பரப்ப விரும்பினரேனும போர்த்துக்கேயரைப் போல் அட்டூழியங்களைச் செய்து மக்களைத் துன்புறுத்தவில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் சைவசமயிகள் ஓரளவு சுதந்திரமாக வாழ்ந்தார்கள் என்பதை அக்காலத்திய தமிழிலக்கியங்களிலிருந்து அறியமுடிகிறது.

ஒல்லாந்தர் சிறந்த அரசியல் வாதிகள். அவர்கள் நாட்டைச் செவ்வனே ஆளுவதற்காக வகுத்த சட்டதிட்டங்கள் இன்றும் ஈழத்தின் சட்டபரிபாலகராற் போற்றப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன.

இலக்கியப் பண்பு :

ஒல்லாந்தர்காலத் தெழுந்த தமிழிலக்கியங்களுள் ஒரு பகுதியின கத்தோலிக்க மத இலக்கியங்கள் ஆகும். போ‘த்துக்கேயர் காலத்தில் வேரூன்றிய கததோலிக்கம் சிறப்புற வளர்ந்தது ஒல்லாந்தர் காலத்தி லெனலாம். பூலோகசிங்கமுதலியார், கூழங்கைத்தம்பிரான், பிரான்சிசுப்பிள்ளை முதலியோர் எழுதிய நூல்கள் இவ்வகுப்புள் அடங்கும். போர்த்துக்கேயர் காலத்திலே கத்தோலிக்க மதத்தவரின் தலைமைப்பீடமாய் விளங்கிய தெல்லிப்பழை, ஒல்லாந்தர் காலத்திலும் புலவர்கள் பலரின் உறைவிடமாயிருந்ததென்பதை இலககியங்கள் காட்டுகின்றன.

அக்காலத் தமிழ்ப் புலவர்களுட டலைசிறந்தோர் வரத பண்டிதர், சின்னதம்பிப்புலவர், மாதகல் மயிலவாகப் புலவர் ஆகிய மூவருமாம. இவர்களியற்றிய இலக்கியங்கள் தமிழ்நாட்டி லெழுந்த இலக்கியங்கள் போன்று மிக உயர்ந்த தரத்தவை ; செந்தமிழில் யாக்கப்பட்டவை.

ஒல்லாந்தர் காலத்திய ஈழத்துத் தமிழிலக்கியங்கள் நாயக்கர் காலத்திலே தமிழகத்திற்றோன்றிய இலக்கியங்களின் பண்பைப் பெரிதும் ஒத்துள்ளன. மக்கள் சயம வாழ்க்கையிலும் கோயில் வழிபாட்டிலும் நம்பிக்கை கொண்டிருந்ததாகிய அக்காலத்திற்றோன்றிய இலக்கியஙகள் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்தன. வரத பண்டிதர் இயற்றிய சிவராத்திரிப் புராணம், பிள்ளையார் கதை, குருநாதசுவாமி கிள்ளைவிடுதூது ஆகிய மூன்றும் பதினேழாம் நூற்றாண்டுச் சூழ்நிலையின் பெறுபேறாய்த் தோன்றியவை. ஆசியச் சக்கரவர்த்திகள் கட்டியெழுப்பிய கோயில்கள் போன்று ஒல்லாந்தர் காலத்திலும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. நித்திய பூசைகளும் விரதங்களும் கடைப்பிடிக்கப்பட்டன. எனவே, கோயில்களிற் படித்துப் பயன் சொல்லச் சிவராத்திரிப புராணம், பிள்ளையார்கதை முதலிய நூல்கள் இன்றியமையாது வேண்டப்பட்டன. தமிழகத்தில் மடாலயங்கள் சமய இலக்கிய வளர்ச்சிக்கு உதவிபுரிந்ததுபோன்று, ஈழநாட்டில் எவ்வித தாபனங்களும் உதவுபுரியவில்லை. ஆயினும் மக்கள் தளராத உள்ளத்தரா யிருந்தமையின் சமயக் கிரியைகளை விளக்கிக் கூறும் நூல்களைப் படிசெய்து படித்துப் போற்றிவந்தனர்.

சின்னத்தம்பிப் புலவரியற்றிய மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி என்பனவும், மயில்வாகனப் புலவரியற்றிய புலியூர் யமக அந்தாதியும் ஈழநாட்டுப் புலவர்கள் அந்தாதி பாடுவதற் கைதேர்ந்தவர் என்பதை உலகுக்குக் காட்டுகின்றன. இவ்வந்தாதிகளெல்லாம் கடவுளர்மீது பாடப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. கதிரைமலைப்பள்ளு, ஞானப்பள்ளு ஆகிய பள்ளு நூல்கள் பொதுமக்களாற் போற்றப்பட்டுவருவதைக் கண்ட சின்னத்தம்பிப் புலவரும் சின்னக்குட்டிப் புலவரும் முறையே பறாளை விநாயகர்பள்ளு, தண்டிகைக்கனகராயன் பள்ளு என்னும் பெரிய நூல்களை இயற்றினர். இந்நான்கு பள்ளுப் பிரபந்தங்களும் ஈழத்து இலக்கியவரிசையை அணி செய்து நிற்கின்றன.

கரவை வேலன் கோவை, தண்டிகைக் கனகராயன் பள்ளு ஆகிய இரண்டும் முறையே கரவெட்டியில் வாழ்ந்த வேலாயுதப்பிள்ளையையும், தெல்லிப்பழையில் வாழ்ந்த கனகராய முதலியாரையும் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டவை. ஈழத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் பின் தமிழ்ப் புரவலர்கள் தோன்றவில்லையே என்னுங் குறையைப் போக்க இவ்விரு புரவலர்களும் உதித்தார்கள் போலும்.

ஈழத்தில் வடமொழியின் செல்வாக்கு மிகக் குறைந்திருந்த காலம் ஒல்லாந்தரது ஆட்சிக்காலம் ஆகும். அக்காலத் தமிழ்ப் புலவர்கள் பலர் தம் சொந்தக் கற்பனை ஆற்றலின் உதவிகொண்டு இலக்கியங்களைப் படைக்க விரும்பினரேயன்றி மொழிபெயர்த்துக் காவியங்களைப் பாட விரும்பினரல்லர். இக் காரணத்தாற் பழைய செந்தமிழ்ச் சொற்கள் சின்னத்தம்பிப் புலவர்க முதலியோர் பாடல்களின் வாழ்வு பெறலாயின. தமிழகத்துப் புலவாகள் வடமொழியாதிக்கத்தின் தீமையை உணருமுன் ஈழத்துப் புலவர்கள் உணர்ந்துவிட்டார்களெனக் கருதத்தக்கதாகப் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டைய ஈழத்துச் செய்யுளிலக்கியங்கள் காட்சிதருகின்றன.

ஒல்லாந்தர் காலத்திலே தமிழ்ப்புலவர்கள் பல தோன்றி இலக்கியங்களைப் புனைந்தார்களெனத் தெரிகிறது. அவர்களுட் பலா பாடிய நூல்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன ; செய்யுள்கள் எல்லாம் பாது காப்பாரின்றி அழிந்தொழிந்தன. பெரிய புலவர்பரம்பரை ஒன்று, தமது காத்துக்குமுன் வாழ்ந்திருந்தது கண்டே இல்லாந்தரது ஆட்சிக்காலவிறுதியில் வாழ்ந்த மாதகல் மயில்வாகனப் புலவர் 'யாழ்ப்பாண வைபவம்' என்னும் புலவர் வரலாற்று நூலை எழுதினார்.

வரத பண்டிதர்

1656 - 1716

இவர் சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் புதல்வர். இலக்கியம், இலக்கணம், வைத்தியம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர், இவரியற்றிய செய்யுள் நூல்கள் சிவராத்திரிப்புராணம், ஏகாதசிப்புராணம், அமுதாகரம், கிள்ளைவிடுதூது, பிள்ளையார்கதை முதலியன. இந்நூல்கள் எல்லாம் இன்றும் மக்களாற் போற்றிப் படிக்கப்பட்டு வருகின்றன.

சிவராத்திரிப் புராணம்

காவரசு மலரணன்மால் கடவுளர்க்காச்

சென்றமர்செய் காம னாமையம்

பூவரது படவிழித்துப் புனவேங்கை

யத்தியதழ் புனைந்து போர்த்த

தேவரசு மனமகிழத் திருப்பதிக

மிசைத்தமிழிற் சிறக்கப் பாடு

நாவரசு பதம்பரசு நமக்குயர்பொன்

னாட்டரசு நல்கு மன்றே. 1

எய்ச்சிலை யுண்டென் றோதற்

கேதுவா மிடையாண் மாரன்

கைச்சிலைப் புருவ மைக்கட்

கவுதமன் பன்னி கொண்ட

மைச்சிலை யுருவ மாற்று

மலர்ப்பதன் வடத்தண் டார்ந்த

பச்சிலைப் பள்ளி யானுட்

பரிவுடன் பழிச்சி யேத்த. 2

நீடலுறழ் கருங்கனங்கள் படிந்துமுழ

வெனவதிர நிரந்து தும்பி

பாடல்புரி தரத்தழைத்த பாசடைசந்

தனப்பனையிற் படருஞ் செய்ய

கோடலலர் விளக்கேந்தக் குலமயினா

டகம்புரியுங் குன்று தோறு

மாடல்புரி முருகவிரு சரணமலர்

பரவிவினை யகற்றி வாழ்வாம். 3

முத்தவெண் மணித்தோ டரித்தநூல் வடத்தின்

முறைமுறை குறைவறக் கோத்து

வைத்தெனச் சிதறி விரிந்தபூம் பாளை

மரகதக கமுகினிற் குலையைத்

துய்த்தலை கடுவன் பாய்ந்துறச் சிறந்தச்

சுரிமுகக் கூன்பிடச் சங்கங்

கைத்தலத் தெடுத்துக் கம்பள ரெறிந்து

கடிந்திடுங் காம்பிலி நாடு. 4

கயமலர் துவைத்துக் க€ரைதவழ் பணிலங்

கான்றிடத தோன்றுநித் திலத்தை

முயன்மதிப் பிள்ளை யெனப்பகற் காவி

முகைமுறுக் குடைந்தே னொழுக்கும்

வயன்மருங் கெழுந்த கரும்பினைக் கவரி

முறித்திடத் தெறித்தவெண் மணிமுத்

தயன்முதிர்ந் திடுசூற் றவளைமேற் படநொந்

தாங்கது பொறுத்திடா தரற்றும். 5

காங்கேசன்துறை குருநாதசுவாமி

கிள்ளைவிடு தூது

கொற்றமிகுந் தெய்வ குருநாத சாமிதன்மேற்

சொற்றதமிழ்க் கிள்ளைவிடு தூதுரைக்கக் - கற்றுணர்ந்தோர்

நான்முகத்தோன் போற்றுமுக்க ணக்க னருள்பாலன்

றோன்முகத்தோன் றாளே துணை.

அவையடக்கம்

கூதலுடை யார்நெருப்பின் புகைத்தீமை

குறிக்கிலர்நோய் கொண்ட பேர்கள்

வாதபித்த கடும்பிணிக்கோர் மருந்துசி

பார்க்கிலரவ் வாறு போல

மூதறிவா லுணர்ந்தோர்கள் குருநாத

சாமியென்னும் முதல்கன் பேரிற்

காதையினைக் கொள்வரென்புன் கவிக்குறைகண

டாலுநெஞ்சிற் கருதி டாரே.

நூல்

கலிவெண்பா

சீர்தங்கு தெள்ளமுதுஞ் செந்திருவு மைந்தருவுங்

கூர்தங்கு நாற்கோட்டுக் குஞ்சரமு - மேர்தங்கும்

ஆரத் தனத்தே வரமபையரும் வந்துதித்த

கீரத் கடற்றோன்றுங் கிள்ளையே - பாருலகில்

இந்துதவு நன்னுதலார்க் கின்பமுடன் றூதுபோய்

வந்துதவுங் கிஞ்சுகவாய் வன்னியே - நந்துதவு

முத்தே நவமணியே மோகமட வாருயிரின்

றத்தே தவிக்கவருந் தத்தையே - கத்தரின்

கள்ளையில் மைப்பூங் கணைக்காம வேளேறக்

கிள்ளையாய் வந்தபசுங் கிள்ளையே - தெள்ளுபுனல் 5

ஆட்டிப்பா ராட்டி யதுதூடடிச் சீராட்டி

கூட்டி லுனையிருத்திக்கோதாட்டி - நாட்டமுடன்

என்போ லிகழ்ச்சிசற்று மில்லாம லென்னிரண்டு

கண்போல் வளர்த்த கடன்றீர - நண்பாகத்

தக்கசந்த மார்பகத்துச் சாமிகுரு நாதன்பான்

மிக்கசந்து போய்மீள வேண்டங்காண் - புக்கதுயா

மன்றன் மலரன்ன மருவுகுயில் வண்டுவிண்டு

தென்றல்பயில் பூவையுடன் செப்பேன்காண் - முன்றனியே

மாரூருங் கொங்கைமுலை மங்கை மணவாள

னாரூருஞ் செஞ்சடையா னாரூரிற் - றேரூரும் 10

வீதி தனினமுனிவர் விண்ணோ ரதிசயிப்பப்

பாதிமதி நெற்றிப் பரவைபா - லோதியுணா

சந்தரற்காத் தூதுபோய்ச் சொல்லித் திரும்பிவந்தா

ணிந்தக் கதைகேட்ட தில்லையோ - முந்தொருநாட்

பாண்டவர்க டங்கள் பகைமுடிக்கப் பாஞ்சாலி

கூண்ட கரிய குழன்முடிகக - நீண்ட

திருமாலைச் சக்கரத்தைக் தேவைக் குவளை

யருமாலை சூட்டி யனுப்பக் -குருகுலத்துத

தூண்டு பரித்தேர்ச் சுயோதனன்பாற் றூதாகி

யாண்டுபோய் மீண்டுவந்த தாய்ந்திலையோ - மாண்டகைய 15

சித்திரப்பொற் பாவைநிகர் சீதை துயர்தீர்க்கப்

பத்திரதன் புத்திரன்றான் பண்டனுப்ப - வத்திரநேர்

அஞ்சனக்க ணஞ்சனைசே யஞ்சாதீ ரஞ்சுமுக

வஞ்சகன்பாற் றூதுபோய் வந்திலனோ - கஞ்சமலர்க்

கண்ணா யிரமுடையோன் கற்பிக்கப் பொற்கழற்கா

னண்ணார் பரவு நளராசன் - பெண்ணாள்

அமுததம யந்திதன்பா லன்று மறுக்காமற்

சுகமுடனே சென்றிலனோ தூத.குமுதவிதழ்

மாதருயிர் காக்க வரும்புண் ணியமிதனா

லேதமுறு மிழிபொன் றில்லையே-யாதலினால் 20

தாதூது வண்டுமுர றாவாங்கப் பைங்கிளியே

நீதூது செல்ல நினைந்தருள்வாய் - மீதாரக்

கண்டவிறும் பூதெனது காதலளித் தோன்றகைநாட்

கொண்ட துயர்விரகங் கூறக்கே - ளண்டர்புகழ்

தெல்லிநகர் மாவையூர் சேர்ந்தபழை செங்கமல

வல்லியிருந் தேவாழ்வீ மன்காம - நல்லளிகள்

கீதமுறுஞ் சோலைக்காங் கேயன் றுறைதேவன்

காதல் புரிவளமைக் கட்டுவனூர் - சீதமலர்

மன்னு மயில்வாழ் மயிலை வயாவிளான்

பன்னுபுக ழுற்ற பலாலியூ - ருன்னரிக 25

புண்ணியமு மிக்க புகழும் படைத்ததனான்

மண்ணின் மிகுத்த வறுத்தலையூ - ரெண்ணரிய

தன்மமுடன் செல்வமிகுந் தையிட்டி யிவ்வூரிற்

சன்ம மெடுத்த சனங்களுக்கும் - பொன்னினுடன்

துய்யமுப்பா லாறுவிளை சோறுதவி யாங்கவர்க்கு

வெய்ய பிணிநோய் விலக்கியே - யையமறக்

கேட்டவர நல்குங் கிருபைச் சமுத்திரமாங்

கோட்டமதில் வாழுங் குலதெய்வம். 29

..............................

வாளிபடச் சோர்ந்துவிடு மாமயில்போ லேமடவார்

தோளின் மிசைச்சார்ந்து துளங்கினேன் - கோளின்மிகு

சன்னியோ பேய்குறையோ தானேதோ வென்றுசில

கன்னியர்க ளெல்லாங் கவலையுற்றுப் - பொன்னீயுந்

தண்டநேர் கைத்தலத்திற் றாங்கி யெடுத்துமெல்லக்

கொண்டவடி மண்டபத்திற் கொண்டுசென்று - பண்டுபகை

மாரன் றொடுக்கு மலர்வாளி யிற்கிடத்தி

யாரக் குழம்ப€ரைத்திட் டப்பியபபிச் - சாரமுற்றும் 190

பூசு மதவேள் பொருள்போரி லேறுதென்றல்

வீசிவர வாசன் வெளிதிறநதா - ராசைநோய்

மாற்ற மருந்திறியா மாதவர்கள் செய்பிழையாற்

றோற்றமொன்று மின்றிமனஞ் சோம்பினேன் - றேற்றமிகும்

அன்றில்பகை தெண்டிரைசேர் சிந்துபசை-மன்றன்மலர்

அம்பைந் துடைய வநங்கன் பகைமாவின்

கொம்பிற் பயிலுங் குயில்கள் பகை - நம்பினேன்

உன்னைப் பசுங்கிளியே யோருதவி வேறறியே

னென்னைப் புரந்தேகற் கெண்ணுவாய் - சென்னெறியிற்

கண்டலைந்து தாமதித்துக் காய்கனிக டான்மிகுந்த

தண்டலைகளுண்டவற்றிற் றங்காதே - விண்டெனவே

விம்மினகொங் கைத்துணையார் மென்குதலைச் சொற்கேட்டு

நம்மினமென் றங்கு நணுகாதே-செம்மையினாந்

தேசமெங்குங் காராளர் சேருந் தெருக்கடன்னில்

வாசமனை தோறும் வருவிருந்தைப் - போசனங்கள்

பண்ணியிளைப் பாறுமென்பர் பாவையர்சொற் குப்பயந்து

எண்ணித் திரும்பிவர வெண்ணாதே - புண்ணியர்கள்

பூசையுண வாருமென்பர் பூஞையென்று நீபயந்து

பாசக் கிளியே பதுங்காதே - யாசையுள்ளோர் 200

நன்னாக மென்பரந்த நாட்டையது நாகமென்று

நின்னாகந் தன்னி னினையாதே - பொன்னாரும்

வண்டா மரைமலரும் வாவிகளுஞ் சோலைகளுங்

கண்டாங் கதனைக் கடந்தேதித் - தண்டாமற்

சங்கைபெறு காராளர் தங்குமூர் தாமலரின்

மங்கைபயில் மாவை வழந்தாள் - கங்குல்

உறங்கணிய வளையார்ந் தோங்குபொய் கைசூழு

மிறங்கணிய வளையி லெய்தித் - திறம்பெறவே

முன்னதிலே நின்று முதல்வன் குருநாதன்

சந்நிதி வாச றனிலணுகி -யன்னவர்தான் 205

மஞ்சன மாடி மணிப்பொற் கலன்பூட்டி

யஞ்சுவிதப் களிகூர்ந்து நுண்ணிடையா ராட்கொண்டு

வாக்கின் மனத்தின் மகிழ்ச்சியுண்டாய் - நீக்கமின்றி

நாற்றிசையி லுள்ள நரருக் கருள்புரிந்து

வீற்றிருக்குஞ் சந்தோஷ வேளைகண்டு-போற்றிசெய்து

தீர்வாழி யீங்குன் றிருப்பதியும் வாழியுன்றன்

பேர்வாழி யென்று பெரிதேத்திச் - சீர்வாழு

நின்பவனி கண்டொருபெ ணின்னை நினைந்துநெஞ்சி

லன்பவன லிட்டமெழு காயினா-ளின்பலர் 210

மஞ்சரிகள் சூடாள் வரிவிழிக்கு மைதீட்டாள்

விஞ்சுமணிப பொற்பூண் விதம்பூணாள் - வஞ்சியரோ

டம்மனைபந் தாடா ளன்ன மிவைதொடாள்

தம்மனைமார் தங்களொடு தார்கட்டாள் . செம்மனையிற்

கண்டுயிலா ளென்றெனது காதலெல்லாங் காதிலுற

விண்டுவிண்டு நன்றாய் விரித்தெடுத்துப் - பண்டிங்

கிறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்

குறுதி பயப்பாந் தூதென் - றறிவிற்

றிருவன் ளுவருரைத்த செய்யுட் பயனைப்

பெருகநினைந் தச்சமறப் பேசி - முருகுமலர்ச்

சோலைப் பசுங்கிளியோ சொல்லுங் குருநாதர்

மாலைதனை நீவாங்கி வா.

பூலோகசிங்க முதலியார்

1680

இவர் காரைநகரிற் பிறந்து தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தவர். இவரது மதம் கத்தோலிக்கம். அருளப்பநாவலர் எனபத இவரின் மறுபெயர். இவரியற்றிய நூல் திருச் செல்வராசர் காவியம். அந்நூல் 24 படலங்களையும் 1946 விருந்தச் செய்யுள்களையுங் கொண்டுள்ளது.

ஆக்கியோன் பெயர்

செல்லினருள் பெருகுதவச் செல்வரா

யன்கதையைத் தேர்ந்து நுண்ணூ‘ற்

றுல்லிபமோர்ந் திடும்புலவர் மகிழ்தூங்க

விருத்தத்தாற் சொற்றிட் டானால்

நல்லிசைநா டகமியலின் றமிழ்தெரிநா

வினன்சதுர நாக ரீகன்

தல்லிநக ரருளப்பன் றென்காரைப்

பூலோக சிங்கன் றானே.

திருச்செல்வர் காவியம்

நாட்டுப்படலம்

ஆடகச் சிலமபொலி யரவக் கிண்கிணி

பாடகச் சீறடி பரதப் பண்ணுறச்

சூடகக் கரங்களிற் கண்க டோய்தர

நாடகத் தியல்பெற நாறு நாட்டினார். 1

சிந்துர நுதலியர் விழிச்செஞ் சேற்குடைந்

தந்தரம் புகக்குதித் தகலும் பைங்கயல்

கந்தியின் பழமுகத் தாக்கல் கம்பள

ருந்திய குணில்களை யொக்கு மென்பவே. 2

மங்கையர் கைப்படு வளங்கொல் மள்ளரா

ரங்கையின் செய்கைகொ லவர்செய் புண்ணியந்

தங்கிய கொல்பயிர் தழைத்திட் டெங்கணும்

பொங்கிய கருங்கடற் பரப்புப் போன்றவே. 3

களமெலா மலர்மல ரளிகள் கஞ்சமே

லிளவனத் திரள்புடை யீன்ற சங்கின

மளவளாய் நிறைவுகொண் டார்க்கு மோதையால்

வளவயற் சிறப்பையார் வழுத்த வல்லரோ. 4

அங்கயர் குரவையு மசைந்த மேனியுஞ்

செங்கையுல் லாசமுந் தெளிந்த பாடலும்

மங்கையர் கண்டுள மகிழ்ந்து மாமலர்ப்

பங்கயத் தனமெனப் பரந்திட் டார்களே. 5

சொற்பத மெழுத்திய றொடர்த ரப்பொரு

ணற்புதர் பிரித்திடு நன்க தென்னவே

நெற்பதர் போக்கிமீக் கூப்பு நீள்பொலிப்

பொற்பது பொற்சயி லத்தைப் போலுமே. 6

தாங்க னிந்து மாதரா ரிரப்ப மந்தி தாழையின்

தேங்கனிக ளைத்தி ருப்பி வீழ்த்த வந்து சேர்ந்துராய்

மாங்க னிகள் சிந்திவண் கமுகி னெற்றி வாழையின்

றீங்கனி யுகுத் திழிந்து சம்பி ரத்திற் சிக்குமே. 7

பொங்கு கந்த வாசவோதி மாத ரூட்டு பூம்புகைத்

துங்க மாட மீதினோடு தோகை மஞ்ஞை கூவொலி

யெங்கு மிந்த வண்மையில்லை யில்லை யென்ப தில்லையா

லிங்கு வந்து கொள்ளுமென் றியம்பு கின்ற தொத்ததே.

நகரப்படலம்

அகரமே யெழுத்தினத் தாதி யானபோன்

மகரமேய் திரைக்கடல் வலையத் திந்தமா

நகரமே யாதியா மிதனை நாவினா

னிகரவே றிணைநகா நிகழ்த்த லாவதோ. 9

காவிதா மரைவிழி வதனங் காரற

லாவிநோய் குழல்கிடை யதரமாம் பல்வாய்

மேவிமாம் மதநறு விரைநெய் வீசலால்

வாவியா வையும்மட வாரை நேருமே. 10

ஆகம நூறெறி யமைச்சர் நுண்மதிப்

பாகமை சொற்படி படியு மன்னர்போன்

மாகவான் பிறைவளை தோட்டி யின்படி

வேகவெங் களிற்றின மிடைந்த வீதியே. 11

வற்கலை முனிவரர் வகுத்துக் காட்டிய

சொல்கலை துகடபத் தெளிந்த தூயரான்

மற்கலை நிகர்புயம் வருந்தக் கோலிய

விற்கலை கற்பவர் வீதி யெங்குமே. 12

தேங்கமழ் மலர்களை திரைக்க ரங்களிற்

றாங்கியே யணிந்துமா நகரத் தையலை

நீங்கிடா திராப்பக னின்று காப்பதாற்

பாங்கியை யொத்ததப் பள்ள வெள்ளமே. 13

காய்கடும் பசிக்கரா வினங்கள் கௌவலிற்

பாய்தரு வாளைகள் பதைத்துச் சுற்றுதல்

வாய்தருந தாரைய வாட்கள் கைக்கொடு

சேயவர் சுற்றிய செய்கை போன்றவே. 14

கொத்துடைப் பவளவான் கொடியிற கோதறு

நத்தினம வயினுழைந் தீன்ற நன்கதிர்

முத்தினம் பிறங்கன்மொய் கிடங்கென் றுள்ளவை

யத்தனை யையுநகைப் பதனை மானுமே. 15

வேறு

சங்கத்திரண் மடவார்சொரி தரளந்தவண் முறுவ

உலங்குப்படர் பவளக்கொடி யிதழ்காரற லளகம்

பொங்குற்றுகள் கயல்போர்விழி பூவம்பர்கள் களபந்

திங்கட்சுடர் வதனந்திரி சுறவஞ்செறி குழையே. 16

செவ்வித்திரு நகரத்துறை செல்வத்திடை சிறிதே

கொவ்வைக்கனி யதரத்தவ ரிசையைக்குயில் கவரும்

நவ்விக்குல நயனத்தெழி னடையைச்சிறை யன்னம்

வவ்விக்கொள லல்லான்மறு பொருள் வெளவ்வுந ரிலையே.

வீரக்கோன் முதலியார்

1686

இவரது ஊர் திருக்கோணமலையைச் சேர்ந்த தம்பலகமம். இவரியற்றிய நூல் 'வெருகல் சித்திரவேலாயுதர் காதல்',இந்நூல் 421 கண்ணிகளைக் கொண்டது; திருககோணமலைக்குத் தெனபாலுள்ள வெருகற் பதியிலெழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமியின் புகழைக் கூறுவது. கண்டியிலிருந்து அரசாண்ட இராசசிங்கன் என்பவன் நூலினுட புகழப்படுகின்றமையின் நூலாசிரியர் வாழ்ந்த காலமும் அவன் காலமேயாம் (1686).

சித்திரவேலாயுதர் காதல்

சீர்பூத்த தென்வெருகற் சித்திரவே லாயுதர்மேல்

ஏர்பூத்த செந்தமிழா லின்பரசக் காதல்சொல்ல 1

வார்பூத்த கும்பதன வல்லவைதன் பாகமுறுங்

கார்பூத்த மேனிக்க ணபதிதாள் காப்பாமே. 2

தென்னிலங்கை ராவணணைச் செய்யவிர லாலூன்றிப்

பின்னவன்ற னின்னிசையைப் பெட்புடனே கேட்டுவந்து

வாளுடன்வா ணாள்கொடுத்த மாகோணை நாயகர்தந்

தாளிணையெந் நாளுந்த மியேனுக் குத்துணையே. 4

செயய வெருகனகர்ச் சித்திரவே லாயுதர்மேல்

வைய மகிழு மதுரமொழிக் காதல்சொல்ல 5

மையனைய பூங்குழலாண் மாதுபிடியன்னநடை

ஐயைமலர்ப் பாதமதை யன்பாகப் போற்றிசெய்வாம். 6

...............................

வேலரிடம் தூதாய் விரைந்தேதி யென்றுயரைச்

சாலமுடன் சொல்லுஞ் சமயம€தைக் கூறுவன்கேள் 368

என்போலும் பெண்களிசைந்தனுப்புந் தூதுவர்கள்

அன்புடனே பேசு மமையமதிற் சொல்லாதை. 369

இந்திரனுஞ் சந்திரனு மெண்ணிரிய விண்ணவரும்

வந்துதொழும் போதெனது மையறனைச் சொல்லாதை.

வீரவா கோடுமற்றும் வீரர்மற்றும் வீரர்தொழு தேத்துகின்ற

நேரமதி லென்மயலை நீயெடுத்துச் சொல்லாதை 371

மெத்தபுகர் வாய்ந்த வெருகற்ப தியுறையுஞ்

சித்திரவே லாயுதரின் சீரடியி லன்புகொண்டு 372

மானமு டன்மிக்க வயனிலமுந் தோப்புகளும்

மானிய மாயீந்த மகராச ராசேந்திரன் 373

மாணிக்கம் வைத்திழைத்த வன்னப்ப தக்கமுடன்

பூணணிக ளீந்து புகழ்படைத்த பூபாலன் 374

கண்டிநக ராளுங் கனகமுடி ராசசிங்கன்

தெண்டனிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை. 375

சித்திரவே லாயுதவேள் சேர்ந்துமகிழ் வாயுறையுஞ்

சித்திரஞ்சே ராலயமுஞ் செம்பொற் சினகரமும் 376

திட்டமுடன் முன்னாளிற் செய்தநல்ல நாகனெனுஞ்

செட்டிவம்மி சத்திலுள்ள செய்யபிர தானிகள்போய் 377

பன்னரிய பாதம்ப ணிந்துதொழு சேத்துகையில்

என்னடைய சங்கதியை யெள்ளவுஞ் சொல்லாதை. 378

துன்னு மிருமரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்

வன்னிமைபொற் பாதம் வணங்கையினீ சொல்லாதை 379

சாற்று நிலைமை தலைமையுடன மற்றுமுளார்

போற்றுகையி லென்மயலைப் பூங்கிளியே சொல்லாதை 380

வித்வசனர் பாமாலை மெல்லடியிற் சூட்டுகையிற்

சத்தியமா யென்மயலைச் சற்றுநீ சொல்லாதை. 381

எண்டிசையிற் பாலகரு மிப்புவியி லுள்ளவருந்

தெண்டனிடும் வேளையிலென் சேதிதனைச் சொல்லாதை. 382

வன்னிமைதே சத்தார்ம காநாடு தான்கூடி

மின்னுமெழின் மண்டபத்தில் வீற்றிரக்கும் வேளையிலே 383

கோதில்புகழ் சேர்வீரக் கோன்முதலி தானியற்றுங்

காதலரங் கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை. 384

இராமலிங்க முனிவர்

1649

இவரது ஊர் அராலி. இவர் தமது பதினெட்டாவது வயதில் (16.5.1667) வாக்கிய பஞ்சாங்கத்தை முதன்முதற் கணித்து வெளிப்படுத்தினர். இவர் பழமொழிப்பிரபந்தம், சந்தானதீபிகை ஆசிய நூல்களையும் இயற்றினர். இவற்றுட் சந்தானதீபிகை (1.1.1713) வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூலாகும்; இது 122 விருத்தப்பாக்கள் கொண்டது.

சந்தானதிபிகை

பாயிரம்

கடலான கலைஞான தேசிகனைக்

கமுகனைக் குகனைக் கான்சூழ்

மடலார்தண் பூவினிலு நாவினிலும்

வதிந்தருளும் வாணி மானை

யடலாலு மொன்பதுகோ ளாகியவா

னவர்கடமை யடிய னேன்ற

னிடரான தறத்துரப்பீ ரருள்சுரப்பீர்

புரப்பீரென் றிறைஞ்சு வேனே. 1

நூல் செய்தவர்

நன்னூலாம் வடமொழிச்சந் தானதீ

பிகையதனை நலங்கு லாவு

தென்னூலாய் பவர்தாமு மாராய்ந்து

கொண்டாடத் தெரித்தல் செய்தான்

மின்னூலா மிடைவாணி மெய்யருளா

னெஞ்சகத்தும் புறந்து மேவு

முன்னூலான் சந்திரசே கரன் புதல்வ

னிராமலிங்க முனிவன் றானே. 2

நூற்பொருள்

செல்வ மைந்தரி லாததுஞ் சேர்வதும்

புல்லு தத்தப்பு தல்வகி டைப்பது

மல்கு புத்திர சேதமு மைந்தர்க

ளல்க றானும்பெ ருகல ளவையும். 3

நோயி மாரண முந்திரு நோக்குந்தா

னாயு மாந்த ரறியவ டமொழித்

தேய்வில் சந்தான தீபிகை தன்னையா

னேயுந் தென்மொழி யாலின்றி யம்புகேன். 4

அவையடக்கம்

நீதி வித்தகர் சொற்றிடு நீள்பொரு

ளாத லிற்கற் றமைந்தபு லமையோர்

தீதி னைத்தளித்தேன்கொளல் போலென்சொற்

கோதி னைத்தளிக் கொள்வர்பொ ருளையே. 5

மலடன்

அடையு மோரையொ டைந்தினுக் கேழினுக்

குடையர் பொன்வலி குன்றவு தித்துளோன்

மடந டைப்புதல் வர்பெறு மான்பிலான்

றொடைதொ டுச்சுச்சொ ருகுஞ் குழலியே. 6

இல்வாழ்க்கைக்குச் சந்தானத்தின்

இன்னியமையாமை

உலகினில் வாழ்வு பூண்டுளோன் சகல

செல்வமு முற்றிலுந் தாலு

மிலகிய மகவை யினிதினீன் றிடாதா

னிருமையும் பயன்பெறா னதனாற்

பலதவஞ் செய்து மகப்பெறல் வேண்டும்

பரவுகன் னியர்தமை வேட்ட

னிலவுசந் ததியின் பொருட்டலாற் காமப்

பொருட்டல வெனமறை நிகழ்த்தும். 7

புத்திர புத்திரிகளா லெய்தும் பயன்

ஆதலா லுலகி லாண்மகப் பெற்றா

லிருமைக்கும் பயனினி தளிக்குங்

காதல்கூங் கின்ற பெண்மக வாயி

னிம்மையிற் நிகழ்பயன் சேரும்

பேதைர் தம்மைப் பெற்றன மென்று

பேதுறன் மிகப்பெரும் பிழையே.

சின்னத்தம்பிப் புலவர்

1716 - 1780

இவரது ஊர் யாழ்ப்பாணத்து நல்லூர். தேசவளமை என்னும் யாழ்ப்பாண நியாயப்பிரமாண நூலைப் பரிசோதிக்கும்படி ஒல்லாந்த தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட அறிஞர்களுள் இருவராகிய வில்லவராய முதலியார் இவரகு பெற்றவா ; ஈழத்துத் தலைசிறந்த புலவர்களுள் ஒருவா.

இவரியற்றிய நூல்கள் : மறைசை அந்தாதி, கல்வனை அந்தாதி கரவை வேலன், பறா€ விநாயகர் பள்ளு என்பன.

பறாளை விநாயகர் பள்ளு

பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல்

போற்று மாதுளை மாணிக்க வித்தைப்

பொதிந்த சோதிக் கனிபல தூங்குந்

தாற்று வாழை யிலைசென்று மாகத்

தரணிமே லால வட்ட மசைக்குந்

தோற்று மாசினி முட்புறச் செம்பழஞ்

சுட்ட பொன்னின் சுளைபல தூற்று

மேற்று வாளை கமுகிற் குதித்திடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 1

காடெல் லாங்கரி மான்மதஞ் சேருங்

கடலெல் லாம்வெள் வலம்புரி யூரு

நாடெல் லாங்கதிர்ச் சாலி தழைக்கு

நரம்பெல் லாமிசை யேழை யழைக்கும்

வீடெல் லாம்வள்ளைப் பட்டொலி பூணும்-விண்

மீனல் லாந்தண் டலைத்தலை காணுந்

தோடெல் லாம்பொறி வண்டுபண் பாடிய

சோழ மண்டல நாடெங்க ணாடே. 2

கண்ண கன்ற வரைத்தலைச் செம்மணிக்

காந்தி தூயநந் தாவிளக் கோர்பால்

வண்ண வேய்ங்குழ லூதண்ட ராவின்

மணியி னோசை கறங்குவ தோர்பால்

பண்ணை யோதிமக் கூட்டமு மோர்பால்

பவளக் கொம்பிற்கம் பூர்வது மோர்பா

லெண்ணி னானில மும்புடை யோங்கிய

வீழ மண்டல நாடெங்க ணாடே. 3

மின்னுங் காரும் கரும்புமுத் தீனும்விண்

மீனு மீனு மணிமுத்த மீனு

முன்னுங் கார்மத வேழமுஞ் சேர்கழை

யோங்கல் வேழமு மாரம் பயக்கும்

பன்னுஞ் சீதளப் பங்கய ராசியும்

பாண்டுக் கூனற் பணிபலமுஞ் செங்கார்

துன்னுஞ் சாலிக் குழாமு நிறைந்தொளிர்

சோழ மண்டல நாடெங்க ணாடே. 4

கோரந் தோய்ந்த வரியஞ்ச னத்தின்

குழம்பு தோய்விழிக் கொம்பனை யார்தா

மாரந் தோய்ந்த களபத் கடாசல

மன்ப னார்புயக் கந்தினிற் பூட்ட

வாரந் தோய்சந் தனமணந் தோய்ந்து

வயங்கு மின்னிசைத் தண்டமிழ் தோய்ந்தே

யீரந் தோயு மிளந்தென்றல் வந்தசை

யீழ மண்டல நாடெங்க ணாடே. 5

நீரி லேபுண்ட ரீக மரும்பு

நிழலி லேகரு மேதி யுறங்கும்

வாரி லேவெண் டரள நிலாவும்

வரம்பி லேசெநநெற் பூங்குலை சாயும்

போரி லேநென் மணிக்குவை சேரும்

பொறியி லேகரும் பாடுங் கரும்பின்

றூரி லேகம டங்கண் வளர்ந்திடு

சோழ மண்டல நாடெங்க ணாடே. 6

மஞ்ச ளாவிய மாடங்க டோறும்

மயில்கள் போன்மட வார்கணஞ் சூழு

மஞ்ச ரோருகப் பள்ளியில் வான்சிறை

யன்ன வன்னக் குழாம்விளை யாடுந்

துஞ்சு மேதி சூறாக்களைக் சீறச்

சுறாக்க ளோடிப் பலாக்கனி கீறி

யிஞ்சி வேலியின் மஞ்சலிற் போய்விழு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 7

தண்ட பாணி யிறைஞ்சு பதாம்புயத்

தாணு நாதன் றிகம்பரத் தூயன்

பண்டை நாகணை யானும் விரிஞ்சனும்

பாதஞ் சென்னி யறியாத நம்ப

னண்டர் நாயகற் கற்புத மீதென

வரிக ளேந்திய வாலய வெற்பைத்

துண்ட வான்கழு கென்றும் வலம்வருஞ்

சோழ மண்டல நாடெங்க ணாடே. 8

அருவி யோதை யிழுமெனுங் குன்றி

லடைந்த சாரற் குளிரிபுன மீதி

லுருவு சேர்வுனைப் பூங்கதிர் மேற்கிளி

யோச்ச வேண்டிப் புலிநகத் தாலி

மருவு வண்குறப் பேதையர் கட்செவி

மாசு ணப்பண நோகவண் மீதி

லிருளி லாத மணிவைத் தெறிந்திடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 9

மாலை தோற மிசைவன வண்டுமென்

மாலை நூலிடை யேயுந் துவண்டு

மேலை தோறும் பயில்வன சங்கம்

வியன்க ழகந்தொ றுந்தமிழ் சங்க

மாலை தோறும் பொழிவன சாறுபொன்

னான வீதி யரியரன சாறு

சோலை தோறு மலர்த்தா திறைந்திடுஞ்

சோழ மண்டல நாடெங்க ணாடே. 10

பைப்ப ணிப்பகு வாய்ப்பட்ட திங்களிற்

பாயு மோதக் கடற்கரை தோறு

மிப்பி வாயிலின் முத்த மிலங்கிய

வீ‘ மண்டல நாடெங்க ணாடே. 11

மாரி மேகந் தவழ்மலைச் சாரலின்

மந்தி வைத்த மணிப்பத்ம ராகஞ்

சூரி யோதயம் போல விளங்கிய

சோழ மண்டல நாடெங்க ணாடே. 12

பரப்பு மேகலை மங்கையர் போகம

பயில வேண்டி யிணங்கார் முகத்தை

யிரப்ப தேயன்றி வேறிரப் பில்லாத

வீழ மண்டல நாடெங்க ணாடே. 13

வாம மேகலைப் பாவைர் கோவை

வதனம் போல விளங்கிய விண்ணிற்

சோமன் மேலன்றி யோர்மறு வில்லாத

சோழ மண்டல நாடெங்க ணாடே. 14

வளமை சேர்ந்திடு மூப்பிய லான்முது

மந்தி தாவி மலையிடைப் பாய

விளமை மந்தி யுருவடி வாய்விடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 15

முன்னை நாளிற்பஞ் சானன ரூபன்

முளரி யந்தட மூழ்கிய போதிற்

சொன்ன மேனி விளஙகி யெழுந்திடு

சோழ மண்டல நாடெங்க ணாடே. 16

உரைத்த வானிந்து காந்தச் சிலையிட்

டுருகு நீர்ப்பிர வாகங்க ளோடி

யிரைத்த வேலைப் புலால்வெடி மாற்றிடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 17

பகுத்த வந்தணர் சாலைக டோறும்

பயிலும் வேதத் தொலிபண்ணை மீதிற்

றொகுத்த மள்ளர் குரவையை மாற்றிடு

சோழ மண்டல நாடெங்க ணாடே. 18

பண்ணிற் றோயப் பொருண்முடிப் புக்கட்டிப்

பாடும் பாவலர்க் கீந்திட வென்றே

யெண்ணிப் பொன்முடிப் புகட்டி வைத்திடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 19

செல்லுஞ் சென்முடிக் குந்தளக் கண்ணிரு

சேலைக் போன்ற கடைசியர் செய்க்குச்

சொல்லுஞ் சொன்முடிப் புக்கட்டி வைத்திடுஞ்

சோழ மண்டல நாடெங்க ணாடே. 20

காந்தி சேர்கண்ணி லாதவர்க் குக்கண்ணுங்

காட்சி யுந்தந்து சூர்ப்பகைச் செவ்வே

லேந்தல் சேர்கதி ராபுரி சேர்ந்திடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 21

பொங்கு கூளி பிடித்தவர்க் குக்கூளி

போக்கி யிக்கலி மீதினிற் செவ்வேற்

றுங்க முத்தையன் வீற்றிருக் கும்புரிச்

சோழ மண்டல நாடெங்க ணாடே. 22

கயல்வ ரைந்த துவசன் பணிநவ

கண்டி மன்னன் வரராச சிங்

னியல்பு டன்றிருச் செங்கோ னடாத்திய

வீழ மண்டல நாடெங்க ணாடே. 23

நேரி யன்சரண் புக்க புறாவி

நிறைத னக்கு நிறையிற் புகுந்த

சூரி யன்குடை நீழலிற் றங்கிய

சோழ மண்டல நாடெங்க ணாடே. 24

கான்ற சோதியி னித்திலஞ் சிந்துங்

கரும்பி னிற்குருத் தைக்கதிர்க் கற்றை

யீன்ற சாலிக் குழாஞ்சுமந் தோங்கிடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 25

சாதி நாகிளந தெங்கினிற் சாய்ந்திடு

தண்கு ரும்பையைப் பூகத ராசிக்

சோதி யார்பவ ழக்குழை தாங்கிய

சோழ மண்டல நாடெங்க ணாடே. 26

கற்ற நூலுணர் பண்டிதன் மார்பஞ்ச

காவி யஞ்சட் கலைக்கட் றோய்ந்து

மெற்றை நாளுங்கல் வித்திறம் பார்த்திடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 27

திகந்த மெட்டும் வடகலை தென்கலை

தேர்ந்து தேர்ந்து செழுமலர்க் காவிற்

சுகந்த னக்கயற் பூவை பயிற்றிடு

சோழ மண்டல நாடெங்க ணாடே. 28

ஆட்டு மூசலி னாடுமின் னா‘பொன்

னணிக லத்தின்ம ணிதெறித் தோடி

யேட்டுக் காவிற் குயிற்றுபின் மாற்றிடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 29

வாவி யின்கரைக் கெண்டை குதிக்க

மண்டூகம் பாய்ந்துசெந் தாமரைப் பாயற்

றூவி யன்னத்தி னித்திரை மாற்றிடு

சோழ மண்டல நாடெங்க ணாடே. 30

கோல மாதவி வன்னிம ராமரங்

கோங்கு வேங்கைசெங் குங்குமஞ் சாதி

யேல மார்கதிர்க் கற்றையை மாற்றிடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 31

ஆலை தாகதி பொன்னிறக் கொன்றை

யரும்பு கூவிளம் பாதிரி புன்னைச்

சோலை வானமு கிலைத் தரித்திடு

சோழ மண்டல நாடெங்க ணாடே. 32

கருவ லம்புரிச் செங்கதிர் மாவலி

கங்கை யாறு பெருகிக் கரையி

னிரும ருங்கினு முத்தங் கொழித்திடு

மீழ மண்டல நாடெங்க ணாடே. 33

வள்ளி யோரிற்கொ டைநிறைந் தேநுரை

மண்டி யேவரு காவிரி யாறு

துள்ள வாளை பசும்பொ னிறைத்திடு

சோழ மண்டல நாடெங்க ணாடே. 34

கல்வளையந்தாதி

சம்பந்த மாவினைத் தென்னவற் கீந்தவன் றாங்குமருட்

சம்பந்த மாமுனி பாமாலை சூடி தருபொருண்மா

சம்பந்த மாலம் புனைசூழ் கல்வளைத் தந்திவெம்பா

சம்பந்த மாயையென் பானீக்கி வாழ்வுசம் பாதிப்பனே.

இலங்கை யிராவணன் கண்டதுண் டம்பட வெய்சரம்ப

யிலங்கை யிராமன் கடதாரை சிந்து மிரண்டிருக்கோ

டிலங்கை யிராவதன் றாழ்தல் வளைய னெனின்முத்திவா

யிலங்கை யிராது கடைத்தா டிறப்பிப்ப னேரமபமே. 36

அருந்துதிக் கையமில் கற்பீந்த மேணை யசலவரை

யருந்துதிக் கைக்கு மகளா• பிறந்திடு மன்னைவிட

மருந்துதிக் கைப்புனை கூறைப் பினாகி யருள்கல்வனை

யருந்துதிக் கைக்குன்ற மேயடி யேனுன் னடைக்கலமே

கதிரைக் கடவுள் குறமானை மேவச்செ• கங்கணநா

கதிரைக் கடலொலி போன்மள்ள ரார்த்துக் களைந்தசெந்நெற்

கதிரைக் கடைசியர் போரேற்று கல்வளை யாய்ககனக்

கதிரைக்கடவயிற் றார்ப்பாயென் றால்வருங் கைவலமே.

வரச்சந் திரனெனுஞ் செந்தழற் பந்தம் வழுத்துநற்ற

வரச்சந் திரணத்தின் மாற்றுங் கடாசல மங்குலுலா

வரச்சந் திரதில கம்வளர் கல்வளை மானுயிர்க

வரச்சந் திரவி னடந்தா னுணவென வந்ததுவே. 39

இரும்புண டரவெண்டு கண்மணி மந்திர மெய்தன்பரை

யிரும்புண்ட நீரெனத் தற்சேர்க்க நாதனை யிக்குநெற்ப

யிரும்புண்ட ரீகமுஞ் சூழ்கல் வளையனை யெண்ணிப்பன்னி

இரும்புண்ட மயிற்றென்றிசைக்கோன் பின்னையென் செய்வனே.

சாலிக்கு வாலிக்கு வெங்கணை யேவித் தயங்கியபாஞ்

சாலிக்கு வாலிய தூசருள் கோலமுன் றாங்குபொறை

சாலிக்கு வாலிப மார்க்கண்டர்க் கீந்தவன் றந்தமைந்தன்

சாலிக்கு வாலிக்கு வான்றாவுங் கல்வளைத் தானத்தனே.

மருக்காவி னாறிடக் குங்குலு வாலயம் வாசங்கொள்ள

மருக்காவி பூங்பண்ணை நாறிடுங் கல்வளை வார்கொன்றைத்தா

மருக்காவி யன்ன வனைப்பா டிலர்கவி வாணரெனக

மருக்காவின் பாலுகுத் தானெனப் பாடுவர் மாந்தரையே.

தனக்காக்கை யன்றி வழந்காரைப் பாடித் தளர்பசியே

தனக்‘கக்கை யுண்ணு முடல்வீக் கிடச்சலித் தேன்சிலைவே

டனக்காக்கை போக்கிய நோக்கினன் மைந்தண் காரிணைச்சந்

தனக்காக்கை நீட்டுதென் கல்வளை யன்பர் சகாயத்தனே.

கண்டால முண்ட பெருமா னுதவிய கான்முளைபுன்

கண்டால மாந்தர்க் ககற்றாகு வாகனன் கல்வளையின்

கண்டால நேருங் கரத்தானைக் காணத் தொழப்புகழக்

கண்டாலங் கைத்தலம பெற்றேனற் றேனென் கனதுயரே.

கனகந் தரநிற மால்சாபந் தீர்த்திடுங் காரணவென்

கனகந் தரநெஞ்சிற் றோன்றுபுன் மாலைகக் கொள்வைசெங்கோ

கனகந்த தருமலர் கோவைசெய் நாருங் கவினுமன்றோ

கனகந் தரள மணிமாடக் கல்வளைக் கற்பகமே. 45

கணபதி ஐயர்

1709 - 1784

இவரது ஊர் வட்டுக்கோட்டை. தந்€தார் பெயர் பாலகிருட்டிண ஐயர். இவர் பாடிய செய்யுள் நூல்கள் : வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி, வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளியம்மை பதிகம், பத்திரகாளியம்மை உஞ்சல் முதலியன. வாளமிமன் நாடகம் முதலிய நாடக நூல்களும் இவரது செய்யுட்டிறனைக் காட்டுவன.

வாளபிமன் நாடகம்

வாளமிமன்- கொச்சகத்தரு

தந்தா ளிரண்டு புயங்குலுங்க தாளந் துடை மார்பிலங்க வந்தாய அரக்கா செருக்காய் என வாளின் அருமை யறியாயோ பந்தாய் உந்தன் தலையை வெட்டிப் படிமீ தெறிந்து விளையாட.

வாளபிமன் - தரு

வந்தா யோடா கிட்டி - வாடாமோடா

எந்தன் வல்லப மறியாயோ - மாடாகேடா

வரத்தையும் சிரத்தையும் கரத்தையும் உரத்தையும்

அடிக்கிறேன் நொடிக்கு ளிங்கே.

குடோ - கொச்.

ஒட்டிப் பகட்டிப் பரிசையெடுத்

துடைவா ளேந்தி ஓங்கிநின்று

தட்டிச் சம்மடி பொருவார்போல்

சமுட்ச் சிமுட்டி முழித்துநின்று

வெட்டிக் கிடையே கிட்டிவந்து

வீரம் பேசி உறுக்கிநின்றாய். 2

கடோ - தரு

துட்டா மட்டடியடா பயலே நீ

கெட்டா கெட்டியடா

நானும் சிங்கக் குட்டியடா

போர்துடை தட்டி யோட்டிடுவேன. 4

அபிமன் - கொச்சகம

உனக்குப் பிறகே வந்துநின்று

ஒதுங்கி முழிகள் பிதுங்குமவன்

தனக்குத் துணையாய் உனைக்கூட்டிச்

சாம இரவில் வந்தானோ

முன்வந்த அரக்கனுக்குச செய்ததுபோல்

கணக்கு முன்னுடைய கறுத்தச்

சடலத்தை அறுத் றுற்று. 5

தரு

தின்னத் தின்ன நரிக்கினிக் கொடுத்திடுவேன்

உயி‘த்தோ சாசனை புவிக்கிடை விடுத்திடுவேன்

மனச்செருக்கொடு முறுக்கொடு நெரித்திடும் செருக்காய்

நீ சீக்கிரம் பொற வருவாய். 6

கடோ - கொச்சகம்

காயும் நெருப்புப் பொறுக்கிணையாய்க்

கண்ணுஞ் சிவந்து மனங்கறுத்து

வாயும் சிலுத்துக் கழுத்தொடுங்கி

வாலும் முறுக்கி மதத்தெழுந்து

பாயும் புள்ளிப் புலிக்கெதிலே

பள்ள வெள்ளப் பசும்போலே. 7

தரு

நீ அடித்திடவோ - உனக்கென்ன

பேய் பிடித்ததடா

நரியொடு நாய்கடித் திழுக்க

அடித்தி ழுத்தே யெறிந்திடுவேன். 8

வாளபிமன் கொச்.

களித்து நெளித்து நிறுமாந்து

கரததில் தண்டா யுதம்சுமந்து

நெளித்து நெளித்து நிறுமாந்து

நிறுமூ டாஎன் னுரைகேளாய்

துணித்துத் துணித்துக கதறிவிழத்

துணித்துன் னைஎன் மணிவாளால். 9

வாளபிமன் தரு

இழுத்திடுங் கழுகுகளுக்கு எறிந்திடுவேன் - இந்த

இரவினில் வனம்விட்டுப் பிரிந்திடுவேன்

படை யெடடா தடைதனைவிடு கடுகிடுத்தினி

எதிர்போர் வருவாய் 10

கடோ - கொச்.

பண்டத் திடுநா வினில்விசையம

படித்து நறவம் குடித்துலவும்

வண்டுஞ் சுருமாம் வாசமுறு

மலர்க்கா விடையே இலக்காகப்

பெண்டுங் சுகிர்த காமுகர்போல்

பித்தா வந்து எதிர்த்தாயே. 11

தரு

கண்டு ஆற்றிடுவாய் - எனதுகைத்

தண்டு பார்த்திடுவாய்

மதமிகக் கொண்டு சேர்த்திடுவேன் - அடிமுடி

மண்டை பெயர்த்திடுவேன். 12

அபிமன் - கொச்.

கடுத்து வெடுவெ டுத்துப்போர்

செய்ய வருவாய்

எடுத்தென் கைவாளால் உன்னிருகரமும்

ஒருசிரமோடெறியப்போறேன்

உன்உயிர் வேண்டுமென்றால் அங்கேகுதித்து

இங்கே நில்லா தகலுவாயே 13

கடோ-தரு

பிடிக்குள் நடுங்கு வாயே

வாளினால் நொருக்கு வாயோ-பெரிய பழிகாரா

நீ அரிய வழியில் வந்து களறுகிறாய்

மனம் அலறுகிறா யடா சீக்கிரம் போய்வருவாய்

அபிமன் வசனம்

அகோ வாரும் பிள்ளாய ! ஊர் பேர் உனக்குச் செல்ல வேண்டிய தென்ன ? போர்பண்ண வல்லப மூண்டானால் அதிக சீக்கிரம் வாரும் பிள்ளாய்.

கடோ-கொச்சகம்

வாடப் பதித்து முகம்கருதி

மனதிற் கனத்த கவலைகொண்டு

தேடக் கிடையாச் சரக்கிதொன்றைத்

திருடப் புறப்பட் டவர்போல

ஓடத் தொடங்கி முழிக்கின்றாய்

ஓங்கும் பூங்கா வனங்கடந்தாலும். 15

தரு

காடு வல்லை யோடா - போர்

மனங் கூடதில்லை யடா !

உனக்கெந்த நாடு சொல்லிடுவாய்-பிறகு

நாம் கூடியே போகலாம். 16

கடோ-கலி -நெடில்

மதுமலர் சொரிவள மதிலித விதமொடு

வருமத நிகர் குமரர்

வரைபொரு வியகர மலிமணி வாள்கொடு

மதமொடு குலவுகி றாய்

கதுமென நொடியினில் ஒருஅடி யுடன்உடல்

கழுகுக ளுக்கிரை யிடுவேன்

கருதிய தரியலர் புவியிடை உயிர்கொடு

கனமதில் வாழுவ ரோ

சதுர்வித கேசகர் துரகத அரசர்கள்

தனையொரு பொரு ளெனவே

தரணியி னிடைதனி லிரவினில் வந்துதாக்

கிறசெய மல்ல வோ

இதுபொழு துன்னூர் பெயரொடு நீயிங்கோ

விதிசெய வழிமு றைகள்

இயல்மு றைப்படி யாயுரைத் திடுயா

னறிதற் கினியே.

கூழங்கைத்தம்பிரான்

1699 - 1795

இவர் தமிழ்நாட்டிற் காஞ்சிபுரத்திற் பிறந்தவர் தஞ்சை திவத்தூர்மடத் தம்பிரான்மாரிடம் இலக்கிய இலக்கண சமய பாடங்களைப் பயின்று பின்பு அம் மடத்தினராலேயே 'தம்பிரான்' என்னும் பட்டம் வழங்கப்பட்டார். அழலிற் காய்ந்த இரும்பைத் தூக்கியபோது வலக்கை வெந்து கூழை ஆயினமையின் கூழங்கைத்தம்பிரான் என அழைக்கப்பட்டார். பின்பு யாழ்ப்பாணம் வந்து குடியேறி இலக்கியப்பணி யாற்றினார்.

இவரியற்றிய செய்யுள் நூல்கள் : யோசேப்பு, புராணம், நல்லைக் கலிவெண்பா, கூழங்கைர் வண்ணம், சித்திவிநாயகர் திருவிரட்டைமணிமாலை என்பன. இவற்றுள் யோசேப்பு புராணம் 21 காண்டங்களையும் 1023 விருத்தங்களையும் கொண்டுள்ளது.

எம்மதத்தையுஞ் சமமெனக் கருதி இவர் யாழ்ப்பாணம் ஆங்கிலேயர் கைப்பட 1795ஆம் ஆண்டில் உயிர் நீத்தார்.

யோசேப்பு புராணம்

ஆற்றுப்படலம்

பயம்புவிக் கருள்பயோ தரமியா வுன்வெண் டி€ராற்

பயங்கொள் வேலையிற் பரந்துவா ரிதியிடை படிந்து

பயங்க ளானவை பருதியப் பரவையின் வடிவாய்ப்

பயங்கொள் கோரகை கொண்டிடப் பரந்ததம் பரமேல். 1

பரவு மால்ககு பங்களோ டெட்டொடு வானைப

புரவு வேந்தராள் புவியினைப் போர்த்தென விருண்டு

விரவு கின்றது விண்ணெனும் பந்தரின் கண்ணே

யிரவு நேர்கரும் படாத்தினால் விதானஞ்செய் தென்ன. 2

திரவு லாங்கலைப் பிலிப்புமே லோன்குருச் சிந்தை

மருவு ஞானநல் லொளியென மின்னிமற் றென்வாய்ச்

சுருதி யாமெனத் தொனித்தின்னோ னுயிர்க்கரு டொலைமாக்

கருணை யாமெனப் பொழிந்தத காரிருட் புயலே. 3

தேவ தேவரும் பராபரன் சீரணி சிறந்த

தாவி லாத்திரு நாமமே தயங்குறுஞ் சுத்த

மேவி டுஞ்சியோன் வரைக்குமஞ் சனம்புரி விதம்போ

லோவி லாமழை பெத்ன வுலகுளோ ருவப்ப. 4

ஈறம்பி னுச்சியிற் பெய்திடும் புனலெல்லா மிழிந்தே

யெறும்பு சீயமபுல் லிருங்குடா வடியெலா மீர்த்து

நறும்ப ணைத்தர ளங்களைக் கொழித்துட னடந்து

வறும்பு னத்திடை யுலாது கடல்புரை வாலி. 5

சித்திவிநாயகர் திருவிரட்டைமணிமாலை

முரட்டை யடக்குமணி முச்சரட்டிற் கோத்தாங்

கிரட்டை மணிமாலை யென்னூற்-சரட்டேற்றக

குக்குட வன்பனைமாக் கூழ்களிப னாட்டுநல்லைக்

கைக்குட வன்பனைமாக் காப்பு.

தனிப்பாடல்

நதியரவ மதியிதழி புரிசடை யவிழ்ந்துநட

நண்ணுமா காச லிங்கம்

நால்வருக் குக்கலா னிழலினல் லுபதேசம்

நவிலுற்ற மவுன லிங்கம்

நிதிபதித னன்புடைத் தோழனா யீசான

நிலைநின்ற வேட லிங்கம்

நிவாதமுறை யிருவாக் கழற்கம்ப வடிவாகி

நின்றெழுஞ் சோதி லிங்கம்

துதிதுதிக் கையானை யனபொடும் போற்றிடுஞ்

சுயம்பான வப்பு லிங்கம்

துய்யவுணர் வோரிதய கமலா லயத்திலெழு

சுடற்போற் கொழுந்து லிங்கம்

மதிதவழு மதிலோடு கோபுரந் திகழ்வுறும்

வண்ணையெல் லையினி றுத்தும்

மாதங்க புரிதையல் பாகமிசை மீதமரும்

வைத்தீச மாலிங்கமே.

அச்சுவேலி நமச்சிவாயப் புலவர்

1749 -

இவரது ஊர் அச்சுவேலி. இவர் கணபதிப்பிள்ளை செட்டியர் என்பரின் மகன். பாடும் வன்மைமிக்க இவர் பாடிய தனிச்செய்யுட்களன்றி நூல்களொன்றுங் கிடைத்தில.

வரணி தல்வளை விநாயகர் வெண்பா

நல்வனமார் புன்னை நறுங்கொன்றை யத்திமுதற்

பல்வளனும் பந்தர்போற் பாங்குசூழ் - தல்வளையில

அத்திமுக வத்திமத வத்திநிற நித்தசுத

சித்திமுத்தி தந்துநமைத் தேற்று.

இணுவைச் சின்னத்தம்பிப் புலவர்

1760

இவர் யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரிலே சிதம்பரநாதர் என்பரின் புதல்வராக பிறந்தார். 'கதிர்காம சேகர மானாமுதலியர்' என்பத இவரின் பட்டப்பெயர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத் திறுதியில் இவர் வாழ்ந்தார்.

இவரியற்றிய செய்யுளிலக்கியங்கள் : சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், பஞ்சவர்ணத்தூது என்பன. நொண்டி நாடகம், கோவலன் நாடகம், அணிருத்த நாடகம் முதலிய நாடக நூல்களிலும் இவரது செய்யுட்டிறனைக் காணலாம்.

இணுவைச் சிவகாமிசுத்ரியம்மை பதிகம்

தரவு கொச்சகம்

பெற்றவ­ யானுனது பிள்ளையுல கோரறிய

அற்றமிலாச் செல்வ மருளிவளர்த் தன்புந்தாய்

இற்றைவரை யுந்தனியே யானவருந்த வெங்கொளித்தாய்

சிற்றிடைமின் னன்னை சிவகாம சுந்தரியே.

பஞ்சவர்ணத்தூது

விநாயகர் துதி

திஙகண்மக நங்கையுமை திருத்தாட் கன்பு

சேர்ந்தநதி குலக்காலிங் கேந்த்ரன் சேயாந்

துங்கமிகு கயிலா நாதன் சீர்த்தி

துலங்கு செஞ்சொற் பஞ்சவன்னத் தூதுபாட

வெங்கயசே கரனையொரு கோட்டாற் கீன்ற

விண்ணவர்சே கரனைமலை வேந்தன் மாது

பங்கில்வைத்த சந்திரசே கரன்றோ னீன்ற

பரராச சேகரனைப் பணிகு வோமே.

முத்துக்குமாரார்

- 1779

இவரது ஊர் வட்டுக்கோட்டை. இவர் சேனாதிராய முதலியாரின் ஆசிரியர். கஞ்சன் காவியம், வலைவீசு புராணம் என்பன இவரியற்றிய நூல்கள்.

காஞ்சல் காவியம்

வெயிலே றிரத்ன மகுடம் புனைத்து

வியன்மிக்க சென்னி யழகார்

மயிலேறி யன்ப ரிதயத் துலாவி

வருபத்ம பாத மறவேன்

குயிலேறு போகி தருமாதி னோடு

குறமாது தோயும் புத்

தயிலேறு செங்கை முருகா முகுந்தன்

மருகா வரன்பு தல்வனே.

பிராஞ்சிகுப்பிள்ளை

- 1802

இவர் மயிலிட்டியைச் சார்ந்த வயாவிளான் என்னும் ஊரினர் ; கத்தோலிக்க சமயத்தவர். இவர் பாடிய நூல்கள் : மூவிராசர் வாசகப்பா, பிள்ளைக்கவி, தசவாக்கிய விளக்கப் பதிகம், திருவாசகம், கீர்த்தனத்திரட்டு, பச்சாத்தாபப் பதிகம், இரட்சகப் பதிகம் என்பன.

பிள்ளைககவி

குபலயத் தவரன்பு கொண்டாட வண்டொடு

குளிர்மலர்ப் பொழில்க ளாட

கோலமயி லாடவய னீடுகுயி டாடநெற்

குலைகலக லென்றா டிடக்

கவலையற் றிடுமாயர் களியாட விளவாழை

களினீடு தளிர்க ளாடக்

காராடு மொய்குழலி னாராட வழகனைய

கழிநீடு தளிர்க ளாடத்

தவில்முரச டித்தும்பர் சபையாட நபகோடி

சனமாட விளமை கொணிகலத்

தண்ணி‘ழ்ப ரந்தாட விண்மணியொ டுங்கிரண

தாரகை தயங்கி யாடத்

திவலையமு தைப்பருகு தெய்வீக பாலமே

செங்கீரை யாடி யருளே

திருமருவு பரமகனி மரியதவு பாலனே

செங்கீரை யாடி யருளே.

சின்னக்குட்டிப் புலவர்

- 1815

இவரது ஊர் மாவிட்டபுரம். இவல்‘ தெல்லிப்பழையிலே செல்வந்தராய் விளங்கிய கனகநாயக முதலியாரின் இல்லத்துப் புலவராய் விளங்கியர். அவர்மீது ஒரு பள்ளுப் பிரபந்த பாடி 1789இல் வெளியிட்டார். அதுவே தண்டிகைக் கனகராயன் பள்ளு என அழைக்கப்படுவது.

தண்டிகைக் கனகராயன் பள்ளு

வடகாரை தென்காரை நாட்டுச் சிறப்பு

விண்டு ளாவிய தண்டலை காட்டும்

வெயில வன்பொன் னெயில்விடு பாடும்

வண்டு சோலைதே னுண்டிசை பாடும்

வடகா ரைவள நாடெங்கள் நாடே. 1

பொங்க ரிடைப் பைங்குயின் மேவுமென்

பூவை மாடப் புறாயிவை கூவும்

திங்கள் மாடத் தயங்கி யுலாவிடுந்

தென்கா ரைவள நாடெங்கள் நாடே. 2

காளை வெருண்ட கறுமி வயல்தொறுங்

கலந்த மள்ள ரொலி• னிற்றெறும்

வாளை பூகத்தின் பாளையைக் கீறும்

வடகா ரைவள நாடெங்கள் நாடே. 3

வன்ன மாங்கனி யூற்றிய வூற்றின்

வருக்கை வாழை பெருக்கிய சேற்றின்

கன்ன லென்னவே செந்நெல் வளர்ந்தோங்குந்

தென்கா ரைவள நாடெங்கள் நாடே. 4

பொன்ற வழ்ந்திடு வீதித டோறும்

புதிய சந்துந் துதிசெய்து மீளும்

மன்ற லும்மிளத் தென்றலும் வீசும்

வடகா ரைவள நாடெங்கள் நாடே. 5

காக்கு மள்ளர்க டாக்கும் வெயிலிற்

கடைக டந்தக டைச்சிய ரெல்லாந்

தேக்கு தேனுலை வார்க்கும் வளஞ்செறி

தென்வா ரைவள நாடெங்கள் நாடே. 6

கஞ்ச முந்தித ழஞ்சமுந் துய்யசெங்

காவி யுங்கமழ் வாவியும் மேவும்

மஞ்ச ளும்வள ரிஞ்சியுஞ் சூழும்

வடகா ரைவள நாடெங்கள் நாடே. 7

ஏற்றைப் பூட்டியே மள்ள ருரப்பிட

எழுந்த வாளை வளைந்து கொழுந்தண்

சேற்றிற் பாவியே நாற்றிற் குதித்திடுந்

தென்கா ரைவள நாடெங்கள் நாடே. 8

தேனைத் தாங்கிய வாம்பலிற் றேம்பொதி

செய்ய துய்ய செழுங்கம லத்திரன்

வானத் தோங்குவண் டாடனத் துடன்செறி

வடகா ரைவள நாடெங்கள் நாடே. 9

மருவு மஞ்செழுத் தும்வளர் சைவமும்

மறையும் நீதியும் வாய்மையு மோங்கிட

திருவெண் ­றம் அறநெறி யும்வளர்

தென்கா ரைவள நாடெங்கள் நாடே. 10

பலவிதச் செந்நெற் போரை மிதித்துப்

பகரும் பற்பல நற்றிசை தோறும்

மலைக ளென்னப் பொலியைக் குவிக்கும்

வடகா ரைவள நாடெங்கள் நாடே. 11

ஏரை மள்ளர்கள் பூட்டி யுரப்ப

எழுந்த வாளைக ளெங்குங் குதிப்பத்

தேரை பாயவெண் ணாரைகள் பாய்ந்திடுந்

தென்கா ரைவள நாடெங்கள் நாடே. 12

காரைநாட்டு வேளாளர் வளம்

மருவு கங்கை கலாதிபர் பூவினில்

மாறி லாறு தொழிலது செய்திடத்

திருவு மாநெறி யுந்தழைத் தோங்கச்

செகத்தின் மீது மகத்துவ மாகி 13

கங்குன் மீது வருமரற் கன்பொடு

கன்ன னேரும் முளையமு தீந்து

துங்க மேவிய பாவலர் தங்கட்குச்

சூலி வெந்நிற் சுடுமன்ன மிட்டு 14

கதிர்த ரும்பணி மாமணி பாவலர்

கையின் மீது கருத்துட னீந்து

பொதித ருங்கலை கீறிக் காலினிற்

பொருந்து புண்ணினை வேந்தர்முன் காட்டி.

மழை பெய்தல்

இலங்கொளி மருவிப் பலதிசை யினுமொய்த்

தெழிறிதழ் ககனத் தெழுமுகினீள்

கலைமக ளுருவத் துலவிவெள் வளைநற்

கயலுகள் தமரக் கடலிடைநீர். 16

இந்திர சிலையிட் டண்டமு மெதிர்வுற்

றெங்கணு மிருளிட் டடங்கவே

அந்தர மிசையிற் செங்கதிர் கலைசுற்

றம்புவி மறைவுற் றொடுங்கவே. 17

படநிரை யாவத் துடனுழை யுழுவைப்

பாழ்நிரை சிதறிப பதறவே

தடமழை விகடக் கடகரி தியச்

சலசல சலெனப் பொழியவே. 18

மருக்கோட் டுநிரை சரித்து முறைமுறை

மறித்து மிகுபனை முறித்துநீள்

தருக்கு சுளைவிரி வருக்கை யுறுகளி

தரித்து விழவிழ மிதக்கவே. 19

தேங்கு புனலிடை வீங்கு மதகரி

சேர்ந்து பொலிவொடு தேம்பவே

தாங்கு முசுவுட னெகின முதலிய

சாய்ந்து பவன்மிசை தூங்கவே 20

துங்கக் குறைவர்க டங்கிச் சிலையொடு

துன்புற் றிடையிடை தயங்கவே

செங்கட் புறவொடு கம்புட் பறவைக

டங்கிப் புனலிடை தியங்கவே. 21

கன்னலின் முத்துங் குடவளை முத்துங்

கமுகினில் முத்துங் கலந்துநீள்

செந்நெலின் முத்துங் கொணர்ந்து திசைதிசை

செறிந்து மெய்ப்புவி நிறைந்ததே. 22

காளை

இட்ட மாகவே மால்கொண்டு போனதோர்

ஏழு காளை யிதுவுமர்ல லாமல்

அட்டதிக்கி லொருபுறந் தன்னிலோர்

ஆட்டு டன்மாட்டைக் கூட்டியே விட்டேன்

கட்டுப் பண்ணையி லேபல மாடுண்டு

காட்டு வேனரன் கட்டிடு மாட்டைக்

குட்டிப் பாம்பும்பு லியுங்கண் டார்களாங்

கேட்டுப் பின்பு கிளத்துவ ணான்டே. 23

மண்வெட்டி

சைய நேரு மணிப்புய வேள்தமிழ்த்

தண்டிகைக் கனக நாயகன நாட்டினிற்

செய்யின் மேவுவ ரம்புவாய்க் கால்வெட்டித்

தேய்ந்து போனதோ ராயிரங் கோடியே

மெய்ய தாகவே மேடு திருத்திட

வெட்டித் தேய்ந்தமண் வெட்டிகள் கோடியாம்

நையு மென்குடி லின்மே விக்கிடந்து

நலிந்த மண்வெட்டி காட்டுவ னாண்டே. 24

மாதகல் மயில்வாகனப் புலவர்

1779 - 1816

இவரது ஊர் மாதகல். இவர் சிற்றம்பலப் புலவரது சசோதரியி• புதல்வர் ; வையா என்னும் பெயர் பெற்ற கல்விமானின் மரபில் உதித்தவர் ; கூழங்கைத் தம்பிரானிடங் கல்வி கற்றவர். யாழ்ப்பாணவைபவம் என்னும் வசனநூலை இயற்றியதன்மூலம் ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளார். இவரியற்றிய செய்யுணூல் புலியூர் யமகவந்தாதி. ஞானாலங்காரரூப நாடகம் காசியாத்திரை விளக்கம் என்னும் நூல்களும் இவரது செய்யுட்டிறமையை யுணர்ந்துவன. பின்வருஞ் செய்யுள் இவர் பெருமையைக் கூறுகின்றது :

நெய்யர்ர்ந்த வாட்கைப் பரராச சேகரன் பேர்நிறுவி

மெய்யாக நலல கலைத்தமிழ் நூல்கள் விரித்து€ரைத்த

வையாவின் கோத்திரத் தாமயில் வாகனங்கள் மாதவங்கள்

பொய்யாத வாய்மைப் புலியூரந் தாதி புகன்றனனே.

புலியூர் யமக அந்தாதி

பாயசங் கண்டு பரியாக்கி யத்தபத் தர்க்கினிய

பாயசங் கண்டு நிகர்புலி யூர பகையைவெல்லு

பாயசங் கண்டு கரத்தாற் கரிய பழவினைக்குப்

பாயசங் கண்டொ டராதெனை யாள்க பராபரமே. 1

கரமஞ் சரிதரு வென்னற்க நீதரைக் கட்டுகட்சீ

கரமஞ் சரிதரு மம்புலியூ ரற்கிய மன்கடிந

கரமஞ் சரிதரு மாயைநெஞ் சேநங் கருவினையக்

கரமஞ் சரிதரு மென்றே மொழிக கனவிலுமே. 2

மணக்குஞ் சரதத் திருமாற் கரியவர் வண்புலியூர்

மணக்குஞ் சரர்நம் மறத்தனர் சேவல் வரும்பெடையை

மணக்குஞ் சரந்தைபெடையாற்றப் புள்ளுறைவான்கழியே

மணக்குஞ் சரமெய்து வேளெதிர்ந் தானெங்கள் வாழ்குவமே. 3

வானவன் பாலன்று பாணன்கை யோலை வரைந்தனுப்பும்

வானவன் பாலன்ன பூதயி னான்மயி லோன்பயில்க

வானவன் பாலன் றலைக்கறி யுண்டவன் வண்பதஞ்சேர்

வானவன் பாலனம் வாழ்புலி யூரை வணங்குதுமே. 4

கூடம் புடைத்த வயிற்கண்ணி கேற்வன் குளிர்புலியூர்க்

கூடம் புடைத்த மலைமுலை மாதின குறுமுயலின்

கூடம் புடைத்த முகங்கண் ணெனவுண்டு கொல்வண்டுகாள்

கூடம் புடைத்தட வாரிச நீலங் கொளக்கண்டதே. 5

தனையா தரிக்கும் பிரமத்தை யோதெனச் சண்முகநா

தனையா தரிக்கும் புகழ்ப்புலி யூரனைத் தாணுவைநித்

தனையா தரிக்கும்பர் தாருவென் றோர்சிலர் சார்பவப்பந்

தனையா தரிக்குமந் தோவிருப் பாரித் தரணியிலே. 6

பாதவத் தைக்குறித் தேழெய்த கேழன்முன் பார்க்கரிய

பாதவத் தைக்குமெய்ப் பங்களித் தோய்புலி யூர்ப்பதியப்

பாதவத் தைக்குறு கேனுயிர் போமப் பகலிடைத்தப்

பாதவத் தைக்குத வுற்றிடு வாய்பரிந் தஞ்சலென்றெ. 7

இடந்தால மாவுறை யன்றிலும் பேடு மெழிற்சத்திமார்

பிடந்தாலம் வைத்திடு மூவரும் போன்மின்னு மேந்தலுமண்

ணிடந்தாலம் வாழரி யேற்றோ னுறையிணர் மேய்ந்திகன்ம

கிடந்தால மன்னு மியற்புலி யூர்நகர்க் கேகினரே. 8

காந்தத்தில் வீழு மிரும்பினைப் போறேகனற் கண்ணுதலிற்

காந்தத் திலக நுதலாண் மருங்குறை கத்தனையே

காந்தத்தில் வீழிற் கவின்புலி யூரன் கமலதங்

காந்தத்தில் வந்த களிவண்டிற் றோன்றுங் கருத்துறவே. 9

பாடலங் கந்தம் பயில்சடை யார்பது மத்துமள்ளர்

பாடலங் கந்தத் துழும்புலி யூரர்செம் பங்கியிரு

பாடலங் கந்தகற் செற்றா ரெனவொன்று பாடுகிலீர்

பாடலங் கந்தமை யாதினுக் கோதுவீர் பாவலரே. 10

---------------------------------------------------

5. ஆங்கிலேயர் காலம்

1796 - 1947

அரசியல் நிலை:

ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடமிருந்து யாழ்ப்பாணம், மன்னார், திருக்கோணமலை, மட்டக்களப்பு முதலிய கடறகரைப பட்டினங்களை 1795இற் கைப்பற்றி 152 ஆண்டுகா• ஆண்டுவந்தனர். 1815இலிருந்து கண்டியிராச்சியமும் ஆங்கிலேயர் வசமாயிற்று. பல நூற்றான்டுகளாகத் தணித்தனி யிராச்சிங்காயிருந்த ஈழத்தப் பிரதேசங்கள் ஆங்கிலேயராலேலே ஓரிராச்சியமாக ஆளப்பட்டன.

ஆங்கிலேர் ஈழத்தையாண்ட காலத்திலே நாட்டிற் சமாதானம் நிலவிற்றெனலாம். நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்யும்பொருட்டு அவர் தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பயிர்ச் செய்கைகளைப் பெருநிலப் பரப்பி லுண்டாக்கினர் ; வியாபார வசதிகள் பெருகின ; நாடெங்கும் புகையிரத, தெரு வீதிகள் அமைக்கப்பட்டன ; உத்தியோக வாய்ப்புக்களும் பெருகின ; செம்மைசா லாட்சியின் நிருவாகக் கடமையையாற்ற நாட்டுமக்கள் தேவைப்பட்டனர் ; ஆங்கிலப் பாடசாலைகள் பெரிய நகரங்களெங்கும திறக்கப்பட்டன ; கிறித்தவமத நல்லெண்ணக் குழுவினர் மேலை நாடுகளிலிருந்து இங்கு வந்து தம மதத்தைப் பரப்புவதற்கேற்ற வாய்ப்புக்களுங் கிடைத்தன. ஆட்சியாளரின் தூண்டுதலின்றியே மக்களிற் சிலர் தம் பொருளாதார நிலையை விருத்திசெய்யும் நோக்கமாக மதமாற்றம் பெற்றனர். இதனாற் றேசியவுணர்வு பெருகுவதற்குத் தடைகள் பல ஏற்படலாயின. ஆயினும் ஈழம் சுதந்திரநாடாக மாறுவதற்கு ஆங்கிலேயர் கடைப்பிடித்த அரசியற் சீர்திருத்தக் கொள்கைகள் பெரிதும் உதவினவெனலாம்.

இலக்கியப்பண்பு :

ஆங்கிலேயரது ஆட்சிகாலத்தில் ஈழத்திலே நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப் புலவர்கள் சிறந்த செய்யுளிலக்கியங்களைப் புனைந்தனர். இவற்றுட் பல அச்சாகியுள்ளன. ஆயினும் நூல்களின் தரத்தைப்பற்றி ஓரிரு நூற்றாண்டுகளின் பின்னரே கூறல் முடியும்.

யாழ்ப்பாண, திருக்கோணமலை மாவட்டங்களிற் போல் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஈழத்துக்குப் பெருமையீட்டிய தமிழ்ப் புலவர்கள் தோன்றியது ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலாகும். இவர்களுள் வித்துவான் பூபாலபிள்ளையையும் சுவாமி விபுலாந்தரையுஞ் சிறப்பாகக் குறிப்பிடலாம். சைவ, கிறித்தவ இலக்கியங்களன்றி இசிலாமிய இலக்கியங்களும் பெருமளவிற்றோன்ற வாரம்பித்த காலம் ஆங்கிலேயரது ஆட்சிகாலமாகும். அக்காலத்திய இசிலாமிப் புலவர்களுள் அருள்வாக்கியர் அப்துல்காதிறுப் புலவர், அசனாலெப்பைப் புலவர், சுலைமான்லெப்பைப் புலவர் ஆகிய மூவரையுஞ் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்தி லெழுந்த செய்யுளிலக்கியங்களுட் பெரும்பாலான மதச்சார்பு பற்றியவை. சைவசமயத்தின் உட்பொருள்கள் துலங்கத் துலங்கப் பாடிய பாடல்கள் பல ஈழத்தமிழிலக்கியத்தை அழழு செய்து நிற்கின்றன. தென்கதிரை, நல்லை, மாவை, நயினை, கோணை முதலிய தலங்களில் வீற்றிருக்குங் கடவுளர்மீது அந்தாதி, வெண்பா, ஊஞ்சல், அகவல், மான்மியம் முதலிய பிரபந்தங்கள் பல எழுந்தன. இவற்றுள், அந்தாதி, ஊஞ்சல் ஆகிய இருவகைப் பிரபந்தங்கள் ஈழநாட்டுப் புலவர்களாற் பெரிதும் விரும்பப்பட்டன. ஈழத்திலே தமிழ் மக்கள் வாழும் இடங்களிற் கோயில்களில்லாத ஊர்களில்லை ; பாடல்பெறாத கோயில்களு மில்லையெனலாம். ஈழத்திலே சைவம் தூய்மையுடன் வளர்வதற்குக் காரணமாயமைந்தவை இப் பிரபந்தங்ளென்பது கூறாமலே விளங்கும்.

ஈலத்திலே சைவசமய வளர்ச்சியின் நிமித்தம் நூற்றுக் கணக்கான பத்தியிலக்கிங்களைப் பொழிந்த புலமை மேகங்கள் தோன்றுவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கியவர் நல்லைநகர் ஆறுமுகநாவலரெனலாம். அவர் தோற்றுவித்த புலவர்பரம்பரை இன்றும் சுடர்விட்டெரிந்து கொண்டிருக்கிறது. ஆறுமுகநாவலரின் மாணவ சூழலுளகப்படாத ஈழத்துத் தமிழ்ப்புலவர் சிலரினுஞ் சிலரே. இக் காரணத்தால் ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் நாவலர்பரம்பரையினர் புனைந்த செய்யுளிலக்கியங்களெல்லாம் சைவசமயச் சா‘புபற்றி அமைந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களுட் சொல்லலங்காரக் கவிதைகள் புனைவதிற் புகழ் பெற்றவர் க.மயில் வாகனப் புலவர் (1895 - 1918) ஆவர். மாலைமாற்று,கோமுத்திரி, காகபாத பந்தம்நான்காரச் சக்கர பந்தம், நாகபாச பந்தம், இரட்டைநாக பந்தம், வேலாயுதபந்தம் முதலிய செய்யுள் வகைகள் பலவற்றை அவர் சிறப்பாகப் பாடியுள்ளர். சிலேடை பாடுவதிற் புகழ் பெற்றவர் முருகேசபண்டிதராவர். எண்ணுக் கணக்கிற் கூடிய செய்யுள்களை யாத்தோருள் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், வயாவிளான் ஆசுகவி வேலுப்பிள்ளை முதலியோ€ரைக் சிறப்பாகக் குறிப்பிடலாம். ஆங்கிலப் புலவர்களின் பாடல்களைத் தமிழாக்கஞ் செய்து தமிழ் இலக்கியத்தை வளம்படுத்தியோருட் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் சுவாமி விபுலாநந்தர் ஆவர். ஆங்கிலப் புலவர்களாகிய செகசிற்பியார், தெனிசன், மில்றன், கீட்சு என்போர் பாடிய சிறந்த பாடல்களை அவர் அழகாகத் தமிழிற்றந்துள்ளார்.

ஆங்கிலேயரது ஆட்சிகாலப் புலவர்கள் கையாண்ட தமிழ்நடை செந்தமிழாகும். யாழ்ப்பாணத் தமிழ் இனிமையுந் தூய்மையுமுடைய தென்பதை உலகுக்குக் காட்டி நிற்பன இவரியற்றிய பிரபந்தங்கள். தமிழிலக்ககண நூலோர் வகுத்த நுழைவாயிலினூடேயே வடமொழிச் சொற்கள் தமிழிற் புகுந்தன வென்பதை இவ்விலக்கியங்கள் காட்டிநிற்கின்றன. நாடக விலக்கியங்களோ அங்னமின்றிப் பேச்சுமொழி பெரிதும் விரவப் பெற்றுள்ளன. இந் நாடகங்கள் இசைச் செய்யுளிற் பாடப்பட்டுள்ளமையின் அவற்றினின்றும் எடுத்துக்காட்டுக்கள் இவ்வியலிற்றரப்படுகின்றன.

சேனாதிராச முதலியார்

1750 - 1840

இவர் தென்கோவையைச் சார்ந்த இருபாலை என்னும் ஊரில் வாழ்ந்த நெல்லைநாதமுதலியாரின் புதல்வர் ; மாதகற் சிற்றம்பலப் புலவரிடமிரந்தும், கூழங்கைத் தம்பிரானிடத்தும் கல்வி பயின்றவர் என்ப. போர்த்துக்கேயம், ஆங்கிலம் முதலிய மொழிகளிலே தேர்ச்சிபெற்ற இவர் நியாயதுரந்தரராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் அரசாங்க உத்தியோகம் வகித்தவர். சிறந்த தமிழ்ப் புலமை படைத்த புலவர் திலகமாய் விளங்கிய இவரிடங் கல்வி கற்றோர்களுள் நல்லூர் சரவணமுத்துப் புலவர், நீர்வேலி பீதாம்பரப் புலவர், ஆறுமுகநாவலர் முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்.

இவரியற்றிய நூல்கள் : நல்லைவெண்பா, நல்லையந்தாதி, நல்லைக்குறவஞ்சி, நீராவிக் கலிவெண்பா முதலியன.

நல்லைக் குறவஞ்சி

திருவாரு நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்

இருவாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை

இருவாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்

தருவாரோ சட்டிகுடம் சாறுவைக்க அம்மானை

தருவாரோ சட்டிகுடம் சாறுவைக்க வம்மானை. 1

கொடிவளரு மணிமாடக் கோபுரஞ்சூழ்

நல்லூரிற் குமர மூர்த்தி

அடியருளத் திருளகல அமரர்முக

மலரவள அணிமா னீன்ற

கொடியினொடும் பிடியினொடும் குலவுமுடம்

பிடியொடுங்கோ தண்ட மேந்தி

மிடியகல மயிலேறி விடியவந்த

தினகரன்போல் மேவி னானே. 2

நல்லை வெண்பா

காப்பு

கந்தவேள் வேன்முருகன் காங்கேயன் காதலித்து

வந்தநல்லூர் வெண்பா வகுப்பதற்குச் - சந்த

வனகள வாரணமுன் னாங்குடிலை மேவுங்

கனகவள வாரணமே காப்பு. 3

பூமாது பூவினுளப் பொன்மலரென் றெண்ணிநித

நாமா துடன்வாழு நல்லூரே - தேமாது

பாலனய னத்தன் பரிந்தரியா நிற்வரன்

பாலனய னத்தன் பதி. 4

சீர்விளங்கு மெப்பதிக்குஞ் செப்புகின்ற சொற்பெயரே

யூர்விளங்கு நாமமா நல்லூரே - யூர்விளங்கு

நன்கதிரை நாகத்தா னண்ணலரென் றஞ்சுவிக்குந்

தென்கிரை நாகத்தான் சேர்வு. 5

போற்றுமடி யார்பிறவிப் புன்மையிரு ­க்குதலா

னாற்றிசையும் வந்திறைஞ்சு நல்லூரே - யேற்ற

மருவலரை நேர்முடித்தான் வானவர்க்காய் நீப

மருவலரை நேர்முடித்தான் வாழ்வு. 6

மெய்ப்புலவ ருள்ளுறலான் மேகமதி லூர்தலா

லொப்புவணை நாயகனா நல்லூரே - யப்புருவ

நஞ்சார் கணியானா னன்கா னவர்முன்பு

நஞ்சார் கணியானா னாடு. 7

மற்குரிய தோளரசர் மாமுடியுங் கையகமும்

பொற்கவிகை காட்டும் புகழ்நல்லை - விற்குலவு

நாகங் கலந்தா ரெனநயந்தார் சேயிருவர்

பாகங் கலந்தார் பதி 8

பொன்னனையார் சிற்றிடையும் பூசுரர்கள் சொற்கிடையு

நன்னூல் கலைவிளங்கு நல்லூரே - முன்னிளைஞ

ரேற்றமருள் வீட்டினா னீர்வேலா னன்பருக்கே

யேற்றமருள் வீட்டினா னில். 9

வேதவொலி வேள்வியொலி மிக்க விழாவொலியா

லோதவொலி நாணுமுயர் நல்லை- காதரவின்

மாற்கிழவ னாகி வரைக்குறவர் முன்வள்ளி

பாழ்கிழவ னானான் பதி. 10

தூவிமயின் மீதாகச் சுந்தரநல் லூரிறைவன்

சேவலங்கை யான்பவனி சேர்ந்ததுதான் - தீவகம்போ

லக்குருகு முன்னா வவர்க்குருகு மாயிழையார்

கைக்குருகு கொள்ளவே காண். 11

பாகனசொல் லார்நகையும் பன்னு சிவநூலு

மாகதியைக் காட்டு மணிநல்லை - நாகவுரி

போர்க்குமரன் சத்திதரப் போந்தசுரர் மாளவடும்

போர்க்குமரன் சந்திதரன் பூ. 12

செல்வமயி நல்லூரே செஞ்சிலைக்கை வெஞ்சூரன்

றொல்வலியன் றன்மாயச் சூழ்வினாற் - பல்விதமாம்

புல்லுவங் காட்டினா னென்பதெல்லாம் போக்கியோர்

நல்லுருவங் காட்டினா னாடு. 13

நந்தா வனத்தருவி நன்மதுவா ருந்தேன்கள்

மந்தாரத் தேனளவு மாநல்லை - முந்தா

முடங்கலையும் பிற்செற்றான் மாறூர்ந்த வெய்ய

மடங்கலையம் பிற்-ற்றான் வாழ்வு. 14

போதப் பொலிவுள்ளார் மூத்தீ நலம்பொருந்தி

யோதக் கடல்போ லுயர்நல்லை - பாதக்

கனகச் சிலம்பன் கலைப்புலவன் செல்வே

ளனகச் சிலம்ப னகம். 15

என்னாசை யம்பரமே லானே னினிநாண

மென்னாசை யம்பரமே யாதலால் - முன்னொருநாட்

டந்தார் வந்தாரார் நல்லூரார் தழைகடப்பந்

தந்தார்வந் தாரார் தனி. 16

செந்நெல்லும் வேள்விக் திறத்தினருங் கன்னலுமே

கன்னினிலை காட்டுங் கவினவில்லை - மன்னுசிவ

னுண்மைகோ லானிறுத்தா னொட்டிவருஞ் சூர்மாயத்

திண்மைகோ லானிறுத்தான் சேர்வு 17

வார்காட்டும் பொற்குடத்தார் வாய்நகைகை கொந்தளமுங்

கார்காட்டப் பீலிமகிழ் காநல்லை - வார்கோட்டுத்

தானமுறைக் காதினான் றானவவே தண்டமுட

னீனமுறைக் காதினா னில். 18

சீரரச கேசரிமுன் னாகுந் திறலாண்மைப்

பாரரசர் போற்றும் பதிநல்லை - காரிகையார்

தாராதா ரக்களத்தன் றந்தமட வார்புனையுந்

தாராதா ரக்களத்தன் சார்பு. 19

படைமடத்€தை நீங்கினார் கற்றார்பன் னூலுங்

கொடைமடத்தர் வாழ்வுகூர் நல்லூர் - விடமுடைத்த

கந்தரத்தர் செல்லமருட் காங்கேயர் வேலுகந்த

கந்தரத்தர் செம்மல் களம். 20

தன்மங் கலமெனக்கொள் சால்பினர்மெய்ச் செல்வர்சேர்

நன்மங்க லஞ்சிறந்த நல்லூரே - பொன்மலியுந்

தாம மதலையார் தன்னடியா ருய்யவருள்

சேம மதலையார் சோர்வு. 21

சைவம் பொலிக தமிழ்தழைக தாரரசர்

செவ்வியகோ லுய்கவளர் சீர்நல்லை-மெய்ம்முனிவர்

நன்கவியுஞ் கானவரே னற்சருவும் கொள்வானென்

புன்கவியுங் கொள்வான் புரம். 22

பொன்னங் கலையார் விலோசனத்தான் மாதிரம்போய்த்

துன்னியசீ ராலுமைநேர் தூநல்லை -முன்னயனைத்

தாரகங்க டாவினான் றாவரக்கட் பீலியைச்சூர்

போரங்க டாவினான் பூ. 23

நத்தமு ருங்கயத்தால் நன்கிளைகொள் பாடலத்தால்

சித்தசவேள் போலுந் திருநல்லை -முத்தின்

திருத்தணிமா மலையுந் திண்கோட்டிற் காட்டும்

திருத்தணிமா மலையான் சேர்வு. 24

சந்திரசேகர பண்டிதர்

1785

இவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் வாழ்ந்த நாராயண பட்டர் என்பவரின் புதல்வர் ; நல்லூர்க் கந்தசுவாமி மீது ஒரு கிள்ளைவிடுதூது பாடியுள்ளனர். அந்நூல் 1785இல் இயற்றப்பட்டதென நூற்சிறப்புப்பாயிரங் கூறுகின்றது.

நல்லூர்க் கந்தசுவாமி கிள்ளைவிடுதூது

சிறப்புப்பாயிரம்

ஆசிரியவிருத்தம்

சீர்செறி சகவாண் டாயிரத் தெழுநூற்

றெட்டெனச் செறிந்திட விரவும்

பேர்பெற மருவும் பராபவ வருடம்

பிறங்குதை மதியிரு பத்தோ

டேர்தரு மொன்பான் றிகதிபொன் வார

மிசைத்திடுஞ் சோதிநா ளிதனிற்

சார்தரு நல்லூர் முருகவே ளருளாற்

றங்குளித் தூதுசொன் னதுவே. 1

கட்டளைக்கலித்துறை

செந்நெற் பழனத் திருநல்லை வேன்முரு கேசருக்கு

வன்னப் பசுங்கிளித் தூதுரைத் தான்சது மாமறைதே

ரன்னத் தவனிகர் நாரா யணனரு ளாலுதித்தோன்

பன்னத் தருபுகழ்ச் சந்திர சேகர பண்டிதனே. 2

காப்பு

வெண்பா

விந்தைசெறி நல்லூர் விரும்பியுறுங் கந்தன்பாற்

சுந்தரஞ்சேர் கிள்ளைவிடு தூதுக்குத் - தந்தவிசைச்

சீராம்ப லானனத்தான் சிந்திக்கு மோர்கோட்டுக்

காராம்ப லானனத்தான் காப்பு. 3

கீத்தாம்பிள்ளை

1798

இவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாதோட்டத்து நாடகாசிரியராய் விளங்கிய லோறஞ்சுப்பிள்ளை என்பரின் பேரன். இவரால் இயற்றப்பட்ட நாடகங்கள் : எருமை நாடகம், நொண்டி நாடகம், எம்பரதோர் நாடகம் என்பனவாகும். இவற்றுள் எம்பரதோர் நாடகம் 1798இல் இயற்றப்பெற்றது.

எம்பரதோர் நாடகம்

காப்பு

விருத்தம்

ஏர்மேவு பொற்றிகிரி கரத்தி லேந்தும்

எண்டிறீக் கெம்பரதோர்க் கினிய காந்தை

சீர்மேவு கற்புராக் கினிதன் காதை

சிறப்புயர்நா டகப்பாவாய்த் தேர்ந்து கூறப்

பார்மேவு பெத்தலையம் பதியில் வெல்லைப்

பருப்பத்தில் மனுச்சுரூபம் படைத்து வந்த

நேர்மேவு மேசுநச ரேனு பாதம்

நித்தியமுங் காப்பெனமுன் நிறுத்தி னேனே. 1

பின்விருத்தம்

திருஞான மறைக்குகந்த செல்வ னாகச்

செகம்புரக்கு மெண்டிறீக்கெம் பரதோர் பாரி

பெருஞான நேசகற்பு ராச மாது

பேருலகில் நடந்தசரித் திரத்தின் காதை

அருஞான முனிவோர்சொல் லுரையின் வண்ணம்

அரங்கினில்நா டகப்பாவ யறையப் பாரிற்

குருஞான முபதேச முரைக்கு மாதி

குமாரனிரு சரணமலர் கும்பிட் டேனே. 2

தம்பி தாழிசை

வாச மேவுகுழல் ராச மாமதுர

வங்சி யெகொடிய நெஞ்சியே

வன்ன மாமனைசெய் யென்ன வோதுதல்

வகுத்த வோசிறையி ருந்தவோ

கூசி டாமொழியை நேச மாமெனவே

கொம்ப னாருரையை நம்பினான்

குறிக்கு மாப்பதுபற் றிக்கு மந்திபடு

கோல மாமெனது சீலமே

ஆசில் லாதகொடி யேவெ ழுத்திடினும்

அத்தி மீதுமலர் பற்றினும்

அரிவை நெஞ்சொருவர் அறிதல் பஞ்சியென

அன்று சொல்லுவமை கண்டதே

தேச மேமகிழு மிராச னாமெனது

சேட்ட னாரிவைகள் கேட்டராற்

செய்வ தென்னவினி யையை யோபழைய

தீது சூழ்ந்ததினி யீதுதான். 3

கன்னி திருவாசகம்

ஆதியே போற்றி யநாதிகா ரணமா

யனைத்தையும் புரப்பவா போற்றி

அளவில்லா ஞானக் கருணையங் கடலே

அடியணை போற்றியே போற்றி

சோதியே போற்றி நீதிசேர் மூன்று

சுடரொளி யானவா போற்றி

தொல்புவி தனிலென் வல்வினைப் பாவத்

தொடரவுறுத் தாட்கொள்பவா போற்றி. 4

கோதிலா விடையர் சேரியற் கோவின்

குடிலினி லுதித்தவா போற்றி

கொடுமைசேர் கடிகள் துடிமத மொடுக்கும்

கொற்றசற் குருபரா போற்றி

பேதையென் றனக்கித் தனையு காரப்

பேறுதந் தாள்பவா போற்றி

பிறங்குசற் கருணை நிறைந்தநித் தியமே

பேரின்ப நாதனே போற்றி. 5

பொது மங்களத்தரு

வேந்தர்சம தானமுற மங்கள வாழ்த்து-நன்மை

மெய்ஞ்ஞான மேசிறக்க மங்கள வாழ்த்து

சேர்ந்துசந்தா னந்தழைக் மங்கள வாழ்த்து-சுக

செல்வமுடன் வாழ்ந்திருக்க மங்கள வாழ்த்து 6

மிடிமைநோய் பிணியகல மங்கள வாழ்த்து-என்றும்

மெய்சுகம்பெற் றுய்திருக்க மங்கள வாழ்த்து

படியில்நற் பொருள்பெருக மங்கள வாழ்த்துப்-பல்

பாக்கியம்பெற் றுய்திருக்க மங்கள வாழ்த்து. 7

மாதமும் மாரிபெய்ய மங்கள வாழ்த்துச் -செந்நெல்

வாரிமிக வேபெருக மங்கள வாழ்த்து

மேதினி யடிமையுய்ய மங்கள வாழ்த்து-என்றும்

மேன்மைபெற்று வாழ்ந்திருக்க மங்கள வாழ்த்து. 8

வாணிகம் மிகப்பெருக மங்கள வாழ்த்து-பூவல்

வர்த்தகர் நிதந்தழைக்க மங்கள வாழ்த்து

தோணுநன் நிதிபெருக மங்கள வாழ்த்து-சுப

சோபனமாய் வாழ்ந்திருக்க மங்கள வாழ்த்து. 9

பாரிலிக் கதைசிறக்க மங்கள வாழ்த்து-இதைப்

பாடியாடு வோர்தழைக்க மங்கள வாழ்த்து

பேரிய லிசைவிளங்க மங்கள வாழ்த்து-கேட்கும்

பேரவையெல் லாந்தழைக்க மங்கள வாழ்த்து. 10

மேழிக் கொடிதழைத்து வாழ்க வாழி-இந்த

மேதினி யுழவுதொழில் வாழ்க வாழி

ஆழிப்பொருள் மாடாடு வாழ்க வாழி-எங்கள்

அனைய பொருள்தழைக்க வாழ்க வாழி. 11

நற்புறு சுகம்பெருகி வாழ்க வாழி-இலங்கை

நாடுமிக வேதழைத்து வாழ்க வாழி

பொற்புறு மெண்டிறீக்குநகர் வாழ்க வாழி-கற்புப்

புண்ணியரா சாத்திகதை வாழ்க வாழி. 12

தண்டலைத் தலைவர்நிதம் வாழ்க வாழி-மற்றுஞ்

சகலபெரி யோர்தழைத்து வாழ்க வாழி

தண்டமிழ்க் கலைஞர்சங்கம் வாழ்க வாழி

தானியம் மிகப்பெருகி வாழ்க வாழி. 13

மன்னார்மா தோட்டநகர் வாழ்க வாழி--இதில்

வாழ்சகல மானருய்து வாழ்க வாழி

பொன்னா ரரண்மனையும் வாழ்க வாழி-என்றும்

பூமாது வாழ்ந்திருந்து வாழ்க வாழி. 14

க. ஆறுமுகம்

1806

இவரது ஊர் திருக்கோணமலை. தந்தையார் பெயர் சுப்பிரமணியர். திருக்கோணாசல சைவ ஆதீனத்தைச் சேர்ந்த இவர் பெரும் புலமையுடன் திகழ்ந்தார். இவரியற்றிய நூல் 'திரிகோணமலை அந்தாதி' யாகும்.

திருகோணமலை அந்தாதி

விநாயகர் துதி

பூமா தருணிறை பொற்கோண வெற்பிறை பூத்தபுக

ணாமா தருனிய லந்தாதி கூற நகவிமயக்

கோமா தருளொரு கொம்பிரு காதொளி கூருமுக்கட்

டேமா முகவைங் கரதரன் பூங்கழல் சேர்துணையே.

நூல்

மலையாங் கயிலை வரதப் பிரானடி வாழ்த்தியென்றும்

நிலையா மடியவர் நெஞ்சமொ டேழ்பில நீள்விசும்பு

துலையாம் வழிதவ றினுங்கற் பிறையுங் சுருங்காக்

கலையா மதிமுகங் கண்டகன் றானுளங் கனகமே. 1

தனிவாழு நாதர் தருதந்தை தாயிலர் தண்கயிலை

யுனிவாழு மீச ருளமுறை யொண்டிடொடி யோங்குடலில்

வனிவாழு நின்விழி மாலம்பு பாய மனமருளின்

புனிவாழு மாறோர் கயம்புக்க தாகிற் புகன்றிடுமே. 2

மறைமுத லாமரன் வைகி கோண மலையிலே

நிறைமுத லாவொளிர் நின்முக நேரு நிறைமதிங்

குறைமுத லாயின கொண்டுள நாணூஉ குலவமுத

முறைமுத லாமிவ் வரைவல மென்று முலாவியதே. 3

சுடர்க்கொடி தென்கயி லைக்கிறை தோய்கொடிதொலிலிமயம்

படர்கொடி யண்ட சராசர மற்றம் பயந்தகொடி

யிடர்கொடிக் காடு மெழிற்கொடி யின்குழ லேறரிகா

ளுடற்கொடிக் கூறு வரினுமக் கேபழி மின்னிடுமே. 4

பிடியன்ன மென்னடைப் பெண்ணர சேயுணர் பேரரவின்

வடிவன்ன காந்த ளலர்ந்த வனமயி லாடியவாற்

கொடிமன்னு தென்கயி லாய ரிறைபுரி கோலமொட

நொடிதன்னி லெய்து வரஞ்சலை வேழ்புரி நோவுமின்றே. 5

கருமந்தி வாயிற் கடுவனன் மாங்கனி கையினிடுங்

கடுமந்தி கண்படு காக்கயி லாயரைக் கண்டிறைஞ்சார்

கருமந்தி ரிபுசெயும் பானா டலுயிர் கைக்கொளவுட்

கருமந்தி கணெதிர் காலையென் சொல்வர் கருத்துரையே. 6

கண்டங் கரியர் கயப்புலி மாவுரி கையிடையிற்

கண்டங் கரிய பதியெப் பொருட்குங் கயிலைமலைக்

கண்டங் கரிசன மென்முலை யின்சொல் கவின்றிடவூன்

கண்டங் கலந்த நறையுட னுண்டகல் காவலனே. 7

உன்னா நினைவு முலையா விளைவு முயர்மதியும்

பன்னா மனுவும் பதறா மனமும் பகைசினம்பொய்

மன்னா வறிவும் மருவா வினையும் வராபிறப்புஞ்

சொன்னா வருமின்ப முந்தா கயிலைத் துறையன்பனே. 8

பீதாம்பரப் புலவர்

1819

இவரது ஊர் நீர்வேலி. தந்தையார் பெயர் சண்முகம்பிள்ளை. இவர் இருபாலைச் சேனாதிராச முதலியாரிடங் கல்வி கற்றவர். மறைசைக் கலம்பகம், மறைசைத் திருப்புகழ், நீர்வை வெண்பா, வல்லிபுரநாதர் பதிகம் என்பன இவரியற்றிய பிரபந்தங்கள்.

வல்லிபுரநாதர் பதிகம்

தேமேவு மாலயன் றேடியுங் காணாத

சிற்பாற் குரியமலையைத்

தேரா தகந்தைகொடு பாரோ டெடுத்திடுஞ்

செப்பரிய திறனிருதனைப்

பூமேவு சுரரசுரர் பொற்பொடு துதிக்கவே

பூவைகுல திலகனாகிப்

போரகத் திருபது சிரங்களு முருண்டிடப்

பொருதபுய பலராமனே

கார்மே வரங்கம் பொருந்துகா குத்தனே

காமனைப் பெற்றகண்ணா

காசினி விசும்பங்கி கமலமா லானவா

கம்பேறு கையினானே

மாமேவு முல்லைசெறி மார்பமே மாயனே

மகிழ்வினட னென்னையாள்வாய்

வல்லிபுர நகர்வாச வல்லிநிக ரிடைவனச

வல்லிமகிழ் நேயமாலே. 1

மறைசைக் கலம்பம்

இரங்கல்

மேவுகலை மானை விழைவோ டிடம்வைத்து

வாவுமலை மானைமுடி வைத்தவா-காவகமேல்

வந்துவழங் கும்மறைசை வானவா வாழ்த்தெனக்கு

வந்துவழங் குன்றான் மலர். 2

தவம்

கான்மருக் குழலைக் கனிவுறு மகவைக்

கனத்தினைத் தனத்தினைக் கருதும்

பான்மையை யகற்றிப் பிறப்பினை யிறப்பைப்

பணித்துவான் பரகதி பெறுவீர்

நான்மறை யவனை மாயனைப் படைத்த

நாதனைப் போதனை நயந்த

மானூறு கரனைப் பரனைமா மறைசை

வாசனை யீசனைத் தொழுமே. 3

அம்மானை

மேலோர் புகழ்மறைசை மேவெம்பி ரான்வடிவம்

மாலார் கலையணிவின் மானாக மம்மானை

மாலார் கலையணிவின் மானாக மாமாகில்

மாலார்ந்து பண்டுவன மருவினதே னம்மானை

வனத்தினிடை மருவினதும் வான்கருணை யம்மானை. 4

மேனம றைப்பதி கொண்டீரே

மெய்யிலர் தம்மக மண்டீரே

வானலை தன்னை விளித்தீரே

மருமலர் மாலை யளித்தீரேற்

கானம ருங்குழ னோகாதே

கனவு மரும்பகை யாகாதே

வானில வும்பகை செய்யாதே

மாவுல கும்வசை வையாதே. 5

சிந்து

புன்ப வந்தொலைத் தாண்டரு ளீசர்வாழ்

பொன்ம லிந்தம றைநகர்ச் சித்தரே

மின்பு றும்மணிக் கன்னல்வில் வாங்கிடு

மேந்த லுக்கயம் பொற்சுக மாக்கினோம்

வன்பு றும்மயி லூர்கந்த வேளுக்கு

மருவத் தாரமுன் மாதங்க மாக்கினோ

மன்பு றுங்கரி யோனுக்குந் தாரம்பொன்

னாக்கி னோஞ்சித் தளவில வண்ணமே. 6

காலம்

மின்னிமுகில் கறுத்தலரம் பெய்கின்ற காலம்

வேனில்வேள் கறுத்தலரம் பெய்கின்ற காலம

பொன்னிதழி லளியுறவம் பலர்மலருங் காலம்

பூவையர்க டுன்புறவம் பலர்மலருங் காலந்

தென்மலக் தென்றறெரு மரத்தியங்குங் காலந்

தெரிவையர்ஞ் சிந்தைதெரு மரத்தியங்குங் கால

மன்னவயல் சூழ்மறைசை யத்தரணி நாட்டி

லன்பர்பொருட் கேகியின்னு மணைதலிலாக் காலம்.

புலம்பல்

வாங்குங் கனல்கொள் செங்கையினாள்

மருவுந் தினமுஞ் செங்கையினான்

வன்னிக் கோலத் திசையுடையான்

வயங்குங் கோலத் திசையுடையா

னோங்கும் புரத்தை நேர்மலைந்தா

னொளிர்செக் கரிந்து நேர்மலைந்தா

னுமைமான் பிரியா துறைபதியா

னுயர்மா மறைசை யுறைபதியான்

றேங்குஞ் சீரைக் கண்டேனே

சிறந்த பாயற் கண்டேனே

சேலு லாவு மறியலையே

செப்பென் றுயர மறியலையே

தூங்கு நாரைக் குஞ்சினமே

சொல்லென் னயலார்க் குஞ்சினமே

தூது போமங் கிருந்தத்தையே

சொல்லி வாரு மிருந்தத்தையே. 8

இரங்கல்

தார மிஞ்சும் வேலையே -கோர மிஞ்சு மாலையே

தார்நி றைந்த கண்டலே-நீர்மு கந்த கொண்டலே

யூரு நந்தி னங்களே-தேரும வந்த னங்களே

யுப்ப மைந்த கானலே-வெப்ப மைந்த பானலே

காரு றும்புன் னாகமே - வாரு றுஞ்சுன் னாகமே

கஞ்ச வாவி மறைசையார்-வஞ்ச நெஞ்ச லுறைசெயா

ரார மார்பி லதனமு-மீர மாரும வதனமு

மந்தி வண்ண மேனியுஞ்-சிந்தை கொண்டு போனவே.

மறைசைத் திருப்புகழ்

காப்பு

ஆதிசதுர் வேதமல ரன்றிறையா நின்றிறைஞ்சு

வேதவன நாதனடி மெய்ப்புகழ் - ஓதியிடப்

போதகநே ரானனே பூரணனே வீரகத்திச்

சேதகனே போதருளைச் செய்.

நூல்

கடலினா னுக்குமக் கமலயோ னிக்குமெக்

கடவுளோ ருக்குமெட் டரிதாகிக்

ககனமே லுற்றழற் கிரியதாம வித்தகக்

கடவுண்மா ணிக்கமெய்க் கதிர்காலும்

படவரா வுற்றபொற் புயதரா பச்சைமெய்ப்

பரைகொள்பா கத்ததற் பரநாதா

பருகன்மேன் மைத்திருப் புகழையோ தற்குமெய்ப்

பரமஞா னத்தையெற் கருள்வாயே

கடிகொள்பூ கத்தினிற் கயல்கள்பாய் சித்திரக்

கழனிவே தப்புரத் தறைவோனே

கலபநீ லச்சமத் துறுமயூ ரத்தினைக்

கடம்புவே லத்தனைத் தரநாதா

தடவின்மே ருச்சரா சனமுளா யுற்புதா

சமர்செய்கூ ருற்றமுத் தலைவேலா

சடையினா கத்தனிக் தவளபா திப்பனிச்

சசியைமேல் வைத்தமெய்ப் பெருமானே

விதியின்முறை விரதமன தொன்றில னன்றில

னுனதுசின கரமும்வலம் வந்தில னன்பிலன்

விரவுமுன தடியர்தமை யண்டிலன் றொண்டிலன் வினையேனான்

சிதிதமணி யணிபவரி னண்புறும் பண்பில

னனுதினமு முனதெழுத் தஞ்சுநெஞ் சங்கொளும்

விழைவுமில னுததிமுர சங்கொளுஞ் செங்கயற் கொடிவீர

மதனன்வீடு கணையின்மிக நொந்துநொந் தந்தியும்

பொதியமலை யுதவுசிறு தென்றலும் மன்றிலு

மகரசல நிதிபருகு மங்குலுங் கங்குலும் வலிதாவ

மயிலனைய வியன்மகளிர் மந்திரஞ் சென்றுசென்

றனவரத மயலுழன் றின்பெனுந் துன்பிலென்

மனமெலிவு குறையும்வம் வந்துகந் துன்பத் தருவாயே

கதிகொளலை கடலனைய மஞ்சனுங் கஞ்சனுங்

கநகநக றுறைகரிய சந்தனு நொந்துளங்

கவலையுற வுனதடிக டஞ்சமென் றஞ்சிவந் தணைபோதே

கடியகொடு விடமதனை யுண்டுகண் டங்கொளுங்

கருணைசெறி பகவமிகு சுந்தரங் கொண்டிடுங்

களபமிர்க மதபுளக கொங்கைமின் னஙகயற் கணிபாகா

கொதிகொள்கடு வுடையவர வங்களுங் கங்கையு

முருகுமிழ்பொன் னிறமருவு கொன்றையுந் தும்பையுங்

குணமிலகு குழலிவெண் டிங்களுங் கொண்டசெஞ் சடைநாதா

கொடியதிற னிசிசரரை வென்றுகுன் றந்தெறுங்

குமரனைமுன் னுதவுபர சந்ததஞ் சுந்தரங்

குலவுமறை நகரிலுறை யும்பருங் கும்பிடும் பெருமானே

கட்டு மளகமெய் வனமோ கனமோ

சித்ர மிகுநுதல் சிலையோ கலையோ

கற்றை மிகுமுக மதியோ மரையோ கமுதூறல்

கக்கு மொழியியல் குயிலோ மயிலோ

துய்க்கு மிதழொளிர் துகிரோ கனியோ

கத்து கடலுறு கடுவோ வடுவோ விழிமேலாம்

வட்ட வினமுலை மலையோ வலையோ

வெய்க்கு மிடையது கொடியோ துடியோ

வட்ட வரையர சிலையோ வரவோ வெனமாலே

வைக்கு மெளியன்வல் வினைநீங் கிடவே

சித்தி செறியுமெய் யுணர்வோங் கிடவே

வச்ர மலைக ளொருபாங் குறவந் தருள்வாயே

துட்ட நிசிசர னுயிர்மாண் டிடவே

யிட்ட முளசுரர் சிறைமீண் டிடவே

றொட்ட வறுமுக பெருமான் றனையீந் தருள்வோனே

சுத்த மலரயன் றிருமா தவனா

கத்தன் முதலிய விமையோர் தொழவே

துப்பின் வருகடல் விடமார்க் தருடேங் கியதேவா

அட்ட திசையுடை யரனே பரனே

சிட்டர் பரவுமுக் கணனே குணனே

யக்க வடமணி யமலா நிமலா வடமாரு

மத்தி யுரியவைம் முகவா பகவா

மத்த நதிமதிச் சடையா விடையா

வத்த மிகுமறை நகர்மீ தினில்வாழ் பெருமானே

மருவு நிழலினு மலரணி குழலினு

மதுர முளகனி மொழியினும் விழியினு

மகிழ்வு பெறுநடை வகையினு நகையினும் வனமேவும்

வனச முகுழன முலையினு நிலையினு

மதுர விதழினு மிடையினு முடையினு

மணிகொள் பணியினு மணியினு மனமிக மயலாகி

உருகி யவரொடு பகிடிமுன் னிடுகினு

முரைசெய் பணிவிடை புரிகினும் விதிமுறை

புளது தவறினு மலரணை மிசையுறு மனுராக

வுததி படியினு மவர்ச மழியினு

முலகு புகழ்மறை நகருறை பகவவுன்

னுபய பதமலர் கனவிலு நனவிலு மறவேனே

கரிய கொடுவிட மறுகர வணிமணி

கதிகொ ணதிமதி யிதழியு மணிபுர

ககன வமரரு முனிவரு முணர்வுற வரியோனே

கனக பரிபுர பதவிதி தலையணி

கவினு மணிமலை யனபுய பலநல

கமலை மணமக னெனும்விடை கடவிய வொருநாதா

பருமை யுறுகட கரியுரி யுடையவ

பவள வுருவபொன் மரகத மலைமகள்

படிர புளகித மிர்கமத முலைமுக டுழுமார்பா

பகைகொ ணிசிர ருடல்பொடி படவிடு

பரம குருபர வரகர சுசிகர

பரவும் வகையெனை யருண்மறை நகருறை பெருமானே

தங்கும் புரிந்த சங்கொன் றுசெங்கை

தண்கொங் கைகொண்ட மடவார்பாற்

றஞ்சம் புகுநது கொஞ்சென் றணைந்து

தங்கும் புலன்கொள் விழனாயேன்

அங்கம் புணர்ந்த துன்பங் களிங்கு

மங்கும் பொருந்தி யலையாம

லங்கங் குவந்த புன்கண் மடங்க

வன்பொன் றுமின்ப மருள்வாயே

கொங்கொன் றுகொன்றை வெண்டிங் கள்கங்கை

கொண்டங் கிலங்கு சடையோனே

கொந்தின் குருந்து தங்கின் புனங்கொள்

குண்டம் பிறங்கு மலரூடே

சங்கம் புகுந்து கண்டுஞ் சுநன்மை

தங்கும் வளங்கொண் மறைநாடா

சந்தங் கொள்குன்ற மின்கண் டுகந்து

தன்பங் குகொண்ட பெரமானே

கனமலர் வைத்துக கமழ்ந்த குந்தள

கவினுறு பொட்டிட் டிலங்கு சந்திர

கதிர்முக வட்டத தமைந்து மென்குமிழ் மிசையேறிக்

கணநவ ரத்நத் துயர்ந்த பைங்குழை

தனிலடி வைத்துச் சிறநந்தி ருண்டுறு

கயலொடு பிணையைத் துரந்து பொங்கிரு கண்சீறி

மனவினை யுற்றுப் புலந்த மங்கையர்

வனசம லர்ப்பொற் பதம்ப ணிந்தெழில்

வரிவளை கைக்கட் கலீன்க லீனென வனுராக

மருவுற வொத்துக் கலந்து கந்துள

முருகவ ணைத்துப் புணர்ந்து சந்தத

மருவினு நின்பொற் பதங்க ணெஞ்சினின் மறவேனே

புனமிசை யுற்றுத் திரிந்து புன்குற

மகள்புள கப்பொற் குரும்பை யன்பொடு

புணரறு முகனைத் துலங்க வன்றருள் புரிமேலோய்

புவனிசெ லுத்தித் தயங்கு சந்திர

கிரியைவ ளைத்துப் புரங்கொ ளண்டவர்

பொடிபட விட்டுக் களைந்த குங்கும புயவீரா

தினமுநி னைத்துப் பணிந்த வன்பர்க

ளுறுதுய ரத்தைக் கடிந்து சிந்தனை

செயும்வண முதவிப புரிந்து கொண்டருள் செகந்நாதா

தகழிமை யத்திற் செறிந்த சுந்தரி

கனதன வெற்பிற் கலந்த சுந்தர

திருமறை நகருட் சிறந்து தங்கிய பெருமானே

விருப்பந்தங் கிரத்தம்பொங் கரைப்புண்கொண் டுருக்கின்பம்

விளைக்கும்பெண் களைக்கண்டங் கவரோட

விழுப்பங்கொண் டவப்புண்டும் புணர்ப்புண்டும் பிணக்குண்டும்

விழிப்புண்டும் பழிப்புண்டும் விரையாகும்

திரப்பஞ்சாத் திரக்கந்தப் பனுக்குந்தென் றலுக்குந்தென்

மதிக்குந்நொந் துளத்தென்றுஞ் செயன்மாறிக்

திகைக்கும்புந் தியிற்பொங்குந் தியக்கஞ்சென் றிடற்குன்றன்

றிருக்கஞ்சப் பதத்தின்பந் தருவாயே

தருக்கும்விண் பதிக்கும்பங் கயற்குஞ்சங் கரிக்கும்மைங்

கரற்குந்திண் குகற்குந்தஞ் சமதானாய்

தடப்பொற்சந் திரக்குன்றங் குழைத்துந்தும் புரத்திற்சஞ்

சரிக்குந்தெவ் வரைக்கன்றுந் தனிவீரா

பரக்குந்தண் பணைக்கஞ்சம் பரிக்கும்வண் டிசைக்கம்பொன்

மயிற்சங்கந் நடிக்கும்பண் மறைக்காடா

பழிச்சும்வெம் புலிக்குஞ்செம் பணிக்கும்விண் ணளிக்குந்தன்

மலைப்பெண்பங் கினிற்றங்கும் பெருமானே

வாசநெ டுந்தெரு மீதுசெல் கின்றவர்

மாலடை யும்படி மயில்போலே

வாயிலி னின்றெழின் மார்பிலி ருந்திருடும்

வாசநெ கிழ்ந்திடும் வகைமாறி

பாசமி குந்திடு வாணிமொ ழிந்துறு

பார்வையெ னுங்கடு விடுவார்தம்

பாகமு கந்துசெல் லாசைத விர்ந்துப

ராவுற வந்துன தருடாராய்

ஈசபொ லங்கிரி மானைம ணந்திடு

மேகதி கம்பர வெரிகாலு

மீமந டம்புரி பாதவி டங்கமுன்

னீறினி ரஞ்சன விடையாளா

நேசமு டன்றசை வேடன்வ ழங்கிடு

நீர்மைய றிந்தருள் புரிநாதா

நீலமி லங்குசெய் வேதவ னஞ்செறி

நேரில்வ ரந்தரு பெருமானே

கீதமளி பாடுகின்ற சீதமல ரேவுகின்ற

கேடின்மத னூருகின்ற சிறுகாலாற்

கேண்மதியி னான்மிகுந்த வாசையுடனேபுகுந்து

கீரமொழி மாதர்தங்கண் முலைமீதே

காதன்மிக வேபுணர்ந்துள் ளாதரவி னோடணைந்து

காலம்விட வேநினைந்து திரிவேனோ

காமர்மலை மேல்வளர்ந்த சாமளம தாமடந்தை

காரணயி னோடிசைந்த கதிர்மார்பா

நாதசிவ நீலகண்ட ஞானபர மாதிநம்ப

நாகவணி மேலணிந்த மகதேவா

நாகமுக னோடுமிந்த்ர நீலமயின் மீதுகந்து

நாளுமிவர் வானையன்று தருநாதா

வேதனரி நாடுகின்ற பாதமுடி மேவகண்ட

மேலவபொன் னேறிவர்ந்து வருவோனே

வேலையலை வீசுசங்கி னாரமலை யானிறைந்த

வேதவன மீதமர்ந்த பெருமானே

சுவாமிநாதர்

1765 - 1824

இவர் மானிப்பாயில் வாழ்ந்த அருணாசலம் என்பவரின் புதல்வர். இலங்கைச் சட்டநிரூபண சபையில் அங்சத்துவம் வகித்த ஏலேலசிங்க முதலியாரின் தந்தையார். இவர் சங்சீதப்பயிற்சியும் மிக்கவர். இராமநாடகம், தருமபுத்திர நாடகம் முதலிய நாடகங்கள் இவரின் புலமையைக் காட்டும்.

தனிப்பாடல்

ஆண்டுகொண் டவனிமுத லன்றிலங் கையிலுறையும்

அரியரா வணநிசிசரன்

அழகுசெறி சீதையைச் சிறைவைக்க ராமனா

யவதரித் திடுமாயவன்

தூண்டவனு மான்சென் றறிந்துவந் தேசொலத்

தொடுகடலை யணைகட்டியே

சுக்கிரீப னொடுசேனை சூர்ந்திட விலங்கையிற்

றொகுதியொடு போயடைந்து

வேண்டியம ருக்குவரு தம்பியும் பிள்ளைகளும்

வெகுமூ பலமுலமழிய

விறலிரா வணன்மடிய நொடியிலே சிறைமீட்ட

வீரரா கவன்மருகனே

நிண்டவன் பிலையெனினு மாண்டுகொண் டிடுமடிமை

நீயருளெ னக்குதவுவாய்

நிகரில்தொண் டமனாற்றில் நிலவுசந் நிதிமேவும்

நிமலகுரு பரமுருகனே.

விசுவநாத சாத்திரியார்

1836

இவரது ஊர் வட்டுக்கோட்டை€ச் சார்ந்த அராலி. வாக்கிய பஞ்சாங்கத்தை முதன்முதற் கணித்து (16.5.1667) வெளிப்படுத்தியவராகிய இராமலிங்க முனிவரின் வழித்தோன்றல் இவர். தந்தையார் பெயர் நாராயண சாத்திரியார்.

இவரியற்றிய நூல்கள் : வண்ணைக் குறவஞ்சி, நகுல மலைக் குறவஞ்சி என்பன.

வண்ணைக் குறவஞ்சி

சித்திர முளரிக் கண்ணர் சிறந்தவா மனத்த ராசை

வத்திர முடைய ரஞ்சக் கரத்தர்பொன் வனத்தா மத்தர்

இத்திற வயன்மா லீச னிவர்களி லிறைவ ரான

அத்தர்தாள் வணங்கி வண்ணைக் குறவஞ்சி யறைகு வேனே.

நகுலமலைக் குறவஞ்சி

வடமலைக் சிகர மொன்றினை வாயுக்

கடலிடை வீழ்த்துமக் காரணப் பெயரால்

ஈழமண் டலமென யாவரு முரைக்க

வாழுமண் டலத்தின் மகிதலம் போற்றத்

தென்கயி லையிலுந் திருக்கேச் சரத்தினும்

அன்புறு கௌரியோ டரன்வீற் றிருந்தனன்

சங்கம் வருவித் தகுநகு லாசலத்

துங்கம துறுகதை சொல்லுவன் முன்னாள்

வளம்பெறு சோழ மண்டல மதனில்

உளஞ்செறி சோழன் றன்மக ளொருத்தி

பரிமுகத் தோடுமிப் பார்மே லுத்திதனள்

மருவுமிப் பீடையை மாற்றிட வேண்டிப்

பொன்னுரு மருவிய புண்ணிய தீர்த்தம்

அன்னதி லாட வகந்தனி லெண்ணிச்

சகிமார் தம்மொடுந் தானையி னோடும்

நகுலா சலத்தினை நாடிவந் திறங்கிக்

கந்தவேள் பதத்தைக் கருத்துற நினைத்துச்

சிந்துவிற் பாய்திரு தீர்த்தநீ ரருவிச்

சங்கம மதனிற் றகும்புன லாடி

அங்குறு மறையோர்க் கருநிதி வழங்கிக்

கோவிற் கடவைக் குகன்பதம் பணிய

மேவிய மாமுகம் விட்டு நீங்கினள்

அன்னகா ரணத்தா லப்பதி தனக்கு

மன்னுகா விட்ட புரமெனப் பகர்ந்தனர்

இங்குறுஞ் சோழ ராசகன் னிகைதான்

செங்கம லாசனத் திருவெனச் சிறந்தாள்

அற்றைநா ளிரவி லணிபெறுஞ் சேனை

சுற்றியே காப்பத் துணைவிய ரோடு

படங்குமா ளிகையிற் பஞ்சணை மீது

நெடுந்துயில் கூரவந் நிசியே கிடுமுன்

காவலர் முருகவேள் கடிநகர் வந்து

யாவரு மறியா திவளைக் கொண்டுசென்

றன்புறு திருமண மவ்விடை யாற்றி

இன்புறக் கூடி யிருக்கு நாளிற்

றிக்கெலாம் விளங்கச் செயவால சிங்கச்

சக்கர வர்த்தி தானினி துதித்தான்

இங்கிவ னரசர் யாவரும் பணியத்

துங்கவிந் திரனெனத் துலங்குறு நாளில்

ஏழிசை நிறுத்தம் யாழ்வலா னொருவன்

ஈழமண் டலத்தை யினிதுகாத் திருக்கும்

கண்டமன் னவனைக் கண்டுதன் கையும்

வண்டமிழ் வாக்கு மனமுமொன் றாக்கி

இன்னிசை யோடும் யாழினைப் பாட

மன்னவன் றானு மனமிக மகிழ்ந்து

இன்னநற் பதியை யிவன்றனக் குதவ

விதிபெறந் தனது வியன்பெய ரதனால்

பதியுடைப் பெயர்யாழ்ப் பாணமென் றெவருஞ்

செப்பவிந் நகரைச் சிறப்பொடு புரந்தான்

நறுந்திருக் கோவிற் கடவைமா நகரிற்

சிறந்தினி திருத்தருள் செய்திடுஞ் செவ்வேள்

அங்கதற் பின்ன ராகமா நிலத்தின்

மங்கள நகர வர்த்தகர் தமக்கு

அருள்செய நினைந்தே யாறுமா முகமுந்

திருமிகு மாறிரு செங்கையுங் கொண்ட

வடிவுடன் கோவிற் கடவையின் மற்றும்

அடியவர் தமக்கு மருள்புரிந் திருந்த

வள்ளன் மேற்குற வஞ்சி நாடகந்

தெள்ளிய தமிழாற் செப்புவன் யானே.

தரு

சூரியன்றன் குலத்தில்வரு முக்கிரசோ ழனென்னு மிராசனுக்கு

பூரணமா யொருமகள்தான் பரிபோலு முகங்கொண்டுதித்தாள்

அந்தமட மான்வளர்ந்தே புத்தியறிய வருகா லத்திற்

தந்தைசொல்லுங் கட்டளையாற் றனதுகன்மந் தீர்பொருட்டாய்

அத்தலத்தில் நதிகளெல்லாஞ் சென்றாடியுந் தீராததனால்

சித்திதரு நகுலகிரிப் புண்ணிய தீர்த்தமதி லாடவெண்ணிப்

பங்கமறு சேனைகளுந் துணைப்பாங் கியருங் கூடிவர

வங்கமத ளிடையேறி யிந்த வாரிதியைத் தான்கடந்து

நகுலகிரி யதனில்வந்து கடல்நண்ணும் நன்னீர் சுனையாடிக்

குகபெருமான் றனைப்பணிந் தந்தக் குதிரைமுகப் பிணிதீர்ந்து

கண்டிமகா ராசனுக்கு நல்ல கற்புமிகு காதலியாய்

மண்டலங்கள் புரந்திரவே துங்க வாலசிங்க ராசனெனும்

புத்திரனைப் பெற்றிருந்தா ளந்தப் புண்ணியந குலாசலத்தில்

உத்தமமாய் வளர்குறப்பெண் நானு முள்ளகுறி சொல்வேனம்மே.

விருத்தம்

மாவெடுக்குஞ் சோலைதனிற் கொடிய மாரன்

மறுபடியுங் கணைதொடுக்க மனத்தி லெண்ணிப்

பூவெடுக்க வந்திடுவ னதற்கு முன்னே

புட்பமெலாம் வண்டுகளுட் பொதிய வாய்ந்து

கோவெடுக்கு மாவைநகர்ப் கோயி லுள்ளே

கொண்டுபோ யழிவினொடு குணமாய்ப் பூசை

தேவெடுக்கச் செய்திடுவீ ரம்பு நாணுஞ்

சிதைந்திடவே புறங்கொடுப்பவன் சேடி மாரே.

சிந்து

மோகனசுந்தர லேகையும் வந்தாளே- உல்லாசமாக

மோகனசுந்தர லேகையும் வந்தாளே.

மோகனசுந்தர லேகையும் வந்தாள்

முழுமதிநிகர் தரு முககுககுருபர

ரழகிய மலர்புரை யடியிணைதொழுதே

- மோகனசுந்தர

தேறல்கொள் வண்டுகள் மாலைகள்

கொண்டையிலாடவே மலரின்பாரங்

கொண்டதினாலது கண்டிட வாடவே

கோதிலாது குலவியநவமணி

கொழுவியபரிபுர கலனுறுமரிநிரை கலகலென

- மோகனசுந்தர

அங்கசவேள்புக ழெங்கணும் விளங்கவே அழகுகொண்ட

செங்கையின் மேவிய சங்கமு ழங்கவே

திகழுமிரத்தினச் செழுமணி யதனிடைச் செயவருபலணி

பளிர்பளிரெனவிரு பான்முலைதிகழ

- மோகனசுந்தரலேகையும்

நெடுமலை யிடைமுகில் படிவது பொருவவே

நிகரிலாத்தட முலையிடை யணிபடமது மருவே

தவறிலாத சரிகம பதனிச சனிதபமகரிச

தருமிசையோடு தகுதிகுதகு வெனவே- மோகனசுந்தர

கந்தப்பிள்ளை

1766-1842

இவரது ஊர் யாழ்ப்பாணத்து நல்லூர். பரமநந்தர் என்பவருக்கும் உலகாத்தையார் அம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தவர். கூழங்கைத்தம்பிரானிடங் கல்வி கற்றுப் பாண்டித்தியம் இவர், போர்த்துக்கேயம், உலாந்தா, ஆங்கிலம் முதலிய மொழிகளையும் அறிந்திரந்தார் என்ப. இவரே ஆறுமுகநாவலரின் தந்தையார் ஆவர்.

இவர் பாடிய நாடகங்கள் : சந்திரகாசநாடகம், இராம விலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டிநாடகம், ஏரோது நாடகம், சம்நீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி விலாசம் முதலிய இருபத்தொன்று என்பர்.

இராமவிலாசம்

தருவளர் வனஞ்சூ ழயோத்தியம் பதியில்

தசரத னருள்பெறு ராமன்

தகுகவு சிகர்க்காய்த் தம்பிலட் சுமணன்

தன்னொடுந் தனிவனம் புகுந்து

செருவளர் படைகள் செலுத்துதா டகையைச்

சிதைத்துயா கமுநிறை வேற்றித்

திகழக லிகைதன் சிலையுரு அகற்றிச்

சீதையைக் கண்டுவின் முரித்து

மருவளர் மிதிலை மணம்புரிந் தேதம்

வளர்நகர்க் கேகுமவ் வழியில்

வரும்பர சிராமன் வலியொடும் வில்லு

வாங்கியே சென்றுவாழ்ந் திருந்த

திருவளர் கதையை விலாசம தாகச்

செப்பினேன் பிழையிருந் தாலும்

செந்தமிழ்ப் புலவீ ரவைபொறுத் தருள்வீர்

தேவசா ரித்திர மெனவே.

வைத்தியநாதச் செட்டியார்

1753 - 1844

இவர் அச்சுவேலியில் வாழ்ந்த அரிகரபுத்திரச் செட்டியாரின் மைந்தர். அவ்வூர் நெல்லியவோடை அம்மன் கோயிற் பூசகராயும் புலவராயும் விளங்கியவர். நெல்லிய வோடை அம்மாள் பிள்ளைக்கவி என்பது இவரால் இயற்றப்பட்ட பிரபந்தமாகும்.

நெல்லியவோடை அம்மாள் பிள்ளைக்கவி

சிற்றிற்பருவம்

பவளத் தியற்றுங் கலசமிசைப்

பன்னீ ரதனா லுலைவார்த்துப்

பதுமராக வடுப்பில் வைத்துப்

பகருங் கனகத் தழல்கொளுத்தி

திவளும் வைர விறகடுக்கிச்

சிறந்த தவள வரிசிபெய்து

சேர வடித்து நீறணிந்து

செவ்வே யிறக்கிப் பசுங்கிரணந்

தவளும் பச்சை யிலைமீது

தயங்கப் படைத்துச் சராசரங்கள்

தழைக்க வளர்க்கு மருட்கௌரி

தகைசேர் நெல்லிய வோடைவளர்

குவளை விழிச்சி மெய்ஞ்ஞானக்

கொழுந்தே சிற்றில் சிதையேலே

குன்ற முலைச்சி மாரியம்மன்

கோதாய் சிற்றில் சிதையேலே.

சரவணமுத்துப் புலவர்

- 1845

இவரது ஊர் யாழ்ப்பாணத்து நல்லூர். இவரின் தந்தை யார் மனப்புலி முதலியார் ஆவர். இருபாலைச் சேனாதிராச முதலியாரிடங் கல்விகற்றுப் பாண்டித்தியம் பெற்ற இவர் ஆறுமுகநாவலர், சிசம்புப்புலவர் முதலியோரின் ஆசிரியராக விளங்கினார்.

நெல்லை வேலவருலா என்ற பிரபந்தத்தையும் பல தனிப்பாடல்களையும் இவர் பாடினர். திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி என்னும் நூலைப் பாடிமுடிப்பதன்முன் 1845இல் இறைவன் நீழலையடைந்தார்.

வேதாரணியம் தருமலிங்க சுவாமி பேரிற் பாடிய

தனிப்பாடல்

சுத்திபெற லாம்புத்தி முத்திபெற லாம்பவுத்ர

சுகபுத்தி ராதி பெறலாம்

தொலையாத குன்மகய ரோகமுத னோய்களொரு

சொல்லிலே சுத்தி பெறலாம்

பத்திபெற லாங்குருடு கூன்செவிடு சப்பாணி

பரிசுத்த மாகை பெறலாம்

பயமேறு பூதம் பிரேதப் பசாசுகள்

பறந்தோட வெற்றி பெறலாம்

சித்திபெற லாஞ்சுத்த வித்தைபெற லாஞ்செயச்

சிற்பொருப மகிமை பெறலாம்

சிவயோக மாதிபல வகையோக சாதனக்

சிவபோக திருப்தி பெறலாம்

சத்திபெற லாஞ்சைவ தர்மலிங் கச்சாமி

சந்நிதி யடைந்து பணிமின்

சங்கற்ப சகலசன சமயபரி பாலர்களாள்

சத்தியஞ் சத்திய மிதே.

முத்துக்குமார குவிராசர்

1780 - 1851

இவர் சுன்னாகத்து மயிலணியில் வாழ்ந்த அம்பல வாணபிள்ளை என்பவரின் புதல்வர். இவரது புலமையைப் போற்றிய மக்கள் இவரைக் 'கவிராசர்' என்றும்,'வாகவி' என்றும் அழைத்தனர். இருபாலைச் சேனாதிராச முதலியாரோடு நெருங்கிய நண்பராகவும், சி.வை. தாமோதரம் பிள்ளையின் குருவாகவும் இவர் விளங்கினார்.

இவரியற்றிய செய்யுள் நூல்கள் : ஞானக்கும்மி, யேசு மதபரிகாரம், சுன்னாகம் ஐயனார் உஞ்சல், நடராசர்பதிகம் முதலியன. அநேக தனிப்பாடல்களையும் இவர் பாடியுள்ளார். 'மத்தகபஞ்விஞ்சதி' என்பது இத் தனிப்பாடல்கள் அடங்கிய திரட்டு நூலாகும். இந்நூற் பாடல்களில் யாழ்ப்பாணத்து ஊர்கள் பல சிலேடையாகப் பாடப்பட்டுள்ளன.

சிதம்பர நடராசர் தோத்திரம்

விருத்தம்

நம்மைசெய் தறிகிலேன் தன்மவழி செறிகிலேன்

நம்பினார்க் குதவி செய்யேன்

நந்தா வனம்வையேன் மாதான மீந்துயேன்

நற்கொடை யிலாத கையேன்

புன்மைவழி தேடுவேன் கன்மவழி நாடுவேன்

பொய்ச்சூது விளையா டுவேன்

புல்லரைப் பாடுவேன் புலைமகட் கூடுவேன்

பொய்ச்சமய வழியோ டுவேன்

சென்மமருள் தாய்தந்தை குருதெய்வ நிந்தனைகள்

செய்துளே னெனினும் வாயால்

சிவசிதம பரமென்று சொல்லும்அடி யென்பவந்

தீரா திருக்கு மோதான்

சின்மய சொரூபனே உன்மயம தாம்பாத

தெரிசனம் எனக் கருளுவாய்

சிதம்பர மெனுந்தவர் நிதம்பர விதம்பெறு

சிதம்பர மகா தேவனே. 1

பாதநூ புரமணி கலின்கலின் கலீனென்று

பரதவித மாட வேங்கைப்

பட்டாடை மடமடென விட்டாட வரையினிற்

பன்னகக் கச்சை யாடச்

சோதிநூ லாடவுட னாதியே னக்கொம்பு

தொட்டாட விதிக பாலத்

தொடையாட முழுவென்பு புடையாட மான்கன்று

துள்ளிவிளை யாட மதியின்

பாதியா டக்குழையின் மீதபொற் குண்டலம்

பளபளென் றாட வணியும்

பணியாட வணியருக்கு மணியாட மதலைப்

பசுந் தொடையு மாட வேணிச்

சீதவா னதியாட மன்றாடு நின்பாத

தெரிசனம் எனக் கருளுவாய்

சிதம்பர மெனுந்தவர் நிதம்பர விதம்பெறு

சிதம்பர மகா தேவனே. 2

மாதவனு நாவினுறை மாதவனு நால்வேத

வாக்கிய முரைப்ப தொருபால்

வானவரு மன்பினிறை வானவரு மரகர

மாதேவ னென்ப தொருபால்

ஆதவனு மலையலை யாதவனு மம்புலியும்

அஞ்சலிசெய் தார்ப்ப தொருபால்

அகிலபுவ னத்துறை சனங்களுஞ் சிவசிவ

அருந்துதிகள் செய்வ தொருபால்

அகிலபுவ னத்துறை சனங்களுஞ் சிவசிவ

அருந்துதிகள் செய்வ தொருபால்

ஓதுறு பதஞ்சலி வியாக்கிர பதத்துமுனி

ஓங்கவொரு பாங்கு ஞற்றும்

உத்தம நிருத்தபரி சுத்தசிவ சம்புவே

உண்மைதரு ஞான குருவே

சீதமா மதியமணி சோதியே நின்பாத

தெரிசன மெனக் கருளுவாய்

சிதம்பர மெனுந்தவர் நிதம்பர விதம்பெறு

சிதம்பர மகா தேவனே. 3

மாவைச் சுப்பிரமணியர் தோத்திரம்

வெண்பா

கோவிற் கடவைக் குருபரனா ருற்சவத்தைச்

சேவித்து நிற்பார் தெருத்தோறுங் - காவிச்செலுங்

காவடியைக் கண்டிருப்பார் காண்பரோ கூற்றுவனார்

தாவடியே ழஞ்சுமையைத் தான். 4

திருவிழாத் தரிசன பலன்

விருத்தம்

கருவிழா உலகினிடைப் பிறந்துமெய்ம்மை

மறந்துழலுங் கன்ம சென்ம

உருவிழா முன்னெவரே யாயினுங்கோ

விற்கடவை உறையுந் தேவைப்

பெருவிளாங் கனிக்கான்கன் றெறிந்தமான்

மருகன்வேற் பெருமா னுக்காந்

திருவிழாத் தரிசிக்கச் செல்லுவார்

யமதண்டம் வெல்லு வாரே 5

திருவிழாச் சேவையின் சிறப்பு

கார்படியு நகுலகிரித் திருக்கோயிற்

கடவையினார் கடவுஞ் செம்பொற்

றேரடியிற் பின்னடியார் திருக்கூட்டத்

துடன்வலமாய்த் தெரிசிப் பார்கள்

ஓரடிக்கோர் பரிமகப்பே றடைவருடம்

பாலுருள்வா ருற்ப வத்தின்

வேரடியுங் கடந்துகந்த வேளடியின்

முத்திசென்று மேவு வாரே. 6

சப்ரமஞ்சத் திருவிழா

நூறுநா லாறுதிருக் குடையானுங்

கணங்களும்போய் நுவன்று நாமங்

கூறிநாத் தழும்புறவே தொழும்புறுங்கோ

விற்கடவைக் குகனார் கண்­ர்

ஆறினார் திருமுகங்க ளாறினார்

படைக்கஞ்சா வயிலார் சங்கத்(து)

ஏறினார் சப்ரமஞ்சத் தேறினார்

அடியவரீ டேறி னாரே. 7

சுப்பிரமணியக்கடவுள் பவனி வருதல்

மல்லாக மாதகலான் மருகன்சுன்

னாகத்தான் மகன்பா வாணர்

சொல்லாச்சீர் ஈவினையான் துன்னாலை

யானத்தான் சுரும்ப ரோதிச்

சில்லாலை யிருள்வென்ற குறக்கொடிகா

மத்தானைச் சிகண்டி மாவூர்

வல்லானை மாவிட்ட புரநகரத்

திடைப்பவனி வரக்கண் டேனே. 8

காதன்மகளிர் செயல்

கட்டளைக் கலித்துறை

கரைக்காற் புனல்வயற் றென்மாவைக்

கோவிற் கடவைச் செவ்வேள்

வரைக்கா லிரத மணிக்குர

லார்ப்பு வருமுன்னமே

அரைக்கான்முக காற்கணக் குக்குமென்

சந்த மளாவுநறு

விரைக்கா றரக்கடுங் காலாய்

விளைந்தது மெய்மெய்குமே. 9

கட்டளைக் கலிப்பா

முடிவி லாதுறை சுன்னாக தான்வழி

முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்(து)

அடைய வோர்பெண் கொடிகாமத் தாளசைத்(து)

ஆனைக் கோட்டை வெளிகட் டுடைவிட்டாள்

உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக

உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில்

தடைவி டாதணை யென்றுப லாலிகண்

சார வந்தன ளோரிள வாலையே. 10

பேறுபெறல்

பன்னி ரண்டுக ரகந் தனைஎட்டுப்

பானை யைத்துண் டதரக் குயவனை

முன்னி ரண்டுகு டங்கையில் ஏந்தியை

முட்டி முட்டிமல் லாய்மாவைச் சாடியைப்

பொன்னி ரண்டுபெ றும்பெருஞ் செட்டியைப்

போற்று வீர்புல விர்சக ரந்தனை

முன்னர் வைத்தக லசம்பத் தும்பெறீஇ

முதன்மை சால்பெரு வாழ்வுறன் மெய்ம்மையே.

ஐயனார் தோத்திரம்

விருத்தம்

ஓங்குகரு ணையினுருவ மாங்குயிலை நிகருமொழி

உமையம்மை பங்கனாம்

உத்தமனு நத்தமர வத்தமிசை வைத்தவனு

மொண்சால மரநீழலில்

தாங்களிரு வருமாண்பெ ணாங்கொலென மருவியே

சரமசர முய்யமகவாய்த்

தந்திடச் சன்னைநகர் வந்திரட் சிக்குமா

சாத்தவருண் மூர்த்திமீது

தேங்குமது ரத்திமிழி னாசிரிய மோதவென்

சித்தத்து ணித்தமுறையும்

திகழுமரு மறைமுதற் பிரணவத் துருவான

சிற்பர னான்கினுடனே

தாங்குமொரு கையன்முரு கையனுய் யக்குறத்

தையன்மை யற்குதவினோன்

சந்திரசே கரானந்த சிந்துரா னனஞான

தற்பரன் பொற்பாதமே. 12

பள்ளக் கடற்குமிழி கொள்ளக் கடைந்தமுது

பண்ணவர்க் கருளுமுந்திப்

பதுமத்த னும்புதிய மதுமத்த னுந்தரும்

பாலகா ஞாலமுதல்வா

கள்ளக் கொடுந்தொழியி னுள்ளத்தி னோடுச்சி

கைப்பற்று மசமுகிதனைக்

கண்டங் கறுத்தவள்கை துண்டப் படுத்தமா

காளனை விடுத்தபரனே

அள்ளற் குரம்பினிடை வெள்ளத் தொதுங்கிவந்

தவிர்முத்து மதியென்னவே

ஆம்பற்கள் விள்ளமரை கூம்பச் சுரும்பிரை

யளித்திட நெளித்துவாளை

துள்ளப் பழங்களுதிர் பள்ளக்கு வளையற்

சுன்னையம் பதிவாசனே

சுத்ததத் துவமெத்து பத்தருத் தமசித்த

துத்யநித் தியவையனே. 13

மாதண்டம் வளைநேமி கோதண்டம் வாள்கொண்டு

வளரண்ட பகிரண்டமும்

மலருந்தி மிசைதந்த நரசிங்க வவதார

மதுசூத னப்பெருமனும்

வேதண்ட முறுகாள கண்டனும் பண்டுதரும்

விமலமெய்ஞ் ஞானரூபா

விழியா யிரத்தரச ரயிரா பதத்தர்தமை

மிசைவாழ்வு வைத்தபரனே

தாதுண்டு வரிவண்டு மிகமண்டி யிசைகொண்டு

தடமண்ட வெடிவரால்

தங்குதெங் கின்பரும் பைங்குரும் பைக்குலை

தகர்த்திடத்தண் டலைதொறும்

சூதுண்டு வளர்முலைமி னார்வண்ட லயர்வயற்

சுன்னையம் பதிவாசனே

சுத்ததத் துவமெத்து பத்தருத் தமசித்த

துத்யநித் தியவையனே. 14

அராலி முத்துக்குமாருப் புலவர்

- 1827

இவரது பிறப்பிடம் அராலி. இவர் அனலைதீவில் விவாகஞ் செய்தவர். ஊர்காவற்றுறையில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இவரியற்றிய நூல்கள் சீமந்தனி நாடகம், பதுமாபதிநாடகம், குறவஞ்சி, தேவசகாயம்பிள்ளை நாடகம் முதலியன. இவற்றுள் தேவசகாயம்பிள்ளை நாடகம் 1827இல் இயற்றப்பெற்றது.

தேவசகாயம்பிள்ளை நாடகம்

சேவகர் விருத்தம்

ஆன்றநஞ் சுகுக்கும் வளையெயிற் றரவி

னரும்பொறி தன்பத நெரிய

வூன்றியே யவனி முழுவதும் புகழ

ஒருகுடை நிழற்றியெந் நாளுந்

தோன்றுசீர் வஞ்சி வனமேந்த்ர ராயன்

சொற்படி யதிகாரஞ் செலுத்தும்

மூன்றென வுரைக்கு மதிகாரத் துரையே

முதல்வாநின் னடிபணிந் தோமே. 1

கற்பித்தான் கலிப்பா

புலரி வந்திடப் பொற்சேவல் கூவிடப்

பூவண் டார்த்தெழப் பொன்மலை மீதெழும்

அலரி கண்டநெந் தாமரை போல்முகம்

அந்தித் தாமரை யாகிய தென்கொலோ

சிலரி கழ்ந்ததோ தேர்வேந்தன் கோபமோ

தீய நோய்களோ தேவிதன் செய்கையோ

வலரி யன்னரண் வீரிய சூரிய

மந்த்ரத் தந்திரி யேநீ வகுப்பையே. 2

நீலகண்டன் கலித்துறை

சொற்கொண்ட கோட்டையும் மாடாடு

வீடுந் தொழும்புகளும்

பொற்கொண்ட பேழை முதலாகி

யுள்ள பொருட்களெல்லாம்

எற்கொண்ட கங்கு லெனமாய்ந்த

தென்ன விதமறியேன்

கற்கண் டினும்மிக்க சொல்லா

யிருஞ்சென்று காண்குவெனே. 3

பெண் கொச்சுகம்

ஆவியொன்று கூடிரண்டா யாரையுற்றிந் நாளளவும்

மேவி யிருக்கும் விறல்வேந்தே யென்தலைவா

பாவிநா னுன்சொற் படிநடப்ப தல்லாது

பூவுலகில் வேறொருவர் புத்தியினிக் கேளேனே. 4

நாகேசஐயர்

1809 - 1856

இவரது ஊர் வட்டுக்கோட்டை, தந்தையார் பெயர் இராமசாமிஐயர். இவர் பல நாடகங்களையும், பல தனிக் கவிதைகளையும் இயற்றியதோடு அடைக்கலந் தோட்டத்திற் கோயில் கொண்டருளியிருக்குங் கந்தசுவாமிபேரில் 'நாணிக்கண்புதைத்தல்' என்னும் துறைமீது நூறு செய்யுளும், 'அமுதநுணுக்கம்' என்னும் விடவைத்திய நூலும் இயற்றினர்.

அடைக்கலங்கோவை

பொன்பூத்த நாரணன் வேதன் முதலபுத் தேளிரெலாம்

தென்பூத்த வேத முறையா லருச்சனை செய்தமரும்

மின்பூத்த வேல னடைக்கலங் கோவை விளம்புதற்குக்

கொன்பூத்த குஞ்சரச் செஞ்சர ணெஞ்சினிற் கொள்ளுவனே.

சங்கர பண்டிதர்

1821 - 1871

இவரது ஊர் நீர்வேலி. தந்தையார் பெயர் சிவகுருநாதர். இவர் முருகேசபண்டிதர் முதலியோரின் ஆசிரியர். பல உரைநடை நூல்களை இயற்றியவர். தமிழ், வடமொழி ஆகிய இருமொழிப் புலமையும் நிரம்பப்பெற்றவர். ஆறுமுகநாவலர் போன்று சைவசமயத்தின் பெருமையை நிலைநாட்டியவர்.

தனிப்பாடல்

ஆறுமுகநாவலரால் இயற்றப்பெற்ற பெரியபுராண வசனத்துக்குச் சங்கரபண்டிதரால் அளிக்கப்பட்ட சிறப்புப்பாயிரம்.

நேரிசையாசிரியப்பா

உலக மனைத்தினு முலப்பிலா தோங்கி

யிலகுபே ரொளியா யேகனாய்ச் சிவனா

யினாதி முத்தனா யதிபர மாத்தனாய்த்

தனாதி சத்தியாந் தனிவடி வினனாய்த்

திருவளர் தில்லைச் சிற்றம் பலத்தினுட்

பொருவிலா நிருத்தம் புரிந்துநின் றொளிரு

முயர்சபா நாயக னுலகெலா மென்றெடுத்

தியலுலா மடியுரைத் தினிதருள் பூப்பச்

சிறந்தகுன் றத்தூர்ச் சேக்கிழான் மரபிற்

பிறந்தரு ளருண்பமொழித் தேவனாம் பெயரின

னருத்தனி யடியா ரறுபதின் மூவரும்

வருந்தொகை யடியார் மறுவிலொன் பதின்மரு

மெனப்படும் பரிசுடை யெழுபத் திருவர்த

மனப்படு மடிமை வளத்திற மதனைத்

தத்திடுந் திரைக்கடற் றண்டமிழ் நாட்டோர்

பத்திவை ராக்கியம் பழுதிலா ஞானம்

பெற்றிட விரித்துப் பீடுறப் பாடிய

பொற்புடைப் பெரிய புராணமாம் பெயர்பெறுந்

துகளறு நற்றிருத் தொண்டர் புராண

மிகலறு மிலக்கண விலக்கியப் பயிற்சியின்

வல்லோர்க் கல்லது மற்றையோ ருணர்ந்திட

வொல்லா தன்றியு முரைத்தவல் லோர்க்கு

மிடர்நோய் மதலிய வேதுவான் விவேகம்

படர்தலில் லாவழிப் பயன்படா தாதலி

னெல்லார் தமக்கு மெக்கா லத்தின

நல்லுப யோகமா நலந்தரற் பொருட்டுத்

திப்பிய மாகுமத் திரப்புரா ணத்தைத்

தப்பிலா யுத்திகள் சால்புற வேற்றியும்

வைத்திடும் புனைந்துரை வகைபல மாற்றியுங்

கத்திய ரூபமாக் கருணையி னியற்றிப்

பாவலர் வியப்புற யாவரு நயப்புறப்

பூவுல கனைத்திலும் பொலிந்திட வருளினன்

பேசுதே வாரம் பெறுசிவத் தலங்களு

ளாசதீர் திருக்கோ ணாசலங் கதிதரு

மிசைமலி திருக்கே தீச்சர மிரண்டையும்

வசையறத் தன்வயின் வைத்துமெய்ப் புகழ்பெறு

மீழமண் டலத்தினு ளினிதுறீஇ விளங்கித்

தாழ்விலா தோங்கித் தமிழ்நாட் டகத்தோர்

தன்பா லெங்கணு மன்பால் வசித்திட

வின்பா லுயர்ந்த யாழ்ப்பா ணத்தினிற்

பரம்பர னடியவர் பரம்பரை முறையாற்

பரம்பிவை முதலாற் பல்வளம் பல்கிய

நலம்பொலி பெருந்திரு நல்லைமா நகரினன்

குலம்பொலி கந்தவேள் குமாரனா யுதித்தோன்

வடமொழி யதனின் மாப்பெரும் பவுட்கரந்

திடமுற விளங்குஞ் சிவஞான போத

மாதியா கமங்களுக் ககல்வியாக் கியானமுந்

தீதிலா வுறதிச் சித்தாந்த சிகாமணி

பிரமா தீபிகை பிராசாத தீபிகை

யுரனுறு நற்சிவ யோகசா ரம்முதற்

பல்பெறுங் கிரந்தமும் பரந்த செந்தமிழி

னல்வரந் தருஞ்சிவ ஞானசித் திக்குச்

சீரணி யுரையுந் தெளிவுற வருளிய

பூரண சிவானு பூதிமா னாகிய

திருநெல் வேலிக் சீரு ருடையனாரும்

பெருமைசேர் ஞானப் பிரசாக முனிவரன்

வந்தவ தரித்த சுந்தர மரபினன்

பந்தம தகற்றும் பல்பெருந் தவத்தின

னீதியிற் பெருகிய மேதகு நிதியினன்

கோதிலாக் குசைநுதிக் கூர்மைகொண் மதியினன்

சுருக்கமி லிலக்கணத் தொகைபல விலக்கியந்

தருக்கவே தாந்தப் பெருக்கமுற் றுணர்ந்தோன்

வாதிக ளேங்கி வாய்புதைத் தோட

மேதினி யெங்கணும் வியன்புகழ் படைத்தோன்

வயம்பெறு வண்மையன் வரகுண மேரு

சயம்பெறு சைவ சபைக்குய ரதிபதி

சிமே யாமெனச் சிவனடி யவரைப்

புவனியிற் பரிவொடும் போற்றிவாழ் புனித

னக்குமா மணிநீ றணிதிரு மேனியன்

மிக்குயர் செந்தமிழ் வேதபா ராயணன்

மேலா கியதனி விசேடச் சுருதியா

மூலா கமங்களின் முப்பொரு ளருளினால்

யுத்தியி னமைத்துணர்ந் துயரனு பூதி

சித்திபெற் றோங்கிய வித்தக சிரோமணி

யவமுறு பரமத வந்தகா ரங்கெடச்

சிவமத கமலந் திகழ்த்திடுங் திவாகரன்

றொழுதுடல் கம்பித் தழுது தொழும்புசெய்

பழுதின்மா ணாக்கர் பாங்குறச் சூழச்

சொல்வளச் சுவையாற் சுருதிகட் கினிதா

யல்கலில் லாத வரும்பொருள் வளத்தாற்

சிந்தையாஞ் செய்யுறீஇச் சிவப்பயிர் வளர்க்கு

மந்தமி லின்பத் தமுதமா மழைநிகர்

மெய்யுப தேசம் விளங்கிட விரித்துரை

செய்திடும் படுதர தேசிக சிகாமணி

மறைதிகழ் பிரணவ மன்ன

முறைதிக ழாறு முகநா வலனே.

கனகசபைப் புலவர்

1829 - 1873

இவரது ஊர் அளவெட்டி. தந்தையார் பெயர் வேலுப்பிள்ளை. மதம் கிறித்தவம். இவர் 1751 விருத்தப் பாக்களாலே 'திருவாக்குப்புராணம்' எனப் பெயரிய காவியமொன்றை இயற்றினர். சென்னபட்டணத்தில் வசித்த போது கண்டி அரசனின் பௌத்திரனான அழகர்சாமி பேரிலே 'அழகர்சாமி மடல்' என்னும் பிரபந்தம் ஒன்றைப் பாடி அதனுடன் சீட்டுக்கவி யொன்றையுஞ் சேர்த்து வேலூரிலிருந்த அழகர்சாமிக்கு அனுப்பினர் என வரலாறுகள் கூறும்.

திருவாக்குப் புராணம்

அனைத்துலகுந்த திருவாக்கா லளித்தகில

சராசரமு மருட்சித் தத்தே

நினைத்துளவப் படியமைத்துக் காத்தளிக்குந்

தனிமுதலா நிகரி லாதான்

தனைத்துதிசெய் தெண்ணுகின்ற தகுங்கருமங்

சித்திபெறத் தருக வென்றே

இனைத்தெனவொப் போதரிய விணைமலர்த்தாள்

சிரத்தேந்தி யிறைஞ்சு வாமே.

சீட்டுக்கவி

நிறைநிலவு பொழியமுத கிரணசந் திரனென்ன

நின்றிலகு கின்ற தொடையாய்

நேரலர் படைக்கடலை வீரவே கங்கொண்டு

நிருமூல மாக்கு படையாய்

நெடியதரு வைந்துமெழு முகிலுமிணை யல்லவென

நித்தமருள் கின்ற கொடையாய்

நிலவலைய மெங்கணுங் கல்விநிலை பெற்றிலகு

நிகரற்ற கீர்த்தி யுடையாய்

திறைநிலவு தவழுமுயர் பொறைபலவு மெனவெளவு

செங்கையுத் தண்ட தீரா

செயமாது குடிகொண்ட திண்புயா சலவுளத்

திருமா துவக்கு நெறியாய்

தென்னிலங் கேசவெழின் மன்னுமங் கசரூப

திறலழகர் சாமி யென்னுஞ்

சிங்கவே றனைவுத் துங்கவள் ளக்களி

சிறந்திட மகிழ்ந்து காண்க. 2

துறைநிலவு கலைவாரி கரைகண் டுயர்ந்துநின்

றொல்குலத் தரசர் தம்பாற்

றோமிலா நண்புபெற் றோங்குவைத் தியநாத

சுகுணன் குலத்து தித்தோன்

துகளற்ற சீரளவை நகரத்து வருகனக

சபைமிக்க துன்று பத்தி

தூண்டநின் மாபெருமை பூண்டசுமு கம்பெறச்

சோர்விலா தெழுது நிருபம்

முறைநிலவு மிறைமைபெறு முடிமன்னர் திலகநீ

முகமலர்ந் தகமு வந்தே

மூளுமன் பாலணிய நீளுமின் பானவிசை

மெய்த்தமடன் மாலை தரவும்

முகதரிச னங்கண்டு மிகுகரிச னங்கொண்டு

முன்பெய்த வுங்கரு திநின்

முன்னணுக்கு மென்றனக் கின்னருள் சுரந்தூழி

மூதுலகி னீவாழி யே. 3

புலவராற்றுப்படை

பூவின் மீதெவரு மெய்ச்சு பாவருளில்

புல்லர் மீதுசொலி நெஞ்சுகால்

புண்கள் பட்டுவரு பாவ லீரெளையொர்

புரவ லன்கொலென வெண்ணலீர்

யாவின் மீதுமுய ரோவில் சீருறு

மிலங்கை நாடர சியற்றுபேர்

இசைவி ளங்கழகர் சாமி யண்ணலரு

ளீகை பெற்றவரு புலவன்யான்

நாவின் மீதுலவு பாவி னத்தருமை

நன்கு ணர்ந்தகமி ழறிவினான்

நாவ லர்க்குதவு வள்ள லங்கவனை

நண்ணி வின்னபரி செய்துவீர்

மாவின் மீதரச னந்த மத்திமிசை

மருவு பேரரச னந்தநீள்

வைய மீதரச னந்த மென்றுமவன்

வாயின் முன்னரடை யாளமே. 4

குமாரசுவாமி முதலியார்

1791 - 1874

இவர் உடுப்பிட்டிக் கோயிற்பற்றைச் சேர்ந்த வல்லு வெட்டி (வல்லிபட்டி) என்னும் ஊரிலே கதிர்காமபூப முதலியாருக்கும் வள்ளியம்மைக்கும் புதல்வராக பிறந்தார். ஊர்க்காவற்றுறை நீதான் கு. கதிரவேற்பிள்ளை என்பவர் இவரது புதல்வர்.

இவர் பாடிய நூல்கள் : அருளம்பலக்கோவை, தீருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல், நல்லைக்கலித்துறை, கந்தவனநாதர் ஊஞ்சல், இந்திரகுமார நாடகம் முதலியன.

அருளம்பலக்கோவை

திங்களா ளுடலகந் தேய்வுற மாய்வுறச் சித்தரைப்போற்

றங்கா மலந்தர மார்க்கந் தவம்புரிந் தாலுந்தமிழ்

மங்கா துடுவை வருமரு ளம்பல மன்னன்வரைக்

கொங்கார் குழலி முகம்போன் மெனநினைக் கூறரிதே. 1

தீருவிற் சுப்பிரமணியர் பதிகம்

பூமேவு வாவிப் பொறிச்சிறகர் வண்டனம்

பொதியிணர் முறுக்கவிழ்த்துப்

புதுமது வருத்தியிசை கூடக் கருங்குயில்கள்

புத்தமிழ் துறழ்ந்துபாட

மாமேவு களிமயில் சிறைப்பறை யடிக்கமட

வஞ்சநட மாடநீடி

மன்னுத• டலைதலை யசைத்துநனி நாடமிடை

வண்டான நன்றுபுகழுந்

தேமேவு வளமருத வயல்புடை யுடுத்திலகு

செங்கமலை தங்குவல்வைத்

தீருவிலை நற்றான மாவெண்ணி வள்ளியொடு

தேவகுஞ் சரியுமகிழ்

தூமேவு சத்திகைத் தலமொளிர வெம்மனோர்

துயர்தீர்க்க வந்தமுருகே

சூரநீ லக்கலப மயில்மீ துலாவிவரு

சுப்ரமணி யக்கடவுளே. 2

நல்லைக் கலித்துறை

ஆனியி லாடி யவாவணி பூங்கொடி யண்ணறரு

வானிய னந்த வனஞ்சூழு நல்லை மயிலனையா

டானு மறந்தன ­பொருட் கேகுறிற் சாபறைகேட்

டீன முறுமுன் விரைந்துசெல் வாயெம் மிறையவனே. 3

புரட்டாதி யைப்பசி மாதத்த னீந்தருள் புங்கவன்சூர்

சிரட்டாதி வாழ்நல்லை மாதுக்கு நீகற்கச் சேறலுணர்

பொருட்டாங்குச் சென்று சொலிலாவி போமெனும் பூவையர்சொற்

றெருட்டானிலாய்வலவென்செய் தாயினிச் செய்வதென்னே.

கார்த்திகை மார்கழீஇத் தைவர மாசிதக் கண்முலைப்பா

லீர்த்தகை வேள்வள நல்லையன் னாள்பொருட் டேகுமென்றேர்

பார்த்தகை கண்ணும் பறியாள் பசலைமெய் போர்த்திருப்பா

­ர்த்தகைசேர்முகில்காள்யான்வரன்முன்னிகழ்த்துவிரே

பங்குனி சித்திரை யாகவை காசிப் பரமனிட

மங்கை தருங்கந்த வேடங்கு நல்லை மயில்பிரிபோ

தெங்குஞ் செலுஞ்செலுஞ் சம்பந்தன் வித்தைகற் றெய்துமென்ற

தங்கறிந் தும்வல வாகார்முன் றேர்பின்ன ராக்கினையே. 6

தேசா ரிளமுலை மானார் கலவியிற் சிக்கியவர்

பாசாங்கிற்பட்டுப் பதைத்துழன் றேனல்லைப் பண்ணவனே

ஈசா வளியனை யிந்நாளுஞ் செய்துகை தேய்ந்தகம

லாசாரி கைக்கினிப் பண்ணக்கொடாதெனை யாட்கொள்வையே.

கல்லைக் கடையர்கள் கைவிட் டெறியக் கனன்றெழுந்து

பல்லைத் திறந்துறு மிக்கவி தெங்கின் பழமுதிர்க்கு

மல்லற் பழனங்கள் சூழ்நல்ல நாதனை வந்தடைந்தோர்க்

கில்லைப் பிரமக் குயவன் வனைவதற் கேதுக்களே. 8

கட்டித் தயிரை யிடைச்சியர் மத்திற் கடையப்பிரி

குட்டிப் புலியொலி யென்றே புலிகு முறும்புறவம்

கிட்டிக் கிடக்கின்ற நல்லையில் வேலற்குக் கிள்ளைப்பிள்ளாய்

எட்டிச்சற்றேசென் றெனுள்ளஞ் சொலாய்பின் னையென்சொல்வதே.

விநாயகமூர்த்திச் செட்டியார்

- 1876

இவரது ஊர் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை. தந்தையார் பெயர் சின்னத்தம்பிச் செட்டியார். முப்பதாம் வயதிலே தம்மைப்பீடித்த காசேநோயின் வேதனை பொறுக்க மாட்டாது கதிர்காம யாத்திரை செய்து முருகனிடம் முறையிடவே காசநோய் மாறவாரம்பித்த தென்பர். பின்பு திரும்பி நல்லைநகர் வந்து முருகன் முன்னிலையிற் பாடியரங்கேற்றிய நூலே 'கதிரை யாத்திரை விளக்கம்' ஆகும். இந்நூல் ஒரு நொண்டிச்சிந்து ஆகும்.

கதிரை யாத்திரை விளக்கத்திற்குச் சிறப்புப்பாயிரம் நல்கியவர் ஆறுமுகநாவலருடைய தமையனாராகிய பரமானந்தப் புலவர் ஆவர்.

கதிரை யாத்திரை விளக்கம்

விநாயக வணக்கம்

சீரார் கதிரைமலைச் செவ்வேடன் சந்நிதிக்கு

நேராகச் சென்றுவந்த நீணெறியை-ஆராத

காதலுடன் செப்புதற்குக் கம்பகும்பத் தனைமுதன்

பாதமலர் சென்னியில்வைப் பாம். 1

நொண்டிச்சிந்து

சீரேறு வண்ணை நகரம் இந்த

செகதல மெலாம்புகழுஞ் செய்ய நகரம்

பாரேறு முயிர்க ளுக்கு நல்ல

பரமுத்தி போற்சுகம் பாலிக்கு நகரம்

தருக்கண் மிகவு மோங்கும் அதிற்

றானேறி மந்திகுதி கொண்டு லாவும்

கருக்கொண் முகிலை யுடைக்கும் அதிற்

காணுந்தன் ­ரைவாய் வைத்துக் குடிக்கும்

பலவின் கனிகள் வெடிக்குட் அதிற்

பாயுஞ்செந் தேன்வயல் வரம்பை யுடைக்கும்

குலவும் நெல்லினை விளைக்கும் அதனாற்

குடிகளெல் லாஞ்செழித் தோங்கு நகரம்

நல்லோர்கள் வாழு நகரம் வைசியர்

நாடும்வே ளாளர்புடை நீடு நகரம்

செல்வர் செறிந்த நகரம் புலவர்

செய்யா ளுடனமருஞ் செய்ய நகரம்

மறையோர்கள் வாழு நகரம் மட

மங்கையர்கள் பாடலிசை பொங்கு நகரம்

துறவோர்கள் கூடு நகரம் புலவர்

சொல்லுங் கவிரைபல பாடு நகரம்

இந்த நகரந் தனிலே வேம்படி

இருக்குங் கணபதியை யின்புடன் கண்டு

வெந்துயர்க் கடல்க டக்க இதுநல்

வேளையடி யேனையினி யாளுவா யென்றேன்

பொற்பாதத் தன்னைத் தொழுதேன் புகழ்

போற்றிக்கொண் டென் மனசைத் தேற்றி கொண்டேன்

தற்பரா விடைதா வென்றேன் அவ்விடந்

தன்னைக்கடந் தப்பாலே நண்ணும் பொழுதில்

வண்ணையில் வாழ்கோ பாலன் துய்ய

மாதவத்தி னுலுதித்த வைத்திய லிங்கன்

மண்ணா டர்புகழ் சீலன் மட

மங்கையர் விழிக் குகந்த மகிபாலன்

சீரகத் தொங்க லுடையான் தன்னைச்

சேர்ந்தாரை வாழ்விக்குஞ் செய்ய கொடையான்

ஆரும் புகழும் நடையான் புவி

யடர்ந்துப டருங்கீர்த்திக் கொழுந் துடையான்

மாயோ னயனறி கிலா ஈசன்

மலரடிக் கர்ச்சனை செய்திடுஞ் சீலன்

காயமிது பொய்யென் றெண்ணும் நல்ல

கருத்துடை யானன்பு மிகுத்து டையான்

முன்செய் தவப்பலத் தாலும் அன்பு

முழுது நிறைந்த மனநலத் தாலும்

இன்பாய்ப் பிரதிட்டை செய்த வயித்

தீசுரனு றையுங்கோயிற் கோபுரங் கண்டேன். 2

விருத்தம்

காலன் றனைமார்க் கட்னுக்காக்

காலா லுதைத்த கண்ணுதலே

பாலன் றனக்காப் பாற்கடலைப்

பரிவோ டீந்த பரம்பொருளே

தாலம் பரவ வண்ணைநகர்

தனில்வாழ் வுகந்த தற்பரனே

ஆலந் தனைமுன் னுண்டவனே

யடியேன் றளையிங் காளாயோ. 3

நொண்டிச்சிந்து

அரகர சிவ வென்றேன் அவன்

ஆலயத்திற் சென்றுதீர்த்த மாடிக் கொண்டேன்

அரவம் புனைந்த பெருமான் பங்கில்

அமர்தையல் நாயகியை யன்புடன் கண்டேன்

வந்தேனுள் வீதி வலமாய் அங்கு

வாழும்வயித் தீசுரனை வாழ்த்திக் கொண்டேன்

சிந்தையிற் றுயர் தீர என்றன்

தீவினையெல் லாமகற்றி யாளுவா யென்றேன்

செய்யநிறச் சடை முடியாய் உன்றன்

செம்பொற் பாதந்தந்தென் வினை தடியாய்

கையின்மழுப் படை யுடையாய் அன்பர்

கருத்தி லிருக்கு மழவே றுடையாய்

செய்ய வயித்திய லிங்கனே என்றன்

தீவினையெல் லாந்தவிர்க்கும் மகா லிங்கமே

அய்யா வுன்னடி போற்றி என்றே

அவிடம்விட் டெனென்ற னவலம் விட்டேன்

சாந்தையர் மடத்தில் வந்தேன் அங்குத்

தங்குவீர கத்திவிநா யகற்ப ணிந்தேன்

போந்தே னவிடம் விட்டேன் திருமால்

பொற்பாதம் போற்றிக்கொண் டப்பாற் சென்றேன்

அன்னை துர்க்கைபதம் பணிந்தேன் அவள்

அரியபுகழ் பாடிக்கொ• டப்பாற் சென்றேன்

கன்னலுடன் செந்நெல் வளரும் நல்லூர்

கண்டே னெஞ்சின்மகிழ்வு மிகவுங் கொண்டேன்

செங்கோல் செலுத்து மகிபன் நல்ல

சிங்கவா ரியனரசு செய்த நகரம்

மங்கையர் விழிக் குகந்தவன் திறல்

மன்னர் புகழ் செகராச சேகரனும்

பரராச சேகர னும் பொல்லாப்

பற்றலர் வெருவரச கேசரி யும்

அரசு புரிந்த நகரம் புலவர்கள்

அரிய கவிதைமாரி பெய்த நகரம்

செறியும்பண் ணைகள் சூழுஞ் செல்வர்

திகழு மராலியென்னும் பதி வதிவோன்

மறையவன் சந்திர சேகரன் நல்ல

மாறில்கிள்ளை விடுதூது கூறு நகரம்

வேதவ னத்தின் வாழ்வோன் கற்றவர்

விரும்புசொக்க நாதனென் றிடும் புலவன்

சோதிக் கடம்பன் மீதி குறவஞ்சி

சொற்றநகர மிகுசீர் பெற்ற நகரம்

செல்வர்கள்செ றிந்த நகரம் புலவன்

சேனாதி ராயன்வெண்பாச் செப்பு நகரம்

நல்லோர்கள் வாழு நகரம் நல்ல

நாகரீக மானநல்லை யென்னு நகரம்

இந்தநன் னகர் தன்னிலே செங்கை

ஈறாறு கொண்டவ னென்னை யாள்வோன்

வந்துகுடி கொண்ட கோவில் புவனேக

வாகுபிர திட்டைசெய்த மாசில் கோவில்

கோபுரந் தரிசித் தேன் நின்று

கும்பிட்டே னுள்வீதி வலமாய் வந்தேன்

நாவினாற் போற்றி செய்தேன் அதனை

நன்றாகக் சொல்கின்றே னன்கு கேளும். 4

சின்னத்தம்பி

1830 - 1878

இவர் உடுப்பிட்டியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை என்பவரின் புதல்வர். இளமையிலே தியாகராச பண்டிதரிடங் கல்வி கற்றார். இவரியற்றிய செய்யுள் நூல்கள் : வீரபத்திர சதகம், வீரபத்திரர் பதிகம், வீரபத்திரர் ஊஞ்சல், புதுச்சந்நிதி முருகையன் பதிகம், விக்கிநேசுரர் பதிகம், வீரமாகாளியம்மன் பதிகம், சிவதோத்திர கீர்த்தனை, மதனவல்லி விலாசம், இராமவிலாசம், நில அளவைச் சூத்திரம் முதலியன.

வீரபத்திர சதகம்

ஏரேறு பரிதியுட னெழிலேறு மமரர்களு

மேழேறு முனிவருமலா

தியலேறு மதிமுத லிவரேறு துதிகள்செய

லினிதேறு கயிலைமலையில்

வாரேறு தனமதனின் மணியேறு பணியணியும்

வகையேறு மலைமகளுடன்

வயமேறு முலகதனி னயமேறு முயிர்கணிதம்

வாழ்வேற வீற்றிருக்குங்

காரேறு கடுமிடறொ டேறேறு கடவுளது

கண்ணேறி வந்தபுலவர்

கழலேறு பதமதெனு நிழலேறி யெனதுதுயர்

கரையேற வருடருகுவாய்

தாரேறு கன்னலொடு செந்நெல்விளை நெல்வயற்

றங்குடுப் பிட்டிநகரிற்

சந்திர குளத்திலம ரெந்தையே வந்துனரு

டருவீர பத்திரதேவே.

பரமானந்தப்புலவர்

இவர் நல்லூர்க் கந்தப்பிள்ளை என்பரின் புதல்வர் ; ஆறுமகநாவலரின் கமையனார். யாழ்ப்பாணம் பிரசித்த நொத்தாரிசாக விளங்கியவர். விநாயகமூர்த்திச் செட்டியாரியற்றிய கதிரை யாத்திரை விளக்கம என்னுந் நூலிற்குச் சிறப்புப்பாயிரம் அளித்தவர் இவரே. நல்லைக்கந்த ரகவல், நல்லைக்கந்தர் கீர்த்தனம் என்பன இவரால் இயற்றப்பட்ட நூல்கள்.

நல்லைக்கந்த ரகவல்

கடன்முகட் டுதித்தசெங் கதிரெனத் திகழும்

படம்விரித் தெழுந்த பஃறலை யரவின்

பருமணித் தொகையு மரிமணிக் குவையும்

பச்சையுறு வயிரமு மற்றைய மணியும்

விண்ணகத் திடையிடை தண்ணிழல் விடுப்ப

இந்திர வில்லென் றினமயி லேமாந்

தெங்கணு மகவுஞ் செம்பொனி னிமையத்

தண்கரி நடுவட் டழைத்தெழு பச்சைப்

பைங்கொடி யன்றருள் பண்ணிய மருந்தே

இருவராண் டளந்து மொருகரை காணாக்

கருணைவா ரிதியின் விளையுமா ரமுதே

கருத்துறக் கருதிக் கசிந்தவ ருள்ளத்

திருட்டொகை துரக்குந் திருத்தகு விளக்கே

இல்லையென் றொருவரை யிரவா தடியவர்

அல்லனோ யகற்றியின் பருளுநன் விதியே

வண்டினங் குடைந்துபண் பாடிட வளர்முகை

விண்டலர் கடம்பெனும் வெறிமலர்த் தொடையனே

கோகன கத்தில்வாழ் குரவனைச் சிறைபுரிந்

தாருயிர் படைத்தரு ளளித்திடு முதல்வனே

கீரனைச் சிறைசெயுங் கிருத்திமந் தனைநெடு

வீரவேல் விடுத்துமுன் னகத்தியர்க் கருமறை

தெருட்டுநல் லுணர்வருள் சிற்பரா னந்தனே

நாரதன் மகத்தினில் நணுகுறு செச்சையை

ஊர்த்தி யெனப்பிடித் தூர்ந்திடு மொருவனே

ஆறுருத் தனையுமோ ரங்கையா லணைத்துமை

ஓர்வடி வாத்திரட் டியவொரு முருகனே

தடநெடுஞ் சரவணந் தனிலறு மங்கையர்

குடமுலை யூறுபால் குடித்திடுங் குமரனே

ஆவினன் குடியினு மரியவே ரகத்தினுஞ்

சீரலை வாயினுந் திருப்பரங் கிரியினும்

பழமுதிர் சோலையென் றுரைபெறு மலையினும்

உளமகிழ் வோடுறை யொப்பிலா முதல்வனே

குன்றுதொ றாடல்செய் துலவிடுங் குழகனே

அதிர்கருங் கடல்புடை யடர்ந்தவம் புவிதொழுங்

கதிரையங் கிரியுறை கங்கைதன் புதல்வனே

குடவளை யினம்பல குறுமுதன் பணையொடு

தடமலர் வாவிகள் தயங்குநல் லூரனே

அன்பினர் நெஞ்சத் தடந்தொறு மலர்ந்தநின்

பங்கயப் பாதமென் சிந்தைவைத் தியம்புவன்

மாயிரு ஞாலத்து மக்களிற் பற்பலர்

தந்தையுந் தாயும் தமருந் தனயருஞ்

செஞ்சொல்வஞ் சியருந் தேடிய பொருளம்

மீமிசைப் பவக்குழி வீழ்த்திடப் பிணித்த

பாசமென் றெல்லாம் பற்றறத் துறந்து

காட்டிடைப் புகுந்தொரு காலினை முடக்கிமேல்

நோக்கிய கண்ணொடு கூப்பிய கையுமாய்

நெடுந்தவம் புரிந்து மெலிந்தனர் தளர்ந்துங்

காற்றுதிர் சருகுங் காயுங் கனியும்

வாய்த்தன வருந்தி வருந்தின ருலைந்தும்

பேயெனத் திரிந்தும் பேருடல் வரண்டுங்

கானிடை விலங்கெனக் காண்வர வுழன்றும்

வேற்றொரு தேவரை வேண்டார் நின்னடி

போற்றினர் முத்தி புகுவது பொருளாய்

அங்கவை யனைத்துஞ் சிந்தைசெய் யாது

தண்டலை மலர்விழும் வண்டின மென்னக்

கண்டன கண்டன காமுற்று வைகலும்

அறுசுவை யமுத மொருசுவை குறைந்துழி

அட்டனர் வெருவ வெட்டன வெகுண்டுந்

தண்ணறுஞ் சாந்து சவாது குங்குமம்

ஒண்மலர்ச் சூட்டென் றுள்ளன புனைந்தும்

நன்னெறி படர்கிலார் நட்பினை நயந்தும்

நாணிலாக் கணிகையர் நயனவேற் குடைந்தும்

வாணா ளெல்லாம் வீணாக் கழித்தனன்

இனமணிக் குலங்க ளிமைக்குமா முடியுந்

தினகரர் போலொளி திகழ்முக மாறும்

ஒருமர வடிவா யுலகினை யுலைத்தசூர்

இருபிள வாக வெறிந்திமை யோர்கள்

சிறைதவிர்த் தருளிய திருநெடு வேலும்

மற்றுள படையும் வரதமு மபயமும்

உற்றிடு பன்னிரு கைத்தல நிரையும்

அருவரை யனைய வகலமு மிரண்டு

மடவன முவந்து வாழ்வுறு பாலும்

கலகலென் றிசைக்குநின் கழலுங் காட்டி

மரகதக் கலாப மயின்மிசைத் தோன்றும்

வடிவினை வாழ்த்தி மறவா துள்க

இரவினும் பகலினு மிறைஞ்சிலே னாயினும்

உன்னையே தெய்வமென் றுளத்துட் டுணிந்தனன்

அன்னது துணிந்தேற் குன்னது பாரஞ்

சினமொடு தீமையு மனமடு காமமும்

நெறியிடைப் புகாத பொருளிடைச் செலவும்

நரகிடை வீழ்த்துங் கொலைகள வாதியும்

இன்னவு மிம்மையி லகற்றி

அம்மையின் முத்தி யருளு மாறே.

ஆறுமுகநாகவல்

1822-1879

இவரது ஊர் நல்லூர். தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை; தாயார் பெயர் சிவகாமி அம்மையர். இவர் இரு பாலைச் சேனாதிராச முதலியாரிடமும் அவர் மாணாக்கர் நல்லூர்ச் சரவணமுத்துப் புலவரிடமுங் கல்வி கற்றவர். தமது வாழ்நாள் முழுவதையும் பிறருக்குக் கல்வி கற்பிப்பதிற் கழித்தவர். பல உரைநடைநூல்களைப் புதிதாக எழுதியும் பழைய நூல்கள் பலவற்றைப் பதிப்பித்துந் தமிழை வளர்த்தவர்.

இவர் பல தனிப் பாடல்களைப் பாடியுள்ளார்.

உடையவர் துதி

மணிகொண்ட கடல்புடைகொ ளிந்நாட்டி லுன்சமய

வர்த்தன மிலாமை நோக்கி

மகிமைபெறு நின்புகழ் விளக்குவான் கருதியிம்

மைப்பொருட் பேறொ ழித்தே

கணிகொண்ட வித்தியா சாலைதா பித்திவவூர்க்

கயவர்செயு மிடர்கள் கண்டுங்

கல்லூரி யதைநடாத் தப்பொருட் டுணைசெயக்

கருதுவோ ரின்மை கண்டும்

அணிகொண்ட சாலைய தொழிப்பனஃ துனையிகழு

மந்நிய மதத்தர் சாலை

யாமென நினைந்தெனெஞ் சற்பகற் றுயருற

லறிந்துமொரு சிறிது மருளாத்

திணிகொண்ட நெஞ்சவினி நின்முன்யா னுயிர்விடுத

றிண்ணநீ யறியா ததோ

சிறியேன தன்பிலர்ச் சனைகொளழ கியதிருச்

சிற்றம் பலத்தெந் தையே. 1

ஆசுகவி - விநாயக வணக்கம்

சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச்

சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப்

பார்பூத்த புறச்சமய விருள்க ­ங்கப்

பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப்

பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்

பிறைபூத்த சடைமௌலிப் பிரானார் தந்த

வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றோதும்

மதம்பூத்த விநாயகன்றான் வணங்கி வாழ்வாம். 2

பெரியபுராண வசனத்து விநாயக வணக்ம்

சீர்பூத்த மறைமுதற்கட் பிரணவத்தி

னரும்பொருளைச் சிவனார் தந்த

பேர்பூத்த நிருமலசின் மயவடிவை

யானந்தப் பெருக்கை யென்றுங்

கார்பூத்த திருநெடுமா லயன்முதற்புங்

கவர்வணங்குங் கருணை வாழ்வைப்

பார்பூத்த வடியர்வினை கெடுத்தருளுங்

கற்பகத்தைப் பணிந்து வாழ்வாம். 3

சித்திவிநாயகர்

சீரேறு கருணையுரு வாயவிசு வேசனொடு

திகழ்விசா லாட்சி தந்த

செல்வமே யடியவர்க ளினிதுண்ண வுண்ணத்

தெவிட்டாத தெள்ள முதலே

பேரேறு மறிவிச்சை தொழிலென்று மதமூன்று

பெருமா னந்த வடிவே

பிரணவப் பொருளேயென் னுறவேயெ னுள்ளமே

பேசுமிரு கண்ணின் மணியே

காரேறு நெடுமாலொ டயன்முத லியாவருங்

காணரிய நினதி ரண்டு

கழல்பணிந் திடின்மகப் பேறுமுத வியா€யுங்

கைகூட்ட லரிதா குமோ

வாரேறு களபபரி மளமருவு முபயமுலை

வலவையுள மகிழ்கொழு நனே

வண்டுமது வுண்டுலவு தண்டலை யராலிநகர்

வாழ்சித்தி வேழ முகனே. 4

விசுவநாதசுவாமி

உலகெல மாகிவே றாயுடனு மாய்நின்ற

உண்மையறி வின்ப வடிவே

ஒங்குமீ சானாதி சத்திபஞ் சகமேமெய்

யுருவெனக்கொண்ட முதலே

அலகிலா முற்றறிவு முதலறு குணங்களா

றங்கமென வுடைய பரனே

அவனிமுதன் மூர்த்தமெட் டுடையனாய்ச் சர்வாதி

யட்டநா மங்கொள் சிவனே

இலகுசீ ரைந்தொழி லுஞற்றியு முஞற்றிலா

தினிதுதிகழ் கின்ற பதியே

எண்ணத் தெவிட்டாத தெள்ளமுத மேயடிய

ரிடர்போக்கு சேம நிதியே

விலகலா துன்னைவழி பாடுசெயு மண்டர்க்கு

வேண்டுவ கொடுத் தருளுவாய்

விண்டல மளாவிவளர் தண்டலை யராலிநகர்

சிசுவநா தக்க டவுளே. 5

விசாலாட்சியம்மை

பொன்பூத்த விமயப் பொருப்புதவு புதல்வியே

போதவோ னந்த வடிவே

பொலியுமெண் ணான்கறம் வளர்த்தமரு மன்னையே

போக்குவர வற்ற பொருளே

கொன்பூத்த வயில்வேற் குமரனைத் தந்தநிர்க்

குணனிடைப் பாலம் மையே

குலவுபரை யாதியைஞ் சத்திவடி வாய்நின்ற

கோதில்கரு ணாவா ரியே

மின்பூத்த கொடியிடைகொள் சலசைகலை மகள்பணியு

மேன்மையுறு மாதே வியே

மிக்கபா மாலைசாத் திடுமடியர் வேண்டுவன

வேண்டியாங் குதவு நிதியே

தென்பூத்த நினதுபத மலரிறைஞ் சிடுமடியர்

சிந்தித்த வரமருள் செய்வாய்

செங்கமல மலர்வாவி தங்கிடு மராலிநகர்

திகழ்விசா லாட்சி யுமையே. 6

அரிமழம், சுந்தரேசர் மீனாட்சி துதி

திரக்கிளர் கமலத் தயன்முத லமரர்

திகழ்மறை முனிவரேத் தெடுப்ப

மருக்கிளர் சோலை யரிமழ நகர்வாழ்

வரதனே மறைமுடி விளங்குங்

குருக்கிளர் மணியே யன்பர்த மகத்துக்

குலவிய தீபமே யடியேன்

கருக்கிளர் பிறவி நோயொழித் தருள்வாய்

கடவுளே கருணைவா ரிதியே. 7

மெய்யறி வின்ப வடிவமே நெடுமால்

விரிஞ்சனா டரும்பரஞ் சுடரே

மொய்குழற் கயற்கட் கொடியொரு மருங்கு

முளைத்தெழு முதயமா மருந்தே

தெய்வத மறையோர் தினந்துதித் திறைஞ்சத்

திகழரி மழமுறை சிவனே

யுய்யநன் னெறிநா யேற்கினி தருளா

யொருவனே யுலகநா யகனே. 8

அவனவ ளதுவென் றுரைத்திடு முலக

மாகிவே றாயுள னாகுஞ்

சிவபெரு மானே படைத்தலா தியவைந்

திறந்தொழி லுயிர்ப்பொருட் டஞற்ற

நவவடி வெடுத்த வருட்பெருங் கடலே

நவிறரு மரிமழ நகர்வாழ்

பவனெனுஞ் சொக்க நாதனே யெனக்குப்

பற்றுநின் பதமலா திலையே. 9

அங்கியின் சத்தி யொன்றதே யெனினு

மடுதலா தியபல தொழிலாற்

பொங்குபஃ றிறந்த தாதலபோற் பதிக்குப்

பொருந்துமோர் சத்திநீ யெனினுந்

தங்கிய பரையே முதலவைத் தானோர்

சகம்புக ழரிமழ நகர்வா

ழங்கயற் கண்ணி யம்மையே யுன்ற

னடித்துணை யாருயிர்த் துணையே. 10

'சனிநீராடு' என்னும் முதுமொழியைக் குறித்துச் சொல்லிய

சீட்டுக்கவி

மக்கர்குரு தத்தர்நிட தத்தர்பிற மன்னர்தொழ

வளமிகுதொன் மதுரை நீங்கி

மத்தய மொத்ததிறல் பெற்றிடு புவிச்சக்ர

வர்த்திசிங் காரியன் முதல்

மன்னரர சாளுமிட மென்னவள ரியாழ்ப்பாண

மருவுநல் லாபுரி யினன்

மயில்வா கனச்சுப்ர மணியசுவா மியின்றிரு

மலரடி துதிக்கு மடிமை

திக்கனைத் தும்புகழு முத்தம மிகுத்திடுஞ்

செந்தமிழ்க் கலைஞா பகன்

சீர்மருவு கந்தனருள் மைந்தனா மாறுமுக

தீரனெழு துங்கா கிதம்

செப்புதய தாரகைப் பத்திரமச் சிற்பதித்

திட்டுப்ர சித்தி செய்யும்

திகழ்முகா மைக்கார ரெதிர்கொண்டு துயர்விண்டு

சித்தமகிழ் கொண்டு காண்க

தக்கசனி நீரா டெனுமவ்வை யார்மொழி

தனக்குரை தனைப் பகரிடி•

சனிவார மதிலெண்ண யிட்டுவெந் நீரினிற்

றலைமுழுக வென்ப தாகுஞ்

சத்திய விசித்திரகவி ஞர்க்குளு சிதப்ரபல்ய

சற்குண மகத்துவ மிகும்

தணிகைவளர் கந்தப்ப தேசிக னளித்திடுஞ்

சரவணப் பெருமா னெனும்

மிக்கபுல வனுமிங் ஙனமுரைவ குத்தனன்

மிகுசோ திடங்க ளாலும்

மேலான பொருளிதென வேயுணர்க வேறுசில

வீணர்பொருள் வேறு பகர்வார்

மெய்ம்மையைப் பற்றியவள் ளுவர்சொன்மூன் றாங்குறள்

விளங்கிலார் போலு மன்றே. 11

நல்லைக் கைலாசப் பிள்ளையார்மீது

மங்கள விருத்தம்

சீர்கொண்ட பரமவா னந்தசிற் சுகசொரூப

செகதீச திருமங் களம்

தெய்வசர வணபவசண் முகவற்கு முன்வந்த

திகழீச திருமங் களம்

பேர்கொண்ட சதுர்மறையின் முதலிலகு பிரணவப்

பிரகாச திருமங் களம்

பிறைநுதலொ டயில்விழிகொள் வலவையெனு மரிவையிற்

பெருநேச திரமங் களம்

ஊர்கொண்ட பரிதிமணி யெனவிலகு முதரமதி

லொரிர்தேச திருமங் களம்

ஒருவெண்ணெய் நல்லையர் மெய்கண்ட தேசிகற்

குபதேச திருமங் களம்

கார்கொட் கரடதட கயமுகவ வங்குசக்

கரராச திருமங் களம்

கருணேச நல்லையங் கைலாச புரிவாச

கவினேறு கணரா சனே. 12

நல்லைக் கந்தசுவாமிமீது வாழி விருத்தம்

அருணவிக சிதகமல மலரைநிகர் தருவதன

மாறுமநு தினமும் வாழி

அமரர்தொழு கனகசபை நடனமிடு பரமசிவ

னருண்முருகர் சரணம் வாழி

கருணைமழை பொழிபனிரு நயனமதி னொடுவலிய

கவினுலவு தோள்கள் வாழி

கனகிரியை யிருபிளவு கடவுருவு நெடியவயில்

கரதலத் தினிது வாழி

வருணமர கதவழகு திகழவரு மவுணனெனு

மயிலினொடு சேவல் வாழி

வனசரர்த மரசனுத வியகுறமி னொடுகடவுண்

மயிலிவர்க டினமும் வாழி

தருணமிது வெனவமரார் பணிநல்லை யமர்கந்தர்

தமதடியர் நிதமும் வாழி

சகசநிரு மலபரம சுகிர்தபரி பூரண

சடாட்சரம் வாழி வாழி. 13

உடுவில் சந்திரசேகர பண்டிதர்

1800 - 1879

இவரது ஊர் உடவில். கிருத்தவ மதத்தைச் சேர்ந்த போது இவர் பெற்ற பெயர் 'நதானியேல்' என்பது. சிறந்த தமிழ் அகராதி ஒன்றை இயற்றியுள்ளனர். அவ்வகராதியின் அவையடக்கச் செய்யுள்கள் இவரது புலமையைக் காட்டும்

தமிழகராதி அவையடக்கம்

உத்தமர்க ளெந்நாளு முற்ற வோர்ந்தே

உறுகுறைகள் மறையவுண்மை யுகந்துகொள்வர்

மத்திமர்க ளவையிரண்டுஞ் சமமாய்க் கொள்வர்

மற்றையரா மதமரு•மை வகுக்க மாட்டார்

இத்தகையா லாய்ந்துர்ந்த நல்லார் கல்லா

னியற்றுமக ராதியென விகழா ரென்றே

சித்தமிசைக் கொண்டுதெளி வில்லாப் பேதைச்

சிற்றறிவே னறிவளவிற் சேர்த்திட் டேனே.

இராமலிங்கம்

- 1885

இவர் மானிப்பாயைச் சேர்ந்த சுதுமலை என்னும் ஊரில் வயிரமுத்து உடையார் என்பருக்குப் புத்திரராய்ப் பிறந்தார். இவர் பாடிய நூல்கள் : சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் முதலியன.

நளச்சக்கரவர்த்தி விலாசம்

பொன்னுலக மென்னப் பொலியுநிட தம்புரக்கு

மன்னனளச் சக்ரவர்த்தி மாகதையை - இந்நிலத்தே

சந்த விலாசத் தமிழா லியம்புதற்குத்

தந்தி முகன்றாள் சரண்.

மாவைப் பொன்னம்பலப்பிள்ளை

- 1891

இவரது ஊர் மாவிட்டபுரம். இவரியற்றிய நூல்கள் : மாவையந்தாதி, சித்திரகவி முதலியன.

மாவையந்தாதி

மாவைய மாவைய முப்புரஞ் செற்றவர் மைந்ததரு

மாவைய மாவைய தாழ்க்கிற் கடிகை வரைநிலைக்கு

மாவைய மாவைய மன்கொள வூன்ஞ மலிநரிக்கா

மாவைய மாவைய வீதோநா னென்று வருந்தினனே.

வ. கணபதிப்பிள்ளை

1845 - 1895

இவர் புலோலி என்னும் ஊரைச் சேர்ந்த வல்லிப்புர நாதப்பிள்ளை என்பவரின் புதல்வர். இளமையில் உடுப்பிட்டிச் சிவம்புப்புலவரிடங் கல்வி கற்றார். பின்பு இந்தியாவுக்குச் சென்று காஞ்சிபுரம், திருவனந்தபுரம் முதலிய இடங்களில் ஆசிரியராயிருந்து தமிழ்ப்பணி புரிந்தார். இவருடைய தம்பியாரே புலோலி வ. குமாரசுவாமிப் புலவர் ஆவர்.

இவரியற்றிய நூல்கள் : வில்க­யம், இரகுவமிசச் சுருக்கம், இந்திரசேனை நாடகம் முதலியன. இவை யாவும் வடநூல் மொழிபெயர்ப்புகள் ஆகும்.

வில்க­யம்

நீலாம் புதநிறத்து நித்தியன்றாழ் காருண்யக்

காலாம் புதாகௌரிக் கண்மணியே - சீலாம்பு

பூரித்தோர் வல்வினைகள் போக்குபரா வென்னிதயம்

பூரித்தே மல்கப் புரி. 1

திருத்தணிகாசலேசர் துதி

மண்டல முதலா வுலகெலாம் பரவு

வரம்பில்சீர்த் தணிகைமா மலைவாழ்

வானவர் மகுட மணியணி வரன்று

மருவிரி கமலமென் றாழா

குண்டல வுருமாஞ் சிவகுகா சிருட்டி

தலைப்படு மைந்தொழில் குலவக்

கூறுநான் முகனை முகுந்தனைப் பவனைக்

குறிக்கரு மகேசனை மேலாம்

விண்டல மதிய மவிர்சடை யவனை

விதித்திடு பிரமமே யாரும்

விளம்பரு மோங்கா ரத்தனி யுருவே

விசாகனே வினோதவா வியினிற்

பண்டல மந்த கீரனே யாதி

மெய்யடி யவர்பரு வரலைப்

பார்த்தருள் கருணைத் தீர்த்தனே யடியேன்

பகர்வது பலனுற வருளே. 2

மதனாபிரான மகாராசனும் மந்திரியும்

மந்திரி கேளா யென்றன் மாதவந் தன்னால் வந்த

சந்திர வதனி யாகுந் தையல்சங் கீதந் தன்னில்

தந்திரி வீணை தன்னிற் சமமிலாள் சாகித் யந்தான்

வந்திடும் வகையா தென்ன மகிழ்ந்தெனக் குரைப்பாய் நீயே. 3

மன்னனே மன்னர் சூடு மகுடரத் தினமே கேளாய்

இன்னகைத் துவர்வாய் நங்கை யெழின்மணி மேனி காணில்

கன்னல்வின் மதன ராசன் காமசா கரத்து வீழ்வான்

அன்னதால் யாவ ரன்னாட் கரியநூ லறிவிப் பாரே. 4

யாமினிபூரதிலகைக்கு வில்கணன்

தன் கருத்தைக் குறிப்பிடுதல்

அன்னப் பெடையே அழகார் பசுங்குயிலே

கன்னி யரசே கருதுமணி மாமயிலே

மின்னற் கொடியே மிளிர்காம பூடணமே

உன்னைப் பிரிந்தேனல் உய்வனோ கண்மணியே. 5

மானே மடக்கொடியே மாரவேள் சாயகமே

தேனே சுரரமுதே தித்திக்குஞ் செங்கரும்பே

ஊனோ டுயிருருகி யுள்ளமெலாஞ் சோருகின்றேன்

யானோர் செயலறியேன் யாதுபுரி வேன்மதியே. 6

காமசரம் பீறியையோ காயமெலாஞ் சோருகின்றேன்

வாமமணி மேகலையே வந்ததர பானமெனும்

சோமசுதை யீந்தேயென் றுக்கமெலாம் போக்குவையேல்

நாமமுறு நின்றனக்கு நாணொருவி நீயிரங்கே. 7

சிரச்சேதஞ் செய்யப்போகும்போது வில்கணன்

தன் மகிழ்ச்சிக்குக் காரணங் கூறுதல்

கானாருங் கற்பக வுய்யான நாகர் கவினுலகில்

தேனாரு மென்சொற் சசியோ வரானந்த தேவதையோ

மானாரு மம்பக மின்னோ வெனவுரை வஞ்சிநல்லாள்

ஊனாரு நெஞ்ச முறைந்தா ளஃதென்ற னுற்சுகமே. 8

மின்னற் கொடியன சிற்றிடை யாள்சுக மென்மொழியாள்

அன்னப் பெடையன மென்னடை யாளருட் காமவல்லி

வன்னப் பயோதர மாதங்க மேந்தியென் வாடுமுயிர்

தென்னப்பு மாரற் குடையா வகைபுரி செய்கைநன்றே. 9

சந்திர பாக பிரதிசங் காச

நுதலினாள் தரமிலா முகத்தாள்

இந்திர தனுவை யியைந்தொளிர் புருவ

மிலங்குமா னம்பக வணங்கு

தந்திர மியற்றி யளியனேன் மதன

சாயக வேதனை சகிப்பான்

மந்திர மியற்றி யளித்தவா வின்னு

மனத்திடை நினைத்தனன் மகிழ்ந்தே. 10

மாரசா யகமோ மானினம் பகமோ

மருவரு காவியோ வேலோ

வீரசா சமுக பங்கம தியற்றும்

விழிகொலோ மின்னலோ விடையே

பூரா வமுத கும்பமோ குசமோ

பொருவிலா மராளமோ புகலும்

சராசர கரமோ பிரமதா மணியோ

தமியனே னுளம்புகுந் ததுவே. 11

குந்தல மிலங்கப் பிரமர சமுக

மொலிசெயக் குலவுநூ புரங்கள்

சிந்தல வரவ தொனிசெயச் சிவந்த

செய்யமென் மதுரவாய் திறந்து

நந்தல மரலை யொழிகுதி யெனவே

நகையிள நிலாவெழ வுரைத்த

பந்தல முறுநற் பயோதர மாதென்

னுளங்குடி புகுந்தனன் பரிந்தே. 12

காமகச் சளம தகற்றுவா னுதித்த

காலையம் பரிதிநா யகனோ

சோமகற் பகமோ சங்கமா மணியோ

சொல்லரும் பதுமமா மணியோ

மாமக வினோத வேங்கடா சாரி

மணிகொலோ வென்னுளம் புகுந்தே

ஆமகம் புரிந்தொ ரிதயமா மென்ன

வாக்கிய தளியனே னகமே. 13

சுப்பிரமணியர் வாழ்த்து

அனாதியாம் பாச வல்லிரு ளகற்று

மருணனை யறுமுகப் பரனை

தனாதியா னிகத்தோர் தம்மனத் தொளிரும்

தாவறு சதோதய விளக்கை

மனாதிகட் கெட்டா வடிவுடை யானை

மன்னுசீ ருடம்பிடிக் கரனை

எனாதிரு கண்ணி னரியமா மணியை

யேகநா யகனையேத் திடுவாம். 14

இராமலிங்கச் சட்டம்பியார்

1870

இவர் புங்குடுதீவைச் சேர்ந்த பரமானந்தர் என்பரின் புதல்வர். இவருடைய ஆசிரியர் சேதுநாதர் என்பவர்.

இவர் பாடிய நூல்கள் : கப்பற்பாட்டு, புயற்பாட்டு, கேரநகர் அதிகரபுத்திரர் பதிகம் என்பன.

கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம்

தத்துபரி மீதேறி யுற்றபடை சேனையுஞ்

சாலவே சூழ வரவுந்

தங்குசெய துங்கமுறு வீரமா காளனுஞ்

சாடிவல சாரி வரவும்

பத்தியுட னண்டர்கள் பணிந்துதுதி செய்யவும்

பாவையர்க ணடமா டவும்

பாவாண ரானவர்கள் தேவார மோதவும்

பரிவினொடு வீதி வருவாய்

கத்துசெண் டாயுத கரத்தனே எனதுதுயர்

களையுமெய்ஞ் ஞான குருவே

கல்வியுஞ் செல்வமுஞ் கமலபொற் பாதமுங்

காட்டிநீ கருணை புரிவாய்

அத்தனே அடியவர்கள் பத்தனே ஆழநிழல்

அமர்ந்திடுங் கேர நகரில்

அனுதினமு மடியர்தொழ வடபுறம தமர்கின்ற

அமலஅரி கரகும ரனே. 1

தக்கைதண் ணுமைதிமிலை சல்லரி தடாரிநற்

சங்கினொடு குடமு ழாவும்

தவிலினொடு முரசமிசை எக்காள மேபம்பை

தட்டைநன் முருடு சின்னம்

கொக்கரை யுடுக்கையொடு கொம்புமத் தாளமும்

குனிபேரி பலவி யம்பி

கொண்டுமா காளனுடன் அண்டியே பலசேனை

கூடியே வீதி வரவும்

சிக்கெனக் கொக்கின்மீ தேறிவல மாகித்

திரிந்துபண் ணவர்கள் வரவச்

சிங்கார மோடுலவு கடல்வண்ண னேயுனது

தெரிசனை யெனக் கருளுவாய்

அக்காரின் அழகமுறு மயிராணி யைக்காக்கும்

அன்பனே கேர நகரில்

அனுதினமும் அடியர்தொழ வடபுறம தமர்கின்ற

அமலஅரி கரகும ரனே. 2

மின்னைநிகர் மகுடமும் நுதலினிற் றிலதமும்

மிகுகுழை யினொடு கவசமும்

மேலான புயகிரியும் வாகுவல யத்துடன்

மிகககர மீது செண்டுந்

தன்மமுப் பரிநூற் பதக்கஞ் சரப்பளி

தயங்குநற் றிருமார் பமுந்

தண்டைவீ ரக்கழல் சதங்கையொலி கலிரெனத்

தாளமொத் திடுபா தமுங்

கன்னியர்கள் புடைமர வெள்ளைவா ரணமீது

காவலாய் வீதி வந்தே

காட்சிதந் தடியர்துயர் மீட்பதுனை யன்றியே

காசினியி லொருவ ருளரோ

நன்மையுற் றோரிசசம் இன்பமாய் வாழும்

நயப்புற்ற கேர நகரில்

நாளுமடி யார்தொழுது வாழவட புறமமரும்

நாதஅரி கரகும ரனே.

சதாசிவ பண்டிதர்

1887

இவர் வண்ணர்பண்ணையைச் சார்ந்த நாச்சிமார் கோவில் என்னுங் கிராமத்திலே நமசிவாயம் என்பருக்குப் புத்திரராகப் பிறந்தார். இவரியற்றிய நூல்கள் : வண்ணையந்தாதி, வண்ணைநகரூஞ்சல், சிங்கைநகரந்தாதி என்பன. இவை 1887இற் பதிப்பிக்கப்பெற்றன.

வண்ணைநக ரந்தாதி

அறிவுக் கறிவாகி யாயிருக் குள்ளே

செறியுஞ் சிவகாமித்தேவி - நெறியுடனே

மாலயனைப் பெற்றருள்வாள் வண்ணைநகர்க் காமாட்சி

யாலயமென் மனமே யாம்.

சிங்கைநக ரந்தாதி

குதிக்கின்ற வாணவக் கூத்துங் குலநலக் கொள்கைகள

மதிக்கின்ற மாடமு மாளிகைத் தோப்பு மனைவிமக்கள்

விதிக்கின்ற கட்டளைப் பட்டங்கள் யாவும் விழலெனயான்

மதிக்கின்ற நெஞ்சைத் தருவாய் பழஞ்சிங்கைப் பண்ணவனே.

புலவர் சுப்பையனார்

இவரது ஊர் யாழ்ப்பாணதது வண்ணார்பண்ணை. ஏழாலை என்னும் ஊரில் விவாகஞ் செய்து அவ்வூரை உறைபதியாக்கினார். இயற்கைப் புலமை படைத்தவர் வண்ணார்பண்ணைச் சிவன்கோயிலில் நடனமாடிய கனகி என்பவள் மீது மையல்கொண்டு 'கனகிசயமரம்' எனப் பெயரிய சுவைமிக்க நூலைப் பாடினார். இந்நூல் நானூறு விருத்தங்கள் கொண்டது; கனகி புரானம் எனவும் இது அழைக்கப்படும்.

கனகி புராணம்

சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணை யூர்க்குக்

கத்தனாம் வைத்தீ சர்க்குக கனத்ததோர் நடனஞ் செய்யுங்

குத்திர மனத்த ளாகுஞ் கொடியிடை கனகி நூற்குப்

பித்தனா யுலா மராலிப் பிள்ளையான் காப்ப தாமே. 1

நடந்தா ளொருகன்னி மாராச

கேசரி நாட்டிற்கொங்கைக்

குடந்தா னசைய வொயிலா

யதுகண்டு கொள்ளவரந்

தொடர்ந்தார்சந் யாசிகள் யோகம்விட்

டார்சுத்த சைவரெல்லாம்

மடந்தா னடைத்துச் சிவபூ

சையுங்கட்டி வைத்தனரே. 2

காட்டு கயிலைக் குடியோட்டிக்

கனதத நாவி னெய்தடவி

மாட்டு மினிய செல்லுடைய

மானே கனக மரகதமே

ஒட்டைக் காதி னுடனிருப்போன்

ஓளிசேர் புடைவை விற்கின்ற

நாட்டுக் கோட்டை யார்தமக்குள்

நல்லாண் டப்ப னல்லாளே 3

நத்தே பெற்ற முத்தனையாய்

நவிலுந் திருப்பாற் கடல்கடைந்த

மத்தே யனைய தனக்கனகே

மாரன் கணையை வளர்ப்பவளே

பத்தோ டொன்றிங் கவரென்னப்

பரிதி குலத்துச் சிகாமணிபோற்

புத்தூர் மணியம் சின்னையன் (சண்முகங்காண்)

புறத்தோன் தம்பி யுடையானே. 4

தாலக் கனியொன் றினுக்காகத்

தரைமேல் மாந்தர் பலர்திரண்டு

வேல்கத் திகள்கொண் டெறிந்துமிக

விசயம் பொருதும் வளநாடன்

மால்பற் றியநெஞ் சினனாகி

வந்தான் கனகே மன்றலுக்கு

நீலக் கருங்கார் மேகநிற

நியூற்ற னிவன்காண் நேரிழையே. 5

ஊரார் சுணக்கு தோற்றாமல்

உயர்சாந் தணிந்து வடம்பூட்டி

வாரான் மறைக்குந் தனக்கனகே

வரிவண் டூத முகையவிழுந்

நீராற் பொலிந்த சரவைவளர்

நெய்த நிலத்தான் வங்கநிறை

ஊராத் துறைக்கு மணியமிவன்

உடைய ரருணா சலத்தின்மகன். 6

மறுவற் றிலங்கு மதிமுகத்தில்

வாள்சேர்ந் தனைய வுண்கண்ணாய்

நிறையச் சொருகும் பூங்குழற்கு

நிகர்வே றில்லாக் கனகமின்னே

அறிவுக் கினியான் அவனிதனில்

யார்க்கு முதவி செயவிரும்புங்

கறுவற் றம்பி யெனும்பெயரோன்

கண்ணன் றனக்குச் சரிவந்தோன். 7

பொன்னைப் பொருவு மருமத்திற்

புடைகொண் டெழுந்த வனமுலையாய்

மின்னைச சிரிக்கு நுண்ணிடையாய்

வேய்த்தோட் கனகே யிவணிருப்போன்

தன்னைப் போல வேறொருவர்

தரணி தலத்தி லுள்ளாரோ

வென்னப் பேசும நன்னியிவன்

இடறுப் பூச்சு மெய்யானே. 8

மானினைக் கயலை வனத்தினிற் றுரத்தி

மறலிக்குக் கொலைத்தொழில் காட்டிப்

பானலை யோட்டி வடுவினை வாட்டிப்

பருத்தசெவ் வேலையும் பழித்துக

கூனல்வாள் நஞ்சி னமுதினோ டுறவு

கொண்டிடும் விழியுடைக் கனகே

தேனின நீங்கா மலரணி புயத்துச்

செல்வநா யகமிவன தேவே. 9

மானைக் கயலை வேல்வாளை

மறுநீர்க் கடலைக் குவளையைநற்

கானிற் கமலந் தனைவெல்லுங்

கண்ணாய் கனகே யிவணிருப்போன்

ஞானக் குணமும் நல்லறிவும்

நலஞ்சேர் புகழு மிகவுடையோன்

ஆனைக் கோட்டை வேளாளன்

ஆறு முகன்கா ணென்பாரே. 10

வண்டார் மாலைக் குழலாளே

மதிசேர்ந் தனைய முகத்தாளே

கண்டார் வணங்குங் கண்ணாளே

கனகென் றுரைக்குங் காரிகையே

உண்டார் போக மிவனைப்போ

லுளரோ விந்த வூர்தனிலே

தண்டார் புனையும் பண்டார

மென்றா ரந்தத் தாதியரே. 11

மானினைப் பழித்த கண்ணும்

வடிவினுக் குவமை யில்லாத்

தேனினு மினிய செஞ்சொற்

றெரிவையே கனகே கேண்மோ

ஊனுணும் பரிதி வேல்வாள்

ஒளிபெற வீங்கி ருப்போன்

தானைசூ ழுடுவில் வாழுந்

தன்கையொன் றில்லா வேந்தே. 12

சதாசிவம்பிள்ளை

1820 - 1896

இவரது ஊர்மானிப்பாய் ; மதம் கிறித்தவம். ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிப்புலமையும் படைத்தவர். 'உதயதாரகை' என்னும் பத்திரிகையின் ஆசிரியர். தமிழ்ப் புலவர்களின் வரலாற்று நூலாகிய 'பாவலர் சரித்திர தீபகம்' என்னும் அரும்பெரு நூலினை எழுதிய பெருமை இவருக்குண்டு.

இவரியற்றிய செய்யுணூல்கள் : வெல்லையந்தாதி, திருச்சதகம், நன்னெறிமாலை முதலியன.

வெல்லை அந்தாதி

காத்தவ னேயிந்தக் காசினி தன்னைமுன் காதலொடு

பூத்தவ னேயருள் பூப்பவ னேவெல்லைப் பொற்புரியிற்

சாத்திரி மார்வந்து சாட்டாங்க தண்டன்செய் தற்பரனே

போத்துறை வாருளம் போகா யடியனைப் போற்றுவையே. 1

தந்தன தான எனவண்டு பாடுநற் றண்டலைசூழ்

சுந்தர மான வளவெல்லை யென்றுரை தொல்பதியில்

இந்தினை நேர்முகத் தாண்மரி யன்னை யிருஞ்சுதனாய்

வந்தவ னேயருட் கண்ணா கிருபை வழங்குவையே. 2

தற்பர மேசுயம் பேயரு மாமறை தாமுணரா

அற்புத மேயன்றி யாவீரின் வேண்டுதற் காயவன்றன்

நற்புதல் விக்குயிர் மீண்டிடச் செய்தனை நல்லவெல்லைப்

பொற்பதி யோயெனை நீர்யுயிர்ப் பித்திடல் புண்ணியமே. 3

புகலிட நீயன்றி வேறா னெக்கிப் புவனமதன்

அகலிட மெங்கணு மாராய்ந் திடிலகி லாண்டமுதற்

சகலவி டந்தொறுஞ் சர்வ வியாபக தாரகமாய்ப்

புகல விடமிருந் தும்வெல்லை தோற்றும் புராதனனே. 4

இன்றுதொட் டேநின் கயிங்கரி யந்தனை யின்பமுடன்

நன்றுகொண் டேனடி மைமுறி நிற்றர நாடிவந்தேன்

தொன்றொரு நாற்பது நாளுப வாசஞ்செய் தொல்பரனே

சென்றுவெல் லைப்பதி வாழ்திரு ஞானத் தினகரனே. 5

தனியான வெல்லையி லுற்பவ னேசற் சனருவக்குங்

கனியே கனியின் ரசவொழுக் கேயுட் கலுந்துகண்கள்

பனிநீர் ததும்ப வழைப்பவர் முன்னர்ப் பரிந்துசெல்வாய்

நனியா னினையழைத் தேனோடி வாவிந்த நாளதிலே. 6

வந்துட னீள்கடல் கூடியொன் றாகி மதர்த்தெழுந்து

கொந்தளிப் புக்கொண்ட காலையி லோருரை கொண்டிவற்றின்

மைந்தை யடக்கினை மற்றடி யேன்றன் மனச்செருக்கார்

சிந்தை யடக்க லரிதோவெல் லைப்பதித் தேசிகனே. 7

சேயே மரியம்மை தந்திடு செல்வத் திருக்கொழுந்தே

தாயா யுலகங்க டந்தவ னேதனைத் தான்தடிந்த

தீயோனைச் சீட னெனக்கொண்ட வாவெனைச் சேர்ந்திடுங்கால்

ஏயாத குற்றஞ் சொலுவா ரியார்வெல்லை யேந்தலின்னே. 8

ஆவண வோலை யுனக்குந்தந் தேனடி யானுமலை

ஆவண மென்றனை யாண்டுகொள் வாயிங்கு மங்குமொன்றி

ஆவண மல்கிடு வெல்லைப் பதியி லணியயியாய்

ஆவண வுங்கொட்டி லுற்பவ னேயென்னை யாள்பவனே. 9

ஆநந்தத் தந்திடு வெல்லைப் பதியிடை யாயருடன்

ஆநத் தனனெனச் சாத்திரி மார்தொழ வாங்குசிறு

ஆநந் திடாக்கொட் டகம்வாழ் திருந்திட்ட வம்பரமன்

ஆநந்த னார்திரு மைந்தாவந் தாளென் னகமலரே. 10

ந.ச. பொன்னம்பலப் பிள்ளை

1836 - 1897

இவரது ஊர் நல்லூர். தந்தையார் பெயர் சரவண முத்துச் செட்டியார். தாயார் ஆறுமுகநாவலரின் சசோதரியாவர். நல்லூர்க் கார்த்திகேய உபாத்தியாயரிடத்தும் மாமனாராகிய நாவரிடத்துங் கல்வி கற்றார். நாவலரைப்போற் பிரசங்கங்கள் பொழிவதில் வல்லுநர். இவருடைய மாணாக்கருட் சிறப்பாக குறிப்பிடத் தக்கோர் ம.க. வேற்பிள்ளை, ச. பொன்னம்பலப்பிள்ளை, த.கைலாசப்பிள்ளை, சுவாமிநாத பண்டிதர், புலோலி வ. குமாரசுவாமிப்புலவர் முதலியோர்.

இவர் நூல்கள் இயற்றியதாகத் தெரியவில்லை. தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.

வெண்பா

செஞ்சடிலன் வெண்­ற்றன் சிற்றம் பலமுதல்வன்

மஞ்சடையுங் கண்ட னடிமறவா - நெஞ்சுடைய

ஆறுமுக வையற்கே யாட்செய்யப் பெற்றனம்யாம்

வேறறங்கள் வேண்டுமோ மேல்.

ஆசிரியப்பா

திருமகள் கொழுநன் கருமனத தழுக்கா

வருணனி கருதா தகந்தை மேவி

யெருத்தத் திலங்கு பருத்த மருப்பும்

பணைத்துக் குறுத்த தரக்கு தாளு

நிமிர்ந்து குவிந்து நீண்ட நாசியுங்

குன்றிக் கண்ணு நீல மேனியும்

பொலிந்த கேழற் பொலனுரு வெருத்துப்

பாதலங் துரீஇக் காணாப் பாதமும்

புண்டரி கத்துறை யண்டப் புத்தேள்

சிறுகணு மங்குச முறழுத் துண்டமு 10

மாதிர மளக்குந் தாவில் சிறையும்

புயங்க மெட்டுந் தியங்கிக் கலங்கக்

கொளுவிக் கிழிக்கு முகிரார் தாளும்

பொருப்பினைப் பொரீஇத் தருக்கு மேனியுங்

குலவுபண் டரமா யிலகு சேண்போ

யண்ட ரண்ட மளந்துங் காணாக்

கூவிள மறுகு கொன்றை தும்பை

மாவிணர் மத்தம் வதிமதி முடியு

முடைய சங்கர னெண்மல ரடியை

யகந்தி லிருத்தி யருச்சனை புரிந்தோய் 20

தெய்வ விரதனாந் துய்ய னேய்க்கு

நயிட்டிகப் பிரம சாரிநீ யெனினுந்

தகவெ னரிவையை யிதமுறத் தழீஇப்

பல்லுயிர்க் கருளாஞ் செல்வனைத் தந்தே

சிவனடி யவரா மவமில் விருந்தைப்

புறந்தந் திடலாற் சிறந்த வறிஞ

ரில்லத் தோன்மற் றிவனெனக் குழீஇச்

சொல்லி வழுத்த மல்கு தூயோ

யெம்பந்த மறுக்குஞ் சம்பந்த நாமனு

மாலமர் கடவுளா மால்விடை யோனை 30

யைங்கதிப் பரியிற் றங்குவித் தோனு

மிடங்கர் வாயி லடங்கு மறையோ

னுபவீத மன்ற லுறவிதித் தோனு

மும்மதக் களிறு தன்னைவந் திக்கப்

பரனைவந் தித்த வுரனார் சீலனு

மொருவடி வெடுத்தென வருளொடு பொலிந்தோய்

கொடுங்கோ லில்லாக் கடுங்கோன் வழுதியா

னடைபெற் றுலவிய கடையில் காட்சித்

தலைச்சங் கத்துக் கலைப்புல வோராந்

திரபுர மெரித்த விரிசடைக் கடவுளுங் 40

குன்ற மெறிந்த குமரநா யகனுஞ்

சந்தனப் பொதியச் செந்தமி ழோனும்

மதித்த புலமை கதித்த மேன்மையோ

யைந்தை யடக்கி யாறை வென்றே

யொன்றை யுறவுணர்ந் தேழை யொருவினோ

யிலங்கையிற் கொடுங்கோல் கலங்கா தோச்சுபு

மறங்கள் வளர்த்த பறங்கி மன்னர்

குடியா யுள்ளோ ரிறையா வொவ்வோ

ரான்கன் றன்பா ரிறையா வொவ்வோ

ரான்கன் றன்பா யாமுண வளித்தல்

வேண்டுமென் றிசைத்த வெம்பணி மறாம 50

னுடொறுங் கொடததல் கண்டுள நைந்தே

யிப்பவ வரசர்தேத் திருத்தலுங் கொடிதெனாத்

திருநெல் வேலியாக் தனதூர் நீங்கி

யுத்தம திசையெனு முதக்கிற் பொலியுங்

கவுட தேசம் விதியி னடையூஉ

வாரிய மாகும் பாரிய பரவை

வறழப் பருகிப் பிளழ்கரு முகிலா

மகத்துற வுடனே புறத்துற வடைந்த

வரத ஞானப் பிரகாச வள்ளல்

பிறந்தை யுற்ற வறங்கெழு மரபோ 60

யடியவ ருளத்திற் குடியா யிருத்தலி

னாணவ மாயை கன்ம னெப்படு

மும்மதின் ஞான முழுத்தழ னகையாற்

பொடிபட் டொழிய வடல்புரி மேன்மையின்

வாதனை புரியும் பூதனை கடியுயிர்

பாலொடு பருகிய நீனிற மாயோன்

செங்கருங் கரங்களிற் சீர்செறி யுங்கர

மொன்றா லிருகுவ டன்றேந் தியதென

வுந்தியொழுக் கேந்திய நிந்தையி லம்மச் 70

சங்கரி தனையொர் பங்கினில் வைத்த

நிர்க்குண நின்மல நித்தியா னந்த

தற்பர னாஞ்சிவ சம்பு நிகர்த்தோ

யரனடி யவரி னனிக னாதனிற்

செறிதுயி லறச்செறுத் தறிதுயி லமர்தலிற்

றிருமக டழுவித் கருமை மேவலி

னுலகளந் துண்ட வொருவ னொத்தோய்

நாகமகள் காமுறு கோமக னாதலின்

வேத வியலை விளங்க விரித்தலிற் 80

போத வியலார் வேதன் போன்றோய்

தொல்காப் பியனா மொல்காப் புகழுறு

முனிவர னருளிய துனியி னடைசேர்

மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே

யெனுஞ்சூத் திரவிதி யியைவினை யிகந்தே

யுட்டெளி வுடைய பட்டத் தடிகள்போ

லன்னையை யடிபணித் தாதரித் திட்டோய்

தென்கோவை யென்னுஞ் சீரார் நகர்வாழ்

மேழிக் கொடியோர் வாழ்விற் குலாவ

வவதரித் திட்ட வருநதமிழ்க் கவிஞனா

மானா வியல்பிற் சேனாதி ராய 90

முதலியு மவன்பாற் கலையெலங் கற்று

மதியாக் கலைஞக் குதிநவ் விகட்கோ‘

புனப்புலிப் பெற்றி யுற்றிடு சீர்த்திச்

சரவண முத்து முதலியாம் புலவனுந்

தேடிய பல்புக ழானவை யடைய

வின்னுநிற் பனவிப் பெருமன் புகழைப்

பொலம்பெறத் தழீஇய நலங்கொள்பே றாலெனச்

சொல்பயில் பண்டிதர் மெச்சு சீர்த்தியோய்

செந்நாப் புலவராஞ் சீ‘சான் மணிக 100

ளோவ லின்றி யுறுமா கரமுந்

தென்மொழி யதனிற் றுன்னிய வணிசே

ரிரகுவம் மிசப்பெய ரியையிலக் கியத்தைச்

துரிசற வியற்றி வரிசை படைத்த

வரசகே சரியாம் புரையின்மே தையற்குச்

சேட்ட னாய வாட்டமில் கவிகைப்

பரராச சேகர னென்னும் பற்றார்

பணியு மரசர் கணிகோ ணகரமு

மாகிய நல்லையாம் பேரிய நகருறை

சத்திய வுத்தம வித்தக வேளாண் 110

குலதீ பம்மென நிலவிய கந்தவே

ளரிதிற் புரிந்த கரிசக னோன்பால்

வானோர் போற்று கான்முளை யாகி

யாறு முகனெனும் பெயரா தரித்த

பரம குரவ வறமிகு நிலைய

பாரினைத் தாங்கு பணாடவி பொறுத்த

சேடன் துதித்த வேலாச் சீர்த்திய

பத்தரைத் தாங்குமெய் பயில்கா ருண்ணிய

சிந்தா மணியே நந்தா விளக்கே

கண்ணே கருத்தே யெண்ணே யமிர்தே 120

யுயிருக் குயிரே யுலவா வொளியே

பசுபதி மதத்தை வசுமதி நிறுவி

யவனருள் வேதா கமங்களி னரும்பொரு

ளேழையே மைந் திரிபற் றுணர

வினிதிற் றிரட்டி யியம்பு மெந்தாய் யாமெலாம்,

நின்னடி யேமென வுன்னப் பெறினும்

பணிகரி குயிலென் றணிபெறு மூன்றையும்

புற்றிற் கானின் மாவிற் புகுத்திய

சிற்றிடைப் பணைமுலைத் தேமொழி மடவார்

கண்ணெனுங் காலவே லெண்ணி னுழைய 130

நெஞ்ச மழிந்த நிலைய மாகிப்

பாடி காவலிற் பட்டுழன் றிட்டனம் அதனால்,

எமைநீ யிகத்த லமைவுடைத் தாயினு

மன்னையை யத்தனை மன்னிய வொக்கலைப்

பொருளெனக் கொளாதுன் கழலே பேணி

நின்னடித் தொண்டே மன்ன நிகழ்த்திய

சதாசிவ னாகுந் தரஞ்செறி தொழும்பனை

யொளிகொ டிருவுளத் துள்ளா திகந்தே

யாயிரத் தெண்ணூற் றிரண்டென வறையுஞ்

சாலி வாகன சகவற் சரநிகழ் 140

தரமார் கின்ற பிரமாதி வருடத்

தெருக்கான் மதியிரு பத்தொரு தேதிசேர்

களங்க மில்லாப் பளிங்கின் வாரமு

மபர பக்கத் தமைசத் தமியும்

வடுமறு சிறப்பிற் கொடுநுக நாளு

மட்கி லொளிசேர் விட்கம்ப யோகமு

நிலைஇய மேன்மை யுலவா வேல்வையி

லவனே தானே யாகி யரனடி

நீழலி னித்தியா னந்ததம் பெறீஇச்

செம்மாந் திருத்தல் சீரோ வுனக்கே. 2

தாடலைபோற் சங்கரனைச் சார்ந்தடங்கி நின்றிடுநின்

பாடலையா நற்பதத்தைப் பாடளியா- லாடலையா

வாறுமுக நாவலசீ ரத்தசிற்ப நாயடியேம்

வீறுமின்ப வீட்டைதன் மெய். 3

கற்றவர் பற்றுங் கனியைக் கணிப்பி லறம்புரியப்

பெற்றவா பெற்ற பயனைப் பிறவிக் கடல்கடக்க

வுற்றவர்க் கென்று முதவுறு மோடத்தை யாறுமுக

நற்றவ வெந்தையைப் போற்றிடிற் கூற்று நடுங்கிடுமே. 4

பூமேவு மாமபொழிலிற் போகுமிள மாக்குயிலே

மாமேவு வாதின்கண் வலியேசு மதமழித்த

பாமேவு சீராறு முகபரம குரவனெனுங்

கோமேவு புண்ணியன்றன் றாளினைந்து கூவாயே

கோலநல்லை மாமுனிதாள் யான்மகிழக் கூவாயே. 5

கார்த்திகேயர்ப் புலவர்

1819-1898

இவர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த காரைநகரில் வாழ்ந்த முருகேசையரின் புதல்வர். இருபாலைச் சேனாதிராயரின் நண்பர். அவரிடஞ் சிலகாலஞ் கல்வி கற்றவர். சி.வை.தாமோதரம்பிள்ளையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர்.

இவர் சிதம்பரத்துக்குச் சென்று வாழ்ந்த காலத்திலேய 'திருத்தில்லைப் பல்சந்தமாலை' என்னும் பெயரிய பிரபந்தம் பாடினார். 'காரைநகர்த் திண்ணபுரவந்தாதி' என்பதும் இவராற் பாடப்பட்ட சுவையுள்ள நூலாகும்.

காரைநகர்த் திண்ணபுரவந்தாதி

காப்பு

திருவேளை யட்டவன் காரை நகருறுந் திண்ணபுரத்

தொருவேலைபங்கினன் மேலொரந்தாதியை யோதுதற்குப்

பெருவேளை பூண்டு பிரார்த்திக்கு மன்பர் பிறவியெனுங்

கருவேழை யுந்துடைத் தாளுங் கணபதி காப்பதுவே.

நூல்

கண்ணுதல் செய்ய சடையன்றிண்ணப்புரன் காண்கருத்தி

லெண்ணுதல்செய்யவொண் ணாதவன்மற னையினிமையுட

னண்ணுதல் செய்ய மலர்கொடு போற்றி யமர்ந்தர்ச்சனை

பண்ணுதல் செய்யன் பருக்கின் னருளினைப் பாலிப்பனே. 1

இருபதத் தன்றனைக் கீழுற வூன்றி யிருத்துதிற

லொருபதத் தன்றிகழ் திண்ண புரப்பதி யுள்ளுவந்தான்

வருபதத் தன்மத லானோர்கள் ஞான வழியமையக்

கிருபதத் தன்றனைப் போற்றிடுவார்க்கொரு கேடிலையே. 2

ஓதி மயனிம வான்பெற் றருளு முமைதனக்கோர்

பாதி மயன்சூ ரெனையணு காத படியருளுஞ்

சோதி மயன்புகழ் திண்ண புரப்பதி துன்னினர்க்கு

ஞாதி மயனினை யார்க்கய லானென்ற னாயகமே. 3

அகமா யதற்குப் புறமாகி யெங்கு மமர்ந்தருள்வோன்

மிகமா யனும்புகழ் திண் புரப்பதி மேவுபிரான்

மகமாய நீங்கித் தனைமதிப் போர்க்கு மகிழ்ந்துதவுஞ்

சுகமாய வல்லவர் யார்புல வீரிந்தத் தொன்னிலத்தே. 4

துவரித ழம்பிகை பாக னெனது துயர்தணித்தோன்

உவரித ழங்கியற் றிண்ண புரத்தி லுறைபெருமான்

கவரிதழ் வில்வத்தி னாலருச் சிக்கக் கருதினரைச்

சுவரித ழங்கப்பொற் கற்பக நாட்டிற் சரிப்பிப்பனே. 5

பரவை யிடஞ்சுந் தரற்காகத் தூது படர்பரம

னரவை யிடர்தணித் தோன்றொழுந் திண்ண புரத்ததிப

னிரவை யிடாதவன் பருக்கருள் வோன்றனை யெண்ணிநிதங்

குரவை யிடக்கடி தோடிவந் தாளங் குணமலையே. 6

போதே கியவய னும்புகழ்ந் தேத்தும் புனிதனெங்கும்

மீதே கியபொழிற் றிண்ண புரத்தினில் வீற்றிருப்போன்

காதே கியவிழிக் கன்னியயொர் பங்குடைக் கண்ணுதல்பாற்

றூதே கியவன மீளா திருப்பதென் றொல்வினையே. 7

இயலிசை நாடகம் வல்லா புகழு மிறைவர்செல்நெல்

வயலிசை திண்ண புரத்துறை யெந்தை மலையகத்திற்

புயலிசை கூந்தனல் லாயுன்றன் மேனி பொலிவழிந்தோர்

செயலிசை யாதுளஞ் சோர்வடைந் துற்றதென் செப்புவையே. 8

செப்பற் கரியன கொங்கைக் களவிழிச் சில்லையர்பாற்

கப்பற் கரிய கொடியெனச் சென்றுலை காமுகரே

ஓப்பற் கரியநற் றிண்ண புரந்திறை யும்பர்பிரான்

அப்பற் கரிய துயர்தீர்த் தவன்பணி யாற்றவம்மே. 9

அவந்தணி னாட்களைப் போக்கி யுழன்றுள் ளறிவழிந்து

பவந்தனின் மூழ்கிக் கிடந்தே யிடர்ப்படும் பாழ்மனமே

கவந்த நிறைதடஞ் சூழ்திண் ணபுரக் கருணையுருச்

சிவந்தினி லன்புற்றுப் போற்றிச் சிவகதி செல்லுவையே. 10

பறத்தலை யுற்ற பறவையைப் போல பலயோனியிற்

பிறத்தலை யுற்றலை பேதைநெஞ் சேயொன்று பேசுவன்கேள்

சிறத்தலை யுற்றொளிர் திண்ண புரத்துத் திருப்பதிசென்

றுறத்தலை யுற்றிடும் பேர்க்கரி தாம்பொரு ளொன்றிலையே. 11

பதங்கஞ்சுடர்தனில் வீழ்ந்துமெய்வெந்தழி பான்மையைப்போல்

இதங்க நலமென் றரிவையர் மோகத் திசைபவரே

உதங்கன் றொழுதகு திண்ண புரத்தை யுகந்தவனை

மதங்கந் தனதுரி போர்த்தானைக் கண்ணுற வந்திடுமே. 12

அனையும் பிதாவும்நீ யல்லா துலகினி லாருமிலைப்

புனையும் பிதாமகன் போற்றும் புனிததண் பொய்கையினிற்

கனையும் பிதாவமர் திண் புரத்துறை கர்ததவினி

யெனையும் பிதாவழி யுற்பவி யாம லிரட்சிப்பையே. 13

படர்வேலை யன்ன விழியின் ரேவற் பணிகளன்றித்

தொடர்வேலை யார்த்திடுந் திண்ண புரப்பதி துன்னியென்றும்

நடர்வேலை யன்றொண்டு செய்யாத நீவிர் நமன்றனொற்றா

அடர்வேலை யாது புரிவீ ரதனை யறைகுவிரே. 14

என்னனை யாவ லொடுவருத் திச்சுமந் தீன்றளித்த

மின்னனை யாக மழியுமு னுன்னருண் மேவுவனோ

துன்னனை யான துகள விறால்வெடித் துச்சொரியும்

நன்னனை யாறுறுந் திண்ண புரத்தை நயந்தவனே. 15

இருவருஞ் சோதித்த வெட்டாது வானில மெட்டிநின்ற

பொருவருஞ் சோதி மலையா னவனுயர் புன்னைவன்னித்

தருவருஞ் சோதி தகைதிண் ணபுரத் தளியதனில்

மருவருஞ் சோதியைப் போற்றிடிற் பாச வலையறுமே. 16

பெற்றம் பறித்தெறி முக்கோண வெற்பைப் பிடுங்கரக்கன்

கொற்றம் பறியப் பெருவிர லூன்று குழகனிலா

முற்றம் பறியுநற் றிண்ண புரன்மேன் மொழிந்தமையாற்

குற்றம் பறினு மிகழாரென் பாவினைக் கொள்வர்களே. 17

சிவம்புரி யாதுல கத்துறை சீவா தினங்கலங்க

அவம்புரி யாநி லறங்கடை யீரொன் றறைந்திடுவன்

துவம்புரி யாகிய திண்ண புரத்திற் றொடர்ந்தநல்ல

தவம்புரி யாதனி ரென்செய்கு வீர்நமன் றண்டனைக்கே. 18

முழுமுத லைச்சிறுத் தொண்டன் சமைத்துமுன் னாளளிக்கக்

குழுமுத லைக்கறி வேண்டி யருளுங் குழகன்செறுக்

கெழுமுத லைப்பெறு திண்ண புரத்தினிற் கிட்டியென்றுந்

தொழுமுத லைத்தால மீர்ந்தோர்க் கரிய துணைப்பதமே. 19

தி.த. சரவணமுத்துப்பிள்ளை

இவர் திருக்கோணமலையிலே தம்பிமுத்து என்பவருக்குப் புரதல்வராகப் பிறந்தார். தி.த. கனகசுந்தரம் பிள்ளையின் (1863-1922) இளைய சகோதரர். இளமையிலேயே இவ்வுலகவாழ்வை நீத்தார்.

இவரியற்றிய செய்யுணூல் 'தந்தைவிடு தூது'. இது மிக்க சுவையுடைய ஒரு பிரபந்தமாகும்

தந்தைவிடு தூது

தேனோங்க பூம்பொதும்பர்ச் செறிந்துபசுந் தழைபரப்பி

வானோங்கு தேமாவில் வாழுமிளம் பைங்கிளியே

மானேங்கு மைவிழியென் வஞ்சியிடைப் பைந்தொடிபால்

நானீங்கு புகலுமொழி நற்கியே கூறாயே

நங்கையவள் பாற்சென்று நலம்பெறநீ கூறாயே 1

இந்துநதற் சந்தவளைச் சுந்தரியென் னின்னுயிர்பாற்

சந்துநடந் திளங்களியே தமியேன்சொற் கூறுதியால்

முந்திருவ ருஞ்சிறியேம் முன்றிலிலா டுங்காலந்

தந்தைமொழிந் திட்டதனைத் தவறுவதேன் வினவுதியால்

தானுமெனை மறந்தனளோ தத்தாஅய் வினவுதியால்.2

மல்லைகைசன் பகங்கோங்கு மந்தாரை வெட்சியுடன்

புல்லினமும் பலவளமும் பூம்பொழிலி லக்காலம்

மெல்லமெல்லப் பந்துகொடு விளையாடுங் காலவடாய்

சொல்லியது மறந்தனளோ சுகமே வினவுதியால்

தோகையெனைத் துறந்தனளோ சுகமே வினவுதியால்.3

தீல்பலவி னீழலின்கட் டெரிவையவட் கியானறியேன்

ஆம்பன் மலர்மாலை யணிந்தேன் மகிழ்ந்தனளால்

சாம்பொழுதும் யான்மறவேன் தையலவ ளிக்காலம்

வீம்பான் மறந்தனளோ வினவாய் பசுங்கிளியே

வீணே புலம்புவதென் விதியோ பசுங்கிளியே. 4

பன்னிரயாண் டவளொடுயான் பயின்றிருந்து மிக்காலங்

கன்னிமுக நோக்கவிடார் கதவடைத்தார் கருணையிலார்

என்னிருகண் மணியனையா ளெனக்குரியளென்றிருந்தேன்

என்னே யெனதெண்ண மின்றுபட்ட வாறந்தோ

ஏதிலனா யிங்கே யிரங்குவல்யான் பைங்கிளியே. 5

செல்வமில்லை யென்றுரைப்பர் சிந்தியார் மற்றொன்றுங்

கல்வியெனுஞ் செல்வங் கருதார் கருதாரால்

செல்வமோ வின்றிருக்குஞ் சென்றிடுமா னாளைமற்றக்

கல்வியொரு காலுமண்மேற் கற்றோர்ப் பிரிவிலதால்

கல்வி சிறந்ததன்றோ கழறாய் பசுங்கிளியே. 6

கல்வி மிகவிருந்தென் கணக்கிலசெல் வம்மிருந்தென்

மெல்லியற்கு நாயகன்மேல் விருப்பிலதேற் பைங்கிளியே

சொல்லரிய காத றுகடபவுள் ளொன்றினன்றோ

நல்லார் மணம்புரிவர் நலம்பெறுவா ருண்மகிழ்வார்

நாரியர்பா லிம்மாற்றம் நவில்வா யிருஞ்சுகமே. 7

தந்தைமொழி தலைவகித்துத் தாய்சொன்மொழி யுளம்பேணி

நந்தமக்குத் தீங்கிழைத்த னலமோ பசுங்கிளியே

மைந்தர்துயர் நோக்கார் மன-ழுந்த வாறுரைக்கில்

அந்தோ மறுத்த லவசியமாம் பைங்கிளியே

ஆருங் குறைசொல்லா ரறிவாய் பசுங்கிளியே. 8

செங்கமல வாள்விழியாட் சேர்க்கக் கருதமுவன்

மங்கைதனக கேற்ற மணவாள னோபுகலாய்

நங்கைநிலைக் கேற்க நடக்கவல னோபுவியிற்

கொங்குமலர் மாலை குரங்கிற் களிப்பாரோ

கோதையிடை மிம்மாற்றங் கூறுதியாற் பைங்கிளியே.9

மூடருக்கும் பேடருக்கும் முதியோர் மெலியோர்க்குந்

தேடருநல் லிரத்தினம்போற் றெரிவையரைச் சேர்த்துவரோ

பீடடைய கல்விநலம் பெற்றிருக்கும் வாலிபர்யாம

வேடுவரை வேட்பமோ விளம்பாய் பசுங்கிளியே

விரும்புவமோ சந்நியாசம் விளம்பாய் பசுங்கிளியே. 10

பெண்ணருமை தானறியாப் பேதையர்க்குப் பெண்கொடுத்தார்

மண்ணிலுள காலம் வருத்துதற்கே பெற்றெடுத்தார்

கண்ணிலரித் தந்தைதமர் கடநரகிற் கேயுரியர்

எண்ணி யினைந்தேங்கி யிருந்து பெறும்பயனென்

என்னுயிரை மாய்த்த லியைவதாம் பைங்கிளியே. 11

தம்பெருமை தாமறியாத் தஞ்சமிலாப் பெண்கடமை

வெம்புலிவாய் மானென்ன வீணே கொடுத்திடுவார்

செம்பொற் றிரளுடனே வெந்தயரஞ் சேர்வதிலுஞ்

செம்பொனிலா வின்பஞ் சிறந்ததெனக் கூறதியால்

தெரிவையட் கிம்மாற்றஞ் சீர்க்கிளியே கூறுதியால். 12

உண்பதுவு முறங்குவது மூர்க்கதைகள் பேசுவதும்

பெண்கடொழி லாமென்றே பேசிடுவ ரொருசாரார்

பெண்களுக்குத் தம்பதியே பெருந்தெய்வ மென்பர்சிலர்

பெண்பளுக்கு மடிமைகட்கும் பேதமில்லை யென்பர்சிலர்

பேதைமைகா ணிவர்கொள்கை பேர்த்தறிவாய் பசுங்கிளியே.

மாதரார் தாமிலரேல் மனையும்வன மாநல்ல

மாதரார் தாமுளரேல் வனமும் வளமனையாம்

மாதரா ரன்றோவில் வாழ்விற் கருங்கலம்

மாதரா ரன்றோ வருந்துவரிம் மாநிலத்தில்

மாதுசிரோ மணிக்கிவைநீ வகுப்பாய் பசுங்கிளியே.14

கல்விநலம் பெற்றனரேற் காரிகையார் காதலர்க்குச்

சொல்லருநற் றுணையன்றோ தொல்லுலகு சிறக்குமன்றோ

மெல்லியர்பாற் கல்விவிரும் பாத வீணரெலாம்

எல்லையிலா வின்படைதற் கிடையூறென் றேயிம்பாய்

என்னிருகண் மணியனையாட் கியம்பாய் பசுங்கிளியே 15

கூட்டிற் பசுங்கிளிபோற் கோதையரை யெப்பொழுதும்

வீட்டி லடைத்துவைக்கும் விரகிலருக் கியாதுரைப்பேம்

பூட்டித் திறந்தெடுக்கும் பொருளாக் கருதினரோ

கேட்டோர் நகைப்பதுவுங் கேட்டிலரோ பைங்கிளியே

கிஞ்சுகவாங் பைந்தொடிபாற் பிளத்தாய் பசுங்கிளியே.16

அத்திமுதற் சிற்றெறும்பீ றானவுயிர் யாவையிலும்

உத்தமராம் மாந்த ரொருவரே பேசவலார்

சித்தமகிழ்ந் தேபிறர்பாற் றெரிவையரைப் பேசவிடார்

எத்தான் மறுத்தனரோ விசையா யிளங்கிளியே

ஏதகுற்றஞ் செய்தனர்க ளிசையாய் பசுங்கிளியே.17

அந்தோ விசைப்பதெனை யரிவையர்க்கு தீங்குபல

சிந்தைமகிழ்ந் தேபுரிவார் சிந்தியா ரொருசிறிதும்

பைந்தொடியார் தம்பாற் பரிதாபஞ் சற்றுமிலார்

இந்தநிலை தமக்காமே லிருபபரோ வாடவர்தாம்

இறைசகியா ரிறைசகியா ரெழிலார் பசுங்கிளியே. 18

கண்ணைமறைத் தேகொடுபோய்க் காட்டில்விடும் பூஞையைப்போற்

பெண்ணை மனையடைத்துப் பின்னொருவர் கைக்கொடுப்பர்

கண்ணான்முன் கண்டுமிலர் காதலர்சொற் கேட்டுமிலர்

எண்ணாது மெண்ணி யிருந்தயர்வர் மங்கையர்கள்

இக்கொடுமைக் கியாது செய்வ திசையாய் பசங்கிளியே. 19

ஓரிரவன் றோர்பகலன் றுயிருள்ள நாளளவுங்

காரிகையா ருடன்வாழ்வார் கணவரே யாமாயின்

ஓரிறையு மவ்விருவ ருள்ளமதை வினவாதே

பாரிலே மணம்புரிவோர் பாதகர்காண் பைங்கிளியே

பாவைதனக் கிம்மாற்றம் பகர்வாய் பசங்கிளியே. 20

தந்தைதா யார்மகட்குத் தலைவற் றெரிவரெனும்

இந்தமொழிக் கியாதுரைப்பா யென்னிலிவர் தாம்வேண்டும்

அந்தமகன் றன்னைமக ளந்தோ விரும்பிலளேல்

தந்தைதா யார்க்கென்னாந் தவிப்ப தவளன்றோ

சார்ந்துநீ தோகையிடஞ் சாற்றுதியாற் பைங்கிளியே.21

தந்தையொரு வன்மகற்குத் தான்விரும்பு மோர்மகளை

மைந்த மணவெனலும் மைந்தன் வணங்கியெழுந்

தெந்தாயான் வேண்டே னிவளை விரும்புதியேல்

தந்தாய் மணத்தியெனச் சாற்றினனென் றேயுரைப்பர்

தையலிட மிக்கதைநீ சாற்றுதியாற் பைங்கிளியே. 22

தம்மனைக்கோர் பசுவேண்டிற் றாம்பலகாற் பார்த்திருந்தும்

பின்னுந் துணிவிலராய்ப் பேதுறுதன் மாந்தர்குணம்

என்னே மணவினையே லிமைப்பொழுதி லேமுடிப்பார்

சின்னப் பதுமைகொடு சிறார்செய்மணம் போலுமரோ

தெரிவையவட் கிம்மாற்றஞ் சீர்க்கிளியே கூறுதியால். 23

ஆணாய்ப் பிறந்த லவசியம்வே றோர்குணமும்

பேணார்த மின்னுயிராம் பெண்ணைக் கொடுத்திடுவார்

நாணார் மதியார் நகைத்தே களித்திடுவார்

வாணாள் பசுங்கிளியே மலடர்க் களித்திலரே

வாள்விழியென் மங்கையிடம் மாங்கிளியே கூறுதியால். 24

வண்ணவிளம் பைங்கிளியேல வையகத்து மணமினிதேற்

பெண்ணொருபால் விம்மியழப் பிள்ளையொரு பாலலறத்

தண்ணறும்பூஞ் சோலைவிட்டுத் தாங்கரிய வெஞ்சுரமே

நண்ணியவெங் கரியதுபோல் நாயகன்றுன் புறுவதெனை

நாரியர்பா லிம்மாற்ற நவில்வாய் பசுங்கிளியே. 25

மண்ணுலகில் யாம்பிறந்து வாழ்வதினா லாம்பயனென்ன

எண்ணரும்வெந் துயர்போக்கி யின்பஞ் சுகியேமால்

பெண்ணா ணிருவருமே பேரன் பொடுவாழின்

நண்ணாது வெந்துயரம் நற்கிளியே கூறுதியால்

நணுகுமா லின்பமெலாம் நற்கிளியே கூறுதியால். 26

அன்னநடை மைவிழியா ளம்பொன்மலர்க் கொம்பனையாள்

என்னியதய தாமரைக்கோ ரிலக்குமியாம் பெண்ணரசி

கன்னன்மொழி கேளாது கஞ்சமுக நோக்காது

மன்னிலத்து வாழேன் மடிந்திடுவன் மங்கையர்க்கு

மற்றிப்பழி சேருமென மாழ்குவேன் பைங்கிளியே.27

என்னிதயத் தனதாக்கி என்னுயிருந் தானேயாய்

என்னையிவண் வருத்துதறா னிவட்கழகோ பைங்கிளியே

மன்னிதுவோ பெண்கள்குண மாற்றா ரினியரன்றே

என்னே யிரங்கா ளிரங்காள் பசுங்கிளியே

ஈதுகொடி தீதுகொடி திசையாய் பசுங்கிளியே. 28

அந்தோ தவறுதவ றறியா துரைத்தனன்யான்

பைந்தார்ப் பசுங்குழலான் பாவமறி யாள்கிளியே

தந்தைதா யாரிலரேற் றரியாளென் பாங்கருடன்

வந்தாள் மகிழ்ந்தாள் வதித்தாள் பசுங்கிளியே

வானுலகி ளின்பமெலாம் வந்தனவாற் பைங்கிளியே.29

பெண்மணியை யான்பெறுநாட் பெற்றனனாற் செல்வமெலாம்

மண்ணிதனுட் பிறிதொர் பொருண்மதியேன் மதியேனால்

ஒண்ணுதறன் னுடனேயா னோருயிரீ ருடலாகி

மண்ணுலகின் மகிழ்ச்சியுடன் வாழ்வேன் பசுங்கிளியே

மங்கையவள் மனமறிந்து வருவாய் பசுங்கிளியே. 30

கன்னன்மொழிக் காரிகையாள் கமலவிழி யான்மறவேன்

கன்னத் தொளிமறவேன் கனிவா யிதர்மறவேன்

பின்னற் சடைமறவேன் பிடரி னெழின்மறவேன்

பன்னற் கருநகையும் மறவேந் பசுங்கிளியே

பாவையரு மென்மனத்தே பதிந்துளதாற் பைங்கிளியே. 31

அன்னமெனு மென்னடையு மஞ்சிறைய மயிலொயிலுஞ்

சின்னக் கொடியிடையுஞ் செவ்வாய்க் கிளிமொழியுஞ்

சன்னக் சிலம்பொலியுந் தளவ நறுமணமும்

நன்னர்ப் பசுங்கிளியே நானோ மறவேனால்

நங்கைவடி வங்கிளியே நானோ மறவேனால். 32

கொங்கலர்பூஞ் சோலைவளர் மாங்கிளியே கோதையிடம்

நங்காய்நிற் காதலித்தே நலிவான் மெலிவானால்

தங்கா துயிரென்றான் தானின் சரணென்றான்

நங்கா யிரங்கெனவே நவில்வாய் பசுங்கிளியே

நாரியர்பா லென்னிலையை நவில்வாய் பசுங்கிளியே. 33

முருகேச பண்டிதர்

1830 - 1900

இவரது ஊர் சுன்னாகம், தந்தையார் பெயர் பூதப பிள்ளை. இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்தும் நீர்வேலிச் சங்கர பண்டிதரிடத்துங் கற்றவர். இலக்கத்திற் பெரிதும் வல்லுநராகையின் 'இலக்கணக் கொட்டன்' என அழைக்கப்பட்டார். மடக்கு, சிலேடை முதலிய கவிகள் பாடுவதில் வல்லுநர். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் இவருடைய மாணாக்கர் ஆவர்.

இவரியற்றிய நூல்கள்: மயிலணிச் சிலேடை வெண்பா, மயிலணி ஊஞ்சல், மயிலணிப் பதிகம், சந்திர சேகர விநாயகரூஞ்சல், குடந்தை வெண்பா, நீதிநூறு, பதார்த்ததீபிகை முதலியன.

தனிநிலைச் செய்யுள்

நடுவெழுத்தலங்காரம்

மைந்தன்விதை மாமிகவர் வழிமீ னொன்று

மதனவேள் புளவிதழிவ் வேழின் மீது

வந்தநடு வெழுத்தெனக்குச் செய்தான் மற்றை

வரிகள்பதி னான்கினையுந் தானே கொண்டான்

அந்தநாள் வளைத்துச்சி தரித்துத் தம்மை

அருச்சிக்கு மவர்க்ககற்றி யங்கை யேந்தி

முந்தவதன் கீழிருந்து நடனஞ் செய்து

முனிந்துரைத்தான் மயிலணிவாழ் முதல்வன் றானே. 1

விரோதச் சிலேடை

நெட்டையிலை வைத்திருக்குஞ் செவ்வே ளல்ல

நெடிதோங்கித் தண்டேந்து மாலு மல்ல

கட்டுவா னாரளிக்கும் பிரம னல்ல

கனிவெட்டி எடுத்தலாற் சுரங்க மல்ல

நட்டவரைத் தனபதியா யிருக்கக் செய்யும்

நம்மையினா னாம்வணங்கு மீச னல்ல

சிட்டரெலாங் கொள்ளுமொரு பொருளே யாகுஞ்

செகமறிய விப்பொருளைச் செப்பு வீரே. 2

நீதி நூறு

வேடம் பலவானால் வீடும் பலவாமோ

நாடுமதம் சாதியினி னண்ணுவதென் - கூடுமுண்மைச்

சாக்கியர்நன் நந்தனார் சான்றுமெய் யன்பொன்றே

யாக்குமுயர் முத்தி யதை. 3

தம்மத நீத்தத் தவறுவார்த் தேற்றலால்

எம்மத மேனு மிகழற்க - அம்மவொரு

கல்லூரி யன்றோ கருது பலசமயம்

புல்லிய விந்தப் புவி. 4

கற்றவனை மற்றவர்கள் காணா ரவர்தமக்கு

சொற்புலவன் பற்பல்கை சொல்லுவான்-பொற்பழறான்

வாழை தனையுருக்க வல்லதோ செய்யசுடர்

மாழையொடு வெண்ணெயலான் மற்று. 5

காலத்துக் கேற்பக் கலைபிறிது கற்றாலுஞ்

சீலத்தைக் கைவிடுதல் சீர்மைத்தோ - கோலித்தைத்

தள்ளுமோ யார்க்குஞ் சமமன்றோ நான்மறையோர்

எள்ளுவதென் றங்க ளியல். 6

அந்தணர்க்கு வேத மரசர்க்குச் செங்கோன்மை

வந்த வசியர்க்கு வாய்மையுரை - முந்தும்

உழவர்க்கு மேழி யுறுதிமற் றீதே

பளகறுத்து வைக்கம் படி. 7

கண்ட விடத்தினிமை காணா விடத்தின்னா

விண்டொழுகும் பேதையரை வேண்டற்கு - மண்டும்

உடற்கரந்த நோயோ உடற்புறத்து நோயோ

அடற்கெழூஉங் காலத்தா லாங்கு. 8

உற்றுழித் தேர்வதலா லொண்ணாது நட்டவரைத்

தெற்றெனத் தேரத் தெளியுங்கால் - உற்றபதர்

காற்றடிக்கும் போதல்லாற் கண்டு தெளிவதற்கு

வேற்றுமை யுண்டோ வெளி. 9

வல்ல விதியவெனின் மாயுமோ மாய்ந்தாலும்

இல்லையெனிற் போம்போ மெவர்காத்தும் - மல்லடுதோட்

பஞ்சவர் சேயான பரிச்சித்து நீருறைந்துந்

துஞ்சினான் பாம்பிற் சுழன்று. 10

தன்னக்கம் வேண்டிப் பிறர்க்குத் தகாவியற்றின்

முன்னாக்க மோடு முடிந்திடுமால் . மன்னாக்கம்

பூண்ட கிளையொடுமுன் பொன்றினான் கண்ணிலிசேய்

பாண்டவ ரோடு பகைத்து. 11

செத்தார் பிழைத்தோர் செறுநோ யிலாதவரார்

மற்றா ரிவைபிழைத்து வைகுவார் - பொத்திப்

பயன்பா தெனவே பயணந் தனக்கு

முயல்வா ரறிவுடையார் முன். 12

தன்னுயிர் போலப் பிறவுயிருந் தான்பேணி

லென்ன வறமு மிவன்பால - தன்னை

வருத்துவிர தாதியினான் மன்னிடுவ தென்சுக்

கரைத்தருந்திற் போமோ வயம். 13

ஆயிரங்கண் பெற்றா னரியிலங்கை காவலனும்

போயுயிரு நாடும் புறங்கொடுத்தான் - சாயகமற்

றொன்றா லுருண்டா னுயிர்வாலி யன்னியரிற்

சென்றா குவதென்ன சீர். 14

ஈச னடியை யிறைஞ்சுவார்க் கெய்துயர்

மாசகலு மாறன்றி மற்றில்லை - பேசின்

மறந்தாலுக் கெய்துவது மன்னு நரகன்றி

இகந்தன்னி லெய்த விலை. 15

தெரியாத தொன்றைத் தெரியுமெனச் சொல்லி

யருமை குலைவா ரறியார் - தெரியுமெனும்

ஒன்று முரையா ருரவோர்க ளுகமிலார்க்

கென்று மிடரே யெழும். 16

ஈசுச னொருவ னுளனாக மெவ்வுயிரும்

பாச மகலும் படியருகே - நேசமுடன்

செய்குவான் வன்கண்மை செய்யா னவனடியைக்

கைதொழுமி னுள்ளங் கனிந்து. 17

சி.வை. தாமோதம்பிள்ளை

1832 - 1901

இவர் புத்தூரைச் சார்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரிலே வைரவநாதபிள்ளை என்பவருக்கும் பெருந்தேவி அம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தார். வட்டுக்கோட்டை அமெரிக்க ஆங்கிலக் கல்லூரியில் எட்டாண்டு கல்வி கற்றபின் சென்னைக்குச் சென்று 'தினவர்த்தமானி' என்னம் பத்திரிகையின் அதிபராய் இருந்தார். பல ஏட்டுச் சுவடிகளை நூல்வடிவிற் கொண்டுவந்த பெருமை இவருக்குரித்து. இவர் பா தனிப்பாடல்களைப் பாடினார். புதிதாக நூலெழுதுவோர் இவரிடஞ் சிறப்புப் பாயிரம் பெற்றுப் பதிப்பித்தல் மரபாயிருந்தது. உரையும் பாட்டுமாக சைவமகத்துவம், கட்டளைக் கலித்துறை முதலிய பல நூல்களை எழுதினார். இவராலே நீதிநெறிவிளக்க உரையும் வீரசோழியமுந் தணிகைப் புராமுந் தொல்காப்பியம் பொருளதிகாரமுங் கலித்தொகையும் இலக்கண விளக்கமுஞ் சூளாமணியுந் தொல்-எழுத்த, சொல். நச்சினார்க்கினியமும் இறையனார் களவியலரையும் அச்சிடப்பட்டன. இவருக்குச் சென்னை அரசாட்சியார் 'ராவ்பகதூர்' பட்டம் வழங்கினர்.

சைவ மகத்துவம்

பிள்ளை மதிச்சடையான் பேசாப் பெருமையினான்

கள்ளவிழும் பூங்கொன்றைக் கண்ணியான் - உள்ளபடி

கல்லாலின் கீழிருந்து கற்பித்தா னோர்வசனம்

எல்லரு மீடேற வே. 1

விநாயக வணக்கம்

கங்கா தரனறருமுக் கண்ணனே சித்திபுத்தி

பங்கா வுறையும் பகவனே - துங்கா

செகத்து வினைதீர்க்கும் சிற்குணா சைவ

மகத்துவம்பே சத்துணையாய் வா. 2

அவையடக்கம்

நானா சமயத்துட் சைவ மகத்துவ ஞானியர்முன்

யானா வெடுத்தச் சொலவல னென்றெனக் கேசிரிப்புத்

தானாய் வரினு நகுவர்கொ லோவெனைத் தம்திதோய்

வானா றணிசடை யாரடி யாரிந்த வையகத்தே. 3

பூவின் மெய்ம்மத மிதுவது பொய்யெனப்

புகலுவ தரிதேயோ

நாவி னான்மனத் தானவின் றுணர்வரு

ஞானசா கரமாமெய்த்

தேவ வாசகம் யுத்தியிற் கதீதமாந்

திறம்புமோ மனுவாலே

மேவு மெவ்வெவ் வேதமுந் திறம்புநல்

விஞ்சையா லளப்பின்னே. 4

குருவணக்கம்

(வீரசோழியப் பதிப்புரை)

எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாவினன்

முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா

கத்துயர் மரபினோன் முத்தக் குமார

வித்தக னடிதலை வைத்துவாழ்த் துவனே. 5

இறையனார் களவியல்

அந்தமு மாதியு மவ்வுனவ் வுந்நின் றமலன்றந்த

செந்தமி ழென்னுந் திறங்காட்டி யீதைந் திணையகநூல்

வந்தன யாவும் வளரன்பின் மேனவென் வாய்மைக்கன்றே

முந்துமன் பின்முத லாய்மேன வென்று முடிந்ததுவே. 6

சுப்பிரமணிய தேசிகர்

விண்ணொடு கையிலை வழித்தே சிகர்வெவ் வினைக்குநெற்றிக்

கண்ணான சுப்ர மணிய சுவாமிகள் கான்மலரை

நண்ணாத் தலையி னசைதீரத் தாங்கநற் கோகழிவாய்

மண்ணாய்ப் பிறந்தில னேயைய கோவிந்த வையகத்தே. 7

சிரமாலை யாகவுஞ் சின்முடி யாகவுஞ் செய்யகண்ட

சரமாலை யாகவும் யானடி யேனினை யேன்றருவாய்

பரமார் கயிலைப் பரம்பரைக் கோகழிச் சுப்ரமண்யா

மரமாய்நின் பாத குறடாய் வருதற் கொருவரே. 8

கையறுநிலை

வேதம்வலி குன்றியது மேதகு சிவாகம்

விதங்கள்வலி குன்றி னவடற்

சூதன்மொழி மூவறுபு ராணம்வலி குன்றியது

சொல்லரிய சைவ சமயப்

போதம்வலி குன்றியது பொற்பொதிய மாமுனி

புகன்றமொழி குன்றி யதுநம்

நாதனினை ஞாலமிசை நாடரிய வாறுமுக

நாவல ரடைந்த பொழுதே. 9

நல்லைநக ராறுமுக நாவலர் பிறந்திலரேற்

சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே-யெல்லவரு

மேத்துபுரா ணாகமங்க ளெங்கேப்ர சங்கமெங்கே

யாத்தனறி வெங்கே யறை. 10

மறைசைக் கலம்பகச் சிறப்புக்கவி

கற்பகத்தை மலர்களெலாங் கட்டுவிட்ட

நகைக்கவத ககனத் தான

பொற்பவனென் றுளங்கனன்று புதுத்தளிர்க்

ணெரப்பெடுப்பப் புறங்கண் டாங்கு

முற்படவே றியகிளைகண் முகந்திருப்பிக்

கிழக்குறுஞ்சீர் முதிர்நீர் வேலி

நற்பொழிலொன் றிரவிமதி நாடருநந்

தனவனமாய் நண்ணிற் றன்றே. 11

புலவர் கவியைப் புகழ்தல்

ஆருர னில்லையென் காரிகை யாலிவ் வவனிதொழப்

பேரூரு மாறு முகநா வலர்பெரு மான்பெருமை

சீரூரு மாறு தெரித்தாய் சிவசம்பு தேசிகநிற்

காரூரி னேரின்றன் றோநின்சொல் வன்மை யறிந்தனனே. 12

அம்பலவான பண்டிதர்

வாக்கிற் சரச்வதி வாய்மைக் கரிச்சந்திர மன்னனெடுந்

தூக்கு நடுவு நிலைமையிற் சானவி தூய்மையிற்பொன்

ஆக்கந் தனிலள காபதி மார னழகிலிந்த்ரன்

தேக்கும்வை போகத்தி லம்பல வாணனைச் செப்பிடினே.

திருஞானசம்பந்தப்பிள்ளை

1849 - 1901

இவரது ஊர் நல்லூர். ஆறுமுகநாவலரிடத்தும் வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடத்துங் கல்வி கற்றவர். தருக்கசாத்திரத்திலே மிக வல்லுநர். இதனால் 'தருக்க குடார தாலுதாரி' என மக்களால் அழைக்கப்பட்டார். சிதம்பரத்தில் வாழ்ந்துவந்த காலத்தில் இறைவனடி எய்தினர்.

இவரியற்றிய நூல்கள் : அரிகரதாரதம்மியம், வேதாகம் வாததீபிகை, நாராயண பரத்துவ நிரசனம் முதலியன.

அரிகர தாரதம்மியம்

திருடினனா லொருவனிடைச் சியரகத்து

வெண்ணெயினை யொருவன் தெய்வப்

பொருவிலாப் புலவர்களுக் கருளினான்

புரையிலமு துணற்பொ ருட்டாங்

கிருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமனை

யடைந்துவழி படுவா மன்றே. 1

ஒருவனோ ரிடத்திலிருந்த விசுவத்தில்

வசிக்கையி லுவகை யுற்றான்

கருதுமற்றை யவன்விசுவே சுரனெனவே

யவனியினிற் கழறப் பெற்றான்

இருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமனை

யடைந்துவழி படுவா மன்றே. 2

ஒருவன்விழி மலராலர்ச் சனைபுரிந்தா

னொருவனவற் குவந்து தன்கை

விரவுறுபே ராற்றமலர் சக்கரத்தை

வெற்றிபெற வழங்கி னான்மே

லிருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைக் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமனை

யடைந்துவழி படுவா மன்றே. 3

ஒருவனடைந் தனனீல நிறத்தைவிடந்

தாக்குதலா னுடல முற்றுங்

கரியவிட முண்டவனைக் காத்தலினன்

னியன்களமாத் திரங்க றுத்தான்

இருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்தவழி படுவா மன்றே. 4

மரும்மதி லொருவனிலக் குமியைவகித்

துந்தனத்தை வாஞ்சிப் பான்றாழ்

சிரமதனி லிரந்துமொரு வன்பிறர்க்குப்

பாக்கியத்தைச் சிறக்க வீவன்

இருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 5

ஒருவனுர லொடுதவக்குண் டானொருவ

னுயிர்களைமாழ் குறத்து வாக்கிக்

கருவுறுத்து மாணவத்தாற் றுவக்குமட்‘

னல்லனெனக் கழறு மித்தால்

இருவர்தமி லெவனதிக னெனவூதித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமனை

யடைந்துவழி படுவா மன்றே. 6

ஒருவனரச் சுனனிரதப் பரிக்குபசா

ரஞ்செய்தா னொருவ னந்தப்

பிருதைசுத னாற்சமர முகத்துத்தோத்

திரஞ்செய்யப் பெற்றா னீங்கிவ்

விருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 7

ஒருவனா லிலையினனி துயின்றான்றா

மதகுணத்தி னொருவன் ஞான

வரமுறுசத் துவகுணத்தின் வடவிருக்க

மூலமதின் வதிந்தான் மற்றிவ்

விருவர்தமி லெவனதிக னெனவூதிகத்

துண்மையிசைத் திடுக மாசு

மரவுதலி லறிவுடையீ ரியாமனை

யடைந்துவழி படுவா மன்றே. 8

ஒருவனனு தினமுநவ நீதமவந்

துண்டனன்மற் றொருவ னாழ்ந்த

பரவைதனி லெழுந்தமரர்ப் பயமுறுத்து

கரளமதைப் பருகி னானிவ்

விருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமனை

யடைந்துவழி படுவா மன்றே. 9

ஒருவனிழி கிராதனது சரத்தினான்

மரித்தனன்மற் றொருவன் பற்றார்

திரபுரங்க டமைச்சிரிப்பாற் பொடிபடவே

நனிபுரிந்து சீரை யுற்றான்

இருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 10

ஒருவனருச் சித்தனன்சே துவிற்சிவனை

யந்னியனிவ் வுலகி னென்றும்

வருமரியர் காணவரு ளிராமநா

தப்பெயர்கொ டவண்வ திந்தான்

இருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 11

ஒருவனர சிங்கவவ தாரமுறீஇ

யிரணியன துயிர்செ குத்தான்

சரபவவ தாரமுறீஇ யொருவனவ

னுயிர்செகுத்துத் தாழ்த்தி னானிவ்

விருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமனை

யடைந்துவழி படுவா மன்றே. 12

ஒருவனிழி மகடூஉவாந் தாடகையை

வதம்புரிந்தா னொருவன் சாலும்

முரணுறுமந் நிசாசரரிந் திரனாகு

மந்தகனை முருக்கி னானிவ்

விருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 13

ஒருவனொரு சரணத்தாற் சகடமதை

யுதைத்தனனன் னியனு யர்ந்த

சரணமெனுஞ் சரோருகத்தி னகநுதியாற்

சைலமதை யுதைத்தான் சாற்றும்

இருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 14

ஒருவனுயர் நான்முகனைப் புத்திரனாப்

பெற்றனனிங் கொருவ னன்னான்

வெருவரநீள் சிறையினிட்ட வறுமுகனைப்

புத்திரனா வியக்கப் பெற்றான்

இருவர்தமி லெவனதிக னெனவூதித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 15

ஒருவனுயர் சுருதிகனை யெடுத்துவிதி

தனக்களித்தா னொருவ னோருஞ்

சுருதிகளைப் பரியாக்கி அவ்வலரோன்

றனைச்சூத னாகச் செய்தான்

இருவர்தமி லெவனதிக னெனவூதிக்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 16

ஒருவனியா சகனாகும் பலியினையா

தனக்களித்தா னொருவ னோருஞ்

சுருதிகளைப் பரியாக்கி அவ்வலரோன்

றனிச்சூத னாகச் செய்தான்

இருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 17

ஒருவனுப மன்னியன்பாற் சிவதீக்கை

பெற்றனன்மற் றொருவ னான்ற

வருமுறுமவ் வுபமன்னி யன்பருகப்

பாற்கடலை வழங்கி னானிவ்

விருவர்தமி லெவனதிக னெனவூகித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 18

ஒருவனுறு மிருபத்தைந் தாந்தத்து

வத்தின்கீ ழொரவ னோங்கு

பிருதிவியே முதன்முப்பத் தாறுதத்து

வத்தின்மேற் பிறங்கா நிற்கும்

இருவர்தமி லெவனதிக னெனவூதிகத்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 19

தெரிவரிய சுருதியொரு வன்றனைநற்

பசுவென்றுஞ் சிறப்ப துற்ற

ஒருவனையொப் பிலாவுலகிற் பசுபதியென்

றுஞ்சால வுரைக்கு மிந்த

இருவர்தமி லெவனதிக னெனவூதித்

துண்மையிசைத் திடுக மாசு

மருவுதலி லறிவுடையீ ரியாமவனை

யடைந்துவழி படுவா மன்றே. 20

வல்வை வயித்தியலிங்கபிள்ளை

1852 - 1901

இவர் யாழ்ப்பாணத்தின் வடபாலுள்ள வல்லு வெட்டித்துறை (வல்லிபட்டித்துறை) என்னும் ஊரினர். சைவ சமயத்தவர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் மாணாக்கர். சி.வை. தாமோதரம்பிள்ளை முதலிய அறிஞர்களால் 'இயற்யமிழ்ப் போதாசிரியர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டவர். 'சைவாபிமானி' என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியவர்.

இவரியற்றிய செய்யுள் நூல்கள்: 'சிந்தாமணி நிகண்ட'இ 'செல்வச்சந்நிதி முறை', 'வல்வை வயித்தியேசர் பதிகம்', 'சாதிநிர்ணய புராணம்' என்பன.

சாதிநிர்ணய புராணம்

நெற்சாதி பேதம் போல

நிலந்தனிற் கலந்து தோன்று

முற்சாதி பேத முன்னூன்

முறையுற மொழிகை யாலே

சொற்சாதி போத மெல்லாந்

துணிந்திடா வெனது சொல்லை

நற்சாதி பேதத் துள்ளார்

நவின்றிடார் நவையீ தென்றே. 1

புவனியிற் கலியின் வன்மை

பொருந்தலிற் சாதி பேத

மவர்தம தொழுக்கங் குன்றா

தறநெறி யொழுழு மாறு

தவநெறி யுலக நாதன்

றமிழினாற் தருக வென்னச்

சிவனருள் கருதி யானுஞ்

செப்பிடத் தொடங்கி னேனால். 2

வேதநால வகைதெ ரித்த

வியாதனா ருரைத்த நூலங்

காதலார் மிருதி யும்வை

கானச மென்னு நூலுஞ்

சூதசங் கிதையு மெங்கோன்

சுப்பிர பேத மென்றே

யோதுமா கமமுங் கொண்டே

யுரைப்பன்யான் சாதி பேதம். 3

தேசிக ராவார் சைவ

தீக்கையைப் பெறுகை மிக்க

வோசைகொள் சிவாக மாதி

யுரைத்திடு மொழுக்க மெல்லா

மாசினூ லுரைத்த வாபன்

மரபினர் பயில வேண்டி

நேசமோ டுலகத் துற்ற

நெறிமர புரைப்பா மன்றே. 4

ஆறெனும் பேத சைவ

ரரன்சிவ தீக்கை பெற்ற

மாறிலைந் திருடி கோத்திர

மறையவ ராதி சைவ

ரேறியத் தீக்கை யார்வே

தியர்மகா சைவ ரென்ப

கூறுசத் திரியர் நாய்கர்

குறியனு சைவ ராவார். 5

ஆற்றல்சார் களமர் தாமே

யவாந்தர சைவ ராகும்

பேற்றனு லோமர் நூல்சொல்

பிரவரை சைவ ரென்ப

சாற்றிய பலவா மற்றைச்

சாதியார் யாவ ரும்பின்

னேற்றமி லந்திய சைவ

ரெனவுரைத் திடுவர் நூலோர். 6

செட்டிகன் னியைச்சோ ரத்திற்

றிருமறை யாளன் புல்ல

விட்டநாய் வருங்கை கோள

ரிருங்கைகொடிக் கயிறு பின்னிச்

சிட்டரா லயத்துக் கேற்ற

திருக்கொடி யாடை நெய்வார்

நட்டுவர் தாமு மாவார்

நாடகத் தொழில்கள் பூண்டே. 7

வேறு

நீணில மதனைக் காக்கு

நிருபன்றான் வணிக சாதிப்

பூணணி பிறனில் லாளைப்

பொருந்திய களவில் வந்தோ

ராணியு நிறையுங் காட்டு

மரடகங் கோட கத்தின்

வாணிகம் புரிந்தி டும்பொன்

வாணிக ராகி வாழ்வார். 8

வசையறு வணிகன் வேட்ட

மறைக்குல மாதர் காத

னசையுறப் பெற்ற மைந்தர்

நரம்புறு கருவி தன்னில்

விசையுறு குரலுக் கேற்ற

விசையினால் விரவு மோரே

ழிசையினை யியற்ற வல்ல

வியாழ்ப்பாண ராகி வாழ்வார். 9

மெய்திக ழப்பி றப்பார்

மேயயா ழிசைத்த லன்றி

நெய்திடுந் தொழிலும் பூண்டு

நெடியமால் கீர்த்தி யெல்லா

மெய்துவை கான சத்த

ரெனவிழைந் தினிது கேட்குஞ்

செய்திய ராகுஞ் சாதிக்

சேடர்சே ணியரு மாவார். 10

வழுவுற மன்னில் லாளை

வணிகன்சோ ரத்தி னாலே

தழுவவே வந்த மைந்தர்

சாதிநால் வகையுள் ளோர்க்குந்

தொழிறரு கத்தி தீட்டித்

தொடையினிற் றுடைத்து முற்றும்

பழுதற நாபி யின்கீழ்ப்

பணிசெய்நா விதரே யாவார். 11

மறையவர் மங்கை தன்னை

மணந்தசூத் திரன்பால் வந்தோர்

குறைவினன் னகர்க்கு நூறு

கோற்றரைக் கப்பு றத்தி

லுறைபவ ராகி யூர்க்கு

முசிசியிற் பின்பு காராய்ப்

பறைதனைத் தோன்றிற் றூக்கும்

பறைக்குல மாவ ரன்றே. 12

ஒழுக்கமா மறையோ னில்லா

மொண்டொடி யுபய கொங்கை

வழுக்குறு களவு தன்னின்

மணந்தசூத் திரன்பால் வந்தோ

ரழற்கறைக் கார நீளி

யாடைகள் வெளுத்து நல்கி

யிழுக்கறு பறையர்க் காளா

மிளமைக ளாவ ரன்றே. 13

குரவுறு மலையில் வாழுங்

குறவனுக் குறவு பூண்டு

வரைவுறு வணிகர் தங்கண்

மடக்கொடி பெற்ற மைந்தர்

விரவிய காள வாயில்

வெந்தவெண் சுண்ணத் தோடு

பரவைமீன் பிடித்து விற்கும்

பரவர்க ளாவ ரன்றே. 14

கொத்தக வேளா ளன்றன்

கோதையைக் களவிற் சான்றான்

முந்தியே சேர வந்தோர்

முதன்மைசே ரனுலோ மர்க்கே

நிந்தனைப் பூப்பின் மாத

நீத்திடுந் துகிலெ டுத்து

வந்திடு மவ்வ ழுக்கு

மாற்றிடும் வண்ணா ராவார். 15

தெள்ளாவி னிரைகண் மேய்ப்போன்

சிறந்தவந் தணர்தம் மாதை

யுள்ளாவி யுருகக் கொங்கை

யுறவணைந் திடவே வந்தோ

ரெள்ளாவிவ் வுலகந் தன்னி

லிசைந்திடு மனுலோ மர்க்கே

வெள்ளாவி தன்னிற் றூசு

வெளுந்திடும் வண்ணா ராவார். 16

பண்டைய நூலிற் கூறும்

பன்னருஞ் சாதி பேதத்

தொண்டுள பெயர்க ளிந்நாட்

டுன்றுத லின்மை யாலே

கண்டுள சிலவற் றைத்தாங்

கருத்தினி லுணர்ந்து ரைத்தா

மண்டிய வனைத்தும் யாரே

வகுத்திட வல்லா ரன்றே. 17

சபாபதி நாவலர்

1843 - 1903

இவர் வடகோவையில் வாழ்ந்த சுயம்புநாகபிள்ளை என்பவருக்கும் தெய்வானை அம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தார். இளமையிலே நீர்வேலிச் சிவசங்கர பண்டிதரிடங் கல்வி கற்றார். பின்பு திருவாடுதறை ஆதீனத்தை அடைந்து சுப்பிரமணிய தேசிகரிடம் நூல்களை முறையாகக் கற்றார். அவரே 'நாவலர்' என்னுஞ் சிறப்புப் பெயரை இவருக்கு நல்கியவர்.

இவரியற்றிய செய்யுணூல்கள் : ஏசுமத நிராகரணம், சிவகர்ணாமிதம், சிதம்பர சபாநாத புராணம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, மாவையந்தாதி திராவிடப் பிரகாசிகை முதலியன. திராவிடப் பிரகாசிகை என்னும் உரைநடை நூல் இவருக்கு அழியாப்பெருமை நாட்டியுள்ளது.

சிதம்பரசபாநாத புராணம்

காப்பு

ஞானமிக வளரினஃ றிணையவுயர்

திணையாகு நவிலஞ் ஞான

வீனமிக வளரினுயர் திணையவஃ

றிணையாகு மென்று தேற்றன்

மானவஃ றிணைமேலு மாண்டவுயர்

திணைகீழும் வடிவிற் காட்டித்

தேனமரும் பொழிற்றில்லைச் சிகரிவாழ்

கற்பகத்தை வணக்கஞ் செய்வோம்.

சபாநாயகர்

பொன்பூத்த மணிமன்று ளானந்த நடங்காணப்

புகுவோர்க் கிந்த

கொன்பூத்த கஞ்சிதமென் பாதரி சனத்தினே

கூடு முத்தி

மென்பூத்த பிறமுயற்சி வேண்டவெனுங் குறிவரதா

பயத்தின் மேவ

மன்பூத்து நடங்குனிக்கும் பெருவாழ்வைப் பணிந்தேத்தி

வாழ்வா மன்னோ. 1

நிறைந்திடும் பரனைத் தொழின்முறை குயிற்ற

நிகரில்லாச் சிவமுத லாக

வறைந்திடு மேழு பேதமாய் மன்னி

யடைதரற் கேற்றிடத் தான

முறைந்திடு சக்தி மன்னெழு வகையா

யுயிரொடெப் புவனமு மளித்துச்

சிறந்தசிற் சபையி னிருத்தசான் றாகித்

திகழ்சிவ காமியைப் பணிவாம். 2

தில்லைவாழந்தணர்

எல்லைகா• டற்கரிய தியாகேசப் பிரான்சுருதி

யியம்பும் வாயால்

தில்லையா ழந்தணர்த மடியார்க்கு மடியேனென்

றெடுத்த சீரார்

நல்லவே தாகமங்கள் கரைகண்டோர் நாமிவரி

லொருவ ரென்று

சொல்லமா நடராசற் பெறுமூவா யிரமுனிவர்த்

தொழுது வாழ்வாம். 3

அவையடக்கம்

அருள்பெருக்கு மேமசபா நாதமான் மியமதனை

யாய்ந்து நீதற்

பொருபெருக்கு முயர்தமிழாற் புராமுறை கூறுகெனப்

புலமை சான்ற

தெருள் பெருக்கு நடராசன் றிரவடிக்கன் புடைமறையோர்

செப்பு மாற்றா

லொருவழிப்பட் டெழுமாசை நனிதூண்டத் தமியேனீ

துரைக்க லுற்றேன். 4

காவிரிநதிச் சிறப்பு

புண்ணியப் புனனாட் டுள்ள

பொருவிலாக் குறிஞ்சி முன்னா

வெண்ணிடு நிலங்கள் யாவு

மிவ்வகை குறும்பெ றிந்து

திண்ணிதி னடிப்ப டுத்துத்

திருந்துறச் செங்கோ லோச்சித்

தண்ணளி மிகுந்தெஞ் ஞான்று

சராசர மோம்பும் பொன்னி. 5

தில்லையின் பெருமை

திருவினாற் கவினாற் றேசாற்

றிருத்தத்தாற் சிறப்பு வாய்ந்த

வுருவினா லுயர்வான் மாண்பா

லொழுக்கத்தா லோத வொண்ணா

வருமையாற் புகழா னன்கா

வர்க்கத்தா னறிவா னான்ற

பெருமையாற் னறக்குத் தானே

யுவமையாம் பிறங்கு தில்லை. 6

தருமபரிபாலகர் இடங்கள்

அனாதி சைவனாஞ் சிவபிரான் முகமைந்தி லடைந்து

பினாதி மாறின்றி யாகம மறைநெறி பேணி

மனாதி மூன்றினுஞ் சிவனருட் பணிபுரி மாண்பா

ரினாவ கன்றநல் வேதிய ரிருக்கைக ளீண்டும். 7

அரிய ஞானிக டிருமட மொருபுடை யணவும்

பெரிய யோகியர் திருமட மொருபுடை பிறழுங்

கிரியை பேணுநர் திருமட மொருபுடை கெழுமுஞ்

சரியை யாளர்க டிருமட மொருபடை தழுவும். 8

அன்ன சாலைக ளொருபுடை யரியமா முனிவர்

பன்ன சாலைக ளொருபுடை பலகலை விதங்க

ணன்னர் நான்மறை யாகம முறைப்பட நாடும்

பொன்னின் மாமுடிப் பட்டிமண் டபமொரு புடையே. 9

கீத மேம்படு நான்மறை யோதுபல் கிடையு

நாத மேம்படு நால்வர்செந் தமிழ்பயில் களனும்

போத மேம்படு தொண்டர்தம் புராணமு நடேசன்

வேத மான்மிய மைந்துமோ திடங்களு மிகுமோ. 10

நைமிசப் படலம்

தேவ பாடையின் மாதவச் சிறுவர்க ளோதும்

பாவு மூவறு வித்தையும் பலமுறை கேட்டுங்

காவின் மேவுறு பூவையுங் கனிவா

னாவி னோதிடக் கிளர்வுறு நைமிசா ரணியம். 11

புராண வரலாற்றுப் படலம்

அரியபல் கலையு மங்கமோ ராறு

மரிறப வுணர்ந்தனை ஞானம்

பெரிதுநன் கடைந்தே வுரைசெய வல்ல

பெரியருட் சிறந்தனை பிறங்கு

மிருவகை யாகிப் பரவுறு காண்டத்

தியலும்வே தாகம புராணம்

வரன்முறை தெரிந்து மேம்படு புலமை

மன்னினை மாதவ ரேறே. 12

மறைமுடி புணர்ந்த ஞானிக ளறிந்து

வழிபடுந் தரத்தா யாண்டு

முறைதரு மெல்லாப் பொருளினு மடங்கா

துயர்ந்ததாய்த் தனதிய லுணர்ந்து

முறையுளி வழிபா டாற்றுநர் வேட்ட

வேட்டவா றுடன்முழு தருளுங்

குறைவிலா னந்தம் வழங்கருண் மூர்த்தி

யாதுநீ கூறெமக் கென்றார். 13

திருச்சிற்றம்பல யமகவந்தாதி

திருத்துங்க வந்தண ரோம்புநல் வேள்வித் திருமறைய

திருத்துங்க மானசிற் றம்பலம் பாடத் தமியனுளத்

திருத்துங் கருணைக் கடலே யடைக்கலங் கங்கைசிரத்

திருத்துங்கண் மூன்றுடைத் தேவே கையிலைப் பருப்பதனே.

மாணிக்க வாசக மார்வயற் றில்லைச்சிற் றம்பலவ

மாணிக்க வாசகர் காணநின் றோய்மறைத் தாதையைக்கொன்

மாணிக்க வாசக லச்செய்த சங்கர வாக்கிற்பிர

மாணிக்க வாசகப் பொய்யர்க்குப் போல மறையலெற்கே.

சித்தாந் தலைவற் புலியூர்ச்சிற் றம்பலஞ் சென்றுதரி

சித்தாந் தலைவத்த தேவ சதாசிவ வென்றுபழிச்

சித்தாந் தமையவன் றன்னடி ஞானத்திற் தேர்த்தொன்றுசெய்

சித்தாந்த சைவரன் றோபிற வாமுத்தி செல்வர்களே. 3

பேரம் பலத்தில்லைச் சிற்றம் பலவன் பிறங்கறிவுப்

பேரம் பலத்தைப் பெருவருள் செய்யும் பெருந்தகைத்துப்

பேரம் பலத்த னிளவலிற் கொண்வன் வேணிக்கங்கைப்

பேரம் பலத்தைத் துரக்கும் பிறையொ டணிந்தவனே. 4

சபாபதி யாகம வேதந் தரும்பதி சார்பவநா

சபாபதி யாகுந்தில் லைப்பதி சிற்றம் பலப்பதிவஞ்

சபாபதி யானங் கெடுத்தடி யேன்மனந் தன்னிலின்னே

சபாபதி யாவுனைப் பாடத் திருவரு டந்தருளே. 5

சத்துச்சித் தானந்த மாகிமுப் பத்தறு தத்துவவா

சத்துச்சித் தானந்த லின்றி விளங்குஞ் சதாசிவநே

சத்துச்சித் தானந் தவறா திடவரு டாவிடமே

சத்துச்சித் தானந்த னார்க்கருள் சிற்றம் பலத்தவெற்கே. 6

விண்டல மண்ட யருநஞ்ச முண்ட கண்டணிவை

விண்டல மண்டரு நெற்குவை யென்ன விரித்தில்லையான்

விண்டல மண்ட வுயருஞ்சிற் றம்பல மேவினர்க்கு

விண்டல மண்டலம் வாழ்ந்திட நல்கு மிளிர்திருவே. 7

கு. கதிரைவேற்பிள்ளை

1829 - 1904

இவரது ஊர் ஊடுப்பிட்டி, தந்தையார் பெயர் குமாரசுவாமி முதலியார். இலங்கைச் சட்டநிரூபசபைப் பி‘திநிதிகளுள் ஒருவராயிருந்த பாலசிங்கம் என்பவர் இவரது புதல்வர்.

இவர் ஊர்காவற்றுறை நீதிபதியாயிருந்தவர். அக்காலத்தில் இவர் தொகுத்த தமிழகராதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளிப்படுத்தப்பட்டது. இவர் பல நூல்களுக்குச் சிறப்புப்பாயிரம் நல்கியுள்ளர்.

கற்புக் கவி

கந்தசட்டி மாநூலைக் கன்னத் தமிர்தமெனத்

தந்த தமிழ்க்காளி தாசகவி - முந்தசிவ

சுப்ர மணியசிவா சாரியனுன் சூனுசொற்சீற்க்

கொப்புண்டோ நாகேச வோது.

கராதிக் காப்பு

திருவா ருலகஞ் சிருட்டித் தளிக்கும்

அருவார் பொருட்டென் னகம்.

அம்பிகைபாகர்

1854 - 1904

இவர் ஊர் இணுவில். ஆறுமுகநாவலிடங் கல்வி கற்றவர். சி.வை. தாமோதரம்பிள்ளைக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

இவரியற்றிய செய்யுணூல் "இணுவை அந்தாதி".

இணுவை அந்தாதி

திருத்தங் கிதழி யுடைத்தாமர் தில்லைத் திருச்சபையில்

நிருத்தங்கொ ளீச ரளித்தமுன் னோன்சிர நீண்மருப்பொன்

றுத்தங் கொசித்தவுணற்செற்ற முன்னோ னுறுதுணைகான்

மருத்தங் கிணுவையந் தாதியென் வாயில் வருவிக்கவே.

திருஞானசம்பந்த உபாத்தியாயர்.

1839 - 1906

இவரது ஊர் சுழிபுரம். இவர் ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கியங் கற்றவர். பிரசங்கஞ் செய்யுந் திறமையு முடையவர்.

இவரியறறிய நூல்கள் : மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காமவேலர் திருவருட்பா ஆதியன.

கதிர்காமவேலர் திருவருட்பா

பூவார் மலர்மிசைப் போதனும் மாயனும் போற்றியினும்

நாவாற் றுதித்தற் கரிதாங் கதிரை நகருறையும்

மாவொரும் வள்ளிதெய் வானை மணாளற்கு மன்னுமருட்

பாவார் துதித்துணை மாணிக்க வைங்கரன் பாதங்களே.

நா. கதிரைவேற்பிள்ளை

1874 - 1907

இவர் புலோலி நாகப்பிள்ளை என்பரின் புதல்வர். சென்னையிலே பலவாண்டு வாழ்ந்து பலருக்கு கல்வி கற்பித்தவர். பல ம•த்தியாலங்களுக்குப் பிரசங்கஞ் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர். இராமலிங்கப்பிள்ளையின் பாடல் 'அருட்பாவன்று மருட்பா' என வாதிட்டு வெற்றி பெற்றவர். யாழ்ப்பாணத் தமிழகராதி தொகுத்தவர் இவரே.

இவரியற்றிய செய்யுணூல்கள்: சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சுப்பிரமணிய பாராக்கிரமம் முதலியன.

சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்

அவையடக்கம்

நல்ல யாழ்ப்பாண மேலைப்பு லோலியி

னாளு மெங்கட் கருள்செய் வந்துறை

செல்வ னாகுஞ் கதிரையில் வேலவன்

சீர டித்துணை செய்துணை யாலுல

கல்ல லோட வறிவில னீங்கிதை

யாற்றி னேன்குறை யாண்டிட லீங்கிது

மல்கு நந்தா மணிவிளக் காயெழ

மாசி லெந்தை யருடூண்டு முண்மையே.

சுப்பிரமணிய பராக்கிரமம்

இடந்தானு முணரானை யின்முருகை யெல்லாங்

கடந்தானை அருளாந்தன் கடலானை லேல்கைக்

கிடந்தானை யெப்பொருளுங் கிடப்பானைச் சூர்க்கா

நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே. 2

காசிவாசி செத்திநாதையர்மேற் பாடிய குருவணக்கம்

செந்தூர்நங் குகக்கடவுள் போலெனக்குத்

தலைக்கருணை செய்வோய் நாளும்

நந்தூருங் கரத்தார்க்கு மறிவரிய

பரம்பரன்ற னலத்த ஞானம்

வந்தூரு மெய்யுளத்த வடமொழியுந்

தென்மொழியும் வரம்பே கண்ட

நந்தோமின் மெய்புலவ சித்தாந்த

பானுவென நவில நின்றோய். 3

அன்பதுவே யுறுப்பாக வருட்குழாம்

வடிவாக வழகே வாய்ந்த

இன்பதுவே குணனாக வியைசிவமே

யுணர்வாக வெழிற்சித் தாந்தம்

என்பதுவே கானாக விதைவிரித்த

றொழிலாக விளங்குஞ் செந்தி

முன்பதுவா நாதப்பேர் நாவலசற்

குருமணியே முறையைக் கேட்டீ. 4

என்னுடலு முயிர்தானு நீயன்றோ

வென்பொருளே யெனக்கு வாய்ந்த

மன்னடலே பெரும்பேற்றுக் குணக்குன்றே

யடிகளென வாழ்த்த லன்றிப்

பின்னெதையா நின்றிந்றத்துச் செய்குவன்கா

ணிவ்வுலகிற் பிறந்தே கற்ற

அன்னபய னீயன்றோ வடைகின்றாய்

புகழ்மிக்கோ யையா வையா. 5

தம்மையே புகழ்தென்னு முதலலுதுள

திருவருட்பாத் தன்னைக் கொண்டே

எம்மையோர் தம்மையும்நான் புகழ்ந்ததிலை

இதுகாறு மின்பே யீது

மெம்மையே நீயெனக்குச் சற்குருவாய்

விளங்கலினின் மீது பாட

அம்மமையால் வந்ததென்றே நினக்கியான்

கூறலிச்சை யன்றான் மாதோ. 6

சிவசம்புப்புலவர்

1852 - 1910

இவரது ஊர் உடுப்பிட்டி. தந்தையார் பெயர் அருளம் பல முதலியார். இருபாலைச் சேனாதிராய முதலியாருடைய மாணாக்கராய் விளங்கிய நல்லூர்ச் சரவணமுத்துப் புலவரிடத்தம் அவர் மாணாக்கராய் விளங்கிய நல்லூர் சம்பந்தப் புலவரிடத்துங் கல்வி கற்றவர். அறுபதுக்கு மேற்பட்ட பிரபந்தங்களை இவர் பாடினர் என்பர். இவருடைய புலமையை வியந்த நாவலரே இவருக்கு 'புலவர்' என்னம் பட்டத்தை வழங்கினர். யமகம், திரிபு முதலியன பாடுவதிலே மிக வல்லுநர்.

இவரியற்றிய நூல்கள் : இராமநாதபுரம் பாற்கர சேதுபதி மகாராசாவின்மீது கல்லாடக் கலித்துறை நான் மணிமாலை இரட்டை மணிமாலை ஆகிய மூன்று நூல்கள், பாண்டித்துரைத் தேவர்மீது நான்மணிமாலை ஒன்று, கந்தவனநாதர் பதிகம், வல்லிபுரநாதர் பதிகம், செந்தில் யமகவந்தாதி, திருவேரக யமக வந்தாதி, எட்டிகுடிப்பிரபந்தம், புலோலி நான்மணிமாலை முதலியன.

பாற்கரசேதுபதி கல்லாடக் கலித்துறை

காப்பு

வில்லாடன் மேருவில் வைத்தோன்பொன் மன்றில் விழைந்துசெயு

நல்லாட னாடிடும் பாற்கர சாமி நரேந்திரன்மேற்

கல்லாட நூலின் கருத்தை யமைத்துக் கலித்துறையாச்

சொல்லாட வோர்மருப் பைங்கரத் தும்பி துணைவருமே.

தேங்குமெய்த் தண்ணளி யோவாத வாறு திருமகமும்

வீங்கு மிராறு புயவெற்பு நாட்டமு மேனிலைச்சீ

ரோங்கு மடிகளுஞ் சேயோன் மயிலு முடம்பிடியும்

யாங்குமென் றுந்தமி யேன்கண்ணி னெஞ்சி னிலங்குவவே.

நூல்

தமர் நினைவுரைத்து வரைவுகடாதல்

சீர்முந்து பாற்கரன் வெற்பிற் கறுத்துச் சிவந்தவிழி

வார்முந்து கொங்கை பணைத்தவொல் கிற்றிடை மாமகடன்

றார்முந்து மோதி யிருண்ட துரைப்பத் தமரிற்செறிப்

பேர்முந்து மன்னசிற் றூர்ச்சொற் சிலபல வேறியவே. 1

தாயறிவு கூறல்

நொச்சியம் பூவுதிர் நள்ளிரு ணாட்கழி நுன்னன்பர்த

மச்சியல்கூவிரந் தோற்றஞ்செய்தென்றெனை யன்னைதெரீஇ

நச்சிய லைச்சினந் தோதாள் புறத்தி னனிதுடித்தாள்

கச்சியல் பூண்முலை பாற்கர சாமி கனவரைக்கே. 2

வழியொழுகி வற்புறுத்தல்

பொன்னனை யாய்புகழ்ப் பாற்கர பூபன் பொருப்பினின்பா

லின்ன னிரப்பினர்க் கீயவெங் கான மிறந்தவர்க்கு

மின்னணி வாட விழிவெள்ளத் தாழ்ந்த மெலிவுகண்டாற்

கன்னலந் தேமொழிக் குற்றதென் னென்று கடுப்பர்களே. 3

பிரிவருமைகூறி வரைவுகடாதல்

மான்கா டினைகொய்யக் காலங் குறித்து மலர்ந்தகணி

கான்கா ணிருவியி னன்றிகொல் லாரிற் கலந்துபுள்ளுந்

தேன்கா னிமிர்தொடைப் பாற்கர னன்பினிற் றீர்ந்தவர்போல்

வான்கா முனுமனைக் கேகவும் யாமுள் வலித்தனமே. 4

இளமைகூறி மறுத்தல்

முருந்து நிரைத்தபற் றோன்றாதெய் தாது முடியளக

மருந்துற ழின்சொற் றிகழாது நோக்கியல் வாய்த்திலகண்

டிருந்து முலைபொடி யாதிரப் பென்னிச் சிறுமிதன்பால்

விருந்து புரந்தருள் பாற்கர சாமிதன் வெற்பண்ணலே. 5

சுவடுகண்டறிதல்

புலிவாய மாக்கடிப் பீதிது கற்பிற் புளினர்படை

நலிவாகத் தீய்த்த தீவண்டுய் நறுமலர் நற்றவத்தோர்

பொலிவாக வாசி புகன்றது பாற்கரன் போற்றலர்போ

மெலிவார் சுரந்தழன் மாற்றிய காற்குழி மெய்யிதுவே. 6

நற்றாய் வருந்தல்

இன்பெடுத் தோம்பிற நிற்கமெய் யாவி யியல்ககியா

முன்பெடுத் தாளையுந்த தீர்ந்தரும் பாத முலையொருவ

னன்பெடுத் தாண்டகைப் பாற்கரன் றெவ்வி லயரவிப்வூர்

துன்பெடுத் துள்ளியைந் தாளோ செலவெஞ் சுரத்தினிலே.

செலவு நினைந்துரைத்தல்

எல்லாரு மேத்திடும் பாற்கர சாமி யெழில்வரையி

னல்லார் தருநடு நாளரி தாக வடைந்திரென்றோர்

சொல்லார்வ மாய்நம் மெதிர்ப்பின்றி யன்பரிற்றோன்றிடுமே

னில்லாம லங்கட் செலவு முரிய நிரைவளையே. 8

அறத்தொடு நிற்றல்

சாய்ப்பாவை தந்துமொண் பூழியஞ் சோறுண்டுந் தந்துஞ்செங்கை

தாய்ப்பா யலையுந்திக் கைதை முறித்திட்டுந் தார்கொளச்செவ்

வாய்ப்பாவைக் கீந்துநின் றார்நிற்க வீது மதிக்கவற்றோ

வாய்ப்பாடி வாழ்கண்ண னேர்தரும் பாற்கர னத்திரிக்கே.

தேர்வரவுகண்டு மகிழ்ந்துகூறல்

நீதி யடைந்திடும் பாற்கர வேள்வெற்பி னேரிழையீர்

சோதி யடைந்த வயிற்பெரு மானைத் தொழுமன்பர்தேர்

வீதி யடைந்த துருட்பூமி யாடுமின் மெய்யிசைப்பா

வோதி யடைந்தலர் தூமினும் மேத மொழிமின்களே. 10

கல்வி நலங் கூறல்

உந்தியு மேருவு மைந்தரு வுங்கண்ணு மோங்கருளு

முந்திய மூவரு மாங்கல்விச் செல்வந்தர் முத்தமிழ்க்குத்

தந்தியும் வாசியுந் தந்திடும் பாற்கரன் சையமின்னே

செந்தியில் வேளருள் பெற்றாரி னீடுவர் சீர்மதியே. 11

முன்னிகழ்வுரைத்தூடறீர்த்தல்

தருவே மெரியதர் தீர்த்தங் கெயிற்றியர் தங்குரம்பை

மருவேணன் மாத்துய்த் திபவெயிற் றிற்றலை வைத்தண்மே

லிரவேமும் பாற்கரன் றேவையன் னாய்நுக ரின்பினுக்குப்

பொருவேலன் றாளுறு மின்பே யலது பொருந்திலதே. 12

நிலவுவெளிப்பட வருந்தல்

வெள்ளிய மாமதி தாழ்ந்தேநம் பாற்கர வேந்தர்பிரான்

றெள்ளிய சீரிலெங் குந்திகழ் வாயொன்று செய்ந்தன்றியுண்

டுள்ளிய லன்பர்கண் ணன்னார்நங் கண்மு னுறுநடுநா

ளொள்ளிய வாலறி வுற்றமைந் தாரி னொடுங்குதியே. 13

வரவெடுத்துரைத்தல்

அயல்வா யலரெஞ்ச நீயே மடமக ளன்பர்பகை

முயல்வார் வெருவிட வேனோ ரிடுதிறை முற்றுங்கொளீஇ

வியல்வாய தேர்க்குமுன் றோன்லலிற் பாற்கரன் வெற்பன்னமே

புயல்வாழ் மனைமுற்றுங் கோடிக்க பூணுக பூண்பனவே.

அழுங்கு தாய்க்குரைத்தல்

போக்கிய தாயுளந் தீதிரு வோரும் புரமணந்

தேக்கிய விம்மனை சேர்ந்து வரும்வழி தேர்ந்துசொன்ன

வாக்கியல் வேத மகனும் பிறரும் வழாநிலையோர்

பாக்கிய மெய்தின ரூறிலை பாற்கரன் பாதவத்தே. 15

வெறி விலக்கல்

செந்தமிழ் வாணர்ப் புரந்திடும் பாற்கரத் தென்னன்வெற்பிற்

கந்த மலர்ப்பொன்னை யாறீர்த் திடாதுமுன் கைதந்தவர்

தந்த மயலு மிருக்க மறியின் றசைமிசைய

வந்ததெய் வந்கற்ற போதம் பொறாதொர் மனமிடமே. 16

உலகியல்புரைத்தல்

இக்காரம் பண்ணை மலைபிறர்க் கீவ வெழிலுமைமா

மைக்காலன் றெவ்வரி பின்போகக் கல்லத்தி மாழ்கிற்றில

மிக்கார் பரவிடும் பாற்கரன் கற்கட மெய்யன்பன்பின்

புக்காளுக் கூருண்டி விட்டழல் பேதைமை பொற்கொடியே. 17

மகிழ்ந்துரைத்தல்

வில்லுயர் மாமணிப் பூணணி பாற்கர வேந்தன்வெற்பிற்

கல்லுயர் திண்புயத் தார்தந்த வீர்ந்தழை கற்பினியல்

வல்லுயர் பொன்முலை யாளிடைத் தேற்றிட வாட்டமுறா

தில்லுயர் மங்கலம் பூணுந் துணையு மிலங்கியதே. 18

பிறைதொழுகென்றல்

மணிவான் மருமன் றுயில்பாற் கடலிடை வந்தமுதோ

டணிவா னுலாய்நின் னுதலொத் தரன்சடை யண்மிக்கொன்றைக்

கணிவாசந் தோய்ந்துதண் கங்கை படியுங் கதிர்ப்பிறையைப்

பணிவாழி பாற்கர சேது பதிவரைப் பைங்கிளியே. 19

ஆற்றாமை கூறல்

வனைதரு பொன்முடிப் பாற்கர னாட்டன்ப வான்பொருட்டு

நினைதரு மெண்ணிற் படர்திவெவ் வாடை நெருப்பெழுநா

ளினைதரு நெஞ்சிற் புலம்புறு நம்மெல் லியற்கடைத்த

வினைதரு மாறன்றிக் காணேன் புனைந்து விடச்சொற்களே.

தன்னுட்கையா றெய்திடுகிளவி

புன்னைப் பொதும்பரிற் றம்முட் பனைமடிப் பூவெகின

மின்னைப் பொருமயிற் பாற்கர னாட்டுற மெய்கரியா

வென்னைப் புணந்தவர் போக்குமற் றீங்குழி யெய்துவது

முன்னைப் பதம்பணிந் தேன்றெரிந் தாற்சொல் லொளிர்மதியே.

வேறுபடுத்துக் கூறல்

என்னாவி யுங்கண்ணு மன்னா ளொருத்தி யெறிசுனையின்

முன்னாட வுற்றன ளுக்குறு வேர்வன்றி முற்றியலு

மன்னாளொ டொத்தி கணமிரு மேவுமிங் காடுமலர்ப்

பொன்னா ரிருவ ரெனப்பாற் கரன்வரைப் பூங்கொடியே.

காமமிக்க கழிபடர்கிளவி

கைதாய் பெருங்கழி யேகுரு கேதிண் கருங்கடலே

மெய்தான் றழுவிய தண்ணந் துறைவற்கிம் மெல்லியலுள்

வெய்தா வுடைந்தனள் பாற்கரன் வெற்பில் விழியருவி

பெய்தாளென்னென்றெனைக் கேளீர்மெய்க் கேண்மை பிழைத்தனிரே.

இடைமணித்துக் கூறி வற்புறுத்தல்

மாணிலை வேலற்கு மன்பர்க்குங் கும்ப வரமுனிக்கு

நீணிலை யாய தமிழுக்கு மாக நிகழெல்லைதான்

வாணிலை யுற்றநம் மூர்க்குநும் மூர்ப்பொன் மலைக்குநங்காய்

சேணிலை யுள்ள நடுங்கலை பாற்கரன் றெவ்வரினே. 24

நின்குறை நீயேசென்றுரையென்றல்

ஈயா வுலோபர் பொருளெனத் தேய்ந்த விடையிறச்செய்

சாயா முலையை மருவிக் கரவுந் தகையுமன்ப

நீயா வுரைத்துட னேர்விப்ப தேதகு நீர்மைவள்ளால்

வீயாத வான்புகழ்ப் பாற்கர சாமிதன் வெற்பினிலே. 25

இரவுக்குறி வேண்டல்

புண்ணிய மேதகைப் பாற்கரன் வெற்பிற் புயல்பெய்கின்ற

தெண்ணியல் கல்வியி லாருளம் போல விருண்டதெங்குந்

திண்ணிய யானை புவியரி தாரி திரவநும்மூர்க்

கண்ணிய நல்விருந் தாயினன் காண்முருந் தாநகையே.

நகரிணிமை கூறல்

உவந்தானெய் யுண்டவ னன்னீரும் பொன்னொத்த வொள்ளிழையு

மவந்தா னில்லாவிதம் மலைகடந் தான்முன் னடைந்திடுவீர்

தவந்தா னுஞற்றுந் தவமா யுதித்த தனாதுளத்தைச்

சிவந்தானகொளதந்த பாற்கரன் றேவைத திருநகரே. 27

அறியாள்போன்று நினைவுகேட்டல்

இரப்பார்கள் யாயெனும் பாற்கரன் வெற்பிலெறிவர்கண்

டுரப்பார்கள தந்துக மேற்பா ரருவி சுனைகுடைவார்

புரப்பார் தினைசெம் மணிகொழிப் பார்படிப் போதுகொய்வார்

சரப்பார்வை யார்பலர் யார்கணின் னார்வந் தராதிபனே.

சுடரோடிரத்தல்

எங்கோதை யாமுங் கிளிமுதல் யாவு மினையக்கடத்

தங்கோர் விடலைபின் சென்றா ளவட னகமுங்கண்ணுங்

கொங்கோ வருமலர்க் தாமரை போலக் குளிரச் செய்யாய்

செங்கோன்மைப்பாற்கரன் சீரினெங்குந்திகழ் செஞ்சுடரே.

இன்னலெய்தல்

குகன்றா ளிறைஞ்சிடும் பாற்கரன் வெற்பிற் குறிகளபல

புகனறாரும் யாயரு வெலென் புரிவர்வைவேன்

மகன்றா னயர வெறிநோயும் பீரமூ மல்கலுறா

தகன்றா லுயிர்நிகர் வாரித் துறைவற்கென னுதுநெஞ்சே.

நெஞ்சோடு நோதல்

பொன்னாசை யாற்றளளிக் கான்றடைந் தெண்வழிப் பூவையங்க

மன்னாசை யாற்பொரு ளீட்டுகள் மாறி மருளுநெஞ்சே

துன்னாசை யெட்டும் புகழ்ந்திடும் பாற்கரத துங்கன்வெற்பி

லென்னாசை சொல்லுமுன் னேற்செல்லு மீடிபின் னென்றிடினே.

வேழம் வினாதல்

நம்பிவந் தார்க்கருள் பாற்கரன் வெற்பி னளினையன்னீர்

தும்பியும் புள்ளும் புயலும் பிடியுந்த தொடரமுனை

யம்பி னரற்றிக் குழிகட் டழைசெவி யாம்பலொன்று

கொம்பி னிலங்கிளைத் துற்றது வோதுங் குளிர்புனத்தே.

உலகின்மேல் வைத்துரைத்தல்

திரங்கொண்ட வாசகப் பாற்கரன் வெற்பினிற் செம்மகளி

ரரங்கொண்ட கட்டெயவக் காட்சிப் பட்டோர்க ளணிந்தெருக்கு

வரங்கொண்ட வெண்பொடி பூசுவு பூண்டு வறியவென்பு

கரங்கொண் டருங்கிழி யூர்வர் பனைமடற் கந்துகமே 33

நலம்புனைந்துரைத்தல்

சாலக் களியுற நீர்விழும் பூவுட்சஞ் சாளிகங்காள்

கோலக் குகன்றனைப் பாடிடு மன்பர் குறைதவிர்க்க

ஞாலக்கண் வைத்தருள் பாற்கரன் றேவைநன் னாடனையார்

நீலக் குழன் மணம் போலவுண் டாயி னிகழ்த்துமினே. 35

நாணிழந்து வருந்தல்

ஒன்னார் வெருவிடும் பாற்கர னாட்டுயி ரோடுற்றவெ

னன்னான் டறிவெற்பன் காதன்மென் காலி னடுங்கிக்கற்பா

முன்னார்வன் காலிற் றரிப்பின்றி வீழ்ந்தது முற்றுமந்தோ

வென்னான்செய் வேனினிப் பெண்பிறப் பென்று மிழிபுடைத்தே.

தோழியியற்பழித்துரைத்தல்

சிரத்தையரனடிக் கீந்திடும் பாற்கரன றேவையினம்

வரத்தைய னீரற வாடும்பைங் கூழென மாழ்கிவைக

மரத்தை யணைந்திடு மூரியிற் காட்டு மறுமனப்பொய்ப்

பரத்தைய ரில்வயி னல்குநம் மூரன்மெய்ப் பண்பிலனே.

பொழுதுகண்டு மயங்கல்

கற்றாங் கமைந்திடும் பாற்கரன் வெற்பிற் கதிர்ப்பிறையாம்

பற்றாங்கி யன்பாத தணந்தவ ரேங்கிப் பதைக்கச் செக்கர்ச்

சொற்றாங் கழலொ டெழுமாலை யேயெனைச் சூழ்ந்துகொல்வா

னுற்றாஙகுப் பாசறை யோர்க்கு முளைகொ லுரைமதியே.

ஆடிடத் துய்த்தல்

கண்ணா றிரண்டின னைத்தொழும் பாற்கரக காவலனை

யெண்ணாரி னேங்கி யினையலொன் றேயென தின்னுரைகாண்

பெண்ணார் சிகாமணி யேமுன்னி யாடு பெருமுழுக்கத்

தண்ணா ரருவியஞ் சாரற் கரந்திவட் சாருவனே. 39

விரதியரோடுரைத்தல்

தேயமெல் லாம்புகழ் பாற்கர னாட்டிற் றிருவெண்பொடி

காயமெல் லாங்கொண்ட முக்கோற் கரத்திர்நுங் காட்சிநன்கியா

னேயமெல் லாங்கொண்ட காளைபின் கான்செலு நீர்மைதனை

யாயமெல் லாமகிழ் வாய்க்கேட்பக் கூறுமி னன்னையர்க்கே.

**இதன் தொடர்ச்சி tamil10.mft. உள்ளது.**

கோணமலை. தந்தையார் பெயர் வேலுப்பிள்ளை. திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, திருக்கரசைப் புராணம் முதலிய பல நூல்கள் ஏட்டுவடிவினின்றும் அச்சுவடிவு பெறுவதற்குக் காரணமாயிருந்தவர்.

இவரியற்றிய நூல்கள் : திருக்கோணைநாயகர் பதிகம், விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில்விருத்தம்.

திருக்கோணைநாயகர் பதிகம்

சந்ததமு நினதுபய பதமலரை

வேதியர்கள் தாம்பூ சித்து

வந்தனைசெய் திடக்கரு€ வைத்தருள்வாய்

குளக்கோட்டு மகிபற் குற்ற

பந்தவினை தனைநீக்கிப் பகரரிய

முத்தியினைப் பரிவா யீயும்

அந்தமிகு வாரிதிசூழ் திரிகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 1

அகிலேசபிள்ளை

1853 - 1910

இவரது ஊர் திருக்கோணமலை. தந்தையார் பெயர் வேலுப்பிள்ளை. திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, திருக்கரசைப் புராணம் முதலிய பல நூல்கள் ஏட்டுவடிவினின்றும் அச்சுவடிவு பெறுவதற்குக் காரணமாயிருந்தவர்.

இவரியற்றிய நூல்கள் : திருக்கோணைநாயகர் பதிகம், விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில்விருத்தம்.

திருக்கோணைநாயகர் பதிகம்

சந்ததமு நினதுபய பதமலரை

வேதியர்கள் தாம்பூ சித்து

வந்தனைசெய் திடக்கரு€ வைத்தருள்வாய்

குளக்கோட்டு மகிபற் குற்ற

பந்தவினை தனைநீக்கிப் பகரரிய

முத்தியினைப் பரிவா யீயும்

அந்தமிகு வாரிதிசூழ் திரிகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 1

பன்னரிய நினதுபய பதமலரை

வேதியர்கள் பரிவு கூர்ந்து

முன்னினிய ருச்சனைசெய் திடவருள்வாய்

மூவருக்குண் முதல்வ னாகி

வன்னமிகு குமரகுரு பரவேளை

வினாயகரை மகிழ்ந்து தந்த

அன்னநடை யுமைகூடத் திரிகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி 2

முப்புரிநூன் மார்பிலங்கு வேதியர்க

ளினதபத முண்ட கத்தை

எப்பொழுதும் பச்சிலைகொண் டிறைஞ்சவருள்

புரிந்திடுவா யிமையோ ருக்கு

தப்பிதஞ்செய் திடர்விளைத்த வசுரனைவேல்

கொடுதடிந்தோன் றன்னைத் தந்த

அப்புவலஞ் சூழ்ந்திலங்குந் திரிகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 3

கஞ்சமல ரணன்முகத்தி லற்பவித்த

வேதியர்கள் கருணை யோடு

மஞ்சிலகு நின்னுபய மலரடிபூ

சிக்கவருள் வழங்கு மையா

தஞ்சமின்றிப் பவக்கடலிற் கிடந்துவருந

திடுமடியர் தம்மை நோக்கி

அஞ்சலெனக் கரமீயுந் திகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 4

மட்டவிழு மலரெடுத்து வேதியர்க

ணினதுபய மலரை நாளும்

இட்டமுடன் பூசனைசெய் தேத்தவருள்

புரிந்திடுவா யியம்ப வொண்ணா

கட்டழகா ரியமலை யரசன்மகள்

புடைமருவக் கருணை கூர்ந்து

அட்டதிக்கும் பெருமைசெறி திரிகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 5

சண்டனையோ ரன்பனுக்கா யுதைத்தநின

துபயபதந் தன்னை நாளும்

பண்டையநின் மரபின்வரு வேதியர்பூ

சிக்கவருள் பாலித் தாள்வாய்

மிண்டுசெயு மசுரர்களைக் கண்டதுண்டஞ்

செய்வைவேல் வேளைத் தந்த

அண்டர்களு மறியவொணாத் திரிகோச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 6

பத்தியுடன் வேதியர்க ளினதபய

பதமனைப் பிரிவி னோடு

நித்தியமு மருச்சனைசெய் திடக்கிருபை

கூர்ந்தருள்வாய் நிகழ்ந்த வொண்ணா

சத்தியுமை புடைமருவச் சந்ததமு

மடியர்தயர் தன்னை நீக்கி

அத்தி‘யோர் தமைக்காக்குந் திரிகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 7

பற்றுடனே பச்சிலைகள் பறித்துநிதம்

வேதியர்கள் பாங்கி னின்று

குற்றமொரு சிறிதுமமிலாப் பூசனைகள்

செய்யவருள் கூரு மையா

பொற்புலவ மாதுமையாள் புடைமருவ

விடையில்வரும் புனிதா மிக்க

அற்புதங்க ளமைந்திலங்குந் திரிகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 8

அம்புவியை யரசுசெய்யு நீசமகி

பாலர்களக் கிரம மாக

வம்பவினின் பதமலரை மறையவர்வூ

சனைபுரியா வகைத டுத்தார்

எம்பரனே யிவர்கள் வகைத டுத்தார்

ளழியவரு ளீந்துன் பாத

வம்புயக்காட் சியைத்தருவாய் திரிகோணச்

சிலம்புறையு மாதி மூர்த்தி. 9

விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில்விருத்தம்

காப்பு

கட்டளைக்லித்துறை

மாணிக்க வீரகத் திப்பிள்ளை பாதம் வணங்கியன்பைத்

காணிக்கை யாகக் கொடுத்தேன் மதியொடு கங்கைதனை

வேணிக்குள் வைக்கும் விசுவேசர் பாங்கரின் மேவிவளர்

பாணிக் கொணாத விசாலாட்சி சீர்த்தியைப் பாடுதற்கே.

விருத்தம்

திருவார் கரிய குழலழகுந்

தேங்குங் கருணை விழியழகுஞ்

செல்வா யுறுபுன் சிரிப்பழகுந்

திகழு நான்கு புயத்தழகும்

மருவார் மலர்வெண் டரளமணி

மாலை யொளிருந் தனத்தழகும்

வன்ன விடையிற் பட்டழகும்

வயங்குங் கமலப் பதத்தழகும்

இருமா நிலத்தி லனுதினமென்

னிதயத் திருத்தித் துதிப்பதல்லா

லின்னு மறைசொல் கோணமலை

யதனில் விசுவ நாதரிடத்

தமருங் குயிலே விசாலாட்சி

யம்மே யெனைநீ யாள்வாயே. 1

உன்னற் கரிய கடல்புடைசூ

ழுலகத் துதித்த நாண்மலா

ஒழியாக் கவலை யுளத்தினில்வந்

துறுத்த வதனால் வருந்திநிதம்

இன்னற் படுமென் றனக்கருள்செய்

திடவெள் ளளவு மனமிலையோ

ஏது மறியா தவர்போல

விருத்தன் முறையோ மனக்குறையோ

வன்னக் குயிலே யிமயமலை

மகிபன் பயந்த மடமயிலே

மகவான் றுயரந் தனையகற்ற

மயில்வா கனவே டனையுதவும்

அன்னப் பெடையே விசுவேச

ரருகி லமரும் பசுங்கிளியே

அடியார்க் கருளும் விசாலாட்சி

யம்மே யெனைநீ யாள்வாயே. 2

சொல்லு மனுடப் பிறவியைமுற்

றொடர்பா லடைந்தும் பெருவாழ்வின்

சுகத்தை யடையும் வழிவகையைச்

சுருதி முறையா லறியாதும்

அல்லும் பகலு முனதுபத

மதனைத் துதிக்கு மடியவர்கள்

அடித்தொண் டியற்றி யவர்களிடத்

தருளைப் பெறாது மழுங்குகின்றேன்

தொல்லம் புவியிற் பெறற்கரிய

தூய வமுதே செழுந்தேனே

துகடீ ரினிய முக்கனியே

சுரக்குங் கரும்பின் றெளிசாறே

அல்ல லகற்றும் விசுவேச

ரருகி லமரு மருமருந்தே

அருந்தண் ணளியார் விசாலாட்சி

யம்மே யெனைநீ யாள்வாயே. 3

வட்டித் தெழந்த முலைமடவார்

மயக்கத் தழுந்தி யுனதுபத

மலரை மலர்கொண் டருச்சித்து

வணங்கித் துதிக்க வறியாமல்

மட்டித் தனமாய்த் திரியுமெனை

வலிந்தாண் டடிமைக் கொண்டிடுநாள்

வருமோ வறியே னெட்டுணையு

மனதிற் கருணை வரவிலையோ

மட்டிட் டெவரு முரைக்கவொணா

மணியே மணியின் மருவொளியே

மருவார் மலரே யம்மலரின்

மணமே யடியார்க் கருள்புரிய

அட்டி யிலாத விசுவேத

ரருகி லொளிரு மரியமுத்தே

அரிசோ தரியே விசாலாட்சி

யம்மே யெனைநீ யாள்வாயே. 4

கஞ்சத் தயன்மா லிந்திரனின்

கதிர்சே ரிரத்ன முடிகளின்மேற்

கவினு முனது பதமலரைக்

கருத்தி லிருத்தி வணங்காமல்

வஞ்சங் களவு கொலைசூது

வதியுங் கசட ருடன்மருவி

வாணாண் முழுதும் வீணாக்கு

மடைய னெனக்கை விடலாமோ

தஞ்சம் புகும்மார்க் கண்டனுக்காய்ச்

சமனைத் தடிந்த சிவபெருமான்

றனக்கு முதல்வி நீயெனிலுன்

றகைமை யெடுத்தச் சாற்றரிதே

அஞ்செஞ் சடையார் விசுவேச

ரருகிற் படரும் பசுங்கொடியே

அருமா மறைசொல் விசாலாட்சி

யம்மே யெனைநீ யாள்வாயே. 5

வேதன் புவியைப் படைப்பதுவும்

விளங்க நெடியோன் காப்பதுவும்

விடைமீ திவரு மெம்பெருமான்

விரும்பி யவற்றைத் துடைப்பதுமுன்

பாதம் படியு மணுத்துகளின்

பலனென் றரிய மறைகளெலாம்

பகரு மெனிலுன் மகிமைதனைப்

படிறே னுரைக்கும் பண்பாமோ

காதங் கமழ்தா மரையணங்குங்

கலைவா ணியுநின் பணியியற்றக்

கவினுங் கனக மணிக்கொலுவின்

கண்ணே விளங்குங் கற்பகமே

சீதம் புனையும் விசுவேசர்

சிறப்போ டுவக்குந் தீங்கனியே

திகழு மெழில்சேர் விசாலாட்சி

திருவே யெனைநீ யாள்வாயே. 6

எல்லா வுலகு மவற்றினிடை

யியங்கு முயிர்க ளெவற்றினையு

மீன்ற வனைநீ யவ்வுயிரில்

யானு மொருவன் றானலனோ

பொல்லா தவனென் றிகழ்ந்துபெற்ற

புதல்வன் றனைத்தாய் புறத்தக்கற்றிப்

போவென் றுரைக்க மனம்வருமோ

புவனந் தனில்யான நன்னெறியில்

நில்லா தவனா யினுமுனது

நிகழ்ந்தற் கரிய பதமலரை

நிமிட மெனினு முளமதனில்

நினையா திருந்த நாளிலையே

அல்லார் களத்தர் விசுவேச

ரருகி லுறுந்தா மரைமலரே

அடியார்க் கிரங்கம் விசாலாட்சி

யம்மே யெனைநீ யாள்வாயே. 7

அஞ்சக் கரத்த னயன்முடியு

மடியு மறியா தலமரச்செய்

அஞ்சக் கரத்தன் றனைநீவிட்

டகன்றே யிருப்பா யாமாயின்

அஞ்சக் கரத்தி லொருதொழிலு

மாகா தெனவே யறிந்ததனால்

அஞ்சக் கரவக் கரம்புனையு

மரனும் பிரியா தமர்கின்றான்

வஞ்சக் கயவ ருளமெனுந்தா

மரைமே லுறையா மடவனமே

மாசி லடியார் மனத்தினிதம்

வைகி யொளிரும் மணிவிளக்கே

மஞ்சுற் றிலகும் விசுவேசர்

மகிழ்கூர்ந் திடவே மருவிநிதம்

மஞ்சத் துறையும் விசாலாட்சி

மானே யெனைநீ யாள்வாயே. 8

மக்க ளழுது வருந்துவதை

மகிழ்விற் பயந்த தாயர்கண்டால்

வந்தே யணைத்து முகமலர்ந்து

மதுர வமுதந் தனையருத்தல்

எக்கா லமுமிவ் வுலகியற்கை

யிதனை மறந்து நீயிருப்ப

தென்னோ வுனது மனஞ்சிலையோ

விரும்போ வேதென் றியானறியேன்

இக்கா சினியின் முந்நூறோ

டெய்து மறுபத் தெனுங்கிரணத்

திருக்கு முனது பதமலரை

யெளியே னிறைஞ்சு மியல்பாமோ

அக்கா ரணியும் விசுவேச

ரன்போ டணைக்கு மனப்பெடையே

அகிலம் புகழும் விசாலாட்சி

யம்மே யெனைநீ யாள்வாயே. 9

மைப்பார் வையுமென் கருங்குழலும்

வயங்கும் பிறையை நிகர்நுதலும்

வன்னக் குழையுந் தண்டரள

வரிசை யெயிறும் வனைக்கழுத்தும்

துப்பா ரிதழுந் துணைமுலையுந்

துலங்கு மடவார் சுரதமெனுந்

தொழிலா லடைந்த சுகத்தினையான்

சொல்ல முடியுந் தரமன்றே

இப்பார் தனிலே வினைப்பயனா

லெடுத்த வுடலை நித்தியமென்

றிறுமாந் துனது பதமலரை

யிறைஞ்சா திருந்தேன் பொறுத்தருள்வாய்

அப்பார் சடிலர் விசுவேசர்க்

கடியேன் படும்பா டனைத்துமெடுத்

தன்போ டறைவாய் விசாலாட்சி

யம்மே யெனைநீ யாள்வாயே. 10

வெண்பா

ஐயைவிசா லாட்சியெனு மன்னையே நின்புயத்தில்

வையகத்திற் றொண்டர் மகிழ்ந்தணியும் - துய்யநறும்

பூமாலை யோடு புனைந்தருள்வாய் யானுரைத்த

பாமாலை தன்னையுமன் பாய்.

வேன்மயில்வாகனப் புலவர்

1865 - 1912

இவர் அச்சுவேலி என்னு ஊலிலே அரிகரபுத்திரச் செட்டியார் என்பவருக்கும் முத்தாச்சி அம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தார். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்தும் பின் ஆறுமுகநாவலிடத்துங் கல்வி கற்றார். புலோலி சைவவித்தியாசாலையிலே தலைமையாசிரிராகக் கடமையாற்றினார்.

இவர் பல நூல்களுக்குக் சிறப்புக்கலி பாடினார்.

சிறப்புக்கவிகள்

சேணுற் றிடுபொழில் யாழ்ப்பாண மாதகற் சென்மிதனாய்

பேணுற் றிடுபுல வோன்மயின் வாகனன் பெட்புறச்சொன்

மாணுற் றிடுநற் புலியூரந் தாதிக்கு வாய்ப்புறவோ

ரேணுற் றிடுமுறை செய்தழி லாரச் சிடுதியென்றே. 1

செல்லாரு மிஞ்சிநல் லூரே திகழுஞ் செழும்பதியாச்

சொல்லூர் புகழமை வேலா யுதன்செய்த துய்யதவத்

தெல்லூர் மணியென வந்திசை வைத்தவ னின்றமிழைப்

பல்லூ ரவர்க்கும் பகர்கார்த்தி கேயன் பணித்திடவே. 2

அன்னோ னிடத்தினு முன்னே புகன்றநல் லூரடைந்த

முன்னோனம் மாறு முகநா வலன்றிரு மன்னருஞ்சொ

லின்னோன் மருக னெனவந்த வித்வ சிரோமணிப்பேர்

மன்னாம்பொன் னம்பலப் பிள்ளைதன் மாட்டினும் வாய்த்திடவே.

கற்றோ னிலக்கண லக்கிய மற்றுள கல்வியெலா

மற்றோரொப் பில்லவன் வேளாண் மரபொளிர் மாண்புடையோ

னுற்றோர்ந் திடுமியன் மட்டுவிற் பேர்ப்பதி யுற்றிடுதீங்

கற்றோர்க் கருள்சைவ வக்கழ கத்துக் கதிபதியே. 4

கயல்சேர்ந்த நீர்வயல் யாழ்ப்பாணத் துக்கனங் காட்டுநயச்

செயல்சேர்ந்த சீர்த்திரு நெல்வேலி யன்றினஞ் செய்தவத்தா

னுயர்சேர் கணபதிப் பிள்ளைக் கொருசுத னாவுதித்த

வியல்வேலுப் பிள்ளை யுரைசெய் தெழிலச்சி னிட்டனனே. 5

வேலணைக் கந்தப்பிள்ளை

1840 - 1914

இவர் வேலணையைச் சேர்ந்த வினாசித்தம்பி என்பவரின் புதல்வர். ஆறுமகநாவலரிடம் இலக்கிய இலக்கணங்கள் கற்றவர் வேலணையிற் சைவவித்தியாசாலை ஒன்றைத் தாபித்து அதன் அதிபராகப் பல ஆண்டுகள் கடமையாற்றியவர். 'சைவ சூக்குமார்த்த போதினி' என்னும் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்தார். காசி வாசி செந்திநாதையர், அம்பலவாண நாவலர், சுவாமிநாத பண்டிதர் முதலியோர் இவாதம நண்பர். வேலணைப் பேரம்பரப்புலவர் இவரின் மாணாக்கர்.

இவரியற்றிய நூல் : வேலணை மகா கணபதிப்பிள்ளையார் திருஊஞ்சல்.

மகாகணபதிப்பிள்ளையார் திருஊஞ்சல்

திருமருவி யாழ்ப்பாண மாதி னோங்கு

திலதமெனும் வேலணைநன் னகர மேற்கில்

தருமருவு பெரியபுலத் தருளின் மேவுந்

தந்தைமகா கணபதிமே நூஞ்சல் பாடக்

கருமருவு மடியர்மல மிரிய நீடு

கருணைமழை பொழிபரனு முமையு மீன்ற

உருமருவு கடதடகும் பக்க ளிற்றின்

உபயமல ரடிதினமுங் காப்ப தாமே. 1

சீர்பூத்த மறைநான்குங் கால்க ளாகச்

சிறந்தஉப நிடதமுயர் சட்ட மாக

நேர்பூத்த சிவாகமங்கள் பலகை யாக

நிறையறுபா னான்குகலை கயிற தாகப்

பேர்பூத்த உபாகமங்கள் விட்ட மாகப்

பிறஙகுபிர ணவமிலங்க திவிச தாக

ஏர்பூத்த பெரியபுலத் தருளோ டோங்கும்

இறைவமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 2

திருமகணா யகனாதி யமரர் தங்கள்

சிந்தைமய லவுறுதித்த வடுகன் றானும்

வருவீர பத்திரனுஞ் சூர னோடு

மலைபிளக்க வேல்விடுத்த குமரன் றானும்

மருவியிரு புலமுமலர் தூவிப போற்ற

மலைமகளொ டிறைவனரள் மாரி தூற்ற

அரிகரபுத் திரனாதி முதல்வ ரேத்த

ஆதிமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 3

நந்திமகா காளர்பிருங் காதி யாக

நண்ணுசிவ கணங்கணறு மலர்தூ யேத்த

விந்தைபெறு மட்டவித்தே சுரர்க ளோடு

விளங்குபிர ணவர்முதலோர் விரவிச் சூழ

அந்தமில்சீ ருருத்திரருஞ் சனக னாதி

அரியமுனி வரரேழு கோடி யாக

வந்தமகா மந்திரங்கள் வணங்கித் தேங்க

மருவுமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 4

ஆரணமா கமங்கடெய்வ வுருக்கொண் டேத்த

அரியநவ சத்திகளு மன்பாற் போற்றச்

சீரணவு சத்தமட மாதர் தேங்கச்

சித்திபுத்தி யிருபுறமுஞ் சிறந்தே யோங்க

ஆரபரா பரைபேத மாகி யோங்கும்

அமலசிவ சத்திகள்பாங் கன்பு கூரக்

காரணகா ரியமாகி யதீத மாகக்

கருதுமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 5

மங்கலமார் பூதமைந்துங் கரண நான்கும்

மருவுதன்மாத் திரைகன்மேந் திரிய மைந்துந்

துங்கமிகு ஞானவிந் திரிய மைந்துந்

துலங்குகலை காலமுத லேழி னோடு

தங்குசுத்த வித்தைமுத லைந்து மாகத்

தத்துவமுப் பததாறிற் கப்பா லாகி

அங்குதித்தே பெரியபுலத் தருளோ டோங்கு

மாதிமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 6

இந்திரனல் லடைப்பைகொள வங்கி தீப

மேந்தயம னுடைவாளோ டினிது மேவ

வந்துகளாஞ் சியைநிருதி யெடுப்ப நல்ல

வருணனெழிற் சிவிறிகொடு மருங்கிற் றூவ

நந்தனிலன் கவரிகொளக குபேர னோடு

நலங்குலவீ சானனறு மலர்தூ யேத்தச்

சுந்தரமார் பெரியபுலத் தருளோ டோங்கு

சோதிமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 7

திருமாலு மலரயனு மிருகை கூப்பச்

சிறந்தமுனி வரராமர் வணங்கிப் போற்ற

வருமிரவி மதிகவிகை தாங்கி மேவ

வரமுறுநல் லடியர்மலர் மாரி தூவ

உருகவரு தும்புறுநா ரதர்கள் பாட

வுயர்கணநா தர்கடுதிசெய் யோசை நீட

அருளுருவாய்ப் பெரியபுல மமர்ந்தே யோங்கு

மாதிமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 8

சங்கமொடு துடிமுரசு சின்ன மோங்கத்

தயங்குகொடி யாலவட்டம் பீலி தேங்க

மங்கையர்க ணெண்வகைமங் கலங்க டாங்க

மணமல்தூ யரமகளிர் மகிழ்ச்சி தூங்கத்

துங்கமுறு வேலணைநன் னகரில் வாழுந்

துரியபர சிவனடியா ரெவரு மோங்க

அங்கெழில்சேர் பெரியபுலத் தருளோ டோங்கு

மாதிமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 9

ஆதிசிவ பாலகரே யாடீ ரூஞ்சல்

அன்பருளத் தமர்முதலே யாடீ ரூஞ்சல்

வேதசிவா கமப்பொருளே யாடீ ரூஞ்சல்

விளங்குமை திருமகளே யாடீ ரூஞ்சல்

ஒதபர பரஞானத் துண்மை யாகி

யோங்குசுத்த நிட்களரே யாடீ ரூஞ்சல்

சோதிசுயஞ் சோதிபரஞ் சோதி யாகித்

துலங்குமகா கணபதியே யாடீ ரூஞ்சல். 10

அந்தணரா தியர்வாழி யறங்கள் வாழி

யாவினமு மடியவரு மமர்ந்தே வாழி

சந்தமிகு வேதசிவா கமங்கள் வாழி

தயங்குதிரு நீறொடக்க மணியும் வாழி

வந்துமழை மும்மரி பொழிந்து வாழி

வளமுறுவே லணைநகரோ ரெவரும் வாழி

சுநதரமார் பெரியபுலத் தருளோ டோங்குஞ்

சோதிமகா கணபதியின் றுணைத்தாள் வாழி.

எச்சரீக்கை

கடமார்கய முகனேசிவன் மகனே யெச்சரீக்கை

கண்மூன்றுடை யவனேகண பதியே யெச்சரீக்கை

திடமார்வரை யுமையாடரு செல்வா வெச்சரீக்கை

தேசார்கண ராசாசெக தீசா வெச்சரீக்கை

படமார்பணி மணியாலொளி முடியா யெச்சரீக்கை

பரனேயருள் வடிவேமுத்தி முதலே யெச்சரீக்கை

தடமார்பொழிற் பெரியபுலஞ் சார்வா யெச்சரீக்கை

தருமாருயி ரெவாக்குமருள் தருவா யெச்சரீக்கை.

பராக்கு

ஓசைதரு மோங்கார வொளியே பராக்கு

உண்மைநிறை நாதவிந்தி னுருவே பராக்கு

தேசுதரு சூரியப்பிர காசா பராக்கு

சித்திபுத்தி யானசத்தி நேசா பராக்கு

மாசிலுயிர்க் கருள்கனிந்த வரதா பராக்கு

மாமறையி னுருமுதலில் வருவாய் பராக்கு

பாசமவை நீக்கியருள் பரமா பராக்கு

பத்தர்நினை வொத்தவருள் பரனே பராக்கு.

மங்களம்

சீரேறு பரமசிவ னருளுருவ தாய்வந்த

செகதீச திருமங்களம்

தெய்வமறை முதலிலகு பிரணவப் பொருளாய்ச்

சிறந்தமுத றிருமங்களம்

பேரேறு மடியரிடம் கெடவருள்செ யைங்கரப்

பெருநற் றிருமங்களம்

பிரசவிழி யரியரவி னுருவகல வருள்செயும்

பிள்ளையடி திருமங்களம்

பாரேறு மலவிரு டுரந்துபர ஞானமருள்

பாசாங்குச திருமங்களம்

பரவுமம் பிகைபால கயமுக கணேசபர

பகவசுக திருமங்களம்

காரேறு மெயிலயி லணைப்பதியி னர்க்கருள்

கனிந்தருள்க திருமங்களம்

கவினிலகு பெரியபுல மமர்மகா கணபதிக்

கருணாநிதிக் கடவுளே.

வாழி

தேமேவு கமலமல ரெனவிலகு கருணைபொழி

திருவதன மாறும் வாழி

திருவேர காதியறு தலமோடு பலதளி

சிறந்ததிரு வருளும் வாழி

பூமேவு மருண்மாரி பொழிபனிரு நயனமொடு

பொலிவுபெறு தோள்கள் வாழி

பொருவிறெய் வதயானை யொடுவள்ளி நாயகி

பொலிந்தினிது தினமும் வாழி

மாமேவு கிரவுஞ்ச மலைகீறு வேலினொடு

மயில்சேவ றானும் வாழி

மலர்மேல வர்க்குமுயர் குறுமாமு னிக்குமருள்

வரதசிவ குமர வாழி

காமேவு மயிலணையி லமரடியர் பவநோய்

களைந்தொழுகு கருணை வாழி

கருதுதமி ழாசிரிய பரமகுரு நாதனிரு

கழலிணைகள் வாழி வாழி.

ஏரம்பையர்

1847 - 1914

இவரது ஊர் மாதகல். தந்தையார் பெயர் சுப்பிரமணிய சாத்திரியார். இவர் நல்லூர் சம்பந்தப் புலவர், நீர்வேலி சங்கரபண்டிதர், ஆறுமுகநாவலர் என்போரிடங் கல்வி கற்றுப் பாண்டித்தியம் எய்தியவர்.

இவரியற்றிய செய்யுணூல்கள் : நீதிசாத்திரம், நாகேசுவரி தோத்திரம, குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கதிரேசரூஞ்சல், நகுலாசல புராணம் முதலியன.

நீதிசாரம்

இந்தநூ றன்னைக் கற்பா னெவனவன் நன்மை தீமை

முந்துசெய் திடுவ செய்யத் தகாதன முறைமை தானும்

நந்தலி லறம்போ திக்கு நன்மையு முள்ள வாறே

சிந்தையி லுணர வல்லா னென்றனர் வடநூற் செல்வர்.

நகுலாச புராணம்

பகுதியுந் தகுதியும் பாலு ணர்த்திடும்

விகுதியும் பெற்றிடை விளங்கி ரட்டியால்

நகுலனைப் பணிபவர் நண்ணு மீறதாம்

புகுமுதல் பெற்றடி பொருந்தி வாழ்வரே.

ஐந்துறை நிகமந் தம்பின்

அமைந்திடும் முல்லை யக்கம்

நொந்திடும் இடைபொ றைச்சீர்

நுதலினோ டழகு பெற்று

பைந்தொடி சோழ ராசன்

பாவையும் உருவம் மாறி

முந்திவந் தெழுந்தாள் நீரின்

மும்மடி யழகு பெற்றே.

வள்ளியம்மை திருமண ஞானக் கருப்பொருள் விளக்கம் என்னும் நூலுக்கு அளித்த சிறப்புப்பாயிரம்

சீர்கொண்ட புள்ளிமயில் வாகனனார்

வள்ளியெனுந் தெய்வக கொம்பை

யேர்கொண்ட மணமுடித்த சரித்திரத்தி

னுட்பொருளை யாருந் தேறப்

பேர்கொண்ட வொருநூலா யாத்தளித்த

னறிஞர்நனி பேண விந்தப்

பார்கொண்ட தேவரெனு மருமறையோர்

குலத்தினிலுற் பவித்த மேலோன்.

காரேறு தண்டலையுங் கடியேறு

வண்டலைபொற் கஞ்ச வாவி

நீரேற நெல்லேற நிதியேறு

வேளாளர் நிறைந்து வாழும்

பாரேறு நன்னவா லிப்பதியில்

வாழ்வுபெறு பன்னூல் பல்லோ

னேரேறு சிவசாம வபிதான

மிகவேறு மிசைவ லோனே.

சரவணமுத்துப்பிள்ளை

1848 -1916

இவரது ஊர் ஊரெழு. தந்தையார் பெயர் சுப்பிரமணியபிள்ளை. இவரும் சுன்னகம் குமாரசுவாமிப் புலவரும் முருகேச பண்டிதரிடம் ஒருங்கு கற்ற மாணவர் ஆவர். 'சைவ உதயபானு' என்னும் பத்திரிக்கையின் ஆசிரியராகக் கடமையாற்றினர்.

இராமநாதபுரத்து மகாராசாவாகிய பாற்கர சேதுபதி மீது ஒரு பிரபந்தமும் தேர்க்கவியும் பாடினர்.

பிரபந்தச் செய்யுள்

சித்தாந்த சைவத் திறந்தெரிந் தான் மன்னர் தேடுசெங்கோ

லைத்தாந் தகையி னிறுத்து வராங்க ணமர்பிரசை

சந்தாந் தவநெறி சேர்வரென் றோர்ந்தத் தனிவழிக்கே

சித்தாந்தஞ் செய்தது சேது பதிப்பெயர்ச் சிங்கமொன்றே.

தேர் வெண்பா

தேர்மீது தேமாலை தேனேக மார்புதுவ

ளார்மீது விற்பனர்க்கீ யற்புதத்தின் - போர்மீது

போதுவபோ லாமனத்திற் போய்த்திகழ்ந்தாய் பன்னோத்துச்

சேதுபதி மன்னமனே தேர்.

தனிநிலைக் கவிகள்

கற்றார் புகழ்சைவ சித்தாந்தப் பாலின் கடல்கடைந்து

மற்றார் நினைக்கருஞ் சைவப்பிர காசன மாவமிழ்தை

நற்றா ரணிச்சைவ நற்புல வோர்க்கு நயந்தளித்தான்

வற்றா வறிவுடைச் சங்கர பண்டித மாதவனே.

தேனோ கனியோ வெனவே சுவைக்குஞ் செழுந்தமிழ்

தானோ தனக்கனை யாகி புதித்துயர் சற்குருவாய்

வானோர் புகழ்நல்லை வந்தரு ணாவலன் வண்புகழை

நானோ சொலவல்லன் சேடனுங் கூறிட நாணுவனே.

சிற். கயிலாசபிள்ளை

1857 - 1916

இவரது ஊர் நல்லூர். இவர் திருச்சிற்றம்பலம் என்பருக்கு மாணிக்கவல்லிக்கும் புதல்வராக பிறந்தார். ஆங்கிலத்தையும் தமிழையும் ஐயந்திரிபறக் கற்றபின் மாட்சிமைதங்கிய தேசாதிபதியின் முதலியாராகக் கடமையாற்றினர். அப்போது 'இராசவாசல் முதலியார்' என்னுஞ் சிறப்புப்பெயர் சூட்டப்பட்டார். இவர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளை தமிழ் ஏட்டுச்சுவடிகளைப் பதிப்பித்த போது அவருக்குத் துணையாயிருநதார்.

வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தின் அகவற் பாடல்களை இவர் பாடினர் என்ப.

ஆற்றுப்படை

நிலைமண்டில ஆசிரியப்பா

போற்றுகம் வம்மே! போற்றுகம் வம்மே !

மாற்றருஞ் சிறப்பின் வண்டமிழ்ப் புலமைப்

பாவல் லீரும் நாவல் லீரும்

போற்றுகம் வம்மே ! போற்றும் வம்மே !

வடாஅது நெடியோன் வண்புகழ் மலையே

தெனாஅது குமரிந்தெண்டிரைப் பௌவமே

குணாஅது வங்கக் குரைகடற் குடாவே

குடாஅது வலையக் குண்டுநீர்ப் பரப்பே,

என்றென் றமைந்த தென்றமிழ் வாழ்க்கைப்

பாவல் லீரும் நாவல் லீரும்

போற்றுகம் வம்மே! போற்றுகம் வம்மே !

தென்றமிழ் நிலத்தின ரன்றுதாம் பலகாற்

பிரிந்துறை கொள்கைய ராகித் தெரிந்த

யாழின் வந்த வாழ்வுடைப் பெயரிற்

றாழ்வின் றோங்கிய தண்டமிழ் நிலத்திலும்

முத்தமிழ் விரகன் முதிரிசைப் பனுவல்

நிரைகழ லரவ நிறைமொழி பெறீஇக

கோணா தோங்கிய கோணமா மலையினும்

திரைகட லோடிய திருவமர் சிறப்பிற்

சிங்க வண்டுறைச் சிங்க புரத்தினும்

தாங்கா விளையுட் டகைசால் கழனியுந்

தூங்கு குலைத்தெங்கு தேங்குபல படப்பையும்

பொறிகா ணலவனொடு மீனமுங் குறையாச்

செறிமாண் கழிசூழ் புளியந் துருத்தி

மட்டுக் களப்பினும் வண்புகழ் நிறீஇய

அரும்பொருட் பொன்பெயர் அமர்நாட் டங்கணும்

இட்ட வாழ்க்கை கட்டிய பான்மைப்

பாவல லீரும் நாவல் லீரும்

போற்றுகம் வம்மே! போற்றுகம் வம்மே !

தென்றிரு மதுரைச் செழுமபதி யகவயின்

நான்மைச் சங்கமும் நன்குநிலை யிடுமார்

மும்மைச் சங்க மும்மையி னிரீஇச்

செம்மைத் தமிழ்த்திறம் சீர்பெற வளர்த்த

பாண்டி மன்னர்மன் வேண்டுபு கொண்டனர்

பாண்டி யந்துரைக் கோலமும் போலுமென்

றியாண்டு மேதையோர் செம்மாந் தனரால்

நமரங் காள்நம் மொருமொழி கேண்மோ

அன்பினைந் திணையென் றரும்பொருண் மலர்ந்த

அங்கயற் கண்ணி பங்குறை யிறைவனும்

கீரண் றமிழினன் வாரம் வைத்த

முருக வேணம் முதற்பெரு வணிகச்

சங்கத் தமிழின் றலைமைப் புலவனும்

யாங்கா கியரென யாமயங் கலமால்

பொலம்புரி முளரிப் பொய்கையங் கோட்டுக்

கூட லாலவாய் நீடுபெலங் குன்றினும்

எஞ்ஞான் னும்மென இஞ்ஞான் றதனினும்

உண்மகிழ்ந் துடங்கும் உறைகுந ரலரோ?

கலையெலா முவர்பாற் கற்றொருங் குணர்ந்த

பொதியமா மலையிற் றிருமா முனியும்

வதியுமா மகிழ்தலும் தவிர்கலன மன்னோ!

வடமா மொழிக்கட் கடவுண்மா மறையோ

அப்பெரு மறையின் அரும்பெறற் பயனாச

செப்பிடு மருணூற் றிறந்தெரி பாதமோ

கேட்டன் முதலாக் கிளந்திடு திறமோ,

கோட்டமில் சிவநெறிக் குரவருக்ந தாமோ

என்றென் றிவ்வெலாந் துன்றுபு மன்ற

நான்மையின் முடிந்த பான்மையி னன்றே

சங்கமு மிங்ஙன் சான்றுநின் றதுதான்!

ஈதுநந் தெய்வத் திருவருட் பாங்கென்

றோதுறு மருநூல் ஒருநாற் பயனும்

நாற்பெருஞ் சங்க நன்னெறி நிலையிப்

பிறவா நெறியி னிறுமாப் பம்மே!

ஆதலின் நாமெலாங் காதலிற் குழுமிப்

போற்றுகம் வம்மே! போற்றுகம் வம்மே!

மாற்றருஞ சிறப்பின் வண்டமிழ் புலமைப்

பாவல் லீரும் நாவல் லீரும்

போற்றுகம் வம்மே! போற்றுகம் வம்மே!

சிவப்பிரகாச பண்டிதர்

1864 - 1916

இவரது ஊர் நீர்வேலி, தென்மொழி வடமொழிப் புலமை நிரம்பிய சங்கரபண்டிதர் இவருடைய தந்தையாராவா. இளமையிலே தந்தையாரிடங் கல்வி கற்றார்.

இவரியற்றிய செய்யுணூல் பாலாமிர்தம்

பாலாமிர்தம்

இச்செயலா லீதுவரு மென்றாரா யாமலே

எச்செயலு மேலோ ரியற்றாதாம் - இச்சையொடு

வல்லையிற் றுவரேல் வந்திடுமே மாறாக

அல்லவர்க் கென்றே யறி.

வித்துவான் சிவானந்தையர்

1873 - 1916

இவரது ஊர் தெல்லிப்பழைக்கு அயற்கிராமமாகிய பன்னாலை. தந்தையார் பெயர் சபாபதி ஐயர். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடங் கல்வி கற்றவர். சிதமபரத்திலே சிலகாலம் வாழ்ந்தவர்.

இவரியற்றிய செய்யுணூல்கள்: புலியூர்ப் புராணம், புலியூர் அந்தாதி, சனிதுதி என்பன.

புலியூர்ப் புராணம்

அவைகெழு புலவ ருள்ள மறிந்தறிந துவகை யாரக்

சுவைகெழு தமிழன் பவ்வஞ் சொரிமுகி லனைய தூயோய்

நவைகெழு பிறவி போககு ஞானவா னந்தக் கூத்தர்

சவைகெழு பெருமை யீண்டுச் சாற்றுதி தமியேற் கென்று. 1

மற்படு குன்றத் திண்டோன் வசுவகத் தியனை வேண்ட

வெற்படு குறியோன் கூறும் வேதமுற் றறிந்த தூயோன்

சொற்படு முலக முத்தா லகனெனச் சொல்லு நாம

மிற்படு குழவி யின்றி யிடருழந் தினைய செய்வான். 2

மறைமுடி வறியா முக்கண் வள்ளலார் கமலப் பொற்றா

ணிறைமலர் கொடுபூ சித்து நிட்டையி னெடுநா ணின்றான்

குறைவறு மமலன் மேனி குறித்துநோக் குவதே யன்றி

யிறையினும் பிறிது நோக்கா னெத்திசை யகத்து மாதோ. 3

கேட்பது மமலன் சீர்த்தி கிளப்பது மவன்சீ ராகத்

தாட்பது மத்து வைத்துத் தளர்வறு சிந்தை யோனாய்

நாட்பல கழிய நின்ற நயங்கண்டு ஞான மூர்த்தி

யாட்படு மவர்க்கெட் டாண்டே யாயுள்பெற் றுடைய னாகி. 4

அறநெறி வழுவா தோனா யகிலமு முணர்ந்தோ னாகுந்

திறமுறு தனையற் றந்தான் செங்கண்மால் காணாச் செல்வன்

புறமுறு முலக நாமம் போற்றிடு சுவேத கேது

வுறவுகூ ரைந்தா மாண்டி னுபநய னமுமாங் குற்றான். 5

முந்தையாம் பிறவி தோறு முயன்றிடு தவத்தி னாலு

மெந்தையா ரருளி னாலும் யாவையு மெளிதிற் கற்று

வந்தமுற் றறிவி னாகி வைகினன் சுவேத கேது

நந்தியெம் பெருமா னென்ன ஞாலத்தோர் நயக்கு மாறே. 6

மறையொரு நான்கு மாங்கே வகுத்திடு மங்க மாறு

மறைபொரு ளனைத்துந் தேர்ந்தா னரும்வே தாங்க நூலின்

றுறைபடிந் துணர்ந்தா னாங்குச் சொற்றிடுந் தகர வித்தை

முறையற வறிதல் வேட்டான் முன்வினைத் தொடர்பு மூள. 7

யாதைமா தகர வித்தை யென்னநீ யியம்பிற றென்று

தாகையை வணங்கிக் கேட்டான் சாற்றுமுத் தால கன்றான்

றீதுமுற் றகல நீக்கிச் சிவகதி யளிக்கு மஃது

பேதையோ ரறிய மாட்டாப் பெற்றிய தாகு மைந்த 8

ஆங்கம ரிதய மென்னு மாகாய மதுவே யாகு

மோங்கிய தகர மென்னு முறுபெயரைத்துக் கொள்வார்

தீங்கறு மஃதி ரண்டு திறம்படு மென்று செப்பிற்

பாங்குறப் புகலு மாதி பவுதிக மென்ப மன்னோ. 9

தேர்தரு விராட்டி னுள்ளச் செங்கம லப்போ தாகும்

பார்தரு புலியூ ரென்னப் பன்மறை யுணர்ந்தோர் சொல்வர்

கார்தரு மணிமி டற்றுக் கடவுளக் கனக மன்றுட்

சீர்தரு பேரா னந்தத் திருநடஞ் செய்ய நிற்கும். 10

படியுணர் பிறவி தோறும் பயின்றிடு கொடிய பாவ

நொடியினிற் புவிமேல் யார்க்கு நூறிடுந் தூய தீர்த்தம்

வடிபுனற் சிவகங் கைப்பேர் வாவியு மருவா நிற்குங்

கடிகெழு புலியூர்ச் செல்வக் காமரூ ரகத்து மாதோ. 11

கொம்பென சிறும ருங்குற் குயில்பொரு குதலைச் செல்வா

யம்பிகை யறம்வ ளர்த்தா னடிதொழு மன்பா செய்யும்

வெம்பவம் வீட்டி ஞான வீடுதந் தருளு மாற்றா

லும்பர்சூ ழந்ந கர்க்க ணொருமருங் குறையு மன்றே. 12

ஆனந்த கூட மென்னு மருபெயர்ப் புனலுட் கொண்ட

வீனந்தி ரந்ந கர்க்க ணெம்பிரான் பதுமப் பொற்றாண்

மோனஞ்சேர் ஞானா னந்த மூழ்குறத் குண்டோர் முன்னி

வானந்தாழ் தருமெய் வீட்டின் வதிவது சரத மன்னோ. 13

கண்டமாத் திரைக்கே முத்தி கலப்புறத் தருவ தாகு

மண்டர்கோ னாங்கி யற்று மானந்த நடன மாங்குத்

தொண்டருக் கன்பு நல்குந் தூயபே ரறிவே யாகி

மண்டுசிற் சபையெஞ் ஞான்றும் வானவர் பரவ மன்னும். 14

அத்திருச் சபைகண் டாருக் ககம்விழை பொருள்க ளோடு

முத்தியு மெளிது வாய்க்கு முன்னியாங் கொருநாள் வைகின்

மெத்துவா யிரமாங் கோடி வேள்விசெய் பயனுண் டாகு

மித்திறற் தஃதா மாதி பவுதிக மியம்பின் மைந்த 15

ஆதியாத் துமிக மாவ ததனினு முயர்ந்த தாகுந்

தீதறு தன்ச ரீரஞ் செறிமனக் கமல மாகு

போதிடு மிரண்டி டத்து முமையொரு பாகஞ் கொண்டேன்

கோதிறான டவமி யற்றுங் குறிப்பவர்க் கருளு மாற்றால். 16

ஆதலி னதுகண் டோருக் கரும்பெரு முத்தி மேவு

மீதடை தரும்பொ ருட்டா லீண்டமவ் வடிவ மாகி

மேதகப் பாலித் தேத்தல் வேண்டுமவ் விமல மூர்த்தி

யோதுபௌ மனத்தின் மேவி யுறுவதொன் றாகுங் கண்டாய். 17

சொல்லுரு வாகு முன்னர்ச் சொற்றவா சகம்பொ ருட்டாற்

புல்லுரு வாகு மேனைப் புகன்றமா னதந்தா னஃது

மெல்லையிற் சகள மாதி யியம்பிடு வேறு பாட்டா

னல்லவ ரிருதி றத்து நவிற்றுவர் வேறு பாடே. 18

வருமெழுத் தருவ மாக வகுப்பரச் சகன மாட்சி

மருவுமற் றையதா னந்த வானுரு மருவா நின்கும்

பொருவுமொன் றிரண்டு மூன்றாப் புகன்றிடும் வேறு பாட்டாற்

றிருவெழுத் துருவும் பற்றல் திறமுடைத் தென்ப மன்னோ. 19

நாட்டுப் படலம்

ஆம்பல் பற்பல வொருகையிற் பற்றின ரழிப்பார்

தேம்பப் புண்டரீ கம்பல வொருகையிற் சிதைப்பார்

சாம்பு மெல்லியர் மகளிரென் றுரைப்பது சழக்கோ

நாம்பு கன்றது பொய்யுரை படுங்கொலோ நவிற்றீர். 20

பக்கீர்ப் புலவர்

1862 - 1917

இவரது ஊர் மன்னா‘ பிரிவிலுள்ள எருக்கலம்பிட்டி எனபதாகும். தந்தையார் பெயர் கப்பக்கண்டு. விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளங் கூறும் கதைகளுள் ஒன்றைத் தோந்தெடுத்து விருத்தப் பாக்கறா3ற 'காந்த ரூபி' என்னும் பெயரிலே நாடகமாக எழுதினார். பல தனிப் பாக்களையும் பாடியுள்ளர்.

இறைவனை நாடிப் பாடிய பாடல்கள்

நாதனே இந்த நாயினையேன் படைத்தாய் - கெட்ட

நடையாகிய படுபாதக முடனே பல

மடமீறிய - நாயினையேன் படைத்தாய்.

மெய்ப்பொருளே உந்தன் வேதம் விதிட்டுப்

பொய்பொருளாம் நிலம் பொன்

மாதர் மையல்தலைக் கேறி வெறிகொண்டு

வடுவேசிகள் படுதாசிகள் உடனே பல

மடமீறிய - நாயினையேன் படைத்தாய்

மெப்பொருளே உந்தன் வேதம் விதிவிட்டுப்

பொய்ப்பொருளாம் நிலம் பொன் பெண்ணைத் தொட்டு

எப்பொழுது முழு மோசத் திடப்பட்டு

முழு நாளுமே தொழுகாதுணை வழிகேடுட பழிமீறிய - நாயினை...

உன்னபி நாத ருரைவழி மறந்து

இன்னலில் மேசத மென்னவுந் திறந்து

பொன்னகர் போம்வழி தன்னையும் மறந்து

புலையாடிய விலைமாதர்கள் மயல்மீறிய - நாயினை....

சிற்றநபி முகையதீன் பாதங் சூடி

முத்தமிழ் பாடாது சிற்றின்பமோ கோடி

எத்தினமும் பாவம் மொத்தப்பாவந் தேடி

எக்காலமந் தவமாறிய பக்கீர்எனும் பவமீறிய - நாயினை....

வே. க. இராமலிங்கம்பிள்ளை

1868 - 1918

இவரூர் வேலணை. தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை. இளமையிலேயே இந்தியாவுக்குச் சென்று அங்கு கல்வி கற்றார். பின்பு அங்கேயே வாழ்ந்து தமிழ்ப் பணி புரிந்தார்.

இவரியற்றிய நூல : 'சிதம்பரப்பதிகம்'

சிதம்பரப்பதிகம்

உலசெலா முணர்த றேற்றா வொருவனே யுன்றன் பாதம்

நிலவிட வென்ன கத்தில் நித்தனே யருள வேண்டுங்

கலையுணா புலவர் போற்றுங் கண்ணுதல் தில்லை மன்றி

னிலகருள் நடனஞ் செய்யு மெந்தையே போற்றி போற்றி. 1

ஆதிநாட் டவஞ்செய் தேத்து மரும்பெரும் புலியும் பாம்பும்

தோதிலா துய்ய வேண்டிக் கொடுத்தருள் கிருபை தன்னை

தீதெலா முருவ மான தீயனே னுய்ய வெந்தை

நீதியே யருள்செய் தில்லை நிர்த்தனே போற்றி போற்றி. 2

நறுமலர்க் குழலாள் பங்க நல்லறி வற்ற நாயே

னிறைவநின் பாத மேன்மை யெள்ளள வறிய மாட்டேன்

கறைமிட றுடைய வெங்கன் கண்ணுத லைய தில்லை

யறிவநின் னருள்சொ லாயு மறிவருள் அத்த போற்றி. 3

அலைகடல் சூழும் பாரி லறிவிலார் நகைக்க வென்னை

விலகுத லின்றிக் கெட்ட மிடியிடித் தலைக்கு தையா

சலமக ளெருக்கு வன்னி தலைமிசை யணிந்த தில்லைப்

புலவனே கிருபை செய்வாய் பொன்னடி போற்றி போற்றி. 4

துடியிடை மடவார் போகத் தன்பமார் சலதி தன்னு

ளடிபடு கின்ற பாவிக் கப்பனே கதியு முண்டோ

படிமிசை யடியார் போற்றும் பண்புறு தில்லை மன்றிற்

பிடியன நடையோ டாடும் பெரியனே போற்றி போற்றி. 5

அளவிலாப் பாவ மென்னு மார்கலி தன்னு ழாழ்ந்தே

அளவிலா வன்ப ரேத்து மண்ணலே யுனைம றந்தேன்

மளவிலார் மூரி யேற்று மன்னவா தில்லை மன்று

ளளவிலா நிருத்தங் காட்டி யருள்செய்வா யத்தா போற்றி. 6

பணமணிப் பாந்த ளல்குற் பாவையார் மோக மென்னு

நிணமணிச் சேற்றிற சிக்கி நீசனே னயரு கின்றேன்

மணமணி கூந்தற் செவ்வாய் வல்லியோ டாடு தில்லைக்

குணமணிப் பதந்தந் தாள்வாய் கொற்றவா போற்றி போற்றி. 7

உச்சியிற் கதிர்வந் தார உயருதைப் பூசந் தன்னின்

மெச்சிடு வியாழ வாரம் விளங்கயன் மாலும் போற்ற

கச்சணி முலையா ணின்று கடைக்கணாற் பார்வை செய்ய

நிச்சய நடன மாடும் நின்மலா போற்றி போற்றி. 8

மதியணி சடையிற் பாம்பு மத்தமுங் கொன்றை சூடுந்

துதியணி கூத்துங் கொண்டு துன்பத்தை நீக்கு மெங்கள்

சுதியணி கீத நாதன் தொண்டர்கள் பணியுந் தில்லைப்

பதியணி யென்ன நிற்கும் பரமனே போற்றி போற்றி. 9

பழமறை போற்றுந் தில்லைப் பகவனைப் போற்றி செய்தே

அழகமர் சோலை சூழு மரகர சிவமாஞ் சத்தம்

பழகுவே லணையிற் கந்தப் பிள்ளையிற் றோன்று பாலன்

மழவிடை யாற்குச் சாத்து மாலையென் றறிஞ ரேற்பார். 10

வேறு செய்யுள்கள்

வள்ளி படர்ந்தபுய மாமயிலோற் கன்புமிக

தெள்ளியதோர் நற்பதிகஞ் செப்பவே - விள்ளென்

திருக்கோட்டி யாளுஞ் செறிநால்வாய் முக்கண்

ஒருகோட் டிருதாள் உலா.

சீருலவு மணாணநவ ரத்னகே வணகிரண

திவ்யமணி மகுடமுடியும்

திருநுதலு மருண்டை திறந்தொழுகு மீராறு

செந்தா மரைக்கண்களும்

ஏருலவு செம்பவள வாயுகை யுங்கடம்

பிணரிலகு திண்டோள்களும்

எழின்மேவு வள்ளியும் பிடியானை யுங்குலவு

மெழுதரிய திருமார்பமும்

தாருலவு முதரமு மருங்குலுந் தண்டையுந்

தாளுமயில் வேலுமுரகன்

றடிமுடிக ணெளிநெளிய நடனமிடு மயிறுமாண்

டலைவிறற் கொடியுநெடுமா

மேருலவு செங்கதிர்த் திருவனைய பொலிவினொடு

வினையனேன் காணவருவாய்

விசையைந் தரிபால வசிகசம் பிரமசால

விசயசுந் தரவேலனே.

---------------------------------------------------

க. மயில்வாகனப் புலவர்

1875 - 1918

இவரது ஊர் தெல்விப்பழையைச் சார்ந்த வறுத்தலைவிளான். தந்தையார் பெயர் கணபதிப்பிள்ளை. இவர் சுன்னாகங் குமாரசுவாமிப் புலவரிடங் கல்வி கற்றவர். தெல்லிப்பழை, மல்லாகம், காங்கேசன்துறை முதலிய ஊர்களிலுள்ள ஆங்கில வித்தியாசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்பு நொத்தாரிசுப் பரீட்சையிற் சித்தியெய்தி அவ்வுத்தியோம் வகித்தனர்.

சிறந்த புலமை படைத்த இவர் சொல்லாங்காரம் பொருந்திய செய்யுள் செய்வதில் ஈழத்திலே தலைசிறந்தவராய் விளங்கினார். இவரியற்றிய நூல்கள் : மயிலை மும் மணிமாலை, விநாயகரகவல், மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், ஊஞ்சல், வைரவர் தோத்திரம், மாவைப்பதிகம், இணுவைப்பதிகம், துணைப்பதிகம, நகுலேசுவரர் விநோத விசித்திர கவிப்பூங்கொத்து, இணுவைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியன.

ஊஞ்சல்

காப்பு - வெண்பா

தென்மயிலை வாசர் சிவசுப்ர மண்யர்தமக்

கின்மொழிசே ரூஞ்ச லிசைபாடப் - பொன்மணிப்பூண்

கோட்டுக் களிறு குடிகொண்டு வாழுமன்பி

னாட்டு மடியே னகத்து

விருத்தம்

பூமேவு சூரியனைப் புடைத்து நீட்டிப்

புரிந்ததுபோன் மாணிக்கப் புதுத்தூ ணாட்டி

ஏமேவு சந்திரனைப் பிடித்து வாட்டி

யிசைத்ததுபோல் வயிரவனை யிறுக மூட்டி

மாமேவச் சுதைமுத்தக் கயிறு பூட்டி

வான்மணிபோ னவரத்நப் பலகை மாட்டிக்

தேமேவச் செய்யூஞ்சற் பீடத் தேறிச்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 1

நானமணி மண்டபத் தளாவி யாவு

நறுவிரைநீர் மூழ்கியிழைப் பட்டா வெற்றி

ஆனதிரு வாபரணங் கலைகள் சாத்தி

யமைவுபெறச் செய்ததிருப் பந்தர்க் கீழாப்

போனகநீர் கைதொட்டுப் பூசி வாசம்

பொலியமடுத் தரும்புகைஃ றீப மாடித

தேனமரும் பூமலிதென் மயிலை வாழுஞ்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 2

வெண்கவரி யெழுந்துசர வணத்தி னார்ந்து

மிளிர்திரைபோ லிருபாலும் வீச முத்தத்

தண்கவிகை நிழற்றவொளி ரால வட்டந்

தயங்கிக்கால் செய்யவலம் புரிக ளார்ப்ப

கண்கள்சுக நீர்சொரியக் கரங்கள் கூப்பிக்

கசிந்துதொழ வன்பர்குழாங் கருவி யேங்கத்

தெண்கமலை யுறைந்திடுதென் மயிலை வாழுஞ்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 3

பணியார்ந்த வரவினினங் கால்க ளாகப்

பார்மகளே சேருமொரு பலகை யாக

அணியார்ந்த கரைமரம்வா னாண்க ளாக

வழகுதரு பொய்கைமலர் பாய லா

மணியார்ந்த சரவணமா மஞ்ச மேலா

மகிழ்மென்கா லசைப்பவுறை மைந்த கந்தா

திணியார்ந்த மரங்செறிதென் மயிலை வாழுஞ்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 4

தாங்கரிய துன்பமெலாந் தேவர்க் காக்கித்

தகையநிலை போக்கிநிதஞ் சிறையில் வாட்டும்

ஓங்கசுர குலச்சூர னாவி போக்கி

யும்பரா சியலையிந்தி ரற்கு நாட்டிப்

பாங்கிலுறு வோர்துயரம் பலவு நீக்கிப்

பங்கிலா நெறியன்பர் தமக்குக் காட்டிச்

தேங்குநிரை பால்பொழிதென் மயிலை வாழுஞ்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 5

வான்பூத்த பரங்குன்றிற் றெய்வ யானை

மணந்தாடி நின்றதிர வூஞ்ச லாட்டும்

மான்பூத்த விழிவள்ளி தன்னை வேட்டு

வரையகத்துப் புரிந்ததிரு வூஞ்ச லாட்டுங்

கான்பூத்த திரவூஞ்ச லாட்டி லொன்றுங்

கண்டறியாப் பேதையரேங் களிக்கு மாறு

தேன்பூத்த கழைவளர்தென் மயிலை வாழுஞ்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 6

பூதமெடுத் தன்றுமலைக் குகையில் வைத்துப்

புனிதமுறு நீர்படியப் போக வன்பின்

ஓதுதலுங் கீரனுக்குச் சிறையை நீத்த

வொப்பிறிரு முருகாற்றுப் படைசொல் வாருங்

காதுகவ ரருணகிரி நாதர் சொன்ன

கனிந்ததிருப் புகழோது வாரு மேவச்

சீதமலர்த் தடநிறைதென் மயிலை வாழுஞ்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 7

கன்னியராம் வள்ளியொடு தெய்வ யானை

காதலொடு மிரண்டுபுறத தேயு மேவத்

துன்னசுர குலங்களைவேல் வலக்கை யோங்கச்

சுந்தரமார் மஞ்ஞையுனைத் தாங்கி நிற்ப

மன்னுவணத் தரியிரண்டு பெண்க ளோடும்

வலியாழி கொண்டிருத்தல் போல வைகிச்

சென்னிபணி தவர்செறிதென் மயிலை வாழுஞ்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 8

தஞ்சமெனும் பேர்க்களியீ ராடீ ரூஞ்சல்

சரணடையாப் பேர்க்களியீ ராடீ ரூஞ்சல்

கஞ்சவிதிக் குரைமொழியீ ராடீ ரூஞ்சல்

கமலமுகத் தருள்விழியீ ராடீ ரூஞ்சல்

விஞ்சுமயன் மாற்கரியீ ராடீ ரூஞ்சல்

விழுமியவன் பர்க்கெளியீ ராடீ ரூஞ்சல்

செஞ்சொலறி வோர்புகழ்தென் மயிலை வாழுஞ்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூஞ்சல். 9

பூவாழு மாந்தரெலாந் தழைத்து வாழப்

புயல்பசுக்கண் மகளிர்கற்புப் பொலிந்து வாழப்

பாவாழுஞ் செந்தமிழ்சித் தாந்தம் வாழப்

பயின்மறையோ ரரசரொடு பின்னோர் வாழ

நாவாழு நான்மறையா கமங்கள் வாழ

நவவீர ரஞ்செழுத்தா றெழுத்தும் வாழச

சீர்வாழுந் தென்மயிலை செழித்து வாழச்

சிவசுப்ர மண்யரே யாடீ ரூங்சல். 10

நகுலேச்சர விநோத விசித்திரக் கவிப்பூங்கொத்து

ஆறுதலை சேர்ந்தா ராறுதலை யீந்தா

ராறுதலை யார்தந்தை யைந்தலையார் - மாறினகர்

நங்கை தகுதி நரலை முதலிடையோ

டங்கடையி னென்றா ரறிந்து. 1

'நகுலைப் பரமசிவ நாயகனே யாதி'

தகுமிப் பதினைந்திற் றானே - மிகுபெரிய

வைந்தாறு பன்னிரண்டு மப்பாற் பதினைந்தும்

வந்தாற லென்றோ வழுத்து. 2

செம்மான்கைக் கொண்டவ னம்பட்டன் வண்ணான் செலுத்துமன்னன்

றம்மான் குயவன்பி னான்கச் சிடையன் றபக்கைரையா

னம்மாண் டுடிநற் பறையனொர் வேட னணிநகுலைப்

பெம்மா னெனத்துதி யாய்நம்மைப் பார்ப்பாள் பெரிது வந்தே. 3

____________

1. நங்கையின் முதல - ந, தகுதியின் இடை - இ, நரலையின் கடை - லை எனவே அவரது நகரம் நகுலி எனக் கூறியவாறாயிற்று.

2. முதலடியிலுள்ள பதினைந்து எழுத்துக்களில் ஐந்தாம் ஆறாம் பன்னிரண்டாம் எழுத்துக்கள் சேர்ந்து பரகதி என்றாகும்.

3. மானைத் தரித்தவர், அழகிய பட்டுவத்திரத்தை உடையவர், அழகிய இடபத்தைச் செலுத்தும் வீரர், தமது சத்தியின் தனங்களிடத்தே அன்புடையவர், கச்சணிந்த இடையை யுடையவர், தபமாகிய துறையிலுள்ளவர், துடியாகிய நல்ல பறையையுடையவர், வேடங்களைக் கொள்ளுபவர், அழகிய நகுலேச்சரத்துப் பெருமான்.

சரக்குககளின் பெயர்கள் தொனிக்கப் பாடியது

ஆய்ந்தவம் மல்லிகொண் மஞ்சற் கடுகுழ லாணகுலை

வாய்ந்தவள் பங்கவிங் குள்ளநின் றேத்திடு வாமிளகா

யேய்ந்தவெங் காயங்கள் சுக்காகி வெந்தயர்த் தேபிறகுஞ்

சார்ந்தபெ ருங்காய மாற்றநற் சீரந் தந்துதவே. 4

பக்கணப்பெயர்கள் தொனிக்கப் பாடியது

அணியா வடைமலர்த் தேன்குழற் றோய்பபன் னகவணியான்

றணியா திடர்மோ தகம்பரிப் பானையெஞ் சற்கரையா

மணியார் நகுலை நகர்க்கண் டதிகனி வாயவன்பாற்

பணியாரந் தோசயி லம்போன மனத்தர் பரவிநின்றே. 5

இராசிப்பெயர்கள் தோன்றப் பாடியது

மேடமுகைப் பவன்றாதை யிடப மேறி

மிதுனவடி கடகமுழந் தாள்கொள் சிங்காத்

தேடுமெழிற் கன்னிதுலா நிகர்த்த நீதி

சிறந்தயன்றன் செய்யவிருச் சிக்ங் கொய்தா

னாடுநலத தன்னைதனு நிகாகொ ணெற்றி

நவின்மகரக் குழைகும்ப முலைசேன் மீனங்

கூடுவிழி யுடையவடன் கொழுநன் யாரேற்

குலவுமொழி னகுலைநகர்க் கோயி லானே. 6

எழுத்துக்களை எண்களாக மறைத்துப் பாடியது

ஆறுடனே சிகரமுதற் றளிக ளன்றி

யணிநகுலை நகரிடத்து மமரு மீசா

வீறுறுமெண் பானைந்து வடிவ மாகி

மிளிருமிரு பானைந்து வடிவ மாகிக்

கூறுமவை யிரண்டொடுகால் வடிவ மாகிக்

குலவுமர பன்னைந்து வடிவ மாகி

நாறுமுடற் சுமைநீக்கி நயந்த பேறு

நமக்கருள்வதென்றுகொன்மெய்ஞ் ஞானதேவே.

என்நெஞ்சப் பித்தளையா மலையில் வாழு

மெழினகுல மெனுங்கல்லு மலையின் பாங்கர்

மின்னஞ்சும் வெள்ளிமலை யொன்று மேவ

மேலொருசெம் பவளமலை விளங்க வாங்கே

மன்னுஞ்சீர்ப் பச்சைமலை யொன்று சார்ந்து

வாமமுறு வதுகண்டு பிண்பு ணர்ந்தே

னின்னுஞ்சொற் புலவர்மொழி பிழையி லாரா

யினத்துடனே யினஞ்சேரு மென்ற றானே. 8

தாயொடுநற் தந்தையிலாத் தன்மை யாலுந்

தாருவனத தெய்தியமு தேற்ற தாலுங்

காயமிசை யானைத்தோல் போர்த்த தாலுங்

கடியபுலித் தோலரையிற் கட்ட லாலும

வாயில்வந்த படியிகழ்ந் தடித்து தைத்தார்

வரனகுலை யரனாரை யவர்ச சிக்கார்

நேயவுமைக் கொருபாதி மற்றோர் பாதி

நெடுமாலுக் கீந்துடல நீத்தார் தாமே. 9

நகுலமுனி வாசமெதென் றிரந்து கேட்ட

நாயகிக்கு நாயகனு நாக மென்றான்

பகையொடது கடியாதா வென்றான் பெண்ணே

பகரரிய சிலம்பென்றான் காலைப் பார்த்தாள்

நகையொடது வரையென்றான் கையைப் பார்த்தான்

நகமென்றான்; விரற்பார்த்தாள் குத்ர மென்றான்

தகுதியதோ கபடமென்றான் கோத்ர மென்றான்

றானெதிர்ந்த ழைப்பனென்றாண்மலையென்றானே.10

நடுவெழுத்தலங்காரம்

நெஞ்சுநடிப் போடுமைநா ளிகமென் றிந்த

நீணான்கு மொழியிடையுந் தானே யாகி

யெஞ்சியவை தாமுறையிற் சென்னி சேர்த்து

மெழுந்தருளி யுபதேச நிழற்கீழ்ச் செய்துந்

துஞ்சிடவன் றுரியீர்த்தும் விண்டு செய்த

துதிக்கிரங்கி யீந்துந்நின் றவனா ரென்னி

னஞ்சுதொழி லாநந்த தாண்ட வஞ்செய்

தருள்கடவுள் சீர்நகுலை யமர்வா னன்றே. 11

மாலை மாற்று

வேக மாகமு னோடிவா

வான வாகன மேறுவா

நாறு மேனக வானவா

வாடி னோமுக மாகவே

எழுத்து வருத்தநம்

வேத னிழந்தபொருள் விண்டுமுன்னா ளுண்டபொரு

ளேதினகு லேசனையிங் கீந்தபொரு - ளோதி

னலைநதியொன் றீறற் றடைந்தெழுந்தொவ் வொன்றாந்

தலையுலகு மூங்கிலெனச் சாற்று. 13

வினாவுத்தரம்

நக்கர்நகு லேசரெனு நங்கடவுள் பேரொருப

சர்க்கமெவை நீர்சுரபி தம்பெயரென் - புத்தககடை

யற்றம்கும்பி யாதிங் கறிவுறுதொல் காப்பியத்தோர்

சிற்றுரிச்சொற் சூத்திரமென் செப்பு. 14

காதை கரப்பு

அவிர்புன் னகைவா யருள்விழிபொற் றாள்க

டவிர்வரிதா நீற்றணிசேர் தன்மைக் - கவிரிதணல்

வாய்ந்த வறலளகி வாழிநகு லாம்பிகையாள்

வேந்து மருந்து வினைக்கு. 15

ஒற்றுப்பெயர்த்தல்

நிலமெற் சிறந்தது வானத்து முள்ளது நீருடைசூழ்

தலமேற் றொடக்கத்து முள்ளதெம் மீசன் றருதகைத்தா

னிலமேற் பெரியவர் யாகத்து மேய்வது நீணகுலைத்

தலமேற் பொழிந்திடு மாரிய மாமெனச் சாற்றுதியே. 16

_____________________

14. உத்தரம் -'ஐவியப்பாகும்', கடவுள்-ஐ, ஒரு உபசர்க்கம்-வி, நீர்-அப்பு, சுரவி(பசு) - ஆ, கடையற்றகும்பி - கும். தொல் காப்பியத்து ஓர் உரிச்சொற் சூத்திரம் -'ஐவியப்பாகம்'.

15. காதை காப்பு : யாதேனும் ஒரு செய்யுட்கு உரிய எழுத்துக்கள் எல்லாம் தேடி எடுக்கத் தக்கனவாய ஆங்காங்கு வைத்து அச்செய்யுளை மறைத்துப பாடுவது. இச் செய்யுளிலே "அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்தலரிது" என்னுந் திருக்குறட் கவியின் எழுத்துக்களெல்லாம ஆங்காங்கு அமைத்திருத்தல் காண்க.

16. ஒற்றுப்பெயர்த்தல் -ஒரு மொழியுந் தொடர்மொழியுமாய் நின்று கருதிய பொருளன்றி வேறு பொருளம் பயக்கத்தக்கதாகப் பாடுவது. பொழிந்திடுமாரியம் என்பது பொழிந்திடுஞ் சம்ஸ்கிருதம் எனவும் பொழிந்திடும் முகில்நீர் எனவும் பொருள் பயந்தது.

மாத்திரை வருத்தனம்

மாத்திரையொன் றுறுமலையே வண்ணகுலை மேவுமரன்

மாத்திரையொன் றுறுமனத்தின் மன்னியசீர்ப் பூடணமா

மாத்திரையொன் றுறுகறுப்பே மங்கலமாய்ச் சூடுகின்ற

மாத்திரையொன் றுறுநகமா மதிக்கலைநூல் வல்லுநரே. 17

கோமூத்திரி

பசுவின் மூத்திர வடிவாகச் சமைக்கப்பட்ட வரையிலே எழுத்துக்கள் அமைத்துப் பாடுவது.

கலி விருத்தம்

நகுலை யாதி யடிமல ரோதலே

மிகுதி யாநு மவாகழி சாயுமே

தொகுதி யாகிய மாமய ரோடவே

தகுதி யான மகாகதி சாருமே.

காகபாத பந்தம்

காகத்தின் பாதம் போல அமைக்கப்பட்ட சித்திர தளத்திலே எழுத்துக்கள் நின்று முறையே உத்தரமாகப் பாடுவது.

பாருல குய்ந்து கடைத்தேறு மாறிடப் பாகமதி

னாரியை வைத்து நகுலேச ரென்னநன் னாமமுற்றார்

சீரிய கண்ணுடைச் செய்யாட்கெ னாமமத் தென்றிக்குவாச்

சார்விளி யென்னை நிறங்குறு மேனியுந் தாமெவையே.

உத்தரம

1. பெண்ணை இடப்பாகத்தே இருத்திச் சிவன்பெற்ற பெயர் வாமதேவன்

2. சீரிய கண்ணுடைய (ச்செய்)யாள் வாமலோசனை

3. தென் திசையானையின் விளி வாமன

4. நிறம் உரு

5. குறுமேனி வாமன உரு

_________________________

17. மாத்திரை வருத்தனம - ஒரு சொல்லின் ஓர் எழுத்துக்கு மாத்திரை கூட்டுதலால வேறு சொல்லாகி வேறு பொருள் பயக்கும்படி பாடுவது.

மலை -நகம் - நாகம் - பாம்பே

மனம் - அகம் - ஆகம் - மார்பில்

கறுப்பு - தமம் - தாமம் - கொன்றையே

நகம் - மலை - மாலை - மாலையாம்.

நான்காரச் சக்கர பந்தம்

வண்டியின் சில்லுப்போல அமைக்கப்பட்ட சித்திரத்திலே சிற்சில உறுப்பின்கண்ணே பொதுவாக நிற்கும்படி அமைத்துப் பாடுவது.

வஞ்சி விருத்தம்

காயு மாலழி மேதகா

காத மேமலை நீளகா

காள நீடுமை நாயகா

காய நாமன மாயுகா.

முப்பத்திரண்டு எழுத்துக்களையுடைய இச் செயுளை நான்காரச் சக்கரத்திலே அமைக்கும்போது ஒவ்வோர் அடியினதும் முதல் ஈற்று எழுத்துக்கள் குறட்டிலுள்ள ஓரே எழுத்தாலும் அரத்திலுள்ள எழுத்துக்கள் இவ்விரு முறை வாசிக்கப்படுதலும் பெற்று எழுத்துக்கள் பதினேழாகச் சுருங்குதல் காண்க.

இரட்டைநாக பந்தம்

ஆறு தாங்கு சடாத ராகமா

வீறு வீங்குறு வேத வாசக

தேறு நேசருட் டேங்கு வானவா

கூறு நீதக வானகு லேசனே.

இரண்டு பாம்புகள் தம்முட் பின்னிப் புணர்ந்து விளையாடுவன போலத் தோன்றுமாற முறைப்படி சித்தரிக்கப்பட்ட அறைகளிலே எழுத்துக்களைத் தொகையிற் சுருக்கிப் பொதுவாக நிற்கும்படி அமைத்துப் பாடுவது, இரட்டைநாகபந்தமாகம். தொண்ணூற்றாறு அறைகளுள் அறுபத்தெட்டெழுத்துக்கள் இருக்கின்றன.

வேலாயுதபந்தம்

மாக லாநய னாகிய

வான மாகக னாகவா

வாக னாகக மானவா

வாகி னாயந லாகமா.

வேலாயுதம்போல அமைக்கப்பெற்ற சித்திரத்திலே காம்பின் அடிதொடங்கி வாசித்துப் போய்ப் போயவழியே மீண்டும் வாசித்துத் தொடங்கிய இடத்திற்குவரச் செய்யுளும் முடியத்தக்கதாய் எழுத்துக்கள் அமையப் பாடுவது வேலாயுதபந்தம். மாலைமாற்றுமாம். வேலாயுத சித்திரத்திலே அமைக்கும்போது முப்பத்திரண்டு எழுத்துக்கள் பதின்மூன்றாகத தொகையிற் சுருங்குதற் காண்க.

அட்டதள பதும பந்தம்

எட்டிதழ்த் தாமரை வடிவமாக வரையப்பட்ட சித்திரத்தின் பொகுட்டாகிய நடுவில் நின்ற எழுத்தே எட்டு விடைக்கும் முதலெழுத்தாக வரப் பாடுவது.

குந்தந் திறல்கலை யானத்தி கச்சுக் குவலயமோ

டிந்தனங் கோழி விதிர்ப்பெனும் பேர்கட் கியல்யெரே

னந்தண் ணகுலேச் சுரர்புலி யூரெ னவரிலமெ

னெந்தை சொரூபமென் சொல்வாய் பதுமத் தியையவைத்தே.

1. குந்தம் - வியாதி

2. திறல் - விறல்

3. குலையானத்தி - விமலை

4. கச்சு - விசிகை

5. குவலயம் - விபுலை

6. இந்தனம் - விறகு

7. கோழி - விட்டி

8. விதிர்ப்பு - விதலை

இவற்றின் இறுதி எழுத்துக்களைக் கூட்டி வாசிக்கப் பின்னைய மூன்று வினாவுக்கும் விடையாகும்.

1. சிவனது புலியூர் - தில்லை

2. சிவனது இல்லம் - கைலை

3. சிவனது சொரூபம் - குடிலை

பதுமபந்தம்

தேகசுக மாகவக யூகமிக வாகடைக

தேகமிதி லிட்டசித்தி தீர்க்காயுள் - போகம்

வரவிலங்கைப் பல்பதிவு வண்டலைவற் கீதை

யருளோ டுபசரிப்போற் காம்.

எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு என்னும் இதழ்களை உடைய மூன்றடுக்குத் தாமரைமலர்போல இயற்றப்பட்ட சித்திரத்திலே பொகுட்டில் உள்ள எழுத்து எண்முறையும் மூன்றடுக்கிலுள்ள முதல் எழுத்தக்கள் இவ்விரண்டு முறையும் வாசிக்கப்பட்டுப் பொது வமையப் பாடப்படுவது பதுமபந்தமாகும்.

இரதபந்தம்

கூறுதனிற் பார்ப்பதியாய்க் கோணை விடையூர்வா

னேறுவிய னார்நகுலைக் கேந்தன்முத்திப் - பேறுதருந்

தாதா பரம்பருவித் தையல்சிர மேவைத்தான்

பாதார விந்தனை பற்று.

தேர்போலச் சமைக்கப்பெற்ற சித்திரத்திலே முதன் மூன்றடி எழுத்துக்களையும் நான்காமடி முதல் எழுத்தையும் அமைக்க நான்காமடி எழுத்துக்கள் நடுநிரையிலே ஒழுங்கு அமைந்திருக்கத் தக்கதாகப் பாடுபடுவது தேர்க்கவியாகும்.

இப்பாவில் எழுபத்துமூன்று எழுத்துக்கள் அறுபத்துமூன்றாகச் சுருங்குதல் காண்க.

முரசபந்தம்

ஆழி யோதை யுறைநகு லாநகர்

பாழி யோதை யுறைநகு லாநகர்

வாழி யோதை யுறைநகு லாநகர்

தாழி யோதை யுறைநகு லாநகர்

நான்கடி உடையதாய் மேல் இரண்டு அடிகளுந் தம்முட் கோமூத்திரியாகவுங் கீழ் இரண்டு அடிகளுந தம்முட் கோமூத்திரியாகவுஞ் சிறு வா‘ போக்கி, முதலடி மற்றைய மூன்று அடிகளிலுங் கீழுற்று மீண்டு மேலேபோய்க் கீழே இறங்கி முடியவும்,இவ்வாறே இறுதி அடியும் மேலேபோய்க் கீழே இறங்கி மேலேபோய் முடியுவுந் தக்கதாகப் பெரு வார் போக்கி எழுத்துக்கள் அமைத்துப் பாடுபடுவது முரசபந்தமாகும்.

அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர்

1866 - 1918

இவர் கண்டிக்கு அணித்தாயுள்ள போப்பிட்டியைச் சார்ந்த தெல்தோட்டை என்னும் ஊரிற் பிறந்தார். இவரது புலமையைக் கண்ட மக்கள் 'வித்துவதீபம்' என்னும் பட்டத்தை இவருக்குச் சூட்டினர். இவர் இந்தியாவுக்குச் சென்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு தொர்புபூண்டு பல செய்யுணூல்களை இயற்றி வெளிப்படுத்தினர்.

இவரியற்றிய நூல்களுட் சிந்ததாகக் கருதப்படுவது 'சந்தத் திருப்புகழ்' என்பதாகும். இது நபிபெருமானின் பெருமைகளை நூறு வண்ணங்களிற் கூறுவது.

சந்தத் திருப்புகழ்

காப்பு

கலி விருத்தம்

புகழெலாம் பொருந்திய புனித வாரணத்

திகழ்கருப் பொருணமர் சேம மாமணி

சகதசற் குருமுகம் மதுசந் தத்திருப்

புகழ்தனக் கொருமுதற் பொருளின் காவலே.

அவையடக்கம்

ஆசிரியவிருத்தம்

வாருதி தனக்கு நேரோர்

வட்டிலி னீர்போ லும்பொன்

மேருவுக் கிணைய தாய்மண்

மேடவண் வளர்ந்த போலும்

பாருல கிடத்திற் செஞ்சொற்

பனுவலோர் முன்ன முன்னூற்

றேருத லில்லான் சொன்னூற்

றிருந்துவா தெளிவுள் ளோரே.

சந்தம்

தந்தந்தந் தந்தந் தந்தன

தந்தந்தந் தந்தந் தந்தன

தந்தந்தந் தந்தந் தந்தன தனதானா

மஞ்சஞ்சுங் கொங்கங் கொந்தள

முங்கும்பம் பந்தும் பம்பர

மஞ்சந்தண் கஞ்சஞ் செஞ்சிமிழ் முலையாலு

மந்தன்கண் டஞ்சுஞ் சஞ்சர

வம்புங்கஞ் சம்பிஞ் சஞ்சன

வண்டுங்கண் டஞ்சுங் குஞ்சர விழிமாதர்

தஞ்சங்கொண் டென்றுந் தந்திர

முந்தங்கும் பங்கம் புன்பவ

சங்கங்கங் கின்றுந் துன்றிய செயலாளர்

தங்கம்பொன் பொங்குங் கண்டகர்

முன்சென்றின் பங்ககொண் டுந்திய

சந்தங்கொஞ் சும்பண் பின்குயி லிசைபோல

நெஞ்சம்பண் பொன்றும் பண்கவி

விண்டுங்கண் டொன்றுந் தந்திலர்

நெஞ்சந்துண் பென்றிங் கொண்டிவ ணுழல்வேனோ

நெஞ்சின்கொங் குந்துங் குங்கும

சந்தந்தங் கும்பொன் றண்டொடை

நின்றெங்கும் பந்தந் தந்தொளி ரழகேசா

அஞ்சஞ்சொன் றங்கங் கொண்டுய

ருந்தொண்டென் றஞ்சும் பண்பின

ரந்தந்தங் கும்பொன் பொங்கிய மறையோர்கள்

அன்புங்கொண் டென்றுந் தங்கும

னந்தன்பங் கின்றொன் றுந்தவ

மங்கொண்டென் றென்றுந் தங்கிய விறசூலே

சந்தம்

தனன தான தானான

தனன தான தானான

தனன தான தானான தனதானா

தரள மாலை தானாட

வதன சோதி மேலாட

சலய மேய தாளாட விளையாடத்

தளவ மாலை யூடாட

வணிக ளாட வாளோடு

சருவு பார்வை வேலாட முலையாட

வுரக நேமி வானாட

விரத வாள ரோடாடி

யுலவு மாமை மேலாடு மரமாதர்

உடனு லாவி மாலாட

நெடிய பாவ மேயோட

வுபய பாத சீர்பாடு மெனையாள்வீர்

விரத வாசி யாவாட

மறிய மாட மீனாட

விசய வானர் தாமாட வறுசாட

மிளிரு கூறு லீனாட

விபுதர் லோக நீராடி

வெகுவி னோத மேநீட வருவோரே

முரச றாத மேன்மாட

துவச மான வானோட

முரல்வ போல வேயாட விளையோர்கள்

முதிய போதர் பாலோடி

யரிய ஞான மேதேட

முயன்ம தீன நாடாளு மிறசூலே

தத்ததன தத்தத் தனத்தந் தனத்ததன

தத்ததன தத்தத் தனத்தந் தனத்ததன

தத்ததன தத்தத் தனத்தந் தனத்ததன தனதானா

முத்துவட சித்ரத் தனத்தங் கனப்பொனடை

தத்தைமொழி மச்சக் கருக்கண் சுருக்கிமிடை

முத்தமணி வெட்கத் துலக்குந் தகைப்பலொளி யினிதான

முக்கியசு கப்பொற் பதிக்கண் குதிக்குமின

லுக்கிணையெ னப்பட் பிறக்குஞ் சிறக்குமிசை

முற்றியத ரத்துப் பரத்தின் றிருத்தமுய ரரமாதர்

சித்தசனெ னக்கைப் பிடிக்கும் படிக்கினிய

புத்திநிதி கற்பித் திகத்தம் பகக்கருணை

சித்தமுற வைத்துப் பதத்தின் சதத்தடைய வருள்வீரே

சிப்பிதரு முத்திற் றெளிந்துப் தடித்திலகு

கக்கனொளி யுற்றற் புதத்தந் துறப்பெருகு

சித்திவழி சொக்கத் தவத்தந் தவததொலைய மதிதாரும்

பத்திநெறி யைத்தப் பிடத்துன் புலத்தரிய

லர்க்கணம டர்த்துப் பினக்கண் கலக்கலகை

பட்சிகள்ப சிக்குப் புசிக்கும் படிக்குதவு வடிவேலாய்

பட்சமொ டகத்திற் றுதிக்குங் கதிக்கினிய

வர்க்கருள்சு ரக்கப் புரக்குந் திருக்குடைய

பத்தசன ரைச்சொர்க் ககத்தின் புகப்பதவி தருவோரே

பித்திகைத னிற்சித் திரத்தின் பரப்புமொளி

பற்பலவி தத்துப் படத்தின் சுடர்ப்பரவி

பித்தலநி திக்குட் புதுக்குஞ் சுதைப்பொனக ரதுமானும்

பிற்படுத லற்றுட் சிபத்தின் றவப்புனல

துற்றகுர வர்க்கட் டெளித்துங் குடித்திளைஞர்

பித்தமறு மக்கப் பதிக்குங் கதிக்குமொழி விறசூலே.

அசனாலெப்பைப் புலவர்

1870 - 1918

இவரது ஊர் யாழ்ப்பாணம். சுல்தான் முகியிதீன் என்பரின் புதல்வர். ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளிலும் வல்லுநர். இவரியற்றிய செய்யுணூல்கள் பின் வருமாறு : 'நவரத்தினத் திருப்புகழ்', 'முகியி•துன் ஆண்டகையவர்கள் பேரில் ஆசிரிய விருத்தம்', 'பதாயிகுப் பதிற்றுத் திருக்கந்தாதி', 'சாகுல்கமீது ஆண்டகையவர்கள் பேரில் முனாஜாத்து என்பவை கொண்ட புகழ்ப் பாவணி', திருநாகை நிரோட்ட யமகவந்தாதி' முதலியன.

நவரத்தினத் திருப்புகழ்

காப்பு

முத்துருவா மஞ்ஞை முழுவடிவாப் பண்டிருந்து

முத்திதர வந்த மகம்மதாங் - கத்தர்

திருப்புகழைப் பாடத் திகழ்சீவ செந்தின்

கருப்பொருளா நின்றவனே காப்பு.

ஒருவாத வாத பித்த

வஞரீளை மேக வெட்டை

யுழன்மேனி காய்வு விக்கல் சொறிசோகை

உயாபார்வை கேள்வி மற்றை

யிருக்கால்கை சேரி யக்க

முரையாதி தீர வுற்ற பலநோய்கள்

வருதீய மார்ப டைப்பு

நலிவார் சுவாத குத்து

வலிமூல வாயு குக்கல் புனல்கோவை

மருண்மேவு ரோக குட்டம்

வெகுவார் வசூரி யச்ச

மலிபேதி யாதி யெற்கு முடுகாதே

தருமேத பேய்க ளுட்கு

திருவேத போத பத்தி

தவமூவ லான்ன னத்தும் வருநோய்கள்

தணியாத தீயி றப்பு

பகைஞர்கை யான்ம டிப்பு

ததைநீரின் மாய்வு மற்று நிகழாதே

குருவேயெ னாவி சைத்து

மிருபாத போது பற்று

கொடியேனை யாத ரித்து மருடாரீர்

கொடிமாட மீதி ரத்ன

மணிதூய வாணி முத்து

குலனோடு காலு மக்க இறசூலே.

தெளிக்குஞ் சீரறி வாளர்சொன் மாறுகை

பழிக்குங் கேடுக ளீயுமெ னாநனி

திடச்சிந் தாமன நீதியி னாயினு மொளிவாலே

திகைத்தஞ் சீர்மைகொ ளோரற னாயினு

சிறைச்செந் தாமென யானடு தீதிடை

திளைக்கும் பான்மையெ னீர்மைகொ லோவறி கலன்யானே

களிக்குஞ் சீர்மைகொ ளோரற னாயினு

மிழைத்துந் தோமற வேயென நாடுதல்

கலக்கும் போதினி மேவுது மேலையி னெனவீணாள்

கழிக்குஞ் காரிய வேதெவ னீனனென்

மனத்துண் டாகிய மூடம தோவெழில்

கதிக்கும் பாரக மாயைகொ லோவியை மருவாதே

யளிக்குந் தூயநு மாணையி னானயன்

மிகுக்குங் காவல்செய் தாதிபி ரானெமை

யமைக்குங் காரண மீதென வோர்தரு முணர்வோட

யறத்தின் பாலச னாலெபை யாமென

வழைக்கும் பேரிய வேழைப ராவுற

வகுட்டந் தீகைகொ ணேர்கதி போதர வருள்வீரே

துளிக்குஞ் சீதத யாநிதி யேயறி

விறைக்குஞ் சூன்முகி லேதெளி வேமதி

துலக்குந் தூயக மேகரு ணாகர பெருமானே

துணர்ப்பைங் காமிசை மேகவு லாவுபு

வளர்க்கம் பேர்மதி னாபுரம் வாழ்தரு

துவச்செங் கோல்கொளு மேதகு நாநிலை யிறசூலே.

வேத நேர்வழி யென்று மறந்தன

னீதி யாளரை வம்பி னிகழ்ந்தனன்

வீணி லெபொய் விளம்பி யுலைந்தனன் முதியோர்சொன்

மீறு மூடர்க ணண்பை யுவந்தனன்

மாத ராசை விழைந்துள நைந்தனன்

மேவு பாதகர் வன்புரை கொண்டன னுயர்வான

நீதி நேர்நெறி யொன்றுமு ணர்ந்தில

னாதி நாயக னின்சொ னயந்தில

னேய சீலகு ணங்கள் பொருந்தில னியன்மேன்மை

நீடு மேதையின் விஞ்சை தெரித்தில

னோது மாறுட னைந்து மறிந்தில

னேடு சீரற னொன்று பயின்றில னினியேனு

மேத நீரகி தம்பல பொன்றவு

மோகை கூருமி தம்பல துன்றவு

மேக நாதினி னன்பு பொருந்தவு மருடாரீ

ரீசை யார்தவ வண்டுறை நின்றனு

போக மேநுகர் பண்பு நலம்பொறை

யேயு மேலவ தஞ்ச மடைந்தவர் கருணேசா

சீத நீர்மைய பைந்தரு மிஞ்சிய

சோலை நீழல் கரும்புய லென்றொளிர்

சேம தூவி விரிந்து வயங்கநன் மயிலாவல்

சேரு மாமயல் கெம்பி நடஞ்செய

வேம மார்குயி லின்ப ணயர்நதம

தீன மாநகர் சென்றுறை கின்றவே யிறசூலே.

முகியிதீனாண்டகை அவர்கள் பேரில்

ஆசிரிய விருத்தம்

மாதவந்தி னாலோங்கு மன்பகுதா தெங்கோன்மே

லேதமற வண்புகழ்ப்பா யான்பாடப் - போத

நெறியினுக்குச் சந்தோற்றா நிர்மலனே மாசி

லறிவினையே யெற்கிங் கருள்.

அந்தரந் தருவிகற் பம்பலவு மேய்ந்தவிவ்

வரியகண் ணகன் மேதினி

யடரெழிலி தண்ணெனப் பொழிமழையி னாக்கமுற்

றதிவளங் கெழும லேபோன்

முந்துபற் பலவிட ரிடைப்பட் டுழன்மாந்தர்

மூவாத விருமை வாழ்வு

முறைமையொடு பெற்றுச் சிறந்திடுத னுங்கண்

முகந்ததண் ணளியி னன்றோ

வந்துதமி யேன்படர்ந்த தடர்பாவ நோய்தாங்க

மாட்டாம னும்ப தத்தில்

வரிசைபெற வண்டினேன் பிழைபொறுத் தெற்கருள்

வழங்கியே காத்தி ரெந்தாய்

புந்தமிகு மாக்கண்மறை யோதுமொழி மாறாத

புகழ்கொள் பகு தாதிறைவரே

புவிமாயை மருவாது தவமீது விள€யாடு

போதரா முகியி தீனே.

கன்றிய வுளத்தனாய்ச செவ்வனெறி யறியாது

கவலையொடு தட்டழி வனோ

கனநிலவு சன்மார்க்க வேதபோ தனைகளைக்

கல்லாம லிழிபடு வனோ

துன்றுமும் மலமென்ற பகைஞர்விடு பகழியாற்

சுழல்வந்து மனமடி வனோ

சுடுகனற் படுகிருமி போலவெம பவமீது

துனிகொண்டு மாய்ந்திடு வனோ

வென்றுநா னுய்குவே னென்றுநற் கதிபெறுவ

லென்றெண்ணி யுழல்கிற் பனோ

வென்செய்கே னென்செய்கே னிப்பா தகப்பாவி

யிடைவுதரு மித்துயர்க ளாற்

பொன்றுமுன் காத்தருள்விர் கன்னலங் கழனிகள்

புனைநதபகு தாதிறை வரே

புவிமாயை மருவாது தவமீது விள€யாடு

போதரா முகியி தீனே.

பதாபிகுப் பதிற்றுப் திருக்கந்தாதி

இன்றேன் றுளிக்கு மலர்தொறுந் தாவி யியைகளிப்பின்

மன்றேன்றுளிக்குடைந் துண்டிசையர்ப்பச்செய்வாளைவெரீஇச்

சென்றேன் றுளிக்குல விப்பாய் பதாயிக சேவடிமேய்

நின்றேன் றுனிக்குயின் கண்ணாற் கணித்திநின் னெஞ்சுவந்தே.

இன்ன மனந்தம ரிட்டமுன் யானிரி யாதிறைபான்

மன்ன மனந்தம ரிட்டருண் மாழ்க வருத்துமுன்னர்

வன்ன மனத்தம ரிட்டவன் பூம்பத மீதிர்முத்தைக்

கொன்ன மனந்தம ரிட்டமென் றேகொள் பதாயிகரே.

அரத்தம் படரணப் பைஞ்சுகங் காள்பல வானுழக்க

குரத்தம் படரணிச் சங்கமுத் தீனும் பதாயிகுக்கட்

டிரத்தம் படரகன் றெய்தியக் கோற்றெரி சித்தலங்கற்

கரத்தம் படரற வேவாங்கி வம்மிக் கவிஞனுக்கே.

கவியலர்க் கந்தரக் கின்றென்றற் குக்கடற் குக்குயிற்கு

நவியலர்க் கந்தர விந்திற் கயரந் நலார்த்தளுவிக்

குவியலர்க் கந்தர னாளாமுன் காத்திர்கொள் வீதிமுத்தேய்ந்

தவியலர்க் கந்தரக் காலும்ப தாயிகிற் சார்ந்தவரே.

சாரம் படுமன் றலங்கனி வாய்நின்று தாழ்குழலார்

வாரம் படுமன் றலம்பந்தர்த் தோய்க்கும் பதாயிகுறைந்

தாரம் படுமன் றலமபுரந் தீர்தஞ்ச மென்றுமந்தக்

காரம் படுமன் றலந்தரு போதுமெற் காத்திர்மன்னே.

சாகுல்கமீது ஆண்டகையர்கள் பேரில்

முனா ஜாத்து

யாக்கை வருத்தும் வன்பிணியு

மிதயம் வருத்தும் பவநோயும்

மூக்க மொடுவந் தணுகாம

லுள்ளக் களிப்பி னெமைக்காப்பீ

ராக்க மொடுவண் குதுபென்னு

மரிய பட்டஞ் சூடியிக

றாங்கி விளங்குந் தகைசான்ற

சாகுல் கமீது நாயகமே.

வண்டா மரைப்பூம் பதத்துணையே

மாண்பு தருவ வென்றின்னே

யண்டா நிற்குங் கொடியேம்பா

லாய பிழைகள் பொறுத்தருள்வீர்

சண்டா ளரைநல் லோராக்குந்

தகைமைத் துங்க ணூற்றெடுத்த

தண்டா வளத்துத் தண்ணளியே

சாகுல் கமீது நாயகமே.

நஞ்சம் புறழு முண்கண்ணு

நகைகான் றொளிரு முறுவல்களுங்

கொஞ்சும் பசிய கிளிமொழியுங்

குவியா தலர்ந்த முகமுதல

விஞ்சுஞ் சிறப்பிற் சொன்மடவார்

வீசு மயலி னுழலாது

தஞ்சம் புகுந்த வெமையாள்வீர்

சாகுல் கமீது நாயகமே.

குணக்கி லெழுஞ்செங் கேழ்ப்பருதி

குடக்கிற் செல்லி னிடைநேரக்

கணக்கு மீளா தென்பதனைக்

கவனி யாது வீண்போக்கி

வணக்க மியற்றா தினைந்தேமெம்

மனத்தி னுணர்ச்சி நல்கிடுவீர்

தணப்பி லாத மேதகையீர்

சாகுல் கமீது நாயகமே.

புயங்கந் தனது வாய்ப்படப்பப்

புக்கித் தியங்குந் தேரையென

மயங்கிக் கிடக்கு மித்தொண்டர்

வாடு முகத்தைப் பார்த்திடுக

வயங்குந் தவமா மடுநடுவண்

வளர்ந்து பூத்த வருண்மலரே

தயங்குற் றோர்க்குத் தேற்றமருள்

சாகுல் கமீது நாயகமே.

அப்துல் றகுமான்

1846 - 1920

இவரது ஊர் நாவலப்பிட்டி. மாணிக்கரத்தின முதலியாரின் மருகரான குப்பத்தம்பி என்பரின் புதல்வர். தமிழ், அரபு ஆகிய இரு மொழிகளிலும் வல்லுநராய் அரசாங்க உத்தியோகத்திலிருந்தவர். இவரியற்றிய செய்யுள் நூல்கள்: 'சரந்தீவு மாலை', 'ஞான அகீதாக் கும்மி', 'நாச்சியார் மாலை' முதலியன.

துதிக்கும் மனது சுணங்காமல்

தொண்டன் அடியேன் கறையகற்றி

உதிக்கும் உதிப்பு நீயாகி

உள்ளும் புறமும் நீயாகித

ததிசேர் இறசூல் நபிபொருட்டால்

தருவாய் நாவில் கலிமாவை

கெதிகொண் டுணர்ந்துன் புரம்சேரக்

கிருபை செய்வாய் ரகுமானே. 1

அடங்குங் கபுரில் அக்கணமே

அமரர் இருவர் வந்தெதிரே

தொடங்குங் கேள்வி குத்தரவு

சொல்ல எனக்கு அதவிதந்து

உடலை உனத மானிதஞ்செய்(து)

ஏதுங் கட்டம் அணுகாமல்

இடைஞ்சற் கபுரை விரிவாக்கி

இறங்கி யருள்செய் ரகுமானே. 2

எழும்பும் மகுசா நாளினன்று

என்னை ஒலிமா ரோடெழுப்பி

மலைப்போல் எழுந்து வருங்கதிரோன்

வருத்தம் எனக்கொன் றணுகாமற்

செழிப்போ டுந்தன் அருகிருந்து

சிறந்த லிவாவு கம்துநிழல்

அலைபோற் குளிரச் செய்வாயே

மன்னர் மன்னா ரகுமானே. 3

நாடும் நாட்டம் நான்பெறவே

நலமாய் வந்தென் குறைதீர்க்க

நலமாய் நபிதான் வருவார்கள்

நாளை 'கியாமத்' நாளையிலே

பாடும் எளியேன் பயமகற்றி

பண்பாய் வார்த்தை மொழிந்திடவும்

நல்ல நபிகா தர்பொருட்டால்

நாடி அருள்செய் ரகுமானே. 4

ஞான ஆகீதாக் கும்மி

மானமகி தாத்திரியில் வாழுமுயிர்க் கின்பமுறு

ஞானவகீ தாக்கும்மி நானியம்ப - மோனமதிக்

கோனவனே நீதிமொழி கூறுமறை தேடரிய

வானவனே நீதுணையா வாய். 5

ஊருணி மாமலைக் கோட்டையுண்டாம் - நல்ல

ஊரில் தலைமகன் நால்வருண்டாம்;

சீரான மத்தீசர் நால்வரெனறார் - இந்தச்

சீமை யதிசயங் கேளுங்கடி ! 6

ஓரேழு பேர்கள் இறைமக்களாம் - நல்ல

உத்தமி யான முறைமக்களாம்

ஓரைந்த பேர்களோ மேன்மக்களாம் - சகி

ஓதிய பேர்கள் துரைமக்களாம். 7

தத்தவம் பெற்றோர்க ளேழுபேராம் - அந்தக்

தாரணி யாளும் அரசனுக்கு

புத்தகம் பெற்றோர்கள் இரண்டுபேராம் - இந்தப்

புதுமனை யூரு வாண்டையராம்! 8

சீரான தேசத்தில் ராசனுண்டு - நல்ல

சித்திர மாளிகை ரத்னமுண்டு

வீரர்கள் நாலுபேர் காவலுண்டு - தொணி

வீரகண் டாமணி வீணையுண்டு. 9

கச்சேரி பார்க்கலாம் பெண்ணேகண்ணே - கை

வீசி நடவடி வாலைப்பெண்ணே

கச்சேரி மேளமுக் தாளங்களும் - அங்கே

காண்புதுச் சேரிக்குக் கேட்கிறதே. 10

தாள மிருக்குது வீட்டுக்குள்ளே - தம்

பூரு மிருக்குது கோட்டைக்குள்ளே

மேள மடிக்கிறான் சொத்தியனும் - மிக

மோடியா யாடறான் நொண்டியனும். 11

பாட்டுப் படிக்கிறான் ஊமையனும் - அதை

பார்க்கப் புறப்பட்டான் கூன்குருடன்

கேட்டு மகிழ்ந்தவன் செவிடனடி - இந்தக்

கேசர கோட்டத்திற் கூடுங்கடி, 12

முப்பாலு மப்பாலுந் தாண்டவேணும் - வரும்

முற்றுகை எத்தாலுந் தாண்டவேணும்

இப்பாழுங் காயம் அழியுமுன்னே - வழி

இராச்சத மல்லோடி ஞானப்பெண்ணே. 13

வானங்கள் ஏழையுந் தாண்டவேணும் - ஏழு

வற்றாச் சமுத்திரம நீந்தவேணும்

மோன வெழுத்தினை யோதவேணும் - இந்த

மௌனிய பரப்பின் பற்றவேண்டும். 14

விட்டுக் கடந்தவன் ஆரிப்ஐயா - வகை

வீற்றுக் கடந்தவன் சிங்கமய்யா

சுட்டியே காட்டினேன் பாருமய்யா-சுருதி

சூட்சாதி சூட்சத்திற் சேருமையா. 15

தானே தானே தத்திகாரம் - ததி

தானே தானே தத்தியமாந்

தானே தானே நித்திலாமாம் - தன்மந்

தானே தானே தத்தியமாம். 16

சூரி சந்திர னைப்போல -சுசி

ஞானப்பெண் வாலைப்பெண் லைலாவை

வீரியர் தேடிய லைவார்கள் - வெகு

பாடலைப் பாடித்தி ரிவார்கள். 17

சாவேது பூவேது வாசமேது - சனு

சாகர முமேது சையமேது

ஊரேது ஆறேது குளமேது - இந்த

ஊறணி மாமலைப் பாரேது. 18

காடேது நாடேது நகரமேது -கன

காயாபுரிக் கோட்டை தானேது

ஏடேது கூடேது மாடமேது - இந்த

எமரேது மண்ணேது விண்ணேது? 19

சத்திய நூலம் பகன்றிருக்க - மறை

சான்றவை நீங்கள் அறிந்திருக்க

முத்திதருஞ் சித்தி மாதவத்தைத் - தள்ளி

முற்றுமே விட்டவன் காவிரடி. 20

_________________________

தத்திகாரம் -பொய் ஆரிப் - துறவி

ததி - தத்துவம் சனு - பிறப்பு

தத்தியம் - மெய் சையம் - செல்வம்

தன்மன் - நன்மை

பூபாலபிள்ளை

1855 - 1920

இவர் மட்டக்களப்பிலுள்ள புளியந்தீவிலே சதாசிவப்பிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். ஆங்கிலமுந், தமிழும் நன்கு கற்ற இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்து அங்கத்தவராகவும் இருந்தார். இவரியற்றிய செய்யுணூல்கள் : சீமந்தனிபுராம், விநாயமான்மியம் முதலியன.

விநாயக மான்மியம்

அவையடக்கம்

ஆதியென்றேத்து மம்மையு மப்பனுங்

காதலி னினைந்தவை கைகூ டற்கு

தந்திமா முகனையே தவத்திடை நோற்றால்

அந்தமா கடவுட் காரிணை யெனலாம்

மற்றவன் புகழ்சேர் மான்மிய சரிதம 5

கற்றவர் முன்னே கழறப் புகுதல்

விண்வளர் மேனிலை மாடகூ டத்தை

மண்விளை யாட்டிற் சிறுமிகள் வகுத்துப்

பாரெனக் காட்டும் பரிசே யாயினுஞ்

சீருடைப் பெரியோர் சேற்றெழு மலரையும் 10

மணத்தாற் கொள்ளு மரபிலிந் நூலைக்

குணத்தாற் கொள்வர் குறைதவிர்த் தன்றே.

இராவணன் பூசித்தல்

மற்று மோர்கதை வழுத்துவல் கேண்மோ

பொற்புய ரிலங்கா புரியைமுன் னாண்ட

வேந்த னிராவணன் வெள்ளிமால் வரையைச்

சார்ந்ததொரு சாரலிற் றவம்பல நடாத்தக்

கண்ணுத லாங்கே காட்சிதந் தருளி 5

எண்ணிய வரங்கள் யாதென வினவலும்

வளமிகு கற்பக வானா டழியினும்

அளியே னிலங்கை யழியா வண்ணம்

வரங்கொடுத் தருளென மாதுமை பாகம்

ஒருமணி லிங்கங் கையினி லுதவி 10

நின்பதிக் கிதனை நேரே கொடுபோய்

அன்பொடு வைத்துப் பூசனை யாற்றுதி

வாகனத் திவரேல் வழியிடை வைத்தால்

ஏகமுற் றாங்கே யிருந்திடு மெழும்பா

தென்றுரைத் தகல விராவண னேந்தி 15

நன்றெனத் தன்னூர் நாடிமற் றேக

இந்திரன் முதலிய விமையவ ரோடிச்

சுந்தரக் கணேச னிணையடி தொழுது

பத்துத் தலையான் பரனிடம் வாங்கிய

தத்துவ லிங்க மிலங்கைமூ தூரிற் 20

போயுறு மாயிற் பொன்றிடா னவனும்

மாயிறு விசும்பை வந்துகைக் கொள்வான்

அங்கறா வண்ணந் தடுத்தரு ளாயெனப்

புங்கவர்க் கிரங்கிப் புழைநெடுங் கரத்தோன்

வருணனை யழைத்து ராவணன் வயிற்றிற் 25

பெருகென விடுத்தப் பிராமணச் சிறுவன்

போலெதிர் போதலும் பொங்குநீ ருளைவால்

மேலுறச் சூழ்வரு விளைவையோ ராமல்

வருமிளங் காளாய் வாதையெய் நீரைப்

பரிசஞ் செய்து வருமள வாக 30

இத்தகு லிங்கந் தனைக்கரத் தேந்தி

வைத்துக் கொள்ளென வழங்கின னெம்பிரான்

மெலிதரு மாக்கையேன் றாங்குதற் கேற்ற

வலியில னாயினும் வலிதினிற் றந்தாய்

மும்முறை கூவுவன் முடுகா யாயின் 35

அம்மகை விடுவே னறிந்துகொள் வாயெனச்

சொல்லிமற் றவன்போய் நீர்தொடா முன்னம்

வல்லையின் மும்முறை வருகென வழைத்துச்

செங்கையி லேந்திய சிவலிங் கத்தை

அங்ஙன மிருத்தத் தரையகத் தழுந்தி 40

வளர்ந்தது ராவணன் வல்லையி னோடி

இளந்தா யிங்கென் னிழைத்தனை யென்று

கரங்கொண் டெடுப்பக் கவினுறு லிங்கம்

உரங்கொண் டவ்விடத் துற்றவா றிருப்பப்

பக்கமண் கிழித்துப் பத்திரு கையாற் 45

சிக்கெனப் பற்றித் திறமெலாஞ் செலுத்தி

இழுத்தன னெழுந்ததில் பசுவின் செவிபோற்

குழைந்ததக் காரணங் கொண்டுகோ கன்னம்

என்னவத் தலத்துக் கெய்திய தோர்பெயர்

மன்னிய லிங்கம் வலித்திழுத் தெழாமையின் 50

மாபல மென்றா னிராவண னதுமுதல்

மாபல லிங்க மெப்பெயர் வழங்கும்

அந்தணச் சிறுவன் போலாங் குற்ற

தந்தி மாமுகன் தலைமிசைக் குட்டலும்

மேவிய வுருவம் விரைவினின் மாறி 55

யாவரு நடுங்க யானை யானனப்

பேருரு வெடுத்துப் பிடித்திரா வணனைப்

பாரொடு விசும்பிற் பந்தெறிந் தாடக்

கொண்டபல் லெலும்பெலாங் குலைதர மறுகி

அண்டர்தம் பிரானே யபயமிங் கடியேன் 60

புரிந்தபொல் லாப்பிழை பொறுத்தரு ளாயேல்

வருந்துயிர் போமென வாய்விட் டலறக்

கர்த்தனு மிரங்கிக் காவல நீயென்

மத்தகந் தன்னிற் றாக்கிய வாறுன்

சிரமிசைப் புடையெனச் செப்பிய வுடனே 65

இருபது கரங்கொண் டிராவணன் புடைத்தான்

இம்முறை யாரும் மத்தகத் திருகையான்

நம்மெதிர் புடைத்துச் செல்லுவா ராயின்

ஆங்கவர் விரும்பிய வரமெலா மளித்துத்

தீங்கிலா தினிய வாழ்வுறச் செய்வோம் 70

என்றவன் றனக்கு மிசைவரம் வழங்கிச்

சென்றன னப்பாற் றென்னிலங் காபுரம்

எய்தி யிராவண னிதமொடு வாழ்ந்தான்

வையக மெங்கும் புகழ்வளர்ந் திடவே.

ச.சபாரத்தின முதலியார்

1858 - 1922

இவரது ஊர் கொக்குவில். தந்தையார் பெயர் சபாபதிப்பிள்ளை. இவரும் த.கைலாசப்பிள்ளையும் ஆறுமுக நாவலரிடம் உடன் கற்றவர் என்ப. இவர் கச்சேரி இலிகிதராகப் பலவாண்டுகள் கடமையாற்றியவர்; இராசவாசல் முதலியார் என்னும் பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டது.

இவர் பல தனிப் பாடல்கள் பாடினர். முன்னை நாதசுவாமி வடிவழகம்மை ஆசிரிய விருத்தம், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி தோத்திரம், மும்மணிக்கோவை, வெண்பா, அந்தாதி, தந்தர் கலிப்பா, சரவணபவமாலை, நல்லை நான்மணிமாலை, கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை முதலிய பல செய்யுணூல்களையியற்றினர்.

ஈச்சுர நிச்சயம்

காப்பு

உலகெலாந் தன்பா லாக வுலகத்துட் டானு மாகி

யலகிலா திவற்றுக் கெல்லா மதீதமா யறிவி னூடு

நிலவுசீ ரமல னீன்ற நித்தியா நந்த முக்கட்

குலவுபே ரருளி னால்வாய்க் குஞ்சர முகன்றான் போற்றி.

உபாசனா மூர்த்தி வணக்கம்

அகிலசரா சரத்திறனாற் றனாதுண்மை யடிய ரேங்கள்

தகுதிபெற வுணர்ந்துயுமா றவ்வவற்றிற் சார்ந்துஞ் சாரா

திகபரக்க ணுயிர்க்குயிரா யெவ்வெவையு மியக்கு மாதிக்

குகபெருமா னடியிணையை முடியணியாக் கொண்டு வாழ்வாம்.

முதற் சூத்திரம்

கடவு ளுண்டெனக் காண்புறு வழக்கை

அடைவுற நாங்கொளல் ஆர்கட னென்றது.

இரண்டாஞ் சூத்திரம்

கர்த்த னுண்டெனக் காண்பது தானே

யுத்திக் கிசைந்ததென் றுண்மைசா தித்தது.

மூன்றாஞ் சூத்திரம்

இறையவ னுண்மைக் கெதிர்கெழு சங்கைகண்

முறைமுறை யொழித்து முடிபுகூ றியது.

சிறீலசிறீ ஆறுமுகநாவலர் அவர்கள் பேரிற் பாடிய

கையறுநிலை

நாமக ணாவிற் றுயிலுகை யாலலர் நான்முகனாய்த்

தேமரை மாதிடஞ் சேர்தலி னாற்றிரு மாயவனாய்

மாமறை யாகம போதனை யூட்டலின் மாணரனாய்ப்

பூமிசை மேவிய நாவல பூபதி போயினரே.

சிவசமய கமலமதைத் தமிழ்நாடாந்

திருமடுவிற் செறித்த லர்த்திப்

பவமயறந் தாங்கணுற்ற பரசமய

விருள்கடமைப் பதற வோட்டிப்

தவநெறியாந் தேரினிடைத் தனியூர்ந்து

தற்பரனா மாழி சார்ந்தா

னவமகல வுலகுபெறு மாறுமுக

நாவலனா மனில யோனே.

சுன்னாகம், குமாரசுவாமிப் புலவர்

1855 - 1922

இவரது ஊர் சுன்னாகம், அம்பலவாணபிள்ளைக்குஞ் சிதம்பர அம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தார். முருகேச பண்டிதரிடங் கல்வி கற்றார். முதலில் சி.வை.தாமோதரம்பிள்ளையால் ஏழாலையிலே தொடங்கப்பட்ட சைவ வித்தி‘சாலையிலும் பின்பு ஆறுமுகநாவரின் சைவப்பிரகாச வித்தியாசாலை•லுந் தமை€மாசிரியராயிருந்தார். கு.கதி€ரைவேற்பிள்ளை தொகுத்த அகராதிக்கு உதவி புரிந்தார். இருபதுக்கு மேற்பட்ட தமிழ் நூல்களை இவர் எழுதினார்.

சாணக்கிய நீதி வெண்பா, இராமோதந்தம், மேகதூதத் காரிகை, சிவத்தோத்திரக் கவித்திரட்டு ஏகவிருத்த பாரதாதி, மாவைப் பதிகம் முதலிய பல செய்யுள் நூல்களுந் தனிப்பாடல்களும் இவரால் இயற்றப்பட்டன.

சுப்பிரமணியர்

சீர்மேவு நவரத்ன சிங்கார கோலமிகு

செம்பொனின் மகுடமுடியுந்

திவ்விய குணங்களோ ராறுமாய் வீறுற்ற

செய்யமுக மூவிரண்டும்

ஏர்மேவு நீபலர் மாலையொடு செச்சைமலர்

இனமாலை புரளுமார்பும்

எழின்மேவு கடலிலெழும் அலரிபோல் மயிலின்வரு

கனகமய மேனியோடு

கவின்மேவும் ஆண்டலைக்கொடியும்வேற்படையுமாய்க்

காட்சிதந் தருள் புரிகுவாய்

பார்மேவு பல்லுயிர்க் குயிராகி நிறைகின்ற

பரமே சுரவடிவமே

பாவலா தேவர்தங் காவலா மாவையம்

பதியில்வதி கந்தவேளே.

மேகதூதத் காரிகை

தூதுவேண்டுதல்

சந்தாப வெந்தழ லுற்றார்க் கினிமை தருமுகிலே

மந்தார மேவும் பொழிலள கேசன் மனக்கொதிப்பால்

வந்தே னுரைக்கு முரையைப் பிரிந்த மனையவட்குச்

சந்தாகிச் சென்றங் குரைத்துத் துயரந் தணிக்குவையே.

தூதுபோகவேண்டுமிடம்

என்மனையாட்டி உறைவிடம் யாதெனின் யான்சொலக்கேள்

மின்மலி கின்ற விருநிதிக் கோமகன் வீற்றிருக்கும்

பொன்மலி மாடம் பொலியு மளகைப் புரமெனவே

நன்மனங் கொண்டு முகிலே யவண்செல நாடுதியே.

விரைந்து போகவேண்டுமெனல்

ஒருவரு டத்தொடு சாப முடிய வுயிர்த்துணைவர்

வருவ ரெனமதித் தெஞ்சிய நாளெண்ணி வாழ்ந்திருக்குந்

திருவனை யாளைப் பதிவிர தத்திற் சிறந்தவளைப்

பருவர னீங்க விரைவினிற் காண்டி பயோதரமே.

பிரிவாற்றாது சரீரமெலிந் தெதிர்பார்த்தல்

நெடுநா ளகன்ற நினையே நினைந்தந்த நிர்வித்தியும்

படுநீர் குறைந்து கரைசேர் மரநிரை பாங்குதிர்த்து

விடுநீர் வறந்த சருகுகண் மேவி வெளுப்பிநிறங்

கொடுநீ வருவை யெனவழி பார்க்குங் குலமுகிலே.

அவந்தி நகரம்

புண்ணியஞ் செய்து தனதிடம் வந்த புலவரொடும்

மண்ணிடை வந்த வமரா வதியிது மற்றலவென்

றெண்ணிவி சாலை யவந்தியொ டுஞ்சை யெனும்பெயர்கள்

நண்ணிய புட்ப கரண்டி நோக்கி நடமுகிலே.

மாeகாளர்கோயிற் சேலை

மாகாளர் கோவிலி பொழுது மறையுமட்டும்

போகாமல் வேறிடம் நின்றுபின் மாலைப் பொழுதினிடை

போகாள கண்டர்க்கு மின்விளக் கேற்றுதி பூசனைக்கும்

வாகாரு மத்தள மாக முழங்குதி வான்முகிலே.

சரசுவதி நதி

பாண்டவர் நூற்றுவர் பால்வைத்து நீண்ட பழநண்பினால்

வேண்டலன் போரெனத் தீர்த்தநல் யாத்திரை வேண்டியன்பு

பூண்டவி ரேவதி கொங்கையுந் தேமல் பொருந்தநின்றோன்

தேண்டி யடைந்த சரசோதி யாற்றையுஞ் சேர்முகிலே.

இமயமலையிற் றிருவடித் தெரிசனம்

பொன்மே விமயம் புகுந்திடு நாளிற் புராந்தகனார்

கன்மேல் விளங்க வழுத்திய பாதமுங் கண்டடைதி

சொன்மே வியோகியர் நாளும் தொழுவர் தொழாதவர்யார்

நன்மேக மேயது பாவந் தொலைத்து நலந்தருமே.

மானசாலி

பொற்றா மரைமலர் மானச வாவிப் புனல்குடித்தங்

குற்றறேறும் வெண்ணிற யானை முகத்தி லயர்படமாய்

நற்றாரு வாகிய கற்பகச் செந்தளிர் நன்கசைத்து

முற்றார்வ மோடு முகிலே கிரீடையும் முற்றுவையே.

அளகாபுரத்து மேல்வீடும் மழைத்துளியும்

மண்மே லுயர்ந்துள வெண்முத்த மாலையை மாதொருத்தி

பண்மே லுயர்ந்த குழலிற் புனையும் பரிசதுபோல்

விண்மே லுயர்ந்த வெழுநிலை மாட மிசையளகை

தண்மேவு நும்மினம் பெய்துளி தாங்கு• தனிமுகிலே.

கற்பகவிருட்சம்

பொற்பக மேவு மளகா புரத்தறை பூவையர்க்கு

பற்பல மாநிறப் பட்டுகள் பூமது பானமுடன்

விற்பன பூடணஞ் செம்பஞ்சு மற்றும் விரிந்தமலர்க்

கற்பக மொன்று தனி நின்று நீட்டுதல் காண்முகிலே.

வீட்டடையாளங் கூறல்

என்வீட் டுளவடையாமுங் கேட்டி யினியியக்கர்

மன்வீட் டருகில் வடசிற கார்ந்து மகபதிகள்

கொன்வீட் டழகுங் கவர்ந்துவிற் றோரண கோபுரத்தால்

மின்வீட்டு மாமுகி லேநீ ளிடையில் வெளிப்படுமே.

இயக்கன்மனைவி யிலக்கணம்

முற்றா வயசினன் சிற்றிடை தாங்கி முலைச்சுமையாற்

சற்றே வளைந்தவன் கெம்பீர நாபித் தடமுடையாள்

பற்றார் நிதம்ப கனத்தாற் பயப்பயப் பாங்குறுவாள்

பொற்றா மரையோன் சிருட்டியின் முன்னிற்பன் பொன்முகிலே.

நினைப்பணி

நீங்கிய வென்னை யிராப்பக லாக நினைந்தழுது

வீங்கிய கண்களும் மூச்சால் வெதும்பிய வெள்ளுதடும்

தூங்கிய கூந்தலுங் கொண்டாண் முகத்தினைத் தூமுகினீ

ஓங்கி மறைக்க மறையும் மதியென வுன்னுவனே.

அவளோடு பேசும்விதம்

நன்மங் கலியே உனதுயிர் நண்பற்கு நானுநன்நண்பன்

உன்மங் கலங்கேட் டுனக்கவன் வார்த்தை யுரைக்கந்தே•

சென்மத்தி லென்னை முகிலென் றறிகுதி தேவியர்பால்

மன்மங்க ­ங்கினர் தம்மை முழங்கி வருவிப்பனே.

மனைவியை முன்னிலையாக்கிச் சொன்னது

கண்டேன் பலினிக் கொடியிலுன் மேனியைக் கண்கள்வொரு

வுண்டேகு மான்கணிற் கண்டேன் முகத்தை யுவாமதியிற்

கொண்டேன் குழன்மயிற் பீலி புரூஉத்திரை கொண்டறிந்தேன்

சண்டீ யுனக்கொப் புரைப்பர் யாவர் தரணியிலே.

இராவும் பகலுஞ் சோகமென்ல்

ஆரா வமுதே திருவே நினைப்பிரிந் தாற்றரிதாய்த்

தீரா விரகத்தி னீளு மிராவிது தீர்வதில்லைப்

பாராய் பகலும் பகலோன் வெயிற்பரி தாபமுறும்

வாராய் தமியேற் கிருபோதுஞ் சோகம் மலிந்ததுவே.

முகிலுக்கு விடை கொடுத்தல்

வின்மேல் விடுக்கு முகிலே யுனது விருப்பமர

என்மேற் றயைபுரிந் தென்றூதை யங்க ணியம்பியதன்

பின்மே லுனது பிரீதிப் படிசெல்க பெண்ணெனுநின்

மின்மேற் பிரிலை யென்செய லோர்குவை விண்முகிலே.

சாணக்கி நீதிவெண்பா

பண்டிதர் மகிமை

சொல்லணிசேர் கல்வித் துறைபோய பண்டிதர்தாம்

வெல்லுமிகல் வேந்தரினு மிக்கவர்காண்-சொல்லுங்கால்

வேந்தர்க்குத் தன்னாட்டின் மேன்மையுண்டாம் பண்டிதர்க்குச்

சேர்ந்தவிட மெல்லாஞ் சிறப்பு.

பண்டிதரல்லாதவர்

உருவ மிளமை உயர்ந்தகுடித் தோற்றம்

மருவினுமென் கல்வியிலா மக்கள் - ஒருசிறிதும்

வாசந் தராமுருக்கின் வண்மலரே போல்வரெனப்

பேசுவரே நூலோர் பிரித்து.

புத்திர பரிபாலணம்

ஐந்துவய தாகுமட்டும் ஆதரவாய்ப் பேணுகவீர்

ஐந்து வயததன்பி னாகுமட்டும் - மைந்தர்களைக்

கண்டிக்க வீரெட்டுக் காணுமேன் மித்திரன்போற்

கொண்டிடுக வேண்டாங் குறை.

குணமிலான்

தீயமர மொன்றுநின்று நெந்தீக் கிடனாகி

ஆய வனமெல்லாம் அழலாக்கும் - ஆயதிறம்

போலக் குணமில்லாப் புத்திரனுந் தன்குலததைச்

சாலக் கெடுத்தொழிப்பான் தான்.

வஞ்சகன்

நாக்கு நுனிக்கண் நறுந்தேனும் நெஞ்சகத்து

நீக்கரிய நஞ்சம் நிலைபெற்ற- தீக்குணத்தோன்

இன்சொ லுரக்கின்றா னென்றவனை நம்பாதே

என்சொலினுஞ் செய்வா னிடர்.

விலகுந் தூரம்

ஆனைக்கு நீங்குமுழம் ஆயிரமே கொம்புடைய

ஏனை விலங்குக் கீரைந்தே -வானிமிரும்

வாசிக் கொருநூறே துர்ச்சனர்க்கோ வைகுமிடம்

ஆசறவிட் டோடுதலே யாம்.

முற்றுங் களைதல்

வட்டிக கடனும் வளர்நெருப்பும் வெம்பிணியுங்

கட்டழித்தல் வேண்டும் களைந்துகுறை - விட்டதுண்டேற்

சும்மா விடுமோ தொடர்ந்து முழுதழிக்கும்

அம்மா தடுத்த லரிது.

பெருந்துயர்

வேற்றோர் மனைவிரும்பு மெல்லியலுஞ் சொற்கேட்டுப்

போற்றிப் பணிதலிலாப் புத்திரனும்-ஆற்றங்

கரைசேர் விளைநிலமுங் காணுங்கால் என்றும்

மரணத் துயர்கொடுக்கும் வந்து.

துக்கப்பேறு

நல்லிறிவில் லாதவற்கும் நல்கலைகல் லாதவற்கும்

நல்லரசன் காவலிலா நாட்டவர்க்குஞ்-சொல்லினிய

மக்கட்பே றில்லா மாந்தருக்கு மின்பமில்லைத்

துக்கப்பே றுண்டனவே சொல்.

ஆபரணம்

தாரகைகட் காபரணஞ் சந்திரனே சுந்தரஞ்சேர்

நாரியர்கட் காபரணம் நாயகனே - பாலருகுக்

காபரணஞ் செங்கோ லரசனே யாவர்க்கும்

ஆபரணங் கல்வியே யாம்.

துன்புறு பகைவர்

பெற்றகட னீர்க்காப் பிதாவும் பிழைகொண்ட

பெற்றவளுங் கற்றை பெறாமகனும்-மற்றழகு

வாய்ந்த மனையாளும் வாரமுடை யாரெனினுஞ்

சார்ந்த பகைவரெனச் சாற்று.

நவையுறாமை

சீரணஞ்சேர் போசனமுஞ் சென்று முதிர்வடைந்த

தாரமும் வீடுவந்த தானியமும் - போரிடைப்போய்

வெற்றியொடு வந்த வீரனுமூர் சொல்லுநவை

பற்றப் படுவதில்லைப் பார்.

இராமோதந்தம்

உலக மேத்திய விச்சிர வாசுவென வோது•

தலைமை சேர்முனி தந்திடுஞ் சிறுவர்க ளாகிக்

குலவி ராவணன் கும்பகன் னன்பெருங் குணஞ்சேர்

தலைவன் வீடணன் மூவரும் விளங்கினர் த€லாள்.

தேவர் கோமகன் றருக்களை மணிகளைத் திறல்சேர்

ஏவ லாளராற் கொணருவித் திலங்கைமா நகரின்

மேவ நாட்டினன் தேவருக் கிடுக்கணும் விளைத்தான்

பாவ காரிகள் பார்ப்பரோ பிறர்படுந் துயரம்.

வெய்ய ராவணற் கொன்றிட விரைவினில் யாமும்

வையங் காத்திடுந் தசரதன் மைந்தனாய் வருமேம்

பொய்ய னாமவன் றன்னொடும் போர்புரி காலைத்

துய்ய வானவ ரெமக்கருந் துணைசெயும் பொருட்டு.

ஓன்றுந் தத்தம கூறுக ளுற்றிடப் புவியிற்

றுன்றும் வானர வடிவொடு• தோன்றிடக் கடவர்

என்று நாரணன் பிரமனுக் கியம்பினன் மறைந்தான்

அன்று வானவர் பின்வரப் பிரமனு மகன்றான்.

அநக னாகிய ராமனு மங்கிசான் றாகச்

சனகன் மாமகள் சீதையை வேட்டனன் றங்கள்

மனமு வந்திடு மங்கையர் மூவரை யிளைய

புனிதர் மூவரும் வேட்டனர் தனித்தனி பொருந்தி.

வேறு

காட்டினிற் போக வேண்டும் கரியவன் பரத னிந்த

நாட்டினை யாள வேண்டு நவிலுமிவ் வரமி ரண்டும்

வேட்டிடு கின்றே னின்றே தந்தரு ளென்று வேந்தைக்

கேட்டன ளிரக்க மில்லாக் கேகயன் புதல்வி மாதோ.

தாதையைத் துயரிற் போக்கு தாயினைக் கடிந்து கூறி

மேதினி யாளு கென்று வேண்டும்வா சமுக நீக்கிக்

கோதறு மரசில் வைக விராமனைக் கொணரு மாறு

மாதுய ரத்தி னோடும் வனநெறி மருவி னானே.

யாதுரை செயினுங் கொள்ளே னேழிரு வருட மீண்டே

தாதைசொல் வழாமல் வாழ்ந்து தனிநகர் பின்பு சேர்வேன்

போதுமந் நாள்வ ரைக்கும் போய்ப்புவி யாளு கென்று

பாதுகை யிரண்டு மீந்தான் பரதனும் பெற்று வந்தான்.

வாவிநீர் சூழும் பஞ்ச வடியிடைத் தனது கையால்

ஆவிபோன் றினிய தம்பி யாக்கிய பன்ன சாலை

தேவியுந் தானு மாகச் சென்றுவீற் றிருந்தா னென்ப

தேவர்தந் துயரை நீக்கத் திருவவ தாரஞ் செய்தோன்.

மானுரு வெடுத்துக் கொண்டு மாயமா ரீசன் சென்று

சானகி முன்னே நிற்பச் சானகி யீது பொன்னின்

மானிதை நீபி டித்துத் தருகென வாஞ்சை கொண்டு

கோனடி பணிந்து கேட்டாள் கோணுமங் கதன்பின் போனான்.

தம்பியும் போன பின்பு சானகி தனிய ளாகி

இம்பரில் வைகுங் காலை யிராவணன் துறவி வேடம்

நம்புறக் கொண்டு சென்று நங்கையைக் கவர்ந்து செல்ல

உம்பரிற் சடாயு கண்டங் குருத்தவ ணெதிர்ந்தா னன்றே.

பொன்னின்மா னதன்பின் போன பூபதி தம்பி வந்து

சொன்னவா சகங்கள் கேட்டுத் துயர்ப்பெருங் மூழ்கிப்

பன்னசா லைக்கண் வந்து பாவையைக் காணா னாகி

இன்னலுற் றழுங்கி நின்றா னிருவருந் தேட லுற்றார்.

வேறு

கூடும் வானரக் கோமகன் சீதையைத்

தேடும் வண்ணந் திசையொரு நான்கிலும்

ஓடும் வானர வீரரை யுய்த்தனன்

தேடு வீரெனுஞ் செம்ம லுரையினால்.

அநும னங்கத னாதியர் தென்றிசை

நனிபு குந்துசம் பாதி நவின்றிடும்

வனிதை வாய்மொழி வார்த்தையுங் கேட்டனர்

இனிது தென்கட லெல்லை மருவினார்.

வேறு

வாவியெழு மாருதியும் வழிமறிக்கு மிலங்கைமகா

தேவிதனை வலிதொலைத்துத் திறலரக்கர் நகரியிற்போய்ப்

பாவியிரா வணன்றுயிலும் பான்மையும்பார்த் தசோகமரக்

காவிலிருந் தொருவனிதை கலங்குவதுங் கண்டனனே.

பாதபத்தின் மிசைந்தோன் பலவாறு புலம்புகின்றாள்

சீதையென நிச்சயித்துச் சிந்தைமகிந் தணிமையிற்போய்க்

காதலன்றன் செய்கையெலாங் கட்டுரைத்துத் தான்கொணர்ந்த

மோதிரமு மவளிடத்தின் முறைநின்று கொடுத்தனனே.

முன்னவனோ டும்பகைத்து மூதுணர்ந்த வீடணனாம்

பின்னவனுஞ் செயராம பிரானருகில் வந்தணைந்தான்

அன்னவனை யினியிலங்கைக் கரசாக வபிடேகஞ்

சொன்னமுறை யாற்புரிந்து தூயவனும் வைத்தனனே.

வேறு

சுக்கி ரீவனு மநுமனு மராமரந் துளைத்த

அக்கு மாரனுந் தம்பியு மமரிடை வந்து

புக்க வெந்திற லரக்கரை வேரொடும் போக்கி

மிக்க வீரமுங் காட்டினர் தேவர்கள் வியப்ப.

வெருவும் போர்பல விராமனும் வியந்திட வாற்றிப்

பிரமன் வெம்படை விட்டிரா வணன்முடி பிறங்குஞ்

சிரமெ லாமறுத் தொழினன் செயசெய வென்றே

விரியும் பூமழை விண்ணவர் சொரிந்தனர் வியந்து.

தனிப்பாடல்

முந்தேறு கிருதயுக பூபதிமாந் தாதாவு

முடிந்த போனான்

நந்தேறு கடலடைத்த செயராமச் சந்திரனு

நடந்து விட்டான்

வந்தேறு குருகுலத்துத் தருமன்முதன் மகிபரெலா

மாய்ந்து போனார்

அந்தோவிங் கிவரொடும்போ காதபுவி நின்னொடுதா

னடையு மையா.

காசிவாசி செந்திநாதையர்

1848 - 1924

இவர், குப்பிழான் என்னும் ஊரிலே சிய் ஐயருக்குப் புதல்வராகப் பிறந்தார். ஏழு ஆண்டுகள் நாவலராலே தாபிக்கப்பட்ட வித்தியாசாலைகளிற் கல்வி கற்பித்தவர். இந்தியாவிலும் பலவாண்டுகள் வாழ்ந்து சமயப்பணி புரிந்தவர். பல கண்டன நூல்களை இவர் எழுதினர்.

ஆறுமுக நாவலர்மீது கையறுநிலை

வெண்பா

வன்றொண்ட னாவலர்கோன் வாழ்வா வதுமாய

மென்றுரைத்த தேவாரத் தின்பொருளை-நன்றியுடன்

சிந்தைசெய்தே னாவலனே சேர்ந்தாய்நீ யென்பதனாற்

புந்திநொந்து துக்கமிக்க போது.

நன்னடக்கைப் பத்திரிக்கை நாவலனே நீயனுப்ப

வென்னதவஞ் செய்தேனோயானறியே - னன்னதனு

ளுள்ளசில வாசகங்க ளுற்றுணரும் போதெல்லாம்

வெள்ளம் பொழியும் விழி.

சுன்னைக் குமார சுவாமியிடத் தோர்கடித

முன்னைக் குறித்தனுப்பி யுள்ளுவந்தே-னன்னதுன்பாற்

சேருமுன்ன நாவலனே சென்றாய் சிவலோகம்

யாரும் பதைபதைக்க விங்கு.

கட்டளைக் கலித்துறை

தேவாரம் யான்சொலக் கேட்டு மகிழ்ந்து சிரத்தையுடன்

பூவாதி கொண்டு புரிசிவ பூசைப் பொலிவழகும்

பாவாணர் மெச்சச் செயும்பிர சங்கமும் பார்த்தினிநான்

நாவார வாழ்த்திடு நாளுமுண் டோநல்லை நாவலனே.

புலோலி, வ. குமாரசுவாமிப் புலவர்

- 1925

இவரது ஊர் புலோலி. தந்தையார் பெயர் வல்லிபுரநாதபிள்ளை.இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்தம் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடத்துங் கல்வி கற்றவர் இலக்கண வமைதியில்லாது எழுதுவோரைக் கண்டிக்கும் பண்புடையராகையின் 'இலக்கணக் கொத்தர்' என அழைக்கப்பட்டார். பல நூல்களுக்கு உரை யெழுதியதோடு சில தனிப்பாடல்களையும் பாடினர்.

பிரதீக பஞ்சகம்

அறுசீர் விருத்தம்

முன்னாளிற் சூதமுனி மொழிந்தடை

மொழிதெரிந்து முதிர்ந்த வன்பாற்

பின்னாளிற் கச்சியப்ப சிவாசாரி

தமிழின்மொழி பெயர்த்துப் பாடப்

பன்னாளில் வழங்குகந்த புராணவள்ளி

யம்மைமணப் படலப் பாட்டுக்

கிந்நாளி லெவருளமுங் களிக்கவுரை

யியற்றினா னேவ னென்னில்,

கட்டளைக்கலிப்பா

கூறு சீரியாழ்ப் பாணப் பெரும்பதி

கோதில் வண்குலத் தார்தளைக் கொண்டுறும்

வீறு பெற்றுடு வைப்பெயர் மேவிய

மெச்சு நற்பதி வாசன் விரும்புநூல்

தேறு புந்தியன் சாலி விளைநிலஞ்

செல்வ மிக்கவன் றேகியென் றார்க்கிடும்

பேறு முற்ற வருளம் பலவற்குப்

பிள்ளை யாகப் பிறந்திடு சீரினோன்.

எழுசீர் விருத்தம்

வனப்பதி கஞ்சேர் மாசமி புன்னை

மலர்ந்துயிர்த் திடுநறுங் கந்த

வனப்பதி வதியு மாறுமா முகத்து

வள்ளறன் வினையடிப் போதாம்

வனப்பதி வுற்றார் மதுகர மனையான்

மாறுசெய் தெதிர்ப்பவர் முப்பு

வனப்பதி யவரே யென்னினுந் தளரா

மனத்திட முடையமாண் பினனே.

அந்தணர் முதலாம் பற்பலர் வந்தே

யருத்மிழ்க் கலைபடித் ததற்குத்

தந்ததக் கிணையா னூலுரை யியற்றுஞ்

சார்பினிற் சார்ந்திடும் பொருளாற்

செந்தமிழ் பிரபந் தங்களைக் கேட்டுச்

சேதநற் பதிமகா ராசன்

சிந்தனை களித்துத் தருதியா கத்தாற்

சீவனஞ் செய்திடு திறத்தோன்.

கட்டளைக் கலிப்பா

சொல்ல வந்தவித் தோங்கு மிலக்கணஞ்

சோர்வி லாப்பெருங் காப்பிய மாகவும்

நல்ல கோவையந் தாதி கலம்பகம்

நால்வ ரோது மருட்கவி நீதிநூல்

அல்ல றீர்க்கும்பு ராணமென் றின்னன

வாசை யோடு மதிநுட்ப மாமதி

வல்ல வாறறிந் தாசில் கவித்திற

மாண்பு றுஞ்சிவ சம்புப் புலவனே.

இரகுவம்மிச உரைச் சிறப்புப்பாயிரம்

ஆசிரிய விருத்தம்

பெரும்புகழ்பெற் றிட்டமகா கவிகாளி

தாசன்வட மொழியிற் பேசும்

அருங்காவியாம் ரகுவம்ச காவியத்தை

யரசகே சரியென் றோதும்

விரும்புசுடர்ப் பரிதிகுலத் தமிழரசன்

யாழ்ப்பாண மிசைநல் லூரான்

இருந்தமிழாற் பாடியமிழ் தெனவருந்த

விருந்திட்டா னெவர்க்கு மன்றே.

அன்றுரைத்த தமிழிரகு வம்சகா

வியமேதா வியரே யாய்•து

நன்றுரைக்க வுணர்வதன்றி நானிலத்தா

ரறிவரிய வியல்பா கின்ற

தென்றுளத்தின் மதித்துணர்ந்து தமிழர்கள்யா

வருமுகை யெய்தும் வண்ணம்

நின்றுலகி னிலைபெறவோர் புதியவுரை

செய்தானை நிகழ்த்தக் கேண்மின்.

சீரோங்கு நல்லைநகர் வாசன் வித்வ

சிரோமணியென் றேகலைஞர் செப்புந் தப்பில்

பேரோங்கு பொன்னம் பலப்பிள் ளையின்பாற்

பிரியமுடன் பல்லாண்டு கற்றோன் மற்றும்

பாரோங்கு மதுரைசெந் தமிழ்பே ருற்ற

பத்திரிகைக் கிராமவ தாரச் செய்யுட்

கேரோங்கு பாடாந்த ரங்கள் மற்று

மெழுதிவிடுத் தேவருக்கு மிதமே செய்தோன்.

ஏர்செறியு மல்லாகத் தின்கூ றாகி

யெவ்வளமுந் தந்துலகோர்க் கினிமை யான

நீர்செறியும் புன்னைநகர் வாசன் பெம்மா

னிமலபா தத்துணைக்கு நேசன் கஞ்சத்

தார்செறியுங் காசிபகோத் திரச்சின் னையர்

தவத்தினா லுதித்தமதிச் சற்கு ணத்தான்

பார்செறியுந் தமிழைநனி யுணர்க ணேச

பண்டிதணெண் டிசைமதிக்கு பண்பி னானே.

பாவலர் துரைப்பாபிள்ளை

1872 - 1929

இவரது ஊர் தெல்லிப்பழை. தந்தையார் பெயர் அருளம்பலம். சைவசமயிகள் கல்விகற்றுப் பயனடையும் வண்ணந் தெல்லிப்பழை மகாசன உயர்நிலைப் பள்ளியைத் தாபித்து அதனை வழிநடத்தியவர் இவரே. பதங்கள், கீர்த்தனைகள், கும்மிகள் பாடுவதில் இவர் வல்லுநர்.

இவரியற்றிய செய்யுள் நூல்கள் : சிவமணிமாலை, யாழ்ப்பாண சுவதேசக் கும்மி, இதோபதேச கீதரச மஞ்சரி என்பன.

சிவமணிமாலை

நாளுந் தொலைந்து பெலமுங் குறைந்து நலிவடைந்து

மாளுஞ் சமய மெனக்குமுன் றோன்றி மறுபிறப்பை

ஆளும் பலத்தை யருளியென் சீவ னகன்றபின்னர்

நீளுஞ் சுகாந்தம் நீயருள் வாய்சிவ நின்மலனே. 1

எள்ளுக்கு ளெண்ணெ யெனவெவ் விடத்து மிருக்குமுனை

உள்ளக் கமலத் திருத்தி யனுதின மோங்குபெரு

வெள்ள மெனுமன் பொடுபூ சனைசெய்து வீடுபெறு

தெள்ளுங் கயவர்க்கு வாழ்நா ளெதற்கென் னிறையவனே. 2

தத்தஞ் சமயமொன் றேயுன்மை யென்று தரணிதனில்

நித்தம்பல் வேறு சமயிகள் வாது நிகழ்த்துகின்றார்

எத்தலத் துஞ்சிவ மொன்றே யுளதென வெண்ணுவரேல்

சித்தப் பிரமையொர் காலுங்கொள் ளாரச் சிதடருமே. 3

தனிப்பாடல்

(தமிழபிமான மகத்துவம்)

பூவிற் றமிழரின் சாதி யெனுநற் புகணிலையை

மேவிடு வோர்தங்கள் மெய்யபி மானன் மேன்மைதனை

நாவின் மனதிற் செயலினிற் காட்டி நனிமகிழ்தல்

பாவிற் புலவர் பெருங்செல்வ மென்று பகர்தகைத்தே. 4.

கீதரசமஞ்சரி

(தமிழ்ப் பாசையின் மகத்துவம்)

தேனேர் சுவைகுலவுஞ் செந்தமிழா கும்பாசை

தானே தனக்குகிர் சாற்றுபுகழ்த் தொன்னூலின்

ஞானா கரமுநிறை நற்பாசை யாமதன்சீர்

நானோ செலவலியேன் நாடுமதை நண்பர்களே. 5

உண்மை

சத்திய நெறியினைச் சார்ந்து தேவனுக்

குத்தம சேவைசெய் துண்மை யாங்குணஞ்

சித்தஞ்சொல் செயலினிற் றினமுங் காட்டுதல்

பத்தருக் குகந்தற் பலன தாகுமே. 6

நீதியின் தைரியம்

என்ன நயம்வரினு மெத்தனை பேர்கூடி

இன்னல் புரியு வெழுந்தாலம் - உன்னி

யெதுசரியோ வத்தை யின்பமுடன் செய்யு

மதுநீ தியின்தைரி யம். 7

பொறுமை

சந்தன மரத்தினைத் தறிக்குங் கோடரிக்

கந்தநன் மரம்மண மருளல் போலுனக்

கெந்தவல் லிடரினை யெவர்செய் தாலுநீ

சிந்தைவைத் தவர்க்கன்பு செய்தன் மேன்மையே. 8

தற்பொழிவு

பரவுபகா ரங்கருதிப் பாடுபடும் மாந்தர்

பரவுகடல் குழுமியாழ்ப் பாணம் - விரவுபலர்

இல்லையது வித்தேச மேருற் றிலங்குதற்கோர்

வல்லதடை யென்றே வழுத்து. 9

சீதன வழக்கத்தின் தீமைகள்

மெய்ம்மண வாழ்வி லதியின்ப மாயுய்ய வேண்டுபவர்

கையி லதிபணம் பாரிய வாத்தி கதித்தநகை

பெய்யுமின் னாளிவ ளென்றொரு பெண்ணிற் பிரிதீகொள்ளார்

செய்திறம் மேன்மை குணங்கல்வி கற்பிவை தேடுவரே. 10

வித்துவான் சரவணமுத்து

1882 - 1929

இவரது ஊர் மட்டக்களப்பு. தந்தையார் பெயர் அருணகிரி. இளமையில் அரசாங்க சேவையிலமர்ந்து எழுதுவினைஞராகக் கடமையாற்றினர். சுவாமி விபுலாநந்தர் இவருடைய நெருங்கிய நண்பர்.

இவரியற்றிய நூல்கள் : மாமாங்கப் பிள்ளையார் பதிகம், கதிர்காமவேலர், தோத்திரமஞ்சரி, சனிவெண்பா என்பன.

சனிவெண்பா

விநாயகர் துதி

திருவிளங்கச் சீர்திகழுஞ் செந்திமிழு மோங்கப்

பெருமை பெருகவருள் பேணி - வருமினிய

செய்யசனி வெண்பாவைச் செப்பிடவே மாமுகநற்

றுய்யனே யுன்றா டுணை. 1

நூல்

நளனையரிச் சந்திரனை நான்மறைவே தாவைத்

தளர்வுறச் செய்திட தகையே -கழலார்

கனிவா யிதழ்வல்லி கண்ணருளா லேதான்

சனியே யெனைப்பகையா தே. 2

விண்ணவரை மாலயனை வேந்தர்வேந் தன்பரனை

எண்ணா திடர்ப்படச்செய் யெந்தையே-கண்ணான

கற்பகமே நற்சுவையே காசினிபோற் றுஞ்சனியே

தற்பரனே தந்தா டயை. 3

நள்ளார் நகைக்கவைத்தாய் நானிலத்தா ரேசவைத்தாய்

உள்ள மரியாதை யோட்டிவைத்தாய் - மெள்ளவே

வந்தணுகாத் தீச்செயல்கள் வந்திடச்செய் தாய்கலியே

எந்தையினி யென்மே லிரங்கு. 4

ஆலய சேவை யனுட்டான மாதியவை

கால மறிந்துசெய்யாக் காரணஞ்செய்-சீலசனி

என்குறையை மன்னித்திங் கேழைமீ தேயிரங்கி

யன்பகதீர்த் தாள்வா யுகந்து. 5

சூலைசொறி யீழைவலி வாதமொடு நீரழிவு

மாலையிரு ளன்ன மதியளித்து-வேலைசூழ்

ஞாலத் தலையு ஞமலிபோற் சய்யாதே

காலசனி யேபணிந்தேன் கால். 6

தாயார் பகையாமற் றந்தையார் தள்ளாமற்

சேய்மனையும் தான்வெறுத்துச் சொல்லாமல்-ஓயா

துலகமமே தான்சிரியா துன்னருளா லேதான்

கலகமிலா தெஞ்ஞான்றுங் கா. 7

சீத நறுங்குழலார் செய்யபா தங்கண்டும்

போதமுற்று நீயகன்று போகாபோ-பேதவிதி

யென்னாற் சகிக்க வினிமுடியா தேசனிநன்

மன்னாவுன் றன்றுயர மே. 8

கிழங்கு வருத்தவே கீழ்மைப் படுத்தப்

பழங்களுண் ணச்செய்தல் பண்பா-வழங்கா

வகைநீக்கு வாய்சனியே வையத் தவர்செய்

நகைநீக்கி யாள்வாய் நயந்து. 9

போற்றிநா டோறுமுந்தன் பூங்கழல்கள் பாடிநிற்ப

வாற்றரிய நோய்க ளகன்றோடச்-சீற்றமிலா

வுன்கிருபை யாலே யுவந்துவாழ்ந் தேயினிது

மன்புகழ்நின் றோங்க வழங்கு. 10

ம.க.வேற்பிள்ளை

1846-1930

இவரது ஊர் மட்டுவில். தந்தையாராகிய கணபதிப்பிள்ளை உடையாரின் பிறப்பிடம் புலோலி ஆகும். இவருங் சபாபதி நாவலரும் ஆறுமுகநாவலிடம ஒருங்கு கல்வி கற்றோராவர். இவர் நூல்களுக்கு உரையெழுதுவதில் விற்பன்னராகையின் 'உரையாசிரியர்' என அழைக்கப்பட்டார். சிதம்பரம் நாவலர் வித்தியாசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றினார். இவரிடங் கல்வி கற்றோருட் குறிப்பிடத்தக்கோர் சாவகக்சேரிப் பொன்னம்பலப் பிள்ளயும், வித்தவான் சுப்பையபிள்ளையுமாவார்.

இவரியற்றிய செய்யுணூல்கள் : புலோலிப் பர்வத வர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வயிரவக் கடவுள் தோத்திரம், ஈழண்டல சதகம் முதலியன.

ஈழமண்டல சதகம்

காப்பு

செந்திருசேர் சந்த்ரபுரச் செல்வருட் கேதாரச்

சந்திரமௌ லீசர் சதகபப் - புந்திபுகும்

இந்துஞ்சிந் துந்நந்து மெந்தைமுந்து தந்தபொலந்

தந்தன்பந் தந்தவிர்க்குந் தாள்.

நூல்

பொதுப்பிரகரணம்

அக்கிராசன பதித்துவம்

சேற்றிற் பிறக்கினுங் கமலமலர் சிவபிரான்

றிருமுடிக் கண்ணேறிடுஞ்

சீரறு சிலம்பிவாய்த் தோன்றினும் பட்டரன்

றிருவரை தனிற்செறிதரும்

போற்றரிய விப்பிவாய்த் தோன்றினுந் தரளமுமை

புணர்முலைக் குன்றிலேறும்

புள்வாயி னுச்சிட மாயினுந் தேன்முகப்

புராரிபொற் சடைபுக்கிடும்

நாற்றப் புலாலுட் பிறந்தகோ ரோசனையு

நாதர்முடி மீதுநணுகு

நற்குலச் செல்வர்க டமக்குமுன் கற்றவாக

ணாயகத் தவிசேறுவார்

சாற்றிடிற் கல்வியெதிர் சாதிதலை நீட்டுங்கொல்

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 2

இலங்காபுரிப் பிரகரணம்

இலங்கையின் விசேடம்

முப்பத்து முக்கோடி தேவர்க்கு முதல்வனாய்ப்

மூவுலக வேந்தர்வேந்தாய்

முந்தி• திரற்காக வேதேவ தபதிமுன்

மூதறிவி னிற்றந்ததும்

ஒப்பற்ற விருநிதிக் கிழவற்கு நீள்கால

முறுராச தானியாகி

யுற்றது மிலங்கையெனின் மற்றிதற் கிணையாக

வொன்றிங் குரைக்கவுளதோ

இப்பெற்றி யன்றியுமுன் னாரத மகாமுனி

யிடத்தா யிரம்மறைபயி

லிராவணற் குஞ்ஞான பூடணற் குந்தொல்

லிராசதா னியுமினையதே

தப்புற்ற நாயினேற் கேவர்துணை நீயலது

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 3

சொல்லுநூற் றெட்டுத் தலங்களுண் மிக்குத்

துலங்கலி லிலங்கையாம்பேர்

சூடிற்ற தன்றியு மிரத்தினா கரமாய்த்

துலங்கலா னும்மிலங்கை

அல்லதாம் புதியதா வடைதலா னேயிதற்

கானதிவ் வபிதானமே

யாதிகுரு திருமூலர் சிவபூமி யென்றிதனை

யன்றறுதி யிட்டருளினார்.

ஒல்லுதே வாரம் பெறுந்தல் மிரண்டுசிவ

னொளிபாத மென்றிளஞ்சேஎய்க்

கோங்குந் திருப்புகழ்த் தலநான்கு சீவநதி

யுளதநான் கொளிராகமச்

சல்லாப வுல்லாச கயிலையங் கிரிவாச

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 4

ஈழம திலங்கையே லிங்கிதன் பொருள்பொனல

தில்லையிது சூதமுனிவாக்

கீழமதி லாருகத முதலாய பலசமய

மின்னுமிலை யிதுவிசேடம்

ஈழமதி லையரா கமநிந்தை மாசுண

வியாதுமிலர் மாயாமதம்

யார்யா ரிடத்துமிலை யுண்டுகொ லெனின்மூல

மிதரதே சிகள்வாசமே

ஈழம திராவணன் மனைவிமந் தோதரிக்

கிறைவர்பெண் மகவொன்றளித்

தினிதருள் செயப்பெற்ற திம்மகவு தான்சீதை

யியவள்சனன பூமியுமிதே

தாழநினை வாழ்த்தத் தியானிக்க வன்புதவு

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 5

திருக்கேதீச்சரம்

அமலர்கே தீச்சரந் திருஞான சம்பந்த

ராரூரர் திருவாய்மலர்ந்

தருள்செய்தே வாரம் பெறுந்தலம தாகலி

னதற்குநிக ரார்சொலவலார்

குமலர்மா திரமீ திதற்குநிக ராகவருள்

குலவுதல மிலதெனற்குக்

கோடிதே வர்கணிதங் கூடியர்ச் சித்தல்கரி

கூறிலனு பவசித்தமாங்

கமலர்நேர் தருபிருகு முனிபருப் பதமுனிவர்

கழறுமா லியவான்முதற்

கணிதமிலர் கவுரிபவ வயிரியிவர் கழறொழுது

கடிதுசிவ கதிகடுகினார்

சமலர்மூ வரினுமிழி தமியனே னுக்குமளி

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 6

திரிகோணமலை

தென்கயிலை யாகியொளிர் திரிகோண மாமலை

திருக்கயிலை யின்சிகரந்

திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்தருள்செய்

தேவார தெய்விகதலங்

கொன்புனையு மனுநீத கண்டசோ ழன்குலக்

கோக்குளக் கோட்டன்றருங்

கோயில்கொண் டுடைதெழு பாதாள கங்கையிடை

கோணேசு ரன்வதிவதாம்

இன்புயிர்க் குதவுபிடி யன்னமென் னடையிறை

யிடப்பாக மினிதர்மர்வதிங்

கெழுபுவன முந்திக்கு நோக்கியெதிர் தொழுதிட

விருப்பது பொருப்பதியலார்

தன்பெருந் தலைமைதா னறிகிலாத் தனிமுதல்வ

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விசாசனே

சந்த்ரபுர தலவாசனே. 7

சிவனொளிபாதமலையுஞ் சமனாசலமும்

நிகரில்சிவ னொளிபாத மென்றிங்கொர் குன்றுண்டு

நிமலர்திரு வடிநிலைபெறு

நீடுவட மேருபோற் றென்மகா மேருவிது

நிலவுசம னாசலத்தைப்

புகரில்கம் பளைவலகை புகழுமா வலிகங்கை

பொற்புமிகு கல்லாறெனப்

புகலுமீ ரிருநதிகள் புடைசூழ மிவைதமிற்

புல்லுமா ணிக்கமேநூல்

பகருமா மதுரையெம் பரமர்கைக் கொடுசென்றொர்

பாண்டிய குமாரன்மகுடம்

பண்டுசெயு மாறவ னமைச்சர்க்கோர் வணிகராய்ப்

பகருமா ணிக்கமணியாஞ்

சகமீது குடமுழா நந்தீ சனைத்தந்த

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 8

கதிர்காமசைவம்

மலைகளுட் டிலகமாங் கதிர்காம சைலத்து

மான்மியங் கயிலையுறையு

மறைமுத லமக்களுள்செய் பின்னர்நந் திக்கருள

மற்றவன் மாணாக்கருக்

கிலைமறைந் தறுகாயி னரிதெடுத் தீந்திடலு

மிதுசத்ய வதிபுத்திரற்

கெட்டிற் றிவன்சூத முனிவற் கியம்பலுமிவ்

விருடிசித் தாச்சிரமிகட்

குலைவிலா துதவினா னொளிர்காந்த மாங்கடலி

லுளகயிலை பயில்சங்கிதை

யுற்றதக் கிணகைலை மான்மிய முரைக்குமிஃ

துயர்வொப்பில் பாவியேன்புன்

றலையினின் றாள்சூட்டு தருணமும் உளதாங்கொல்

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 9

வீணாகானபுரப்பிரகரணம்

உபயநாமாதிகள்

இங்கித னுதக்கில்வீ ணாகான புரமான்

றிலங்குமதி யாழ்ப்பாணமே

யீசர்பதி னெண்மொழியு ­ண்டுவளர் செந்தமிழி

யாண்டுள திறும்பூதிவட்

டுங்கமுறு செந்தமிழ்ப் புலவர்பல ரிசைதிசை

துலங்கிடத் தோன்றுகின்றார்

தூறுகொச் சைத்தமிழ் குறைத்தமிழ் கொடுந்தமிழ்க

டுவரத் துறந்தநீரார்

தங்குமற் றெங்குந் தனித்தமிழு முண்டெனத்

தால்சற் றசைக்கவலமோ

தக்கதவ முற்பவத் திற்செய்த சற்சனர்க

டாஞ்சார்வ தித்தண்ணடை

சங்கமுதன் மூன்றினுக் குஞ்செந் தமிழ்த்தலைவ

சாந்தா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே ஐந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 10

ஞானப்பிரகாகமுனிவர் வரலாறு

சீர்மேவி யாழ்ப்பாண திரநெல்வே லியிலியாஞ்

செய்தவ மெனாவுதித்தான்

சிந்தும் பழிக்குவெந் தயருழந் தஞ்சிநந்

தேயமக லுஞ்சிந்தையான்

ஏர்மேவு யௌவனத் தெரிகுளிக் குங்கற்பி

னேந்திழையை யுங்கதறவிட்

டெய்திச் சிதம்பரத் திறையிறைவி தாள்புக்கொ

ரேழேழு நாளுபவசித்

தூர்மேவு கௌடத்தெ முமையம்மை யருளுந்த

வுற்ற ரியக்கடல்கடந்

தும்பர்குரு வின்மகா பண்டிதனு மாய்ச்சனன

முற்றபய னுறவுமையருட்

சார்மேவு சைவத் தனித்துறவி யாயினான்

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 11

யாழ்ப்பாணத்துப் பண்டை வித்துவான்கள்

தேடரியப் பரராச சேகரன் செகராச

சேகரன் செயகேசரி

செப்புசின் னத்தம்பி நாவலன் சேனாதி

ராயமா முதலியார்சீர்

பாடரிய வரராச பண்டிதன் மயில்வாக

னப்பெயர்ப் பாவலனியாம்

பரவுசர வணமுத்து வித்துவான் வேன்முதலி

படிறில்சம் பந்தமைந்தன்

நாடரிய முத்துக் குமாரநா மன்சீர்த்தி

நாட்டுசங் கரபண்டித

னவிலுமிவ ரும்பிறகு மீண்டுசெந் தமிழ்நிறீஈ

நல்லிசை நடாத்துதமர்

தாடருமு பாயநீ தந்துதவ வந்தனஞ்

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 12

லீணாகானபுரவாசிகள் விசேடம்

சிவஞான சாதனம தாஞ்சைவ தீக்கைதஞ்

சேமநிதி யிற்கொண்டுளோர்

சிவபூசை செயுமுன் மருந்தேனு முட்கொளாச்

சீலர்சிறு விலைசிறிதிலார்

அவஞான மிலர்சைவ சித்தாந்த ஞானமே

யாருயிரி னோம்புமறிஞ

ரறுமுகத் தெந்தைந் தப்புரா ணம்பிறவு

மாண்டுக டொறும்படிப்போர்

நவமான விபரீத நடைகள்கிஞ் சித்தின்றி

நகுகணைக் காலுமொருவர்

நாடொணா நன்மான மனையோ ரொருத்தியொடு

நன்கில் லறந்நடவுவோர்

தவஞான தகவான பவமேனு மொன்றருடி

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 13

நல்லூர்ச் சுப்பிரமணியராலயம்

கொழிதமிழ்க் கொரவனாம் பரராச சேகரன்

குலமுத லமைச்சனாகிக்

குலவுபுவ னேகவா கிந்நல்லை தன்னிலொரு

குகனா லயஞ்சமைத்தான்

விழிதமிற் கண்டுளோர் மொழிசெவிக் கொண்டுளோர்

வீடிறுதி நான்குறுதியும்

விரவுமா திருமுருக னறுதலமொ டிந்நல்லை

விதியினேழ் தலமாமிவட்

கழிதகக் கருணைபுரி காரணத் தாற்கொலோ

கலியுகநல் வரதனானான்

கண்ணுறத் தேருற்ச வங்கண்டு தொழுதுளோர்

கண்டுளோர் பிறவிக்கரை

தமியவத் துவசுத்தி போலுமித் தரிசனஞ்

சாந்தா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 14

ஆறுமுகநாவல சற்குரு

ஆறுமுக நாவல னெனுஞ்சபாப் பிரசங்க

சிங்கமிங் கவதரித்த

தாருமறி வாரவன தறிவொழுக் கங்கல்வி

யறிகிலார் யாதுமறியார்

தேறுமுக மொன்றிலேற் கறிவுசிறி தருள்செய்த

தேசிகோத் தமனுமிவனே

செந்தமிழி னூலுரைக் டந்ததிங் குரைசெயக்

சேடனான் முடிவதாமோ

நீறுமுக முறுவித் தருங்கண்டி கைக்கலனி

னேயமிகு வித்தெங்கணு

நிகமாக மம்பூசை நிலைநீறிஇ விட்டதிவ

னிமலப்ர சங்கநிதியே

சாறுதனு மாதத்தி னிற்பத்து வீறவருள்

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 15

திருத்தொண்ட ரைச்சிவமே னக்கொண்ட வன்சைவ

சித்தாந்த சிகைகண்டவன்

சிவகாம சுந்தரி சபாநடே சன்பாத

சீர்த்திகளெ லாம்விண்டவன்

உருக்கொண்ட புண்ணியத் துயிரனான் றன்பெய

ருரூடியாக் கொண்டவுழவன்

உயர்தரத் தருமகல் லூரிபல் லூரினு

மொழுங்குற நடாத்துத்தமன்

செருக்கொண்ட யேசுமத மேங்குபு திடுக்கிடத்

திறல்கொண் டடர்த்ததீரன்

றிவ்யசிவ பூசா துரந்தரன் சமயகுரு

சென்மசை வத்துறவிதீத்

தருக்குண்ட துர்ப்படா டோபநா வலரல்லர்

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 16

பொன்னம்பலப்பிள்ளை யவர்கள்

பொன்னம் பலப்பெயர்ப் புட்கலா வர்த்தம்

புராதன நியாயோததி

புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயணப்

பொருவறு மளக்கர்புவியிற்

றுன்னித் துலங்கிமலி சூதனொலி மாலையாந்

தொல்பயோ ததிகாவியத்

துங்கவார் கலிபார தப்பரவை லக்கணத்

தொடுகல்டல்க டுய்த்தெழுந்தே

மின்னித் திடுக்கிட விடித்தியாழ்ப் பாணகிரி

மீதேறி நல்லைமுடிமேன்

மேவிப் படிந்துசெந் தமிழ்மேதை நிதிமாரி

மிகவும் பொழிந்திட்டதிச்

சன்மத்து வித்தியார்த் திப்பயிர் தழைத்திடச்

சாந்தநா யகிசமேத

சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே

சந்த்ரபுர தலவாசனே. 17

கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார்

1860 - 1930

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொக்குவில் வாசியாசிய கந்தப்பிள்ளை என்பவரின் புதல்வர். மன்னார் மாவட்டத்திலுள்ள இலுப்பைக்கடவையில் ஆசிரியராக விளங்கியவர். அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார்,சுப்பிரமணியர், வைரவர் என்னுங் கடவுளர் பேரில் விருத்தங்களும் ஊஞ்சற் கவியும் பாடியவர்.

இலுப்பைக்கடவை கட்டாடிவயல்

பிள்ளயார் விருத்தம்

வந்தா னருளுகட் டாடி வயல்தனில் வாழ்வுதரத்

தந்தா னெனக்கருள் சங்கர னார்முதற் றந்தமைந்தன்

சிந்தா குலந்தவிர்த் தென்றனை நன்னெறி சேரவைத்தான்

செந்தா மரைநிகர் பாதங்க ளென்நெஞ்சிற் சேர்த்துவனே.

சீரணி முகுந்தற்கு நேயமரு காவுனது

திருவடி நினைந்த பேர்க்குச்

சிவலோக பதவியரு ளமலனே விமலன

செங்கரக மணி மார்பனே

தாரணியி லுனதுபுகழ் ஓதவறி யேனேழை

சர்வசம் மதமு மாக

தந்தையென வந்தென்மன திற்குடி கொள்ளுமாய்

தற்பரா னந்த வடிவே

காரணியு மேகங்கள் மழைபொழிய வருள்செய்து

கட்டாடி வயல் தன்னிலே

கருதினோர் சிந்தைகுடி கொண்டுறையு முன்னவா

கயமுகன் றனைவ தைத்து

வாரணியு மிருகொங்கை குறமாது முன்கும்பி

வடிவமாய் வந்த முதல்வா

மனமகிழ்வொ டினிதுவளர் புளியமர நிழலிலுறை

வாரண முகக் கடவுளே. 2

கந்தமுறு மாலைபுனை இந்திரன் விரிஞ்சன்மால்

கருதரிய தேவர் கூடித்

கடலைபொரி பயறவல் இளநீரு மெட்பாகு

கற்கண்டு சர்க்கரை யுடன்

சிந்தைகுளிர் முப்பழம் பால்சீனி மோதஞ்

சிற்றுண்டி தோசை வடையுஞ்

சித்தமகிழ் வோடுவைத் தர்ச்சனை புரிந்தபேர்க்குச்

சீர்கிருபை செய்த பரனே

விந்தைபெறு கட்டாடி வயலுளோர் செய்பூசை

மேலாக வேம தித்து

வேண்டியதை வேண்டுவோர்க் காங்காங்கு நீயருளி

மேலான பதவி நல்கி

மந்தமுறு மென்மனதில் வந்துகுடி கொள்ளுவாய்

மதகரி முகத் தண்ணலே

மனககிழ்வொ டினிதுவளர் புளியமர நிழலிலுறை

வாரண முகக் கடவுளே. 3

கன்னலொடு செந்நெல்வளர் கட்டாடி வயல்தனிற்

கஞ்சனொடு மால்து திக்கச்

கந்தமுறு களபகஸ் தூரிபுனை மார்பனே

கருணைகுடி கொண்ட வடிவாய்

தன்னொருவர் நிகரிலா வள்ளலே காமாட்சி

தந்தசிவ ஞான ரூபா

தாரணியி லுன்னைவிட வேறு முயர்வுபெறு

தலையான தெய்வ முண்டோ

அன்னமொடு கிள்ளைகுயில் கூவமயி லாட

அரம்பையர்கள் வாழ்த் தெடுப்ப

அளியுடன் கந்தருவர் நாகரொடு விஞ்சையர்கள்

அமுதவிசை யாழில் மீட்க

வன்னநிற மான்மரைகள் ஆவினமும் மேதியோடு

மந்திகுதி பாய்தல் கண்டு

மனககிழ்வொ டினிதுவளர் புளியமர நிழலிலுறை

வாரண முகக் கடவுளே. 4

இலுப்பைக்கடவைக் கட்டாடிவயல்

சுப்பிரமணியர் விருத்தம்

திருவுற்ற சோலைசூழ் வனமாத ரொருபுறம்

தேவர்க ளொருபுற மதாய்

தித்தியொடு மத்தளத் தாளமொடு வீணைபயில்

சித்தர்க ளொரு பக்கமாய்

மருவுற்ற நவசத்தி தருமைந்தர் ஒருபக்கம்

வயிரவர்க ளொர பக்கமாய்

வந்ததொரு கணநாதர் தாமுமிரு சுடர்களும்

மருவியிரு பக்க மேவ

திருவுற்ற இந்திரனொ டயன்மாலு நிருதியும்

சேர்ந்திரு புறத்து மாக

தையலொரு குறமாது மனமகிழ வருள்கொண்டு

தாரணியில் வந்தி ருந்து

கருவுற்ற முகில்கள்மழை பொழியவருள் செய்து

கட்டாடி வயலில் வந்த

கந்தனே மாமயிலில் ஏறிவரு சண்முகா

கதிரைமலை மேவு குகனே. 5

பச்சைமயி லேறிவரு பவனியு மாலைபுனை

பன்னிரு புயத்தி னழகும்

பாதச் சிலம்பினொடு கிண்கிணியி னோசையும்

பன்னிரு திருக்கண் களும்

கச்சையணி வாளுடன் இச்சகம் புகழ்வேலுங்

கரந்தனி லிருந்தொ ளிரவும்

கண்டசர மாலையுங் கைதனிற் படைகளுங்

காதினிற் குழையி னொளியும்

மெச்சுதற் கரிதான பூணூலு மரைஞாணும்

விலைபெற்ற பட்டு டையுமாய்

வேதங் களுக்கெல்லாம் மூலகா ரணமாகி

வெய்யதொரு சூரை வீட்டிக்

கச்சையணி யிருகொங்கை குறமாது மனமகிழக்

கட்டாடி வயலில் வந்த

கந்தனே மாமயிலி லேறிவரு சண்முகா

கதிரைமலை மேவு குகனே. 6

அல்வைக் கணபதிப்பிள்ளை

- 1930

இவரது ஊர் அல்வாய். தந்தையார் பெயர் வேலாயுதம். தும்பை முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் இவர் கல்வி கற்றவர்.

இவரியற்றிய நூல் ஈழமண்டல சதகம்.

ஈழமண்டல சதகம்

காப்பு

ஐந்துகரத் தந்திமுகா வைந்துமுகத் தோற்குமுனம்

வந்தவா தேவாதி வானவா-சந்ததமு

மீழவள நாட்டி ளியல்பிங் கியல்புகவி

வாழவருட் கண்வழங்க வா.

நூல்

அண்டரிற் போகி நதியிற்கங் காநதி யாமலரிற்

புண்டரி கந்நற் றபோதன ரிற்றேர் பொதியமுனி

வண்டமிழ்ப் பாவில்வெண் பாப்போல வுத்தரம் வாய்ந்தவெல்வா

மண்டலந் தம்மினு மிக்கதொன் றீழநன் மண்டலமே. 1

காமாரிக் கன்புவைத் தாள்கூடற் பார்பனி கண்ணெனுந்தன்

னேமார் கொழுநற்கிங் கேமாலை சூட்டிய வேல்பதனாற்

றேமாம் பொழிறிதழ் பாண்டிநன் னாடு திருந்துறுநன்

மாமா வெனச்சொல்ல நின்றது மீழநன் மண்டலமே. 2

கண்ணிற் கருத்திற் புகுத்தவொண் ணாக்கரு ணாகரனை

யெண்ணிற் புகுத்து புனனாடன் கேட்ப பிராவணனை

விண்ணிற் புகுத்து ரகுராமன் சீர்முற்றும் வேட்டகம்பன்

மண்ணிற் புகுத்தமுன் வைத்தது மீழநன் மண்டலமே. 3

அவநா டிலாத தசக்கிரீவ னென்னு மவனிபனும்

பவநீ டிலாதவவ் வீடணன் றானும் பராபரபுங்

கவனேடி நல்லருள் பூப்பக் கருத்தி னொடுமமைந்த

நவகோடி லிங்க ந­இயது மீழநன் மண்டலமே. 4

மாணிக்க கங்கை

சீரணங் கொன்ற நடிப்பான்முன் னாட்டந்த தேக்கடப்பந்

தாரணங் கொன்றம் புயத்தான் றலத்துத் தருநர்பவம்

மாரணங் கொன்ற வதிதரு மாணிக்க மாநதியும்

வாரணங் கொன்றம் முலையாய்மற் றீழநன் மண்டலமே. 5

மூனிச்சுரம்

நீண்டான் புவனிக்கு முன்போற்று நின்மல னீள்பதத்தை

வேண்டான் பணிபுரியான் றுணியானெங்ஙன் பின்புகுமோ

வாண்டான் மறைநான் கெனவகுத் தான்குறை யானவெல்லாம்

மாண்டா னொருவன் முனீச்சுர மீழநன் மண்டலமே. 6

நல்லூர்க் கந்தசாமிகோயில்

காவைப் புகுந்தகண் ணாயிரத் தோன்முத லாங்ககன

ராவைப் பிகந்தன மென்றாவ லிக்க வறன்வடிவாஞ்

சேவைப் புகந்தவ னீந்தசெவ் வேல்கொடு தீயவெஞ்சூர்

மாவைப் பிளந்தவ னல்லூருக்கு மீழநான் மண்டலமே. 7

நயினை நாகபூடணியம்மை கோயில்

முன்னமொர் கோவணந் தட்டினி லிட்டு முயன்றடிமை

தன்னை மதிக்கச்செய் தோன்றில்லை வாழுஞ் சபேசனிடந்

துன்னி யொளிரு மொருநாக பூடணி தொல்லைமுன்னாண்

மன்னத் தவஞ்செய் நயினையு மீழநன் மண்டலமே. 8

நெடுந்தீவு

சேயூ ரமர்கொண்ட நாட்டா னுழவன் றிருந்தரவப்

பாயூருங் கண்ணற் கரியா னொளியரும் பதாம்புயத்தை

யேயூருந் தஞ்ச மெனுந்தனி நாயக னேங்குகடல்

வாயூரு மம்ம நெடுந்தீவு மீழநன் மண்டலமே. 9

பரராசசேகரன்

நரரா சனமென்னத் தின்னும்வெந் நோயை நவியமுதைத்

திரராச நூலின் வகுத்தே தெரித்த திறனிலவும்

பரராச சேகரப் பார்த்திவப் பேர்கொளும் பண்டிதனாம்

வரராச சிங்கமு மம்மம்ம வீழநன் மண்டலமே. 10

செகராசசேகரன்

இகவாழ் வினுக்கும் பரவாழ் வினுக்கு மெழிற்கணெனத்

தகயா வருங்கைக் கொளுஞ்சோ திடத்தைச் சகமுறுத்தச்

செகராக சேகரப் பேர்கொண் டவனி திருத்துசெங்கோன்

மகராச சேகர மன்னனு மீழநன் மண்டலமே. 11

தில்லைநாதத் தம்பிரான்

திடமா மனத்தன் சிவயோகி யாந்தில்லை நாதனெனப்

படமா லிகந்த பெரியோன் வரணிப் பதித்தம்பிரான்

விடமார் களத்தனெம் மாரூர்த் தியாகன் விழாக்கிரத

வடமா குவடு தொடுத்தான்முன் னீழநன் மண்டலமே. 12

கடையிற்சாமி

குடையிற் றனிவளர் பூபாலர் யாவருங் கூர்ந்துருபெண்

னடையிற்சமாதிடைந்தான் மெய்ஞ்ஞானிநளிர்நறுஞ்சேயம்

படையிற் றுளியெனப் பற்றோவு தெய்வ வருட்கடலின்

மடையிற் கடையிற் சுவாமியு மீழநன் மண்டலமே. 13

யோகர்

பண்ணுக் கனிந்தசொற் பாவைய ராமுதற் பற்றொன்றின்றி

விண்ணுக் கணிய விருவா தனையற்ற வேந்தனருங்

கண்ணுக் கினிமை தரும்யோக சாமிமென் கான்மலரி•

மண்ணுக்க தூளென் றலையாங்கொ லீழநன் மண்டலமே.

திருமறைக்காட் டாதீனகர்த்தா திருஞானசம்பந்த தேசிகர்

கருவா ருயிர்கடைத் தேறமுன் னோன்முன் கலந்தவருட்

டிருவா டளிவருங் கேதாரத் தான்றன் செழுமரபா

னொருவா வரணிநல் லாதீனத் தானொளி ருத்திருமுன்

வருஞான சம்பந்த தேசிக னீழநன் மண்டலமே. 15

பூதந்தேவனார்

பொருபூதங் கொண்டநக் கீரன்முன் னாய புலவர்க்கெல்லா

மொருபூதந் தொன்ற விருந்தாகப் பாடலுய்த் தான்சங்கம

மருபூதந் தோய்ந்த மதுரா புரியினின் வண்டமிழ்தேர்

வருபூதம் தேவனும் வாழ்வான தீழநன் மண்டலமே. 16

முத்துக்குமார கவிராயர்

எத்துக்கு நாலுகை பல்காற்சொல் லாட விரும்பொழிற்பூங்

கொதுக்கு மந்தி யினமிசை பாடிக் குலாவுசுன்னை

முத்துக் குமார கவிராய• பாடலென் மூதருஞ்செல்

வத்துக்கு வாய்ந்தபொன் மண்டல மீழநன் மண்டலமே. 17

சின்னத்தம்பிப் புலவர்

அறைசெயும் வண்டு படிகாநல் லூர னருங்குணமே

யுறைசெயும் வில்லவ ராயன் புதல்வனம் மோம்புமில்ல

முறைசெயும் வாசலிற் கொன்றை மரமென்ற மூதறிஞன்

மறைசையந் தாதி வகுத்தானு மீழநன் மண்டலமே. 18

ஆறுமகநாவலர்

தண்டமி ழாறு முகநா வலனெங்கள் சற்குருவாங்

கொண்டல் பொழிந்த பிரசங்க மாரி குறுகியப்பால்

அண்டமுன் புக்கது பாதாளம் புக்க தஃதன்றிக்கன்

மண்டலம் புக்க திசைபுக்க தீழநன் மண்டலமே. 19

பொன்னம்பலப்பிள்ள

கணியமு னாறு முகநா வலன்மரு கன்கதித்த

திணிய வுதகத் தமிணாடு முற்றுந் தெரிந்தெடுத்த

வணிய லெனக்கொண் டொளிரும்பொன் னம்பல வித்வசிரோ

மணியைமுன் கொண்டு குதிகொண்ட தீழநன் மண்டலமே. 20

அம்பலவாண நாவலர்

1855-1932

இவர் வட்டுக்கோட்டையைச் சார்ந்த சித்தன்கேணி யென்னும் ஊரிலே ஆறுமுகம்பிள்ளை யென்பவருக்கும் சுந்தரவல்லியம்மைக்கும் புதல்வராகப் பிறந்தார். இவர் ம.க. வேற்பிள்ளையிடமும நீர்வேலிச் சிவப்பிரகாச பண்டிதரிடமும் இலக்கிய விலக்கணங்களைக் கற்றவர். பிரசங்கங்கள் செய்வதில் மிக வல்லுநர். திருவாவடுதுறை அம்பலவா தேசிகரால் இவருக்கு 'நாவலர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

இவரியற்றிய செய்யுணூல்கள் : அருணாசல மான்மியம், திருநாவலூர் மான்மியம், வேணுவன லிங்கோற்பவம், நாவலர் சற்குரு மணிமாலை முதலியன.

நாவலர் சற்குரு மணிமாலை

நாயேனை யாளவொர் மாநுடக் கோல நயந்துபெற்ற

தாயே யெனைநனி பாராட்டி யன்பிற் றழீஇயெடுத்து

மாயா வறியமு தூட்டினை யேயின்ப வாழ்வுறுவான்

கூயாளெம் மாறு முகநா வலசற் குருமணியே. 1

ஏத்தாத நாவு மிறைஞ்சாத் தலையுமெண் ணாதநெஞ்சுங்

காத்தாண்ட நின்னுருக் காணாத கண்ணுங் கருக்கடந்த

மீத்தான மாள்பொரு ளேயெளி யேற்கு விதித்தனையே

கூத்தாவெம் மாறு முகநா வலசற் குருமணியே. 2

நீறருட் கண்மணி யெங்கேபஞ் சாக்க நேர்மையெங்கே

வீறுயர் வைதிக சைவமெங் கேதமிழ் வேதமெங்கே

தூறிக் கலியிலெங் சீமானிந் நாள்வந்து தோன்றிலையேற்

கூறரு ளாறு முகநா வலசற் குருமணியே. 3

ஞான வொழுக்கம் வறந்ததுட் டக்கலி நாளில்வந்து

ஞான வொழுக்கப் பிரசங்க மாமழை ஞாலமெல்லாங்

கான னெப்பொழிந் தார்த்தா யருட்புட் கலாவர்த்தமே

கோனம தாறு ழுகநா வலசற் குருமணியே. 4

அடித்த டித்துவக் காரமுன் றீற்றிய வற்புதத்தைப்

பிடித்துய்கி லாரது கோபமென் றேசிலர் பேயருண்மை

விடுத்திறந் தார்தலை மேலெழுத் தார்தமை விட்டதந்தோ

கொடுத்தமெய் யாறு முகநா வலசற் குருமணியே. 5

அத்தா நினக்குத் தெரியுமன் றேசண்பை யந்தணர்முன்

கைத்தாளக் கோலத்தர் கல்லூரென் றோதிய காரணமென்

சித்தேபல் லாயிராக் கேவீடு கொள்ளை செறிந்ததென்சீர்க்

கொடுத்தாரெம் மாறு முகநா வலசற் குருமணியே. 6

மூன்றே பதார்த்தஞ்சுத் தாத்துவி தம்முடி வென்றுமுறை

தேன்றோய் மறைதந் திரமிரண் டும்மொத்துச் செப்புமுண்மை

வான்றோய் மெய்கட் வழிப்பய னாமென வாய்மைவைத்தாய்

கோன்றோயெம் மாறு முகநா வலசற் குருமணியே. 7

இருபாற் படுமவ் வொருபாலை வேட்டெம மியற்சண்பையா

ரிருபாற் படுவவ் வொருபாற் பொருளை யிறைஞ்சினரா

யிருபாற் படுமவ் வொருபான் மொழியை யெடுத்தொலித்தார்

குருபாற்கொ ளாறு முகநா வலசற் குருமணியே. 8

சூலையென் றுற்றது சூலையன் றேயது தொல்சிவத்தின்

பாலது வாய்வயின் பாலது வாயுரைப் பாலதுவாய்

வாலிய தென்றமிழிப் பாலது வாய்வந்த மாமறையே

கோவவெம் மாறு மகநா வலசற் குருமணியே. 9

விரித்த திருமுறை யீராறுஞ் சைவம் விளைநிலமே

பரித்தபன் னான்குசித் தாந்தமு மங்கட் பயில்விளைவே

தெரிந்த தமிழ்ப்புவிச் செங்கோ லரசு செலுத்திடவங்

குரித்தரு ளாறு முகநா வலசற் குருமணியே. 10

வெண்­றும் பொன்னொளி மேனியுங் கண்மணி வீறழகும்

பண்ணார் சிவப்பிர சங்கக் கொலுவும் பழுத்தபண்பு

மெண்ணார்நின் செம்முக மண்டல முந்நெஞ்சி ருத்திவைப்பாய்

கொண்­யெம் மாறு முகநா வலசற் குருமணியே. 11

நன்றே யுறுகமன் றீதே யுறுகவெந் நாயகமே

நின்றேய மார்சைவ தேசிகக் கோலமு நின்பெயரு

மென்றெயு மெள்ளள வும்மற வாமர மீந்தருளாய்

குன்றேயெம் மாறு முகநா வலசற் குருமணியே. 12

ஐயாநின் மெய்ச்செய லெல்லா மெமக்கிங் கருட்செயலே

யையாநின் மெய்க்கொலு வெல்லா மெமக்கிங் கருட்கொலுவே

யையாநின் மெய்ம்மொழி யெல்லா மெமங்கிங் கருண்மொழியே

குய்யாவெம் மாறு முகநா வலசற் குருமணியே. 13

திருவுமெய்ச் செல்வமுஞ் சீர்த்தியு மாயுளுந் தேசுமருள்

வருமுறை முத்தியுஞ் சித்தியு நின்சைவ மாமரபின்

மருவினர்க் கென்றும் வழங்குவிப் பாயருள் வான்முகிலே

குருமர பாறு முகநா வலசற் குருமணியே. 14

பிணக்குப் புறமத நூல்க ளொரீஇச்சிவம் பேணியதி

னிணக்குசித் தாந்த மரீஇச்சிவ சாதன மேன்றுகொண்டு

தணப்பில தீதப் பெருவாழ்விற் றொண்டர்தஞ் சார்புவெல்க

கணக்குல வாறு முகநா வலசற் குருமணியே. 15

திருவே யருட்செல்வ மேசிவ மேசிவ சிற்சுகமே

மருவே மருவின் மலரே மலர்க்கற் பகவனமே

கருவே யிரித்தெமை யாண்டிட நீயுருக் கண்டனையே

குருவேயெம் மாறு முகநா வலசற் குருமணியே. 16

நாகமணிப் புலவர்

1891 - 1933

இவரது ஊர் நயினாதீவு. அவ்வூர்க் கிராமசங்கத் தலைவராக ஐந்தாண்டுகள் இவர் கடமையாற்றியவர். இயற்கையாகவே பாடுஞ் சத்தி இவரக்கிருந்தமையின் 'வரகவி' என அழைக்கப்பட்டார்.

இவரியற்றிய நூல்கள்: நயினை நிரோட்டக யமகவந்தாதி, நயினை மான்மியம் என்பன.

நயினை மான்மியம்

புகார்ச்சருக்கம்

மதுரைமாநகரில் மாதரிமனையில் கன்னகி சிலம்பீதல்

வழுதி யார்மனை மங்கல மகன்றிட மதுரைத்

தொழுதி யாவணம் பொறிமக ளகன்றிடத் தொலையா

தழுதி யாவரும் விழிப்புண லகன்றிட வகற்றி

எழுதி யாயசித் திரமனாண் மகிழ்வுட னீந்தாள்.

கோவலன் சிலம்பினைக் கொண்டேகல்

வேறு

வைகும் பதி சுற்றத் தொடர் மனை யாளை யகன்றே

பைகொண் டசி லம்பொன் றொடு படர்வா னரு ளுறலான்

மைபொண் டுள வொருமூ வகை மலமற் றொளிர் போதங்

கைகண் டுல கற்றே புகு கடைஞா னிக ளொத்தான்.

பூவாண ரின் மறுகுந் துகில் புகல்வார் களின் மறுகுங்

காவாள் கணி மறுகும் புனை கந்தத் திகழ் மறுகுந்

நாவார் தரு முணர்வின் பொரு ணல்குந் தனி மறுகும்

பாவாண ரின் மறுகும் பல பலவா யின கண்டான்.

கோவலன் சிலம்பினைத் தட்டானிடங் கொடுத்தல்

மலை வைத்தநி திக்கொண் டொரு வாரங் கெடு வேதா

வுலை வைத்தவு ருக்கிற் பணி உருவந் தர வல்லோ

னிலை வைத்தன னொன்றுஞ் சிலம் பெனமன் னனை யேய்க்குந்

தலை வைத்தவன் உரைகற் றொரு தட்டா னெதி ருற்றான்.

வருவீ ரென வுரையா டினன் மணியார் தவி சிடைய

மருவீ ரிவண் வரல்யா தென வளமைக் குள மகிழாக்

கருவீ ரமு கிற்கே யுறழ் கைக்கோ வலன் மாறித்

தருவீ ரிஃ தெனவைத் துள தன்னூ புர மீந்தான்.

குன்றோ டிகல் வணிகர்க் கொரு கூற்றா யுள கரவோ

னொன்றோ துணை யுண்டோ வென வுதுவே யென வியவா

வென்றோ விது கண்டே னிதி லெனியே னிட ரற்றேன்

சென்றோ துவல் வருவா ரிது தேர்வா ரிரு மென்றான்.

தட்டான் பாண்டியனிடங் கூறுதல்

வஞ்சஞ் செறி நஞ்சம் புகு மாற்றந் தனை யேற்றான்

எஞ்சும் பரு வஞ்சென் றவ னிவணுற் றிட வவ­த்

தஞ்சுந் திற னெஞ்சின் றிய வாசா னுரை கூசா

மஞ்சஞ் செல வஞ்சந் திடு மன்னோ டிது சொன்னான்.

பொன் னூபுர முன்னா ளது போயும் பா நாளாய்

என்னோ வென வெண்ணா தவை யெல்லா மக முள்ளே

னின்னா ளிடை நன்னா ளென தெவனோ கொடு வந்தீ

துன்னா தெனை மாறும் படி யுற்றா னக மென்றான்.

பாண்டியன் கூற்று

பித்தாளர்கள் வெறியாயினர் பெண்பால்நகை வைத்தோர்

சித்தாள் பிணி யிடைமூழ் கினர் தேர்ந்தும் புகல் வாரோ

வித்தா ரம தேனூழ் புக வெட்டக் கொணர் கென்பா

னெத்தா ளனை வெட்டிக் கொண ரிந்நூ புர மென்றான்.

தண்டலாளருக்குத் தட்டான் சாற்றுதல்

சீற்றத் தொடு வந்தா ரெதிர் சென்றந் நகர் வேக

மாற்றற் றிடு தீசே ருலை வைத்தா னிவண் வைகுந்

தோற்றத் தவ னேநூ புர சோரன் றெரி வீரென்

றாற்றற் சின மோடா தின னவரிங் கிது புகல்வார்.

தண்டலாளர் கூற்று

அளிதங் கிய விழியா லுள வழகொண் றிய முகனா

னொளிதங் கிய நகையா லுட லுறுமென் பரி சதனாற்

களிதங் கிய வுரையா லிது கரவிங் கிவர் புரியார்

வெளிதங்கிய முறையால் வர விலைகொணடவர் போகலாம்

தட்டான் தண்டலாளருக்கு

விளக்கிச் சொல்லுதல்

எனவிங் கிவ ருரையா டலு மிழிஞன் சொலு மதியீர்

கனவங் கிக ளிடுவா ருரை கனியென் றிட மொழிவார்

வனசங் கலை மதியா மென வதனம் பக லுறுவார்

தினகங் குலி னெதிரா நகர் செலும்வஞ் சக ரிவரால்.

வையந் தனி யாளுந் திறன் மன்னன் பொரு ளோடே

கையுங் கள வுந்தந் தது காணும் மற வோர்நீர்

பொய்யன் றவ னோதும் மொழி போல புரி யீரேற்

செய்யுந் தொழின் மீண்டும் மிடை சேருந திட னென்றான்.

தண்டலாளர் கோவலனை அழைத்துச் சென்று

தலைவனாணையை நிறைவேற்றுதல்

வேறு

கூட லுண்டிடுந் தேவினுக் கிடுபலி குறிதர நடந்தோனீ

ராட லுண்டென விழிப்புனல் வியர்வுத னணியுட னனைத்தாகக்

கோடலுண்டகண்டகன்றுணித்திடுதலுங்குருதிவையகம்போர்ப்ப

வீட லுண்டனன் புரிந்தவெப் பிறப்பினும் விளைந்திட றவறாதால்.

கண்ணகியார் ஆய்ச்சிய€ரை வினாவுதல்

வேறு

வாட்ட முற்றனர் வாய்புதைத் தோதலும்

பாட்டி னிற்றனைப் பார்ப்பது மீப்துந்

நாட்ட முற்றவ ணாயகற் காண்கிலேன்

கோட்ட முற்றனன் கூறுதி ராலென்றாள்.

ஆய்ச்சியர் கூற்று

அம்ப லம்புக ணாயிழை மாதரார்

நொம்ப லம்புகு தாண்முக நோக்கிவாய்

வெம்ப லங்குரல் வீங்கிநின் னானையா

ளும்ப லம்பிழைப் பான்கொலைக் கோதினான்.

கண்ணகி புலம்புதல்

என்ற நஞ்ச மிருஞ்செவிப் புக்கதோ

பொன்ற யங்கு முரத்தினைப் போழ்ந்ததோ

அன்றி யாவி யடங்கினள் யாரையுங்

கன்ற வேகொ லுயிர்த்துக் கதறினாள்.

கண்ணகியார் முறையிடக் கதிரவன் தேற்றுதல்

கொள்வ தின்றித் கொலைபுரிந் தாரலாற்

கள்வ னோவென் கணவ னியாவையு

முள்வ தந்தெரி வாய்கதி ரோயென

வெள்வ ளாய்நகர் வேமென்ற வானமே.

கண்டோ ரேங்குதல்

சூல மின்று சுரிமுகப் பூட்கைமேற்

கோல மின்று குலங்களு மின்றுகட்

பால மின்றிவள் பத்திரை போலுமால்

ஏலு மொன்றென வேங்கின வூரெலாம்.

கண்ணகியார் கணவனைக் காணுதல்

வெய்ய தான வினைக்களத் தெய்தினா

டொய்யின் மார்பஞ் சுமந்தவன் றுண்டமாய்

வைய மீது கிடத்தலும் வாய்விடாள்

ஐய கோவென் றரற்றினள் வீடினாள்.

பூவி னன்மனைப் பொற்சிலம் பொன்றுகொண்

டாவி போயவற் காகி யவன்புடைத்

தேவி யென்றுந் திருவினுட் டீமைசெய்

பாவி யென்றும் பழிக்க படுவனோ.

என்று கொண்க னிருதுணி தொட்டுளா

ளொன்று கண்டெழுந் தோர்மொழி சொல்கென

வன்றி ரந்தன ளார்துயில் போயினான்

நன்று ணர்ந்தென நாயகன் மேயினான்.

ஆவி யாயவ ளம்பக மென்றுணைக்

காவி நீரிற் கரங்கொடு பூசிநின்

பூவி னார்முகம் பொன்றிய தென்றுவின்

காவி னாயினன் கற்பினொன் றுள்ளதோ.

கண்ணகியார் பாண்டியன் அவைக்களம் புகுதல்

ஒழிந்தவ னெழிந்திது மொழிந்தன னிறந்தது

முறுந்துய ரறிந்தி லளறா

வழிந்திடு சினந்தனி லிருந்திது புரிந்தவன்

வதிந்துழி பொருந்த வலெனாப்

பொழிந்தக ணொடுந்துகள் படிந்தமெ யொடுங்குழல்

புரிந்தலைய வும் பதியினூ

டிழிந்தெவரு மஞ்சிட வறந்தலை குனிந்தெதி

ரிரங்கிட வடைந்தன ளரோ.

புரந்தெற நெடுங்கதிர் கொணர்ந்தென விருந்துள

புலமபுறு புனைத்த மணிநூ

புரங்கொடு மணந்தவி லடைந்திடு மிரும்பசி

புகுந்தவள் புரைந்திட வழா

புரந்தவ னிருந்திடு மரங்குற நடந்தவள்

புரிந்துயர் புறங்கடை யகோ

புரந்தனை யணைந்தவ ணிசைந்திட விரைந்தனள்

பொருந்தழி புயங்க மனையாள்.

வழக்குரைத்தல்

மறைந்தவி ரிரும்பிறை யெனும்படி விளங்கிய

வளம்புவி கொளுங்கொடி யையோய்

குறைந்தநி னிலந்தவிர் சிலம்பெது பெறும்பரல்

குழன்றென வவன்ற ரளமென்

றறைந்தள விலங்கவ ரிடுந்தனெ கிழந்தனை

அறைந்தன ணிலம்பட வுடைந்

துறைந்தன சிவந்தரி பறந்தன சினந்தனி

லுறும்பொறி பறந்த தெனவே.

அரசன் ஆவி துறத்தல்

தெட்டுமணி யுற்றன தெறித்தலும் விழித்துணை

தெரித்தவ னளித்த மகனாற்

பட்டவ னடித்திட வெனக்கொதி கொதித்தடல்

பதைத்திட வெறுத்த வசமாய்

இட்டமுடி வைத்திடு மெனைத்திருட னிற்புகல்வ

திற்பழு திலைத்தகு மெனா

விட்டன னுயிர்த்தனைய வெட்டுவ னைக்கொணர

விட்டதென வக்கண மரோ.

எனக்கினி யனைப்பட வொறுத்தது பொறுத்தனை

இருத்திகொ லெனத்தழல் செறூஉ

மனக்கன லிடச்சிமி ளுறுத்தளி விசித்தென

வடக்கரு முகப்பட ரிடத்

தனக்கன தியைத்துகிர் நகத்தினி லெடுத்துள

சளக்கர முடிக்குதி யெனாச்

சினக்கணி னுறத்தலை திரித்தும துரைப்பதி

செலுத்தின டனைத்தெரி கிலாள்.

எரிந்தன கொடுந்திற னடைந்தவ ரிடம்பதி

இருண்டது புகைந்திட நிலஞ்

சரிந்தன கொடுங்கைக ளிடந்தன நெடுஞ்சுதை

தரும்பொறி யினம்பொன கரங்

கரிந்தன குலைந்திடு சனம்படு புலம்பொலி

கடந்தது கிடந்த நிரையா

னிரிந்தன சுரிந்தற விரிந்திடு கருங்குழ

லிலங்கணி யெறிந்த பொழுதே.

கறங்குறு குடம்பையு ளடங்கின வவந்திகை

கருங்குயி லடைந்தொழி வகட்

புறங்கடை மருங்குள சுணங்கன வலங்கொடு

புகுந்தன திரிந்தன முகட்

டுறங்கெலி தியங்கிம ணகந்தனி லிறங்க

விலும்புலி கவர்ந்தன செலப்

பிறங்கனல் வளைந்திட முளிந்தற விழைந்தவர்

பெறுங்கதி யறைந்தன வரோ.

வேறு

எண்ணருஞ் சோலைக ளியானை யாயின

கொண்ணல மறுகெலாங் குதிரை யாயின

கண்ணகன் மனையிடங் கழுகை யாயின

புண்ணுறு முயிரெலாம் புலியி னாயவே.

திரிவரத் துளமதச் சேவ காம்பலம்

பரிவரப் பில்லன பதைத்து வீழ்ந்தன

சரிவரச் சாமுனந் தடிவி ருப்பினால்

நரிவரத் தொடங்கின திசைக ணான்குமே.

பத்தினி மடந்தையர் பாலர் மூத்துளோர்

வித்தக மறையவர் விருத்த ராதியாய்

ஒத்தவ ரொழிந்திட வொழிந்து ளாரொடு

முத்தமி கூடலை யழலுக் கூட்டினாள்.

மதுரைமாதெய்வம் வருவது கூறல்

அன்னகர்த் தெய்வத மணுகி யாயையிக்

கொன்னகர்ப் புறந்தசெங் குன்று மேவியே

முன்னிரட் டிகொளெழு நாளை முற்றிநின்

மன்னுறப் புகுதிபொன் னுலகு மானமேல்.

குன்றேறி விண்புகுதல்

என்றது போகலு மினிதென் றேகியக்

குன்றினை மேவிமெய் குறைவு தீர்கிலாள்

மன்றவ னாயகன் வருகை நோக்கினாள்

பின்றிகழ் வார்குழற் பிடித்த நோன்பினாள்.

ஆவது காலையி லமரர் மாதரார்

பூவியன் மானமேற் பொலிந்து போந்திடுங்

கோவலன் றன்னொடுங் குறுக வாங்கதிற்

தேவுரு வாயினன் சேறன் மேயினாள்.

கண்டவர் கண்க­ர் கசிந்து வாழ்த்திடப்

பண்டவ றாதுவிஞ் சையர்கள் பாடிட

விண்டவர் பனியினீர் வீயொ டாட்டிடக்

கொண்டவ னோடுவிண் குறுகி னாளரோ.

சோமாஸ்கந்த பண்டிதர்

- 1936

இவரது ஊர் தாவடி. இவர் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடங் கல்வி கற்றவர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமை யாற்றியவர்.

இவர் பல நூல்களுக்குச் சிறப்புக்கவி வழங்கியுள்ளனர்.

கணேசையர் இயற்றிய இரகுவமிச உரைச்

சிறப்புக்கவி

பொன்னகை ரயோத்தி யாண்ட புரவலர் தம்மின் மிக்க

மன்னவ னிரகு வென்பான் மரபினை விளங்கக் கூறி

யன்னதை யிரகு வம்ச மாமென வாரி யத்திற்

பன்னினன் காளி தாச பண்டிதன் பாவ லோனே. 1

அப்பெருங் காப்பி யத்தை யரசகே சரியென் றோது

மிப்பெரும் புவியி ராச னிருந்தமி ழதனா லாய்ந்து

திப்பிய வமிர்த மென்றே திசையுளோர் செவிம டுப்பச்

செப்பினா னென்றுந் நின்று செந்தமிழ் சிறக்கத் தானே. 2

செந்தமிழ்ப் பாவி னாலே செய்தவிந் நூலின் மாடே

வந்தநுண் பொருளி யாவு மரபுளி விளங்கித் தோன்றச்

சந்தமா ருரையீ தென்று தமிழகஞ் சிறக்கு மாற்றாற்

றந்தனன் யாவ னென்னிற் சாற்றுவ னவனைக் கேண்மின். 3

மதுரையில் வைத்த சங்க மாசிக பத்தி ரத்திற்

சதரனாய்த் தமிழி ராம வவதார மாதி தர்க்க

முதிர்வினான் முறையே தீட்டு மூதறி வுடைய மேலோன்

மதியினி னுண்மை வாய்ந்தோன் மரபுளி நூல்க ளாய்ந்தோன்.4

நன்னகர் நல்லை யாறு முகவனா நாவ லற்கு

மன்னிய மருகன் வித்வ சிரோமணி மதியி னான்ற

பொன்னவ னனைய பொன்னம் பலவனாம் புலவன் றன்பா

லென்னுட னிலக்கி யத்தோ டிலக்கண மினிது கற்றோன். 5

சுன்னைவாழ் குமார சாமிச் சொற்றமிழ்ப் புலவன் பாலு

மன்னமாண் கலைக ளெல்லா மரிறபத் தெரிந்த செல்வன்

புன்னைவாழ் பூசு ரர்க்குட் புண்ணியப் புருட னான

நன்னயச் சின்னை யர்க்கு நற்றவப் புதல்வ னானோன். 6

மாசிலா மறைவ லாளர் மணியென வந்து தோன்றி

யாசில்சித் தாந்த நூல்க ளமைவுட னாய்ந்து முள்ளோன்

பூசிதன் குணத்தின் மேன்மை பூண்டிடும் புனித னானோன்

காசிப கோத்தி ரத்தோன் கணேசபண் டிதன்றா னன்றே. 7

குமாரசுவாமிப் புலவர் மீது பாடிய கையறுநிலை

முன்னர்த் தமிழ்தெரி முச்சங்க நூல்கள் முழுதுணர்ந்தே

பின்னர்த் தமிழ்தெரி சங்கப் புலவர்கள் பேணநின்ற

சுன்னைக் குமார சுவாமிப் புலவவுன் றூலவுடன்

மின்னுற் றழியினு நின்புக ழென்றும் விளிகிலதே. 8

முத்துக்குமாரசாமிக் குருக்கள்

1853 - 1936

இவரது ஊர் புலோலி. தந்தையார் பெயர் மகாதேவ ஐயர். இவர் உடுப்பிட்டிசி சிவசம்புப் புலவரிடங் கற்றுத் தேர்ந்தவர்

இவரியற்றிய நூல்கள்: பசுபதீசுரர் அந்தாதி, சிவ பெருமான் அலங்காரம் என்பன.

சிவபெருமான் அலங்காரம்

போங்காணு மிவ்வுயிர் போனபி னிந்தப் புலையுடலம்

வேங்காணுந் தீயினல் வெண்பலியாகவெறம் பெருமபொய்

யாங்காணு மிந்தப் புரைவாழ்வு போத வகமகிழ்ந்து

நாங்காணு நங்கள் பெருமானைப் பாடுது நாடுதுமே. 1

நிரேறு வேணிச் சிவபெரு மான்மிசை நேயமுட

னேரேறு நல்லலங் காரந் தமிய னியம்புதற்கு

நேரேறு மன்பர்க ணெஞ்சத்து ணின்றரு ணின்மலநற்

காரேறு மத்தக் களியானை முன்னின்று காப்பதுவே. 2

ஐங்கர முன்னவன் றந்தா யமலை யமரொருகூற்

றங்க படிக நிகர்ஞான மேனி யமலசுர

துங்க தவன்றுயிர் துன்பந் துடைக்குந் துரந்தரனீ

பங்க முறாது பரிந்தெனைப் பாலனம் பண்ணுகவே. 3

சிற்றம் பலவன் செழுங்கயி லாயன் சிறந்தவன்பர்

குற்றஞ்செயினுங்குணனாக்கொள் கோதிலி கோட்புலியைச்

செற்றங்கொ டன்றுரி தீரன் மலைவளர் செல்விவரன்

பெற்றம் பரிகொள் பெருமா னுயிர்க்கருள் பேரிறையே. 4

காலனுக கஞ்சிக் கழலடி பேணிய காதலுறு

பாலனுக் கன்று பெரிதருள் செய்தற் பரவொளிகூர்

வேலனுக் கைய நினையே துதிசெய் விருப்புடையேன்

மாலனுக் கங்கொளு மப்போ துமையுடன் வந்தருளே. 5

நீங்கிய நீதி நிசாசரர் தம்புர நீடழகு

வீங்கிய மேனி மதன்புற மாசவி லோசனத்தி

னோங்கிய தீயிட் டெரித்தார் தமியற் குதவுவரே

லேங்கிய தீயின் மெழுகாய் வினைக ளிகலறுமே. 6

ஐயா வுனையிங்ஙன் வேண்டுகின் றேனன் றவுணர்புர

நொய்யாக வெந்தப லூட்டினை யந்தக னோன்மைகெட

மெய்யாக நின்பத மேத்தவெண் ­று விழையவண்மை

பொய்யாத வைந்தெழுத் தெண்ணநற் போதம் புரிந்தருளே. 7

எந்தையிங் கியான்படு மின்னலை நோக்கி யிரங்குகிலை

முந்தைய வெவ்வினை மாகட னீந்த முயன்றுநினைச்

சிந்தைசெய் தேத்திப் பணிவேற் குயரருட் செல்வமளி

தந்தைய லான்மைந்தர் துன்பந் துடைத்தெவர் தாங்குவரே. 8

செம்மையன் புற்றழு தம்மேயப் பாவென்ற சீர்மகற்குக்

கொம்மை முலையமு தூட்டருண் மங்கையொர் கூற்றிறைவ

வும்மையி னன்மைகொள் புண்ணிய முண்டுகொ லுன்னடியை

யிம்மையி லிங்ஙன மேத்துகின் றேனினி யிங்கருளே. 9

உடல்பொரு ளாவி யெனுமூன்று மிங்கினி யும்மளவே

கடல்கெழு பாரிற் பிறப்பஞ்சி நின்று கலுழுகின்றே

னடல்கொள் வினைத்திற மார்தறு நீயிங் களியனைக்கை

விடலரி காணரு நின்பதம் பேணும் விருப்பருளே. 10

சத்தார் புகழடி சார்ந்தவற் காகச் சதுர்மறையாந்

தத்தார் புரவி தனையூர்ந்து வந்து தளர்வகற்றிக்

கத்தார் கலியுல குய்யநின் னாரருள் காட்டினையா

லத்தா வடிய னலந்தே னயர்விங் ககற்றுவையே. 11

எல்லா வுலகு மொருதனி யேபெற்ற வின்னமுதச்

சொல்லா ளொருபுடை சாரவைத் தாயன்பர் தொல்வினையூழ்

செல்லாது சேவடி யீந்தரு ளீச சிவக்கொழுந்தே

கொல்லாது கொல்லும் வினையினி யாரிடைக் கூறுவனே 12

கானவ னாகிமுற் காண்டீவ னோடு கடுந்திறல்செல்

மானவ நாகிவ வேனக் குருளை மகிழ்வுறுதா

யானவ நாகின் குழையாய் மலரொளி யங்கிநிகர்

மேனவ னாகிளர் பேரருள் வேண்டினன் மேவினனே. 13

வில்லவ னுக்கு மதிமலிப் பாடல் விரும்புமிசை

வல்லவ னுக்கு நனிபொரு ளீய வரைந்தனுப்பு

நல்லவ னுக்கு நலிபிரு ­ககறு நல்லொளிகூ

ரெல்லவ னுக்குப் பணிசெயின் வெவ்விரு ளேகுறுமே. 14

வீழாமை வேண்டும் பிறவிக் கடலிடை வெவ்வினைகள்

சூழாமை வேண்டுஞ் சுழதாமை வேண்டந் தொலைந்தலைந்து

தாழாமை வேண்டுந் தளராமை வேண்டுந் தருப்பமுறு

கீழாமை வேண்டுங் கரியோடு வேண்டிய கேடிலியே. 15

கங்கம் படர்புகழ் கந்தனைத் தந்து கலங்கிமையோர்

பங்கம் படர்பழி யாவையு நீத்தவ பண்டநர

சிங்கம் படவென்ற சிம்புட் படிவநற் சீரிமையோ

ரங்கம் படவகி பூடண விங்கு னடைக்கலமே. 16

போதக மென்றுணைப் பாதர்தம் போதம் புகுந்துளதேற்

பாதக மென்செயு மோதரும் வெவ்வினை பாவிநின்ற

தோதக மென்செயு மென்செயுங் கூற்றன் றொடர்கயிறு

சாதக மென்செயுஞ் சாவும் வராது சரதமிதே. 17

நல்லார்க ணாடப் பொலம்பொது வாடல்செய் நாதனக

வில்லா னிரசித சைலமில் லாக விழைந்தபரன்

கல்லானை கன்ன னசையோடு தின்னக் கருதியவ

னெல்லாம் புரிதர வல்லா னெவர்க்கு மிறையவனே. 18

தாவர சங்கம வாருயிர்க் காருயிர் தாட்கமலப்

பூவர சங்கம னீய மொழிபதி பூரணனே

தேவர சங்க மணியோ னயன்புகழ் தேவவெனைக்

காவர சங்க மளித்தருள் கண்ணுதற் காரணனே. 19

மானே றுயர்த்தரு ளாரியை பாகங்கொண் மான்றிருமா

லானே றுயர்த்த வருள்வாரி வேதத் தரியபொருள்

மீனே றுயர்த்தவன் றீய விழித்தவன் மேனியெழில்

வானே றுயர்த்த மகவானு நோக்கி வகுக்கலனே. 20

பாலங்கொள் செந்தழற் கண்ணாரை யேத்திப் பகர்வரிய

சீலங் கொளமன்னு சித்திபெற் றுய்வது சீர்த்திகொலிஞ்

ஞாலங் கொளநின்று நாய்போ லலைந்து நமன்கயிறு

சூலங் கொளக்கண் டயர்வது சீர்த்திகொல் சூழுமினே. 21

நலம்புனை யார்வ நிறைமனத் தானன்று நாடியொரு

குலம்புனை பூச லடியார்க ணோவடி கோலியிந்தத்

தலம்புனை கோயில்செய் வேந்தர்க ணோநந் தனிமுதல்வர்

புலம்புனை நண்பர முற்புகு மார்வம் புரிந்தனரே. 22

சிலையினை யன்று சிலையாக்கொள் வீரரைச் செய்யவன்பு

வலையினை யிட்டிங் ககப்படுத் தாது வருந்தியருங்

கலையினைக் கற்றுந் துதியாத நாவினைக் கண்டிறைஞ்சாத்

தலையினை யேன்படைத் திட்டா னலர்கொள் சதுர்முகனே. 23

மருந்தே யருமைகொள் வாழ்வேயென் செல்வம் வளர்விழிக்கு

விருந்தே யெனநின்ற வெந்தா யருளின் விழைவிளைவே

முருந்தே யெனுநகை மூர வரும்பு மகிழ்முலையோ

டிருந்தோ யெனதுளத் தென்மெஞ் சாக்கதி யீந்தருளே. 24

அவ்வியம் பேசுவ ரூனுண்பர் தம்மை யடுத்தவுயிர்

வெவ்விய காதகஞ் செய்குவர் நாய்நரி வெங்கழுகு

வவ்விய நின்ற புலையுடல் பேணுவர் வாழ்வருளுஞ்

செவ்விய பாதரைப் போற்றவுன் னார்கடஞ் சிந்தையுள்ளே. 25

பாணியின் மன்னிய மானீ ருவகைகொள் பண்புறுமோ

தோணியின் மன்னு கவுணியர் நான்மறைத் தூயதமிழ்

வாணியின் மன்னு நசையீர் விபஞ்சி வளரிசைகொள்

சேணியின் மன்னவர் பாடிசை யீரென்சொல் செஞ்செவிக்கே. 26

தூக்கார நின்ற கனக சபாநடத் தூமணியைத்

தேக்கார நின்றிட்ட தும்பிநற் போதந் திருந்துமன்பா

னோக்கார நோக்கித் தலையாரத் தாழ்ந்து நுவலருஞ்சீர்

வாக்கார வேத்தி வழிபட லேபெரு மாதவமே. 27

தோன்றாத் துணையைத் துகடீர் சுபோத சுகவிளைவை

யீன்றாளு மப்பனு மேத மிலாநல் லினத்தவரு

மேன்றார மன்னுமெ னாவியு மான விறையவரை

நான்றானிந் நாளு மறியாத தென்ன நகையிதுவே. 28

தம்பிமுத்துப் புலவர்

1857-1937

இவரது ஊர் அச்சுவேலி. இவர் நல்லூர்ச் சுவாமி ஞானப்பிரகாசரின் உறவினருள் ஒருவர். அச்சுவேலியிலே 'சன்மார்க்க விருத்திச் சங்கம்' என்னும் பெயரிய சங்க மொன்றை அமைத்து நற்கருத்துக்களை மக்களிடையே பரப்பி வந்தவர். அச் சங்கத்தினர் நடத்திய 'சன்மார்க்க போதினி' என்னும் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர்.

இவரியற்றிய நூல்கள் : சன்மார்கவந்தாதி, சந்மார்க்க சதகம் முதலியன.

சன்மார்க்க வந்தாதி

புழுவும் மலமஞ் சலமுஞ் சளியும் பொருந்துமிந்தக்

கழிவுள்ள பாழுடம் பைப்பேணி யென்பலன் கண்டனையே

அழிவுற் றிடுபவர் தம்மைகண் டேனு மறம்புரியத்

தெளிவுற் றிடுமனம் வாராத தேது தெரிந்திலையே. 1

ஈனம தாய்வலி பேசியுல் லாச வினிமையுற்றும்

மேனி மினுக்கியும் வீரமொ டுஞ்செலும் வீம்பர்களே

கூனித் தடியும் பிடித்தே யடிக்கடி குந்திக்குந்திக்

கானில்விழுந்துந்தவழ்ந்துஞ் செல்வோர்களைக் கண்டிடுமே. 2

சன்மார்க்க சதகம்

ஏவுத லிலாமலே தேனீக்கள் மதுவினை

யெடுத்துத் திரட்டிவைக்கும்

எறும்புகளும் வேறோன்றி னேவுத லிலாதபடி

யிரைதேடி வந்துசேர்க்கும்

காவல்புரி நாய்களெச மானையறி யாதுவரு

கள்வர்தமில் வள்ளெனவருங்

காத்திருந் தூர்ச்சமதி பார்த்துநல முலவுசெங்

காந்தளது புட்பித்திடும்

சேவல்களு நேரம தறிந்தமுறை யேயொருவா

செப்பிடா மற்குவிடுஞ்

சிறுவருந் தாய்தந்தை யுரைபகரு முன்னமே

செய்வதை யறிந்துசெய்தற்

கோவிலங் கிடுபுவியி லீதுநிகர் பாக்கியங்

கூறிடுகி லில்லையெனலாங்

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூற்றமுறு பெரியோர்களே. 1

சந்தன மரத்தருகு தன்னிலுறை நிம்பமுந்

தக்கவா சங்கொடுக்குஞ்

சவாதுபுனு குற்றிடும் பைக்குட் டிணித்திட்ட

சாணியுங் கமழ்வுற்றிடும்

கந்தமுறு பூவினைக் கட்டுசிறு நாரிலுங்

கருதுமண மதுநிறைவுறுங்

கடியவிர சத்துடன் சேர்த்திட்ட வங்கங்

கரைந்துமரு விச்சேர்ந்திடும்

விந்தையுறு பரிதியின் சுந்தரக் கதிர்பெற்ற

வெண்மதிய மொளிபெற்றிடும்

விரைமருவு சந்தன மரைத்தசிறு கல்லும

விரும்புவா சம்பொருந்தும்

குந்தமுறு துர்க்குணர்கள் சற்குணர்க ளொடுநிதங்

குலவிடிற் குணமுறுவரே

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்களே. 2

மிஞ்சுபிர யாசையொடு பயிர்செய்ய மாடுகள்

விரைந்துசென் றேயழிக்கும்

வீடினைப் பாடுபட் டுக்கட் டிடசற்று

வேளையிற் றீயழிக்கும்

குஞ்சினுக் காய்கோழி முட்டையைக் காத்திடக்

கொடுமரவு சென்றழிக்கும

குயவனும் பலநாள் வனைந்தமட் கலமதைக்

கொடியதடி நொடியழிக்கும்

மஞ்சுலவு புவியினி லெறும்புகுழி தோண்டமழை

வாரியது சென்றழிக்கும்

வல்லமையி னோடுபல நல்லபுத் திகடம்மை

மகவினர்க் குப்புகட்டிக்

கொஞ்சியே பெற்றார்கள் நன்னெறி பயிற்றினும்

குற்றர்கூ டிக்கெடுப்பார்

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்களே. 3

கொடியர்தம் மொடுகூட நடவியவர் செல்கின்ற

குற்றமுறு வழியைநாடக்

குலவுநன் னெறியோட இலகிவளர் செல்வம்

குறைந்துளமெ லிந்துவாட

மிடிமையா னதுசூட வினையங்க ளைத்தேட

வீண்குரோ தங்கள்நீட

விளங்குபொய் கொலைகளவு காமமுத லாந்தோட

விக்கின மெழுந்துமூட

அடிமையா யலகைகளி னடியிணைக ளைச்சாட

அனியாய துட்டமூட

னாமிவ னெனப்பலரு மாகாத வசைபாட

வரியமன முந்தளாடக்

குடியிலே தீப்போட முடிவிலா வினையுறக்

கொண்டகூட் டுறவாகுமே

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்கள. 4

தகாத செய்கையிற் பழகினோதனால் நாசமடைவர்

ஆழமுற் றிடுநெடிய கடலிலே அதன்மீது

அரியவங் கம்விடலிலே

ஆணவத் தொடுபுரியு மடலிலே பிறதார

மதைவிரும் பித்தொடலிலே

நீளமுற் றிட்டவெடி சுடலிலே மதுவகையை

நித்தமந் தன்குடலிலே

நிறையவிட் டேயலம் பிடலிலே கொலைசெய்ய

நேர்ந்தே யுடன்படலிலே

ஈழமுற் றிடுபனையி• மடலிலே திடமின்றி

என்றென்று மேறிடலிலே

இதமென்று பழகினோர் சிலபோதி லவையா

லிழப்பர்தம் முயிரையன்றோ

கோளமுற் றிடுபுவியில் நீளுசெந் தமிழறிஞர்

குலாவுயாழ்ப் பாணமருவுங்

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்களே. 5

துர்ச்சனருக்குப் புத்தி கூறல்

செற்றையிற் பல்லிதனை மெத்தையின் வளர்த்தினுஞ்

செற்றையைத் தேடியோடும்

தீராப் பிணிக்காக வோர்சூடு போட்டிடிற்

சீறியே நாயோடிடும்

உற்றவா பத்தால் விலக்கர வினைத்தொடினு

மோடிக் கடித்திடவரும்

உயர்ந்தவா னரமொன்று குளி‘காய வெனவெண்ணி

யொளியொன்று கண்டெழுந்து

பற்றையரு கிற்படியு மின்மினிப் பூச்சிமுன்

பாயவத னைத்தடுத்த

பட்சியைக் கோபித் தலட்சியம தாய்க்கொல்

பழங்கதையு மொன்றுண்டலோ

குற்றமுற் றோர்க்குநல முற்றபுத் திகள்சொலிற்

கோபித் தகன்றுவிடுவார்

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்களே. 6

பெரியோரியல்பு

மற்றவர்கள் வசைசொல்லார் வன்மமது வைத்திரார்

வஞ்சமுறு வார்த்தைபேசார்

வல்லமைகள் சொல்லிடார் பொல்லாத பேர்களோடு

மனநேச மாயிருக்கார்

உற்றநே சர்களடக் கந்தன்னை வெளிவிடார்

உண்மையை மறைத்துவைக்கார்

ஓரவா ரஞ்செய் திடர்களவு செய்பவர்க்

கொருபோது முதவிசெய்யார்

கற்றவர் தமைக்கனம் பண்ணுவார் பொய்சொலார்

காமமதி லேமூழ்கிடார்

கள்ளினை யருந்திடார் உள்ளபொரு டன்னிலே

கனதரும மேசெய்குவார்

குற்றமற் றிடுமேன்ம பெற்றபெரி யோர்களுக்

குற்றவியல் பீதாகுமே

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்களே. 7

துட்ட செல்வரியல்பு

பெற்றவரை மதியார்கள் உற்றதமர் தம்மையும்

பேணியே வாழ்ந்திடார்கள்

பெரியோரை மரியாதை செய்யார்கள் பகைமிகப்

பெருகினுங் கவனியார்கள்

கற்றவர் தமைக்கனம் பண்ணார்கள் காருண்ய

கர்த்தனையுங் மெண்ணிடார்கள்

கருதியே யெளியவர்க டம்மைநே சிக்கார்கள்

கைப்பொருளு முதவிடார்கள்

மற்றவரை வெல்லுதற் குற்றபொருள் மிகுசெலவு

வரினுமன மிடைவுறார்கள்

வறிஞருக் றிடுசெல்வர் பெற்றவியல் பீதெனக்

குணமுட னறிந்திடுவே

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்களே. 8

நற்பெண்டிரியல்பு

கணவன் சினந்தே யடிக்கினு மறுத்துமொழி

கழறிடா துளமெலிபவள்

காரியங் கண்டுதன் கணவனது மனதைக்

கரைந்திடச் செய்திடுபவள்

பணமின்றி யேமிடிமை பற்றினும் பொறுதியொடு

பரமனைப் பணிகின்றவள்

பசித்தவர் சலித்தவர் தமைத்தா பரிப்பவள்

பரிவுடய மொழிபகர்பவள்

சணமுந் தரித்திடாத் தயவோடு பணிசெய்து

தலவனைப் போற்றிடுபவள்

தந்தோட மாகவே பிறவாட வன்முகந்

தன்னையே பாராதவள்

குணமுந் திடுங்குலக் கொடியென்ப துண்மையே

குலவிநல மிலகிவளருங்

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்கள. 9

தந்தையரியல்பு

பாலகரை நன்னெறி பயிற்றிடுத னித்தமும்

பாடசா லைக்கனுப்பல்

பரிவுடன் றன்னா லியன்றளவு கலைபல

பயிற்றிடத் தெண்டித்திடல்

சோலிசெய் தேகேட்ட பொருளைக் கொடுக்காது

சுகுணமொடு கேட்டபொருளைச்

சோர்விலா தீந்திடுத றுங்கமுறு மங்கமது

சுத்தமாக் கப்பயிற்றல்

போலிசேர் துட்டகுண பாலர்கூ டிடமதிற்

போகாம லேதடுத்தல்

பூரணன் பதநிதம் போற்றப் பழக்கலிவை

புந்திசெறி தந்தையியல்பே

கோலமுறு தாலபூ கங்கதலி யாதியன

குலவிமிக வழகுசெறியுங்

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்களே. 10

அன்னையரியல்பு

சிறுவரைத் திட்டாமை தீயமொழி சொல்லாமை

திருடிடவி டங்கொடாமை

தீயபிள் ளைகளுடன் சேர்ந்துவிளை யாடிச்

சினேகமுற் றிடவிடாமை

மறுவகன் றிடுமுணவ தாயினுஞ் சினமுடன்

வாதாடி யமுதுகேட்பின்

மகிழ்வா வீயாமை மாகோப வேளையில்

வருத்தியாக் கினையிடாமை

கறுவியே தண்டித் திடாமயெந் நேரமும்

கனமான நேசந்தனைக்

காட்டாமை கெடுபுத்தி யூட்டாம யவர்சீர்த்தி

கழறாமை யாகுமிவைகள்

குறுகிடா நெறிபெருகி நிறையுமுத் தமதாயர்

கொள்ளுமியல் பாகுமன்றோ

குறைவற்ற வச்சுநக ருறைவுற்ற சன்மார்க்க

கூட்டமுறு பெரியோர்களே. 11

சுவாமிநாத பண்டிதர்

- 1937

இவர் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையைச் சார்ந்த கந்தர்மடம் என்னும் ஊரில் சின்னத்தம்பி என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். ந.ச. பொன்னம்பலப்பிள்ளை யிடங் கல்வி கற்றார். வாழ்கையின் பெரும்பாகத்தைத் தமிழ் நாட்டிற் கழித்தார். சிதம்பரம், திருச்செந்தூர் முதலி தலங்களிற் பிரசங்கங்கள் செய்யும் வழக்கமுடையராயிருந்தார். பல உரைநடை நூல்களை இயற்றினார்.

திராவிடப் பிரகாசிகைச சிறப்புக்கவி

திராவிடநன் னூன்மாண்பு தேறாருந் தேறத்

திராவிடப்ர காசிகையைச் செம்மை - விராவிடச்செய்

தீந்தான் சபாபதியென் றேயிசைக்கு நாவலன்றான்

றீந்தேன் றமிழருமை தேர்ந்து.

தேவாரத்திருமுறை முகவுரை

ஞாயிறு போலுமே ஞாயிறு போலுமே

பாயிருஞ் சோதிப் பரம னளித்தரு

டந்தி முகத்தனைச் சந்தத மெந்தஞ்

சிந்தை நிறுவுதுஞ் சிந்தை நிறுவுது

மெந்தவிக் கினமு மெமையணு காவணஞ்

சிந்தி நல்லருள் செய்திடற் பொருட்டே.

முத்துக்குமர ஆச்சாரிய சுவாமிகள்

1883-1937

இவர் நீர்வேலி என்னும் ஊரில் வாழ்ந்த ஆறுமுக ஆச்சாரி என்பவரின் புதல்வர். இளமையிலிருந்து தெல்லிப்பழை வருத்தலைவிளான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தவர். ஆறாவது யார்ப்பாணத்தரசனாகிய பரராச சேகரன் (1467-1549) என்பருக்கு முடி, செங்கோல் முதலியன செய்து கொடுப்பதற்கென இந்தியாவிலிருந் கொண்டுவரப்பட்ட விசுவகர்ம குலத்தவரின் பரம்பரையினர். இவர் ஒரு ஞானியாக வாழ்ந்தவர்

இவரியற்றிய செய்யுள் நூல்கள்:

'கதிர்காம முருகேசர் ஆறாதார சடாட்சர அந்தாதி', 'வசந்தன் பாடல்கள்', தெல்லிப்பழை சிவகாமியம்மன் உஞ்சல் ', வீமன்காமம் காமாட்சியம்மன் பதிகம்', தியானயோக சரவணபவமாலை', 'பிரார்த்தனைப் பத்திரிக்கை', 'சடாட்சர தியானமாலை', 'உவ்வை வாசக உறுதி போதகம்', 'மணிவாசகர் சரிதை', 'சிவஞான தத்துவ தீவம்' முதலியன.

தெல்லிப்பழை, கொல்லன்சீமாச் சிவகாமியம்மன் பதிகம்

போற்றுமுயர் தாய்தந்தை யவர்களொட தோற்றினோர்

பொருளின்மனை வியர்மக்களும்

பொருந்திய சசோதரர் சகோதரிக ளாதியாய்ப்

புகலவர பலசுற்றமும்

பொங்குபுக ழதிதிகளை மனமகிழ்வி னில்வாழ்வு

பூண்டுளோன் பாதுகாத்தல்

பொற்புறுங் கடமையென இப்புவியில் மெய்ப்பட

இயம்பினது நீயல்லவோ

ஏற்றமுறு மிந்நெறியில் நிற்பதற் கானபொர

ளீட்டமிக் காசையுற்றே

ஏகியொரு பொருதிரைக் கடலூடு சென்றுபல

இடநாடு நகர்வைகியும்

ஈட்டினத மிகுபாவ மூட்டையே யல்லாது

ஏதுமொரு சுகமுமுண்டோ

ஏதேது உன்னைநா னொருகடிகை யாயினும்

இடைவிட்டு நின்றதுளதோ

சாற்றிலோ எங்குநா னங்குநீ நின்றுமித்

தரணியோர் செப்புமொழிபோற்

சார்ந்தென் னுடன்நின்று சதிசெய்ய லாகுமோ

தாய்பிள்ளை நேசமிதுவோ

சன்மார்க்க நெறிநின்று தகுபொருள தீட்டவுந்

தருமநூ லாராயவுந்

தந்தைதாய் சுற்றம் விரும்பிய வளிக்கவுஞ்

சார்ந்தோர்கள் பசிதீர்க்கவும்

ஊற்றமுட மேனனெனை யணுகாமு னமரர்முனி

யுயர்பூத ரதிதிமகிழும்

ஒப்பற்ற பஞ்சமா வெச்சம தியற்றவும்

உயர்வர மெக்கருளுவாய்

ஓதரிய பன்னலந் தீதகல வருதெல்லி

யோங்கிடுங் கொல்லன்சீமா

உறைதரும் பரமான கதியுறுஞ் சிவஞான

முதவிடுஞ் சிவகாமியே.

கதிர்காம முருகேசர் ஆறாதார சடாட்சர அந்தாதி

உதித்தே யெனதகங் கோவில தாக்கி யொருவிலின்பைப்

பதித்தே யென்முன் வினையாவும் வடவன லாகப்பற்றிக்

கொதித்தேயெரித்து வதைத்திடுங் கூற்றுங் கொடுங்கலியும்

மிதித்தே யடியனைக் காத்திடும் மூவிலை வேற்சத்தியே.

சித்தத்தி லின்பமுந் துன்பமுங் கட்டிச் சுமந்துதிரிந்

தெத்தெத் திசையினு மங்காடி நாய்தனை யேய்ப்பவலைந்

தத்தத்தைத் தேடிவிவ் வம்புமி யிற்பட்ட வத்தையுறும்

இத்தத்தை நீகடந் தாறெழுத் தேணிதொட் டேறுநெஞ்சே

பாழ்வினை முற்றும் படுசூ ரணம்பண்ணிப் பற்றியெனைச்

சூழ்கலி முற்றும் புறத்தே துரத்திச் சுடர்வடிவா

யாழ்கடலற்றெழமாதித்தன் போலென்னகத்திருள்போய்

வாழ்வுறப் பொற்கரம் வீசிநின் றாடும் மலைச்சிங்கமே.

வஞ்சமுற் றேபெற்ற மாதாப் பிதாத்தங்கள் மக்களுக்கு

நஞ்சமிட் டாற்பிற ரார்தடுப் பாரிந்த நானிலத்திற்

பஞ்சமுற் றேயெனை வாடும் படிக்குப் பணித்திளைத்துக்

கெஞ்சவிட் டாலுனை யார்தான் றடுப்பர் கிரிக்கந்தனே.

மணிவாசகர் சரிதாமிர்தம்

அரியயர்க்கு மளப்பிரியான் பொருப்பதனை

அகன்றுதிரு வாத பொருப்பதனை

அந்தணர்தங் குலத்திலவ தரித்தரசற்

கமைச்சருமா யசுவம் வாங்கப்

பரிவினொடு பெருந்துரைசென் றருட்குருவாய்ப்

பரனருளப் பணிந்து ஞானம்

படிந்தேதிப் பெருமானா லடவிநரி

பரியாகிப் பரிக ளைப்பின்

நரிகளென வாக்கிடவும் அரன்நரனாய்

மண்சுமந்து நடித்துக் கூடல்

நகரரச னேலினாற் பிரம்பினடி

தாங்கிடவும் நலிந்து புத்தர்

வரிசையகன் றூமையரா கவும்ஊமை

பேசவும்மா தேவன் கையால்

வாசகத்தை எழுதிடவுஞ் செயும்மணிவா

சகர்சரிதம் வழுத்தல் செய்வாம்.

தந்தையார் தாயர் மகிழ்ந்து சிறந்து

தழைத்திட அந்தணர் வந்துமி டைந்ததி

விந்தை பொருந்து சடங்குகள் புந்திலி

ருந்துணு மாறு புரிந்து முடிந்தன

சிந்தைய ரும்பல சங்கையொ ழிந்துசெ

ழுங்கலை யின்பல சிந்து கடந்தே

மைந்த னிளம்பிறை யின்கலை யென்ன

வளர்ந்து விளங்கின னங்கது காலை.

என்ற துஞ்சிவ மேது ஞானம

தேது போதம தேதருள்

கென்ற மைச்சர் வினாவ லுஞ்சிவ

மென்ப தொப்பில தொருபொருள்

நின்ற அப்பொரு ளதனை நெஞ்சில்

நிறுத்தி வேறுள திரிபெலாம்

நீக்கி ஆகம அளவை யாலறி

வதுநி கழ்த்திடு ஞானமாம்

வென்ற ஞானம தனுப வத்தில்

விளங்க நிச்சய மாக்குதல்

விளைவு பெற்றிடு போத மாமென

வேலி ளக்கினர் நாதனார்

துன்று செம்பொருள் கண்ட அந்தணர்

நன்றி தின்றுரை சொன்னனீர்

சோதி யாம்வட வாலி ருந்தவ

ரேயெ னத்துதி சூட்டினார்.

என்றிடலும் மன்றில்நட னம்புரியும் எம்பரமன்

இன்பமுற நுங்கனவிலே

என்றனது புன்பெயர் இயம்பினதும் உங்களின்

இருந்தவம் முதிர்ந்ததிறமே

நன்றுமிக நன்றென எழுந்தவ ருடன்வழி

நடந்தனர் அடைந்துகடிதா

நந்தநட மன்றனை வணங்கினர் சயந்தரு

நலம்பெற விரும்பிநடுவே

நின்றிடலும் அங்கணர் குருந்தநிழ லின்கணுரு

நேர்பட எதிர்ந்துநிலவும்

நெற்றியில் உடற்றிரு வினைத்தொடர் அகற்றுதிரு

நீறுமிட் டெதிரிகளைநீ

வென்றிடுக என்றுவிடை தந்தனர் அருந்தவர்

விரைந்துமணி மண்டபமதில்

வெற்றமது புத்தரெதி ரிற்றிரை விரித்தெழில்

விளங்கணை இருந்தருளினார்.

திங்கள் சூடிய தம்பி ரான்திரு வாத வூரர் உரைத்திடுஞ்

சிவமணங்கமழ் தேனெனுந்திரு வாசகங்கள் அனைத்தையுஞ்

செங்க ரத்தில் எடுத்த ஏடு பிடித்தெ ழுத்துகள் தெளிவுறச்

செம்மை யாக வரைந்த பின்பு திரும்ப வும்பெரு கருளுடன்

சங்கை தீர்ந்த தவத்த ரே அருள் சார்ந்த சைவர்கள் ஓதியே

சஞ்ச லங்கள் தவிர்த்தி டச்சபை நாத ரைத்தலை மகனெனப்

பொங்கு காத லுடன்பு கழ்ந்தக மாம்பொ ருட்கள் விரித்திடும்

பொருளில் கோவை எனப்படுங்கவியும் புகன்றிடும் என்றனர்

இங்கே வந்தென தெதிரே யேடதை

எழுதிய மறையோர் எவரோதான்

எங்கே போயினர் எங்கே போயினர்

என்றே தேடினர் அருகெங்குந்

தங்கா தோடி அலைந்தார் இதுவதி

சயமென் றாதளர் வுற்றார்பின்

கங்கா தரன்இவர் என்றே கண்டு

கரைந்தார் அவசம் அடைந்தாரே.

கடவுள்

உடலுயிரைச் செலுத்துபவன் கடவு ளென்பா

ருள்ளமதைத் கடந்தகென உரைப்பார் மற்றோர்

கடமெவைக ளோவவைக்குட் கலந்து நிற்குங்

காரணத்தி னாற்கடவு ளென்றுஞ் சொல்வார்

மடமையினாற் பலவாறு பெயரைச் சூட்டி

வழிபடுவா‘ மாநிலதது மக்க ளெல்லாந்

திடமுடனே கடவுளுக்கு நாம ரூபஞ்

செப்பவொணா தெனப்பெரியோர் தெரித்திட்டாரே.1

கடமெனுமிவ் வுடல்தனையே நானென் றுன்னிக்

காசினியில் மனக்குரங்காற் கலக்க முற்றே

திடமுடமுந் நன்மைதின்மை யின்ன தென்றுந்

தெரியாதே மாப்புநினைப் பினால்ம யங்கித்

தடமுடைய மண்பெண்பொன் னாசை தாக்கிச்

சஞ்சலத்துட் பட்டுழலுந் தன்மை யாலே

நடமிடுமிக் கூத்தெல்லா மாட்டு விக்குந்

நட்டுவனார் நானாரென் றறிவ தில்லை. 2

உலகுதனில் மனமோடித் திரிந்து பேய்போ

லுலாவுதலா லுண்மைதனைக் காண்ப தின்றிக்

கலகமிடு முலகாசா பாசந் தன்னிற்

கட்டுண்டு பொறிமயங்கி யறிவுங் கெட்டுப்

பலவிதமாம் பிறப்பெடுத்தும் விடுத்தும் பாடு

பட்டுமெலிந் திடச்செய்யும் மனத்தின் சேட்டை

விலகிவிடும் வரையுலகை மனத்தை விட்டு

வேறாகப் பிரித்தெடுக்க முடியா தன்றே. 3

மனமதிலே யுலகமுற்றும் படிந்து நிற்கும்

மாசால உலகில்மனம் பற்றி நிற்கும்

திமமுமிந்த மனமுமுல கமுமொன் றாயத்

துவிதமுற விருப்பதினாற் சிவம்ம னத்துற்

பனமெனுமெய்ஞ் ஞானமது பிலித்தி டாது

பலிக்குமட்டும் மெய்ப்பொருளைப் பார்ப்ப தேது

செனனமிறப் பெனுங்கடலிற் சிக்கச் செய்யுஞ்

சிந்தனையா மனங்கடந்தாற் சிவந்தா னாமே 4

நவமாய உலகமதிற் செனனங் கொண்டே

நாட்டமுறு மாசையெலா மனுப வித்துச்

சுவையுணவி னிச்சைபசி தீரு மட்டுஞ்

சொகுசுடனே யுண்டவுட னொழிவ தேபோ

லிவையனைத்த போகமினிப் போதும் போது

மெனவெறுப்புற் றுண்மையின்ன தெனவே நாட

எவையெவைதா னெதிர்ப்படினு மவைக்குள் ளேநின்

றியக்குமொரு சிவம்வெளிப்பட் டருளு மன்றே. 5

கண்ணாலே கண்டுணரத் தூல மாகக்

காணநின்ற தோற்றமெலாஞ் சித்தின் தோற்றம்

உண்ணாடி யறியுமவன் தேக மல்ல

உள்ளிருக்குந் தேகியெனு மான்மா வானால்

மண்ணாதி பூதவுடற் போர்வைக் குள்ளே

மறைந்தவையாய்த் தோற்றிநிற்ப தான்மா வன்றோ

பெண்ணாணொ டலியெனவே பேசா நின்ற

பேருலகத் தோற்றமெல்லா மான்மா வாமே. 6

காணும னான்மாவே யாகில் நேரே

காணநின்ற காட்சிகளு மான்மா வன்றோ?

தோணுமெவற் றுள்ளுமொரு சிவம்ம றைந்து

தொழிற்படுத்து முயிர்க்கன்மத் தளவாய்க் கூட்டி

போணுமனக் கோட்டமெலா மகற்றிப் பார்க்கிற்

குவலயத்துக் கடங்களுக்குள் ளுடங்கி நின்று

பேணுவதாற் கடவுளென்று மியவு ளென்றும்

பேதமறப் பொதுமொழியாய் பேசுந் தானே. 7

செல்வந்திநாத தேசிகர்

1907 - 1937

இவரது ஊர் கரணவாய். சைவக்குரு மரபினரான திருஞானசம்பந்த தேசிகம் இவருடைய தந்தையார். இவர் சுன்னாகம் பிராசீன பாடசாலையிற் படித்தவர். வித்துவான் கணேசையரின் மாணவர். 1923ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாஷாபி விருத்திச் சங்கத் தமிழ்ப் பண்டித பரீட்சையிலும், சம்ஸ்கிருத பண்டித பரீட்சையிலுஞ் சித்தியெய்தியவர். இவரியற்றிய செய்யணூல்கள் : நல்லைக்கோவை, மாவை மும்மணிமாலை என்பன. தமிழாராய்ச்சி முதலிய உரைநடை நூல்களும் இவரால் எழுதப்பட்டன

திருநல்லைக் கோவை

இடமணித் தென்றல்

சோரிக் கறையயிற் சேய்நல்லை மாதுநின் றொல்பதிக்கா

மூரிக் கடுவன் பயில வசைகொம்பர் முட்டவுடைஇ

பூரிப் பிரசத் தினாலுகு தேன்சென்று புள்ளலம்பும்

வேரிக் கமலநம் மூர்வயற் செந்நெல் விளைக்குமே. 1

பயந்தோர்ப் பழிச்சல்

நாதபஞ் சாக்கர மேனிப் பிரான்றரு நாதனலர்ப்

பாதபஞ் சேர்பொழில் சூணல்லை வாணன் பனிவரைவா

ழாதபங் கானுதற் றேமொழிப் பைம்பொ னணிமகளை

மாதபம் போற்றிப் பயந்தோர்பல் லூழியும் வாழியவே. 2

பாங்கன் கழறல்

அறிவான் முதிர்ந்தவென் னாருயி ரண்ண லலைவெண்முத்த

மெறிவான் கடற்புனன் மாந்தும் பொதியத் திருடிக்குளஞ்

செறிவான் தமிடெரித் தோன்பொழி னல்லைச் சிலம்பிலொரு

மறிவாண் மதர்விழிக் காமனந் தேய்தன் மதியல்லவ. 3

நடுங்க நாட்டம்

பஞ்சர மேவுங் கிளிநிகர் மென்மொழிப் பாவைகொடுங்

குஞ்சர மொன்றுசெந் நீர்துவள் கோட்டொடு கோபம்விஞ்சிச்

செஞ்சர மேகொண் டவுணரைத் தேய்த்தவன் சேருந்நல்லை

மஞ்சர விந்தச் சுனைவள ரோங்கன் மருவியதே. 4

இறைவனை நகுதல்

மாயா வருஞ்சம்ர தாயவிவ் வண்ணன் மயிலுகைக்குஞ்

சேயார் திருநல்லை மாந்தழை கைக்கொண்டு செஞ்சரந்தான்

பாயா வுடல்பட் டுருவக் கலையொன்று பாய்ந்ததெனா

வாயா லுரைப்பவ ராவீரர் மதிநுதலே. 5

பாங்கி குலமுறை கிளத்தல்

தாரக மாம்பொரு டாதைக் குரைத்த தலைவன்றிரு

வேரக மார்குல னல்லூ ரிறும்புறை யாம்விலங்கு

மாரக மாற்றுங் குறவர் குலத்துளம் வாயினநீ

காரக மாறும் பொருநர் குலத்தினைக் காவலனே. 6

பாங்கி கையுறை மறுத்தல்

பொறிசால் கருவண் டுறைதண் டலைநல்லைப் புண்ணியனற்

கறிசால வோங்குஞ் சிலமபாநின் கைத்தழை கந்தரநேர்

வெறிசால் குழலெம் படப்பாவை மாட்டு விரவின்மற

நெறிசா னமரயிர்ப் பார்கொண்டு நீங்க னெறிநினக்கே. 7

கவினழி வுரைத்தல்

தெங்கங் கனியுதிர்ந் தோங்கும் வருகைச் செழுங்கனியின்

றுங்கம் பொலிகளை கீறிடப் பில்குஞ் சுவைமதுவைச்

சங்கம் பருகும் பழனநல் லூரர்தஞ் சாரனல்லாய்

அங்கம் மெலிந்து கவினழிந் தேன்றணந் தண்ணலையே. 8

வரைவு கடாதல்

வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்

செந்தேன்றுளிக்கும் பொழினல்லை வாணன் சிலம்பவன்னை

வந்தே யெனதுமுன் னென்னை யழைத்து மழைவளரு

மிந்தே யனைய முகத்தாட் குறுபிணி யாதெனயா

னொந்தே மனம்பின் மறைத்துச் சிலசொன் னொடித்தனனே. 9

சீதையுங் கார்வண் ணனும்போல் வரும்பெருஞ் சீருடையீர்

போதையுங்கோலத்தளிரையுங் கொண்ட பொழினல்லைவே

ளோதையுங் தூவும் பொலிபுன லோங்கலி னோரண்ணலுங்

கோதையுங் கூடிச் சுரம்போகக் கண்டிடிற் கூறுமினே. 10

மாவை மும்மணிமாலை

காப்பு

சீர்மேவு மாவைநகர்ச் செவ்வேண்மேல் யானியற்று

மேர்மேவு பாமாலைக் கின்றுணையாங் - கூர்மேவு

வெள்ளைமருப் பைங்கரத்தண் மேவுமதி சூடுசடைக்

கொள்ளைமதத் தும்பிமுகக் கோ. 1

வானூர் தருபொழின் மாவைப் பிரானடி மாமலரு

மானூர் முழுமதி போலு மிராறு வதனமுஞ்செந்

தேனூர் பசுங்கடம் பார்பன் னிருபுயத் திண்மலையு

மூனூர் சுடரிலை வேலுமன் றோவெம் முயிர்த்துணையே. 2

உறைவெண் சங்க வொண்புனற் பழனத்து

முட்டாட் டாமரை முழுநெறிப் போதிடை

வெண்பறைச் செங்கழன் மென்னடை யெகினக்

கவின்றிக டொழுதி கண்படை பொருந்தும்

வளம்பொலி மாவைப் பழம்பதி வைகிய

கடம்பினொண் டாரோய் கடம்பினொண் டாரோய்

வெண்டிரை யரற்றும் வியன்பெரும் பௌவத்து

விசும்புற நின்ற விறன்மாத் தடிந்தருள்

கடிகமழ்ச் செழுமலர்க் கடமபினொண் டாரோய்

நின்னையெஞ் ஞான்றுந் நெஞ்சிடை யிருத்தியு

நின்புக ழென்று மன்பினொடு புகன்றுந்

நின்னடி யென்றுந் நீணிலத் திறைஞ்சியு

நின்பா லியானொன்று வேண்டுவதுதான்

பொன்னு மன்றே புடவியு மன்றே

மணமலி கருங்குழன் மடவா ரன்றே.

பெருமலந் துடைத்த பின்றைப் போழ்துறூஉ

மரும்பெறல் வீட்டி னமர்ந்தினிது நுகரு

மழியா வின்ப மடைதலா மன்னே. 3

மரந்திகழுஞ் சோலைசெறி மாவைநகர் வாழுங்

கரந்திகழுங் கூரிலைவேற் கந்தா - அரந்தைகெட

வேத்து மடியேன் இனிப்பிறவி சேராது

காத்தலுனக் கம்ம கடன். 4

மதிதங்கு பேரெழின் சூழ்கிடங் கேர்செய்நன் மாவையெனும்

பதிதங்கு மாறிரு தோண்முரு கேசன் பதந்தொழுவார்

நிதிதங்கு வாருயர் வென்றிகொள் வார்நல நீடுமொரு

கதிதங்கு வாரென்று மோவாத வின்பமுங் காண்குவரே.

பொன்றிதழ் கொன்றப் புதுமலர் குடைந்திடு

மென்சிறை யறுபதம் விரும்புபண் பாட

மண்டுதிரைத் தெண்கடன் மாந்திய மைம்முகிற்

கண்டுபெரு மயிலினங் களிப்புட னாடச்

சிறுகா லெறிதருஞ் சீரிள வேனின்

மகிழ்வுறூஉங் குயில்கள் வருந்திமெய் வாட

விண்டலத் தோங்கிய தண்டலை மாட்டு

நலத்திகழ் காந்த ணனைமுறுக் கவிழும்

மலிபெருஞ் செல்வ மாவையம் பதிவாழ்

ஒலிகழற் றிருத்தா ளொருபெரு முருகனைக்

கண்டிலார் கண்ணிணை புண்ணே யென்றுங்

கருதிலார் நெஞ்சகங் கல்லே பரிவுடன்

இறைஞ்சிலா ரியாக்கை யியங்குறு மரமே. 6

அன்னத் தொழுதிவிளை யாடும் பொழின்மாவைச்

சொன்னத் திருக்கோயிற் சோதியே - நன்னர்

அருணகிரி வள்ளறனக் கன்றருளு மாபோற்

கருணைபுரிந் தென்னையுநீ கா. 7

இறைசேரு மிந்திரன் முன்னா ளளித்த வெழிலணங்கும்

நிறைசேரு மீர்ங்குழல் வள்ளியும் பாங்கயர் நயந்துறையச்

சிறைநேரு மஞ்ஞையின் மீதமர் மாவைத் திருநகரான்

கறைசேரு மோரயி லென்றனை யேயென்றுங் காப்பதுவே. 8

கரும்புய றிரிதரூஉங் காயத் தோங்கிய

விருந்தாட் கொழுமடற் றிருந்துபைம் பூகத்து

முற்றிய செங்காய் மூணெகிழ்ந் துதிர்த்துப்

புக்குத் திரளாய்ப் பொலிந்து கிடந்தன

தீங்கனி மிடைந்த செங்குலைக் கோழிலை

யரம்பை வளர்க்குமா றமர்ந்தகால் வாயாற்

பனிப்புனல் பாய்ச்சும் பருந்தொழி லாளர்க்குப்

பாகு மடையுமா யெளிதிற் பயன்படூஉந்

தட்பங் கெழுமிய தனிப்பெரும் படப்பைத்

தெய்வநன் மாவைத் திருநகர் வைகிய

விண்ணவர் பராவும் விறலுடத் தேவே

தீவினை வலியாற் சென்றுபுல னில்லாப்

புல்லாய்ப் பிறப்பினும் புழுவாய்ப் பிறப்பினும்

யானின் றிருவடி யெம்மையு மனத்தின்

மறவா திருத்தும் வரமெனக் கருளே. 9

செய்கு அலாவுதீன் புலவர்

1890 - 1938

இவரது ஊர் புத்தளத்துக் கருகாமையிலுள்ள கார தீவு. இவர் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியோர் பரம்பரையினர். சரநூல், வழிநடைச் சிந்து, நவவண்ணக் கீர்த்தனை ஆகியன இவரியற்றிய நூல்கள்.

தனிச் செய்யுள்கள்

அருவை அறிந்தவர் ஆயிரத்து ளொன்று

அருளை யறிந்தவர் இலட்சத்தி லொன்று

குருவை யறிந்தவர் கோடியி லொன்று

கருவை யறிந்தவர் காண்வது மரிதே. 1

வழங்கும் பணஞ்சரியாய் வாங்கிகொண் டென்பசிக்குக்

கிழங்கீந்தி டென்றுனைநான் கேட்டேன்-வழங்கினையிற்

கமலனே நாளைக் காலையிலே சத்தியமாய்

எமனுனைக் காண்பான் இரு. 2

சுகாதார விதி

கைவிரல் வாயினில் வையாதீர் எச்சில்

கண்டவிட மெங்குந் துப்பாதீர்

செய்வன திருந்தச் செய்திடில் என்றுஞ்

சேமமாய் வாழ்ந்திடு வீரேயருங்

கஞ்சா அபின்பல லேகியம் புகையிலை

நஞ்சே எனஉணர் வீரே

நெஞ்சு வரண்டு தேகம் மெலியும்

நீக்கிடு வீரவை தானே. 3

நாகமுத்துப் புலவர்

1857 - 1939

இவரது உர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த காரைநகர். இவரியற்றிய நூல்கள் : திண்ணபுரத் திருப்பதிகம், திண்ணபுர ஊஞ்சல் முதலியன.

காரைநகர்த் திண்ணபுரத் திருப்பதிகம்

சுந்தர மமைந்தகணி யுமையம்மை பாகமுஞ்

சுதனுறையு நின்கவானுந்

தூயமக தாமரையி னழகொழுகு கருணையுந்

தோமிலா நகைநிலாவுஞ்

சிந்துநீ ரரர்சடா மகுடமும் வெண்பொடி

செறிந்தசெம் பவளவடிவுந்

திகழுசங் கொடுதோடு பூண்டவிரு கன்ன முந்

தேனிதழி மாலைமார்புஞ்

சந்தவுப வீதமு மான்மழுத் தீயைத்

தரிததசெங் கரமலர்களுஞ்

சரணாம் புயங்களுந்தனிவெள்ளை விடையின்மேற்

றமியனேன் காணவருவாய்

கந்தனைத் தந்தருளு காரணா பூரணா

கழனிவள நனிபொலிந்த

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 1

பூமேவு வேதனும் பொன்மேவு மார்பனும்

போற்றுமடி முடிகடெரியாப்

போதனே வேதனே நாதனே நீதனே

புகழ்மறையின் முடியின்மணியே

பாமேவு கவிஞருரை பாக்களைக் கேட்டுருகு

பரமகல் யாணகுணனே

பாராதி யண்டங்கள் யாவையுந் தந்தவா

பற்றலர் புரஞ்செற்றவா

மாமேவு வடமேரு வில்லாய் வளைத்திட்ட

மாபரா பரவரதனே

மண்ணாதி யைம்பூத மானவடி வங்கொண்ட

மாதேவ யென்னையாள்வாய்

காமேவு கற்பகக் கையனே துய்யனே

கழனிவள நனிபொலிந்த

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 2

தற்பரஞ் சோதியே சாதிகுண மில்லாத

தலைவனே சாந்தமலையே

சதுர்வேத வாகம புராணங்க ளறியொணாச்

சச்சிதா னந்தசிவமே

அற்புதா னந்தவருள் பொழிகின்ற மேகமே

அறிவினுக் கறிவானவா

ஆதியே சோதியே யம்பலந் தன்னிலே

யரியநட மாற்றுமுதலே

சிற்பர வியோமசிந் தாமணிக் குவியலே

தேனே நெடுஞ்சலதிலே

தெள்ளமுத மேசென்ம மாற்றுதற் கடியார்கள்

தேடியலை யருமருந்தே

கற்பகச் சோலையே யென்றடிய னுன்றனைக்

கவிமாலை சூட்டவருளாய்

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 3

பொல்லாத தீயரொடு கழகந் தனிற்சேர்ந்து

போதகலை யூட்டுபாவி

போந்தவா துலர்மிடியர் தங்களுக் கன்னநீர்

போற்றியீ யாதபாவி

இல்லாத சொல்லியே கயவரைக் கவிகளில்

எடுத்துப் புகழ்ந்தபாவி

யானெனு மகந்தைதா னெள்ளளவு மகலா

திருந்திட்ட கொடியபாவி

வல்லாள கண்டனாயப் படுவழக் குப்போசி

வஞ்சித்த பெரியபாவி

வம்பர்க ளுடன்சேர்ந்து பஞ்சமா பாதகம்

வையத்தி யற்றுபாவி

கல்லாத பாவியேன் பொல்லாத குணநீக்கிக்

காத்திரட் சித்தல்வேண்டும்

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 4

அருமையுட னேபெற்ற தாயும்பி தாவுநல்

லாசானு மிகவுமேன்மை

யானகுல தெய்வமும் பிறவிப் பெரும்பிணிக்

கருமருந் துஞ்சுற்றமும்

பெருமைமிகு குறைவற்ற செல்வமுந் துணைவியும்

பிரியமக ரரியநட்பும்

பேசரிய பரகதிகொ டுத்தருள்செய் வள்ளலும்

பிழையனைக் தும்பொறுக்குந்

தருமதுரை யானவனு நீயென்று வந்துநின்

சரணமே சரணடைந்தேன்

தயவாக வேமன மிரங்கிநிர் மலமுத்தி

தந்தெனையு மடிமைகொள்வாய்

கருமைமயி லேறிவரு கந்தனைத் தந்தவா

கற்றவர் விழுங்குகனியே

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 5

வஞ்சியர்க ளிளமதி முகத்திலே யவர்கண்

மருட்டிலே மைப்பொட்டிலே

மானொத்த விழியிலே தேனொத்த மொழியிலே

வண்டனைய கார்குழலிலே

கொஞ்சுகிளி போற்பயிலு மிங்கிதங் தன்னிலே

குஞ்சிரிப் பின்நகையிலே

கொப்புச் சிமிக்கிபொன் னோலையணி காதிலே

கோத்தமுத் தணிமார்பிலே

சஞ்சீவி மலையைநிகர் முலையிலே இடையிலே

சர்ப்பபட தடமடுவிலே

சங்கவளை கொங்கைக் குலுக்கிலெளியேன் மனஞ்

சாராம லருள்புரிகுவாய்

கஞ்சனுயி ரைக்கொன்ற மாயவன் மைத்துனா

கருணைநிதி யெனையாளவா

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 6

அரிதான மானிடப் பிறவியைப் பெற்றுமென்

னறியாமை நீங்கவில்லை

அன்பென்று சொல்லவுங் கேட்டதில்லை யானெனு

மகந்தைசற்றகல்வதில்லை

பெரிதான வெஞ்சின மடங்கவிலை யைம்புலப்

பிழைவழி யொதுங்கவில்லை

பேராசை தீரவிலை நல்லோ ரிணக்கமென்

பிறவியிற் கேட்டதில்லை

பரிதாவல் போலெங்க ணுந்தாவு பாழ்மனப்

பதைபதப் பகலவில்லை

பசுபாச பதிவினவி யெய்வாறு நின்பதப்

பங்கயத் தடைவதம்மா

கரியமா றங்கையுமை யம்மையார் பாகனே

கருணாகரக் கடவுளே

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 7

திருநாவ லூரில்வரு சுந்தரர் முனஞ்சென்று

திருமணம் புரிபோதினிற்

சிறுவனீ நமதடிமை யென்றொருபொய் யாவணஞ்

செங்கைமலர் கொண்டுகாட்டிப்

பொருநாவின் வல்லமறை யோர்களவை முன்புமெய்ப்

பித்தரை வலிதினாண்டு

பித்தனென நந்தமைப் பாடுனெ வருளியிரு

பேதையர்கள் காதல்பூட்டி

ஒருநா ளிராப்போது தூதுசென் றும்பரவை

யூடலையு மெளிதின்மாற்றி

உணவுநிதி நெல்லாதி யுந்தந்து முதலைவா

யுறுமதலை வரநல்கியுங்

கருமாய் மலர்க்கழ லளித்தவா றெம்மையுங்

கடைக்கண்வைத் தருளல்வேண்டுங்

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 8

வாதமுதன் முப்பிணியில் விளையுமெப் பிணியுநினை

மனதி னினைக்குமுன்னே

வந்தவழி தெரியாம லோடுமே பொல்லாத

வஞ்சனை வருத்தபில்லி

ஏதமுறு சூனியம் முதலான கர்மங்கள்

யாவையும் நீறாக்குமே

இருளனொடு முனிகறுப் படல்வீர மானடனு

மிடாகினியு மாகாளியும்

பூதவே தாளவிற லேமனுட னவனேவல்

புரிகின்ற காலபடரும்

பொய்யாத நின்பெய ருரைத்திடி னடுங்கிவாய்

பொத்தியே யோடிவிடுவார்

காதலாய் நின்பெருமை யறிவதற் கெளியதோ

காமனைக் காய்ந்தநிமலா

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 9

மாயமாய் மாதாவ யிற்றிலுரு வாகிமிகு

மலமூத்தி ரத்துழன்று

மாநிலந் தன்னிலே சேயெனத் தோன்றுசிறு

மதலையாய்த் தானிருந்து

காயம்வ லுத்தபின் நானென் றகங்கொண்ட

காளையா கத்திரிந்து

காமாதி நோயால் மெலிந்துடல் வந்தியொரு

கன்னியைம ணந்துபின்னுந்

தேயமதி லெங்கெங்கு மோடியெந் நாளுநிதி

தேடிப்பு தைத்துவைத்து

தேகியென் போர்தமக் கீயாமல் வீணிலே

தினமுங்க ளிக்குமிந்த

காயனெவ் வாறுனக் காளாவெ னருளுவாய்

கங்கைபிறை யணிபிரானே

காரைநகர்த் திண்ணபுர வாசனே நேசனே

கதிசுந்த ரேசபதியே. 10

வண்ணை நெ.வை. செல்லையா

1878 - 1940

இவரது ஊர் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை. தந்தையார் பெயர் வைத்தியலிங்கம். இவர் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளயிடங் கல்வி கற்றவர். மலாயா நாட்டிலே ஈப்போ திருவள்ளுவர் கல்லூரித் தலைமை யாசிரியராய் விளங்கியவர்.

இவரியற்றிய நூல்கள்: பழமைப் பனுவல் ஐம்பானைந்து, நல்லைச் சண்முக மாலை, வண்ணைத் திருமகள் இரண்டைமணிமாலை, வண்ணை வெங்கடேசப்பெருமாள் ஊஞ்சல், கதிரை நான்மணிமாலை, ஈப்போ தண்­ர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை, வண்ணைத் திருமகள் பதிகம், அரிநாம தோத்திரம், நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம், வடிவேலர் திருவிருத்தம, வடிவேலர் ஊஞ்சற்பதிகம், வடிவேலர் திருவருட்பத்து, மதுவிலக்குப் பாட்டு, ஒழுக்க மஞ்சரி காந்தி இயன்மொழி வாழ்த்து, மது மானிடக் கும்மி, நாவலர் பதிகம், இரமணமகரிசி பஞ்ச ரத்தினம், பாலர் பாடல் முதலியன.

பழமைப் பனுவல் ஐம்பானைந்து

எசவனொருவன் றாய்மொழியை யினிதறியா திகழ்ந்துபிற

வேற்கின் றானோ

வவனுதித்த நாடுதனக கரியபணி யன்னவனா

லாற்ற லாகா

கவனமுயர் சமுதாய முறவுமக்கட் சுட்டிவைகள்

காண்ப தில்லை

தவனிடையி லாடையின்றித் தோண்மீதி லாடைகொண்ட

தன்மை யாமால். 1

அறிவாற்ற லென்றேயா மாங்கிலஞ்சிங் களந்தமிழென்

றதனில் வேறு

பிறிவாற்றல்யாண்டுமில வுன்னுதலிற்பொருள் மொழியாற்

பேத மில்லை

பொறியாற்றல் மிகுபருத்தித் துறையாறு முகர்புரிந்த

புரையில் சீர்த்திக்

குறியாற்று மணிக்கூடெவ் வாங்கிலத்தி னுதவியினாற்

கூடிற் றம்மா. 2

கம்பரது கற்பனைக்கும் மிலிட்டனது கற்பனைக்குங்

காளி தாசன்

அம்பரமேற் செகசிற்பி யிருவரது நாடகங்கள்

அன்னம் பட்டர்

சம்பரமேற் றிசையிலிரு தக்கோர்செய் தருக்கநூற்

றன்மை கூறி

லும்பரொக்கு மாதலினா லள்ளொளியெம் மொழியுமன்றிங்

குணர்ச்சி யொப்பே. 3

செல்லவிடு மம்புசென்ற வழிநோக்கி மீளுவதுஞ்

சிலம்பு நூலிற்

சொல்லியயந் திரப்பொறியுங் கச்சியப்பர் கூறியதந்

துரிசி லாத

நல்லியல்கார் நாற்பதினும் பெருங்கதையாம் பனுவலினம்

நவின்ற நுட்பம்

புல்லியபல் வகையான யந்திரமு மாய்ந்துகண்டோர்

புவியி லுண்டோ. 4

கடைச்சங்க மொழிந்தபின்னர் கிபியைந்தாம் நூற்றாண்டிற்

கல்விக் காக

நடைச்சைன முனிவரனாம் வச்சிரநந் தியனாயோர்

நவமாஞ் சங்கங்

கிடைச்சடகோ பன்காலத தொருசங்க மதுவொன்பான்

கிபிநூற் றாண்டு

கொடைச்சிந்தா மணியேற்ற புலவர்முந்நூற் றுவருமதிற்

கூடி னாரே. 5

வடநாட்டி லிருந்தகல்விக் கழமெனு "நாளந்தா"

மாண்பு தேரா

ரிடைநாட்டி லெவருமிரார் காசியினு மொன்றதுபோ

லிருந்த தென்ப

தடநாடு காவிரிப்பூம் பட்டினத்து மொருகழகந்

தழைத்த தந்நாள்

திடமாடும் யாழ்ப்பாணந் தனிற்கழக மிருமுறையாய்த்

திகழப் பெற்ற. 6

சீரிரகு வமிசமுதற் பன்னூல்க ளரங்கேறிச்

சிறந்த சங்கம்

பேரிலகு யாழ்நகரிற் பதினைந்தாம் நூற்றாண்டிற்

பிறங்கிற் றன்றி

யேரிலகு முச்சங்கங் களினுமெண்பத் தாறுநூ

றிரண்டு நீங்க

நேரிலகு நூல்களரங் கேறினவந் நூல்களெங்கே

நீர்வா யன்றோ. 7

ஏரணமென் றிடுபாட லதனில்வரு நூல்களெல்லா

மெங்க ணாட்டிற்

காரணமா யிருந்துபல கலத்துறையு மொளிவீசக்

கற்ற வல்லோர்

சீரணமா யினரேனு மன்னவராற் செய்துவைத்த

சிற்ப நுட்பம்

பூரணமா யின்றுமுள வந்நூல்கள் புணரியின்வாய்

புகுந்த வன்றே 8

ஆதலினாற் பலநூல்கள் தமிழ்நாட்டி லரியனவா

யாழி வாயிற்

போதலுற மற்றுளநூல் துருக்கரது படையெடுப்பாற்

பொறியிற் பட்டுச்

சேதமுற வெஞ்சிய சிதலைபுழு வாதியசீர்

சிதைத்து நூறிச்

சாதலுறும் பேறுபெற்றா லெங்ஙனுயர் வெடுத்தியம்புஞ்

சாதி யாவார். 9

மின்னேரி கந்தளாய்க் குளவமைப்பும் பொலனருவை

மிளிரு லோகத்

தின்னூரு முருவங்கள் தாச்மகால் கட்டடங்க

ளியன்ற தஞ்சை

தன்னேருங் கோபுரம்மா வலிபுரத்துச் சிற்பநுண்மை

தளிக ளாதி

பொன்னோங்கு குகையசந்தா சிகிரியாப் படிமங்கள்

போற்றார் யாரே. 10

ஆடவர்போல் மடந்தையரு மாயுள்மறை நூலுணர்வி

னறிஞ ராகிப்

பீடமுயர் மருத்துவரா யிருந்ததுவும் பரிகரிக்கும்

பிரச வத்தின்

கூடலுறும் மருத்துவிச்சி யாயினது மந்நாளிற்

குலவு மெங்கள்

பேடகமாம் பரதகண்டந் தனின்முதலென் றெடுத்தியம்பும்

பெருமை யுண்டே. 11

சரித்திரவா சிரியர்பிதா வெனுங்கெரடோ டசுவென்பர்

தருக்கள் மீது

தரித்திரமில் வளர்மயிரா மிஃதாட்டு மயிரினுநற்

றரமுஞ் சார்புந்

தெரித்திடுபோல் விலையுயர்வுங் கொண்டதிந்தி யாம்பருத்திச்

செல்வ மென்று

விரித்துரைத்த மொழியிந்நாள் வேற்றரசால் வெறுமொழியாய்

விளங்கிற் றன்றே. 12

எலிமயிரென் னுந்தொடரை யெடுத்தாண்ட தமிழ்நூல்க

ளெழுத முன்னர்க்

கலிகடந்த பிறநாட்டு வணிகமக்க ளாட்டுமயிர்க்

கலிங்கங் கூறும்

வலிமிகுந்த மொழியாலவ் வெலியாட்டுக் கொருபெயராய்

வழக்கு வீழ்ந்து

மெலிவடையா நின்றனவே தமிழ்நாட்டிற் றிரிபுமொழி

மிகவு முண்டே. 13

காவிரிப்பூந் துறைமாந்தை முசிறிதொண்டி முதலான

கரையி னெல்லாந்

தூவிமுத்து மிளகுதந்தம் துணிமணிகள் கருங்காலி

தூவெண் பட்டு

நாவியகில் முதற்பொருள்கள் கொண்டேற்று மதிபுரியும்

நாவா யோடு

மேவியுறைந் தனர்யவன ரெனிலந்நாள் வணிகமுறை

விளம்பற் பாற்றோ. 14

வேறு

இத்தகை விரிந்த வறிவுபெற் றிருந்த

விந்திய நாட்டுட னிலங்கை

வித்தக நிலையி னிழிந்தது பெரிய

விந்தையன் றொவ்வொரு தொழிலுஞ்

சித்திசற் றில்லாச் சிலவகுப் பார்க்கே

சேர்ந்ததென் றொழித்தபுன் மதியாற்

சத்திகெட் டழிந்து தாழ்ந்ததற் கேது

சாற்றுதல் மிகமிக நன்றே. 15

வண்ணை, வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல்

காப்பு

திருமேவு மணிமார்பத் தேவ தேவன்

சீர்செறியும் வண்ணைநகர்ச் செம்பொற் கோயில்

உருமேவும் பரமபதத் தொருவன் வேழ

மோலமிட முன்னின்ற வுயர்வொப் பில்லான்

மருமேவுந் துளபத்தார் வேங்க டேசன்

மலரடிக்கே ஊஞ்சலிசை மகிழ்ந்து பாடத்

தருமேவு தமிழ்மறைசொல் குருகூர் நங்கை

தந்தவருட் சேய்மலர்தாள் சிந்திப் பாமே.

நூல்

பங்கயனு முருத்திரனுங் கால்க ளாகப்

பராபரமே மணியார்ந்த விட்ட மாகப்

பொங்குகலை ஞானமொடா கமநூ லங்கம்

பொருந்துமுப நிடதமுறுக் கிழைய தாகத்

துங்கமிகு நால்வேதங் கயிற தாகத்

துலங்குபிர ணவமேபொற் பலகை யாக

மங்குல்தவழ் சோலைசெறி வண்ணை மேவி

வாழ்வேங்க டேசுரரே யாடீ ரூஞ்சல். 1

துய்யபர வெளியேநல் விதான மாகத்

துலங்குடுக்கள் நவமணியின் மாலை யாகப்

பொய்கையொடு மூவர்தமிழ் விளக்க மாகப்

போதாந்த மங்கலவா லாத்தி யாகச்

செய்யவனுங் கலமதியுங் கவிகை தாங்கத்

திருமகளார் வலமார்பிற் சீர்கொண் டாட

வையமதில் வளஞ்செறியும் வண்ணை மேவி

வாழ்வேங்க டேசுரரே யாடீ ரூஞ்சல். 2

மன்னுமறம் பொருளின்பம் வீடு நான்கும்

மருவிநிரை சாமரையின் தொகுதி யாகப்

பன்னுவடந் தொட்டமரர் பணிந்து தாழப்

பரமபதத் தடியர்குழாம் பாதந் தாங்கச்

சின்மயசிற் பரவடிவே யாடீ ரூஞ்சல்

திகழ்கருடத் துவசவே யாடீ ரூஞ்சல்

வன்னமணிக் கோபுரஞ்சேர் வண்ணை மேவி

வாழ்வேங்க டேசுரரே யாடீ ரூஞ்சல். 3

செம்மலர்த்தாட் பரிபுரமுஞ் சிலம்பு மாடத்

திருமார்பிற் கௌத்துவமுந் திருவு மாடக்

கொம்மைபெறு புயமீதிற் றுளவ மாடக்

குலவுகரத் தாழிவளை கூடி யாடச்

செம்மல்முடிக் கருஞ்குழலுஞ் சுரும்பு மாடத்

தேறுமுக மதியருளுங் குழையு மாட

வம்மெனுஞ்சீர்க் கொடியாடும் வண்ணை மேவி

வாழ்வேங்க டேசுரரே யாடீ ரூஞ்சல். 4

தடமறுகிற் குடமாடித் தழல்வாய் நாகந்

தன்மீது நடமாடித் தாழி காடிக்

குடமுறுபால் தயிர்க்காடி வெண்ணெய்க் காடிக்

கோலியர்தம் மனைதோறுங் குலவி யாடி

இடமுறுமென் னகத்தாடி ஈமத் தாடி

இரவுதவிர்த் தாடிவரு மீசா என்றும்

மடல்விரியு மிணர்க்காவின் வண்ணை மேவி

வாழ்வேங்க டேசுரரே யாடீ ரூஞ்சல் 5

எவ்வுயிர்க்கும் பராபரரே யாடீ ரூஞ்சல்

இனியதமிழ்ப் பின்னடந்தீர் ஆடி ரூஞ்சல்

கௌவைதவிர்த் தாள்பவரே ஆடீ ரூஞ்சல்

கருடனுரத் திருவடியீர் ஆடீ ரூஞ்சல்

தெவ்வருயிர்க் காழிகொண்டீர் ஆடீ ரூஞ்சல்

திருமகளின் மணவாளா ஆடீ ரூஞ்சல்

மௌவல்நகை வாய்ச்சியர்சூழ் வண்ணை மேவி

வாழ்வேங்க டேசுரரே யாடீ ரூஞ்சல். 6

சாரங்க பாணிசம்பு சங்க மேந்தி

தாமோத ராமுகுந்தா சலசை கேள்வா

சீரங்க வாசவனே கேச வாநீள்

திரிவிக்ர மாபதும நாபா சீலா

ஆரங்கொள் வனமார்பா மணிவண் ணாவென்

றணிமுறுவ லரம்பையர்சீர் வடந்தொட் டாட்ட

வாரங்கொ ளடியார்சூழ் வண்ணை மேவி

வாழ்வேங்க டேசுரரே யாடீ ரூஞ்சல். 7

ஆரணத்து முதற்பொருளே ஆடீ ரூஞ்சல்

அக்கரமெட் டானவரே ஆடீ ரூஞ்சல்

வாரணமுன் வந்தவரே ஆடீ ரூஞ்சல்

வாட்கலியன் மொழியுவந்தீர் ஆடீ ரூஞ்சல்

நாரணநான் முகவரனே ஆடீ ரூஞ்சல்

நாதாந்த வடிவுடையீர் ஆடீ ரூஞ்சல்

வாரணங்கள் முழங்குவயல் வண்ணை மேவி

வாழ்வேங்க டேசுரரே யாடீ ரூஞ்சல். 10

எச்சரிக்கை

சீரார்வண்ணை யூராவரு ­ரா குல்லைத்தாரா

திருமாதுறை யொருமாதவ தேவா எச்சரீக்கை

கூராழிசங் கேரார்கரத் தீரா பரநீரா

குணபூசன வீபூசண குருவே எச்சரிக்கை

ஆராவமு தனையாயடி யாராவமு தனையாய்

அண்டாவரு கண்டாகண்டன் விண்டே எச்சரிக்கை

வீரா அரி யூராபுரி கோராஅவ தாரா

விமலாவிழிக் கமலாதரு வமரா எச்சரிக்கை. 1

காயாமலர்க காயாவெண்ணெய் வாயா எச்சரீக்கை

கதிராழிகொண் டுருளாழியைக் காத்தாய் எச்சரீக்கை

ஆயாதயைக் காயாவருட் டூயா எச்சரீக்கை

அடியாரிடர் பொடியாவரு நெடியா எச்சரீக்கை

வேயாஎச்ச ரீக்கைமுகிழ் மாயா எச்சரீக்கை

மேலோய்எச்ச ரீக்கதிரு மாலோய் எச்சரீக்கை

நேயாஎச்ச ரீக்கைவண்ணை மாயா எச்சரீக்க

நீண்டோயெச்ச ரீக்கையென்னை யாண்டோ யெச்சரீக்கை.

பராக்கு

திருவளரும் வண்ணைநகர்த் தேவே பராக்கு

சீர்வளரும் மகிழ்மாறன் பாவே பராக்கு

பெருவளமை தருமுருக பேறே பராக்கு

பின்னைமகி ழன்பான கூறே பராக்கு

அருவளரும் விசையனை யளித்தாய் பராக்கு

அந்தணன் புதல்வரை யளித்தாய் பராக்கு

கருவளரு முயிருறையுங் கர்த்தா பராக்கு

காலிங்கன் மீதருளு நிர்த்தா பராக்கு. 1

யாதவ குலத்தெழுங் கதிரே பராக்கு

யாதவ பராக்கீதை ஆதவ பராக்கு

மாதவ பராக்குவா மனனே பராக்கு

மாயா பராக்குவண மாலீ பராக்கு

பூதர பராக்குநதி பூத்தோய் பராக்கு

புண்ணிய பராக்குபுரு டோத்தம பராக்கு

சீதர பராக்குப் பராக்குதிரு வேங்க

டேசா பராக்குப் பராக்குப் பராக்கு. 2

வாழி

நீராழி வண்ணனடி நினைப்போர் வாழி

நிறைமொழியோர் பசுநிரைகள் நிதமும் வாழி

பேராழி மன்னுலகிற் பெருகி வாழி

பிறங்குவண்ணை நகர்வாழி புலவர் வாழி

சீராழி சங்குகதை சிலைவாள் வாழி

சீரியகற் புடைமயறஞ் சிறந்து வாழி

வாராழி சூழிலங்கை வடபால் வண்ணை

வாழ்வேங்க டேசுரன்றாள் வாழி வாழி.

கதிரை நான்மணிமாலை

நேரிசைவெண்பா

உற்றமணி மாணிக்க வொண்ணதியின் மீனினங்கள்

பெற்றதவ மென்னே பெருமானே - பற்றியகை

வள்ளியம்மைத்தாயினொடுமாண்புலாட்டோங்குகையிற்

றுள்ளியநீர் தோயச் சுகம். 1

கட்டளைக்கலித்துறை

சுகமஞ்சுசெஞ்சொற்றுணைவியர்பாங்குறத்தோகயின்மே

னகமஞ்சு வேற்படை கொண்டுநக் கீரர் நவைதவிர்த்தோய்

இகமஞ்சு புன்மை தவிர்த்தெனை யாள விதுதருண

மகமஞ்சு சோலைக் கதிர்காம நாத வடைக்கலமே. 2

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

கமலற் றழிந்த மங்கையருங் கையிற் பொருளற் றிழிந்தவரு

நலமற் றவையிற் சோபனத்தி னாடல் தவிர்கை நானிலத்திற்

புலமுற் றதனா லுன்பாதப் போதுள் ளிருத்தப் புரிகண்டாய்

குலமுற் றதிருங் கதிரைமலைக் குகசண் முகசிற் குமரோனே.

நிலைமண்டல ஆசிரியப்பா

குமைபடிற் றொழுக்கமுங் குற்சிதத் தொகுதியும்

பொய்யும் விருப்பும் புலைபினி யடுக்கு

நையு மிடும்பையு நாணுடை மறவியு

மைய மொராஅ லையமு மினையன

பல்பொருட் பொதிகள் பாங்கட் னேற்றி 5

வினையெனு மீகான் விடுப்ப வந்நிலை

கருவெனு நீணகர்க் கார்த்துறை நீரகத்

தைம்புலச் சுறவ மலமந்து தொடரப்

பிறவிப் பெருங்கடல பெரிதுற வலைக்கும்

அவலத் திரையுவட் டானாமை கொண்டு 10

பெயர்ப்பிட மெங்கணும் பிரியா துழன்றே

அயர்வுயிர்த் தகமகிழ் வடைய வவாவிப்

பற்றிய வெல்லாம் பாழ்போ யொழியக்

குடும்ப மென்னு முரண்பாறை தாக்க

வீழ்ந்து நிறையெனுங் கூம்பு முரிந்து 15

அறிவெனு நெடும்பா யலைந்து கிழிந்து

மன்னிய நன்னெறி மயங்கிய காயச்

சிறைக்கலங் கலங்குபு சிதையா முன்னம்

ஏனற் புனத்தம ரெயினர்தம் பாவையை

மார்ச்சால மாக வலங்கொண் டன்பர் 20

விழுமந் துடைக்கும் வேற்படை விமல

எழில்நதி கழீஇ ஏற்றிடுங் கோயி

லொளியுரு வாகிய வுயர்கதிர் காமத்

தையநின் னருளெனு மமைத்தார் பூட்டித்

திருவடிச் சேர்ப்பினிற் சேர்த்துமா செய்யே. 25

பண்டிதர் ம.வே. மகாலிங்கசிவம்

1891 - 1941

இவர் மட்டுவில் உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளையின் புதல்வர். தந்தையாரிடமே இலக்கிய இலக்கணங்களைக் கற்றவர். சிறந்த இலக்கிய ரசிகர். பன்னிரண்டாம் வயதிலே பழனிப்பதிகம் பாடியவர். பல தனிப்பாடல்களை இவர் பாடியுள்ளனர்.

தனிப்பாடல்கள்

பாலரவி பலகோடி செஞ்சுடர் விரித்தெனப்

படரொளிசெய் திருமேனியும்

பரிவுடன் பெற்றசீ வர்க்கெலாம் பேரருள்

படைக்குங் கடைக்கண்களுங்

கோலமுறு பவளவா யுங்கொவ்வை யிதழ்களுங்

குறுநகையு மலர்வதனமுங்

குலவுநாற் கையுமக் கையினிற் பாசாங்

குசஞ்சிலை மலர்கணைகளுஞ்

சீலமுறு மன்பதந் தஞ்சரஞ் சிதகஞ்ச

செஞ்சரண செல்வங்களுஞ்

செங்கமல வல்லியும் வெண்கமல மெல்லியுஞ்

சேவைசெய் பாராட்டுமெக்

காலமுறுஞ் சிறியனிரு கண்ணைவிட் டகலாது

காட்சிதந் தருள் புரிகுவாய்

காந்தர்கா மாட்சிநினை வாய்ந்தகா மாட்சிபுனை

காஞ்சிகா மாட்சியனையே. 1

ஓதரிய வென்குற்ற மெல்லா மொழித்தருளிப்

பாதம் பணியப் பரிசருள்வாய் - பூதத்

திடைக்கலந் தாயே யிடர்க்குடைந்தே னேழை

அடைக்கலந் தாயே யருள். 2

தொல் - சொல்லதிகாரச் சிறப்புப்பாயிரம்

மணிவளர் மிற்றுக் கடவுள்பொன் னடியை

மறக்கிலாக் காசிப முனிவன்

வழிவரு புனிதத் சின்னைய சுகுணன்

வளாதவத் தருள்புரி மறையோன்

அணிவளர் தமிழ்நூற் பரப்பெலாங் குசைநுண்

மதியினா னாய்ந்தமிழ் தெனவே

அருந்தமிழ்ப் புலவோர் விருந்தென நுகர

வளமிலாப் பொருளுரை வரந்தோன்

நணிவளர் புலமை யீழநாட் டறிஞர்

நமக்கொரு நாயக மெனவே

நயந்தினி தேத்தும் பருணித கணேச

ஞானசூ ரியனிலக் கணநூற்

றுணிவளர் தருசொல் காப்பிய வுரையிற்

றுறுமுநுண் பொருளிரு ளகன்று

துலங்குற விளங்கிச் செம்மைசெய் தனன்பொன்

னையனாந் தோன்றல்வேண் டிடவே. 3

இந்துமத பௌத்தமதத் தொடர்பு

மன்னிவள ரிந்தியா தேசமே இந்துமத

மாதேவி வாழுமிடமாம்

மாசற்ற திவ்யதரி சனமுடைய கடவுளர்

வளர்த்தவம் மதமன்யமென்

றுன்னவரு பன்மத நதிக்குலங் களயுண்

டுவட்டாத பேராழியாம்

ஒருமதத் தாலுமது வலிகெடா தெனினுமிக்

காலத்தி லொழிகுடதிசைப்

பின்னமுறு மார்க்கங்க ளிடர்புரிய நம்மதம்

பெற்றபெண் ணரசியாகிப்

பெயர்வுற் றிலங்கையப் பான்சீன மெழிலுடைப்

பிரமதே சஞ்சீயமென்

றின்னதேத் தடல்கொண்டு மிளிரும் பௌத்தமத

மீன்றவளை நோகவிடுமோ

இறைவனரு ளாமிவை யிரண்டுமே நீடூழி

யிருநிலக் கொளிசெய்யவே. 4

புன்னெறி விலக்கு

தம்முடைய சாதியைந் தம்முடைய பாசையையுந்

தம்முடைய நாட்டினையுந் தாழ்த்துரைப்பா‘ - புன்மைபெண்ணே

வேசியராய் முற்பிறப்பில் மானத்தை விற்றுண்ட

நீச சுபாவம் நினை. 5

நாட்டுப் பொருளிருக்க நாடாம லந்நியர்தம்

நாட்டுப் பொருளழகை நாடுவதேன்-வீட்டுக்

கொழுந னாகிலனென் றன்னியர்தங் கோலம்

விழைகுநரு முண்டுபுவி மேல். 6

அற்பகலா யாக்கைக் கலங்காரஞ் செய்வதினாற்

பொற்பகலா நேரநிதி போக்குகின்றார்-சிற்சிரரேன்

தீங்கில்பத நீருக்கேன் சீனிகைக்குந் தேய்நீர்க்கேல்

ஆங்கமைவ தென்றே யறி. 7

ஈழமண்டல சதகச் சிறப்புக் கவி

செய்தபிழை யெல்லாஞ் சிவனே பொறுத்தருளி

உய்யவருள் செய்யெனும்வாக்குள்ளுறையாப்-பெய்தளித்தான்

வெள்ளைக் கவியான் விதுமௌலிக் கொண்சதகம்

பிள்ளைக் கவியென் பிதா.

கண்ணுவர் சகுந்தலையை வழியனுப்புதல்

மங்கையிவள் செலும்வழியில் நறுந்தருக்கள்

நிழல்செய்து மலிக; மற்றும்

பொங்குமணல், தாமரையின் பொலந்தாது

போற்பொலிக; புனிதவாவி

எங்குமலர்த் திலங்கிடுக; மந்தமா

ருதம்வீச இனியதோகை

யுங்குயிலுந் துணையாக; அறுதொடர்க்கண்

ணுகரம்போ லுறுகதூரம்.

மல்லை நமச்சிவாயப் புலவர்

1860 - 1942

இவரது ஊர் மல்லாகம். தந்தையார் பெயர் இராமுப்பிள்ளை. இவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம இலக்கிய விலக்கணங்களைக் கற்றவர். இவரியற்றிய நூல்கள்: சிவதோத்திர யமக அந்தாதி, ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம், ஆத்மலட்சாமிர்த மருந்து, சிங்கை வேலன் கீர்த்தனைகள்,கும்பிளாவளைப் பிள்ளையார் கீர்த்தனங்கள், பல ஊஞ்சற் கவிகள் என்பன.

ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம்

தேனை நிகர்சொல் லெழாலையன் னார்நசை தீத்துயிர்கொள்

றூனை நூகர்த லிலாதுசங் கானை யுறவுதெளிப்

யானையா ரானைக்கோட் டைப்பழை யானைப் பணிந்துமன

வானை யிறவடைந் தாற்கிட்டுங் கைவன்னி யன்பதியே. 1

பாதகஞ் செய்தொல் புரத்தார் பதறப்பன் னாகந்தொட்ட

மாதக லானைத் துணைக்கொண்மல் லாகத்தர் வல்லுவெட்டி

மீதம ரந்தத் தனக்காறர் நட்பை விழைகுவரோ

வோதிமீ சாலைய ராயப் பரந்தனை யொட்டுவரே. 2

விடத்தலை நேர்மற வன்புலத் தாரை விடாதுதனங்

குடத்தனை யாரிள வாலையில் வாழ்வு குறைந்தழியுந்

திடத்தினை யுற்றறச் செம்பியன் பற்றுச்செல் வோர்சிதையிச்

சடத்தினைக் கொண்டினி யூராத் துறைதனைச் சார்குவரே. 3

மட்டுவி லானை மடக்கிப் பரன்றொண்டை யாற்றின்மதக்

கட்டுடை யார்துணை வேண்டாநந் தாவிலைக் கண்டிடலாம்

வட்டுறுவார்பண்ணை தோய்வாரிற்றாழ்த்திடின் வல்லைபறை

கொட்டி கேட்குமுன் னாவரங் காலர்கைக் கொள்ளுவரே. 4

முன்னீ வினைபருத் தித்துறை மேவிய மூளையர்தா

மன்னாரில் வாழ்விற் றனங்கிழப் பார்பல வஞ்சரைமெய்

துன்னாலை யிட்டு வறுத்தலை மேவிச் சுழிபுரம்போய்ப்

பன்னா லையநணி யத்வாம் புலத்திற் படிகுவரே. 5

நச்சியல் சொன்மத வாச்சிக ணட்பொடு நாடும்வட்டக்

கச்சியை யும்முலைத் தீவையுங் கண்டுங் கருதுவரோ

மெச்சுவ ரோவினிப் புத்தூரை மேதியி லூரெழுவா

னச்செழு வான்வர முன்சங்கர சத்தையை யண்டனன்றே. 6

அணைவியை யாச்சித்தங் கேணியர் பண்டத் தரிப்புடனே

துணைவியை நீங்கிலென் கந்தர வோடையிற் சென்றிருந்தென்

கணையலை காலி யுடுப்பிட்டி யாருங் கரவெட்டிவந்

திணையடி சூடினுங் கோப்பாயைச் சேர்வ தெளிதலவே. 7

நாரந் தனையுடை யான்பூ நகரிபி னண்ணுடையான்

றேருஞ்சுன் னாக முடையானைச் சாவகச் சேரிதுரீஇ

வேர்வந் தளவெட்டி பச்சிலைப் பள்ளி விளாங்குளம்போய்ச்

சேரும் படிசெலக் காரைக்கா லாள்கையிற சிக்கினனே. 8

தையிட்டி யைவம்பர் தாக்க வெறிசர சாலையர்தா

மையிட் டிழுக்க மயிலயன் னாரின் மயங்கிநிதம்

பையுற் றடுங்கொடி காமத் தழுந்திப் பதனிதிரைத்

தச்சங் களைகொளக் கைதடி கொள்ளு மறிந்துண்டே. 9

நற்சங்கு வேலியை யுங்கள கோவளர் நட்பவமாங்

கச்சங் குயவர்பண் டித்தலை யேறுவர் கட்டுவன்னக்

குச்சம ராடர்கொள் வார்கொக் குவில்பற்றை மேனிதிரைந்

தச்சங் களைகொளக் கைதடி கொள்ளு மறிந்ததுண்டே. 10

தாவப் பலாலிகா ­ர்வேலி யார்படி தாவடியான்

மாவைப் புரிமுக மாலயன் றேடும் வயவையன் பிற்

போயிட்டி யையுறு வார்க்குநல் லூரைப் புரிவன்மண்டை

தீவைத் தெரிக்குமுன் னேயொட்ட கலப்புலந் தீத்துய்யவே. 11

வடுமானிப் பாயவ ராலிய னோக்கியர் மாயவலைப்

படுவே னவாலி யரியாலைப் பள்ளியன் பற்றுடனீந்

திடுமாத் தனயனைக் கோண்டாவி லோடு மிறந்தொழியச்

சுடுவா னுடுவி லுடையான் சடையற் றுதிக்கிலனே. 12

தெருமந் துவிளந் தனபுரு வக்களச் சீரணியா

ரொருதந் துறளிடைக் காடுநெஞ் சேயொத்துக் கரணவா

யருமந்த வேலைவிட் டாயச்சு வேலி கடந்தெல்லிபோல்

வருமந்த கன்க யுறிற்கைச்ச தீவினை மற்றுறுமே. 13

கண்டிக்கு நேர்சொற் கொழும்புத் துறைவஞ்சக் கட்செவிஞ்

சுண்டிக் குழியிலை யன்னார்தம் பாலையு வந்துமன

மண்டிப் பரந்து சுடும்வீமன் காமவெவ் வாளியிற்பட்

டண்டத் தனையுங்கை விட்டிரு பாலையு மற்றதுவே. 14

அக்காரை யூர்சக் கிரிவாழ்வு மந்தப் புரத்தொடவை

மிக்கார்ந்து தேசண் டிருப்பாய் நவக்கிரி மேயதென

மைக்கா ருறைமனை வண்ணாநற் பண்ணை வளமுங்கள்ளி

யங்காட் டினளுற பும்வேண்டி லர்மிக் கறிந்தவரே. 15

சிறுப்பிட்டி நேர்தனச் செம்மணி யார்ச்சித் திரமொழியா

னிறுப்புற்ற நேய நிகளத் துரும்ப ராய்சிறுநூல்

விருப்புற்று நித்தம் பயில்வேன்சில் லாலைய மேவினுநெஞ்

சொருப்பட் டுறேனெனக் குண்டோ சுதுமலைக் கேகுவதே. 16

அந்நாயன் மார்க்கட் டணியாரங் கீரி மலையவரம

முன்னாள் வழுதி பிரம்பூ றணிபுன்னை முன்னிணைவிற்

றன்னா லடியணி காங்கேயன் றந்தையைத் தாழ்மனமே

பொன்னாலை றன்றன் றிருவடி சேர்நிலை புல்லுதற்கே. 17

பொன்னைப் புகழ்திரு நெல்வேலி யில்லநற் புத்திரை

மின்னற் பலத்தி யடியலை யென்ன விலகவிட்டு

முன்னைத் தவவலி கொண்டவ்வல் வாய்வினை முட்டறுத்துத்

தன்னை யறிந்தவர்ச் சேர்ந்தான் களநஞ்சத் தற்பரனே. 18

மாகயப் பிட்டியை தகன்வந்து வாவெனின்மே

லேகுவங் காலையென் றானாவ லங்குழி யிட்டுதைக்கும்

போகவென் றாலந்த மாதோட்டத் தாரெமைப் போற்றிடுவார்

சாமு னாந்தர்மஞ் செய்திருந் தாற்பயஞ் சற்றிலையே. 19

கரம்பொனிட் டாலல மாமாங் குளங்கொண்டு கச்சமர்பூங்

குரும்பையிட்டீவளலாயநசை கொள்ளவ் வெள்ளப்பரவை

திரும்பவொட் டாதாழ்ப்பர் வேசியர் சேர்வரி தேகரயூர்

பெருந்துறை யென்றன்பர் பேசா லயவருட் பேறருளே. 20

மருதயி னாமட மாதுல னஞ்சச்செய் மால்வணங்கி

யுருகிவிள் ளாநின்ற மாலையன் விண்டனி யூறடையப்

பொருதசூ ராபத்தை பூணக்கை வேலணை செட்டிக்குளம்

பெருகுமன் பானந்தச் சம்புத் துறையணை பேறிரிதே. 21

மெய்ந்நூல்கள் லாக்கட்டு வன்மாசு தோய்ந்து விளைமுமலப்

பைசார் புலோலிக ளாண்முள் ளியவளை பன்னரிய

நைவா ரிரண மடவென்றிக் காயத்தை நாடியறிந்

துய்வார் பொறிமயி லப்பைய னாரரு ளுன்னிநெஞ்சே. 22

கிளிநச்சி யன்மொழி யன்னுங்கை யோதிநற் கேழ்கிளர்மை

யொளியுற் றிடவெழு துமெட்டு வாள்விழி யோதரிய

களியுற்று மாரியங் கூடலைக் காணம் மயிலியலா

ரளிபற் றிடாதெங்கு முள்ளானை நெஞ்சத் தமைத்திடினே. 23

என்றுமுள்ளாத்தனையீற முருக்கைம் புலத்தைச்செம்பொன்

குன்றன் புகழை நுணுவில்வை நித்தமுங் கோதகல்சீ

ரொன்றும்வற் றாப்பழை யார்சாது சங்கத்தை யொட்டுநெங்சே

சென்றுமன் றாடியை மன்றாடு முன்வினை தீர்ந்திடவே. 24

சொல்லுயர்ஞான மிகமண்டு மண்டையர் சோர்வடையார்

வல்ல விலாங்குடை வான்மதி கொண்டிங்கு வாழ்வர்கன்ம

வல்லலைக் கொத்திய வத்தை யறநெடுத் தீவிளைத்துப்

பல்லவ ராயர்கட் டாயன் பணிகழல் பற்றுவரே. 25

சாவகச்சேரி ச. பொன்னம்பலபிள்ளை

1862 - 1942

இவர் சாவகச்சேரியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை என்பவரின் புதல்வரின் புதல்வர். வித்துவசிரோமணி ந.ச. பொன்னம் பலப்பிள்ளையிடமும், மட்டுவில் வேற்பிள்ளையிடமுங் கல்வி கற்றவர். சுன்னாகம், இராமநாதன் கல்லூரித் தமிழ்ப் பண்டிதரா யிருந்தவர். இவர் இயற்றிய செய்யுள் நூல்கள்: 'இராமநாத மான்மியம்', 'அருணாசல மான்மியம்', 'பன்றி மலையசரன் கோவை', முதலியன.

அருணாசல மான்மியம்

சர்வகலாசாலைத் தாபனம்

இந்த நாட்டினுக் கெதினெதி னேற்றங்க ளெனவே

முந்த முன்னினன் முனைமுறை சிலச்சில முடித்து

வந்த மன்னவ னின்னமும் வேண்டுவ மதித்தே

யந்த நாளினி னருஞ்செய லொன்றினை யறிந்தேன் 1

சென்னை கற்கையே பம்பையா நகர்களிற் சிறக்க

முன்னை தொட்டிது முகமென வமைந்தது முறையே

யென்னை யிப்பெருங் கொழும்பினுக் கில்லையென் றிருக்கிற்

பின்னை யிவ்விலங் காபுரிக் கென்னைகொல் பெருமை. 2

இலக்க ணத்துடன் கணிதமு மிரண்டுகண் ணிவற்றிற்

லுலக்க முற்றவ ரிலங்கைநர் மாணவர் துரிதர்

வலக்க ணேர்கலா சாலையு மிவ்விடை வருமேற்

கலக்க மற்றிவர் காண்குவர் கலக்கடற் கரையே. 3

என்று தானிது வந்திடும் வந்திடி னெனக்கு

மன்று தான்றுயில் வந்திடு மென்றுதன் னகத்தி

லொன்று தானகோ ரரத்திரம் நினைவதா யுறைந்தான்

நன்று தானென நாடுகின் வருவது நலனே. 4

பாரி னல்லவ னீழமென் றெடுத்திவன் பகர்ந்த

வூரி னல்லவ னுத்தமன் கலைகளி னுயர்ந்த

பேரி னல்லவன் சேரரு ணாசலப பெரியவன்

றேரி னிச்செய லுலகினிற் செயற்கருஞ் செயலே. 5

வேறு

மட்டிவண் புகல வொண்ணா வாலறி வுடைய வள்ளன்

முட்டிவ ணிதுவே யென்னா முழுவது முன்னி முன்னி

யட்டிவண் வேண்டி யேதொள் ளாயிரத் தாறா மாண்டு

தொட்டிவ ணதற்கே யான தொடக்கங்கள் செய்வ தானான். 6

பன்னவு முடித்து மென்றே பகரவு முயல்வ தென்னா

வுன்னவு மரிய நான் யூனிவே சிற்றி யிங்கே

யென்னவு மின்னு மிந்த விலங்கைக்கு மகுட மாக

மன்னவுஞ்செய்யவையன் மகாசபையொன்று சேர்த்தான். 7

குலத்துளோர் தம்மைமேலாங்குறைதவிர் செல்வர்தம்மைத்

தலத்துளோர் தமக்கு ளின்னுந் தகுமுத்தி யோகர் தம்மை

நலத்துளோர் தம்மை யாய்ந்தே நாடிய கரும சித்தி

வலத்து ளோனானமன்னன் மகாசபைக்கங்கஞ்செய்தான். 8

நாட்டமா மவைக்குத் தானே நாயக மாகி யேந்தல்

வாட்டமா மனத்த னாகி மன்னிய குறைகள் காட்டி

நீட்டமா மதிப்பின் மிக்கீர் நிறைதரு புகழின் மிக்கீ

ரீட்டமா மறிவின் மிக்கீர் கேண்மினென் றிவற்றைச் சொல்வான்.9

சீர்வள மான தேயஞ் செழிப்புள தான தேயம்

நீர்வள மான தேயம் நெடுநிலத் தரிய தேயம்

பேர்வள மான தேயம் பெற்றவர் நேருந் தேய

மேர்வள மான தேய மெங்கணல் லீழ தேயம் 10

கதித்திடக் கற்றல் வேண்டுங் கைத்தொழில் பயிறல் வேண்டும்

துதித்திடற் கரிதே யான தொழில்களைச் செய்தல் வேண்டு

மதித்திடத் தக்க வுத்தி யோகங்கள் வருதல் வேண்டுந்

திதித்திட வந்த வீழ தேயமே லோங்க வேண்டும். 11

உன்னரு முயர்ச்சித் தான யூனிவே சிற்றி யென்னும்

முன்னரு மறிவு சான்ற முதற்கலா சால யொன்று

நன்னய மாக விங்கே நண்ணுமே லிலங்கை தானு

மென்னதான் சொல்லு மைய யாரிதை யெண்ணு கின்றீர். 12

ஒளியிலா மணியைப் போல வுயிரிலா வுடம்பைப் போல

வளியிலா வறத்தைப் போல வணியிலா மாதைப் போலக

களியிலா ரருமைத் தாய கழகமீ திலாத போதிற்

றெளியிலா தீழ தேயஞ் சிறப்புப்பெற் றிருத்த லில்லை. 13

நட்டமே யான யாவு நாட்டினுக் குதவி யாக

வொட்டவே நாடி நானும் யூனிவே சிற்றி யொன்று

பட்டமே லின்னு மின்னும் பயிலவே தகுதி யென்னக்

கட்டமேயிலங்கைக்கென்னாக் காட்டினன் மறுப்புமன்னன். 14

எவ்வௌர் தமக்கு மெங்க ளிலங்கைமே லுதவி யாக

வல்லவ னறிஞன் றன்மன் ளமலி யீழ நாட்டி

னல்லவ னென்றே யென்றும் நற்பெயர் நிலைத்து நிற்கச்

செல்லவ ணாயி ரத்துத் தொளாயிரத் திருபா னொன்றில். 15

ஈட்டினா விலக்கே யில்லா னேற்றபல் வருடங் காறுங்

காட்டினா னெடுத்துக் காட்டு காட்டித்தா னெடுத்துக் கொண்ட

பாட்டினா லீழ மென்னும் பாவைநேத் திரமே யாக

நாட்டினான் கொழும்பி லிந்த நற்கலா சாலை யொன்றே. 16

வேறு

அன்ற தாக வருமைக்கல் லூரியை

நன்ற தென்றிட நாட்டின னாட்டியே

யென்ற தேயென வெத்திசை தன்னினும்

பொன்ற லின்றிப் புகழையு நாட்டினான். 17

தோன்ற வென்னிற் புகழொடு தோன்றெனச்

சான்ற நூலுகள் சாற்றிய வாய்மைபோ

லேன்ற கேள்வி யிலங்கரு ணாசல

மான்ற சீரொ வனியிற் றோன்றினோன். 18

இன்ன வீழத்துக் கின்றி யமைகலாச்

சொன்ன வேற்றந் துலங்குங்கல் லூரியை

மன்ன னிங்ஙனம் வாய்ப்ப புதவிய

வன்ன நன்றிக் கறிகுறி யாகவே. 19

இன்ன தாக வியற்றுங் கழகத்துள்

வன்ன மாயரு ணாசல மாளிகை

யென்ன வென்று மிவன்பெயர் நீடித்தே

மன்ன வேயொரு மண்டபங் கோட்டினார். 20

யாதை யோதுவதும் யாதைக் கருதுவந்

தீதை யோட்டித் திகழங்கல் லூரிக்கே

யேதை மாருக் கிரங்கரு ணாசலந்

தாதை யென்றுதே சாதிபன் சாற்றினான். 21

முந்தை வேந்தன் மொழிந்த முறைப்படி

சிந்தை தேர்ந்தனர் யூனிவே சிற்றிக்கு

விந்தை பெற்று விளங்கரு ணாசலந்

தந்தை யென்றென்றுஞ் சாற்றுவர் யாவரும். 22.

இராமநாத மான்மியம்

அமெரிக்கர் காட்சி பெறுதல்

வானுலவும் பச்சிலைக ளடர்ந்து சேர்ந்து

வயங்குமிளங் கிசலயங்கள் பொதுளத் தந்து

தேனுலவு மதுகரங்க ளிசைத்து மொய்க்கச்

சீதநறு மணிமலர்க டிகழப் பூத்தக்

கானுலவுங் கிளைகடொறுங் கருத்துங் கண்ணுங்

கவர்ந்துபல நிறவிசைப்புள் ளினங்கள் பாட

மானுலவு மதியமுத கிரண மென்ன

மன்னுநிழற் றண்டலைகண் மலியப் பெற்றும். 1

பந்தமுற வலர்ந்தவெண்மை செம்மை யின்னும்

பலநிறமு நோக்கமுறக் கவினு கின்ற

கந்தமுள மலர்ச்செடிக ளிலைகண் மின்னக்

கைநிரைமேற் கோணவட்ட முறையின் வைத்த

நந்தவனக் காட்சிதனக் குலகி லிந்த

நந்தவன மென்பதலா லுவவை யுண்டோ

விந்தவன மிடமிடங்க டோறு முள்ள

விமையவரா ராமமென விளங்கப் பெற்றும். 2

விண்ணளவு மடுக்குமனை விரும்பு தெற்றி

வேந்தரரண் மனையமைச்சர் சங்க மன்றம்

பண்ணளவு சபையரங்கம் பத்தி முற்றப்

பணிகுநர்தே வாலயங்கள் வகுப்புக் கேய்ந்த

வெண்ணளவு கழகவிதம் விநோத சாலை

யேற்றவபி டதந்தரூபண் டிதர்கள் வைப்புக்

கண்ணளவு நெடுவீதி கவலை சந்தி

கண்டகண்ட விடங்கடொறுங் கவினப் பெற்றும். 3

தனமுடையோர் வறிஞருக்குங் கலைகற் போர்க்குந்

தமதுமதம் பரப்புநர்க்குஞ் செய்யுந் தர்ம

மனமுடையோ ரறிவுடையோ ராழ்ந்த பத்தி

மாண்புடையோர் தாழ்ந்தகுணந் தயாவு தம்மாற்

கனமுடையோ ருலகிலின்றி யமையா தாகத்

கண்டசித்திக் கைத்தொழிலை விருத்தி யெய்தத்

தினமுடையோ ரானவிவ ரமரப் பெற்றுஞ்

சீர்படைத்துத் தான்சிறந்த தமெரிக் காவே. 4

காயமது பொருளாகக் கருத கில்லான்

காசினிக்க ணொரபாலுற் றழகு வாய்ந்த

தேயமது காண்பலெனக் கருதி யொன்றுஞ்

சிந்தைகொளான் கலமூர்ந்து சனமுங் கொண்டே

நேயமது தூண்டநெடு நாட்கள் சென்று

நினைவுமுடி பாகவென நினைந்து சென்ற

தாயமது பெற்றகாலம் பசுமுன் கண்ட

தனிநாவின் மேற்சிறந்த தமெரிக் காவே. 5

குடியரசு வழுவாமற் றனிக்கோ வோச்சிக்

குறைதவிர்க்கு முறைமையுள வமெரிக் காநன்

முடியரசு போலுமதோ வெனவு முன்னூன்

மூதறிவு மிருக்குமதோ வெனவு மின்னும்

கடியரசு போலாத நலஞ்சா றேயக்

காட்சிகளைக் கருதியுமே யிலங்கு மீழப்

படியரசு புரக்குமமைச் சியலின் வாய்ந்து

பரவுபுகழ்ச் சேர்ராம நாத வையன். 6

ஆய்ந்துரு மாயிரத்தின் மேலுந் தான்றொள்

ளாயிரத்தி யைந்தாகு மாண்டு தன்னிற்

றோய்ந்துவரும் லிகிதருடன் றொன்மை பெற்றுத்

தொடர்ந்துவருங் காப்பினரு மெய்த வங்கே

யேய்ந்துவரும் பெருஞ்சலதி கடந்து பன்னா

ளெழில்வளங்கள் சாலமெரிக் காவு கண்டே

வாய்ந்துவருந் தனதருமா னந்த னோடு

மற்றுளரு மெதிரழைக்கக் கலந்தங் குற்றான். 7

கோனிருக்கு நகரதனுட் டலைம பெற்றுக்

குலவுசுகந் தரவமைத்துத் திகழ்வ தான

தானிருக்கு மாளிகைமே லவாவுற் றங்கட்

டகுமமைச்சர் தனமிகுந்தோ ரறிஞ ரின்னும்

வானிரக்குந் திரியேக பரன்பா லன்பு

வரும்போத காசிரியர் மற்று முள்ளோர்

தேனிருக்குந் தாரகலத் தண்ண றன்னைத்

திரடிளாய்த் தினந்தினமுங் காண்ப ரம்மா. 8

நீட்சியுட னுன்னதமும் பளிங்கிற் செய்தே

நிலவுநிரைக் கதவுகளுஞ் சிகர வைப்புங்

காட்சியுட னுலவுபல கணியு மன்னுங்

கல்லூரி தொறுந்தொறும்வந் தழைக்கச் சென்றே

யாட்சியுட னவர்நூலுண் ணாழ்ந்தங் குற்ற

வரியகருப் பொருளிதுவென் றெடுத்துக் காட்டி

மாட்சியுட னற்புதமு மன்புந் தோன்ற

வகைவகையாய்த் தானுபன்னியாசஞ் செய்தான். 9

கள்ளுறையுந் தாரழகன் வாக்கொவ் வொன்றின்

கனிவினையுஞ் சுவையினையுமொளியுட் கொண்டே

வள்ளுறையுட் புகம்வாளின் மறைந்து மன்ன

வரைந்தவர்தாம் வைத்திடுவாக் கியங்கட் குள்ள

வுள்ளுறையுட் பொரளினையு நலித்துந் தாழ்த்து

முயர்த்துமொழி திறந்தனையுங் கூடுஞ் சங்கத்

துள்ளுறையும் பேரறிஞ ருவந்து கன்னத்

தூற்றியபுத் தமுதமெனத் தெவிட்டா துற்றார். 10

மேலுமுயிர் பதிவாச மூன்று மென்னு

மேவுமிவை தாமாயி னநாதி மண்மே

லேலுமுயிர் சுடச்சுடரும் பொன்னை யொப்ப

விருவினைக ளொப்பளவு முடலைக் கொள்ளுஞ்

சாலுமுயிர் தானொருக்கா லிரண்டு மெய்தல்

சாலாது சாலுமென றகுதி யன்றா

லாலுமுயிர் பிறப்பினுறும் பேத மென்னி

னதற்குவினை முன்னிருந்த தாகு மென்றும். 11

ஆய்ந்தபல நூலுணர்வா லளவை தானு

மமைந்தவுதா கரணமுட னெடுத்தக் காட்டி

வாய்ந்தபல கட்டரையா லவாதாந் தேற

மதியிருளுக் கொருசுடரங் குதித்த தென்ன

வேய்ந்தபல மதநிலையுந் தெரியத் தந்தே

யியம்புபன்னி யாசமழை பொழிய வங்குத்

தோய்ந்தபல ருதன்வாய்மை யுள்ள முற்றுந்

துணிந்துளங்கொ ளாசங்கை யகல்வ தானார். 12

முந்துமுகங் கண்டளவி லிருந்த தங்கண்

முகத்தினுந்தான் மொழியமுத வாரி பொங்கிச்

சிந்துமுகங் கொடுத்தளவிற் றேநேர் வாக்கைச்

சித்தசனே ரணியுரவைக் காத லித்தே

தந்துமுகங் கொண்டாடித் தமைத்தாங் காணாத்

தலைசிறந்த களிதூங்க நித்த நித்தம்

வந்துமுகங் கொண்டேக வவர்க்குத் தானோர்

மதித்ததனி விருந்தாகி வதிவ தானான். 13

தம்பு உபாத்தியாயர்

1863 - 1943

இவர் வேலணையைச் சார்ந்த சரவணை என்னும் ஊரினர். வேலணைக் கந்தப்பிள்ளையிடங் கல்வி கற்றவர். புராணபடனஞ் செய்பவர்.

இவர் பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் மீது பல தனிப்பாடல்கள் பாடியுள்ளார். நயினை நாகதீபப் பதிகம், நயினை நாகபூசணி இரட்டை மணிமாலை என்பன இவரியற்றிய நூல்கள்.

திரு நாகதீபப் பதிகம்

உலகெலா மொருமுதலை யுடையதில தெனவாத

முண்டுடய தென்பாருமோ

ஒருவருக் கொருவர்மா றாகவுரை யாடிநூ

லொவ்வொன்று செய்துழலுவார்

இலகுபர ஞானவெளி யாஞ்சுயம் பிரகாச

விறைமைக் குணங்கள் பூண்ட

ஈசற்க பின்னமாய் விந்துமோ கினிமா

னிடத்தகில மும்புரிந்து

கலகமிடு சமயகோ டிகளெலாங் கண்டுரிய

கதியளித் துண்மைஞானங்

கைகூடு பருவத்தை நோக்கியிரு வினையொத்த

காலைநற் கதியருளுமா

தலையளிசெய் மூர்த்தியா யண்டத்தி னிடைநாடி

தனினாக தீவுகந்தாய்

சரணநா கேசுவரி யேதயா நிதியே

சகம்போற்று பெருமாட்டியே. 1

ஓயாம லுனைவணங் காதவென் தலைதுறுகல்

உன்னடிய ரோடளவளாய்

உன்சரிதை கேளாத வென்செவி வறுந்துளை

உனைத்துதித் தேதழும்பு

பாயாத விந்தநாத் தேய்கொழுப் பத்தியாற்

பாராத கண்கணந்தாம்

பரிவினா லுன்னடி யருச்சியாக் கைகள்மண்

பாவைகளு னாலயத்தை

ஆயாச மின்றுசூ ழாதகா லசைதறிகள்

அநவரத மாயாமமோ(டு)

அமைசிவோ கம்பாவ னைக்குரித் தாகாத

ஆக்கையோ பாழ்முருக்காம்

தாயாக வெமையுதவு தையலே கைவிடிற்

றமியனுக் குதவியில்லை

சரணநா கேசுவரி யேதயா நிதியே

சகம்போற்று பெருமாட்டியே. 2

கண்கண்ட தெயவநீ யென்றுல கெலாமுதவு

காணிக்கை யாம்பணிகளாற்

கண்மறைப் புண்டதோ வெம்பணியி னார்பணக்

கவிப்பான் மறைத்ததுண்டோ

எண்கொண்ட பத்தரிடு வில்தசக சிரமெலா

மெதிரின்மலை போற்குவிதலா

லெட்டியும் பார்க்கமுடி யாமையாய் விட்டதோ

விறுமாப்பு வந்ததுண்டோ

பண்கொண்ட கீதவொலி யாற்செவிடு மானதோ

பரவையொலி மேலிட்டதோ

பாவியேன் படுதுயல மும்வேண்டு கோளுமுன்

பால்வெறுப் பாக்கியனவோ

தண்கொண்ட முத்தமணி கங்கரீ யென்னிடைச்

சற்றுநோக் கருளுகில்லாய்

சரணநா கேசுவரி யேதயா நிதியே

சகம்போற்று பெருமாட்டியே. 3

நாகைத் திருவிரட்டைமணிமாலை

வெண்பா

அருளினெலா மாக்கி யணுக்கட் களவா

மிருவினையின் போகமே யீந்து - கருவாதை

நீக்குதிநா கம்மே நிரைபிறழா முந்துகின்றேன்

காக்குதிகை யாதே கசிந்து. 4

கலித்துறை

கசிவாக வெம்பவங் காயவென் றிவ்வுருக் காட்டினைகாண்

திசையாவு மெட்டிய சீர்நாகம் மேயுனைச் சேவைசெயப்

பசுபோக முண்ணுங் கரணமெல் லாஞ்சி பாவனையாய்

உசிதம் பெறுமென் றடைந்தேனவ் வாழ்வை யுதவுகவே. 5

வெண்பா

விதிவலிவை வெல்லுதற்கு வேறுமருந் துண்டோ

நிதமுஞ் சிவத்தையுட்கொ ­ங்கு-மதுவெனவெம்

மூதாளர் கூறுகின்றார் மூகனுக்கு நாகம்மே

ஏதமறுத் தப்பெருவாழ் வீ. 6

கலித்துறை

அம்மேநின் செய்கையென்னாராரெதையெதையாங்கிரந்தார்

தம்மா லுதவுசில் காணிக்கைக் கேதலை சாய்த்ததுபோல்

இம்மா னுடருக் குதவியவ் வூழை யிகழுகின்றாய்

விம்மா வுழலொரு வேற்கோநா கம்மே விதிவலியே. 7

ஆசுகவி வேலுப்பிள்ளை

1860 - 1944

இவரது ஊர் வயாவிளான்; தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை. இளமையிலே நமச்சிவாயப் புலவரிடங் கல்வி கற்றார். 'கல்லடி þலுப்பிள்ளை' என அழைக்கப்பட்டவர். இவர் ஒரு கண்டனப்புலி. நினைத்தவுடன் பாடுந் தெய்வீக சக்தி மிக வாய்க்கப்பெற்றவர்.

இவரியற்றிய நூல்கள் : மாவைக் கந்தரஞ்சலி, மாவைச் சுப்பிரமணிய சுவாமி தோத்திரம், கதிர்காம சுவாமி பதிகம், கதிர்காம சுவாமி கீர்த்தனம், உரும்பராய் கருணாகர விநாயகர் தோத்திரப்பாமாலை முதலியன. இவர் பாடிய தனிப்பாடல்கள் எண்ணிறந்தன.

விநாயகர் கலிவெண்பா

பொன்கதிரைத் தன்கதியைப் பூவிலொரு பாற்பரப்ப

வெங்கதிரி னாதவனும் வெட்கமுறீஇ - அம்புவியில்

ஈதீழ தேசமென வெண்ணிவான் புக்கவந்தக்

காரணத்தா லீழமெனக் கண்டபதி - மேலோர்

சிரமாம்வீ ணாபுரமன் றிலத மெனக்கால்

பதியா முரும்பைப் பரத்தைப் - புலமேல்

கருணா கரக்கற் பகக்கன்றாய் வந்த

குருவே யடியனையாட் கொள்ளுந் - திருவேதார்க்

கோனே மருமானே கோவிந்தன் பூமினுக்குத்

தேனேநா னும்பதியைத் தேடிவந்து- நானடையுந்

துன்பத்தை யோதிச் சுகம்பெறநீ காணாமல்

இங்கொளித்தால் நீதியென்று யார்சொல்வார்-வஞ்சத்

குணம்மாய முங்களுக்குக் கோத்திரத்துக் குள்ள

குணமென்ற துண்மையென்று கொள்ளத் - தடையேது

பெற்றபிள்ளை கண்­ர் பெருகவழு தங்குமிங்குஞ்

சுற்றியையா ஐயா எனச்சோப-முற்றுக்

கதறி யழைக்கவவர் கண்ணெதிரே யோடி

அணையாத வன்கணுடை யாராய் - மறையுமன்னை

தந்தையெங்கு முண்டோ தயாபரமே நீமறைந்தால்

இங்குநா னாறுவது யார்க்குரைத்தோ - என் கருணை

வள்ளல்நீ யுன்னரிய மைந்தன்நா னென்பதைநீ

அல்லவென்று சொல்லிவிட ஆகுமோ -பிள்ளையென்முன்

வந்துகுறை கேட்டு வழங்கவரு ளென்னதடை

எந்தவிதந் தள்ளிவிட எண்ணினும்நீ-எந்தையுனை

நானோ விடேனேழை நானே சுவதுமுன்னை

நான்திட்டி வைவதும்பின் நானழுதென்--நாதா

எனவிருகை கூப்பிக் கும்பிட் டேத்துவது

மெதினானா னெய்துமிட ராலென்-றறிவாய்நீ

பின்னைநான் விட்டுப் பிரிவதெவ்வா றிம்பரென்கண்

முன்னேவா மூசிகமேற் கொண்டுகுறை-என்னே

எனக்கேளென் மேலே யிரங்கென் பிழையைப்

பொறுத்தாள் பரத்தைப் புலத்தைங் --கரத்துப்

பெருமானே பேழை வயிற்றானே யேரம்ப

கருணா கரக்கடவு ளே.

திருப்புகழ்ச் சந்தம்

உம்பர்தின மம்பதங் கங்கொளுஞ் சங்கரன்

கங்கையெனு மங்கைமா றங்கையா ருங்குமர

வுன்றனா ரம்புய பதங்கொளா நீசருட-னுறவாடி

ஒன்றினா லுஞ்சுகங் கொண்டிடா தந்திபக

லுந்துமா பஞ்சமின லுண்டுநோ வுண்டுமன

மொஞ்சியாரோடு முறைவிண்டிடாதஞ்சுநிலை-யுடையேனாய்

இம்பர்வா நீயருள வென்றுனார் பாதவர

விந்தமே தேடிவிசர் கொண்டநாய் போலுலைய

இங்குநீ யோடிமறை கின்றதா னாலுலகி -லிதைநீதி

என்றியார் கூறுவ தகன்றநால் வாயவரை

யன்றுவேல் பகவெறிகு கன்றிரா கரதுணைவ

எந்தநா ளும்வினையின் முந்தமா சிந்தைதுதி-யருணாதா

அம்பரா தித்தனல வன்சொரூ பத்ததுய

ரங்கொளார் பததர்துய ரங்குநூ றிக்கெடந

லன் புகூ ரக்ரவருள் பொங்குபோ தப்ரபல - குருநாதா

ஐங்கரா பூதவடர் பொங்கரா தேகநலி

வண்டியோ டச்சுமன தொண்டர்பார் வைக்கருளு

மம்பரா முருகனழல் வந்ததே வன்வடுகன்-முதலோனே

சம்பமா ரும்வலவை பங்கனே சம்பிரம

சம்பனா சந்ததச வுந்தரா கயமுகசு

றன்றனா ருடல்தரைபு ரண்டுமா ளும்படிசெய்--தகைவீரா

தண்டுலா வுந்தரு தலங்குகா வின்பகுரு

லிங்கமார் சங்கமர்க ளந்தணார் தங்குமனை

சந்தமா ரும்பைநகர் வந்தவே ரம்பவர--தம்பிரானே.

பொருந்து தேகம் மனுவென வருள்கய முகலோலா

பொருந்தி யானிங் குறுதுயர் பொடிபட-அருள்வாயே

வருந்த நீகை விடிலகை முறையென மதியாதே

வளங்கொள் பூவிங் கடலுறு வாமனன்-மருகோனே

இரந்து நீயென் றுணையெனு மெனையிவ ணிகழாதே

இலங்குமாகின்மிசையெனின் விளியெதிர்-வருவாயே

உரும்பை யூரின் சுடரென வவிர்தரு முமைபாலா

உரங்கொள் பூதக ணேசகர் ணாகரப் - பெருமானே.

காவடிச் சிந்து

கந்தனுக்கு முன்புவந்த சுந்தரகரு ணாகரேச

கற்பகக்கன் றேயெனைக்கண் பாரையா-உனைநான்

காணவென்முன் வந்துகிர்பை-கூரையா. 1

பாலர்முதி யோரெனப்பல் லோர்மடவா ராடவர்தம்

பாடசொல்லி ஆறவர மேனாமேன்-எம்

பதியெனு முனக்கிதவ - மானமேன். 2

என்துயரைச் சொல்லியழ ஒன்றிரண்டோ என்னிலுன்

னிரக்கமில்லை யென்கிலென்ன செய்குவேன் - ஏழை

எப்படிநா னிப்படியி-லுய்குவேன். 3

தொட்டவண்ட மாயிரத்து எட்டையு மரசுசெய்த

சூரனல்ல நானொரேழை யேயயா-உனது

சோதனை யிதைப்பொறுப்பே-னோதுய்யா. 4

பூர்வகர்ம போகமெனி னானுனைப் பணிவததைப்

போக்கவென நீயறிய வில்லையோ -இல்லைப்

போவெனி லுனக்கதிழி-பல்லவோ. 5

அடிப்பது முன்கையெனை யணைப்பது முன்கையெனை

யடியனறி வேன்கிருபை கூரையா-இதோ

அன்புவைத் தெனதுமுகம் - பாரையா. 6

வட்டநிதம் பண்ணியன்ப ரிட்டசித்தி யெய்தவய

வைப்பதிவேற் பிள்ளைசெய்பா மாலையே-இதை

வந்தனைசெய வராதெம-னோலயே. 7

ஐந்தெழுத்தை யோதவறி யேனர கராவென

அறையறி யேன்கதியெற் கென்னையா-அறி

வற்றநாயென் னோடுனக்குச் -சன்னையா. 8

பெற்றபிள்ளை புத்தியற்ற பித்தனாக வந்ததென்று

பெற்றவர்க விட்டதெங்கு முண்டுமோ-இந்தப்

பேதையைக்கை விட்டால்நீதிக்-கண்டுமோ. 9

எந்தவினை யுந்தவிர்க்கு மெந்தைவிக்கி னேசனென்று

இத்தரையோர் சொல்வதுபொய் யாகுமா-பொய்யா

மென்கிலுன்னை யாரும்நம்பப் - போகுமா. 10

ஆசிரிய விருத்தம்

வண்டுநற வுண்டுகளி கொண்டுநீ தம்பாட

மயில்சிறை விரித்தாடமா

மரமிசை யிருந்துவா னரவின மினந்தேட

மலர்மணங் கமழவிரவித்

தொண்டரர கரவெனச் சங்குதுடி மணியினிய

தொனிசெயத் தூபதீபச்

சுடரவிர நான்கண்ட காட்சியின் மாட்சியைச்

சொல்லுதற் காயிரம்நாக்

கொண்டசே டனுமஞ் சுறீஇநா­ னானதைக்

கூறவல் லவனல்லவே

குஞ்சிமுக நீவலவை வஞ்சியொடு தெரிசனை

கொடுக்கிலிது காட்சிமுன்னான்

கண்டகாட் சியினும்யோ சனமடங் காமதைக்

காணவே யுனைவேண்டினேன்

கர்த்தனே யுயர்பரத் தைப்புலத் தத்தனே

கருணா கரக்கடவுளே. 1

கொடியவெம ராசன்வந் தெனைவருந் தாமலுங்

கூடுவிட் டாவியிடரங்

கொண்டுபிரி யாமலும் மரணபய மென்பதைக்

கொஞ்சமுங் கொள்ளமாலும்

படிமீதில் மனைமக்க ளுறவர்நட் டார்பழுது

பாராட்டி யிகழாமலும்

பன்னுதே வாரதிரு வாசக முடன்சிறீ

பஞ்சாட்ச ரத்தையன்றி

மடியர்மொரி யெதுவெனுஞ் செவிகள்கே ளாதுமன

வரதகுல தெய்வம்நீயே

வாலசுப் பிரமணிய னேயெனுஞ் சொல்லென்

மனத்தைவிட் டகலாமலும்

கடியமன தேன்சயன மானவித மாவிவிடு

கருணைகடை நாளருளுவாய்

கர்த்தனே யுயர்பரத் தைப்புலத் தத்தனே

கருணா கரக்கடவுளே. 2

கலிப்பா

ஐய நான்படும் வேதையை நிற்குரைத்

தாற வென்கிலென் னாதடு மாறுதென்

மெய்ந் நடுங்குதென் செய்வனுன் கிர்பையை

வேண்டி டாவிடில் வாழா துயிர்விடல்

வைய மீதி லுசித மெனமனம்

வற்பு றுத்த திரங்கி யருளுமங்

கைய பல்லுயி ரேத்திடுந் தெய்வமே

கர்த்த னேகரு ணாகர மூர்த்தியே. 3

தனிச் செய்யுள்கள்

காரைதீவுச் சோறுங் கடுகடுத்த (பச்சடியு) சம்பலுமவ்

வூராருக் கன்றி யுவப்பில்லை - பார்மீதில்

தங்கோடைச் சைவன் சமைத்த கறிசாதம்

எங்கேபோய்க் காண்போ மினி. 1

வினாவுத்தரம்

அன்னைபெயர் முன்தரளத் தப்பெயரத் தக்கரத்தான்

மன்னுபச்சை முத்தினின் நங்கைபெயர்-என்னபெயர்

நந்தார்ச் சிரத்தைகொண்டு நன்னிதியப் பேர்சிறந்த

முத்தாச்சி என்றே மொழி. 2

எழுத்தலங்காரம்

ஈசனொளி யங்கி யிசையரம்பை யேர்கொடசம்

பேசவரு ஞானம் பிறங்குவண்டு-மாசிறிரு

சென்னி நடுவெழுத்தாற் சீர்கரைவா குப்பகுதி

வன்னிமையின் பேராய் வரும். 3

பண்டிதர் சி. மாணிக்கத்தியாகராசா

1877 - 1945

இவரது ஊர் உடுவில். தந்தையார் பெயர் சின்னப்பா. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடங் கல்வி கற்றவர். இவர் இயற்றிய நூல் 'முன்னைநாத சுவாமி நவதுதி'.

முன்னைநாத சுவாமி நவதுதி

விநாயகர் துதி

நல்ல விநாயகனே நாடுமுன்னை நாதனருள்

வல்ல கணபதியே மாநிதியே- சொல்லரிய

அட்டசித்தி யீந்தருளு மண்ணலே நாயேனுக்

கிட்டசித்தி யீந்தருள்வா யே. 1

உலகுயி ருய்ய வுலகருள் கடவு

ளுவப்பொடு முன்னைநா ளுருகி

யலகிலன் பார நிறுவிமுற் பூசை

யாற்றிட வமர்ந்தமா மணியே

திலகவா ணுதலார் தேவியோர் பங்கிற்

சேர்ந்திட விளங்குபொன் மணியே

யிலகுமெய் யடியார்க் கருள்செய வளரு

மிசைநிறை மாணிக்க மணியே. 2

அடியனேன் றனக்கு னடிமல ரிணையை

யனுதின மகமிக மகிழத்

துடியன விடையார் அம்பிகை மருவச்

சுந்தர விடைமிசை யேறிப்

படியுள தீய விளையெலா மகலப்

பரவுமோ ரன்புறக் காட்டி

மடியுளேன் றன்னை யாண்டருள் கருணை

வள்ளலே முன்னை யகனே. 3

வேண்டுவார்க் கிட்ட சித்திக ளருளும்

விண்ணவர் பணியுமெய்ப் பொருளே

யீண்டுபோர் புரியு மிராவணன் றனைவீட்

டிராமமூர்த் தியைமுனந் தொடர்ந்து

தீண்டுசீர்ப் பிரம கத்தியை விலக்கித்

தேங்குபே ரருண்மழை பொழிந்து

தூண்டுபே ரொளியாய் விளங்குமா ரமுதே

சுகநிலை காட்டியாண் டருளே. 4

தேவியோர் பங்கிற் செறிந்திட விளங்குந்

தெய்வமே யென்னுளத் துறையு

மாவியே யமுதே யானந்த நிதியே

யனைத்துயிர் புரந்தரு ளரசே

பாவியே படும்பா டதனையிங் கெடுத்துப்

பகர்ந்திட வளவினிற் படுமோ

கூவியே யுனது குரைகழல் பணிந்தேன்

குறைபொருத் தாளவந் தருளே. 5

விண்டுவின் பெருமை பெரிதென வெடுத்து

வியந்துகை தலைமிசைத் தூக்கி

யுண்டுகொல் பிறிதென் றுரைத்திடு வியாத

னுயர்த்திய கையினைப் பெரிய

தண்டுநின் றதுபோ லாக்கிப்பி னாண்ட

தற்பர ஞானசிற் பரனே

கண்டுநின் பாத தொண்டுபூண் டுய்யக்

கருணைவைத தாண்டரு ளரசே. 6

நாயினுங் கடையே னாயினு முன்னை

நாதனே யுலகநா யகனே

தாயினு மினிய கருணைவைத் தாளுந்

தற்பரா னந்தவா ரிதியெ

வாயினம் மனத்து மிடைவிடா திருக்கும்

வகையினை யருள்புரிந் தெப்போ

தாயினு மறவா வாழ்வுதந் தாள

வந்தருள் மால்விடை யெழுந்தே 7

உன்னடி பணியும் நாயினேன் படும்பா

டுனதுள மறிந்திடு மல்லாற்

பின்னையா ரறிவார் பேசுதற் குரிமை

பெற்றுளார் பிறிதுயா ருள்ளார்

அன்னையெ யனையா யென்னைநீ கைவிட்

டவமதித் திருந்திடி லடியேன்

றன்னையார் காப்பார் தமியனேன் செய்யத்

தக்கது மேதுமிங் குளதோ. 8

பொன்னையு மதியேன் பூவைய ரின்பப்

புணர்ப்பையும் மனத்திடை நினையேன்

பின்னையிங் கெவர்தம் புகழையுந் துதியேன்

பேணிமற் றொன்றையும் விதியேன்

உன்னையே மதிபே னுன்புகழ் துதிப்பே

னுன்புணர்ப் பேமனம் பதிப்பேன்

என்னைநீ கைவிட் டிடிலுயிர்த் துணையா

யிருப்பவர் பிறிதிலை யரசே. 9

இந்நிலத் துன்றன் பெரும்புகழ் பாடி

யிராப்பகல் துதித்திடு மடியேன்

உன்னிலை யறியாப் பாவியா யுள்ளத்

துன்னடி பெற்றிடா துறைந்தால்

எந்நிலத் தவரும் என்னதான் சொல்லவா

ரெவர்க்குநா னிக்குறை யுரைப்பேன்

முன்னிலை வருவா யடியனேற் கிரங்கி

முன்னைநா தப்பரம் பொருளே. 10

வி. வேலுப்பிள்ளை

1860 - 1945

இவரது ஊர் யாழ்ப்பாணத்து வடகோவை. தந்தையார் பெயர் விநாயகத்தம்பி. இவரியற்றிய நூல்கள் : திருத்தில்லை நிரோட்ட யமகவந்தாதி, பரானந்ததற்பர மாலை, முப்பானூற்சுருக்கம் என்பனவாம்.

திருத்தில்லை நிரோட்ட யமகவந்தாதி

கங்கை யடையார் சடையர் கழனியிற் கற்கடகங்

கங்கை யடையார் யளியலர் சேர்தில்லக் கங்கணநா

கங்கை யடயாள ரத்தர்தஞ் சீர்த்தி கழறெனத

கங்கை யடையா யளித்தன னண்ணல் கழலரணே. 1

அஞ்சக் கரத்த ரரியாதி யண்ட ரயணிகலா

ரஞ்சக் கரத்த ரிறைஞ்சிறை தில்லைய ரங்கசனன்

றஞ்சக் கரத்தர் சராசர நல்க ளளியளகத்

தஞ்சக் கரத்தனி சங்கரர் தாளி னடைந்தனனே. 2

தங்கந் தனையன தாதி னிதழி தனையணிந்தார்

தங்கந் தனையங் கற்கடந் தீன்றனர் சண்டரினா

தங்கந் தனைய னடையா தளியரன் தந்ததஞ்சந்

தங்கந் தனையரி யேத்திறை தில்லையைச் சார்ந்தனனே. 3

கதியாக நாக நகலிந் தணிசிர கண்ணனயன்

கதியாக நாக நகத்தரி யத்த கழனிகள்ச

கதியாக நாக நகர்தில்லை நித்திய கர்த்தநல்லே

கதியாக நாக நகர நயந்தனன் கண்டிடற்கே. 4

தக்கரி யாகஞ் சிதையர னேகர் தகரினன்றந்

தக்கரி யாகன் றனத்தரந் தில்லையர் சாரயற்கந்

தக்கரி யாகல ரன்றனி யாரென் றளையகநந்

தக்கரி யாக நனியழி யாதி தனியிறையே. 5

கடனா ரணனறி யாநற் கழலிறை காசினிச்ச

கடனா ரணனரன் றில்லைத் தலத்தன் கடநிகர

கடனா ரணங்கத்த னத்த னிசையைக் கழறிடலென்

கடனா ரணங்கயர் காலன் கடைநிலைக் கஞ்சிலனே. 6

கலத்தினற் காக்கை யனநிலை யேனெனைக் காயகஞ்ச

கலத்தினற் காக்கை கடனஞ் சராநற் கரத்தினணி

கலத்தினற் காக்கை யணங்கினற் காலங் கலாநிதிய

கலத்தினற் காக்கை யணைதில்லை யாரற் கரத்தினர்கே. 7

தினகர னாரல் சசிசேர்ந்த கண்ணன் றிகழணிகா

தினகர னாக னடியா ரிறைஞ்சிய தில்லையகத்

தினகர னாதியை யானன னாரியை தீநிறைந்தெய்

தினகர னாத னெனதரன் றாணிழல் சேர்ந்தனனே. 8

தாக்கணங் காக னயனிறைஞ் சத்த தயித்தயனைத்

தாக்கனங் காகன லங்கர தில்லையிற் சார்நசைநந்

தாக்கணங் காகன கத்தரங் காட றரிசித்தலெய்

தாக்கணங் காக னசையில் லடிநலந் தாநிலையே. 9

கண்ணனை யாதன தன்னேச னென்னக் கழறடியார்

கண்ணனை யாதன காணகி லேநற் கழனிகயங்

கண்ணனை யாத னளினந் தில்லையின் காட்சிநெஞ்சே

கண்ணனை யாதனந் தந்தரங் காணல் கடனினக்கே. 10

பரானந்த தற்பரமாலை

வானத் தினகரன் வைதிக மேனை மதங்கள்விண்மீ

னீனத் தினகரந் தெய்துசித் தாந்த மிவரெனுயிர்

மோனத் தினகர முந்துன்மெய்ஞ் ஞான முகட்டுமுத்தித்

தானத் தினகரஞ் சாரும் பரானந்த தற்பரனே.

கத்தாகத் தாவென்பர் கண்டவ ரார்கதி பெற்றவர்வீண்

பத்தாகத் தாயெ னிரீச்சுர வாதி பசிவருத்தத்

தத்தாகத் தாற்றுத் தனியிரு ளச்சத் தமலவென்பன்

றத்தாகத் தானெனை வைப்பாய் பரானந்த தற்பரனே.

ஆவியோம் பாதவ மாக்கைக் கலைந்தோ மடிமையினிற்

சேவியோம் பாதங்கள் பூசியோஞ் சிந்தை சிரவவத்தை

தாவியோம் பாராயணம்பண்ணோந்தற்காணத்தானதுவாய்

பாவியோம் பாழிற் பிறந்தோம் பரானந்த தற்பரனே.

பொல்லாத தவரைநோன் பில்லா தவரைமெய்ப் பூமயக்காற்

சொல்லா தவரைச்சீர் கல்லா தவரைத் தொழுமுனன்ப

ரல்லா தவரை யணையே னறியாமை யல்லகற்றும்

பல்லா தவரைவெல் சோதிப் பரானந்த தற்பரனே.

மன்னோ தனந்தந்தென் வாத மதல்செறிற் போய்மகிழத்

துன்னோ தனந்தமெய்த் துச்சி லிருந்தேன் றுயரமையு

மன்னோ தனந்தவ வன்மையி லேற்குன் னடியபயம்

பன்னோ தனந்தப் பணிந்தேன் பரானந்த தற்பரனே.

கரும்பன்று தேனன்று கண்டன்று பாலன்று சர்க்கரையன்

றிரும்பன்று பொன்னன் றிரத்தின மோதோற்ற மெற்சசியன்

றரும்பன் றலரன் றிசைவேய்ங் குழலன்று சேர்ந்துறலென்

றருமபன்ன லாமோ சாயுச்யம் பரானந்த தற்பரனே.

சுவாமி ஞானப்பிரகாசர்

1875 - 1947

இவர் மானிப்பாயில் வாழ்ந்த சுவாமிநாதப்பிள்ளைக்குந் தங்கமுத்து அம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தார். இவருடைய பெற்றோர் இவருக்கிட்ட பெயர் வத்தியலிங்கம். சைவக் குடும்பத்திற் பிறந்த இவர் கத்தோலிக்க மதத்தராகி வாணாள் முழுவதுங் கிறித்தவ போதகராய் விளங்கினார். தமிழ்மொழி, தமிழர் வரலாறு முதலியன பற்றிய பல நூல்களை எழுதித் தமிழை வளம்படுத்தினர்.

தனிப்பாடல்

உண்ணப் பொருளற்று ஊண்தேடிப் பாதிரி உண்மையென்று

திண்ணப் படுத்துந் திமிர்மதந் தேடித் திரிபவர்காள்

வண்ணப் பரிசயர் மாசுறும் ஆய வரைப்பழித்த

கண்ணுற் றிடநர கத்தீ யினில்விழல் கண்டிலிரோ.

விபுலானந்த அடிகள்

1892 - 1947

இவரது ஊர் மட்டக்களப்பைச் சேர்ந்த காரைதீவு சாமித்தம்பி என்பவருக்குங் கண்ணம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தவர். இவரது இயற்பெயர் மயில்வாகனன். இராமகிருட்டிண மடத்தைச் சேர்ந்தபோது பிரபோத சைதன்யர் என்ற பெயரையும் 1924இலே துறவு பூண்டபோது விபுலானந்தர் என்ப பெயரையும் இவர் பெற்றார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் வல்லுநர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் இலங்கைப் பல்கலைக் கழகத்திலுந் தமிழ்ப் பேராசிரியராக இவர் கடமையாற்றினார். எண்ணிறந்த பேராசிரியராக இவர் கடமையாற்றினார். எண்ணிறந்த கட்டுரைகளையும் மொழி பெயர்ப்பு நூல்களையும் எழுதினார்.

ஆங்கிலவாணி, மதங்கசூளாமணி ஆகிய நூல்களில் இவரது செய்யுட்டிறனைக் காணலாம்.

ஈசனுவக்கும் இன்மலர் மூன்று

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணக்கு வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. 1

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ

மாப்பிளையாய் வந்தவர்க்கு வாய்த்த மெலரெதுவோ?

காப்பவிழ்ந்த மலருல்ல கழுநீர்த் தொடையுமல்ல

கூப்பியகைத் காந்தளடி கோமனார் வேண்டுவது. 2

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ

வாட்ட முறாதவர்க்கு வாய்த்த பலரெதுவோ?

பாட்டளிசேர் கொன்றையல்லப் பாரிலில்லாப் பூவுமல்ல

நாட்டவிழி நெய்தடி நாயகனார் வேண்டுவது. 3

ஆங்கிலப் புலவர்கள் பாடிய பாடல்களின் தமிழாக்கம்

செகசிற்பியார் பாடல்

உலகனைத்தும் ஒரு நாடகமேடை

அங்கணுல கனைத்தினையும் ஆடரங்க

மொலாகு மவனி வாழும்

மங்கையரை யாடவரை நடம்புரிய

மக்களென மதித்தல் வேண்டும்

இங்கிவர்தாம் பலகோல மெய்திநின்ற

நாடகத்தி னியல்பு கூறிற்

பொங்குமங்கம் ஏழாகிப் போக்குவர

விருக்கையொடு பொருந்து மன்றே. 1

முதலங்கத் தியல்புரைப்பின் முலையருந்தி

மணியிதழ்வாய் முகிழ் திறந்து

குதலைச்சின் மொழிமொழிந்து செவிலித்தாய்

கரதலத்திற் கூத்து மாடித்

திதலைப்பொன் செறிதனத்தார் சேர்த்தணைக்கச்

சிறுநகையிற் சிறப்புக் காட்டும்

மதலைச்செம் பருவத்தின் வனப்பனைத்தும்

விளங்குகின்ற மார்க மாகும். 2

மணிமருள்வா யிளஞ்செல்வி மதலையென

நடித்தமகன் வதன நோக்கம்

அணிநிறையும் ஒரைந்தாண் டடைதலுமே

கணக்காய ரகத்தை நோக்கி

இணைபிரிந்த விளஞ்சிந்தை பின்னீர்க்க

முன்னேகி யிளஞா யிற்றின்

குணநிறைந்த சிறுபொழுதிற் குறுகிநடக்

துறுகின்ற குறிப்பி ரண்டே. 3

எல்லைவந்த மூன்றாகு மங்கத்தின்

குறிப்புரைப்பின் ஏருஞ் சீரும்

புல்லநின்ற யௌவனமாம் பருவமுற

வேனில்வேள் பொருபோர் வேட்டு

மெல்லிநல்லார் தமைநாடி யன்னவர்தங்

கட்புருவம் வியந்து பாடிச்

சொல்லரிய காமவன லுளம்வெதுப்ப

நெடிதுயிர்க்குந் தோற்ற மாகும். 4

அடலரியே றெனவார்த்துப் புலிமுகத்த

னிவனென்ன வடுபோர் வேட்டுப்

படுகளத்தி லதிரிடிபோற் படிந்துறுமும்

பீரங்கிப் படைமுன் னாக

மிடல்சிறப்பப் பொருதெனினும் புகழ்பெறுவன்

யானென்ன வீர மேவல்

தொடர்புடைய நான்காகு மங்கத்தின்

குறிப்பென்னச் சொல்ல லாமே. 5

வட்டவுரு வெய்துதரம் வடிவினிற்சற்

றகன்றுநிற்ப மனத்தி னீர்மை

திட்டமுறை நயனத்திற் சினக்குறிப்பு

மருட்குறிப்புஞ் சேர்த்து நிற்ப்ச்

சட்டமுறை யறிந்தெவர்க்குஞ் சமநிலையாய்

நீதிசொலுஞ் சார்பின் மேவி

இட்டமுறும் பெருமகன்ற னியனிலையை

யைந்தென்ன வியம்ப லாமே. 6

முதுமைபெற வுடல்தளர்ந்து முகஞ்சுருங்கி

யுருக்குலைந்து மூப்பின் றோற்றம்

இதுவெனக்கண் டுளமெலிய விணைவிழியிற்

படிக்கண் ணியைந்து நிற்பக்

கதுமெனவே யிருமல்வரக் கால்தளர்ந்து

தள்ளாடிக் கருத்து மாறித்

குதலைமொழிச் சிறுவரை குலவுகின்ற

கிழப்பருவங் கூறின் ஆறே. 7

பண்ணியையு மென்மொழிசேர் பாலரொக்குங்

கிழப்பருவம் பயின்ற பின்னர்க்

கண்ணிணைகள் நோக்கொழியப் பல்லொழியச்

சுவையொழியக் கருத்து நீங்க

உண்ணுமுண வொழித்தனைத்து மொழிந்துமறைந்

துயிர்வாழ்க்கை யொருவுந் தோற்றம்

எண்ணுமிந்த நாடகத்தி னிறுதியென

யாமெடுத்திங் கியம்பு வாமே. 8

மில்தனின் பாடல்

'சுவர்க்க நீக்கம்'

நித்திலத்தை வாரி நிலத்தில் உகுத்ததுபோற்

காலைப் பரிதி கதிர்காலும் வேளையிலே

உள்ளக் கவலையின்றி உணவுடலிற் சேர்தலினால்

நன்கு துயின்றெழுந்த நல்லோர் புகழ்அத்தன்

இளங்காற் றிசையொலியும் இன்ப இலையொலியும்

வளஞ்சான்ற நீரருவி வாயிநின் யெழுமொலியும்

பள்ளி யெழுச்சிப்பண் பாடுகின்ற புள்ளொலியும்

ஆரா உவகைதர அன்புதயத் துள்ளூரச்

சீரார் இளமான், திருமகள்போல் வாள்அவ்வை,

காதற் கிளியனைய கட்டழகி, எந்நாளும்

வைகறையில் முன்னொழுவாள் மலர்ச்சயனம் விட்டகலாச்

செய்கையினை நோக்கிஅவள் செந்தா மரைவதனம்

ஏறச் சிவந்த இயல்பும், மலர்கூந்தல்

சீர்சிதைந்து சோர்ந்த செயலுங்கண் டுள்ளுருகி

எழிலார் மடநல்லார் இன்றுயிலுஞ் சீரிதே,

என்னளவுத் தெண்ணி, இளந்தென்றல் மென்மலர்மேற்

சென்று வருடுந் திறமனைய மெல்லொலியில்

'என்னா ருயிர்த்துணையே; ஈசன் எனக்களித்த

செல்வ நிதியே செழுந்துயில்நீத் தேயெழுவாய்

புத்தமிழ்தே! அன்பே! புலரிப் பொழுதினிலே

வாச மலர்க்கொடியில் வண்டினங்கள் தேன்அருந்தும்

விந்தையினைக் காண்போம் விழிதுயில்நீத் தேயெழுவாய்

வண்ணவண்ணப் பூக்கள் மலர்ந்தனகாண்' என்றுரைத்தான்

ஆங்கவளும் இன்றுயில்நீத் தன்பன் முகநோக்கி

'மேதகவு செம்மைநெறி மேவியஎன் னன்பரே

காதலரே! நும்முகமுங் காலை இளம்பொழுதுங்

கண்டேன்; கவலையற்றேன்; கங்குற் பொழுதினிலே

கனவோ நனவோநான் கண்டதொரு காட்சியினை

விண்டுரைப்பேன் கேளீரிம் மேதினியில் வந்ததற்பின்

நாளின்பின் நாள்கழிய நாளையென்ப தொன்றறியாத்

துன்ப மறியாத் தொடக்கதறியா வாழ்கைதுய்த்தேன்

கடந்த இரவிற் கலக்கமுறுஞ் செய்திகண்டேன்;

நின்குரல்போல் மென்குரலில் 'நித்திரையோ அவ்வையே!

இனிய நிசிப்பொழுதில் எவ்விடத்தும் மோனநிலை

வட்ட மதியம்உயர் வானின் றொளிகாலும்

இருள்குவிந்த மென்னிழலால் எங்கெங்கும் எப்பொருளுங்

கண்ணுக் கினியகண்டாய், காரிகையே! வானுறையும்

விண்ணவர்நின் பேரழகில் வேட்கையுற்ற நீர்மையராய்க்

கண்ணிமையார் நோக்குதலைக் கண்டிலையோ' என்றுரைக்க

எழுந்தெங்கும் நோக்கினேன் இன்குரலின் பின்சென்றேன்

ஞானத் தருவிடத்தை நண்ணினேன் ஆங்கொருவன்

வானோர் படிவத்தன் வாய்விட் டுரைபகர்வான்

"கண்ணுக் கலைஞான இன்கனிகள் தாங்கின்ற

செல்வ மரமேநின் செழுங்கிளைகள் பாரித்த

தீங்கனியை மானிடருந் தேவர்களும் உண்டிலர்காண்

கல்வி யறிவைக் கடிந்தொதுக்கல் சீரிதோ?

உண்பல்யான்" என்றான் ஒருகனியை வாய்மடுத்தான்

ஆணை கடந்தசெயல் ஆதலினால் நான் அஞ்சி

ஒருபால் ஒதுங்கினேன்; உரவோன்பின் னும்மொழிவான்

"மானிடர்இத் தீங்கனியை மாந்துவரேல் வானுலக

இன்பம் பெறுவார் எழிற்பாவாய் அவ்வையே!

இக்கனியை உண்ணுதியேல் எழிலார் அரமகளிர்

தோற்றப் பொலிவுடனே தூயஅறி வும்பெறுவாய்

வானத் திவர்ந்துசெல்லும் வல்லமையும் நீபெறுவாய்

நாகாட் டோர்தம் நலம்பெறுவாய்" என்றுசொல்லி

ஓர்கனியைத் தந்தான் உயர்மணமுந் தீஞ்சுவையும்

புலன்வழியென்சிந்தைபுகப் புதுக்கனியை வாய்மடுþத்தேன்.

ககனத் தெழுந்தந்தக் கந்தருவன் பின்போனேன்

மேக மியங்கும் வியன்புலத்தைத் தாண்டியபின்

மேதினியை நோக்கி வியந்தேன்; அவ் வெல்லையிலே

கந்தருவன் சென்றுவிட்டான்; கண்டுயின்றேன் காதலரே!

கனவீ தெனவறிந்தேன் கலக்கந் தெளிந்ததென்றாள்.

உவேட்சுவேத்தின்பாடல்

முதுவேனிற் பெரும்பொழுதின் முளைத்தெழுந்த பரிதி

முன்னேறி ஒளிபரப்ப, மென்னீர அருவி

மதுவாரும் பொழிலகத்துத் தென்றிசையிற் றோன்ற

வடதிசையின் மிகத்தெளிந்த வளிவழங்கும் வெளியில்,

வானகத்தில் அசைவின்றி வதியுமுகிற் குலங்கள்

மன்னியநன் னிழல்பரப்ப, அந்நிழலி னிடையே

வேனில்வெயில் கதிர்சொரிய, உளமகிழ்வு விரிய

மெத்தென்ற பசும்புல்லில் எத்தொழிலும் இன்றி 2

அஞ்சிறைய புள்ளிசைக்குஞ் செழும்பாடல் செவியாய்

அகநுழைய இருள்விரவு மலைமுறையில் அயர்ந்து

துஞ்சுதல்போற் றுயிலாது கடைக்கண்ணால் அழகு

சுவைத்திடுவான் ஒருவான் அவன் சுகத்தினை யென்னென்யோம்?

நோக்கினிய அவ்வெளியில் இருகாலுஞ் சேற்றில்

நொந்தலைய முகத்தினைச்சூழ்ந்(து) அந்தரமே பெயரும்

ஈக்குலங்கள் தமையோட்டும் இருகரமுஞ் சோர

இளைப்புடனே வழிநடந்தேன் யானுமந்தப் பொழுதில்

நீண்டுயர்ந்த மரம்பலவும் உடன்பிறந்தார் போன்று

நிலைத்தொன்றுஞ் சோலையிலே இலைக்கூரை சிதைய

ஈண்டிநின்ற சுவர்நான்கா யியைந்ததொரு குரம்பை

இக்குரம்பை தனையடைந்தேன் இளைப்பொரிந்தேன் ஆங்கு.

நல்லிருப்புப் பூண்செறிந்த தண்டொருபாற் கிடக்க

நன்னிழலிற் பலகையின்மேல் என்னரிய நண்பன்

அல்லலறப் படுத்திருந்தான் திண்ணியநல் லுடலாம்

அருஞ்சுரங்கள் பலகடந்தும் அசையாத நிலையான்.6

தெனிசனின் பாடல்

போரின்றி மனையில் வாழும் மன்னன் ஒருவனின்

வீரச் சொற்கள்

பெறுபயன் சிறிதே பெறுபயன் சிறிதே

வறிதிங் குறையும் மன்னன் யானே

விளைவு குன்றிய களர்நிலத் துரிமையுங்

குய்ப்புகை அடங்கிய அட்டிலும் மெய்ப்படு

மூப்புவந் தெய்திய இல்லக் கிழத்தியும்

யாப்புற அமையச் செய்வினை யின்றி

வறிதிங் குறையும் மன்னன் யானே

என்னிழல் வாழ்வோர் என்னியல் பறியார்

உண்பார்; துயில்வார்; ஒண்ணிதி குவிப்பார்;

செம்மை நலமிலாச் சிறியோ ரவர்தமக்கு

நடுநிலை யில்லா நீதி வழங்கி

வறிதிங் குறைதல் மாண்போ? பிறபுலஞ்

செல்லா தமையேன் சேரெப் பொழுதினும்

அன்பர் தம்மொடும் அவரிலா நிலையிலுங்

கரையி னகத்துந் திரையெறிந் தார்க்குங்

குரைகடற் புரத்தும் பெரிதுபெரி தாகிய

இன்பந் துய்த்தேன்;துன்பத் துழன்றேன்

விழைவுறு மனனோ டலைவுறு நாளில்

அளப்பில கண்டேன்; அறிந்தன பலவே;

எத்தனை நகரம், எத்தனை மக்கள்,

எத்தனை ஓழுக்கம், எத்தனை அவைக்களம்

எத்தனை அரசியல், எவ்வெப் விடத்தும்

பெரும்பெயர் நிறுவி அரும்புகழ் படைத்தேன்;

வளமலி துரோய வளிவீசு புலத்தில்;

அடற்போர் மதுவுண் டகங்களி கூர்ந்தேன்;

கண்டன அனைத்தும் என்னகங் கலந்தன;

வாழ்க்கை வட்டத் தெல்லையி னிகந்த

வேற்றுப் புலங்கள் மிகப்பல உள;அவை

செல்வுழிச் செல்வுழிச் சேணிடை அகல்வன;

உறைப்படு வாளிற் கறைப்படல் தரியேன்

வாளா உயிர்த்தல் வாழ்க்கை யாமோ

(அறிவு நிறைதலும் அருஞ்செயல் புரிதலும்

ஓரிரு பிறவியில் ஒழியும்நீர் மையவோ?)

வாழ்க்கைமேல் வாழ்க்கை வந்து குவியினும்

வேண்டா என்ன விளம்பலும் ஆமோ?

யாண்டு பலகழிந்தன, ஈண்டிப் பிறவியில்

எஞ்சிய நாளொரு சிலவே ஆங்கவை

புதுப்பயன் விளைநா ளாகுக; விதிப்பட

மக்கள் யாத்த எல்லையின் இகந்து

குணகடற் குளிக்கும் வான்மீன் போல

அறிவு நிறைதற்கிவ் வலைகடல் கடக்க

நரைமுதிர் உள்ளம் நாடிநின் றதுவே.

இவனென் புதல்வன்; என்செங் கோலுந்

தரணி காவலுந் தாங்குதற் குரியோன்;

முரணுறு மாக்களைச் சிறிது சிறிதாக

நலனுறத் திருத்தும் நாட்டம் உடையோன்;

ஏதமில் மனத்தன்; இல்லுறை தேவரின்

பாதம் பரவும் பான்மையன் பண்பும்

சால்பும் உடையோன் தனக்கென விதித்த

வினிபுரி கின்றான் என்வினை பிறவே,

ஆங்கது துறைமுகம்; பாங்கினிற் கப்பல்

வளிமுகந் தன்ன பாய்கள்; தெளிவில்

இருள்குவிந் தனையது, திரைபொரு கருங்கடல்

வம்மின் நண்பீர்! என்னுடன் உழன்றீர்

மழையினும் வெயிலினும் வண்மைசால் மனத்தீர்

யானும் நீவிரும் யாண்டினில் முதிர்தனம்

மூப்பினும் வினையுள; ஆக்கமும் உளவே;

சாதல் எய்துமுன் மேதக வுடைய

செயல்சில புரிகுவம்; தேவரை மலைந்த

அடல்வலி யுடையோம் அருந்திற லேம்யாம்.

பகலொடு சுருங்கும் பாறையில் ஒளிக்கதிர்;

மெல்லென எழுந்து விண்ணிடை மதியம்;

பல்குரல் எழீஇயது பரவையும் வம்மின்

நலனுறு புதுப்புவி நாடியாம் செல்குவம்;

கப்பலைத் தள்ளுமின் கவினுற அமர்வின்

பாய்களை விரிமின் பல்கதிர்ப் பரிதி

படியுங் குணகடற் படர்வேம் முடிவில்

வான்மீன் குறிக்கும் வரைப்பினை அடைவோம்;

துஞ்சினர் வதியுந் தூயதீ வகத்தை

எஞ்சல் இன்றியாம் எய்தலும் ஆகம்,

அருந்திற லாளன் அகிலேசப் பெயர்க்

காவலன் றன்னைக் காணலும் ஆகும்;

இரிந்தன பலவெனின் இருப்பவும் பலவே;

விண்ணும் மண்ணும் அதிர மலைந்த

திண்மையிந் நாளிற் சேர்ந்தில தெனினுங்

காலமும் விதியும் மேவலின் உடல்வலி

குன்ற வியன்ற கொள்கையாம் எனினுஞ்

சித்த வலிமை சிறிதுங் குறைவிலம்இ

ஒத்த நீர்மைய உரனுடை உள்ளம் ;

முயன்று தேடிப் பெறுகுவம் இடர்வரின்

அயர்ந்து முதுகிடா ஆண்மையேம் யாமே.

-----------------------------------------------------------

6. தேசிய எழுச்சிக் காலம்

1948 -

அரசியல் நிலை:

ஈழத்தில் ஆங்கிலேயரது ஆட்சி 1948இல் முடிவுற்றது. அவ்வாண்டில் அரசியற் சுதந்திரம் பெற்ற ஈழமக்கள் பொருளாதார சுதந்திரம் பெறவேண்டிக் கிளர்ச்சி செய்துகொண்டுவருவதன் பயனாக ஈழம் பூரண சுதந்திர நாடாக மாறிவரும் இக்காலம் ஈழத் தமிழிலக்கிய வரலாற்றிலே 'தேசிய எழுச்சிக் காலம்' எனப்படும்.

மக்கள் தங்களைத் தாங்களே ஆளுங் காலத்திலே நாட்டிற் பல்வேறு அரசியற் கட்சிகள் தோன்றுவது இயல்பாகும். இக் கட்சிகள் மொழி, சமயம், பொருளாதாரம், பிறநாட்டுத் தொடர்பு என்பனவற்றின் அடிப்படையிற் றயாரிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்குச் சமர்ப்பித்து அவர்களின் நல்லெண்ணத்தைத் தம்பாற் கவர்ந்துகொள்ள முயற்சிக்கின்றன. தேசிய எழுச்சிக் காலத்து முற்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியும், பின்பு சுதந்திரக் கட்சியும், அதன்பின்பு சுதந்திர சமசமாசக் கூட்டுக் கட்சியும் ஆண்டுவந்தன. இன்று ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் அரசுக் கட்சியுடனும், தமிழ்க் காங்கிரசுக் கட்சியுடனும், இன்னும் பல கட்சிகளுடனுஞ் சேர்ந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து ஆளுகிறது.

இலக்கியப் பண்பு;

தேசிய எழுச்சிக் காலத்தெழுந் தமிழிலக்கியங்கள், சமயம், சமூகம், தேசியம் முதலிய பல்வேறு பொருள்களை உள்ளடக்குகின்றன. இவற்றுட் சமூகம், தேசியம் ஆகிய இருபொருள்களினடிப்படையில் எழுங் கவிதைகள் இக் காலத்திலே மிகப் போற்றப்படுகின்றன.

தேசிய எழுச்சிக் காலப் புலவர்களுட் சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பாடல் பலவற்றைப் பாடியவர் முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி ஆவர். ஈழத் தமிழ் மக்களுள் ஒரு பகுதியினர் குடிவெறியராவதைக் கண்டு மனம் பொறாத முதுதமிழ்ப் புலவர்.

ஒழுக்கத்தை யுவக்கின்ற மணியே-அன்பொ(டு)

உரைப்பதைக் கேள்மிக்க விருப்பாய்க்கண் மணியே

ஒழுக்கமே உயர்குல மாக்கும்-நல்ல

ஒழுக்கமுள் ளாயெனில் உனைத்தெய்வங் காக்கும்.

பெற்ற தாயும் வெறுத்திடுவாள்-எனக்குப்

பிள்ளை நீயல்லை பிசாசென்று புகல்வாள்

சற்றுஞ் சிறப்பில்லை மணியே-குடி

சாராது வாழ்மிக்க சீராய்க்கண் மணியே. (ஒழுக்)

என 'குடிவெறியின் கேடு' என்னும் பகுதியில் இளம் பிள்ளைகளுக்குப் புத்திமதி கூறினார்.

யாழ்ப்பாண மென்றெரு நாட்டிலே-குடி

யேறி விளங்குந் தமிழரே!

யாழ்ப்பாணத் தார்மிக நல்லவர்-கல்வி

யெய்தியவ ரென்ற சொல்லெங்கே?

சோற்றினை மாற்றினுங் கள்ளினை -விடாத்

தீய பழக்கத்தை நண்ணியே

நாற்றிசை யும்பழிச் சொல்லினை-நன்கு

நாட்டிவிட் டாலது நல்லதோ?

தாலி யணிந்திட்ட மங்கையர்-வயல்

தன்னிற் றனிநின்ற வேளையிற்

சால விரைந்துமோட் டாரிலே-வந்து

தாலி பிடுங்கிடக் கேட்டிரோ.

பாதக நெஞ்சு படைத்தவர்-அன்பு

பள்ளிகொள் நாட்டினில் வாழ்வோ

ஓதிடு வீரே தமிழரே-சிறி

தூன்றி நினைப்பீர் தமிழரே.

என 'யாழ்ப்பாணப் புதுமை' என்னும் பாடலில் முதுதமிழ்ப் புலவர் அன்பாக மக்களுக்குப் புத்திமதி கூறினார்.

பஞ்சம் வராமற் பசியணு காமற்

பயிர்செய் பவனெங்கள் தெய்வவமையா-அவன்

நெஞ்சம் சுருங்கிடில் யாரிங்கு வாழுவர்

நித்தமும் போற்றிட வேண்டு மையா.

மக்களெல் லாரும் ஒருகுலங் காணெங்கள்

வாழ்வி லுறுதுணைச் செல்வர்கள்காண்-சொல்லும்

எக்குலத் தாரும் இழிந்தவ ரல்லர்

இதையுணர்ந் தாற்பகை யில்லை மையா.

என 'தொழிலாளர்' என்னும் பாடலில் மக்களெல்லோரும் ஒரு குலம் என்பதை முதுதமிழ்ப் புலவர் கூறினார். இப் பாடல்களை ஊன்றியாராயின் தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடல்களிற் காணப்படும் நல்லியல்புகள் பலவற்றை முதுதமிழ்ப் புலவரின் பாடல்கள் காட்டுகின்றன என்பது போதரும்.

தேசிய எழுச்சிக்காலப் புலவர்களுள்ளே தேசியப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் சோமசுந்தரப் புலவர், முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி, ப.கு. சரவணபவன் முதலியோராவர். பதினையாயிரம் பாடல்களாற் றமிழ்த் தாயை வணங்கிய 'தங்கத்தாத்தா' சோமசுந்தரப் புலவர் தம்பாடல்கள் பலவற்றில் ஈழவளநாட்டின் இயற்கை நலனையும் ஈழமாதாவின் சிறப்பையும் அழகாக வருணித்தார்.

சீரான எந்நாடு மெப்பதியு மூரும்

சேர்வான தாவரமும் மாமரமுங் காவும்

பேரான கனிமரமும் பெருமரமுந் தாவில்

பெட்பாரும் பெண்ணைகளும் வாழையொடு மேவி

நேராக ஓரிடத்து நிலையாகக் காண

நிலமடந்தை வைத்ததென நின்றுபய னுதவும்

பேராத னைப்புதிய நந்தவன மகவைப்

பேணியமு தூட்டிமகா வலிகங்கை பெருகும்.

அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி

அன்பொடு சிவாயஎன அரு­று பூசி

முதிமுருமன் பால்நெஞ்ச முருகவிழி யருவி

முத்துதிர மெய்ப்புளக மூரவுரை குளறப்

புதியசெந் தமிழ்மாலை புகழ்மாலை சூடிப்

பொருவில்கந் தாசுகந் தாவென்று பாடிக்

கதிரைமலை காணாத கண்ணென்ன கண்ணே

கர்ப்பூர வொளிகாணாக் கண்ணென்ன கண்ணே.

என்னும் 'இலங்கை வளப்' பாடல்கள் நெஞ்சையள்ளுஞ் சிலப்பதிகாரப் பாடல்கள் சிலவற்றை எம்மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

தேசிய எழுச்சிக்காலப் புலவர்களுள் மதுரகவிப்புலவர் சூசைப்பிள்ளைனின் பாடல்கள் மதுரமான ஓசைநயம் பெற்று அருணகிரிநாதரின் பாடல்களை எம்மனக் கண்முன் நிறுத்தி நிற்கின்றன. நவநீத கிட்டிண பாரதியார், தென் கோவை ச. கந்தையபிள்ளை என்போரின் பாடல்கள் சங்கப் செய்யுள்போற் செறிவுமிக்கும் பொருளாழம் உடையனவாயுந் திகழ்கின்றன. இலக்கிய கலாநிதி நடேசபிள்ளை அவர்கள் பாடிய 'சகுந்தலைவெண்பா'ப் பாடல்கள் சொற்சுவையும் பொருட்செறிவும் மிகுந்து விளங்குகின்றன. சுருங்கக்கூறின், தமிழ்கூறு நல்லுலகத்துச் சிறந்த பாடல் வரிசையில் நிற்கும் பாடல் பல ஈழத்துத் தேசிய எழுச்சிக்காலத்துத் தோன்றின வெனலாம்.

இன்று வாழ்ந்துவரும் ஈழத்துத் தமிழ்ப் புலவர்களின் பாடல்கள் தேசிய எழுச்சிக் காலத்துக்குரியவை யெனினும் அவை இந்நூற்றொகுப்பில் இடம்பெறா. ஆயினும் பொதுப்படச் சில பண்புகளைக் கூறுவது ஈண்டுப் பொருத்தமாகும். சங்கச் செய்யுள்களிற் காணப்படுஞ் செறிவுஞ் சுவையும் மிக்க பாடல்களைப் பாடும் புலவர் வரிசையிற் புலவர் பாண்டியனாரையும் பண்டிதர் இளமுருகனாரையுஞ் சிறப்பாகக் குறிப்பிடலாம். புகழேந்தியின் வெண்பா யாப்பைச் சிறப்பாகக் கையாண்டு 'பகவத்கீதை வெண்பா' பாடிய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் வெண்பாவுக்கு உயிரூட்டி வாழும் புலவராவர். புலவர் சின்னையா பாடிய 'கதிரைமலைக்கோவை' கட்டளைக் கலித்துறையின் ஆற்றலை விளம்பிநிற்கின்றது.

பழைமையும் புதுமையுந் தழுவிய சிறந்த பாடல்களைப் பாடிய புலவர்களுட் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கோர்: வித்துவான் வேந்தனார், பண்டிதர் சிவப்பிரகாசம், நாவற் குழியூர் நடராசன், யாழ்ப்பாணன், நவாலியூர் நடராசன் முதலியோராவர்.

ஈழவளவளநாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இளம்புலவர்கள் இன்று தோன்றுகின்றனர். அவரெல்லோருந் தமிழ்த் தாயைக் கவிதை மாலைகளால் அலங்கரித்து அழகு காண வேண்டுமென்னும் விருப்புடையவர். அவர்களுட் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கோர் அம்பிகைபாகன், பஞ்சாட்சரம், வேலாயுதப்பிள்ளை, சோமசுந்தரமபிள்ளை, சத்தியசீலன், நீலாவணன், இராசபாரதி, மகாகவி, அண்ணல், பார்வதி நாதசிவம், நுஃமான், சொக்கநாதன், வழுத்தூர் ஒளியேந்தி, திமிலைத்துமிலன், மௌனகுரு, ஈழவாணன், நாகராசன், கதிரேசப்பிள்ளை, செல்வராசன், முருகையன், சச்சிதானந்தம் முதலியார்.

இவ்விளம் புலவர்களுட் சிலர் மரபுவழி நின்று தமிழ்கூறு நல்லுலகத்தோராற் படித்துணர்ந்துகொள்ளக் கூடிய பாடல்களைப் பாடி வருகின்றனர்; அவர் பாடல்கள் காலவெள்ளத்தைக் கடந்துவாழும் ஆற்றல் பெறுமெனலாம். ஒருசிலர் தம் கல்வியறிவின்மையினாலே இலக்கண வரம்பு மீறிய கொச்சை மொழிகளை மண்வாசனையென்ற மெட்டுடன் கவிதைகளுள் நிறையப்பெய்து பாடுகின்றனர். அவர் பாடல்கள் குறிக்கப்பட்ட ஒருகாலத்து மக்களால் மட்டும் உணரத்தக்க ஆற்றலுடையவை. இவர் முதுமையடையுங் காலத்திலே தம் இளமைக்காலப் பிழைகளையுணர்ந்து சிறந்த கவிதைகளைப் பாடவுங்கூடும். இவ் விளம்புலவர்களின் பாடல்களுள் எவை சிறந்தவையென்பதைக் காலமே வரையறை செய்யும்.

ப.கு. சரவணபவன்

1909 - 1949

இவரூர் நயினாதீவு. தந்தையார் பெயர் பரமலிங்கம். வித்துவசிரோமணி கணேகையருக்கும் வேலணை தம்பு உபாத்தியாயருக்கும் மாணவர். கருவிநூல் முதனூல்களைக் கசடறக் கற்ற தமிழறிஞர். பாடும் வல்லமையை இயல் பாகவே பெற்றவர். நாகபூசணியம்பிகை பதிகமும் பல தனிப் பாடல்களும் பாடியவர்.

நயினை நாகாம்பிகை பதிகம்

பால்நினைந் தூட்டுதா யாதலா லுனதுசிறு

பாலன்மேற் பரிவை யதனாற்

பாருல கனைத்துமீன் றருள்சுரந் திடுமிளைய

பக்குவத் திளையை யதனாற்

சீலமிகு தந்தையிவ னென்றுகாட் டெனதரிய

சிவசக்தி நீயாத லாற்

செப்பரிய ஞானவழ துன்பாற் குழைத்தெனைத்

தீற்றிடுஞ் செவிலி யதனாற்

கோலோங்கு மிமராச ராசயீசு வரியெனுங்

குமாரிநீ யாகை யாலுங்

கொடியவிடமுண்டருளு கொழுநர்நோய் தீர்க்குமொரு

கொடியமருந் தாகையாலும்

நாலோங்கு திசைகளிலு மிசைநிறீஇ நிறுவுகொடி

நாயினேற் கருள்த ராயோ

நாகாம்பி கேநயினை யேகாம் பிகேபரம

நாதாந்த மோன வடிவே. 1

எத்தனை விதப்பனுவல் பாடியுனை யேத்துகினும்

எனதுகுறை எனது மொழியால்

இறைவியுன் கொலுமண்ட பத்தெரில் நின்றுசொலு

மேழைவிண் ணப்பத்து மதுபோல்

மெத்துகுறை தீரின் பழித்திடா தாகையால்

விளாயாடு சிறுகுழவி கை

மேவுபொரு ளுலகெலாந் தேடரு நுணுக்குடைய

வித்தகச் செறிவு பெறினுஞ்

சித்திர விசித்திரத் தன்கார்ய சித்தியே

சேய்க்குமிக வின்ப ளிக்குந்

தேவியே யெனதுபுரை யுரையுமொரு மாலையாய்ச்

சேவடிக் கணியாக் கினேன்

நத்துவாய் வைத்தூதி முத்தாதி யிட்டெந்த

நாளுமேத் திடுமொழி சூழ்

நாகாம்பி கேநயினை யேகாம்பி கேபரம

நாதாந்த மோன வடிவே. 2

வானமுறு மீனினம் மழுக்குமொரு பேரொளி

வகுத்தவோர் காட்சி கண்டேன்

மாதிரஞ் செவிடுபடு மொலியையு மடக்குமுன்

மந்திரக் கேள்வி கண்டேன்

மாணவன் எனப்பெயர் வகுத்துலக மாள்ராச

வன்மையின் வன்மை கண்டேன்

வையத்து ளொன்றுபல வாகியும் ஆகாத

மாசாத்திர மொன்று கண்டேன்

ஈனமிகு பிறவிவரு சீவகோ டிகளெலாம்

ஈறில்பர மாத்மா வினுள்

இயைவன வெனக்கூறு தந்திமிவை வாய்த்தபின்

ஏழையா னும்விடு வனோ

நானபரி மளசௌந் தர்யையே யெனையாளு

நர்த்தநட ராச சதியே

நாகாம்பி கேநயினை யேகாம்பி கேபரம

நாதாந்த மோன வடிவே. 3

எண்ணரிய சூரியரி னிடையிலொரு முழுமதியம்

இருகண்முகி லூடெழுவ போல்

இருகுழலி னடுவிலகு திருமுகமும் மரகதத்

தியல்கொடியின் வடிவ வுருவுந்

தண்ணென்ற மென்வசன கிஞ்சுகப் பவளவாய்த்

தரளநகை யிளமுறு வலுந்

தடையிலாக் கருணையிரு கரைபுரளு விழிகளுந்

தழதழென ஒரிர்தி லகமும்

பண்ணிலவு மடியருரை யுண்ணில வலாற்குழைப்

பரிசுபெறு மிருசெ விகளும்

பாதமுறு மாதவர்கள் பாடுமிரு பாதமெனப்

பாடுநூ புரம லர்களும்

நண்ணுசேய் அணிகடம் புணருமிள நாசியும்

நளினகர முங்காண் பனோ

நாகாம்பி கேநயினை யேகாம்பி கேபரம

நாதாந்த மோன வடிவே. 4

ஈழமாதா திருப்பள்ளி எழுச்சி

காலமெ னுந்தேர் பாவவமாம் பள்ளங்

கடுகியே யோடுது கண்மூடித் துயிலாய்

பாலர்கள் பசிகொண்டு பால்மொழி கூறிப்

மாலுறுத் தும்பஞ்சப் பார்த்தழல் பாராய்

மாலுறுத் தும்பஞ்சப் பேய்விரித் தாட

மார்க்கமொன் றறியாம லேக்கமுங் கொண்டாய்

ஏலுமட் டும்மின்னல் உற்றனம் வாழோம்

ஈழமா தாபள்ளி எழுந்தரு ளாயே. 5

புத்த பிரானடிப் புண்ணிய ரெங்கே

போற்றிய வீர செயக்கொடி யெங்கே

முத்தமி ழானவெம் மும்முர செங்கே

மூர்த்தியெங் கேதல தீர்த்தமெங் கேயோ

சத்திய மீகை முதற்படை யெங்கே

தானமெங் கேவீர மானமெங் கேயோ

எத்தனை காலமிவ் வின்னலில் வாழ்வோம்

ஈழமா தாபள்ளி எழுந்தரு ளாயே. 6

கத்திபுகை கண்டுப் பேடிய ரெங்கே

கட்டிடு ஞானத் தளைக்கயி றெங்கே

முத்து நவமணி ரத்தின மெங்கே

முடிகளெங் கேயுன்றன் குடிகளெங் கேயோ

நித்தரை செய்திடுங் காலமீ தில்லை

நெட்டுயிர்ப் புற்று நிலைதடு மாறி

எத்தனை காலமிவ் வின்னலில் வாழ்வோம்

ஈழமா தாபள்ளி எழுந்தரு ளாயே. 7

ஈழ நாட்டுக் குறம்

தேவரெலாங் கொலுவிருக்கும் ஈழமெங்கள் தேயஞ்

செப்பிடுவே னதன்பெருமை சந்றிருந்து கேளும்

மூவரன்று பாடுதிருக் கோணமலை நாட்டில்

முத்தொதுக்கிக் கத்துகடல் சூழுமெங்கள் தேயம் (தேவர்)

எத்திசையும் போற்றுங்கதிர் காமமலை நாட்டில்

எங்கள் வள்ளி குடியிருக்கும் ஈழமெங்கள் தேயம்

புத்தபிரான் பொன்னடியாம் பொற்கமல பீடம்

பொலியுமலை எங்கள்மலை ஈழுமெங்கள் தேயம். (தேவர்)

மாவலிகங் கைப்புனலாந் தாவணியை வீசி

மாதிரமெ லாம்மணக்கும் வாசனையைப் பூசி

காவலரின் கண்மருட்டுங் கன்னிஎங்கள் தேயம்

காசினியி லிவளைப்போற் கன்னியில்லை யில்லை. (தேவர்)

செந்தமிழுஞ் சிங்களமு மாயவிரு தோழி

சேவைசெய்யும் இராசகன்னி ஈழமெங்கள் தேயம்

இந்தியரெம அக்கைமக்கள் என்றணைக்கும் அம்மை

வந்தனையல் லாதெமக்குச் சிந்தனைவே றில்லை. (தேவர்)

பொற்புதையல் கண்டெடுப்பார் போலச்சில மந்தி

பூமியுள்வெ டித்தபலாப் பொற்சுளையைக் கிண்டும்

நற்குணங்கொள் மங்கையரும் மைந்தர்களும் போல

நாலுகின்ற பூங்கொடியில் ஊசல்சில வாடும். (தேவர்)

மானின்கவைக் கொம்பெடுத்துக் கால்களென நாட்டி

வளமான பன்றிமுள்ளுக் கைம்மரங்கள் பாய்ச்சி

கானிலுதிர் மாமயிலின் தோகைகொண்டு வேய்ந்து

கட்டியத னுள்ளிருந்து சிற்றில்சில வாடும். (தேவர்)

கனிபெறவென் றாருகுறத்தி காதணியை வீசக்

கடுவனத்தைக் கைப்பிடித்துக் காதலிதன் காதில்

நனியழுத்த கண்ணினின்று நீர்வடியும் வாயில்

நகைவருமக் குரங்கிருக்கும் ஈழமெங்கள் தேயம். (தேவர்)

பாதீயம் (வணக்கம்)

பாரதியே தெய்வப் பழமேயென் பாக்கியமே

பேருலகில் யான்பெற்ற பேறே பெருமானே

வீரனே யானேற்று வீட்டு மணிவிளக்கே

வாரிதியே யென்மனத்துன் மலர்த்தாண் மலராதோ. 15

உள்ளக் கிழியில் உருவெழுதி யுன்புகழ்த்தேன்

அள்ளத் துடிக்குமிந்த ஆசைநிறை வேறாதோ

துள்ளிப் பிடித்துன் துணைத்தாட் புணையையின்ப

வெள்ளத்தி லோட்டி விளையாட மாட்டேனோ. 16

முகாந்திரம் சதாசிவ ஐயர்

1882 - 1950

இவர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தை நிறுவியவர். அச்சங்கத்தினரால் வெளியிடப்பட்ட 'கலாநிதி' என்னுஞ் சஞ்சிகையின் ஆசிரியர். மட்டக்களப்பில் வழங்கும் வசந்தன் கவிகளைச் சேகரித்து 'வசந்தன் கவித்திரட்டு' என்னும் நூல்வடிவிற் பதிப்பித்தவர். இவரியற்றிய செய்யுள் நூல்கள் 'தேவி தோத்திர மஞ்சரி', 'இருது சங்கார காவியம்' ஆதியன. பின்னையது வட மொழியில் மகாகவி காளிதாசர் இயற்றிய நூலின் தமிழாக்கம்.

இருது சங்கார காவியம்

பாயிரம்

திருந்து சங்கதத் திருதுசங் காரசிங் கார

விருந்து தந்தனன் காளிதா சக்கவி வேந்து

பொருந்து மன்னதைப் புனைகுவன் தமிழ்க்கவி யாக

முருந்து வாணகை பங்கமர் முன்னவ னருளால்.

வேறு

ஆரி யத்தின மைந்தவிக் காவியஞ்

சீரி யற்றமிழ்ச் செல்வருந் தேர்கென

நேரி யன்றத மிழ்க்கவி நேர்ந்தனன்

நாரி யன்ற சதாசிவ நாமனே.

முதுவேணிற் பருவ வருணனை

செங்கதிர்ச் செல்வன் தெறுகரம் விரிப்பத்

தெண்ணிலா மனமகிழ் விளைப்பப்

பொங்கதி தாபம் போக்கிய பல்காற்

பூம்புன லாடலும் பொலியத்

தங்குதி வாவின் கடையின தாகத்

தணிவுறக் காதலின் வேகஞ்

சங்கதிர் முன்கைத் தையனால் லாய்காண்

தழன்முது வேனில்சார்ந் ததுவே. 1

மண்டிய நீல படலம தகற்றி

மதிதிகழ் நிசிகளுந் தாரை

கொண்டியல் நீரா விமண்டப வகையுங்

குளிர்மணி விதங்களுஞ் சாந்தின்

அண்டிய தேய்வை செறிபணி குளம்பும்

அடுத்தவிவ் வேனிலங் காலை

வண்டிவர் கோதாய் மாந்தருக் கிதமாய்

மனமகிழ் பூப்பவாய்ந் தனவே. 2

விரைதவழ் வுற்று விழைதகு மாடத்

தும்பரு மின்னனார் முகத்து

விரைதரு சுவாசத் தசைவுறு மதுவும்

மேவுமிவ் வேனிலம் போது

நிரைதரு யாமத் தின்பினை மூட்ட

நேர்வரு வீணையின் னிசையும்

புரைதவிர் காதற் காளையர்க் கெல்லாம்

போகமு நுகர்ச்சியுந் தருமால். 3

காமரு பட்டுங் காஞ்சியு மணிந்து

கவினுறு கடிதடம் முத்துத்

தாமமுஞ் சாந்தும் அணிகளுஞ் சுமந்த

தனபரந் தண்விரை நாநத்

தாமதி சுகந்த அழகமென் றின்ன

வாகிய தாங்கணி யிழையார்

ஏமரு வேனிற் றாபம தகற்றி

யிளைஞருக் கின்பமூட் டுவரால். 4

வேறு

பஞ்சி தோய்ந்ததி செம்மைய பைம்பொனின் மிளிரும்

அஞ்சி லம்பின அவனியிற் படும்படுந் தோறும்

அஞ்சி மென்னவே யரற்றுவ வாயசிற் றடியால்

வஞ்சி யன்னவர் களையர் மனத்துமால் வளர்ப்பார். 5

சந்த மார்ந்ததி தட்பமாய்த் தண்பனி வெண்மை

தந்த முத்தணி தாங்கிய தனங்களும் பொன்னின்

வந்த மேகலை வயங்குநுண் ணிடைகளும் வலிந்தே

எந்த ஆடவ ரிதயங்கா முறும்வகை செயாவால். 6

வியர்வு தோன்றுபு விரியுடன் மூட்டினர் விம்மி

உயர்வு சேர்கன தனத்திள முவதிய ரின்னே

யயர்வு தீர்தர ஆடைகள் கனத்தவைவ யகற்றித்

துயர்த ராதமென் துகில்கொடு நகிலிணை தூர்ப்பார். 7

சாந்த நீருறை தந்தசைச சிவிறிமென் காலும்

ஏய்ந்த முத்தணி யேந்திய விளமுலை யிசையும்

வாய்ந்த வீணையொ டெழுதரு மதுரநல் லிசையும்

ஓய்ந்த காதலை யுணர்த்துவ போலுமா லின்னே. 8

வெள்ளை மாடத்து நிசிதனில் மின்னனார் துயில்போ(து)

அள்ளு வாண்முக மாசையி னீடுற நோக்கித்

தெள்ளு தண்கதிர்த் திங்களஞ் செல்வன்பின் னிரவி

லுள்ளு நாணினாற் போலுடல் விளர்க்குமா லுறுதி. 9

வேறு

தாங்கரு வேனிற் காற்றுத் தருந்துகட் படலை தாங்கி

வீங்குருப் பஞ்சேர் வெய்யோன் வெதுப்பவேந் தரணி தன்னைப்

பூங்குழ லார்ப்பி ரிந்து வழிச்சென்றோர் புலம்பு வாட்ட

ஏங்குநெஞ் சகத்த ரீண்ட நோக்கலு மியல்கி லாரால். 10

பொங்குவெங் கதிரோன் வெப்பம் பொலிந்துடல் புலர்த்த நீடு

தங்கதி தாகந் தன்னால் தாலுமிக் குலர்ந்த மான்கள்

சிங்குறப் பொடித்த மையிற் றிகழ்தரு நீல வானை

யங்குறக் கண்டு நீரென் றோடுவ அடுத்த கானம். 11

திங்களா மணிப்பூண் சேர்ந்து திகழ்வுற் மணங்க னார்தம்

அங்கநே ரிங்கி தத்தா லமர்நகைக் கடைக்க ணோக்கால்

அங்குநேர் மாலை யென்ன ஆடவ ரகலச் சென்றோர்

தங்களீ ரிதயந் தன்னில் தணிப்பருங் காதல் சேர்ப்பார். 12

ஆதவன் கிரணஞ் சால அழற்றவா றதனில் வெந்து

பாய்துகள் கனற்ற மெய்யைப் பதைப்புறு படவ ராப்பார்

மீததோ முகமாற்ச் சுற்றி யூர்ந்துவெய் துயிர்த்தே தற்குப்

பேதகம் விளைப்ப தாய பிணிமுகத் தடியில் வைகும். 13

மிகுதகு தாகம் விஞ்சி விசைத்தெழு விறலை வீட்டப்

பகுதரு வாய்செய் பஞ்சா னனம்பட ருளைசி லிர்த்துத்

தொகுதரு நாமுன் தொங்கத் தொடர்ந்துவெய் துயிர்த்து நாளும்

பகைதரு மதமா பாங்கர்ப் படரினும் பாய்ந்த டாதால்.

புலர்தரு மிடற்றுப் போந்த புன்னுரை நீர வாகி

யலரிதன் கிரணத் தீயா லங்கம்வே வுற்று மேன்மேல்

மலர்தரு தாகம் வாட்ட வாரிதேர் மதமால் யானை

கொலைதரு மடங்க லேற்றைக் குறுகினுங் குறிக்கொள் ளாதால்.

இழுதறு மோமத் தீயி னெரியினன் கிரண மங்கம்

முழுதுற வாட்ட வெம்பி மொய்ம்பழி மனத்த வாகி

யிழிதக வுற்று மஞ்ஞை யெழிற்கலா பத்து ளுச்சி

நுழைதரக் கிடந்த பாந்தள் நூறல்செய் நோக்கி லாவே.

கந்தமார் கோரை சார்ந்த காய்கமர் வாவிச் சேற்றைக்

குந்தநேர் தடநீள் கோட்டாற் குறித்தகழ் கேழல் வெய்யோன்

தந்தவா தபத்தால் மேனி சாம்புசந் தாபந் தீரச்

சந்தமா ரவனி தன்கீழ்ச் சார்வது போலு மன்றே.

காய்தரு கதிரின் செல்வன் கனற்றலின் வெதும்பி மேனி

ஓய்தரு தவளை சேற்று நீருறை யோடை நின்று

பாய்தரு வுழிநீர் வேட்கை பற்றிய பன்ன கத்தின்

பாயிரும் படமா மாத பத்திரத் தடியில் வைகும். 18

தடம்புகுந் தங்க ணுற்ற தாமரை முழுதுஞ் சாடி

யொடுங்கிடச்சிதைத்து மீனையுணங்குசாரசப்புள்ளோட்டி

யுடம்புட னுடம்பு தாக்க ஒன்றுசேர்ந் துடற்றி யானை

திடம்படச் செய்வ காலாற் சேற்றினை யுழக்கி யம்மா.

சூரிய கிரணந் தோயச் சுடர்மணி யுச்சி தாங்கி

யீரிய னாமு னீட்டி யியல்வளி யுணாச்சு வைக்கும்

பாரிய படமா நாகம் படுவிடந் தீவெய் போனுஞ்

சேரியல் வெதுப்ப நீர்வேட் டடுகில தேரை யீட்டம். 20

பொருந்திய நுரைசூழ் வாயும் புறத்துநீள் தருசெந் நாவும்

விரிந்துநீள் தலையு மாய்ப்பெண் மேதியி னீட்டஞ் சால

வருந்திவெவ் விடாயால் மன்னு மலைமுழைஞ் சதனி னீங்கி

யருந்திய நீரைத் தேடி யலமந்து திரியு மாலோ. 21

புலவர் மு. நல்லதம்பி

1896 - 1951

இவர் வட்டுக்கோட்டை என்னும் ஊரிலே முருகுப் பிள்ளைக்குந் தங்கம்மையாருக்கம் புதல்வராகப் பிறந்தார். தென்கோவை, பண்டிதர் ச.கந்தையபிள்ளையிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். 1940 ஆம் ஆண்டிலே திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தனர். இலங்கைப் பல்கலைக் கழகத்திலே சில ஆண்டுகள் இவர் விரிவுரையாளராகக் கடமை யாற்றியவர்.

இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். 'மணித்தாய் நாடும் மரதனோட்டமும்' என்ற நூல் மரதனோட்டக் கவிதைப் போட்டியில் முதற் பரிசைப் பெற்றாதாகும்.

முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி

1896 - 1951

இவர் வட்டுக்கோட்டை என்னும் ஊரிலே முருகுப் பிள்ளைக்குந் தங்கம்மையாருக்கம் புதல்வராகப் பிறந்தார். தென்கோவை, பண்டிதர் ச.கந்தையபிள்ளையிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். 1940 ஆம் ஆண்டிலே திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தனர். இலங்கைப் பல்கலைக் கழகத்திலே சில ஆண்டுகள் இவர் விரிவுரையாளராகக் கடமை யாற்றியவர்.

இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். 'மணித்தாய் நாடும் மரதனோட்டமும்' என்ற நூல் மரதனோட்டக் கவிதைப் போட்டியில் முதற் பரிசைப் பெற்றாதாகும்.

ஊசல் வரி

உலகிற் பழமைமிக உடைய மொழிகளுள்ளே

இலகு முயிர்மொழியா மினித்ததமிழ்த் தாயையன்பாற்

குலவு மணிப்புதல்வீர் கொண்டாடிப் பாடியாம்

அலகில் மகிழ்முகிழ்ப்ப ஆடாமோ ஊசல்

அரிய புகழ்பாடி ஆடாமோ ஊசல். 1

வள்ளுவனார் தந்த மறுவிலாத் தூளவிளக்கைத்

தெள்ளுதமிழ் மேன்மைபெறச் செய்த திருக்குறளை

யுள்ளமதைக்கொள்ளை கொள்ளுமொண்பொருளை உயிர்மருந்தை

யள்ளியள்ளி உண்டோமென் றாடாமோ ஊசல்

அணியார் நலம்பாடி யாடாமோ ஊசல். 2

நுண்மையினி நுண்மை நுனித்துநுக ரோவியமாந்

திண்மைதரும் பாக்கள் கம்பனெனும்

பண்மலிந்த மேலோன் பசுந்தமிழின் முறைநிறுவும்

அண்ணியசீர் நூல்பாடி யாடாமோ ஊசல்

அலமரலைத் தீர்த்தேமென் றாடாமோ ஊசல். 3

இளங்கோவுஞ் சாத்தனெனு மெழிலோனு மீந்தனவுந்

துளங்காப் புலமையுடைத் தூயோர்கள் யாத்தனவும்

உளங்கூர் மகிழ்ச்சிதரு முரைவளனுங் கற்றியாம்

அளந்தோம் புலமையென ஆடாமோ ஊசல்

அன்பொழுக வாழ்துமென ஆடாமோ ஊசல். 4

தொல்காப் பியமாந் துணையைமணிப் பெட்டகத்தை

பல்காற் பயின்றெம் பழமைதனைப் புதுக்கி

ஒல்காச் சிறப்போ டொளிவிளங்கி வாழ்துமென

அல்கா தறைகூவி ஆடாமோ ஊசல்

அருந்தமிழில் வல்லோமென் றாடாமோ ஊசல். 5

மணித்தாய்நாடும் மரதன் ஓட்டமும்

கதிரு நாயக னியற்கையின் கவினிடைக் கலந்தோன்

முதிரு மாமண நறுமயி னிளமையின் முகிழ்ப்போன்

இதய தாமரை யிருந்தெமை யியக்கிடு முருகன்

சிதைவி லாதிவை நிறையநன் றுறுதுணை செயுமே. 6

இலங்கைத் தாய் வாழ்த்து

ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

சீரேறு மலர்க்காவுஞ் செழும்பயிரின் வளனிலனுங்

காரேறு வரைக்குலமுங் கவின்பொலிபே ராறுகளும்

வெள்ளியவான் மருப்புடையவிறலமையுங்களிற்றினத்தோ

டுள்ளுநரை நடுக்குறுத்து மொளிச்செங்கட் புலிக்காடும்

மெல்லியார் மூரலென விளங்குநகை வெண்முத்து

நல்லெழிலின் வெண்சங்கு நனிவிரவு மாழியுங்கொண்

டறிவுமலிந் துலகுவல னமர்ந்துவருந் திருவாளர்

செறிவுமலி யிந்துவெனுந் திறப்பரவை யிடைக்கிடந்து

புகழுமொரு மலரணங்கே பொலிவுபெறு திருத்தாயே. 7

தாழிசை

பதிக்குமுயர்விலைக்குரியமணிக்குவைகள் கனிப்பொருள்கள்

கதிக்கநினி யளித்தளித்துக் கவின்பெருக்குங் கற்பகமே

நதிக்கிழவ னளகையர்கோன் நினைத்திருத்தி யரசமைத்து

விதிக்குவிதி யமைத்தனைவி ளம்புவதும் வியப்பாமே. 8

அணிகெழுமிக் கிழக்கின்க ணரியநா டுளவென்று

துணிபளினி முதலியவர் சொன்னபடி கடல்வழிய

வணிகநெறிதழுவிவந்தோர் வருத்தமின் றிவளங்கிடைக்கும்

பணமிகுக்கு மென்றுநினைப் பறித்ததுவும் வியப்பாமே. 9

உள்ளுமுயர் பெரும்பயிர்க ளுனைத்திருத்தி மிகப்படைத்து

வெள்ளமென நிதிபெருக்க விழைந்துமிக நலங்காணும்

வெள்ளையர்கள் விரைந்தடைந்து வேட்கையொடு நின்னிலங்கள்

கொள்ளுதலில் முனைந்தமையக் குறிப்பதுவும் வியப்பாமே. 10

தனிச்சொல்

எனவாங்கு,

சுரிதகம்

செழுமையின் மிக்கனை பழமையிற் சிறந்தனை

சீர்மிக நிறைந்தனை பேர்மிகப் படைத்தனை

மானமும் வீரமும் வயங்கிப் மன்னரா‘ற்

புரக்கப் பெற்றனை புலநெறி வகுத்தனை

நம்மா ருயிரே! நம்பிறப் பகமே!

நாமிகக் குலாவி நலம்பெறு மில்லமே!

ஊழி யூழிநீ யுகர்ந்து

வாழியர் வாழியர் மலைவிளக் கெனவேவ. 11

பாயிரம் (விருத்தம்)

சீர்பூத்த விலங்கையெனுந் திருத்தாயி

னியற்கைவளன் சிறப்பக் கூறிப்

பார்பூத்த பெருமையொடு பண்டைநா

னவளிருந்த பான்மை கூறி

நேர்பூத்த சுதந்திரமிங் கவளடைந்த

வரலாறு நெறியிற் கூறி

ஏர்பூத்த மரதனெனு மோட்டமுநன்

றியம்பிடுவா மியையுமாறே. 12

கருத்தை யீர்த்துநங் காதலைப்

பெருக்குவான் கவினை

விருத்த மென்றுபின் விளங்கிய

யாப்பினில் விளம்பல்

பொருத்த மென்றுனர் புரிவினிற்

புதுமையும் பொலிய

நிரைத்த னம்பல பொருள்விர

விடுதலை நினைத்தே. 13

பூமணக்குஞ் செழுநறவின் பொலிவுமலி யழகொழுகு

காமணக்கும் புகழ்நாடு காண்பமெனக் காமர்வண்டு

பாமணக்கு முரற்சியோடு பண்டைவினைப் பயன்கொழுமத்

தேமணக்கும் பிடிபிறந்து திகழ்வதெங்கள் திருநாடு. 14

புத்தர்பிரான் கவுதமரின் பொருந்துமடி யெனப்பவுத்தர்

சித்ததரு சிவனாரின் திருந்துடி யெனச்சைவர்

பத்தியொடு நிமிர்ந்தேறிப் பனிநடுக்கந் தனைச்சகித்து

நித்திரையு மின்றினி நிமிர்ந்துபல படப்பரச 15

பாடுவன மீன்களுள கேட்குங்கால

மகிழ்ச்சிமிகும் பயில்வா மென்னும்

நாடுகள்வே றிலவாக நம்மைமுழு

மதிப்போதில் நயக்கச் செய்யும்

ஈடிலாதோர் வாவியினை யெம்மருங்குங்

கொண்டழகி னெழுச்சி நன்கு

சூடிவளர் மட்டுநர் தனைப்பயந்திங்

கிசைப்புந் தொன்மை நாடு. 16

கொடியெடுத்துப் பேரெணி குயிற்றிமலைக்

குகைகளிலே குறிப்போ டேறிக்

கடிநறவு தொகுத்துவிரை மான்வேட்டம்

புரிந்ததசை கலந்து வேடர்

நெடிதுவளர் முதுமரத்தின் பொந்தினிடை

யடைத்தெடுத்து நிதியாக் கொண்ட

பிடியனையார் மகப்பெருங்கா லுணக்கொடுத்து

மகிழ்குறிஞ்சி பிறங்கக் கொண்டாள். 17

மானி லாவிய போர ருங்கல

மாறி லாது குலாவவே

பேணு கின்ற வியற்கை மல்கு

பெருந்து றைக்குளிஃ தொன்றெனா

நீணி லம்புக ழாழி யூடு

நிரைத்த குன்று குறுத்தவாய்க்

கோண மாமலை கொண்டி லங்கிடு

கோதை யாகிய மாதரான். 18

என்ன டாவிவை யேழு மிங்ங

னிருக்கு மாறு வியப்படா

மன்னு வெம்புனல் துன்னு மூற்றில்

மலர்ந்து மாரியி னாடினால்

என்ன மாமகிழ் வெய்து மாலென

வெய்தி னார்புக லெண்ணில்சீர்க்

கன்னி யாயினை நன்னர் என்னணி

காணு கென்றொளிர் கன்னியே. 19

அணியா ரசோகன் திருமைந்தன்

அறிவின் முதிர்ந்த மகிந்தனென்பான்

துணியா வெழுந்து தீசற்குச்

சொல்லும் பெரிய திருவறத்தின்

பணியான் மக்கள் பவுத்தமதம்

பற்றி யொழுகிச் சிறப்பவைத்த

இணையே யிலாத மிகுநதலையி

னெழுச்சி படைத்த விரும்பெரியாள். 20

ஆயிரத்தோ டொன்றியதொள் ளாயிரத்து

நாற்பானெட் டமையு மாண்டின்

மேயசித்தி யுற்றிடுபெப் புறுவரியி

னான்காநாள் விழவி னாப்பண்

தேயத்தி னொற்றுமையன் புந்தவுந்த

மக்களெலாந் தொழுது வாழ்த்தத்

தாயொருத்தி யிலங்கையெனுந் தவமடந்தை

தனிமகுடந் தாங்கி னாளே. 21

நம்பியரு நங்கையரு நல்லமுதி யோரும்

பம்பியினி யென்னகுறை பண்டையினு நன்றே

நம்பொலியு மன்னைதனை நாகவள நாடென்

றிம்பரில்வ ளர்ப்பமென வெங்குமெழ லானார். 22

அன்றுதொட்டி லங்கைவீற டைந்துமாச கன்றுசீர்

நன்றுமுற்று மாறுகொண்டு நாளுநாளு மேறியே

வென்றியுற்ற லங்கல்சூட விண்ணுலாவு கோளெலாம்

நன்றிசைக்கு மென்றுகோளி னிலைகுறித்தி யம்பினார். 23

ஒருதேய மக்களெலா மோரிலங்கை

நோக்கிமிக வுயர்தல் வேண்டும்

பிரிவேது மடையாமல் வினைசெயலி

னொத்துழைப்பைப் பெருக்கல் வேண்டும்

பெரியார்மற் றெளியரெனப் பிணங்காமற்

பொதுநலத்தைப் பேணல் வேண்டும்

விரிவாக விவைவிளக்க மரதனையாங்

குறித்த தென விரும்பி யார்த்தார். 24

சீருறு செல்வன் மாணவ னொருவன்

திகழோ லைச்சுருளைப்

பேருற வங்ஙன் பெற்றன னோட்டம்

பெரிது நடத்ததுவே

கூருறு செலவது தென்திசை போயது

கூறுதல் வாய்வதுவோ

நேருற யாவையு நெடுவழி கண்டவர்

நெடிது விளம்புவரே. 25

மேலைமுனைக் குரியதென நீலநிறக்

கடலருகே விரிந்த பச்சைக்

காலிமுகப் புல்வெளியிற் பலர்வாழ்த்த

நகராண்மைக் கழக மேயர்

ஓலைவளச் சுருளீய மாணவக

னொருவனதை யுவந்து வாங்கிக்

கோலமுறப் புனைசதுக்க மோடிமக

ளொருத்தியிடங் கொடுத்தான் மன்னோ. 26

மேற்றிசை யாள ராட்சி

மிகுந்துநின் றிட்ட வாண்ட

நூற்றுமுப் பத்து மூன்றும்

நோய்செய்த நுணுக்கங் காட்ட

நூற்றுமுப்ப பத்து மூ•னறு

நுண்மதிப் புறாவைத் தூது

நாற்றிசை வானிற் போக்கி

நயனங்க ளிமையா ரானார். 27

படையெ ழுந்தன கொடியெ ழுந்தன

பரவு மங்கல விசையெ ழுந்தது

குடையெ ழுந்தன நடநி றைந்தன

கோதை மாதர்கள் குலமெ ழுந்தது

இடையி லெள்ளிடை விடமி லென்றிட

வெங்க ணுந்தலை யேதெ ரிந்தன

அடைசு தந்திர விழவ யர்ந்தமை

அன்று போலினி யென்றுகூடுமே. 28

ஐந்து கோடி யாண்டி லங்கை

யன்னை வாழ்ந்த செய்தியாம்

அறிகி லாத யர்ந்து சோர்த

லாகு மோவி ளம்புவீர்

எந்த நாடு மெங்கள் தாயி

னேற்ற மென்ற மாற்றமே

எய்தி டாது யாவு நாமி

யற்ற வெற்றி யெய்துவோம். 29

சி. நாகலிங்கம்பிள்ளை

1882 - 1952

இவர் யாழ்ப்பாணத்து வதிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் சின்னத்தம்பி. காந்தத்திலுள்ள தக்கண கைலாச புராணத்தைத் தமிழில் மொழி பெயர்த்து உரைநடையில் இயற்றினார். கதிர்காம புராணம் என்பது இவரால் இயற்றப்பட்ட செய்யுளிலக்கியம்.

தக்கண கைலாச புராணம்

கடவுள் வணக்கம்

விநாயகர்

ஓங்கு தாரகத் தோருரு வாகிய

தாங்கு மைங்கரத் தந்தி முகத்தனை

யீங்கு போற்றுது மிம்ப ருணர்ந்திடத்

தேங்கு தென்கயி லைத்திறஞ் செப்பவே.

சிவபெருமான்

உலகெலா மாகி நின்ற வுயர்பரம் பொருளை யம்மை

நிலவுறு பாகத் தானை நிமலனை மதிதோய் சென்னி

குலவிய சடையான் றன்னைக் கோலமா றேடிக் காணா

திலகுமுண் டகத்தா ளுற்ற விறைவனை யேத்தல் செய்வாம்.

உமாதேவியார்

பூரண ஞானப் பாலைப் புனிதவேட் கருத்துந் தெய்வ

வாரணங் குயிர்க ளீன்ற வன்னைமா தருமச் செல்வி

யாரண நூபு ரங்க ளரற்றுமா மலர்த்தா டம்மைப்

பேரணங் குறுத்தும் பாசப் பிணிவிடப் போற்று வாமே.

சுப்பிரமணியர்

தேறுமெய் யடியவர் சிந்தை தன்னிடை

வேறற நின்னொளி விளக்கு மூர்த்தியாய்

மாறிலா திருந்திடும் வடிகொள் வேலுடை

ஆறுமா முகனடி யன்பிற் போற்றுவாம்.

ச. பஞ்சாட்சரக் குருக்கள்

1889 - 1953

இவரது ஊர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த காரைநகர். தந்தையார் பெயர் சண்முக ஐயர். திண்ணபுர வெண்பா, வீரகத்தி விநாயகர் இரட்டை மணிமாலை என்பன இவரியற்றிய நூல்கள்.

திண்ணபுர வெண்பா

காப்பு

சீர்முந்து காரைநகர்த் திண்ணபுர வெண்பா

தேர்சுந்த ரேசன்மேற் செப்பவே - ஏர்செய்

அகசா நநபதுமத் தர்க்கனாய் மூத்த

அகசா நநனே யரண்.

நூல்

ஆகமநால் வேதமுண ரந்தணர்க ளாதியோர்

ஆகமநத் திண்ணபுர மாராயின் - சாகமுனங்

காணமய னீக்குங் கநகசபை யாலுவோன்

காணமய னாத்தன் களம். 1

அம்பலவன் சேய்முருக னாக்கஞ்செய் தோரணியார்

செம்புளின நந்தூருந் திண்ணபுரம் - இம்பரிடை

நம்பியா ரூரனைமுன் னாடித் தடுத்தாண்ட

தம்பிரா னென்றுமமர் சார்பு. 2

சாருஞ் செபதவத்தாற் சாப வனுக்கிரகம்

சேருந் திருக்கூட்டத் திண்ணபுரம்-காருணியன்

திண்ணன் றிறத்தைச் சிவகோ சரிக்குணர்த்தும்

அண்ண லமரா லயம். 3

வாவி மணற்காடு மாலூரம் பொன்னாலை

தீவிகையின் வீரகத் திண்ணபுரம் - தேவியடச்

சத்திர சேகரன் றாணு சதாசிவன்

சுந்தர னெம்மான் துறை. 4

செந்தமிழுஞ் சூரியனுஞ் சேர விருளோட்டுஞ்

செந்தமித தோற்றமார் திண்ணபுரம் - நந்தமுறுந்

தன்னிலய மெல்லோருஞ் சாரத் தருஞ்சக்தி

தன்னிலய முள்ளோன் தலம். 5

சும்மா விருக்கிற் சுகமில்லை யென்றுன்னிச்

செம்மாந் திருப்போரின் றிண்ணபுரம் - அம்மான்

மழுவேந்தி மாய்விலான் மாலயனுங் காணான்

குழுவேந்து கொட்டி குடி. 6

சிவஞாநம் பூத்தலினாற் சேர்மலநீக் கத்தாற்

சிவபூதி நேர்திண் ணபுரம் - சிவகதியாய்

ஈன்றாளு மாயெனக் கெந்தையுமா யுற்றாராய்த்

தோன்றாத் துணையான் றுறை. 7

காணும் வெறுங்கூடு காவலராய் வாழாதே

தானுபணி தாங்குவோர் திண்ணபுரம்- காணிகொளும்

ஆரூர் சிதம்பர மாலவாய் காசியெனும்

ஆரூர் சிவபெருமா னார்வு. 8

நம்பனர னாமம் புணையாக நண்ணமே

லிம்பரிடை யெண்ணகத்தார் பூர்வபதி - அம்புயன்மா

றேவர்பு லர்ந்தலைந்தும் வாய்ந்துரத் தேடுவது

பூவரம்பு திண்ண புரம். 9

அம்மையே யப்பாவென் றெப்போதும் போற்றுவோர்

செம்மையோர் தெய்வீகத் திண்ணபுரம்- இம்மையே

பொன்னம் பலநடனம் போந்து தரிசிப்போர்

முன்னங் கொடுப்போன் முகம். 10

கம்பை யொலித்தலாற் காமாட்சி யாற்பரனாற்

செம்பொருளின் கச்சிநிகர் திண்ணபுரம்-நம்பும்

அடியார் தமிழ்ப்பாட லங்கணைந்து கேட்டு

மடியாத வீடளித்தோன் வாழ்வு. 11

கற்பகத்தா லீழத்தாற் காமினியாற் றேனுவாற்

பொற்பகமார் பொன்னுலகாந் திண்ணபுரம் - தற்பரன்

கைம்மாறு வேண்டாக் கருணா நிதிவள்ளல்

தம்மானே யாவான் சகம். 12

ஆக்கநய னஞ்சரப்பே ராதி கடையிடையென்

பாக்கத்தின் பேரொன்றென் பார்ப்பதியின்-நீக்கமிலா

மன்னவனாஞ் சுந்த ரேசன் மகிழ்ந்துறையும்

பொன்னகரென் றிண்ண புரம் 12

ஆக்கநய னஞ்சரப்பே ராதி கடையிடையென்

பாக்கத்தின் பேரொன்றென் பார்ப்பதியின்-நீக்கமிலா

மன்னவனாஞ் சுந்த ரேசன் மகிழ்ந்துறையும்

பொன்னகரென் றிண்ண புரம். 13

மாப்பாண வூரி மணிநீர் சடையாளி

சேர்ப்பார் சிறப்புடைய திண்ணபுரம்- கோப்பாரும்

ஆறாக வைந்தெழுத் தன்பினுட னித்தமும்

ஆறாக ரார்வ னகம். 14

ஆகந் தரநீர்பொ னம்புயமா மைந்துபொருள்

கோகனங் கொண்டுறூஉந் திண்ணபுரம் - ஏகன்

திரிதளவில் வத்தாற் செய்பூசை மேவுந்

திரிதரவில் லாதான் தேர்வு. 15

சோமசுந்தரப் புலவர்

1878 - 1953

இவரது ஊர் நவாலி. தந்தையார் வன்னியசேகரன் மரபினராகிய கதிர்காமர் என்பவர். இவர் வட்டுக் கோட்டை- இந்து ஆங்கில வித்தியாசாலையிற் வல வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இயற்கையாகப் பாடும் ஆற்றல் படைத்த இவர் பதினையாயிரம் பாடல்களுக்குமேற் பாடினர் என்ப. 'தங்கத் தாத்தா' என அழைக்கப்பட்ட இவர் யாழ்ப்பாணப் பண்பாட்டின் உயர்வு குறித்துப் பல பாடல்கள் பாடினார்.

இவரியற்றிய நூல்கள் : நவாலியூர் வன்னியசேகரன் பள்ளு, ஐம்புலவேடக் கும்மி, கந்தவனக்கடவை நான் மணிமாலை, மருதடி விநாயகர் பாமாலை, கல்லுண்டாய் வைரவர் பதிகம், கதிரைமலை வேலவர் பதிகம், அட்ட கிரிப் பதிகம், கந்தவனநாதர் திருப்பள்ளி எழுச்சி, சிறுவர் செந்தமிழ், கதிரைச் சிலேடை வெண்பா, நாமகள் புகழ்மாலை தாலவிலாசம் முதலியன.

விபுலானந்த அடிகள்மீது பாடியவை

வாயுறை வாழ்த்து

வாழி யினியதமிழ் வாழி தமிழகத்தார்

வாழி மணியிலங்கை வான்கழகம்-வாழியரோ

பேரா சிரியன் பெரியவிபு லானந்தன்

ஓரா யிரம்யாண் டுலகு.

நிலைமண்டில ஆசிரியப்பா

வடாஅது வான்றொடு வேங்கட மலையுந்

தெனாஅது கன்னித் தெய்வதன் குமரியுங்

குடாஅதுங் குணாஅதுந் தொடுகடற் பரப்புமென்

றந்நாள் வரைந்த விந்நான் கெல்லையுள்

கடுவொடு பிறந்த வமிழ்துதலை குறிக்குஞ்

சுவையொடு பிறந்த தமிழ்வழங் குலகில்

ஒருகடல் குடித்த குறுமணி நாணக்

சீரிய வாரியத் திருமொழி யென்றா

போரியல் மன்னர் பொதுமொழி யென்றா

அந்தமில் சீர்த்திச் செந்தமி ழென்றா

முக்கடல் குடித்த வித்தக முனிவ !

ஆரியத் துறையினு மருந்தமிழ்த் துறையினும்

நேரிய ஞான நிறைகலைத் துறையினும்

முறைமுறை தோய்ந்து பசையறப் பருகி

இருள்கெட விமைக்கும் அருளொளி முகத்தில்

இளநகை மின்னல் மின்னி வளமுறும்

ஈழழு மிமையமும் வாழிய கேட்ப

வாய்மொழி முழக்கந் தூய்மையின் முழங்கி

அறிவுமழை பொழியுங் கருணைமா முகிலே!

பன்னிய வேழிசைப் பாற்கடற் குளித்து

மன்னிய வரும்பொருள் மாமணி யெடுத்து

யாழ்நூ லென்னுங் கோவையிற் குயிற்றி

வண்டமிழ்த் தாயின் மங்கலக் கழுத்துத்

தண்டாச் சிறப்புறத் தந்தருள் வள்ளால் !

கல்வியுஞ் சமயமுங் கலங்கிப் காலை

நல்லைவந் தெழுந்த நாவலர் பெருமான்

திருவடிச் சுவட்டிற் சேவடி பொருத்திக்

கடிமணங் கடிந்து கல்வியை மணந்தே

எழுமையுந் தொடரும் பொருளு மஃதென்று

இருமையு மருளுஞ் சிவநெறி யொழுக்குமென்

றிவ்விரண் டுதவும் மெய்யற மோங்க

மண்ணக வரைப்பின் வயின்வயின் வைத்துப்

புண்ணியம் வளர்க்குங் கண்ணிய வண்ணால்!

இருவர் தேவர் தருமணி யுடனே

உருவளர் மதங்கசூ ளாமணி யொன்றுந்

திடமுட னருளிய நடனநூற் செல்வ!

சுத்தம் மிச்சிர மசுத்தவென் றுரைக்கும்

ஐந்து மேழு மாறிரண் டிரட்டியும்

ஆறா றகற்றி யருளொளி யேற்றித்

தன்னொரு நிலையுந் தலைவனின் னிலையுங்

கண்ணொடு கண்ணொளி கதிரொளி போல

மன்னுமத் துவித மாண்பெருங் கலப்பின்

உண்மை யுணர்ந்த புண்ணிய மூர்த்தி!

எண்ணக் கதியரு ளிருந்தவப் பெயர்பெறும்

புண்ணியச் செல்வன் போகாப் பொருடரக்

காணக் கதியருள் காமரு தலத்தில்

மாணுற வமைத்த வான்கலைக் கழகத்துப்

பொருந்திய வாய்மைப் பொன்னுரை பொழிந்தே

அருந்தமிழ் வளர்த்த வண்ணலா சிரிய!

மீண்டவர்ப் பெறாத வெள்ளிமால் வரைகண்

டீண்டுவந்த தருளிய வெங்கள்மா தவமே!

தத்துவந் தரு'பிர புத்தபா ரத'மெனும்

பத்திர நடாத்திய வித்தக முதல்வ!

யாழுங் குழலுங் கீழுற வோங்கிய

மழலை மாறா விளமைக் காலத்து

நால்வகைச் செஞ்சொல் மாமல ரெடுத்து

நூல்வகை யாப்பின் மேவரத் தொடுத்துத்

தூமணங் கமழும் பாமணி மாலை

தாய்கழுத் தணிந்த வாய்மொழிப் புலவ!

மாவலி வளஞ்சேர் மணியிலங் காபுரி

மேவிய பல்கலை வியன்கழ கத்தே

ஆங்கிலம் முதன்மை யடைவது நோக்கி

ஏங்கிய தமிழ்த்தா யிரங்குகுரல் கேட்டுத்

தாய்குரல் கேட்ட தூயவான் கன்றென

மால்வரை யிமையம் வறிதுற மீண்டு

நூல்வரை நுண்டமிழ் நுவல்தே தோன்றால்!

விரிந்தபே ரறிவின் மேவிய வின்பம்

நயந்தா ரணத்தால் நல்லவ ரிட்ட

விபுலா னந்தப் பெயர்பெறு மேலோய்!!

ஈன்ற தமிழ்த்தா யென்றுமின் படைய

ஆன்றநற் றொழிலெலா மாற்றுதல் நின்கடன்

ஆழிசூ ழுலகத் தாயிரம் யாண்டுநீ

வாழிய பெரிதென வாழ்த்தலென் கடனே.

ஆறுமுகநாகவலர் மீது பாடியது

அன்னநடை பிடியினடை யழகுநடை

யல்லவென வகற்றி யந்நாட்

பன்னுமுது புலவரிடஞ் செய்யுணடை

பயின்றதமிழ்ப் பாவை யாட்கு

வன்னநடை வழங்குநடை வசனநடை

யெனப்பயிற்றி வைத்த வாசான்

மன்னமருள் நாவலன்றன் னழியாநல்

லொழுக்கநடை வாழி வாழி.

தொல்காப்பியம்

கணேசையர் பதிப்புச் சிறப்புப்பாயிரம்

ஆசிரியவிருத்தம்

தேமணக்குஞ் சந்தனப்பூம் பொழில்மணக்கும் பொதியமெனுஞ்

சிலம்பின் மேனாள்

தூமணக்குநடையிதழித் தொடைமணக்குஞ்சடைமௌலித்

தூயோன் றாளுங்

காமணக்குங் கடம்பணிந்த கதிர்வேற்பெம் மானடியுங்

கருதி நோற்று

நாமணக்குந் தமிழ்முனிவ னகத்தியமா முதனூலை

நல்கி னானால். 1

அன்னவன்மா ணாக்கரொரு பன்னிருவ ரவர்தம்மு

ளறிவான் மிக்க

மன்னுபெரும் புகழ்த்தொல்காப் பியனாரங் கியற்றமிழை

வகுத்து நாடிப்

பன்னுதொல்காப் பியமென்னும் வழிநூலொன் றருந்தமிழ்க்கு

மருந்தா யீந்தான்

அன்னதன்சீ ரெடுத்துரைக்க வளவிலடங் காதுமிகுந்

தகலு மன்றே. 2

அந்நூற்கு நல்லுரைபூ ரணனாரை யுள்ளிட்டோ

ரன்று தொட்டே

நன்னூலின் படியொழுகு நங்கைமணி மங்கலநன்

னாணே போலச்

செந்நூலின் கிடைத்திறமு மாசிரிய ருளத்திறமுஞ்

செவ்வே நாடி

எந்நூற்குங் காப்பாகத் திட்பநுட்ப வொட்பமுற

வெழுதி னாரால். 3

எழுதியவவ் வுரைத்திறங்க ளிக்காலம் பயில்வோர்தா

மினிது தேறக்

கொழுவியதீஞ் சுவைக்கனியின் தீஞ்சாறுந் தேனமுடன்

குழைத்த தென்னப்

பழுதில்வகை சொற்றிறமும் பொருட்டிறமும் பலதிறமும்

பண்பி னாடி

எழுதரிய வுரைவிளக்க மையவிப ரீதமற

வெழுதித் தந்தான். 4

எழுத்திற்குஞ் சொல்லிற்கு மெழிற்பொருளிற்கடையுளநான்

கியல்க ளுக்கும்

வழுத்திடுநல் லுரைவிளக்கந் தந்ததற்பின் முன்னுள்ள

வாடாக் காதல்

பழுத்ததனி யன்பூரப் பண்பூறப் பகர்பொருளி

னியல்பு கூறும்

விழுத்தகைய வைந்தியற்கு முரைவிளக்க நுட்பமுற

வியம்பி னானால். 5

ஆரியமுஞ் செந்தமிழு மாமிரண்டு மொழிபயின்றே

யறிவின் மூத்துச்

சீரியநான் மறையொழுக்கந் திறம்பாத தவவிரத

சீல முள்ளோன்

காரணகா ரியத்தொடர்ச்சி யில்லாத கரிமுகவன்

கமல பாத

நேரியநெஞ் சினினிறுத்தி யெந்றாளுந் துதிக்குமொரு

நியமம் பூண்டோன். 6

பன்னுபுகழ் யாழ்ப்பாண நாடுசெய்த பெருந்தவத்தின்

பயனாய் மேலாந்

தொன்மைதிகழ் காசிபகோத் திரமுலகில் நிலவவந்து

தோன்றுந் தோன்றல்

மன்னுபுகழ்ச் சின்னைய மாமறையோன் பெற்றெடுத்த

மதலை கற்றோர்

கண்ணெனவே கொண்டுதுதி கணேசைய னெனுநாமக்

கலைவல் லோனே. 7

மற்றதனைத் தனதுதிரு மகளழுத்த கத்துமிக

மகிழ்வா யேற்றுப்

பொற்புறவே பதிப்பித்து வெளியிட்டான் யாவனெனிற்

புகலக் கேண்மோ

கற்றவர்பா லன்புடையோ னீழகே சரியதிபன்

கலைமே லார்வம்

பெற்றவன்றென் மயிலைநகர்ப் பொன்னைய வேளென்னும்

பெருமை யோனே. 8

ஆசிரியப்பா

விண்டொடு நெடுவரை மந்தரந் நிறுவி

அண்டரும் பிறரும் பண்டைநாட் கடையப்

புண்ணியப் பாற்கட லீன்ற தண்ணிய

விண்ணவ ரமுதம் வெள்கிவா யூற

நூற்பய னாகிய நாற்பய னுடனே 5

நாச்சுவை யென்றா செவிச்சுவை யென்றா

மேற்படு மொன்பது விதச்சுவை யென்றா

பல்வகைச் சுவையு மெல்லவர் தமக்கும்

உண்டிட வுதவுந் தண்டா வமுதருள்

செந்தமிழ்த் தெய்வவத் திருமொழிக் கடறருஞ் 10

சந்தனப் பொதியத் தவமுனி தனாது

சுந்தரச் சேவடி தொழுதுகற் றுயர்ந்த

பல்காப் பியமுணர் தொல்காப் பியநூல்

எழுத்துஞ் சொல்லும் பொருளு மென்ன 15

வழுத்திய மூன்று வகுப்பிற் றாங்கதன்

எழுத்துஞ் சொல்லும் பழுத்தநூற் புலவர்

உரையுடன் வைத்துப் புரைதப வாய்ந்து

கற்போர் முட்டறப் பொற்புடன் வெளியிட்

டந்நா ளருளின னாங்கது போல 20

வன்னமும் பதமும் மாசறக் கற்ற

பின்னரா ராயும் பெரும்பொருள் கற்புழிக்

கொள்வோ ருள்ளமுங் கொடுப்போ ரறிவும்

ஒள்ளிய வுணர்வுபெற் றுவகை பூப்பக்

கண்ணிய வுரையொடு நுண்ணிதி னாய்ந்து 25

பொருத்தமும் விருத்தமுந் திருத்தமுங் காட்டுங்

குறிப்பும் விளக்கமு நெறிப்பட வமைத்துப்

பேரா சிரியப் பெருநா வலன்றன்

உரைதனைத் தெளிவுற வுணர்த்துமோ ருரைதனை

திருவருள் கூட்டச் செய்தனன், யாரெனின் ; 30

பொன்னிலங் காபுரிப் பொற்கொடி தனாது

சென்னியி லணிந்த திருமணி முடிபோல்

மன்னுயாழ்ப் பாண வளநக ரதனில்

நன்னா வலர்புகழ் புன்னாலைக் கட்டுவன்

வளமிகு பதியுதி யிளவள ஞாயிறு ; 35

கடவுட் கற்பிற் காசிபன் மரபு

புடவியில் விளக்கப் புகுந்த புதுமதி;

முந்நூல் மந்திர முதுமுறை யாளன்;

சிந்நயக் குரிசில் செய்த மாதவம்;

தூவலர் தண்டமிழ்ப் பூவல யந்தொழும் 40

நாவலர் பெருமான் நயந்திடு மருமான்

தத்துவ நெறியறி வித்துவ சிரோமணி

பொன்னம் பலப்பெயர்ப் புண்ணிய னிடத்தும்

மன்னிய வளம்பெறு சுன்னைமா நகரான்

குறுமுனி யென்ன வறிவினி லுயர்ந்தோன் 45

மறுவறு குமார சுவாமியென் றோதும்

வரமுறு புலவன் மாட்டும் பெறுமிறை

தொன்னூற் கல்வித் துறையெலா மொருங்கே

பன்னாட் பயின்று பழகிய பண்டிதன்;

இலக்கியப் பொன்மலை; இலக்கண வரநதி; 50

நலத்தகு சைவ நன்னூற் பாற்கடல்;

புண்ணிய நீறு சண்ணித்த மேனியன்

அண்ணலைந் தெழுந்து மெண்ணுநன் னாவினன்;

முன்னவன் சேவடி மன்னிய வுளத்தன்;

கற்றவர் விழையுங் கணேசைய னென்னும் 55

அற்புத நாமத் தருந்தவ; னதனைக்

கடும்போ ரேதுவிற் காகிதம் மூட்டி

இடும்பைமீக் கூர விரங்குமிந் நாளிற்

கண்கவர் வனப்பு மெண்பெறு சிறப்பும்

நன்கொருங் கமைய வின்புடன் முயன்றே 60

எழுதா லன்புட னுலகினுக் களித்தனன்,

மன்னிய சிறப்பிற் சுன்னையம் பதியிற்

றிருமகள் நிலையத் தொருதனி யதிபதி

'ஈழ கேசரி'த் தாளினைப் பரப்புந் 65

தாழாச் சிறப்பிற் றண்டமி ழறிஞன்

நன்னய மிகுந்த பொன்னைய நாமம்

மண்ணகம் விளங்கிட வந்த

புண்ணிய முயற்சிப் புகழ்ப்பெரி யோனே.

நவநீத கிருட்டிண பாரதியார்

1889 - 1954

இவர் சோழவள நாட்டிலே கிருட்டினாவடம் என்னும் ஊரிலே சுப்பிரமணிய பாரதியார்ருக்குந் தையலம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தார். சர்க்கரை இராமசாமிப் புலவர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், சோ‘ழவந்தான் அரசன் சண்முகனார் ஆகியவர்களிடத்திலே இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின்பு திருவாவடுதுறை யாதீனத்தில் அம்பலவாண தேசிக சுவாமிகள்பாற் றிருமுறை ஆராய்சித் துணைவராக அமர்ந்தார். 1917ஆம் ஆண்டில் இவரது புலமையை வியந்த சேர் பொன்னம்பலம் இராமநாதனால் ஈழத்துக்கு அழைக்கப்பட்டு இராமநாதன் பரமேசுவரக் கல்லூரிகளிலே தலைமைத் தமிழ்ப் பண்டிதராக அமர்த்தப்பட்டார்.

இவரியற்றிய செய்யுணூல்கள் : உலகியல் விளக்கம், புத்திளஞ் செங்கதிர், பறம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம், காந்தி வெண்பா முதலியன.

இவருக்குப் பண்டிதமணி, புலவர்மணி என்னும் இரு பட்டங்களைச் சூட்டி ஈழமக்கள் பெருமை கொண்டனர்.

உலகியல் விளக்கம்

அறநெறியியல்

பதுமைநேர் மடவார் பலரொடு பழகுமுன்

வதுவையிற் கொடுத்தன் மரபா மென்றல்.

மலர்ந்து வளனுற வளர்வன வளர்தல்

வாய்மட வோர்தம் மனன்பூத் தோரை

யாய்ந்து வதுவை யயர்ந்தன ராயி

னட்பிடை யறுகிலர் நாளிடைக் கொழுநர்த்

தட்டுநலி வினையிடைச் சாஅர்ந் தஞர்கில 5

ரறிவுடைக் குழவி யாற்றலொடு பெறுகுவ

ரென்குநர் வதுவை யில்லுழி மலர்ந்த

மாதரார் தங்கண் மனன்பிறர் தம்மைக்

காதல் கூர்ந்து கருதா தேயோ

காதல் கூர்ந்து கணவரை யேயோ 10

மணப்பர் பிறர்தம்மை வதுவைபுரி யாரோ

முன்னுள்ளி னோரைப் பின்னே யெள்ளலு

முன்னெள்ளி னோரைப் பின்னே யுள்ளலு

நன்னெறி கொல்லோ நாள்சில பழகிக்

கலத்த லன்பொடு பலநாட் கழிப்பிற் 15

கினியது கொல்லோ வின்றுணை யிழவழிந்

தினைவுறு நங்கைய ரிற்றைஞான் றிலர்கொ

லினைய வதுவையொடு கைம்மைநோற் கில்லாப்

பெண்டிர் வதுவையும் பேணுநர் மாண்ட

பெரும்பொருள் பெறீஇயர் பேரியாண்டு படைத்த

வருந்துணை யிழந்த வாயிழை யவரை

வரைந்த வறனில் வன்னெஞ் சோரே

புயனேர் கூந்தற் பிறைநேர் நறுநுதற்

கயனேர் பிறழ்கட் கனிநேர் செவ்வாய்க்

குறுமக ளோரைக் கொதிக்கவைக் குநரே 25

யினிமற் றம்மா வெழிலிள மகாரை

யனையர்தந் நலனே தந்நல னாக்குஞ்

சான்றோ ரறிவறீஇத் தக்கார்க் கினிதளித்

தான்றவன் பிருவரு மளா அய்நல னெய்த

நன்னா டோறு நயந்தழைத் தளப்பில் 30

வண்மையொ டொருவர்மற் றொருவர்க் குயிருட

னண்ணின ராக நட்பமர் காதலைத்

தொட்டிற் பழக்கத் துறைப்பாற் படுத்தி

வாய்வெறுப்பு முதல மாய்த்துவந் தனரே

யாதலிற் சீரிள வாய்தொடி யவரை 35

யேதமில் காளையர்க் கீகென்

றோதினர் மூதுரை யொண்டவத் தோரே.

செழுங்கதிர்ச் செல்வம்

இருள்கொள் சிறைக்காப் பிடைக்கலங்கி

யிருக்குந் தருவு முனதுகையால்

வருடல் பெறுவான் மனங்குழைந்து

வளைந்து வளைந்துன் னடிநாடித்

திரியுஞ் செயற்குந் தெளியாரைத்

தெளிக்கு மாறென் குழவியெலாம்

மருவு தாயர் தமைக்கூவி

மலர்க்கண் டிறக்க வருகதிரே. 1

பறவைப் பார்ப்பு முன்வரவைப்

பார்த்து மழலைப் செஞ்சிறுவாய்

நிறையப் புகலும் பாட்டெல்லாம்

நெறியே வந்தென் செவிப்புகுந்தும்

நறவு பழுத்த முத்தமிழால்

நானோ பாடா திருந்திடுவேன்

கறவைப் பசுவைக் கன்றூட்டுங்

காலங் காட்டி வருகதிரே. 2

கான விலங்குங் கடும்பாம்புங்

கல்லென் மனத்துக் கள்வர்களும்

ஈனக் செயலுக் கஞ்சினவாய்ப்

புதருட் பதுங்கு மியல்புணர்ந்தும்

மான மிலாதே னாணாதுன்

மன்றத் தெய்தி வழுத்துகின்றேன்

வானத் திருளின் படாங்கிழித்து

வதனங் காட்டி வருகதிரே. 3

பிணமாக் கிடக்கும் பேருலகைப்

பெரிய வருள்கொண் டுணர்வளித்துக்

குணமே கொள்ள வெழுப்பிவருங்

கோனே பொருள்க டமக்குரிய

வணமே காட்டி மயக்கறுக்கும்

வானோர் சோதிப் பெருமானே

பணமே பேறாப் படைக்கிலுன்றன்

பயன்காண் மாறென் செழுங்கதிரே. 4

கோடிக் கதிராற் பலகோடி

குணத்தைக் குழைத்துப் புவனமெல்லாம்

ஓடிப் புறத்தோ டகம்புதுக்கி

யுயிரை யளிக்க மோவியமே

நாடித் தெளியும் விழிக்கெல்லாம்

நலன்செய் விழியே புலவரெலாம்

பாடப் படைத்த காவியமே

பணிந்தே னின்றாள் செழுங்கதிரே. 5

மரணப் பிறவிப் பிணிதீர்த்து

வைக்கு மருந்தே பிணியென்னும்

எரிவுக் கடலால் இராக்கடலால்

எற்றுண் டுழல்வார் கரையேற்றத்

தரணிக் கடலின் கரையேறுந்

தலைவா நின்றா டலைக்கணிவேன்

கரவுக் கண்ணுங் கண்டுவக்கக்

கருணை படைத்து வருகதிரே. 6

பாடிக் கரைந்து பாவவிருள்

பறந்தற் றொழியச் சிறந்துன்னைத்

தேடிப் பிடித்துக் காதலித்துச்

சேர்தற் குருகித் தேகமெலாம்

வாடிக் களைத்தேன் கண்மணியே

வையம் புரக்கும் விண்மணியே

ஓடிப் பறந்து தடுத்தற்காம்

உறுப்பொன் றில்லேன் செழுங்கதிரே. 7

எண்ணற் கரிய காலத்தான்

இடத்தான் மொழியாற் புலவர்களான்

எண்ணிப் புனைந்த புனைகின்ற

இனியும் புனையும் பாக்களெல்லாம்

எண்ணச் சுருக்கி யொருசொல்லான்

எனக்கிங் கருள லுனக்கரிதோ

எண்ணுக் ககத்தும் புறத்துமிருந்

தெல்லா மறியுஞ் செழுங்கதிரே. 8

மண்ணாய் மறைந்து மண்காக்கும்

மழையாய் வளியாய் வளம்பெருக்கி

உண்ணா நின்றாய் போகமெலாம்

உயிராய்க் கோடி யுருவமெடுத்

தெண்ணா நின்றவ் வுயிரையெலாம்

ஏற்றத் தாழ்வி லிருத்துகின்றாய்

அண்ணா நீயார் அவையாரென்

றடியேற் கருளாய் செழுங்கதிரே. 9

கோழிக் குலமே பிறருரிமை

கொள்ளை கொளுஞ்சூ ரியகாந்தி

ஏழைக் குயிலே நீவிரெலாம்

எம்மாற் கரந்து பெருங்காதல்

ஆழிக் குள்ளே யவனையணைந்(து)

அமிழ்த முண்ண லறமேயோ

மாழைக் கண்ணி யுணர்கிலென்னாம்

மணமாண் பிதுவோ செழுங்கதிரே. 10

இன்ப துன்ப மியல்பாயே

இல்லா வுனக்கென் றும்பமெலாம்

என்பு முருக வெடுத்துரைத்தும்

என்னாந் துன்பத் தியல்பையுணர்ந்(து)

அன்பு புரிதற் கெழுகில்லாய்

பகலே யன்றி யிரவறியாய்

துன்பக் கடற்காந் துரும்பானேன்

துறைகாண் கில்லேன் செழுங்கதிரே. 11

மாலைப் பொழுதி லிளந்திங்கண்

மைந்துக் கன்று கதிர்வெள்ளப்

பாலைப் பருகும் வேட்கைவிஞ்சிப்

படர்ந்து தொடர முன்சென்று

வேலைக் குள்ளே புகுந்தொளித்து

விளையாட் டயரும் பெருந்தாயே

மூலச் சுடரே முழுமணியே

மூவா முதலே செழுங்கதிரே. 12

மாலைக் குணக்குக் கடலகத்துங்

கவின்சான் மாலைக் குடகடலின்

பாலுந் தோன்றி மறைந்துவரும்

பயன்றோய் காட்சி வளனையெலாங்

கோலிப் புனைந்து கூத்தாடிக்

கும்பிட் டேனு மாறுதற்குச்

சால முயன்று மஃதடையுந்

தவமொன் றிலனே செழுங்கதிரே. 13

கொல்லுஞ் சினத்துக் கான்விலங்கைக்

கோளங் குணராள் ஓடிப்போய்ப்

புல்லிப் போற்றி யென்னாதன்

பூங்கை புனைந்த பாவையெனச்

சொல்லித் தனையு மறக்க அந்தத்

துட்ட விலங்கும் நல்விதியால்

அல்லல் செய்தின் றென்பேதைக்(கு)

அறிவேன் கெடுத்தாய் செழுங்கதிரே. 14

தேவுப் படிவந் திருவாற்றல்

செறிந்தாய் நீயென் றுனைவேட்டென்

பாவுக் குள்ளாய்க் கியான்காதல்

படைதே னல்லே னிழிவடிவும்

பாவப் பழியு மழிசெயலும்

படைத்தா யேனு மாற்றகிலேன்

ஆவிக் குள்ளே யானறியா

தமைந்த தன்பே செழுங்கதிரே. 15

காலை யந்திப் பொழுதினிலே

கதிர்க்கை யாலே பலநிறத்தை

நீல வானத் திடைகுழைத்து

நீதா னித்தந் தீட்டிவந்துஞ்

சாலப் பெறாத கைகுறித்தோ

தவிர்த்துப் பின்னு மழிக்கின்றாய்

பாலல் பள்ளி மணலெழுத்தைப்

பலில்கின் றாயோ செழுங்கதிரே. 16

எல்லார் தமையும் நீவருமுன்

எழுப்பிப் பின்னர் வருகின்றாய்

பொல்லா வினையன் றனித்துன்னைப்

புகன்று குறைகள் போக்கற்கும்

ஒல்லா திங்ஙன் வாணாளும்

ஓடி வீணா வொழிந்ததுவே

சொல்லாங் கால மெலாநொடிக்குட்

செகத்திற் காக்குஞ் செழுங்கதிரே. 17

நன்றே செயினும் விதிமுரணி

நலிவே செயினும் நாடாமற்

கன்றே யூட்டுந் தாய்போலக்

கடைக்க ணோக்கா லெனைக்காப்ப(து)

ஒன்றே புரியு மொருதலைவா

உனையான் மறந்தா லுய்வேனோ

மன்றே புகுந்து மணமுடித்த

மைந்தா வாழி செழுங்கதிரே. 18

அடக்குங் கதிரின் வெந்தீயும்

ஆகாச் சேய்மைப் பெருவழியும்

இடைக்கொண் மனிதர் தேவர்க்காம்

இழிவோ டுயர்வு மியாங்கொளித்த

படுக்கைக் குள்ளே நாய்தன்னைப்

படுத்துச் சேய்போல் வளர்ப்பதுவுந்

தொடுத்து மன்பாங் கிழமையன்றே

சூழ்ந்து வழங்காய் செழுங்கதிரே. 19

தன்னை வளர்த்த நீரோடுந்

தன்மெய் கலவாத் தகைதுறந்து

நின்னை யன்றிப் பிறவற்றை

நேர்நோக் காம லிரவெல்லாம்

முன்னைப் பாவம் போயகல

முற்றுந் தவத்தாற் கண்டுமலர்

இன்ப மரைக்கே யாட்பட்டாய்

இனியென் செய்கேன் செழுங்கதிரே. 20

பெற்ற திருவைப் பிறிதாக்கிப்

பேணாப் பிறிதைப் யுரித்தாக்கிக்

கற்ற வறிவை யிருளாக்கி

கல்லா விருளை யொளியாக்கி

உற்ற நனவைக் கனவாக்கி

உதவாக் கனவை நனவாக்கி

மற்றவ் விருளைப்ப பகலாக்கும்

மாயா மாயாச் செழுங்கதிரே. 21

எல்லா வுயிரு மென்மக்கள்

எல்லா வுலகு மவர்க்குரிய

எல்லா நுகர்வு மினியவர்க்கே

என்றே தேறிப் பேராசை

எல்லாம் போக்கி யானுய்ய

என்னை மணந்த மணவாளா

எல்லாம் வல்ல மாமாயா

இனியா னஞ்சேன் செழுங்கதிரே. 22

விடியற் போழ்தில் துயிலுணர்ந்து

விழிக்கு மோர்நா ளுன்றெய்வ

வடிவைக் கண்டு மூர்ச்சித்து

மயங்கிக் காதல் வலைப்பட்டு

நொடியிற் கருக்கொண் டுனையேயான்

நோற்ற தவத்தின் பேறாகப்

படியிற் பெற்று வளர்க்கின்றேன்

பாலா வாழி செழுங்கதிரே. 23

வான முகட்டின் மறையொளியாய்

மழைக்குண் மருவி மின்னாகிப்

போன துளியாய்ப் புவிபுகுந்து

புசிக்கு மமுதுட் போந்தியான்கொள்

ஞானக் கருவாய் வளர்ந்துதித்து

நளின விழியா லெனைமயக்கித்

தேனைச் சொரிந்தென் கவலையெலாந்

தீர்க்குந் திருவே செழுங்கதிரே. 24

முந்திப் பிந்திப் போரெதிர்ந்தும்

முகமன் புரிந்தும் வருந்தாமல்

எந்த இடத்தும் எப்போதும்

எண்ணின் முன்னர் வந்தெய்தி

அந்த இடத்தில் அப்போரே

அவாவும் பொருளாய் தானாகிச்

சிந்தை களிக்க நுகர்விக்குஞ்

சிந்தா மணியே செழுங்கதிரே. 25

செல்வஞ் சிறிது மில்லாதேன்

தேசும் வலியுஞ் சிறிதுமிலேன்

நல்ல கலையுஞ் சொல்வலியும்

நாடிற் சிறிதும் பெற்றில்லேன்

சொல்லி முயன்று நின்றுமிலேன்

சோரா அன்புண் டெனில்லேன்

புல்லி உனையான் களிக்கின்றேன்

புகலா யீதென் செழுங்கதிரே. 26

கன்றுந் தீய தென்றேனும்

கலவா தோடப் புடம்வைத்து

நன்றுக் கிடனாம் பெருந்தவங்கள்

நான்முற் பிறப்பிற் பலபயின்றேன்

என்றிவ் வுலகோ டொருயானும்

இன்றே யுணர்ந்து வியப்பெய்த

வென்று மணந்து சுகம்விளைத்து

விளையும் விளைவே செழுங்கதிரே. 27

உன்றன் இயல்பொன் றுணராமுன்

உன்மேற் காத லூற்றெடுத்து

மன்னும் பெருக்கி னலைப்பட்டு

மயங்கித் திரியு நிலைக்கிரங்கி

நன்று புரிந்தா யதுபெற்ற

நாளே தொடங்கிப் பிறவற்றும்

ஒன்று முனையான் கண்டவற்றை

உவக்கின் றேனே செழுங்கதிரே. 28

காட்ட லோடு காண்பதுவுங்

கலக்கக் கலந்த ஒருகலப்பே

ஈட்டு முணவோ டுண்பதுவும்

இயைவான் இயைக்கும் ஓரியையே

கேட்ட லோடங் கிசைப்பதுவுங்

கிழமை கொளச்செய் கிழமையே

கூட்டிப் பிரிக்கப் பிரித்தவற்றைக்

கூட்டற்குறிய செழுங்கதிரே. 29

மதுரகவிப் புலவர் சூசைப்பிள்ளை

1877 - 1955

இவர் மாதகல் என்னும் ஊரிலே வத்தியாம்பிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார் இவவரது மதம் கத்தோலிக்க கிறித்தவம். இவர் யாழ்ப்பாணம் அர்ச். சூசைமாமுனிவர் அச்சகத்தில் நீண்டகாலமாகக் கடமையாற்றியவர். இவரது புலமையைக் கண்ணுற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் இவருக்கு 'மதுரகவிப் புலவர்' என்னும் பட்டத்தைச் சூட்டினர்.

சங்கிலியன் நாடகம், எத்தாக்கியார் நாடகம் கருங்குயிற் குன்றத்துக் கொலை நாடகம் முதலியன இவராற் பாடப்பட்ட நாடக நூல்களாகும். இவர் பாடல்களிற்றமிழின் இன்னோசை ததும்புவதைக் காணலாம்.

எத்தாக்கியார் நாடகம்

மாலுமி (ஆசிரிய விருத்தம்)

அருணனொடு எரிகிரண வருணதா ரகைகரண

அவையுலவு பரமதரையும்

அரிவரிகள் கரிசரிகள் திரியுமிந் தரையதும்

அடலுமென் பேர்கேட்கினோ

திரிநிலைமை பிரிவுபடுஞ் செயசுடரு மிருளுறுஞ்

செறிவிலங் கிரையுணாதே

சித்தரிமை யத்தர்மலை யந்தரந் தொடுநிலைமை

சேராது அதிர்வரறியே

கரிகுருவி சமர்செய்ய அரியபெரு ராசாளி

கருதியே முன்னெதிர்த்தல்

தன்மையோ லன்னியா என்னுரையை நீமீறல்

காலத்து யாலமோடா

பரவைவளை வரையுலக ரவரவர்கள் நிலையேங்கப்

படரொளிகா லிடைவாளினால்

பாவியுன தாவியென லோகமே போக்குவேன்

பாரெலா மேங்குமாறே. 1

கங்கைவளை லங்குபுவி எங்குமுளோ ரென்மொழியைக்

கண்டஞ்சி யேங்குவாரே

கதிரபாக் கரவெள்ளி அதிருமே நிலைதலிற்

காசினியுந் நாகமுறுமே

பொங்குமுயர் கின்னரர்கள் நாரத சடாமுடியர்

பூதகண மாதியோரும்

பொருநெருப் பொடுபஞ்சு போலபே லில்லாது

போய்மறைவர் நிறுதூளியாய்

சங்கையறி யாதபே யங்ஙனே மாதர்மயல்

தான்கொண்டு உழலுமூடா

தருகூலி யில்லையேல் வரவிடுவ னோபெண்ணை

விடில்புவனம் நையாண்டிசெயுமே

இங்கெனது கண்முனில் லாதுநீ ஏகடா

ஈயகடன் வழிதேடடா

எப்படிநீ யழுதாலுங் கைப்பிடியுன் தேவியை

யிப்புவியில் யான்விடேனே. 2

தேசுகந்த பொன்மேனிப் பதும ராகஞ்

செப்புகின்ற அளிகளது கூந்தற் பாரம்

பாசுகந்த கலைமகளின் வதன ரூபப்

பாவையளே உன்கணவன் பகர்ந்தே சென்ற

காசுகந்து தந்துஉனை மீட்கக் காணோம்

கப்பலது வேறூரே செல்ல வேண்டும்

நீசுகந்த மொழியோடே உனது எண்ணம்

நீணிலத்தில் தெரிவிப்பாய் நிசமாய்த் தானே. 3

கஞ்சமல ரஞ்சிதமே கரும்பே தேனே

கற்கண்டே யென்வாவக் கசடைப் போக்கி

இஞ்சகத்தில் நீரிறங்கிக் கரையே சேர்ந்து

ஈடில்லா வுன்னாசைப் பிரிய மாக

மஞ்சுதவழ் தேவனையே யிரந்து வேண்டி

மாட்சிமைசேர் கற்பினுக்காய் மகிமை யோங்க

எஞ்சலிலாப் புண்ணியத்தாற் குடும்பக் கூட்டம்

எய்தியே என்னாளும் வாழு வாயே. 4

உழவன் (விருத்தம்)

வரையெழுந்த சூரியன்போல் வடிவாம் மேனி

வாக்கிலுயர் தேனவனே மதுரா கானின்

இரையெழுந்த ஆவேச விலங்கின் பால்நீ

எய்தியதோ பார்க்கொண்ணா வகோர மாந்தீ

நிரையெழுந்த முந்தணியா யுன்பே ரூரென்

நீணிலத்தி லுனைப்பெற்ற மற்றோர் யார்தான்

மரையெழுந்த முகவடிவா அன்பே செய்வேன்

வாமமது ரக்கவியால் வழுத்து வாயே. 5

மந்திரி (ஆசிரிய விருத்தம்)

மின்னஞ்சு மஞ்சிடும் பொன்னஞ்சு மஞ்சிடும்

மிக்கஞா யிறேஅஞ்சிடும்

மேலகிர ணங்களோ தாரகைக் கணங்களோ

மிளிருமுன் நாமமெனிலோ

அன்னஞ்சு காபள்ளி கொண்டவா விகள்சூழ்

ஐரோப்பிய ராட்சியதேச

அகிலனீ முதல்வனெனக் கைகூப்பி வேண்டவே

அல்லாபிறைக் கொடியநாம்

தன்னெஞ்சி லோர்மமோ ராசத்வ மறியாத

தன்மையோ காம்பீரமோ

தாமனே யீரேழு ஆண்டதா யுன்வீர

தங்கழல் பணியாதுமே

கொன்னஞ்ச மேயிலா திறையான தவைதரா

கொடியனிவ னென்பதறியே

கொற்றமுன் பாலதே துர்க்கிவே ரழியவே

குவலயம் நீதிபுரியே. 6

இராசன் (கழிநெடில் ஆசிரிய விருத்தம்)

காலுந்து வடஆழி மேலுந்த ஐந்தெலாங்

கல்லோல அல்லோலமே

கார்புவனம் மாறுமே கடல்திடர தாகுமே

காசினியென் னாவசையவே

பாலுந்தி னும்மாதர் சேயினைத் தேடார்கள்

பங்கயம் நீரெழாதே

பாய்வேங்கை யானதும் மிருகாதி தன்னையே

பற்றியே உண்ணிடாதே

மாலுந்து நாதனும் பிரியாத தேவிதனை

மலர்வாசம் நீங்குவானே

மகமேறு பாறுமே அகனெருப் பேறுமே

மஞ்சொளிதீ பஞ்சாகுமே

சாலுந்து நீரையறி யாவெறும் பானதோ

சலதுள்ளி வெள்ளமாம்

தன்மையோ கிறேக்கன துள்ளமோ கெறுவமோ

தான்கணத் தடக்குவேனே. 7

இராசன் (ஆசிரிய விருத்தம்)

ஐந்துமே ஒடுங்க மஞ்சதாய்த் துருக்கர்

அவனியிற் புகையெனப் போக

ஆறதாய் வீரப் பேரிகை முழக்கி

அகிலங்க ளெங்கணும் வைத்தாய்

நைந்துமே யேழு மவரிட மில்லா

நாட்டமெய்க் கோட்டைகொத் தளங்கள்

நான்றிடக் கொடிகள் நூன்றிட ஒளிகள்

நானிலஞ் செய்தையென் றறிந்தேன்

விந்தைசேர் திறையுந் தந்தனர் பாதம்

வேண்டியென் வீரக் கழல்பணிந்தே

விட்டதா லவர்மேல் நட்டமே செய்யா

இருப்பையே அரிச்சனை புரிவேன்

இந்துமா பரியோய் சந்தநாற் கவியோர்

ஓதுமா புகழனா யுன்பால்

உற்றபைந் தொடியார் மற்புய பாலர்யார்

ஓதுவாய் யான்அறிந் திடவே. 8

இராசன் (சந்த விருத்தம்)

அஞ்சன வேல்விழி வஞ்சியர் நீர்குடை

ஆடிட அவர்கலவை

அவையது அம்மதின் மகிமைமே லாகவே

அலையிடை சேருறலால்

விஞ்சுக ருங்கடல் மிஞ்சிட நன்மனம்

மேவிநீர் பூவெனது

வீரதி தாதிப போரதி சிங்கவி

லாசபி லாசிதனை

நெஞ்சக யூக மனோகர தந்திர

நித்த மிகுத்துடைய

நித்த மகாகுண மந்திரி நிச்சய

நீயறி மிச்சுவர்ண

கொஞ்சிடு மஞ்சும லர்த்தொடை வாயில்முன்

கோவிரு நால்தினமும்

கூவியே தூதுவா மூலமா யேவரக்

சொற்றுவாய் பாற்றுடனே. 9

செங்கிர ணப்ரபை தங்குச ரோருபை

செயனேர் முகவிலாச

தீரர னாதிப வீர்யம னோகர

தேர்வா னுடையயணியா

தங்கிர திறைமனர் முத்தொடு ரெத்தினந்

தந்தடி கழலேதொழ

சறுக்கிய கெறுக்குறு துருக்கியென் திறைதர

தான்கெறு வுற்றதினால்

பங்கமே அவனுறச் சிங்கமே நிகரெனப்

படர்குடி ஆடவரை

பற்றியோர் பெற்றுமே முற்றிய சேனையாய்ப்

பாராது ஏங்கிடவே

அங்கவர் பெற்றிட உன்கையிற் பத்திரம்

அரசமுத் திரையதுவாய்

அடலுற ஏந்தணன் துர்க்கியன் மாய்ந்திட

அடுசமர் தொடுவிரைவே. 10

எத்தாக்கி (விருத்தம்)

கத்துகடல் சுற்றியுல கத்தை யாளுங்

காவலர்கள் ஒருங்குறினுங் களத்திற் சென்னி

தத்திவிழ எத்துகத மெறிகோ லீட்டி

தாவுகதை குந்தமழு கரத்திற் றாங்கிச்

சந்தமுகி லைத்தழுவி முழவ தார்ப்பச்

சடசடென வெடியதிரக் கொடிக னாட

மத்தகரி ஒத்தவய வீர ரேநீர்

வருகுவீர் எகித்துநககர் மருவு வோமே. 11

சீற்றிரி யேற்றினின் மேற்படு முக்ரம

திண்டிறல் வீரர்களே

திக்கு எகித்தினில் மிக்க துருக்கர்

கொடிப்படை தோணுகுதே

நாற்றிசை யெங்கணும் கூற்றுவ னென்னவே

நல்லொளி வாள்கிறிசு

நத்திய ஈட்டி துவக்கு படைக்கணி

நாற்படை சூழ்வரவே

காற்றினின் வேகமாய்ச் சென்றுமே துர்க்கரை

கண்டமே துண்டமுற

கடிதினில் வெட்டியே பிறைகொடி யற்றிடக்

காசினி மீதினிலே

ஏற்றணி கொண்டுமே நாற்றிசை யேங்கிட

எல்லா மல்லாவாய்

இருந்தவர் கரிந்திட விரைந்தமர் புரிகுவீர்

எம்கொடி மேலுறவே. 12

இற்றைவரை உம்மரச னென்செய் தானோ

எம்முழக்கோ திறைசேரிக் கிடிய தாச்சோ

பற்றுடனே இதைமுனமே அனுப்பி வைத்தால்

பாவிதுருக் கனுக்கிந்தப் பழிசா ராதே

கற்றுணர்ந்தே இனிமேலா யுங்கள் வேந்தைக்

காலமுறை தப்பாது கப்பங் கட்டி

பெற்றிடவே என்தயவை விளம்பு முன்செய்

பிழைபொறுத்தேன் உளமகத்வப் பேறாய்த் தானே.

க. சின்னத்தம்பி உபாத்தியாயர்

1864 - 1955

இவரதூர் அல்வாய். தந்தையார் பெயர் கணபதிப் பிள்ளை. தாயார் பெயர் முத்துப்பிள்ளை. மட்டுவில் வேற்பிள்ளை உபாத்தியாயரிடமும், புலோலிக்குமாரசுவாமிப் புலவரிடமுங் கற்றவர். அல்வாய் விநாயகர்மீது பதிகம், ஊஞ்சல், பராக்கு, மங்களம், ஆதியனவும் ; அல்வாய் மாரி யம்மாள் மீது பதிகம், பிள்ளைத்தமிழ், ஊஞ்சல், பராக்கு, மங்களம் ஆதியனவும் பாடினர்.

அல்வாய் விநாயகர் பதிகம்

உலகமா தாவாகு முமையம்மை முன்னீன்ற

வொருமருப் பொருளிநால்வாய்

ஓங்கமுக் கண்முறச் செவியொழுகு மும்மதத்

துயருமைங் கரதேவனே

அலகிலா வினையுடைய சிறியனே னடைவுற்ற

வாரஞர்ப் பிறவிவெள்ளத்

தழுந்தாது தேவரீ ரடியிணைக் கன்புசெய்

தரியதொண் டாற்றியுய்யப்

பலமுடைய வாகுவா கனமேறி முன்வந்து

பணிகொண்டு குறைவிலாத

பரங்கருணை யாலென்று மழியாத நிலையுடைய

பரமுத்தி தந்தருளுக

வலமுற்று வந்தனைகள் செய்யுமெய் யடியர்க்கு

மலவலி தொலைக்குமல்வாய்

வரதரா சாதந்தி முககணே சாசெல்ல

மாலிசந் தைப்பிள்ளையே.

அல்வாய் முத்துமாரியம்மை பிள்ளைத்தமிழ்

ஊசற் பருவம்

ஒள்ளொளிப் பவளக் கொடுங்கான் மிசைப்பொங்கி

யொழுகொளிய வயிரவிட்டத்

தூற்றுஞ் செழுந்தெண் ணிலாக்கால் விழுந்தனைய

வொண்முத்து வடம்வீக்கியே

அள்ளுற வழிந்துசெவ் வொளிதுளுங்ம புங்கிரண

மவிரிரத் னப்பலகைபுக்

காடுநின் றோற்றமப் பரிதிமண் டலம்வள

ரரும்பெருஞ் சுடரையேய்ப்பத்

தெள்ளுசுவை யமுதங் கனிந்தவா னந்தத்

திரைக்கடன் மடுத்துழக்குஞ்

செல்வக் செருக்காளர் மாமனக் கமலமென்

சேக்கையிள் பழையபாடற்

புள்ளொலி யெழும்வேவி லந்தைப் பதித்தேவி

பொன்னூச லாடியருளே

புழுகொழுகு மென்கூந்த லுறுமுத்து மாரியே

பொன்னூச லாடியருளே. 2

சிவ வணக்கம்

எங்கும் வியாபகமா யெம்மையீ டேற்றுமுய

ரங்கணனே யூசனே யமலனே யம்மானே

துங்கமுத்து மாரியம்மை யருள்வெள்ளந் தோய்ந்துவப்ப

யிங்கினிதா யெழுந்தருளி யெனைநன்கு காக்குகவே. 3

சத்தி வணக்கம்

ஈசனிடப் பாகத்தி னெய்தியுயிர் வர்க்கமெலா

மாசறவே பெற்றெடுத்த வம்மையே மேலான

நேசமுட னெண்ணான் கறஞ்செய்யு நின்மலையே

தாசனாய்ப் போற்றியுய்யத் தக்கவருள் செய்குகவே. 4

ஆறுமுக உபாத்தியாயர்

1857 - 1955

இவரது ஊர் உடுப்பிட்டி. தந்தையார் பெயர் சுப்பர். தாயார் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் சசோதரியாகிய கமலம் என்பவர். இவர் சிவசம்புப் புலவரிடத்தும் வல்வை வயித்தியலிங்கபிள்ளையிடத்துங் கல்வி கற்றவர். திருவுத்தரகோசமங்கையிலே பாக்கரசேதுபதி முன்னிலையில் சிவசம்புப்புலவ ரியற்றிய பிரபந்தங்களை வாசித்து அரங்கேற்றியவர் இவரே.

இவர் ஏராளமான தனிப் பாடல்களைப் பாடினார். அவற்றுட் பெரும்பாலான கடவுளர்மேற் பாடப்பட்ட பத்திப் பாடல்களாகும்.

தனிப்பாடல்கள்

வல்வை வாலாம்பிகை பதிகம்

தேன்செய்த கஞ்ச னுருவாக்கச் சண்டன் சிதைக்கத்திரி

வேன்செயுங் கன்மந் தொலைப்பதற் கைவர் விடுகின்றில

ரூன்செய்த சென்ம மெடுத்தெடுத் தின்னு முழல்வதன்றி

நான்செய்வ தென்னுரை வாலாம் பிகைவல்வை நாயகியே.

சேலாம் விழிமட வாரனு போகமுந் தேசிகத்தின்

மேலாம் விசாரமுங் காசினி யாமுசயும் விட்டம்புயக்

காலாம் புணைபிடித் தென்றோ பிறவிக் கடல்கடப்ப

னாலாம் மறைப்பொருள் வாலாம் பிகைவல்வை நாயகியே.

சந்நிதி வள்ளிநாயகி பதிகம்

கந்தா வடைக்கலம் யாமடிக் கென்றுன் கணவனையு

நொந்தார்க் கிரங்கிடு நின்னையும் போற்றுயர் நோன்புகொண்டு

வந்தாலிவ் வாறு வருத்துவ தோநம்பி வந்தவரை

நந்தா விளக்கெனச் சந்நிதி வாழ்வள்ளி நாயகியே. 3

ஒன்றோ கவலை யுரைத்திட நீயு முரியனுமோ

சென்றே யுரைக்கினுங் கேட்கின்றி லீரென்ன தீவினையோ

வின்றே வரும்வரு மென்றெனிக் கால மிறந்ததுகா

ணன்றே யுனக்கிது தானுரை யாய்வள்ளி நாயகியே. 4

கல்லாப் பிறக்கினுந் தாயே நினது கழலிணைக

ளல்லாது தஞ்சம் பிறிதில்லை யென்ப தறிந்துநிலை

நில்லா தலைக்குங் குரக்கு மனத்தை நிறுத்தவழி

சொல்வா யெனவந்தேன் சந்நிதி யானற் றுணைமயிலே.

அந்தியத் தேசிவ சம்புப் புலவ னகவிழியின்

முந்தி யெழுந்தெம ரெல்லாருங் காண முதமளித்த

கந்த வனப்பெரு மானருட் டேவிநின் கான்மலரைப்

புந்தி யிருள்கெடு மாறெந்த நேரமும் போற்றுவனே. 6

கதிரைவேலர் பதிகம்

பிங்கல னிதியப் பெருக்கமும் வேண்டேன்

பிதாமகன் கற்பமும் வேண்டேன்

புங்கவ ரிறைவ னரசையுங் குறியேன்

புண்ணியா நின்னடி மலருங்

செங்கையில் வேலு மயிலுமே தினமுங்

தெரிசித்தன் முத்தியிற் சிறப்பென்

றங்கணா வெனக்குத் தோன்றுவ திதையே

யருள்கதிர் காமவே லிறையே. 7

வல்லிபுர சுவாமி பதிகம்

எவ்வகைப் பிறப்பி லுற்பவித் திடினு

மியற்றவெத் தீமைநேர்ந் திடினு

மவ்வகை யெல்லா மாகவோ ருடலி

னாவியை நீக்கலூ னுண்ண

விவ்வகை யிரண்டு மனத்தினு நினையா

திருக்கவே வரந்தர வேண்டுந்

தெவ்வடு திகிரிக் கோவலா விவையென்

சித்தமா சகற்றிடு மருந்தே. 8

திருச்செந்தூர்ப் பதிகம்

மானிட மேந்தி தருமுரு காதிரு மான்மருகா

கானிட மார்குற மான்றினை மாவைக் கலந்துணற்குத்

தேனிட வுண்டு களித்தவ மேநின் றிருவடிக்கீழ்

நானிடங் கொள்ள வுளமோ திருச்செந்தி னாயகனே. 9

அந்தக னோவிங் கிருக்கவொட் டாமல கற்றமறை

யந்தண னோவங் கிருக்க விடாம லகற்றமிக

நொந்திங்கு மங்கு மளவறு காற்சுற்றி நோன்மைகெட்டு

நைந்தலுத் தேயிங்கு வந்தடைந் தேன்செந்தி நாயகனே.

கொன்றேன் பலவுயி ரஞ்சாமல் யாக்கை கொழுமையுறத்

தின்றேன் பலவகை மாமிச மற்சஞ் சிவசிவமெய்

நன்றே புரிந்தில னொன்றுந் திருச்செந்தில் நாயகநா

னென்றே பவக்கட னீந்திக் கரையினி லேறுவதே. 11

செல்வச்சந்நிதி முருகன்மீது பாடியவை

துன்ப மகற்றிச் சுகமளித்த லுன்கடனே

யின்பமர்ந்து பாடுவதோ வென்கடனே-பொன்பொருவு

வள்ளிதெய் வானை மணவாளா சந்நிதியிற்

பள்ளிகொள்ளும் வேலுடையப் பா. 12

கற்பக நாட்டர சிந்திரற் கீந்துங் காவற்றுய

ரிற்படு மைந்தன் கனவி லெழுந்தது மெண்ணிநின

தற்புதச் சேவடி வந்தடைந் தேனெனை யாண்டருள்வாய்

பொற்பமை சந்நிதி வாழாறு மாமுகப் புங்கவனே. 13

மாமலை வல்லி மகனே வருதி மலர்க்கடப்பந்

தேமலை மாலைப் புயனே வருதி சிலைமறவர்

காமலை யுந்திறல் வீரா வருதி கழிக்கரையிற்

போமலை தாழ்சந் நிதியாய் வருதி புலம்பறவே. 14

தென்கோவை ச. கந்தையபிள்ளை

1879 - 1958

இவரது ஊர் யாழ்ப்பாணத்துக் கோப்பாய். தந்தையார் பெயர் சபாபதி. இவர் இருபாலைச் சேனாதிராச முதலியார் மரபினர். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் தமிழை முறையாகக் கற்றுப் பாண்டித்தியம் அடைந்து கொழும்பு அரசினர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக அமர்ந்தார். 'வித்தகம்' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இவர் கடமை புரிந்தவர்.

இவரியற்றிய நூல்கள்: புதுவை சிறீ மணக்குள விநாயகர் ஒருபாவொருபஃது யோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த்து முதலியன.

புதுவை ஸ்ரீ மணக்குள விநாயகர்மீது பாடிய

ஒருபாவொருபஃது

உடைமணி யோசை யுலகெலாங் கேட்பநின்

அநுசனா யமரு மள்ளிலை நெடுவேல்

வள்ளிமண வாளன் புள்ளிமறி லேறி

ஒருமூ வுலகும் வம்வரு முன்னர்

அகில வுலகமு மடங்கிய நினாது 5

பெருவயிறு தூக்கிக் குறுக நடந்து

சராசர வடிவாந் தந்தையை வளாவி

மாங்கனி பெற்று விழுங்கித் தீஞ்சுவை

கண்டருள் கற்பனை கொண்டிடு தத்துவம்

ஈங்கெனக் கியம்புதல் வேண்டு மோங்கிய 10

விண்ணத் துயரிய தண்ணிலாத் தவழும்

பூம்பொழி னடுவட் பூழைவழி நழைஇக்

குறிவழிச் சென்ற சிறுகண் மந்தி

மாங்கனி யுண்டு வதிதர லம்ம

குரவன் குறிப்பின் வழுவா தொழுகிப் 15

புகலிடம் புக்கநின் பொன்னடித் தொண்டர்

மாவெனப் பூத்த காயப் பொண்ணாந்

தேமாங் கனியுண்டு சிவானந்த விளைவெனும்

பேரின்பந் துய்க்கும் பெற்றி காட்டும்

வளந்திகழ் புதுவை மாநகர்

மணக்குளம் வதியும் வானவ ரேறே. 20

___________

ஏற்றுயர் கொடியுடை யிறைவனும் வீற்றுப்

பாற்கடற் றுயிலும் பரமனு மொன்றெனும்

உண்மை காண்ட லொண்ணுமோ; அதுதான்

படிப்புவல் லப்பதிற் படுவதோ; அன்றே!

தத்துவப் பெரியார் தாமருண் மறைப்பொருள் 5

குரவனரு ளின்றிக் கூடுவ தாமோ!

புராணக் கற்பனைப் பொருளு முணராது

ஏற்றத் தாழ்வுரைத் தேளனஞ் செய்து

குறைபல பேசிக் குதுகுதுப் புறீஇக்

கசட்டு மனத்தாற் கலாம்பல விளைத்துக் 10

கும்பிக்கா ளாயினர் குறையா மாக்கள்

நந்திவடி வாகி வந்தெனை யாளச்

சித்தர்வாழ் புதுவையாந் திருப்பெருந் துறையில்

மணக்குளம் வதியும் வரத விநாயக!

உற்ற வாக்கையி னுறுபொரு ளாகிச் 15

சசிவண்ண னாகிச் சதுர்ப்புந் தாங்கிச்

சுக்கிலாம் பரத்திற் றுலங்கிடு நீயே!

விண்டு வென்ன விளம்பிடும் வேதம்,

இடமும் பொருளு முடலு முயிரும்

சத்தியுஞ் சிவமுமாந் தத்துவ மரீஇய 20

விண்டுவுஞ் சிவமும் வேறெனப் படுமோ!

நாரா ணயனான் முகனைப் படைத்தனன்

பிரமன் படைத்தனன் சிவனை யென்னும்

அருமறை யறியா விருகாற் பசுக்கள்

போலிக் கல்வியாற் பொய்ப்பொருள் கண்டு 25

மாழ்கலுற் றுலகை மயங்கவைத் தனரே!

கரியமா லுந்திக் கமல மென்னும்

பரமா காச பங்கய தளத்தில்

புறப்பட்டு புக்கு பியாபி யாகி

உலகெலா மாக்கு முபய பூதமாய் 30

உடலுயி ராகி நடலையொ டாடிய

பிரமதத் துவமே யுரியசா தகத்தால்

வியாபகங் குறுகி வியாப்பியத் தொன்றி

அமலசிவ வடிவா யமைதரு மிதுவே

முத்திநெறி யான தத்துவ மெனநீ 35

உணர்த்த உணர்ந்தன னுண்மை யானே.

யோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த்து

நேரிசை யாசிரியப்பா

ஓங்குகடல் வளைஇய வீங்குநிலப் பரப்பைப்

பாண்டுதன் னடிமலர் கொண்டுதாஅ யளந்து

பால்விரி தரங்கப் பாயன் மீமிசை

அம்புயன் முதலா வமரர்போற் றிசைப்பத்

திருவநீள் செம்மணி யொருபாற் கவினக்

கருமணி கிடந்த காட்சியது கடுப்பத்

தாமரை யுறையுங் காமரு தெய்வத்

திருவொடும் பொலியு மொருபெருங் கடவுள்

வலம்புரித் தடக்கை மாஅல் போலப்

பரிதியங் கடவுள் படுமறி யாப்பேர்

இருநில முழுது மொருகோ லோச்சி

ஆணையா லளந்து மாணவர் வடவெண்

பனிக்கடன் மரீஇய பாய்புக ழாங்கில

பவுமத்துச் சிறந்து பல்வளம் பழுனி

விண்வத் துயரிய கண்செலாக் சியமத்து

மேனிலை வதியு மெல்லியன் மடநலார்

முத்துற ணகைநிலா முகமதிக் குடைந்து

களிநிலவு காலு மொளிசமழ்ப் புறீஇய

மதியமேக் கற்று வயங்குகா லதர்தொறும்

வனப்புநனி கவரும் வகைமை மேற்கொளீஇ

ஆடியிற் றிகழு மாடமா ளிகைகளும்

அலகுவிலை போகா தொப்பின் றுயர்ந்த

அருங்கல வெறுக்கையு மொருங்குநனி காணூஉ

மணிக்கா லிஃதென நுணித்து நன்குணர்ந்

தளகை விடைகொள்ளு மணிலங் கெழுமி

நிலமகண் முகத்துக் குலவுபூந் திலகம்

என்னநின் றிலகு மிலண்டன்மா நகரிற்

பொற்றுணர் மலிந்த கற்பகா டவியொடும்

இந்திர சுதன்மையே யந்தில்வந் தமர்ந்தெனத்

தெய்வத் தபதியர் கைபுனைந் தியற்றாது

மனத்தினின் வகுத்தென வயங்குறூஉம் வனப்பின்

ஓவநுண் டொழிற்கெலா மேவுபதி யாகி

ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்

மணிமுடி மன்னரு மரபினிற் குழீஇ

ஆடகம் புனைந்து பீடுயர் பன்மணிப்

பாயொளி பரப்பும் பைம்பொற் கோயிலிற்

கணுதர் கண்ணிமை பூணுறா மலங்கி

இமையா நாட்டத் தியவுள ரேய்க்கும்

எழினலம் பழுனி முழுமணி யியன்று

விண்ணவர் கோமான் வியன்கலப் பேடகம்

வாய்திறந் தனைய மண்டப நாப்பண்

மருப்பி னியன்று வச்சிரம் புனைந்து

மரகதங் குயிற்றிய வாளரிப் பீடத்து

மன்னுபே ருதய மால்வரை முகட்டுச்

செங்கதிர் கிளர்ந்தெனச் செழுங்கதிர் பரப்புந்

தமநியத் தியன் நவமணி குயின்ற

திருமுடி புனைந்து செங்கோ லேந்தி

அளியரேம் பன்னா ளாற்றுநல் லறமே

உருவுகொண் டனைய மருவுகோ லத்துடன்

அமையாப் பேரரு ளன்னை மேரியாந்

திருவொடும் பொலியு மரச ரேறே!

மறம்படு பண்பி னறன்கடை மலிந்து

வழியறல் காட்டும் பல்குவளங் கொண்மார்

அறனுறு நெறிவழாஅ வைவரொடு சினைஇப்

பொருதுகளத் தவிந்து கிளையொடு மாண்ட

வணங்கா மணிமுடி மன்னவ ரேறாந்

துன்மதி நிலைஇய சுயோதனா தியர்போல்,

உலகெலா நடுங்க வுருமிற் சீறூஉச்

செருமாண் யவனரொடு சேரவுத் தியர்முதல்

விடங்கெழு படையின ருடங்குதுணை யமைதர

மண்ணசைஇ யெழுந்து வஞ்சி சூடிய

எஃகு மஃகிய சேகிற் றிகழ்ந்து

நன்மாண் பறுமுளச் சர்மா னியரொடு

சேரார் நெஞ்சந் தெருமர றழைப்பக்

கடிகெழு முரசின் மிடியென முழங்கப்

பரவைநுண் மணலினும் படுபிணம் பல்கி

அலைபொரு நெடுங்கட லழுவந் தூர்ப்பத்

தரியலர் முனைகெடு சதக்கிநி யாதிய

பெரும்படை தாங்கி யொருங்குடன் றெழீஇப்

பரவுநில வுலகத்துப் பொருவிறந் தமையாது

தேவருல கத்துஞ் செருப்புகன் றெழுந்தென

மானமீ திவர்ந்து வானகந திரிதரு

நோனா ருட்குந் தானையொடு நிலைஇ

ஐயாண் டகவை யாற்றிலி னையாது

பெட்வுறு நுண்மதிப பிரான்சிய ராதிய

கட்புலம் புரையு நட்புறு மன்னவர்

சென்றுடன் கெழுமச் செங்களம் பொருது

பருவர னிறைந்த விருநில மாந்தர்கள்

தெருமரல் கழிப்பித் தெளிந்துமன் றிகழ

அறிவரு ளாண்மையோ டுறுபெரு வென்றியில்

ஐரோப் பாவெனு மாரிய பவுமத்

தொருநீ யாகித் தோன்றி மருவிய

ஒன்னா ரஞ்சுந் துன்னருந் திறலொடு

விறலமை வென்றி திறனுறத் தெரிக்கும்

யோர்ச்செனும் பெயரா னியாவரும் போற்றிட

வாடா வாகை சூடுபெரு விறலோய்!

புண்ணிய பூமியாப் புகன்றிட நண்ணிய

பாடல்சால் சிறப்பிற் பரத கண்டமுந்

திருமூல னென்னப் பரவுதமிழ் முனிவரன்

சிவபூமி யிஃதெனச் செப்புபல் வளஞ்சால்

ஆழிசூ ழிலங்கை யாதிய பலப்பல

எண்ணமர் தேஎந்தொறுந் தண்ணளி மலிந்து

தரளங் குயின்று மணிகால் யாத்துக்

கருளகன் றிலகி யருளொடு கெழீ இய

வெண்குடை மதியம் வெண்ணிலாச் சொரிதரப்

போகுயர் வரையகம் பொதுத்திடு சேகுடை

ஏக சிருங்கியா வியம்புகோண் மாவுடன்

அரிமா பொறித்த வுருகெழு நெடுங்கொடி

சுடரொடு கொட்புற்றுத் திரிதந் தசைஇ

விண்ணகந் தூர்த்து வெயில்கால் சீப்ப

உலக பாலக ருருவா யிறைவன்

தன்னரு ளாணை தாங்கி மன்னிய

இறையெனப் புகலு மறுவறு கொற்றத்

தைவகை நெறியா னமைந்திடு பயந்தீர்த்து

மறநெறி நீக்கி யறநெறி யோம்பி

மன்னுயிர் புரக்கு மன்னவர் மன்ன !

சின்னா ளிலங்கையின் மன்னராய்ச் செறிந்த

சாலாக் கல்வி மாலார் மதியினர்

தீநெறி தழுவாது நூனெறி தழிஇ

நின்கீழ் வாழுநர் புன்கணுறா தென்றும்

அரசுமுறை பயிலிய திருவுறு மாங்கிலத்

துயர்தரக் கல்வி யுரிமையி னுறீஇயர்

விழுப்பமார் குலமத வொழுக்க மிழுக்காது

இயல்புளி யியன்று குலவுமா நிறுவிச்

செந்நலங் கணிந்து செழுஞ்சுவை கொழிதரு

செந்தமிழ் முதலா முந்துமொழி வளர்த்து

நன்னலம் புரியு மின்னருட் குரிசில்!

அல்லன வொரீஇ நல்லன மரீஇப்

பொதுநீக்கி யுலகம் புரந்திடு பண்பிற்

புரையுந ரில்லாப் புரவல! நினையே

மெய்ம்மையின் வழாநிலை கைவரு நீர்மையிற்

சத்தியந் திகழரிச் சந்திர னென்கோ!

தண்ணளி யுடைமயிற் றருமனே யென்கோ!

நீதியின் மனுநெறி நேரிய னென்கோ!

ஈழநன் னாட்டு மேவுதமி ழரசனாஞ்

சொல்லமர் நீதியி னெல்லாள னென்கோ!

அதா அன்று,

தவறில தெனினுந் தவறுபெரி துடைத்தெனத்

தன்கரங் குறைத்துப் பொன்கரம் புனைந்த்

ஈண்டிய பெரும்புகழ்ப் பாண்டி னென்கோ!

வென்றியி லாரிய மன்னரை வென்றிடுங்

குன்றா விறற்செங் குட்டுவ னென்கோ!

அதாஅன்று,

செங்கண்மால் கடவிய செழுந்தேர் மிசையசைஇப்

பாரதப் பெரும்போர் வீரர்தங் குழுவெலாந்

தெய்விகப் படைகளா னைதகக் கோறி

அழியா வென்றி அருச்சுன னென்கோ!

ஈங்கிவர் புகழலா மென்னுமீ டிலவே

யாங்கனம் புகல்வேன் யாரைநே ருரைக்கேன்

தண்ணரி யரும்பிச் சாமநெறி மலர்ந்து

பகையின் றுயர்ந்த பண்புபல பழுத்தலின்

உலகெலாம் வணங்கு மொருதனி யரசாம்

நின்னருந் தந்தையு மன்னவ னன்னையாம்

மன்னுயிர்க் கிரங்கு மின்னருட் செல்வி

பெருநில முழுதா ளுரிமை தனாஅதெனும்

உரைபெறு திருநாட் பெரிதுளங் கவன்று

கண்பனி துளிப்பக் கசிந்துமன் னுருகா

அரசுறு நுகம்பூண் டவனிமுறை காத்தல்

அம்ம மற்றிஃ தருங்குரைத் தாலெனக்

கனிவாய் கண்டு கழறுமொழிக் கேற்ப

வாய்மையும் பொறையுந் தூய்மையு நிறையும்

அறம்புரி நீர்மையுந் திறம்பிடா முதல்வி

விசயலக் குமியே மேதினிக் கரசியாய்ப்

படியில்வந் தன்ன வடிவுகொண் மெல்லியல்

மகனையு மொருகான் முறைபுரிந் தாண்ட

வசையறு புகழின் விசயமா தேவியுஞ்

சான்றபே ரருளிற் றலைமைபெற் றுயர்ந்து

நயனொடு புரிந்த பயனுறு பண்பெலாம்

ஒருருக் கொண்டென நீதிகழ்ந் தனையே!

அதனால்,

நின்பெரும் புகழ்தா னின்குல முதல்வர்கள்

மன்பெரும் புகழினு மாண்புநனி யடைத்தே!

அவைதாம்,

ஆயிரங் கவைநா வரவம் புகன்றிட

ஆயிரங் கரமுடை யசுரன் பொறிக்கினுந்

தன்னமு மமையா மன்னுநீர் மையவே!

அதா அன்று,

கடைபோக வுணர்ந்து தடையறக் கூறுதல்

சதுமறைக் கிழவற்குஞ் சாலா தெனினே

யானீண் டுரைத்த லேழைமைத் தன்றே!

ஆயினும்,

கோனோக்கி வாழுங் குடிகடா மெனவும்

அம்புவி வாண ரனைவோர்க்குந் தெய்வம்

இலைமுகப் பைம்பூ ணிறையே யெனவுந்

திருவுடை மன்னவன் றிருமா லென்னவும்

பெரியார் பணித்த வுரைசொல் பொருண்மொழி

நினைதொறு நெக்குள முருகி

ஐந்துதலை யிட்ட வைம்பஃ தென்னுநின்

பிறப்பிய லாட்டைச் சிறப்புளி காணூஉ

ஆராக் காதன் மீதூர்ந் துன்புகழ்

கூறுதற் கமைந்தனன் குறைகொளா தருண்மதி!

திறைசொரி மன்னவர் முறைமுறை வணங்குநர்

மணியுற ழணிமுடி வருடுநின் கழற்கான்

மன்னுபே ரன்பிற் சென்னிமிசைக் கொளீஇ

உலகருள் காரணன் றிருவருள் போற்றுவன்;

நீடுபே ராயுளுங் கழிபெருங் செல்வமும்

ஒன்னார்த் தெறலு மன்னுயிர்க் கருளும்

அன்பு மறனுந் தாங்கி யின்புறூஉம்

பேரரு ளாட்டியா மேரியுடன் கெழுமிப்

பன்னூ லாய்ந்த செந்நெறிக் குரிசில்

அரசுவீற் றிருக்குந் திருவுறு குமரனாம்

எட்வேட் டென்னு மிளங்கோ வாதிய

மக்களு மாண்பம ரொக்கலுஞ் சூழ்ந்திட

நண்புறு மரசரா மன்பரொடு மரீஇ

ஒருகுடை நிழற்கீ ழுலகெலாம் புரந்து

பாயிரு டுமித்துப் பகல்கான் றெழூஉஞ்

செங்கதிர் ஞாயிறு போலவும் பொங்கொளிப்

பன்மீ னாப்பண் மன்னிய தண்கதிர்த்

திங்களஞ் செல்வன் போவும்

வாழி வாழியிம் மாநிலத் தெனவே!

வித்துவசிரோமணி கணேசையர்

1878 - 1958

இவர்து ஊர் புன்னாலைக்கட்டுவன். தந்தையார் பெயர் சின்னையர். இவர் வித்துவசிரோமணி பொன்னம் பலபிள்ளையிடத்துஞ் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்துங் கல்வி கற்றவர். மகாவித்துவான், வித்துவசிரோமணி என்னும் பட்டப்பெயர்கள் இவருக்குண்டு. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் என்னும் உரைநடை நூல் இவரது ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். தொல்காப்பியப்ப புலமையிற் றோய்ந்த இவர் ஈழத்திலே ஓர் இலக்கணப் புலவர் பரம்பரையைத் தோற்றுவித்துள்ளனர்.

இவரியற்றிய செய்யுணூல்கள்: வருத்தலைவிளான் மருதடி விநாயகர் இருவாபிருபஃது, மருதடி விநாயகர் அந்தாதி, மருதடி விநாயகர் கலிவெண்பா, மருதடி விநாயகர் கலிநிலைத்துறை, மருதடி விநாயகர் ஊஞ்சல் ஆதியன.

மருதடி விநாயகர் இருபாவிருபஃது

வெண்பா

பொருளுங் கலையுங் புலவியொடு மற்றும்

அருளும் படிவேண்டே னையா-தெருளு

மறையதன்மூ லத்தும் மருதடிமூ லத்தும்

உறைமுதலே வேண்டுவனுன் றாள. 1

அகவற்பா

தாளினிற் பெரும்பொரு ளுழந்துமிக வீட்டித்

தாமுமுண் ணாது பிறர்க்குமீ யாது

கன்றுமுண் னாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காங்குப்

பயனின்றிக் கழிய வைத்தங் கிழக்கும்

மாந்தர்த மறிவினை மறந்தும் பெறாஅது

நின்றமர்க் களித்துந் நினதுபணிக் குதவியும்

நன்றுபுரிந் துய்யு நல்லுணர் வதனை

என்றனக் கருளிய இறைவநின் பதங்கள்

கூடும் பரிசின் வீடும் பெற்றே

இன்புறு மாறிங் கன்புட னருளுவை

மருதின்மூ லத்து மருவும்

ஆனை மாமுகத் தைந்துகரத் தோனே. 2

வெண்பா

வண்ணம்பொ னின்னுடலம் வார்சடையிற் கொன்றையும்பொன்

மண்ணிலுயர் வர்த்தலையா மாநகரில்-நண்ணும்

மருதடியி னீயுறையும் வான்கோயி லும்பொன்

அரிதோபொன் னீயிதற் கால். 3

அகவற்பா

மருந்தெனக் கருதினு மருந்தா கும்மே

வைப்பெனக் கருதினும் வைப்பா கும்மே

மற்றெனக் குயர்தரு மாமரு தடியின்

மூலத்து முளைத்து மூவுல குந்தன்

கதிரொளி பரப்புங் களிற்றுமா முகத்து

முக்கட் செல்வன் முழுதுல களிக்கும்

மூவா முகுந்தற்குத் தீவாய் நஞ்சத்

தரவின் பெருவடி வகற்றி யருளிய

ஒருபெருங் கடவு ளிருகழ லடியே. 4

வெண்பா

தேவே யமரர்க்குத் தேனே யடியவர்க்குக்

கோவே தனக்குத்தான் கொன்றையந்தாப் - பூவேய்

சடைமுடியி னோடு தனிமருதின் கீழ்வாழ்

கடமா முகத்துக் கனி. 5

அகவற்பா

தாமுழந் தீட்டிய தோமில் பொருளுணும்

வேளாண் மாந்தர் தாளிழந்து வருந்த

ஆமும் புலர்ந்து கோளுந் திரிந்து

வானுந் தொலைந்த வறன்மிகு காலையும்

தன்னிடத் தருளிச் சின்னீ ருதவி

உலவம் புரக்குங் குலவரை போல

உள்ளது கொடுத்துணும் வள்ளற் பெருமை

பெற்றே யறிகிலாப் பேதை மாந்தர்போல்

உற்றன பேணும் பற்றுடை யிந்திரன்

வாழ்க்கையு மிந்த மண்ணோர் வாழ்க்கையும்

வேண்டல னின்பெரு மலரடி வேண்டுவன்

குவளைக் கானந் துவளப் பகட்டினஞ்

சென்றுபுல் லருந்து துன்றுபல் வயல்கள்

சூழும் வருத்தலைத் தொன்மா நகரிடை

ஏனற் கதிர்போ லிங்குவெண் மலர்கள்

விரிதருஞ் சினைகண் மேவு மருதடி

போற்றிட வமரரும் வீற்றிருந் தருளும்

மதமா முகத்தொரு வான்பெருங் கடவுளே.

மருதடி விநாயக ரந்தாதி

கொள்ளுவ னன்பர்கள் செய்பூசை நேயங் கொளாதவர்கள்

விள்ளுநன் மந்திர பூசையை நோக்கி மிகுநகுவன்

புள்ளுறு வெண்பூ மருதடி மூலத்துப் புங்கவன்றான்

எள்ளுவ னோகொளுங் கொல்லோவென் பூசையை யிந்நிலத்தே.

குலங்குடி யாதிய யாவுந் துறந்து கொடியவைந்து

புலங்கடிந் தேயுறை மாமுனி வோர்கள் புகுந்திறைஞ்சி

மலந்தடி கின்ற மருதடி மூலத்து மாமுகத்தோன்

அலந்தரு தீய மலநீக்கி யென்னையிங் காளுவனே. 2

போற்றுவன் மாமரு தீசன் பதங்களைப் போற்றிமிக

மாற்றுவ மென்றன் மனத்தி னலைவினை மாற்றியின்பந்

தோற்றுற மோன நிலையினைப் பெற்றுச் சுகமடைவன்

கூற்றுவன் றன்னை யருளெனும் வாளாற் கொலைசெய்வேன். 3

அன்றொரு நாளினிற் சொப்பனந் தன்னி லருட்குருவாய்த்

துன்றிருப் பாதங்க ளென்றலை வைத்த தனிப்பொருளாக்

துன்றுறும் பல்சினை மாமரு தின்னடி தோன்றுமுனோன்

என்றன தாவி யுடல்பொரு ளேற்றனன் யாதிடரே. 4

ஆறும் படியென் கனவினிற் றோன்றி யணிநுதன்மேன்

மூளுங் கனற்கண்ணைக் காட்டி நினைப்பித்த முன்னவன்யான்

நாளுந் தொழுதுய மாமரு தின்னடி நண்ணிறைவன்

கோளின் றுயர்வந் தடையா தெனைக்காத்துக் கொள்ளுவனே.

இனிதா மொழிகின்ற பச்சிளங்கிள்ளா யிமைப்பிற்சென்று

தனியே யிருந்துன் வரவினைக் காணாது தானயர்வாள்

நனிவாள் பிதற்றி யழுவாளுன் காதலி நாடியெனாச்

சினைமா மருதடி மேவு மிறைவற்குச் செப்புதியே. 6

முடிவேந்தர் தம்மொடு மற்றுமுள் ளோர்களும் மூதுலகில்

நெடிதாய வாழ்வினை யெய்தாமை கண்டுநுந் நெஞ்சமதிற்

படிசார்ந்த வாழ்வினைப் பற்றறு வீரந்தப் பற்றினைவிட்

டடிசார்திர் மாமரு தீசனை யென்று மழிகிலிரே. 7

கூடி லிழைத்து வருந்துகின் றாளுன் குலமடவாள்

ஆடலள் சொல்லலு மூமரின் விம்மி யயருகின்றாள்

நாடலை யேலுயிர் நீக்குவ ளென்று நவின்றிடுவீர்

தோடலர் மாமரு தீசற்குச் சென்றுநற் றும்பிகளே. 8

தேவர்க வேடனுந் தேவியு மாய்த்தந் திருக்கயிலைக்

காவுறு மண்டபஞ் சென்று பிரணவங் காணவதின்

மேவிய தேவனை மாமரு தின்னடி வேர்முளைத்த

கோவினை யன்பினென் பால்வரக் கூவுதி கோகிலமே. 9

அறியாமை நீக்குறுங் கல்வியென் றெண்ணி யலைவுற்றயான்

சிறியார்கள் செய்த மணற்சோறது வெனத்தேர்ந்துகொண்டேன்

செறியா மலர்சேர் மருதடித் தேவனின் சேவடியே

அறியாமை தன்னை யகற்றுவ தென்ப தறிந்தபின்னே. 10

தைப்பூசச் சிறப்பு

பொய்ப்பொரு ளதனிற் சென்றிடு மியல்பைப்

போக்கியே யென்மனந் தன்னை

மெய்பொரு ளாமுன் னடிதனில் வைக்க

வேதமா முதல்வநீ யருள்வாய்

எய்ப்புறு பிறவிப் பெருங்கடன் மூழ்கி

யின்னம்யா னிடருறன் முறையோ

தைப்பெரும் பூச நாளிது தன்னிற்

சார்ந்தனன் மருதடிப் பொருளே. 11

அன்பர் வழிவாடுந் திருவருளும்

வாக்கிற் றுதித்துச் சிலர்பெற்றார்

மனத்தா னினைந்து சிலர்பெற்றார்

ஆக்குஞ் செம்பொற் கோவிறனை

யடியாற் சூழ்ந்து சிலர்பெற்றா‘•

தேக்கொ ளுன்ற னுருநோக்கிச்

சீரோ டருளைச் சிலர்பெற்றார்

ஊக்கி யொன்று மியற்றாதே

னுறுவ துண்டோ மருதீசா. 12

கிணறு தண்­ர்காணப் பாடியது

ஆட்டாதே யெங்க ளரனார் திருமகனே

கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை - நாட்டிடுவாய்

மாமருதி லீசா மதமா முகத்தோனே

காமுறுவேற் குள்ளங் கனிந்து. 13

தவ வியப்பு

இலங்கை யீசனைப் பந்தென வாடிய விறையை

நலங்கொள் பாரதந் தீட்டியே மேருவாந் நகமேற்

றுலங்கு மாசெயும் பெருமனைக் கண்டியாந் தொழவே

நிலஞ்செய் மாதவ மென்னையோ முன்னைநா ­ட. 14

கு. சிற்சபேசன்

1887 - 1959

இவரது ஊர் நீர்வேலி. தந்தியார் பெயர் குமார வேலு. சங்கர சுப்பைய சச்சிதானந்த யோகிகளின் சீடர் 'இந்துசாதனம்' என்னும் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இவர் கடமையாற்றியவர்.

இவரியற்றிய நூல்கள்: நீர்வைச் சிலேடை வெண்பா, நீர்வை வளம், பெரியபுராணக் கீர்த்தனை முதலியன.

நீர்வை நாட்டுவளம்

புன்னை மாதுளை புங்கொதி மாபுளி

தென்னை கூவிளந் தேனுகர் வண்டினம்

துன்னு பூக வனந்தொறும் வாழையோ

டன்ன தாழை யடர்ந்தது சோலையே.

வேறு

தாக்கணங் குறையுங் சோலைத் தனிப்பனை மீது வைத்த

சேக்கையில் வளர்த்த குஞ்சு சிறதடித் தெழுந்து தாவிக்

கூக்குரல் செய்து கூவிக் குயிலினஞ் சேரக் கண்ட

காக்கைதன் னிழிவு நோக்கிக் கருத்தழிந் தயரு மன்றே.

வேறு

கள்ளித் தடியை முறித்தடுக்கி மூட்டிக் கனலைப் பிடுங்கிமர

வள்ளிக் கிழங்கை வைத்துமிசை வாட்டி யுரித்துக் கடித்துண்டு

துள்ளித் திரிந்து விள€யாடித் தோழ ருடனா னிரைமேய்க்கும்

பள்ளிச் சிறுவர் பயிலிடங்கள் பலவும் பாங்க ருளகானம்.

சின்னத் தவளை யினம்வீணை தித்தி காளங் குழலிசைப்பப்

பென்னம் பெரிய மண்டூகம் பேரி முழவு கடமொலிப்ப

மின்னின் மினிகள் விளக்கேந்த மேகவெடிசங்கொலியுடனே

வன்னச் சாலி மாதுவய லரங்கி லாடி மகிழ்ந்திடுமே. 4

கன்னங் கரிய கதலிவனக் கரையிற் றெருவிற் சாய்ந்துவளர்

தென்னம் பாளை மதுச்சொரியத் தேற லுண்டு திகைத்தயருஞ்

சின்னஞ் சிறிய வணில்மீது சீறிக் சினக்குங் காக்கையதன்

கன்னங் கிழியக் குட்டுமொரு காட்சி யென்று முளதாமால்.

அம்மானை

மாறுமுக முற்றெழுந்த மறுசமயச் சூரினொந்தோர்

ஆறுமுக மாக அளித்தவரார் அம்மானை-

ஆறுமுக மாக அளித்தவர்தாந் நல்லாரில்

ஆறுமுக நாவலலென் றறைகுவா யம்மானை

ஆறுமுக நாவல ரவனிதனில் வந்திலரேல்

வேறுமுக மான விவிலியங்கா ணம்மானை. 6

நீர்வைச் சிலேடை வெண்பா

பத்தியரும் பாவையரும் பண்ணையுழு மள்ளருஞ்சீர்

நித்திலங்க ளாயுமெழில் நீர்வையே - நித்தநித்தம்

வேங்கை யரங்குடையான் வெள்ளரங் காணநடம்

வேங்கை யரங்குடையான் வீடு. 7

பட்டிடைப்பொற் பாவையரும் பல்லார் பறவைகளும்

நெட்டிருப்பை நாடுமுயர் நீர்வையே-விட்டகலை

அக்கரருங் கண்டியரு மாறாற ரப்புறத்தர்

அக்கரரு மானார்க் ககம். 8

பூண்ட மணிவாயும் பூவை கிளிபிறவும்

நீண்ட குரலெடுக்குந் நீர்வையே-மாண்டகைய

மானங் கிடத்தான் மலையரையன் பொற்பாவை

மானங் கிடத்தான் மனை. 9

நலத்தோர் மனைமுகத்துந் நந்தா வனமிடத்துந்

நிலைத்தோ ரணங்கலையுந் நீர்வையே-அலைபொருதும்

அம்பலத்தே வையடிக ளங்குருகிப் போற்றாரை

அம்பலத்தே வையா னகம். 10

தடுத்தாட்கொண்டவை

வல்வ ழக்கிட வந்தவன் றொண்டனே

வல்வ ழக்கிட்டு நின்றவன் றொன்டனே

தில்லை வாழெனப் பாடிப் பணிவனே

சிறந்த மாமணச் சோடிப் பணிவனே

அல்லெ னுங்குழ லாளப் பரவையே

அணங்கைக் கண்டவ னாசை பரவையே

நெல்லை வாரியா ரூரி னிரப்புமே

நீங்கு மந்தநன் னாட்டி னிரப்புமே. 11

கந்தமுருகேசனார்

1902 - 1965

இவர் ஊர் புலோலி. தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றவர். இவரிடங்கற்றுப் பண்டிதரானவர்கள் பலர். ஆறுமுகநாவலரில் மிக்க அபிமானங் கொண்டவர்.

இவர் இயற்றிய நூல்கள் : நாவலன் கோபை, திருப் பனையந்தாதி என்பன. இவற்றைவிடப் பல தனிப்பாடல்களும் பாடினார்.

நாவலன் கோபை

கற்றறிபாங்கன் கழறல்

கண்ணாடி யூது குழலுக் குடைந்தாய் ககனமுறு

பண்ணாடி யாழோர் மனமு மதித்திடு பாற்றிரைசேர்

தண்ணூ டகநெகிழ் சந்தத் தமிழ்சேர் தனியறிவு

மண்ணூ டுனையனை யாரிலை நாவல மன்னகர்க்கே. 1

கிழேவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றல்

தவித்த முயலது பார்த்தடிப் பார்போற் றகுமுனக்கே

புவித்த னருங்கலை செல்வ மனைத்தும் புதியதமிழ்

அவித்த பரமத மாளவளி நாவல னலையுற்

பவித்த திருவுக் கழுங்கிடு வேனைப் பழிப்பதுவே. 2

புகழ்தல்

பெண்ணை யிவண்முக மேலு மதுநடுப் பெட்குமது

எண்ணை யிழுக்கு மியல்கீ ழிடமு மதுவுகண்டு

விண்ணை யளாவத் தலைவிரித் தந்தர மேவிடுமால்

கண்ணை மனத்தைக் கவர்நா வலனாட்‘ கடலலைக்கே. 3

ஐயந்தீர்தல்

ஆறாரச்சக்கரம்

நாற்ற முதலேழ் தபுவன கோட்டமி னற்றமிழ்வி

ணேற்றி நலைநகர் சாலன் வைத்த வெழிலமரர்க்

காற்ற விடமமு தாமென நாவல்ல னார்சிரித்தா

நாற்றமு ணேய்ந்த கார்த்தேவின் முதுக் குறைந்தாளறியே.

பேர்வினாதல்

நும்வாழ் பதியுரை யீரெனி னேவரு நோக்குபவ

னம்வாழ் வளையவ னாவல நல்லையி னற்குரவர்

தம்வாழ் வெனவர் வான்வரைச் செந்தினைத் தண்புனங்கா

கம்வாழ் குழலீர் பெயரதை யாயினுங் கட்குரைமே. 5

பாங்கி அறியாள் போன்று வினாதல்

சங்கம் பொலியிறை யள்பல ரூசலுஞ் சார்ந்துபிர

சங்கம் பொலிமலர் குற்றிளஞ் சோலை தனிலுறைவார்

சங்கம் பொலிமணி நீர்த்தட மேய்நல்லை சாரவைப்ர

சங்கம் பொலிநா வலன்வரைக் கண்ணெறிந் தாரெவரே. 6

ஆற்றாநெஞ்சினோடவன் புலத்தல்

மாதரை யோதியு மாலை யுரைத்து மனமிரங்கா

மாதரை வேண்டியென் மாதலை வேண்டா மதியனுயர்

மாதரை மீயுறு நல்லையி னாவல மன்னணைவா

மாதரை வேளம்பு தூவ வுயிர்போ மலந்தலந்தே. 7

சிழவோனாற்றல்

குன்றாக் குடியீ ரெனவோர்ந்து சீசாக்கள் கொண்டிவணா

நின்றாக் கடிந்திட நின்றன மென்றவ னல்லையிலே

ஒன்றாக் கடிநுனை யைந்தலை வேளர வுற்றவிட

மின்றாக் கிடக்குழை கொண்டசைத் தாரிவ ரென்தவமே. 8

தலைவியைக் குறியிடத்துய்த்து நீங்கல்

தம்பையாப் பிள்ளை புணர்ச்சி வழுவெனத் தானிறுவு

தம்பையாப் போட்டு சிவம்புணர் நாவலற் சாரலரஞ்

சும்பையாப் பேய்சூ ருறுகாண் சுகமிரு தூயசந்தோ

டம்பையாப் பேயர வேய்பினற் காமல ராய்குவனே. 9

தலைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்

கணியார் கணியா ரெமதுயர் கானவர் காய்தினைகொய்

பணியார் பணியார் புனமது காக்கப் பசுங்குவளைக்

கணியார் கணியார் பணிநா வலனார் களிநலைப்பூங்

கணியார் கணியார் குறிவரல் காவல் கடிந்தனமே. 10

பகலிலும் இரவிலும் பயின்று வருகென்றல்

வண்ணை வயித்தீ சுரனா லயத்து மகிழ்ந்துசைவப்

பெண்ணை யணைத்துப் பிரசங்க மாம்பெரும் போகமளித்

துண்ணை வகற்றிய நாவல னல்லையி லுண்பர்மதுப்

பெண்ணை யுடையவ ரற்பக லென்னுமிப் பேருலகே. 11

பாங்கி தலைவிக்குடன்போக்குணர்த்தல்

சோலை யவாவு கருமுகி றோய்நலை தோய்மயிலென்

மாலை யவாவு மனத்தா மரைவாய் வளருமன்னம்

பாலை யவாவு மதோசுரம் பற்றிடு பான்மையதோ

வேலை யவாவு விழியிவை நாவலன் வெற்பர்சொலே. 12

இலக்கிய கலாநிதி சு. நடேசப்பிள்ளை

இவர், சேர் பொன். இராமநாதனின் மருகர்; சுன்னாகத்தை சேர்ந்த மருதனார்மடத்தில் வசித்தவர். தமிழ், ஆரியம், ஆங்கிலம், என்னும் மும்மொழிகளிலும் வல்லுநர். இலங்கை அரசாங்கசபையிலும், பிரதிநிதிகள் சபையிலும், மேற்சபையிலும் அங்கம் வகித்தவர். மந்திரியாகவுங் கடமையாற்றியவர். இலங்கைச் சாகித்திய மண்டலத்திலும், பல்கலைக்கழகச் சபையிலும் உறுப்பினராகிச் சிறந்த பணிபுரிந்தவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தால் இவருக்கு 'இலக்கிய கலாநிதி' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இவரியற்றிய செய்யுணூல்:'சகுந்தலை வெண்பா'. இந்நூல், யாழ்ப்பாணம் ஆரிய திராவிடாபிவிருத்திச் சங்கத்திலும், அண்ணாமலைக் பல்கலைக்கழகத்திலும் அரங்கேற்றப்பட்டது.

சகுந்தலை வெண்பா

துடியந்தன் தயவுடையீர் சென்று சகுந்தலைக்குச்

சொல்வீர் நிகழ்ந்தவற்றைத் தொல்குலத்திம்-மல்வீரன்

என்னோ டிருக்க விசைந்திட்ட னென்றவனைத்

தன்மடிமேல் வைத்தளித்தான் தார். 1

விதியின் விளைவாலென் வாழ்வு குலைந்தென்

பதிகயின் பரிவை யிழந்தேன் - இதுகாறும்

என்னவவள் தேம்பி யழக்கண் டிறைதுடைத்தான்

மின்னி விழியிறைக்கு நீர். 2

அன்றிழந்த ஆழி அவன்விரலிற் கண்ணுற்று

மன்றில் மறைந்தவணி தானிதுவோ-என்றரசி

கேட்கக் கிடைத்ததிது கண்மணியே யுன்னைநினை

வூட்டுதற் கென்றா னுவந்து. 3

தேவ முனிவர் திருவடியில் வீழ்ந்திறைஞ்சி

மாய வினைதீர்ந்து மாண்புறுவோஞ்-சேவகமுன்

சென்றங் கவர்தந் திருவுளத்தின் பாங்கறிக

என்றான்பூ மன்ன னெழுந்து. 4

வருக வெனவழைத்து வாள்வேந்தற் காசி

குருமுனிவர் கூறியவன் றேவி-துருவாசர்

இட்டவொரு சாபத்தா லேத மடைந்ததைமெய்த்

திட்டினாற் சொன்னார் தெரிந்து. 5

தேவ முனிவநின் சீரடிகள் போற்றுதற்

காவலுடன் வந்தேற் களித்தாயென்-ஆவி

அனையாளை யானிழந்த ஆரமுதை என்தீ

வினையாவும் போக்கி விடுத்து. 6

என்றரசன் பூமி படிந்தான் இதயத்தில்

நன்றி பெருகியெழ நாத்தழும்பப்-பொன்றிகழும்

மேனியாள் வேதமுனி சேவடியிற் சேயொடு

தானிறைஞ்சி னாள்மருங்குத் தாழ்ந்து. 7

சிவாய நமவென்று செம்பொருளைச் சார்ந்தார்

பவமாயத் தீவினைகள் பாறிப்-புவியில்

பெருவாழ்வு துய்த்தல்போற் பெற்றானில் வாழ்வு

திருமன்னன் தேவியுட னன்று. 8

இமயத் தொடுகுமரி யெல்லை யொளிர்நா

டிமையோரும் பாரதமென் றேத்த-உமதுமகன்

பாருதித்த தேவன் பரத னிதையாள்வான்

சீர்மிகத்தன் பேர்பிறங்கச் செய்து. 9

வாழியபொற் பாரத மென்றுரைத்தார் வான்முனிவர்

ஆழித் திரைசூ ழகலிடத்-தேழுலகுங்

காணாத ஞானக் கதிகாட்டு மிந்நாடு

மாணாத மாயை துரந்து. 10

ஆசி யுரைத்த முனிவ ரடிவணங்கி

மாசிலாத் தேவியுடன் மன்னவன்-தேசவிரும்

மைந்தன் பரதனையுங் கொண்டடைந்தான் மாநகரம்

எந்திரத்தில் வானூ டிவர்ந்து. 11

எதிர்கொண்டு மாந்தரங் கேத்தினா ரார்த்தார்

மதிகண்ட மாகடல்போற் பொங்கி-அதிசயித்தார்

வேந்தன் புடையரசி வீரக் குலத்துதித்த

ஏந்த லுடனிருக்க வேய்ந்து. 12

திக்கு விசயஞ் செயத்தொடங்கித் தேர்வேந்தன்

மிகக விறல்படைத்த மைந்தனொடு - சொர்க்கம்

அனைத்தென்னும் தன்னாட் டுடன்புரந்தான் பன்னா

டனைத்தும் ஒருகுடைக்கீழ் ஆண்டு. 13

பரதற்குப் பார்மகுடஞ் சூட்டத் திருநாள்

அருமைறயோர் ஆராய்ந் துரைக்கப் - பெருமன்னன்

தன்முடியைத் தந்தான் தனையற் ககமகிழ்ந்தாள்

பொன்வடிவத் தேவுயுளம் பூத்து. 14

மண்ணகத்து வேந்தர் மனங்களித்தார் மாதிரத்தில்

விண்ணகத்துத் தேவர் விதந்துரைத்தார்-கண்ணுவனார்

வந்தரசை வாழ்த்தினார் வையகத்தார் போற்றினார்

விந்தைச் சரிதம் வியந்து. 15

****பிற்சேர்க்கை**

அப்துல்லாப் புலவர்

இவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முகம்மது என்பவரின் புதல்வர். செந்தமிழ் பயிற்சி நிரம்பியவர். இவரியற்றிய நூல்கள் 'நல்வழி-திருநபிக் கவிதைகள்'.

நல்வழி

இறைவன் துதி

முத்தாய் விளங்கும் முகம்மது நன்னபியை

வித்தா யமைத்தருள் மேலவனாய்-சத்தாகி

தோற்றியுந் தோற்றிடத் துய்யவனை எஞ்ஞான்றும்

போற்றிப் பணிவாம் புகழ்ந்து. 1

ஐங்கடமைகள் (கலிமா)

ஒப்பிலா நற்கலிமா உள்ளம் விரும்பியே

தப்பித மில்லாது சாற்றியே-இப்புவியில்

உண்மையே கொண்டுய்ய ஓர்மைப் படுத்தியே

நன்மைகள் செய்வீர் நயந்து. 2

தொழுகை

நல்ல தொழுகையை நம்மைத் தொழுமெனவே

வல்ல இறையோன் வழுத்தியதால்-சொல்லுந்

திருமறையின் கூற்றைத் தெளிந்தே மனதில்

உருகித் தொழுவீர் உணர்ந்து. 3

சகாத்து-(ஏழைவிகிதம்)

வேத முரைத்த விதியாஞ் சகாத்தினை

ஏதமற நன்குணர்ந் தீந்திடுவீர்-கோதறவே

தம்முதலைக் காத்திடுந் தன்மம் இதுவெனவே

எம்நபியுஞ் சொன்னாய் இனிது. 4

____________________

* காலந் தெரியாமலும பிந்திக்கிடைத்தமையாலும் வரிசையிற் சேர்த்துக்கொள்ளப்படாத புலவர்கள். பிற்சேர்க்கையாக அகராதி முறையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த பதிப்பில் உரிய இடத்தில் இடம்பெறும்.

சௌமு (நோன்பு)

உத்தம மெய்ஞ்ஞானம் உற்ற திருமறையில்

முத்தி பெற்றுய்க முன்னவனாங் - கத்தன்

விதித்த றமளான் விரதத்தை நோற்று

கதிக்குயர் மாட்சியைக் காண். 5

கச்சு• (மக்காயாத்திரை)

மக்கட் கருட்கொடையாம் மாநபி தோன்றிய

மக்கா புரத்தில் மகிமையுடன் - தக்கவர்

சென்றுயர் கச்சினைச் செய்வீர் மறைவிளம்பி

நின்றிடும் வாக்யம் நினைந்து. 6

கிளிக்கண்ணி

சீனஞ் சென்றிடினுந்

தேடுவீர் கல்வியென

மானமாய்ச் செப்பினரே-கிளியே

மகுமுத நன்னபியே. 7

சொற்போல் செயலினையுஞ்

சோர்வுறா தொழுகிடுவீர்

நற்பய னெய்திடலாங் - கிளியே

நானிலம் வாழ்ந்திடுமே. 8

மட்டிலாச் செல்வமிக

மல்கியே உற்றிடினுங்

கிட்டடிடாதுயில் துறப்போங்-கிளியே

கிடைத்தபோதே தருமஞ்செய்வீர். 9

உண்பதும் உறங்குவதும்

உயிர்கட்கெட் லாம்உள்ளனவே

மண்புவி மக்கள்நெறி-கிளியே

மகிமைபெற ஒழுகிடலே. 10

வேதத்தின் போதனையை

விரும்பியே அறிந்திடுவீர்

நீதமாய் நயந்திடவே-கிளியே

நிமலனருள் நிதமுமுண்டே. 11

கா.அப்பாச்சாமி ஐயர்

நகுலகிரிப் புராணம்

மாருதப்புரவீகவல்லி யாத்திரை

தக்க சோழ னளித்திடுந் தையலாள்

புக்கு மண்ணிற் புரவிமு கமுநோய்

மிக்க கும்மமு மீதுற் றுதித்திடத்

துக்க முற்றுயர் தாதையுந் துன்னினன் 1

ஊன வேல்கொ ணிருபவுன் புத்திரிக்

கான வெம்பரி யானனம் நீங்குற

மான லந்திகழ் வார்நதி மூழ்கவென்

றான தோரச ரீரிய றைந்ததே. 2

வேழ வெம்படை வேந்தனு மின்னலாம்

ஆழ மிக்க கடற்கரை கண்டகம்

நாளி னும்மகிழ் வெய்திநற் றானைகள்

சூழ வேதன் சுதையைய னுப்பினான். 3

புண்டரிகக் கொடியுயர்த்த புரவலனீன் றிடுவனிதை

புவியின் மீது

தண்டரளந் தனைக்கொழிக்குந் திரைமருவு தீர்த்தமெலாந்

தகவி னாடி

அண்டர்பணிந் திடவரிய விமலையுட இறைவனடி

யகத்தி னேத்தி

மண்டலத்திற் புகழிலங்கை மருவுநகு லாசலத்தின்

மகிழ்வி னுற்றாள். 4

குறையினுடன் பொருதவயில் விழிதிகழுங் கோதையவண்

குறுகிய நேய

விழைவுயரத் தவம்புரியும் நகுலமுனி தனைநோக்கி

விருப்பி னோடும்

வளையலணி யிருகரமுஞ் சிரமேற வணங்கியரன்

மகிமை யெல்லாம்

பிழைபொறுத்துக் கழறுகென வீனவுதலும் பிறழாது

பேச லுற்றான். 5

புயனிகருங் கருங்கூந்த னங்கையான் முற்பிறவி

புகுந்த கன்ம

வியலதனிற் கீரிமுகந் தனையடைந்து வைகுறுநா

ளிலைவே லுற்ற

தயவுமிகு முசுகுந்த மன்னன்முசு முகத்தோடு

தளர்வி னென்பால்

வியனுறவே வரயாங்க ளிருவருமா யீண்டுமிக

விருப்பா லுற்று. 6

துய்யநதி தனிற்றினமும் விதியுடனே முழுகித்

துகளி லாத

பையரவ மணிந்தபிரான் நகுலேச னடிமலரைப்

பரவி யேத்த

நையுமெனக் குறுநகுல முகமகன்று நன்முகத்தை

நயப்பி னாளுங்

கையுறலி னினிதணுகி மனங்கனிய வைகினன்யான்

கதிர்வேற் பூபன். 7

தன்னொடு சென்றமைந்தான் மெல்லியலே யன்றுமுத

லாகத் தாவில்

வின்னாடு நுதல்விமலை யமலனுட னெடுவரைக்கும்

விளங்கா நின்ற

மன்னாடு நதிதனக்கு மெனதுபெயர் மரவினொடும்

வளங்கா நின்ற

தன்னாய்யிவ் விடத்தினுறு மகிமையிது வெனவுரைத்தா

னன்பி னோடு. 8

தந்தியின் மருப்பெனத் தனங்கொ ணாரியும்

முந்துநன் னதிதனின் மூழ்கி நாடொறும்

அந்திவே ணியனடி போற்ற வன்னைபாற்

சிந்தையி னெழின்முகஞ் சிறப்பி னுற்றதே. 9

தன்னுறு குதிரைமா முகந்த ணந்ததால்

மன்மலர்க் குழலியுண் மகிழ்ச்சி யுற்றினி

துன்னுதந் தைக்கிவ ணுற்ற பான்மையைப்

பன்னருந் தூதராற் பகர்வித் தாளரோ. 10

அயில்கொளு மாறுமா முகனை யன்பினால்

மயின்மிசை மனைவியர் மருங்கு வைகுற

வியனுறுந் திருவுறு வியற்று வித்தனன்

குயினிக ருரையினாள் குணமு டன்கொள 11

அளவிலா நிதியுட னரச னென்றுரை

வளவனுங் குமரவேள் மாவை மாணுற

உளமகிழ் வுற்றநல் லோர்க ளோடுயர்

கழனிசூ ழிலங்கையின் கண்ண னுப்பினான். 12

நீள்பெருங் கோயிலு நிகரில் கோபுரஞ்

சூழ்தரு நெடுமதிற் சுடர்கள் கான்றுறத்

தாழ்வகன் றிடுமறு கோடுந் தந்துநன்

னாளினிற் கந்த வேடனை நயப்புடன். 13

தந்திர விதிநிலை தவாமல் நான்மறை

அந்தணர் தங்களா லாய்வுற் றேதரு

மந்திர முறையருள் வளர மாவையின்

இந்தமா நிலத்தினர் யாரு முய்திட 14

செப்பருங் கும்பதா பனங்கள் செய்திடா

தொப்பிலா மறைமுறை யொளிரு நல்லருள்

வைப்பினா வாகன பதிட்டை தன்னைமுன்

தப்பிலாக் குமரவே டனக்குச் செய்தனள். 15

தந்தியின் மருப்புறு தனங்கொ ணாரிபின்

நந்தலில் நகுலநா யகற்கும் நாரிக்கும்

புந்திகொ ளம்பினால் விழாப்பு ரிந்தவர்

அந்தமி லருளையு மடைந்திட் டாளரோ. 16

மீனுறு தரங்கதீர் மிசைவி ளங்கிநீள்

வானுயர் நகுலமால் வரையின் சாரலின்

ஊனமி லிறைவனை யுன்னி நோற்றுவ

­னமி னகுலமா முனியி ருந்தனன். 17

ஈங்கிவர் பால்விடை யினிது பெற்றவன்

ஓங்கிய தானைக ளொருங்கு சூழ்ந்துற

மாங்குயின் மொழிதிகழ் மாவை நீங்கியே

தேங்கிய தன்னகர் சென்று வைகினாள். 18

அப்பாத்துரைப்பிள்ளை

இவரது ஊர் யாழ்ப்பாணத்து நவாலி. தந்தையார் பெயர் முத்துத்தம்பி. யமகம் பாடுவதில் வல்லவர். இவர் இயற்றிய நூல் "மருதடி அந்தாதி."

மருதடி அந்தாதி

தகரங்க வேணி லரசுட்க வந்த தனிக்கடவு

டகரங்க வேணு புரந்தில்லை மேவிய தற்பரனீ

தகரங்க மூர்தி துணைவா மருதடித் தண்பதியோ

தகரங்க மாக வுகந்தா யெமக்கிது தண்ணளியே. 1

வந்திக்கு வையை தடுத்தடி பட்டடி யான்பிழைநேர்

வந்திக்கு வாசங்கொள் சீரான் மருதடி வந்தவெங்கோ

வந்திக்கு மானினைந் தம்பல மர்ச்சனை வாழ்வினையார்

வந்திக்கு வாபுவி மேல்கீழ் தெங்கணும் வாய்ந்தவரே. 2

தார்கொண்ட சூர்முத றானை யொடுங்கத் தடிந்தகுலைத்

தார்கொண்ட சேயவன் றன்முன் மருதடி தாழவெகா

தார்கொண்ட பாச மரியா னரனெனுந் தாதையினுந்

தார்கொண்ட தேரி னெழுவான் முதவற் சரதினமே. 3

அடிநாக வன்னகத் தாலங்கம் பத்துடை யானையடர்த்

தடிநாகர் கோனுக் கருள்காட் டரன்சுத னாண்டுகறை

யடிநாகம் வல்லி யயல்சூழ் மருதடி யன்பைத்தொழு

மடிநாகர் தம்முத லார்க்கு மரிய வளவையதே. 4

பவனந் தருபுனற் பொய்கைமுக் காலும் படிந்துறுவர்

பவனந் தருநிழ லாக்கம் பெறுவர் மருதடியிற்

பவனந் தருமறை விப்பிரர் போற்றுமப் பண்ணவனார்

பவனந் தருநிழற் செற்றுமெய்ப் பேறுகள் பாலிப்பரே. 5

அனற்கண்ண மாவுரி போர்த்தவ னென்றரி போற்றச்சிலம்

பனற்கண் ணரவம் புலிகேட்ப வானரங் காடிதந்த

வனற்கண் ணொருமூன் றுடையானெம் மூதூர் மருதடிவாழ்

வனற்கண் மரண வுயிர்த்துணை யும்பல் பதத்துணையே. 6

என்னா தரவுருக் கொண்டா யெழிற்கன கம்பலநின்

றொன்னா துதிக்கப் பதமா றெடுத்தவ னீன்றருண்மு

வென்னாத் தரைபர சைங்கைமுக் கண்ணிரு தாட்களிறே

யென்னாத் தருமல ருண்ணும் மருதடி யெம்பரமே. 7

பண்ணார் மொழியெடுத் தேத்திற் பலரும் பரவுமெங்கள்

பண்ணார் மருதடிப் பார்த்திபன் பாலின் றகைபரிந்த

பண்ணார் பரையினம் போருகச் சீறடி பார்வணங்கிற்

பண்ணார் பிறந்தைப் பயனெவை யாவும்பி னாகுமன்றே. 8

ஏரடிக் குங்குருங் கான்மள்ள ரோச்சு மிசையெதிர்க்கு

மேரடிக் குங்குமக் கானாரை யேயும் மருதடிவா

யேரடிக் கும்மரைப் போதொழிக் குந்நடை யேய்ந்திழையீ

ரேரடிக் குங்கண் டிறவா விளநீ ரிடும்பையதே 9

வாரணஞ் சூல்விண் டுகும்முத்தம் வாரி வரம்புசெய்யும்

வாரணஞ் சூழ்புவி போற்றும் வயல்சேர் மருதடிதா

வாரணம் மேதி நடுவ னொடுக்கும் வலிகெடுமுன்

வாரணத் தோலன் வரதனை வாழ்ந்திட வந்தியுமே. 10.

அழகசுந்தர தேசிகர்

இவர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் மைந்தர். இலங்கைச் சர்வகலாசாலையிலே தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றினார். வண.பிரான்சிசு கிங்சுபெரி என்பது இவரின் மறுபெயர்.

பத்திப் பாடல்

நாவரசர் சம்பந்தர் சுந்தரர்மா ணிக்க

வாசகர்முன் பூசைசெய்த நம்பனொரு சிவனே

பாவரசர் திருமங்கை சடகோபர் முதலாம்

பாகவதர் பணிகொண்ட அச்சுதனே மாலே

தேவடியார் ஆமோச மீகாஏ சாயா

தேசிகர்தம் உளம்வாழும் ஏகோவா மூர்த்தி

சாவாத புகழுடையார் ஏசுகுரு நாதர்

தம்முகத்தில் இலங்கும்எந்தாய் என்கடவுள் நீயே.

உலகியலைக் கரைகண்ட சரதுத்தர் சொன்ன

ஒளியாகும் அகுரனைநான் வணங்கிநிதம் துதிப்பேன்

நிலையில்லா வாழ்விதனை நிலையுளதென் றெண்ணும்

நினைவின்றிக் கோதமர்போல் நிருவாணம் அடைவேன்

நலமெல்லாம் போதிக்கும் நபிமாருள் முகமத்

நபிபோல அல்லாவை நாடொறுந் தொழுவேன்

பலசமயம் பலவழிகள் பரன்ஒருவன் என்ற

முனிராம மோகனரைப் பார்த்துவழி முயல்வேன்.

கால்வாசி அரைவாசி அரையரைக்கால் முக்கால்

கண்டவரே யன்றிமுற்றுங் கண்வர்கள் இல்லை

கால்வாசி மாகாணி காணிஅரைக் காணி

காணாதார் தாம்முற்றுங் கண்டவர்போல் நடிப்பர்

நூல்வாசிப் பேன்என்றும் நூலறிந்தார் எனக்கு

நுவலுமொழி ஆராய்ந்து சிந்திக்கக் கடவேன்

கால்வாசி கண்டவுடன் யான் என்னுஞ் செருக்கில்

கடையேன்யான் வீழாது காத்தருள் நீ தேவே. 3

யாம் ஐவேம்

குறள்வெண்செந்துறை

காங்கேயன் துறையிருந்து கீரிமலை தனக்குக்

கடற்கரையே நானடந்து போனவொரு நாளில்

ஆங்கேநல் லழகியொரு சிறுமியைச்சந் தித்தேன்

அவள்முகத்தை மதியெனவோர் களங்கமுமங் கில்லை.

எட்டுவய துப்பேதை இருண்டகரி குழலே

எட்டாம்நாட் பிறைபோன்ற நெற்றியிலே புரளுங்

கட்டழகி இருபுருவம் வில்லென்ன லாமோ

காண்டீவங் கோதண்டம் என்பதுவே தகுதி. 2

கண்ணிரண்டும் அமுதம்எனல் பொருந்துவதே யன்றிக்

கணையென்றும் நஞ்சென்றுங் கழறவிடம் இல்லை

பெண்ணரசி பவளவிதழ் திறந்துநகை செய்யப்

பிறங்கினவால் வெண்முத்தம் பேதைமுகந் தனிலே.

தங்கைச்சி உன்பேர்சொல் அஞ்சுசதந் தருவேன்

தாயுண்டோ தந்தையுண்டோ சகோதரர்கள் உண்டோ

புங்கவரே என்பேர்தான் அஞ்சுசதம் பெறுமோ

போம்போம்போம் ஏனெனக்கு நாய்தின்னாக் காசு.

இங்கென்னை எல்லாருஞ் சுந்தரியென் றழைப்பார்

என்னாச்சி என்னப்பு இருக்கின்றார் வீட்டில்

எங்களண்ணர் சம்பந்தர் கொழும்பினிற்கற் கின்றார்

என்னக்கை சிவகாமி இறங்கூனில் உள்ளார். 5

எனக்கிளையாள் கற்பகந்தான் போனபுரட் டாதி

எங்கள்நட ராசர்திருக் குஞ்சிதபா தந்தான்

தனக்கரிய பொருளென்று சார்ந்துசுகிக் கின்றாள்

தம்பிசிதம் பரநாதன் தவழ்கின்றான் இப்போ. 6

நாங்கள்ஐவேம் பிள்ளைகளே வேறுபிள்ளை இல்லை

நங்கள்அப்பு ஆச்சிக்கு நாங்கள்ஐவேம் உள்ளேம்

நீங்கள்உளீர் ஐவிர்மக்காள் நடராசர் அருளால்

நீங்கள்ஐவீர் எங்களுக்குப் புலனைந்து போலே. 7

இப்படியே ஆச்சிஅப்பு எங்களுக்குச் சொல்வார்

நீர்கேட்ட கேள்விக்கு விடைதந்தேன் என்றான்

செப்பினசுந் தரிமுகத்தை நன்குகவ னித்து

சிறுமிஉனக்கொருமொழிநான் சொல்ல இடந்தருவாய்.

நாங்கள்ஐவேம் மக்கள்உளேம் என்றுமொழி நவின்றாய்

ஐவரிலே ஒருத்திநட ராசர்பதம் நண்ணின்

பாங்கிபின்னர் நால்விர்உளீர் ஐவிர்என்றல் தவறு

பாராய்அஞ் சினிலொன்று போனால்நா லன்றோ. 9

ஐயாநீர் பேசுவது விந்தையிலும் விந்தை

அடியேன்யான் சொல்லுவதைப் பொறுமையுடன் கேளும்

மெய்யாய்என் அண்ணனவர் கொழும்புக்குப் போனால்

மேலுமொன்று போனதினால் மூன்றென்பீர் போலும்.

அக்கைசிவ காமிபின்னர் இறங்கூனுக் ககன்றால்

அவர்போக இருவிர்உளீர் மூவிரிலீர் என்பீர்

இக்காலம் இருவர்உளேம் ஆச்சிஅப்பு வோட

யாழ்ப்பணந் தனைவிட்டு மூவரவர் சென்றார். 11

இந்தமொழி தேன்மொழியாள் இயம்புவதைக் கேட்டே

இன்னுமொரு முறையவட்குப் போதிக்க எண்ணி

சுந்தரிநீ என்மொழிகேள் கொழும்புக்குச் சென்ற

சோதரனார் திரும்பிவரு வார்இதுமெய் அன்றோ. 12

அக்கைசிவ காமியுமே இறங்கூனி லிருந்து

அவ்வணமே திரும்பிவரு வார்இதுமெய் யன்றோ

தக்கதங்கை கற்பகத்தாள் திரும்பிவரு வாளோ

தாரணியில் நீயவளைக் காண்பாயோ இனிமேல். 13

ஆதலினால் ஐவிர்இலீர் நால்விர்உளீர் என்றேன்

ஐவிர்இலீர் நால்விர்உளீர் அறிந்துகொள் நீ அம்மா

பேதையவ ளோடென்ன பேசிடினும் ஐயோ

பேதையவள் தான்பிடித்த பிடியைவிட வில்லை. 14

கொழும்புக்குச் சென்றஅண்ணர் வந்தாற்தான் உளரோ

கொழும்பினிலே இருந்துவிடின் இல்லைஅவர்போலும்

வழுவில்சிவ காமியக்கை இறங்கூனி லிருந்து

வந்தாற்தான் உளர்இலையேல் இலர்என்பீர் போலும்

உன்தங்கை இங்கினிமேல் ஒருகாலும் வாராள்

உங்களிலே இனிஅவளைச் சேராதே என்றீர்

என்தங்கை இங்கினிமேல் வாராளே யாயின்

யான் அங்கே போய்அவளைக் காணமுடி யாதோ?

கொழும்பிலண்ணர் வாராரேல் நானங்கே செல்வேன்

அக்கையவர் வாராரேல் குறுகியங்கே செல்வேன்

எழுதவொண்ணா அழகுடையாள் கற்பகம்வா ராளேல்

எங்குநட ராசர்என ஏகிடுவேன் அங்கே. 17

ஆதலினால் ஐவமுளேம் ஐவமுளேம் யாங்கள்

ஐவமுளேம் ஐவமுளேம் ஆச்சி அப்பு வுக்கு

பேதைஅடி யேன்உமது போதனையைக் கேளேன்

பிழையாயின் பொறுத்தருளும் பெரியவர்நீர் அன்றே.

இவ்வாறு சுந்தரிதான் இயம்பியதைக் கேட்டேன்

எட்டுவய துப்பிள்ளைக் கிருந்தஅறி வென்னே

ஒவ்வாது நான்சொன்ன சொல்லென்று கண்டேன்

உடனேஎன் மயக்கமெலம் ஒழிந்துபறந் ததுவே.

சாவுக்கும் இறப்பதற்கும் பேதம்இன்று கண்டேன்

சாவனவெல் லாமொழிந்து சூனியமாய்ப் போகுஞ்

சாவனவெல் லாமொழியும் இறப்பவர்கள் ஒழியார்

இறஎன்ற சொல்லுக்குக் கடஎன்ற பொருளே. 20

ஆபிராகம்

1936

இவர் யாழ்ப்பாணத்து உரும்பராய் என்னும் ஊரிற் பிறந்து நல்லூரில் வாழ்ந்தவர். இயேசுநாதர்மீது ஆராத பத்திகொண்டவர். இவரியற்றிய நூல் 'எருசலை யந்தாதி' என்பதாகும்.

எருசலை அந்தாதி

பொன்னாருங் கோயி லெருசலை மேவிய புண்ணியர்மே

லின்மாற்றத் துத்தமிழ்ப் பாவினந் தாதி யியற்றுதற்குப்

பன்னாக துச்சி நசுக்கும் பனிப்பகைப் பாற்கரனே

யன்னா ரிணையடி யம்போ ருகந்துணை யாகுகவே.

நூல்

உள்ளேன் பிறரின் பொருளைக் கவர வொருபொழுது

மெள்ளே னெவரையு மெர்சலை யானி னிணையடியை

விள்ளேனெக் காலமு மிம்ப ரிருக்கின்ற வீணருடன்

நள்ளே னிரட்சிப் படைந்தவ ரென்றிரு நண்பர்களே. 1

வரையேறிச் செய்த பிரசாத போதத்தை வாரிதியின்

திரையேறு தெப்பத்தின் மீதிவர்ந் தோதிய செப்பரிய

உரையே றுவமை களையாவ ரிந்த உலகத்திலே

சரியே றெருசலை யானன்றி வல்லவ ரோதிடவே. 2

ஞாலத் திலேபெரி யோர்க ளிருக்க நலநிறைந்த

சீலத் தெருசிலை யான்றொண்ட ராய சிறியவரைச்

சால விரும்பி எடுத்தல்பொற் கட்டியைத் தள்ளிவிட்டோர்

பாலம ரூசியைக் காந்த மிழுக்கின்ற பான்மையதே. 3

தினமு மெருசலைத் தேவா லயத்தினிற் றேவ அப்பம்

அனல்குறை யாம லடுக்கிவைத் தாங்கெ மகங்குளிர்ந்தே

நனவுகுன் றாதந்தச் சீவனி னப்பத்தை நாடொறுநல்

மனதுட னுண்ணிற் பயபத்தி நாளும் வளர்ந்திடுமே. 4

எதிர்த்துமென் சூரியன் முன்னொரு மின்மினி யென்னவெங்கு

முதிர்க்கும் புலியிற் சருகென முன்வந் துயிரிழப்பன்

கதிக்குத் தலைவ னெருசலை மேவிக் கவினுறவே

துதிக்கு மணமக ளோடுல காளத் தொடங்குவனே. 5

அடியார்க் கடியவ னாபத்துக் கால மடைக்கலத்தின்

கடியாருங் கோட்டை பிணிக்கு மருந்தந்த காரத்திலே

சுடர்வீ சிரவி வெளிச்ச மெருசலிற் றோன்றிச்சில

மடிநீக்கிப் போதகஞ் செய்திட்ட யேசெனும் மன்னவனே.

அலைமோது மாழியி னீரெவ் வளவென் றலகெடுக்க

இலையா லளந்து குணித்தலை மானு மெருசலையான்

கலைஞானந் தன்னை யுலகத்து ஞானங் கதித்தவர்தந்

தலையா லளத்த லிவரெங்கன் தேமுனர்ச் சாம்பல்களே.

கடுகியு மாறியு மெத்திக் கினுமெதிர்க் காற்றின்முனும்

முடுகிடு மெஞ்சினைப் பூட்டிய கப்பல் முதியஎர்சற்

கடவுளி னாவி யகத்திற் பெற்றோரைக் கதிக்குவழி

நடவிடுஞ் சூறை சுழற்றினு மிம்மை நரலையிலே. 8

விதம்வித மாக உலகினர்க் கேற்ற விதிவிலக்கை

இதம்பெற மூன்றரை வற்சர கால மெடுத்துரைக்கப்

பதஞ்சிவப் பேற நடந்து திரிந்ததிப் பாருலகிற்

சிதந்தரு போத எருசலை யான்கழற் றேமலரே. 9

தேமாங் கனிமும் சுவையற்ற மாங்கனி சேர்வதுபோ

லாமாற் புலவர் கவிமுனென் புன்சொற்க ளாயினுமிப்

பாமாலை தன்னைத் தரித்தே னுனக்குப் படர்மல்லிகைப்

பூமாலை யாயிதை யேற்றருள் வாயெர்சற் போதகனே. 10

ஆறுமுக நொத்தாரிசு

குமாரசுவாமித் துரைமீது பாடியது

பொன்னம் பலஞ்செய்த புண்ணிய தால்வந்த புத்திரன்மற்

றென்னென்ன வேண்டுவ வெல்லா மெமக்கரு ளின்புகழோன்

மன்னுங் குமார சுவாமித் துரைசைவ மாபிரபு

கன்னன் கொலுவிருந் தானவந்து காண்மினிக் காட்சியையே.

நந்தா விளக்கன சீராம நாத நரேசனுக்குஞ்

சிந்தா மணியரு ணாசல வேந்துக்குஞ் சேட்டனின்ப

மந்தார மானகு மார சுவாமி மகிபனிவ்வூர்

வந்தான்வந் தானம ரங்கா ளெதிர்கொள வம்மின்களே.

சுவையார் பெருந்தமிழ் வாழ்வேறச் சைவந் துலங்கியெழ

நவையாது மின்றிநந் நாடோங்க விங்ஙன நண்ணிநிதிக்

குவையா லுயர்ந்த குமாரசு வாமிமெய்க் கோனுற்றவிவ்

வவையா தரத்தோ மடைந்தோ மடைந்தோம் பரமானந்தமே

துன்னல ரேத்துங் குமார சுவாமித் துரையொடிரு

பின்னவர் மன்னவன் பொன்னம் பலவள்ளல் பிள்ளைகளாய்

மன்னி யிணங்கிச் சிவன்முக மொன்றினில் வாழ்விழிமுன்

றென்ன விளங்கின ராவா தவத்தினி லேற்றமிதே.

தொலையாத வாய்மைக் குமார சுவாமித் துரைநிதியாற்

கலையா லிகையிற் போறையிலுத் யோகத்திற் காட்சியிற்சீர்

நிலையா லிளைய ரிருவோருந் தன்னொடு நேரநின்ற

தலையாழி யம்புவிக் கட்பிறர் பாலி னரிதரிதே.

கண்டாரெவரையும் பொய்ச்சீர் தொடுக்குங் கவிஞர்சிவன்

றொண்டா லுயர்ந்த குமார சுவாமித் துரையியற்சீர்

தண்டா துரைக்கக் கருதாத வாற்றினற் றாமுன்றொட்டுக்

கொண்டா டியதுபொய் யென்றென்ன யாருங்குறிப்பர்களே.

குலத்தா லறிவி லழகிற் பொறையிற் குணத்தினிதி

நலத்தா லருளின் முயற்சியிற் றூண நடையில்விய

னிலத்தா லிளைஞரொ டொன்றி யுயர்ந்த நிலையன்கண்டீர்

சொலத்தான் முற்றாது குமார சுவாமித் துரையியலே.

பொன்னம் பலவரி னன்மனை வாழ்க்கைப் பொறியொடொன்றி

முன்னம் பலபகல் செய்த தவத்தின் முதிர்வுகண்டோந்

துன்னும் புகழ்மைக் குமார சுவாமித் துரையைப்பின்னர்

மன்னுஞ் சுகுண விருவரைக் கண்டு மனமகிழ்ந்தே.

தூயோர் பரவுங் குமார சுவாமித் துரையும்பின்னோ

ராயோ ரிருவரு மெல்லா நலமு மமைந்துலகின்

மேயோ ரெவரினு மேலாய வாறு விரித்தனந்தன்

வாயோ தினாலு மொருகற்ப காலத்து மாய்வரிதே.

எல்லா நலமு மொருங்குற வெய்தி யெவரெவருஞ்

சொல்லாட வோர்மகற் காணோங் குமார சுவாமியெனிற்

பல்லாரு மொப்ப ரிளையோரு மன்ன படியரிது

தொல்லார் பரவுந் தவத்திற் றவமெனச் சூழ்ந்தனரே.

சிவமே பரம பதியெனத் தேறித் திருப்பணியாற்

சிவமே யெழுந்தரு ளச்சிவன் கோவில் சிறப்பிற்செய்த

தவமே பொன்னம் பலம்பான் மூவ ராசித்தணியிற்

றவமே யிலாதர சாள்வது சத்தியஞ் சத்தியமே.

தோளா மணிநங் குமார சுவாமித் துரைமுன்னெய்தி

மீளாத கேண்மையுற் றோமொழி யாத வெறுக்கையுற்றோ

மாளாயி னோநல் லுதவி பலவு மடைந்தனமிந்

நாளா தவத்தினின் மானுட யாக்கையை நாம்பெற்றதே.

தாயா ரிடத்துத் தமதுட் குறைசொலத் தாழ்ந்துநிற்குஞ்

சேயா ரிலைநம ரங்கா ளிதுநல்ல செவ்விகண்டீர்

தூயார் பரவுஞ் சிறீமத் குமார சுவாமித்துரை

யாயா னலனு முளக்குறை முற்று மறைமின்களே.

சுற்றார் கலிப்புலி யோம்புங் குமார சுவாமித்துரை

நற்றா யினுங்க ளுளக்குறை கேட்டரு ணல்கியிட

வுற்றா னிவண மரங்கா ளெழுத்தி லுரையிலொன்றுஞ்

சற்றா யினுங்குறை யாதுவினாவச் சமயமிதே.

சத்திரங் கோவில் தருமம் வழங்கப் பல்சாதனங்க

ளெத்தனை பேரெத் தனைகால மாக வியற்றிவைத்தா

ரத்தனை சொம்மு மவரவர் நோக்கிய வாறியல

வுத்தம னேதுரை யேயாய்ந்து செய்குதி யோர்சட்டமே

வாழிய வெங்கள் குமார சுவாமி மகிபனென்றும்

வாழிய வெங்கள் செயராம நாத மகிபனின்பின்

வாழிய வெங்க ளருணா சலந்துரை வாழிசைவம்

வாழிய விச்சவை வாழிசெய் கோன்மன்னர் வாழியவே.

சுவாமி சங்கர சுப்பிரமணிய

சச்சிதானந்த ராசயோகி

1864-1944

இவரதூர் வட்டுக்கோட்டை. தந்தையார் பெயர் நாகேந்திரஐயர். திருவாலங்காட்டுத் தேர்த் திருப்பணி செய்தவர். சைவக் கதாப்பிரகஞ் செய்வதில் வல்லுனர்.

குருவணக்க மணிமாலை

அருள்பழுத்த பழச்சுவையே கரும்பேதேனே

ஆரமுதே யென்கண்ணே அரியதானே

பொருளனைத்துந் தரும்போத கற்பகமே

பூரணமாய் ஒளிநிறைந்தெவ் வுயிர்கள்தோறும்

பிரிவுறநின் றிருவினைகட் கீடாய்ப்போகம்

புசிப்பிக்கப் பொறிபுலனாய்ப் பொருந்திப்போதம்

வருமளவும் அருவாய்நின் றளித்துக்காத்த

அருட்கருவே யுன்னடிக ளடைந்துந்தேனே.

தீராத வினைகளெல்லாந் தீர்த்துத்தெய்வத்

திருவருளே கண்ணாகக் கண்டொன்றேயாய்

ஆரார வின்பவெள்ளம் பெருகஎன்றும்

ஆனந்த வாரிதியில் முழுகிநின்றும்

பேராத நிலைவேண்டும் முத்திவேண்டும்

பேசற்ற நிலைவேண்டும் பேரின்பத்தால்

ஆராத மனநாச மடையவேண்டும்

அண்ணலே அருட்குருவே யடிக்கீழ்வைப்பாய்.

கோதிலாத் தெள்ளமுதே குறைதீர்த்தாளும்

குருமணியே சிவமணியே அருளேஎந்தன்

தீதெல்லாம் அறிவித்துத் தூய்மைசெய்து

திருவருளைத் தெரிவித்த தெளிவேயின்னுந்

தீதுலா மலமாயை சூழாவண்ணஞ்

சிற்பையின் நடந்தெரிந்து தெளிந்தவின்பம்

பேதியா தென்னிதயத் தென்றும்நீங்காப்

பேரின்பத் திருத்தியருட் குருவேகாப்பாய். 3

ஒருகோடி பிறவியெடுத் துழல்கோடி யோனிபல

புகுந்து வாடி

அருகோடி யாசையெ னுந் திரைகள்பல கோடியெதிர்

தாக்கச் செய்து

முருகோடு மலர்க்குழலார் மயல்கோடி மாளாதுன்

னருளாம் பாதத்

தருகோடி வரக்குருவே பலகோடி பிளவிகளைந்

தருளில் வைப்பாய். 4

என்னாட் கண்ணிகள்

ஓங்காரத் துள்ளொளியே உன்கருணை வெள்ளத்தில்

நீங்கா திருந்து நிலைபெறும்நா ளென்னாளோ.

ஆதியமா யனாதியுமாய் அன்பரகத் துள்ளொளியாய்

நீதியுமாய் நின்றவுன்னை நினைந்திருப்ப தென்னாளோ.

அருவே அருவுருவே ஆதியே வேத

குருவேநின் குகைழல்கள் கூடும்நா ளென்னாளோ.

சிவமேசிற் றம்பலமே சின்மயமே சித்தேயென்

தவமேநின் தாளிணையில் தானிருந்த லென்னாளோ.

க. சிதம்பரநாதன்

1890 - 1932

இவர் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை என்னும் ஊரில் வாழ்ந்த கந்தையா என்பரின் புதல்வர். தந்தையாரிடமே கல்வி கற்றவர். கதிர்காம முருகவேள்மேல் பிள்ளைத்தமிழ், திருப்பள்ளி எழுச்சி, திருவூஞ்சல் ஆகிய மூன்று நூல்களைப் பாடினர். கே.சி. நாதன் எனவும் இவரை அழைப்பர்.

கதிர்காம முருகன் பிள்ளைத்தமிழ்

வாரானைப் பருவம்

செழுந்தமிழ் விரகா கொழுந்தழை யுரவா

சிறுவா முருகா வருவாயே

சீரிய யானைக் கோரிளை யாயே

செல்வா குமரா வருவாயே

தொழுந்தனி யன்பர்க் கழுந்துமெ யின்பச்

சுவையாய் அவையாய் வருவாயே

சுப்பிர மணியா மெய்த்தவ வணியா

சொற்றிற லறிவா வருவாயே

எழுந்திரு முலைவாய் பொழிந்தும ழலைவாய்

இசைநசை எழிலாய் வருவாயே

எனமலை மகடாம் வனமுலை யபடாம்

இழகவ ணைகுகா கருவாயே

அழுந்திய போதுநீர் வழிந்தியல் மோதுநீ

ரருள்தர வரதா வருவாயே

அறுமுக முதல்வா உமைமகள் புதல்வா

அணிகதிர் காமா வருவாயே. 1

வேறு

கல்லைப் பிளந்து நாருரித்த

கதையே போலக் கடிமனத்த

கடையே மறிவைக் கனிதந்து

காற்றாய்ப் பறத்தி மயல்களை இச்

சொல்லைத் தணந்த வருடெரித்துச்

சுவைதேர் வறிந்து சுகமளித்துத்

தொலையா வின்பக் கடறேக்கித்

துணிவை யகற்றிப் பரமாக்க

நல்லை யுகந்தை நனிமாவை

நயந்தே யியைந்து குறமானை

நாக மகளை மருங்காக்கி

நடமா மஞ்ஞை யிவர்ந்துலவு

வல்லை யினித்தா னிரங்கிவளம்

வழங்க வருக வருகவே

மணிமா நதித்தெண் கரைக்கதிரை

மலைவாய் வருக வருகவே. 2

கன்னித் திருநாட் டரசையமண்

களைகட் டழிப்ப வருந்திநொந்து

கனிந்தே தேவி குலச்சிறையன்

கருத்தொத் தழைப்ப மதுரைவந்து

வன்னித் தலைவாய் வேவாது

வழுதி சுரத்தால் நோவாது

வழுவா யமணர் மொழிவாது

மறிந்தே யுடையக் கழிவாது

முன்னித் தமிழ்தீப் பசுந்தேற

முடுகு நதியே டெதிர்ந்தேற

முதுகூன் செழிய னிமிர்ந்தேற

முழுமா மறைநீ றுயர்ந்தேறச்

சென்னிப் பறியார் கழுவேறச்

செறித்த மதலாய் வருகவே

திருமா ணிக்கக் கதிர்காமச்

சேயே வருக வருகவே. 3

தெள்ளித் தமிழின் சுவைசுவைக்கும்

திருவே வருக சிவன்மகிழ்ந்த

சிறுவா வருக வுமைமடியிற்

றிளைக்கு மழகா வருகமயிற்

புள்ளிற் குலாவி நடனமிடும்

புதல்வா வருக கிருத்திகைமார்

பொழிபா லமுத மொழுகியவாய்ப்

புனிதா வருக மலைகடொறுந்

துள்ளித் திரிந்தே யடியர்வினை

துடைபபாய் வருக கிரவுஞ்சந்

துளைத்துக் கொடுஞ்சூர் மாதடியுஞ்

சுடர்வேற் பெரும வருககுற

வள்ளிக் கொடிதே முகைபடிந்த

வனமார் தருவே வருகதெய்வ

மகடோய் முருக கதிர்காம

வரதா வருக வருகவே. 4

ஆடு மணிபொன் னரைஞாண்சீ

ரரையிற் பூட்ட வருகவிரற்

காழி செறிப்ப வருகபடை

யைம்பா லணிய வருகநுதற்

சூடு திலதந் தொடவருக

தொய்யி லெழுத வருகசென்னி

துவளுங் குடுமி தரவருக

சுடர்த்தா மரைசங் கிடவருக

வீடு புனைந்து சிறுமகளிர்

விரும்பு மணற்சோ றுணவருக

விளையாட் டயர வருகவிழி

மேனி புதைப்ப வருகமயில்

ஆடு மழகு தரவருக

அருவா ரணங்கூ விடவருக

அணியீ ழத்தென் கதிர்காமத்

தையா வருக வருகவே. 5

தமிழே தொனிக்கு மழலைமொழி

தழைப்ப வருக தளிர்புனைந்து

தனியே யிருந்து களியாடல்

தருவான் வருக செவிசேர்த்தித்

தமிழே யுணர்த்து மறைமாற்றஞ்

சாற்ற வருக தளர்நடையாற்

றள்ளாட் டயர்ந்து திருவிளங்கத்

தகவே வருக தமிழமுதத்

தமிழ்தே சுவைக்க வருகமறு

காடற் புழுதி துடைத்து நன்னீ

ராட்ட வருக நெறித்தமுலை

யமுதம் பருக வருகதுனித்

தமிழ்தே முறுவல் விழிநோக்கு

மருள வருக வயல்வருக

அணியீ ழத்தென் கதிர்காமத்

தப்பா வருக வருகவே. 6

அன்னங் கொடுத்தே யடியவர்கட்

கருள்வான் வருக வலகிலுயிர்க்

கரணாய் நிலவு பொருடருவா

னரசே வருக வவையகத்துச்

சொன்னம் பியபேர்க் குறுதிமொழி

சுவைத்தீந் தமிழிற் சொலவருக

துணிவா யஞ்சாத் திடநீதி

துலங்க விளங்கத் துணைவருக

பொன்னம் பலந்தென் கதிர்காமப்

பொதுவென் றிரண்டு மறைபதியுட்

புனித னுமைகண் காணமுதற்

பொதுவி னடஞ்செய் திடப்புனத்துச்

சின்னஞ் சிறுக்கி யொடுலீலை

தெரியாக் கதிர்கா மமதியற்றிச்

சிறியேந் தமையும் பொருட்படுத்துஞ்

சேயே வருக வருகவே. 7

வேறு

முன்னா ளரனார் நுதல்விழியில்

முரணுற் றெழுந்த பொறிகடமை

முத்தீ வளியோர் கங்கையிடை

முடுகி விடுப்ப வவடாமே

முயறீ வெயிலால் வெதும்பியலை

முகடு தனிற்கொண் டெழின்மரைகள்

நன்னாள் வரமு னகுமழகார்

நற்பூஞ் சரவ ணத்தடத்தில்

நாற்றி யிடநற் குழவிகளா

நலிந்தே தமிழ்வாய் குவிந்தழுதே

நமைவுக் காரல வனமுலையார்

நறுமா முலைப்பா னயந்தூட்டப்

பின்னா ளுமையாள் மனமகிழ்வாற்

பிணைத்துக் குழைக்க வறுமகனாய்ப்

பிறங்கி மலைமேல் விளையாடிப்

பிரமற் சிறைசெய் துலகளித்துப்

பேணு ளமரர்ப் பரிவுறுத்த

படுசூர் தெறுத்துக் கதிர்காமப்

பதிபா டியதாக் குறமடமான்

பயில்பு கரந்தாய் வருகவே

பகர்தே வதப்பெண் பரிவகற்றும்

பரமா வருக வருகவே. 8

வேறு

எம்பர னிறைபணி யாவுமெ

னக்கண் டிகல்பற் றிலமனமா

யிரவொடு பகலும் மலரடி

தொழுதே யின்னிசை மொழிபாடிச்

சம்பர னரிசேய் சண்முக

முருகன் றமிடெரி புலவனெழிற்

சதமகன் மகளோ டணிகுற

மாதுஞ் சார்தரு வேற்குருமான்

இம்பர னம்பொன் னெழில்மனை

யீந்தே யேழைகள் மிடிகளைவோன்

ஈசன் குன்றுதொ றாடல்

மகிழ்ந்தோ னெனநனி தொழுவார்முன்

நம்பர னருடர நயனந்

தந்திட நாயக னார்வரவே

நலமிகு மீழத் தழகிய

கதிரையி னாயக னார்வரவே. 9

பொய்யது பகரப் புகழ்பொருள்

சேரு மெனப்புன் மொழிபேசிப்

புலைசெறி யொழுகும் போதமி

லாதார் பொய்யிருள் பொடியாக்கக்

கைவரு மறிவுக் கதிரொளி

வீசுங் கனவேன் முருகமனக்

கரவொரு சிறிதும் வரவில

ரேனுங் கழியறி யாமையினால்

மெய்யது வெனவே பொய்தனை

நம்பி விழைந்து மனந்தேறி

மேன்மேன் மெய்யென வெண்ணி

மயங்குறு மேதக் காளர்தமக்

குய்நெறி யுண்மையை யுணரச்

செய்குக ஒயில்மயில் மேல்வரவே

ஓங்கா ரப்பொரு ளுரைகதிர்

காமத் தொருவா அயல்வரவே. 10

கதிரைமலைக் காந்திவேன் முருகன் திருப்பள்ளியெழுச்சி

காந்தியி னொளிகொடு கதிரவ னெழவே

கதிரையிற் குணதிசைக் காந்தியு மெழுந்த

தேந்திழை பாரத வெம்மையு மெழுந்தாள்

இரவெனு மிடிபிணி யிகல்பகை விடிந்த

மாந்திய பொய்ம்மத மயல்விண்மீ னிரிந்த

மலர்ந்து வாய்மைமெய்க் கமலநல் லருளாம்

ஏந்திய வாரணம் எழுந்துமின் றார்த்த

தெம்முரு காபள்ளி யெழுந்தரு ளாயே. 1

தென்மொழி வடமொழிக் குயிர்களுங் கூவத்

தேசிய கீதநற் கொடிகளு மிரைப்பப்

பொன்மயிற் புங்கவன் சங்கமு மூதப்

பொன்றிரு வனைமினார் புலரியு மோதப்

பன்மொழிப் பாலகர் பள்ளியும் பாடப்

பாவலர் நாவலர் பரவின ராடத்

தொன்மையிற் றமிழக் காந்திசெய் கதிரைத்

தூய்முரு காபள்ளி யெழுந்தரு ளாயே. 2

நாற்றிசை மாந்தரு நனிதுயி லெழுந்தார்

நமதுபெண் மணிகளு நயப்பினி லெழுந்தார்

மேற்றிசை வாழ்வெனு மிழிமையு மிடியும்

வீறுடை யிகன்மையும் விளிந்தன இரித்த

போற்றிசை பாரதப் புதல்வர்கள் காந்திப்

போதுவந் தாயவென் றேமகிழ்ந் துவந்தார்

ஏற்றிசை மணமுர சியம்பின கதிரை

எழிமுரு காபள்ளி யெழுந்தரு ளாயே. 3

சத்தியந் தயைதவங் காந்தியி னிமிர்ந்த

தவிர்ந்தன பொய்மையுந் தீமையும் பகையும்

பத்தியி னொழுக்கமும் பாரக நிறைந்த

பண்ணமை தோத்திரம் பாடினர் பலரும்

மெத்திய திரவிய வநித்திய மறியா

மேற்றிசை நாட்டினர் விழல்வழக் கொழியச்

சித்தியும் புத்தியுஞ் சிறந்தன கதிரைச்

சேய்முரு காபள்ளி யெழுந்தரு ளாயே. 4

தமிழ்ஞ’மி றிரைத்தன தேசிய தொண்டர்

தயக்கமில் மனமெமுந் தாமரை மலர்ந்த

வமிழ்தினு நயமொழிக் குழவிக டாமு

மடிமையின் சேற்றினை யகன்றிட வழுதார்

உமிழ்திரை யுடுத்திய வுலகினூ ழியர்கள்

உவப்புநீத் துவகையிற் றினைத்துறக் கதிரை

அமிழ்பகைக் காந்தியி னன்பிறா லொழுக்கி

னருள்முரு காபள்ளி யெழுந்தரு ளாயே. 5

நிலங்கையி னாளுகை நெறியினை யறியா

நேரிலர் போரினிற் பொருளுயி ரழிப்ப

மலங்கிய தத்துவ வழிதக வறிவின்

மதர்த்தன படைகளும் பொறிகளு மெதிர

வலங்கையில் வாய்மையு மிடங்கையி லருளும்

வாழ்வினுந் தாழ்வினும் வருத்தமின் மகிழ்வும்

இலங்கையிற் காந்தியி னெழுப்பிய கதிரை

இனமுரு காபள்ளி எழுந்தரு ளாயே. 6

ஞாயிறு நாளதிற் கோயில்சென் றன்றே

நாளது கிழமையிற் சூழ்ச்சிமுன் னின்றே

போயிறு வாழ்வதன் பொய்ம்மையை யறியாப்

புல்லிய வறிவினர் வல்லிரு ளகல

வேயுறு தோளிய ளுமைமுலை காந்தி

மென்றமிழ் மழலையிற் பிரணவத் தழுதெம்

வாயுறு வாழ்த்தாய் மனைவளர் கதிரை

வயமுரு காபள்ளி யெழுந்தரு ளாயே. 7

முதனடு விறுதியில் மூன்றுமில் லவனாய்

மூவரு மாகிமும் மலப்பிணிப் பிலனாய்

விதனுறு வேட்கையும் வெறுப்பில் லவனாய்

மேலதுங் கீழது மிசைந்தது மிலனாய்க்

கதனுறு வெகுளிவெங் காமமில் லவனாய்க்

காந்தியி னருள்பொழி நாத்தகங் கவின

இதனுறு குறமா னியல்விழை கதிரை

இறைமுரு காபள்ளி யெழுந்தரு ளாயே. 8

ஏற்பவர் தமக்கு மிரப்பவர் தமக்கு

மினிதருள் புரிவதே யன்றிநின் முகத்தைப்

பார்ப்பவர் தமக்கு மிரங்குவ தறிந்தே

பண்ணமை பசுந்தமிழ் சிவநெறி சாதி

மேற்பயின் றிலங்க விழைசிவ காமி

விரும்பிய நாதனற் கழலிணை பழிச்ச

வேற்படைக் காந்திவிண் விளங்கிய கதிரை

வெளிமுரு காபள்ளி யெழுந்தரு ளாயே. 9

அள்ளிநின் னருடனை மழையென வழங்கி

னுலுமஃ தஃகுறா தணுவள வன்றே

துள்ளிநின் றாடு மயின்மிசைத் துவன்றித்

துட்டரைக் கருணையிற் சிட்டர்க ளாக்கி

யுள்ளினின் றெமைக்காத் துலகினில் வாய்மை

ஒழுக்கமன் பருணல மோங்கிநின் றிலங்க

வள்ளிதெய் வானை காந்திய கதிரை

மலைமரு காபள்ளி யெழுந்தருளாயே. 10

சிலம்புநாதபிள்ளை

இவர் கொக்குவிலைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பரின் புதல்வர். வண்ணைநகர் ம. அமரசிங்க உபாத்தியாயரிடங் கல்வி கற்றவர். இவரியற்றிய நூல் 'ஓமையந்தாதி' என்பது. அந்நூல் 1880இல் வெளியிட்டது. உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், ஊரெழு சு. சரவணமுத்துப்பிள்ளை ஆகியோர் அந் நூலுக்குச் சிறப்புப்பாயிரம் ஈந்தனர். நூலின் முகத்திற் காணப்படும் பின்வருஞ் செய்யுள் ஆக்கியோன் பெயர் கூறுகின்றது.

பூதக ணாதியர் போற்றிட வோமைப் புரத்துறையும்

வேதச மூகம் புகழ்வி ரகத்தி விநாயகன் மேல

ஓதினன் செந்தமி ழந்தாதி நூறு முயர்சிலம்பு

நாதனென் றோது மெழினல்லை மாநகர் நாவலனே.

ஓமையந்தாதி

காப்பு

சீர்கொண்ட வோமை நகருறை வீரகத் திப்பிள்ளைமேற்

பார்கொண்ட செந்தமி ழந்ததி பாடப் பரிவுடனே

ஏர்கொண்ட கோட்டுக் கயிலைக் கணேசன் கழலிணையே.

அருளா யணுகினர்க் காரொளி யாயணு காதவர்க்கு

மருளா யெழிலுறு மோமையில் வாழு மதகரியே

தெருளா யதுசற்று மில்லா தயருஞ் சிறியனுண்மைப்

பொருளாய நின்னிரு பாதாம் புயங்களைப் போற்றிடவே.

போற்று நினைவுடை யோர்செல்வங் கல்வி பொருந்துபுகழ்

தேற்று மெய்ஞ்ஞான நிரம்பி யருட்பயன் சேர்ந்திடுவார்

கூற்று வரினுமஞ் சாநெஞ்ச ராகிக் குலாவிடுவார்

சாற்று நல்லோமையிற் றங்கித் தஞ்சிந்தை தரித்துனையே

உனையே கடவுளென் றோர்ந்துகொண்டேனினியோமையில்வாழ்

அனையே நிகர்தரு மைங்கர னேயெனை யாண்டுகொள்வாய்

தினையே யளவு மளியின்றித் தீங்கினைச் செய்துதிரிந்

தனையே யெனத்தள்ளிற் றஞ்சம் பிறிதில்லைச் சத்தியமே. 3

சத்திய மான பொருளாகி யோமையிற் றங்குமுன்னைத்

துத்தியஞ் செய்பவர் கான்வழிச் செல்லிற் றுயரஞ்செய்யா

மெத்திய பூத மலகை நரியொடு வெய்யக

டத்தி யடுபுலி யேகுங் கரடி யரவங்களே. 4

பண்ணவர் விண்ணவ ரெல்லாம் பணிந்து பரவிடுமுக்

கணவன் றன்னைச் செங்காட்டி னிறுவிக் கடல்புடைசூழ்

மண்ணவர் தாமும் வழிபட்டு நித்திய வாழ்வுதனை

அன்ன வருள்புரிந் தாயோமை மேவிய வற்புதனே. 5

அற்புத மான வடிவுடை யாயெனை யாதரித்துக்

கற்புத விக்கவி பாடுந் திறநல்கிக் கற்றுணர்ந்த

சொற்புதர் கூட்டத்தி லுற்றிடச் செய்தனை சோதிமின்னும்

பொற்புத வுற்றிடு மோமையின் மேவிய புண்ணியனே. 6

புண்ணிய பாவப் பகுப்புண ராத புலையனைநீ

நண்ணிய வோமைப் பதிக்கரு கேவைத்து நன்மையெலாம்

பண்ணிய தற்புத மாமது வன்றியும் பாரினில்யான்

எண்ணிய வெண்ணமு முற்றுவித் தாயினி யென்குறையே. 7

குறையும் பிறையணி யீசனைச் சூழ்ந்து கொக்குக்கனியை

நிறையும் பரிவுட னேற்று வயங்கொளு நின்மலனே

உறையுங் குணக்குன்ற மேயோமை மேவிய வுத்தமனே

இறையு மினியுனை யான்மற வாமனின் றேத்துவனே.

ஏத்து மடியரெக் குற்றஞ் செயினு மினிதெனவே

காத்துப் பயனளிப் பாய்நின் னருட்டிறங் கண்டவர்யார்

கூத்துப் புரிகுழ கற்குமுற் றோன்றுங் குமரமென்றே

ஓத்தும் புகலு முனையோமை வாழ்வுகந் துற்றவனே. 9

உற்றவர் குற்ற வுருவாயி னையிவ் வுலகபந்தம்

அற்றவர்க் கற்ற வொளியாகி நின்றனை யாரணங்கள்

கற்றவர் தாமு மறியாருன் மாயையின் காரணத்தை

மற்றவ ராருணர் வாரோமை மேவிய வாரணமே. 10

வாழை நெருங்கும் வயலரு கெங்கணும் வான்கரும்பு

தாழை நெருங்குங் கனிகள் சிதைக்கத் தரளஞ்சிந்தும்

மாழை நெருங்கு மதிலோமை வானவன் வாதமெழுந்

தீமை நெருங்குங் காலத்தி லென்ற னெதிர்நிற்பனே.

சிந்தனை செய்வர் திருமாலும் வேதனுந் தேடியென்றும்

வந்தனை செய்வர் சுராசுரர் தத்த மனத்தினுள்ளே

பந்தனை செய்வர் பரனு முமையுமிப் பார்தனிலே

நிந்தனை நீங்கிய வோமை விநாயக நின்றனையே. 12

சிறந்தேனுன்னன்பர் திருக்கூட்டங் கண்டுசெய் தீமையெல்லாந்

துறந்தே னினோமைப் பதியடை யாதவர் தொல்லுறவை

மறந்தே னெனது மனத்திரு ­க்கி மறுபிறவி

பிறந்தே னினிப்பிற வார்பெறும் பேறும் பெறுகுவனே.

பெற்றவர் பூசித்து வேண்டிய பேறுகள் பெற்றனரேல்

உற்றவர்க் குற்றவ ராகுநின் னோமை யுறாதவராய்க்

கற்றறி மூடர்க ளாகிக் கலங்கிக் கருத்தழிந்த

சிற்றறி வாளர் செவிக்குறு மோவுன்றன் சீர்த்திகளே. 14

திருவளர் மார்பனுஞ் செங்கம லத்தனுந் தேடியின்னுங்

குருவளர் வுற்றவன் னாதியந் தங்கள் குறித்தறியார்

கருவளர் கின்ற கருத்துடை யேனினைக் காண்பதுண்டோ

அருவள ரோடைப் புரியுடை யாயெனை யாண்டருளே.

சிவசுப்பிரமணிய சிவாசாரியார்

இவரது ஊர் வட்டுக்கோட்டை. தந்தையார் பெயர் நாகேசஐயர். இவர் கந்தசட்டிப் புராணம் என்னும் நூலை இயற்றி 1895இல் வெளியிட்டார். அந்நூற்குச் சிறப்புப் பாயிரம் ஈந்தோர் மாதகல் சு.ஏரம்பையர், காரைநகர் மு.கார்த்திகேயைர், கு.கதிரைவேற்பிள்ளை, சி.வை. தாமோதரம்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப்புலவர் முதலியோர்.

கந்தசட்டிப் புராணம்

முகவுரை

கருதரும் விரத ராசங் கவுத்துப பாதி யாக

விரிபல விரதங் கூறு மேன்மைசா னூல்க ளுள்ளுங்

குருகுலா மவுணற் செற்ற குமரவேள் கந்த சட்டித்

தெரிகதை நியதி யாவுந் திரட்டிநன் பொருள்செ றித்தே. 1

வண்டினந் தேற லுண்டு மருண்டிசை பாடு நீபங்

கொண்டலர்ந் தருணந் தோய்ந்து குலவுமீ ராறு தோளான்

கெண்டையங் கண்ணாள் வள்ளி கேள்வனின் மான்மி யஞ்சொல்

எண்டருங் கந்த சட்டிப் புராணமா வியம்பா நின்றேன்.

தெய்வயானை திருமணச் சருக்கம்

தாதையு மன்னையு மங்கட் சார்ந்ததை

மேதகு குமரவேள் விருப்பி னோக்கியே

பாதபங் கயங்களிற் பணிந்து போற்றியத்

தாதுகு மணவணிச் சாலை யுய்த்தனன். 3

வேறு

அனந்த கோடியென் றுரைபெறு மாதவ ரகல்சீர்

அனந்த வாநெறி யுற்றென வவிரொளி வரதன்

அனந்த வார்பெருங் கருணையி னணிமணித் தவிசம்

அனந்த வார்மணச் சாலையி னடைந்தது நடுவண். 4

அணிகொள் பீடிகை மீதினி னையனோ டனையுந்

தனிவ ரும்பெருங் கருணையி னமர்ந்துசன் முகனைக்

கணிதர் நாடருங் கண்ணுதல் கனிவுட னழைத்துப்

பணிபு னைந்தொளிர் திருக்கையாற் பற்றின னெடுத்தான். 5

எடுத்த னன்குறங் கிருத்தின னுச்சியை மோந்து

வடுத்த விரிந்திடு கவுரிபால் வழங்கின னவளும்

அடுத்த காதலின் வாங்கின ளகந்தனி வுவந்து

நடுத்த யங்கவே யிருத்தின ணயந்தவ னிருந்தான். 6

நாதநம் பகையை முன்னா ணாமறத் தடிதியென்றே

மேதகு மிவனை யுய்த்தாய் விளம்பிய படியேயன்னோன்

காதின னசுரர் தம்மைக் கடவுளர் சிறையுந்தீர்ந்த

தாதலால் யாங்க ளுய்ந்தே மதற்கொரு கைம்மாறேதோ. 7

என்றியா மனத்தி னாட விந்திரன் மகனையின்னே

குன்றெறி குமரற் கீயக் குறித்தன னிந்தவேளை

நன்றிகொ ணாத நீயு நகமருண் மயிலுமிங்கட்

சென்றனி ரதனா லுய்ந்தோ மென்றனன் றிசைமுகத்தான்.

பங்கயச் செம்ம லங்கட் பகர்மொழிக் கன்புகூருக்

திங்களஞ் சடையன் மேலைத் திசைமுகன் றன்னைநோக்கி

மங்கையோ டினிது காண மணவினை யிங்கணுற்றாம்

இங்குயர் கரும முற்ற வியற்றுதி கிரியையென்றான். 9

மனமகிழ் குரவ னங்கண் மருத்துவான் முகத்தைநோக்கி

நினதுநற் றவமே யான நேரிழை தன்னையின்னை

அனகனுக் கீயு மன்பா லழைத்தியென் றுரைக்கவன்னோன்

வினவியத் தெய்வ மாது மேவுளி யடைந்துசொல்வான்.

அன்னையெங் குலக்கொழுந்தே யருந்தவப் பயனேவாராய்

என்னலு மரம்பை மாத ரெழிலுற மருங்குசூழ

மின்னவிர் பணிகள் விம்ம மென்மலர்ப் பதம்பெயர்த்துத்

தன்னிகர் தெய்வ யானை தனிமணச் சாலைபுக்காள். 11

இந்திரன் முன்ன ரேக விருடிக ளாசியேறச்

சந்திர வதன மின்னச் சபைவருந் தெய்வயானை

மந்திரப் பொருளி னோடு வரைமயி றன்னைத்தாழ்ந்து

சுந்தர முருகர்க் காணூஉத் துண்ணெனச் சமழ்ந்துற்றாளே.

காதலிற் புவன மீன்ற கவுரியக் கடவுண்மாதை

ஆதரம் பெருக நோக்கி யணைத்துட னெடுத்துப்புல்லித்

தாதவிழ் கடப்ப மாலைத் தம்பிரா னுடனிருந்த

வேதனே யாதி யானோ‘ வியந்தனர் பணிந்தாரன்றே.

சுலைமான் லெப்பைப் புலவர்

இவருது ஊர் யாழ்ப்பாணம். இவர் அசனாலெப்பைப் புலவரின் நெருங்கிய நண்பராக வாழ்ந்தார். இவரியற்றிய நூல் 'குதுபு நாயகர் நிரியாண மான்மியம்' என்பது. இந்நூல் 1900ஆம் ஆண்டில் மகாவித்துவான் குலாம்காதிறு நாவலரவர்களாற் பார்வையிட்டு வெளியிடப்பட்டது.

குதுபு நாயகர் நிரியான மான்மியம்

காப்பு

உடலுயிர் பொருந்தியாங் குலகம் வானர

ரடல்பரி தேவர்மற் றமைத்த வற்றொடு

முடுகியு முடுகுறா முயங்கிக் காண்டகு

கடவுளைச் சந்ததங் காவல் கொள்ளுவாம். 1

கடவுள் வாழ்த்து

திருமறைப் பொருளை யாதியை நித்ய

சின்மயா னந்தமெய் வடிவைத்

தருமறை தெரித்த பொருளினுட் பொருளைச்

சராசரக் கருவினுட் கருவை

நிருமல வுருவிற் சும்புவைப் புனித

நிட்கள ரூபநா யகனை

யொருமறை யின்றி யருமறை யாநின்

றொளிர்முதற் கருத்தனைத் தொழுவாம். 2

பாயிரம்

கருமறைக் குருவா மப்துல் காதிரு முகியித் தீனிப்

பெருமறைப் புவன நீத்துப் பிரிகிலா தோருமை பூண்டு

மொருமறை யின்றி மேலே றுயர்பது மேவற் குற்ற

வருமறை நிரியா ணத்தை யருளுவ திந்லூல் மாதோ. 3

அவையடக்கம்

அகத்தியந் தொல்காப் பியத்தொடு நல்னூல்

அவிநயங் காக்கைபா டினியம்

வகுத்திய றுடைதலி லக்கண விளக்கம்

வாமன வகப்பொருள் விளக்கம்

பருத்திய னனியாப் பருங்கல முதலபஞ்

சலக்கண மிலக்கி யத்தின்

றகைத்திற னிறியான் றருமநந் நயினார்

தமதளி விழைவின்விண் டனனால். 4

அந்தர முகட்டிற் றோன்று

மமுதவெண் டிங்கண் முன்னிற்

பிந்துகச் சோதம் வைத்துப்

பேசிய வாறு போலச்

செந்தமிழ்ப் புலவர் பண்ணிற்

செப்பிய கவிமு னற்பப்

புந்திய னுரைத்த புன்சொற்

பொருந்துமால் புகலுங் காலே. 5

பகுதாது நகர்ச் சிறப்பு

கடல்வ ளைந்தபுவி பணிந னந்தலைக

வின்று மெங்ஙன மெழுந்ததென்

றடல்வ ளைந்தவின நரர்தெ ரிந்திடவ

கழந்த தாமென வகன்றிருந்

திடம்பெ ருங்கமடம் வலியி டங்கர்திரி

யிகலி னங்கண மறைந்திட

லுடல்க ரந்தவுயி ரெனவி ளங்ககழி

யுடனி ருந்திலகு மந்நகர். 6

கற்ற மாந்தர்கண் மதிக்கு நேர்பொருவு

கன்னி மாமதில்கள் வாயெலா

நற்ற வக்குணர்தம் வண்மை யென்னநிரை

நடுவு வெண்டுவச வாடைகள்

சுற்றி நாதரிசை பூசி ரந்துவெளி

சூழ்வ திம்பருணர் வானெழுந்

துற்ற வென்னமுகில் கீண்டு யர்ந்துநளி

யோங்கு மாலிகழ்வு நீங்கவே. 7

விண்ட டர்ந்துநிழன் மேவ வோங்குமரன்

மீத ரம்பையர் விழிக்குநேர்

கொண்ட பன்னறிய போத லர்த்திய

குழீஇய வொன்சிறை யளிக்குழா

மெண்டி சைக்குமிறை யார்ந வத்தினிவ

ணெய்தி னாரென விளக்கிய

பண்டி சைத்துளவி யப்பி னுற்றன

பதிப்பு றங்கெழுமு சோலையே. 8

வீதி யெங்குமெழின் மேய பொற்கலச

மேனி வந்துநிமிர் கோபுரம்

சீத முங்கியொளி கால வானிலவு

தேய வுந்தியெழு தோற்றமே

நாதர் செங்கரமு கந்த மாதவர்க

ணாறு நாளுநனி யீண்டுபு

மாது றக்கநக ரேகுவா னணியின்

வைத்த மால்பென விளங்குமால். 9

மன்ற றுன்றுமட வார்சு பத்தின்மண

மங்க லப்பறை முழக்கொடு

வன்றி றற்சமரி னுக்கெ ழும்படி

வலிந்தி யம்புமுர சோதையுந்

துன்று வேதர்முத லான வர்க்களி

துளக்கு மீகைமுர சார்வமும்

பொன்ற லின்றியுவ ரார்ப்ப டங்கிய

புணர்த்தி நாளினு மிரட்டுமால் 10

சந்த மான்மத நரந்த போடுகமழ்

தயில மும்புழுகு தகரமும்

கொந்து மாமலர்கள் பன்ம ணித்தொகை

கொழுந்து கிர்த்திரளு மாரமும்

பந்தி பந்தியணி மல்கி வான்கெழுமி

பலச ரக்கினமு மேனவும்

வந்து வந்துபலர் கொள்ளு மாவன

மலிந்தத வீதிதொறு மன்னுமால். 11

ஆலை யார்ப்பிள்ளை யடக்கு மாவண

வழுங்க லன்னதை யரிட்டமுன்

சோலை மாயிசை யடக்கு மன்னதை

மணத்தின் தோகையர் கணத்தொடு

சாலை தோறினு மரற் றருங்குரவை

தாக்கு மன்னதை யடக்குமால்

வேலை நேர்கலை முழக்க மென்னிலவ்

வியப்பை யெங்ஙன மிசைப்பமால். 12

வேத பாடையொடு மேன பாடைகள்

விளக்கு சாலையு மறத்தினுக்

கேது வாயபல நூல்பயிற் றுறவி

யற்று சாலையு மொருத்தனைக்

கோதி லாதகம் வணக்கு சாலைமுதல்

கோடி கோடிபுடை மல்கிய

பாதி யன்றபல பதியு ளும்பெரிய

பதியி தென்றுசொல வோங்குமால். 13

ஞானப்பிரகாசர்*

இவரது ஊர் யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலி. ஆறுமுகநாவலர் இவர் பரம்பரையினர். போர்த்துக்கேயர் காலத்திலே குடிகளாகிய ஒவ்வொருவரும் பசுவைக் கொடுக்க வேண்டுமென்ற கட்டளையிருந்தமையின் அங்ஙனஞ் செய்ய விருப்பமில்லாதவராய் யாழ்ப்பாணத்தைவிட்டுச் சிதம்பரத்திற் சென்று குடியேறினர் என்பர். வடமொழிப் புலமை மிக்க இவர் பல வடமொழி நூல்களை இயற்றினர். தமிழிற் சிவஞானசித்தியாருக்கு ஒருரையையும், 'வல்லான் காவியம்' என வழங்கும் வீரநாராயணர் விசயத்தையும் இயற்றினர். வல்லான் காவியம் முழு நூலும் அகப்படவில்லை. அகப்பட்ட பழைய அச்சுப்பிரதி ஒன்றிற் 14 சருக்கங்களும் 665 செய்யுள்களும் உள்ளன. நூலாசிரியராகிய ஞானப்பிரகாசரின் பெயரை நூலின் இருபத்துநான்காஞ் செய்யுளாகிய பின்வருஞ் சிறப்புப் பாயிரஞ் சுட்டுகின்றது.

கலிவிருத்தம்

வானத் திறல்பன் னிருமன் னவர்வல்

லானைப் பொருதிட் டவிர்மெய்த் தலைசீ

ராநற் றமிழா லணிசெய் தனன்மா

ஞானப் பிரகா சநறுந் தவனே.

வல்லான் காவியம்

காப்பு

கலிவிருத்தம்

அத்தி மாமுக னம்புயப் பூம்பதம்

பத்தி யாகப் பணிந்தகத் துன்னுவாஞ்

சுத்த வீரத்தி றந்துலங் கத்தரு

மெய்த்த லைச்சரி தச்சீர் விளம்பவே. 1

________________

* வல்லான் காவியம் பாடிய ஞானப்பிரகாசரும் ஆறுமுகநாவலரின் மூதாதையரான ஞானப்பிராகசரும் ஒருவர் அல்லர் என்பாருமுளர்.

விநாயகர் துதி

கலிநிலைத்துறை

பாரேழு மறைநாலும் வெண்­றும் வாழாத படிநிற்கவே

காரேழு பொழின்மேவு வயமொடு நிகரற்ற கயசூரனைக்

கூரேழுமொருகோடுகொடுப்போர்செய்தேய்ன்று குமையச்செயுஞ்

சீரேழு மதயானை யிருபாத மறவாது சிந்திப்பமே. 2

சைவசமயாசாரியர் துதி

ஆறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

எணங்கண்டா ரொளிகண்டு மணிமன்றம் புகுசோதி

யிறைஞ்சி யந்நாண்

மணங்கண்டார் சிவஞான வழிகாண வருசோதி

வணங்கிப் பைங்காக்

கணங்கண்டா ரளிபுகலூ ரிலிங்கத்து ளொளிசோதி

கருதிப் போதக்

குணங்கண்டார் தருவேழ மெழுசோதி தொழுதுள்ளக்

குறைக டீர்வாம். 3

கவிச்சக்கரவர்த்தி துதி

இன்னும் புவியிற் புன்கவிக ளில்லை

யுண்டேற் றலையறுப்ப

மென்னுங் கொடிக ளெழுந்தார்ப்ப வீட்டிப்

பாடி யரிந்தமலை

முன்னந் துதிப்ப வெழும்புமருண் மூர்த்தி

யாகும் புலவர்பிரான்

பொன்னங் கமலப் பூஞ்சரணாம் புறத்து

மகத்தும் புகழ்ந்துய்வாம். 4

நூல் வரலாறு

அரிந்ததலை யாசனத்தி லிருந்தெழுந்தோ

ராயிரத்தெண் டலைகளங்கம்

பொருந்தவுயி ரீந்தவனே யருளீட்டி

யெழுபதெனுஙம் புனிதநூலி

லிருந்தபழு வூர்வீர நாராய

ணாதியர்த மிசையைமிக்கோர்

விரிந்தறுங் காப்பியமாச் செய்யெனமற்

றவரருளால் விளம்பினேனே. 5

நூற்பயன்

பாட்டும் பயனு மருளிரதம் பழுக்குங் கற்ப தருக்கூத்தன்

சூட்டும் வீர வாகுவெனச் சொன்னா னதனா லவர்சரிதங்

கேட்டுக் கருது பவர்க்கெல்லாங் கீர்த்தி வாய்க்கு மதுபுனித

நாட்டு மதுமெய்த் துணிவுதரு ஞான மதுதந் தருடருமே. 6

வாழ்த்து

கொச்சகக் கலிப்பா

உலகுதொழ நடமாடி யுடனரசா ளுங்குரிசி

லலகில்பெரும் புகழ்பரவு மபயனக ளங்கவள்ளன்

மலைமுதுகிற் புலிபொறிந்த மனதீரன் வளவேசன்

பலகலையுந் தெரிதருப ராந்தகச்சோ ழன்வாழி. 7

சோழனவைச் சிறப்புச் சருக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

மதிநில வொளிகான் முத்த மணிதருந் தவளச் சங்க

நிதியுதி தரலுங் கஞ்ச நிதியுதி தரலு மாகிப்

பொதிமதுப் பிலிற்று வண்டார் பூம்பொழில் வளர்க்கும் பொன்னி

நதியுதித் தளவ ளாவு நலமுறுஞ் சோழ நாடு. 8

பம்பிய நீர மாரும் படிநலா ரடியு லாக்கண்

டம்புய மலர்மேற் செங்கா லனநடை பயிலச் சூடித்

தும்பிநின் றார்ப்ப நாறுஞ் சுகமணத் தடங்கண முற்றுஞ்

செம்பியர் நெறியி னாளத் திருத்தமிக் குளவிந் நாடு. 9

கருக்குலங் கழலப் பாடு முறுவரிற் காமர் வண்டர்

மருக்குலங் கமழப் பாடு மலர்வனத் தழகு காட்டத்

தருக்குலங் ககன முட்டுந் தண்டலை குலவும் பானுத்

திருக்குலத் தவர்க ­தி செலுந்தகை யுளவிந் நாடு, 10

சங்குட னிப்பி முத்தந் தருவரம் பிமைப்பச் செய்ய

பங்கய மிமைப்ப நீலோற் பலமலர்ந் திமைப்ப பைங்கூ

ழெங்கணு மிமைப்பப் பின்னோ ரேரின மிமைப்பப் பண்ணை

தங்கமும் விளைவுண் டாகுந் தண்ணர னிறைசோ ணாடு.

இத்திரு நாட்டி லந்த விரவிதன் குலத்து வேந்த

ரொத்தெழின் முடித ரித்தற் குத்தம தலங்க ளாகிப்

பத்திரா சனங்கொண் டுள்ள பதிகளாக் கருவூ ராதிச்

சித்திரக் கோயின் மேய திருநக ரைந்த வற்றில். 12

தேம்பொழிந் தலர்ந்து நாறச் சிறையளி குடைந்து பாடும்

பூம்பொழி லுறந்தை மூதூர் பொதுவறப் புரக்கு நீரான்

வேம்பொளி ரகலப் பாண்டி மீனவன் மருக னொன்னார்

கூம்பொழி யாது கையாற் றுதிகுலோத் துங்க வேந்தன்.

தாதைநா டொடங்கித் தம்பேர் சபையகத் திருந்து கல்வி

போதமார் குரவ னாகிப் புன்கவி தலையெ டாமன்

மேதகு துவச நாட்டி மிளிர்கவி யரசு செய்யு

நீதியா லுயர்ந்த கூத்த னிகரிலற் புதங்கள் கண்டான். 14

வே. தா. தியாகராசா

இவா யாழ்ப்பாணத்துப் புலோலி என்னும் ஊரைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை என்பவரின் புதல்வர். புலோலி குமாரசுவாமிப்புலவரிடங் கல்விகற்றவர். மூன்றாவது வயது தொடக்கம் முப்பத்தெட்டு ஆண்டுகளாகத் தம்மை வருத்திய கன்மநோயை, கந்தலீலை என்னும் நூலைப்பாடி நீக்கியவர்.

கந்தலீலை

தெய்வ வணக்கம்

கவிதிருத்தக் களவியலுக் குரைத்திருத்த

வல்லவராங் கலைஞரென்றே

புவிமுழுக்கப் பெயர்பரப்பிப் புலவரெனும்

பட்டமுமே பூண்டுகொண்டீர்

கவியுதிர்க்கக் களிறருந்துங் கனிவிருக்கக்

குறிஞ்சிநில வரசே பன்னீர்

செவிகொடுத்தேன் கவிவுவந்து பரிசளிக்கத்

தாமதமேன் செய்கின்றீரே.

அகப்பொருளுரை திருத்தியலீலை

மதுர மொழுகுந் தமிழ்வளரு

மதுரா புரியை யரசாளுஞ்

சதுரன் வமிச சேகரபாண்

டியனா ரீன்ற தனிமகனாம்

மதுவி னினிய புதுமொழியான்

வமிச சூடா மணியென்போன்

பொதுவி னகல விகலவுல

கனைத்துந் தனித்தே புரந்திருந்தான். 1

இன்னோ னரசு புரிந்திடுநாள்

ஏற்ற கிரக நிலைமாற

மின்னார் முகிலின் மழையிலதாய்

வெறிதாய் வளங்கள் சுருங்குதலால்

என்னோ புரிவோ மெனமனுடை

ரேங்கி யிருந்தா ரெவ்விடத்தும

பொன்னார் புலவோர் பசிநலியப்

புலம்பி யுடலம் புலர்ந்தாரே. 2

பசியால் வருந்தும் புலவோர்கள்

பலரும் மதுரைப் பாண்டியனாஞ்

சுசியார் மனத்த னெனும்வமிச

சூடா மணிபாற் போகவவன்

கசியா விரங்கி நமக்கினிய

கலைதேர் புலவீர் வேண்டியன

புசியா மகிழ்கூர்ந் திவ்விடமே

பொருந்த விருந்து வாழ்குதிரால். 3

வேண்டும் வேண்டும் பொருளனைத்துந்

தருது மெனவே விளம்பினனால்

மாண்ட மனத்துப் புலவோர்கள்

வானப் புலவோர் எனப்போகம்

பூண்டு சுகித்து வாழ்ந்திருந்தார்

ஒரு நாண் மதுரைப் பூபால

னாண்டு வசிக்கும் புலவோரை

யணுகி யரிய பெரியீரே. 4

வேறு

அமிழ்தினு மினிய தான

தமிழினை யாய்ந்து கொண்டு

கமழ்மல ரெனவே யெம்பா

லிருந்திடக் கடவீ ரென்றா

னிமிழ்பெறு மெழுத்துஞ் சொல்லும்

யாப்புநல் லணியு மேய்ந்த

தமிழ்பொரு ணூலின் மாட்டே

தங்கிடு மாத லாலே 5

தக்கதாம் பொருணூ லின்றித்

தமிழையெவ் வாறு தேர்வேம்

மிக்கநீ ளறிவு வாய்ந்த

வேந்தனே யென்று கூற

விக்குறை நிறைக்க வல்லா

னெமக்கிறை யவனா மென்றே

யக்குறை மதியான் மேவு

மாலவாய்க் கோவின் மேவி. 6

செந்தமிழ்க் குரிசி லேயென்

றெய்வமே யால வாயின்

வந்திடு மமுதே யுன்னை

வந்திக்கு மடியே னுக்குப்

புந்தியிற் றுயரந் தீரப்

பொருளினூ லொன்று நீயே

தந்திட வேண்டு மென்று

தாளிணை வணங்கிப் போனான். 7

வண்டுற்ற வேப்பந் தாரான்

மனத்துயர் நீக்க வேண்டித்

தொண்டர்க்குத் தரனா மீசன்

சோமசுந் தரனா மீசன்

பண்டுற்ற வேத வாயாற்

பாடியே யெழுது மேடு

பெண்டுற்ற வலமாய் மேவும்

பீடத்தின் கீழ்வைத் தானே. 8

புலரியி னெழுந்து மேலாம்

புனிதனா யால யத்தை

யலகிடப் புகுந்த வேத

வந்தணன் பீடத் தின்கீ

ழிலகிடு முறையைக் கண்டே

யெடுத்துநற் சிறமேற் றாங்கி

நலமுறு மாச னார்முன்

னணுகியே கொடுத்திட்þ டானே. 9

மொய்த்திடு தவத்து வேந்தன்

முறையினை முறையா வாங்கி

மெய்த்திடு காப்பு நீக்கி

விரித்துவா சிக்கும் போது

பொய்த்திடா வகைதான் கேட்ட

பொருளினூ லாகத் தோன்ற

வுய்த்திடு மதிச யத்தா

னுரைகாண்மின் புலவீ ரென்றான்.

கலைகிளர் மதிநக் கீரன்

கபிலனே பரண னாதி

புலவர்க ளுரைசெய் தார்கள்

பொருளுரை பொருந்தா தாகத்

தலைமையார் புலவோர் தத்த

முரைகளே சரியென் றோதிக்

கலகமே விளைத்தா ரீது

கண்டிடு பாண்டி வேந்தன். 11

ஓதுறு தமிழ்நூல் வல்லோ

ருரைசரி பிழைகாண் டற்கு

மேதகு புலவர் யாரோ

வென்றுதான் மிகவுஞ் சோர்ந்தான்

றாதையா லெமக்கு யாதுந்

தருபவ னிருக்கின் றானே

யாதலா லவன்பாற் சென்றே

யறிகுயான் வழியீ தென்றே. 12

சீலமா தவமார் வேந்தன்

றிடமுறு மனத்தோ னாகி

யாலவா யுடைய பெம்மா

னாலய மடைந்து போற்றி

யாலமே யமுதாக் கொண்ட

வையனே யோலந் தூலா

தூலனே யோலஞ் சோம

சுந்தரா வோல மோலம். 13

வேறு

அறிவு மவனு மறிவுமறி

பொருளு மொருநீ யன்றேயோ

செறியு முயிரு முடலுமொரு

பொருளு மான சிவபரனே

நெறியி னியலை யறியேற்கு

நீயே யன்றோ நெறியாகிப்

பெறிய பொருளி னுரையறிய

வருள்வா யெங்கள் பெருமானே. 14

மருளுறு மனத்தே னுக்கு

வாய்ந்திடு துணையா நீயே

பொருளினூ றந்தா யையா

வதன்பொருள் பொருத்தக் காண்பா

ரொருவரு மின்மை யாலே

யுளறுவார் புலவோர் யாரு

மருவுரு வான நீயே

யதற்குமோ ருபாயஞ் சொல்லே. 15

என்னா வின்ன பலகூறி

யேந்த லிரக்க விவற்கிரங்கி

மின்னா விடமும் பலபணியும்

விடையுஞ் சடையு மில்லவனாய்ப்

பொன்னார் பலநூற் றுறையறிவும்

புலவோ னொருவன் போலுருவாய்

மன்னா னவற்கு முன்னாக

வந்தே பெருமான் வகுத்துரைப்பான். 16

பொருவி லரசே தனாட்டிகனாம்

புனித வணிக கலதிலக

னொருவ னுளனா லவன்மனையா

ளொருத்தி குணசா லினியென்பாள்

மருவு மிவர்க ளிருபேரும்

வலிய பெரிய தவமாற்றி

யரிய முருகன் றமதுமக

னாகும் படிவே டினராமே. 17

சேயோ னவர்க்கும் மகன்போலச்

சென்றே யவர்பா லுறைவானா

மாயோன் சிவந்தத கண்ணுடையோ

ளையான் டினன்புன் மயிராளன்

றூயோ னெதுவு மொழிபுகலான்

றொடரும் பெரும்பே ரறிவாளன்

மேயோ னிடத்து நீயேகி

வேண்டி யழைத்துக் கொடுவந்தே. 18

வேறு

வெள்ளைப்பட் டாடை சாத்தி வெள்ளிய சாந்தும் பூவும்

கொள்ளத்தா னணித்து மேலாங் கோலங்கள் பலவுஞ் செய்தே

எள்ளற்கே யரிய சங்கப் பலகைமே லேற்றி வைத்து

மெள்ளத்தான் பொருளி னூலை வினாவுதி வினாவும்போது. 19

மெய்யுரை தோன்றத் தோன்ற விழியினீ ருதிரா நிற்கும்

மெய்யுறு புளகங் காணும் வேந்தனே யறிதி யென்றே

பொய்யுறு வெடுத்து வந்த புலவனார் மறைந்து போனார்

துய்யரா யங்கு நின்றோர் சுந்தர னாடல் கண்டே. 20

விம்மித முடைய ராகி வேண்டியே தொழுது போற்றி

யம்மல ரயனு மாலு மறிவதற் கரிய சோதி

யெம்முன முருவ மாக வெய்தவு மிறையோ னென்ற

செம்மையின் குறிப்பி னாலுந் தேர்ந்திடப் பெற்றி லேமே. 21

ஐயனே யால வாயி லமுதமே யடிய ரேங்க

ளுய்யவே வெளியா வந்தா யொழிப்பது முறையோ வென்னாச்

செய்யசீ ரனந்த நாமஞ் செப்பியே வணங்கி னார்பின்

துய்யபே ரருளார் சோம சுந்தரன் சொன்ன வாறே. 22

பாண்டிமன் னவனும் மேலாம் பாவலர் பலரு மாக

ஈண்டுசீ ரினையோன் மேவு மிடத்தினை யடைந்து போற்றி

வேண்டியே தாங்கள் வந்த காரியம் விளம்ப மேலோ

னாண்டவருடனே சென்றானனேகர்வந்திறைஞ்சினாரே. 23

கந்தரங் கறுத்தோ னிட்ட கட்டளைப் படியே யாதும்

பந்தம தில்லார் சங்கப் பலகையைச் சிங்கா ரித்தே

விந்தைசேர் பாலனாரை வீற்றிருந் திடவே வேண்டித்

தந்தம துரையைக் கூறிச் சரிபிழை யாய்ந்திட் டாரே. 24

புலவரொவ் வொருவ ராகப் பொருளுரை புகல வேலோன்

சிலருரை கேளான் போலச் சிந்தைவே றாக வுற்றான்

சிலருரை கேட்டுச் சற்றே சிரித்தனன் கபிலன் வாக்கிற்

பலமுறு பரணன் வாக்கிற் பலவிட மகிழ்ந்திட் டானே. 25

கீரனாம் புலவர் கோமான் கிளத்திடும் போது யாதுஞ்

சோரிலார் சொற்க டோறும் பொருட்சுவை தோன்றத் தோன்ற

ஆரவே கண்ணி னின்று மானந்த வருவி வீழத்

தீரனார் புளகங் காட்டி மெய்யுரை தெரித்திட் டாரே. 26

புலவர்கள் யாரும் வேந்தும் பொருளுரை மெய்கண் டோமென்

றலகிலா னந்தங் கொண்டா ரதன்பின்னே யருளார் மேனி

யிலகுவள் ளுவனார் வாக்கை யின்புறீஇச் சங்க மேவி

யுலகினிற் றமிழின் மாற்ற முயர்ந்திட நிறீஇயி னானே. 27

பற்றினார் பரவ வந்த பாலகன் பலரு மங்கே

தெற்றென வதிச யிக்கத் திருவுருக் கரந்து சென்றா

னுற்றிடு மாடல் கேட்ட வும்பரோ டிம்ப ரானோர்

கொற்றமா ருரைதி ருத்துங் குமரனைப் போற்றி னாரே. 28

க. வைத்தியலிங்கம்பிள்ளை

வண்ணை வைத்தீசர் ஒருதுறைக் கோவை

நாணிக்கண் புதைத்தல்

மருவலர் தாழும் வயித்தீ சுரர்தம் வயங்குவண்ணைக்

குரவலர் சூடுங் குயிலே பெருந்தனங் கொண்டிருந்துந்

திருவில ராகிய லோபிகள் போலத் திருமனைமாட்

டிரவலர்க் காண்கில னென்னோ நும்மீகை யெழினலமே. 1

அக்கணி கொன்றை யராப்புனைந் தோனுத லம்பகத்தான்

மக்களை யீந்தவன் வாலாம் பிகைபங்கன் வண்ணையன்னீர்

இக்கினை வென்ற ரசமா துளங்கனி யிங்கிருக்க

மிக்கசெம் மாவடு மூடிவைத் தீரிது வெள்ளறிவே. 2

சிலையின்றி நின்றவ னோடுமற் போரினைச் செய்தவன்சேர்

கலையொன்றி னார்புகழ் வண்ணையன் னீர்கரிக் கன்றொடுவாள்

மலையொன்று சீயக் குருளைவிட் டேகுற மாதெனுநீர்

வலையின்றி மீன்படுத் தீருமைப் போலெவர் வல்லரே. 3

தடியென மான்முது கென்பினைத் தாங்கிய சாமியின்றே

குடியென நஞ்சைக் கொடுத்தவன் போல்வண்ணைக் கோதைநல்லீர்

இடியென வாரும் பயந்தேகு மாலத்தை யேந்திநின்றீர்

துடியென னேரிடை நீரோநல் லாலல சுந்தரரே. 4

குலப்பதிவேட்டுவன் கண்ணணிநாதன் குறைவில்வண்ணை

அலப்பறு வேல்விழி யாளே யிறையவ னாரளித்த

உலப்பறு காவியத் தோடுநின் றீரிஃ துண்மையினிச்

சிலப்பதிகாரத்தைப் பார்ப்பேனெப்போதுஞ் சிறுநுதலே. 5

கன்னரை மானு மிருபான் புயங்கொண்ட கள்வனைமுன்

மின்னிரை யென்ன வெயிறுகத் தாள்கொடு வீழ்த்தியட்ட

பொன்னிரை வேணி வயித்தீசர் வண்ணைப் புணர்முலையீர்

பன்னிரு கண்படைத் தீருமை வேளென்று பன்னுவரே. 6

மாதக லாரழன் மல்லாகத் தார்வயித் தீசர்வண்ணைக்

காதக லாவடி வேல்விழி யாயென்ன காரணமோ

சாதக லாவுடு வில்லாரக் கைதடி சார்ந்தொளித்தார்

சூதக லாவல்லு வெட்டியர் தாந்தும்பை சூடினரே. 7

உலகணி வைத்த வயித்தீசர் வாழு முயர்வண்ணைசேர்

இலகணி வைத்த முலையணங் கேயுங்க ளில்லமதில்

அலகணி வைத்த கலசநற் றூண மமைத்தொளிசேர்

பலகணி வைத்தில ரீதென்ன சூது படாமுலையே.

கருமானை நூறித் தைத்தியர் மூவெயில் காய்ந்துவரை

தருமானை மேவு பரன்வண்ணை யீரன்று தாசரதி

ஒருமானைப் பற்ற வியலாது கோறின னோங்கியுகழ்

இருமானைக் கைப்படுத் தீருமக் காரிணை யிந்நிலத்தே. 8

கரியாரைத் தாக்கி யடக்கிய நாதன் கருதுமறைப்

பரியாரை யுய்த்த பரன்வண்ணை யீர்ப்ப னுற்றபத்ர

கரியாரைக் கண்டனன் முந்நீர் கையுற்றுக் கிளர்பட்டினப்

பெரியாரைக் கண்டிடி லோவாத வின்பம் பிறங்கிடுமே. 9

____________________________________________________

புலவர் அகராதி

பக்க எண்

அகிலேசபிள்ளை திருக்கோணமலை 1853-1910 252

அசனாலெப்பைப் புலவர் யாழ்ப்பாணம் 1870-1918 294

அப்துல்காதிறுப் புலவர், அருள்வாக்கி தெல்தோட்டை 1866-1918 290

அப்துல்லாப் புலவர் யாழ்ப்பாணம் 503

அப்துல் றகுமான் நாவலப்பிட்டி 1846-1920 300

அப்பாச்சாமி ஐயர் 505

அப்பாத்துரைப்பிள்ளை நவாலி 508

அம்பலவாண நாவலர் சித்தன்கேணி 1855-1932 342

அம்பிகைபாகர் இணுவில் 1854-1904 241

அரசகேசரி நல்லூர் 64

அலாவுதீன், செய்கு, புத்தளம் 1890-1938 376

அழகசுந்தரதேசிகர் 510

ஆபிரகாம் உரும்பராய் 1936 514

ஆறுமுக உபாத்தியாயர் உடுப்பிட்டி 1857-1955 479

ஆறுமுக நாவலர் நல்லூர் 1822-1879 184

ஆறுமுக நொத்தாரிசு 516

ஆறுமுகம், க.திருக்கோணமலை 1806 142

இராமலிங்கச் சட்டம்பியார் புங்குடுதீவு 1870 195

இராமலிங்கம் சுதுலை -1885 190

இராமலிங்கம்பிள்ளை, வே.க.வேலணை 1868-1918 276

இராமலிங்க முனிவர் அராலி 1649- 106

ஏரம்பையர் மாதகல் 1847-1914 266

கணபதி ஐயர் வட்டுக்கோட்டை 1709-1784 116

கணபதிப்பிள்ளை, வ. புலோலி 1845-1895 191

கணபதிப்பிள்ளை அல்வை 338

கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார் கொக்குவில் 1860-1930 335

கணேசையர், வித்துவசிரோமணி புன்னாலைக்கட்டுவன் 1878-1959 590

கதிரைவேற்பிள்ளை, கு. உடுப்பிட்டி 1829-1904 240

கதிரைவேற்பிள்ளை, நா. புலோலி 1874-1907 242

கந்தப்பிள்ளை நல்லூர் 1766-1842 158

கந்தப்பிள்ளை வேலனை 1840-1914 261

கந்தமுருகேசனார் புலோலி 1902-1965 497

கந்தையபிள்ளை, சிற், நல்லூர் 1879-1958 482

கரைசைப் புலவர் கரைசை 1857-1916 269

கவிராசர் திருக்கோணமலை 45

கனகசபைப் புலவர் அளவெட்டி 33

கார்த்திகேயப் புலவர் காரைநகர் 1829-1873 172

கீத்தாம்பிள்ளை மாதோட்டம் 1819-1898 209

குமாரசுவாமிப் புலவர், வ.புலோலி -1925 319

குமாரசுவாமி முதலியார் வல்லுவெட்டி 1791-1874 174

கூழங்கைத் தம்பிரான் யாழ்ப்பாணம் 1699-1795 120

சசகவீரன் 39

சுங்கரசுப்பிரமணியர், வட்டுக்கோட்டை 1864-1944 521

சங்கரபண்டிதர் நீர்வேலி 1821-1871 169

சதாசிவ ஐயர், முகாந்திரம் 1882-1950 439

சதாசிவ பண்டிதர் வண்ணார்பண்ணை -1887 197

சதாசிவம்பிள்ளை மானிப்பாய் 1820-1896 201

சந்திரசேகர பண்டிதர் உடுவில் 1800-1879 190

சந்திரசேகத பண்டிதர் நல்லூர் 1785- 138

சபாபதி நாவலர் வடகோவை 1843-1903 235

சபாரத்தின முதலியார், ச. கொக்குவில் 1858-1922 307

சரவணபவன், ப.கு. நயினாதீவு 1909-1949 434

சரவணமுத்து, வித்துவான் மட்டக்களப்பு 1882-1929 324

சரவணமுத்துப்பிள்ளை ஊரெழு 1848-1916 268

சரவணமுத்துப்பிள்ளை, தி.த. திருக்கோணமலை 212

சரவணமுத்துப்புலவர் நல்லூர் -1845 160

சிதம்பரநாதன் வட்டுக்கோட்டை 1890-1932 521

சிலம்புநாதப்பிள்ளை கொக்குவில் 529

சிவசம்புப் புலவர் உடுப்பிட்டி 1852-1910 244

சிவசுப்பிரமணிய சிவாசாரியார் வட்டுக்கோட்டை 532

ஞானப்பிராகாசர் 1625- 538

ஞழனப்பிராகாசர், சுவாமி. மானிப்பாய் 1875-1947 419

தம்பிமுத்துப் புலவர் அச்சுவேலி 1857-1937 358

தம்பு உபாத்தியாயா சரவனை 1863-1943 406

தாமோதரம்பிள்ளை, சி.வை.சிறுப்பிட்டி 1832-1901 221

தியாகராசா, வே, தா. 542

திருஞானசம்பந்த உபாத்தியாயர் 1838-1906 241

திருஞானசம்பந்தப்பிள்ளை நல்லூர் 1849-1901 224

துரையப்பாபிள்ளை, பாவலர். தெல்லிப்பழை 1872-1929 322

தொம்பிலிப்பு தெல்லிப்பழை 91

நடேசபிள்ளை, இலக்கியகலாநிதி, சுன்னாகம் 1895-1965 497

நமச்சிவாயப் புலவர், அச்சுவேலி 1749 122

நமச்சிவாயப் புலவர், மல்லை 1860-1942 395

நல்லதம்பி, முதுதமிழ்ப்புலவர் வட்டுக்கோட்டை 1896-1951 443

நவநீதகிருட்டிண பாரதியார், மாவை 1889-1954 462

நாகமணிப்புலவர், நயினாதீவு 1891-1933 345

நாகமுத்துப் புலவர், காரைநகர் 1857-1939 377

நாகலிங்கம்பிள்ளை, சி.வதிரி 1882-1952 450

நாகேசஐயர், வட்டுக்கோட்டை 1809-1857 168

பக்கீர்ப் புலவர், எருக்கலம்பிட்டி 1862-1917 275

பஞ்சாட்சரக் குருக்கள் ச. காரைநகர் 1889-1953 451

பண்டிதராசர் திருக்கோணமலை 27

பரமானந்தப் புலவர், நல்லூர் 181

பரராசசேகரன், நல்லூர் (1478-1920) 50

பிராஞ்சிசுப் புலவர், வயாவிளான் -1802 124

பீதாம்பரப் புலவர், நீர்வேலி -1819 144

பூதன்றேவனார், ஈழம் கி.பி. 130 3

பூபாலபிள்ளை, புளியந்தீவு 1855-1920 304

பூலோகசிங்க முதலியார் (அருளப்ப நாவலர்) தெல்லிப்பழை 1680 101

பேதுருப் புலவர், தெல்லிப்பழை 1647 85

பொன்னம்பலப்பிள்ளை, மாவை 1891 191

பொன்னம்பலப்பிள்ளை, ந.ச. நல்லூர் 1836-1897 203

பொன்னம்பலப்பிள்ளை, ச. சாவகச்சேரி 1862-1942 399

போசராசபண்டிதர்

(தேனுவரைப் பெருமாள்) தம்பதேனியா 1310 11

மகாலிங்கசிவம், பண்டிதர் மாவை 1891-1941 392

மயில்வாகனப் புலவர் மாதல் 1779-1816 129

மயில்வாகனப் புலவர் வறுத்தலைவிளான் 1875-1918 279

மாணிக்கத் தியாகராசா, பண்டிதர் உடுவில 1877-1945 414

முத்துக்குமர ஆச்சாரிய சுவாமிகள் வறுத்தலைவிளான் 1883-1937 365

முத்துக்குமாரசாமிக் குவிராசர் மயிலணி 1780-1850 161

முத்துக்க்குமாரர் வட்டுக்கோட்டை 1779 123

முத்துக்குமாருப் புலவர் அராலி 1827 73

முத்துராச கவிராயர் நல்லூர் (1604-1619) 73

முருகேச பண்டிதர் சுன்னாகம் 1830-1900 518

வயித்தியலிங்கபிள்ளை வல்வை 1852-1901 230

வரத பண்டிதர் சுன்னாகம் 1656-1716 95

விசுவநாதசாத்திரியார் அராலி 1836 154

விநாயகமூர்த்திச் செட்டியார் வண்ணர்பண்ணை 1876 176

விபுலாநந்த அடிகள் மட்டக்களப்பு 1892-1947 420

வீரக்கோன் முதலியார் தம்பலகமம் 1866 104

வேலுப்பிள்ளை, ஆசுகவி வயாவிளான் 1860-1944 409

வேலுப்பிள்ளை, வி. வடகோவை 1860-1945 417

வேற்பிள்ளை, ம.க. மட்டுவில் 1846-1930 326

வேன்மயில்வாகனப் புலவர் அச்சுவேலி 1865-1912 260

வைத்தியநா முனிவர் அளவெட்டி 72

வைத்தியலிங்கம்பிள்ளை, க. 549

வையா யாழ்ப்பாணம் 70

_______________

நூல் அகராதி

அட்டகிரிப்பதிகம் 454

அடைக்கலங்கோவை 169

அமுதாகரம் 95

அர்ச்.யாகப்பர் அம்மானை 85

அரிகரதாரதம்மியம் 224

அரிநாம தோத்திரம் 382

அருணாசல மான்மியம் 342இ 399

அருளம்பலக்கோவை 174

அல்வாய் முத்துமாரியம்மை பிள்ளைத்தமிழ் 477

அல்வாய் விநாயகர் ஊஞ்சல் 477

அல்வாய் விநாயகர் பதிம் 477

அழகர்சாமி மடல் 172

அனிருத்த நாடகம் 122

ஆங்கிலவாணி 420

ஆத்மலட்சாமிர்த மருந்து 395

இணுவை அந்தாதி 241

இணுவைப் பதிகம் 279

இணுவைப் பதிற்றுப்த்தாந்தாதி 279

இதோபதேச கீதரச மஞ்சரி 322

இந்திரகுமார நாடகம் 174

இந்திரசேனை நாடகம் 191

இரகுவமிசச் சுருக்கம் 191

இரகுவமிசம் 64

இரட்சகப் பதிகம் 124

இரத்தினவல்லி விலாசம் 158

இரமணமகரிசி பஞ்சரத்தினம் 382

இராம நாடகம் 153

இராமநாத மான்மியம் 399

இ‘மவிலாசம் 158இ 180

இராமொதந்தம் 309

இருது சங்கர காவியம் 439

இலுய்பைக்கடவை கட்டாடிவயல் சுப்பிரமணியர் விருத்தம் 335

இலுப்பைக்கடவை கட்டாடிவயல் பிள்ளையார் விருத்தம் 335

ஈப்போ தண்­ர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை 385

ஈழமண்டல சதகம் 326, 338

உரும்பராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை 409

உலகியல் விளக்கம் 462

உவ்வை வாசக உறுதி போதகம் 365

ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம் 395

எட்டிகுடிப் பிரபந்தம் 244

எத்தாக்கியார் நாடகம் 471

எம்பரதோர் நாடகம் 139

எருசலை அந்தாதி 514

எருமை நாடகம் 139

ஏகவிருத்த பாரதாதி 309

ஏகாதசிப் புராணம் 95

ஏசுமத நிராகரணம் 235

ஏரோது நாடகம் 158

ஐம்புல வேடக்கும்மி 454

ஓழுக்க மஞ்சரி 382

ஓமையந்தாதி 529

கஞ்சன் காவியம் 123

கட்டளைக் கலித்துஐற 221

கண்டி நாடகம் 158

கண்ணகி வழக்குரை காவியம் 39

கதிர்காம சுவாமி கீர்த்தனம் 409

கதிர்காம சுவாமி பதிகம் 409

கதிர்காம புராணம் 450

கதிர்காம முருகன் திருப்பள்ளி எழுச்சி 521

கதிர்காம முருகன் திருவூஞ்சல் 521

கதிர்காம முருகன் பிள்ளைத் தமிழ் 521

கதிர்கம முருகேசர் ஆறாதார சடாட்சர அந்தாதி 365

கதிர்காம திருவருட்பா 241

கதிர்காம வேலர் தோத்திர மஞ்சரி 324

கதிரைச் சிலேடை வெண்பா 454

கதிரை நான்மணிமாலை 382

கதிரைமலைப் பள்ளு 59

கதிரைமலை வேலவர் பதிகம் 454

கதிரை யாத்திரை விளக்கம் 176

கந்தசட்டிப் புராணம் 532

கந்தர் கலிப்பா 542

கந்தவனக்கடவை நான்மணிமாலை 454

கந்தவனநாதர் ஊஞ்சல் 174

கந்தவனநாதர் திருப்பள்ளி எழுச்சி 454

கந்தவனநாதர் பதிகம் 244

கப்பற் பாட்டு 195

கரவை வேலன் கோவை 108

கருங்குயிற்குன்றத்துக் கொலை நாடகம் 471

கல்லுண்டாய் வைரவர் பதிகம் 454

கல்வனை அந்தாதி 108

கவணாவத்தை வைரவரூஞ்சல் 266

கனகிசயமரம் (கனகி புராணம்) 198

காசியாத்திரை விளக்கம் 129

காந்தரூபி 462

காரைநகர்த் திண்ணபுர வந்தாதி 209

கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி அந்தாதி 307

" " தோத்திரம் 307

" " மும்மணிக்கோவை 307

" " வெண்பா 307

கிளைவிடு தூது 95, 138

கீர்த்தனத் திரட்டு 124

குடந்தை வெண்பா 218

குதுபுநாயகர் நிறியாண மான்மியம் 534

கும்பிளாவளைப் பிள்ளையார் கீர்த்தனங்கள் 395

குருவணக்க மணி மாலை 519

துவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல் 266

கூழங்கையர் வண்ணம் 120

கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம் 195

கைலாயமாலை 73

கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை 307

கோவலன் நாடகம் 122

சகுந்தலை வெண்பா 497

சங்களையந்தாதி 190

சங்கிலியன் நாடகம் 471

சடாட்சர தியாணமாலை 365

சந்தத் திருப்புகழ் 290

சந்தான தீபிகை 106

சந்திரகாச நாடகம் 158

சந்திரசேகர விநாயகரூஞ்சல் 218

சம்நீக்கிலார் நாடகம் 158

சரசோதிமாலை 12

சரந்தீவு மாலை 300

சரநூல் 376

சரவணபவ மாலை 307

சன்மார்க்க அந்தாதி 358

சன்மார்க்க சதகம் 358

சனி துதி 272

சனி வெண்பா 324

சாகும் கமீது ஆண்டகையவர்கள் பேரில் முனாஜாத்து 294

சாணக்கிய நீதி வெண்பா 309

சாதி நிர்ணய புராணம் 230

சிங்கைநகரந்தாதி 197

சிங்கைவேலன் கீர்த்தனைகள் 395

சித்திரகவி 191

சித்திரவேலாயுதர் காதல் 104

சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலை 120

சிதம்பர சபாநாத புராணம் 235

சிதமபரப் பதிகம் 276

சிந்தாமணி நிகண்டு 230

சிவகர்ணாமிர்தம் 235

சிதம்பரப் பதிகம் 276

சிந்தாமணி நிகண்டு 230

சிவகர்ணாமிர்தம் 235

சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் 122

சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம் 242

சிவஞான தத்துவ தீபம் 365

சிவத்தோத்திரக் கவித்திரட்டு 309

சிவதோத்திரக் கீர்த்தனை 180

சிவதோத்திர யமக அந்தாதி 395

சிவபெருமான் அலங்காரம் 354

சிவமணி மாலை 322

சிவராத்திரிப் புராணம் 95

சிறுவர் செந்தமிழ் 454

சீமந்தனி நாடகம் 167

சீமந்தனி புராணம் 304

சுப்பிரமணிய பராக்கிரமம் 242

சுன்னாகம் ஐயனார் ஊஞ்சல் 161

செகராசசேகரம் 17

செகராசசேகர மாலை 21

செந்தில் யமகவந்தாதி 244

செல்வச்சந்நிதி முறை 230

செழுங்கதிர்ச் செல்வம் 462

சைவ மகத்துவம் 221

ஞான அகீதாக் கும்மி 300

ஞானக் கும்மி 161

ஞானப் பள்ளு 79

ஞானாலங்காரரூப நாடகம் 129

ஞானானந்த புராணம் 91

தக்கணகைலாச புராணம் 450

தக்கிணகைலாச புராணம் (கோணாசல புராணம்) 27

தசவாக்கிய விளக்கப்பதிக• 124

தண்டிகைக் கனகராயன் பள்ளு 125

தத்தைவிடுதூது 212

தருமபுத்திர நாடகம் 153

தாலவிலாசம் 454

திண்ணபுரத் திருப்பதிகம் 377

திண்ணபுர வெண்பா 451

தியானயோக சரவணபவமாலை 365

திரிகோணமலை அந்தாதி 142

திருக்கரைசைப் புராணம் 45

திருக்கோணேசர்மலைக் குறவஞ்சி 160

திருக்கோணைநாயகர் குறவஞ்சி 160

திருக்கோணைநாயகர் பதிகம் 252

திருச்சதகம் 201

திருச்சிற்றம்பல யமகவந்தாதி 101

திருத்தில்லைப் பல்சந்தமாலை 209

திருத்தில்லை நிரோட்ட யமகவந்தாதி 417

திருநபிக் கவிதைகள் 503

திருநல்லைக் கோவை 371

திருநாகதீபப் பதிகம் 406

திருநாகை நிரோட்ட யமகவந்தாதி 294

திருநாவலூர் மான்மியம் 342

திருப்பனை யந்தாதி 497

திருவாக்குப் புராணம் 172

திருவாசகம் 124

திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி 235

திருவேரக யமகவந்தாதி 244

தீருவிற் சுப்பிரமணியர் பதிகம் 174

துணைவைப் பதிகம் 279

தெல்லிப்பழை சிவகாமியம்மன் பதிகம் 365

தேர் வெண்பா 268

தேவசகாயம்பிள்ளை நாடகம் 167

தேவி தோத்திர மஞ்சரி 439

நகுலகிரிப் புராணம் 505

நகுலமலைப் குறவஞ்சி 154

நகுலாசல புராணம் 266

நகுலேசுவரர் விநோத விசித்திரக் கவிப்பூங்கொத்து 279

நடராசர் பதிகம் 161

நயினை நாகாம்பிகை பதிகம் 434

நயினை நிரோட்ட யமகவந்தாதி 345

நயினை மான்மியம் 345

நல்லைக்கந்தர் கீர்த்தனம் 181

நல்லைக்கந்தத ரகவல் 181

நல்லைக் கலித்துறை 174

நல்லைக் கலிவெண்பா 120

நல்லைக் குறவஞ்சி 134

நல்லைச் சண்முகமாலை 382

நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம் 382

நல்லைநகர்க் குறவஞ்சி 158

நல்லை நான்மணிமாலை 307

நல்லையந்தாதி 134

நல்லை வெண்பா 134

நல்வழி 503

நவரத்தினத் திருப்புகழ் 290

நவவண்ணக் கீர்த்தனை 376

நவாலியூர் வன்னியசேகரன் பள்ளு 454

நளச்சக்கரவர்த்தி விலாசம் 190

நன்னெறி மாலை 201

நாகேசுவரி தோத்திரம் 266

நாகைத் திருவிரட்டை மணிமாலை 406

நாச்சியார் மாலை 300

நாமகள் புகழ்மாலை 454

நாராயண பரத்துவ நிரசனம் 224

நாவலர் சற்குரு மணிமாலை 342

நாவலர் பதிகம் 382

நாவலன் கோவை 497

நில அளவைச் சூத்திரம் 180

நீதி சாரம் (நீதி சாத்திரம்) 266

நீதிநூறு 218

நீர்வைச் சிலேடை வெண்பா 495

நீர்வை நாட்டு வளம் 495

நீர்வை வெண்பா 144

நீராவிக் கலிவெண்பா 144

நீராவிக் கலிவெண்பா 134

நெல்லியவோடை அம்மாள் பிள்ளைக்கவி 159

நெல்லை வேலவருலா 160

நொண்டி நாடகம் 122, 139.

பச்சாத்தாபப் பதிகம் 124

பசுபதீசுரர் அந்தாதி 354

பஞ்சவர்ணத் தூது 122

பத்திரகாளியம்மை ஊஞ்சல் 116

பதாயிகுப் பதிற்றுத் திருக்கந்தாதி 294

பதார்த்த தீபிகை 218

பதுமாபதி நாடகம் 167

பரராசசேகரம் 52

பரானந்த தற்பர மாலை 417

பழமொழிப் பிரபந்தம் 106

பழமைப் பனுவல் ஐம்பானைந்து 382

பறம்புமலைப் பாரி 462

பறாளை விநாயகர் பள்ளு 108

பன்றிமலையரசன் கோவை 399

பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை 244

பாலர் பாடல் 382

பாலாமிர்தம் 271

பாவலர் சரித்திர தீபகம் 201

பாற்கரசேதுபதி இரட்டைமணிமாலை 244

பாற்கரசேதுபதி கல்லாடக் கலித்துறை 244

பாற்கரசேதுபதி நான்மணிமாலை 244

பிராத்தனைப் பத்திரிக்கை 365

பிள்ளைக்கவி 124

பிள்ளையார் கதை 95

புத்திளஞ் செங்கதிர் 462

புதுச்சந்நிதி முருகையன் பதிகம் 180

புதுவை ஸ்ரீ மணக்குள விநாயகர் ஒருபாவொருபஃது 482

புயற்பாட்டு 195

புலியூர் அந்தாதி 272

புலியூர்ப்புராணம் 272

புலியூர் யமகவந்தாதி 129

புலோலி நான்மணிமாலை 244

புலோலிப் பர்வதவர்த்தினியம்மை தோத்திரம் 326

புலோலி வயிரவக்கடவுள் தோத்திரம் 326

பெரியபுராணக் கீர்த்தனை 495

மணித்தாய்நாடும் மரதனோட்டமும் 443

மணிவாசகர் சரிதாமிர்தம் 365

மதங்க சூளாமணி 420

மதனவல்லி விலாசம் 180

மதுமானிடக்கும்மி 382

மதுவிலக்குப்பாட்டு 382

மயிலணி ஊஞ்சல் 218

மயிலணிச் சிலேடை வெண்பா 218

மயிலணிப்பதிகம் 218

மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம் 279

மயிலை மும்மணிமாலை 279

மருதடி அந்தாதி 508

மருதடி விநாயகர் பாமாலை 454

மறைசை அந்தாதி 108

மறைசைக் கலம்பகம் 144

மறைசைத் திருப்புகழ் 144

மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா 241

மாணிக்கவாசகர் விலாசம் 190

மாதகற் பிள்ளையா ரூஞ்சல் 266

மாமாங்கப் பிள்ளையார் பதிகம் 324

மாவைக் கந்தரஞ்சலி 409

மாவைச் சுப்பிரமணிய சுவாமி தோத்திரம் 409

மாவைப் பதிகம் 279இ 309

மாவை மும்மணிமாலை 371

மாவையந்தாதி 191இ 235

முகியிதீன் ஆண்டகையவர்கள் பேரில் ஆசிரியவிருத்தம் 294

முப்பாநூற் சுருக்கம் 417

முத்தபஞ்ச விஞ்சதி 161

முன்னைநாதசுவாமி நவதுதி 414

முன்னைநாதசுவாமி வடிவழகம்மை ஆசிரியவிருத்தம் 307

மூவிராசர் வாசகப்பா 124

மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல் 174

மேகதூதக் காரிகை 309

யாழ்ப்பாண சுவதேசக் கும்மி 322

யாழ்ப்பாண வைபவம் 129

யேசுமத பரிகாரம் 161

யோசேப்பு புராணம் 120

யோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த்து 482

வசந்தன் கவித்திரட்டு 439

வசந்தன் பாடல்கள் 265

வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளியம்மை பதிகம் 116

வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை 269

வடிவேலர் ஊஞ்சற் பதிகம் 382

வடிவேலர் திருவருட்பத்து 382

வடிவேலர் திருவிருத்தம் 382

வண்ணைக் குறவஞ்சி 154

வண்ணைத் திருமகள் இரட்டைமணிமாலை 382

வண்ணைத் திருமகள் பதிகம் 382

வண்ணைநகரந்தாதி 197

வண்ணைநகரூஞ்சல் 197

வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் 382

வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி 116

வண்ணை வைத்தீசர் ஒருதுறைக் கோவை 549

வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் அந்தாதி 490

" " இருபாவிருபஃது 490

" " ஊஞ்சல் 490

" " கலிநிலைத்துறை 490

" " கலிவெண்பா 490

வல்லான் காவியம் 538

வல்லிபுரநாதர் பதிகம் 144, 244

வல்வை வயித்தியேசர் பதிகம் 230

வலைவீசு புராணம் 123

வழிநடைச் சிந்து 376

வாளபிமன் நாடகம் 116

விக்கிநேசுரர் பதிகம் 180

விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் 252

விநாயக மான்மியம் 304

விநாயகரகவல் 279

வியாக்கிரபாத புராணம் 72

வில்கணியம் 191

வீமன்காமம் காமாட்சியம்மை ஊஞ்சல் 365

வீமன்காமம் காமாட்சியம்மை பதிகம் 365

வீரகத்தி விநாயகர் இரட்டை மணிமாலை 451

வீரபத்திரர் சதகம் 180

வீரமாகாளியம்மன் பதிகம் 180

வெல்லையந்தாதி 201

வேணுவனலிங்கோற்பவம் 342

வேதாகமவாத தீபிகை 224

வேலனை மகாகணபதிப்பிள்ளையார் திருஊஞ்சல் 261

வையபாடல் 70

வைரவர் தோத்திரம் 279

_______________________

அக்கணமே 47

அக்கணி 549

அக்காரை 397

அக்கைசிவ 512

அகத்தியந் 534

அகமாயத 210

அகரமேயெழு 102

அகிலசரா 307

அங்கணுல 421

அங்கவர் 102

அங்கியின் 187

அஞ்சக்கரத்தரரி 417

அஞ்சக்கரத்தனயன் 258

அஞ்சன 474

அஞ்சிறைய 425

அடங்குங் 300

அடங்குங் 468

அடலரியே 422

அடித்த 343

அடிநாக 508

அடிப்பது 411

அடியனேன் 414

அடியார்க் 515

அடைக்கலங் 42

அடையுமோரை 107

அண்டகோள 79

அண்டபகி 84

அண்டர்பிரா 60

அண்டர்பிரா 46

அண்டர்புரோ 26

அண்டரிற் 338

அணிகெழு 445

அணிகொள் 532

அணியார 447

அணையாவடை 283

அணையும் பிதா 211

அணைவியை 396

அத்தா 343

அத்திமா 538

அத்திமுதற் 215

அத்திருச்ச 274

அதிகபாவிக 62

அதிரவரு 431

அந்தகனோ 481

அந்தணர் முத 320

அந்தணர்க்கு 219

அந்தணராதியர் 264

அந்தமாதி 81

அந்தமிலா 53

அந்தமுமாதி 22

அந்தரந் தரு 296

அந்தரமுக 535

அந்தியத் 480

அந்தோதவறு 217

அந்தோவிசை 215

அந்நாயன் 397

அநகனாகிய 315

அநும 316

அப்பதியத 48

அப்பெருங் 352

அம்பலம்புக 348

அம்பலவன் 451

அம்புவியை 252

அம்பொனூபுர 65

அம்மெநின் 408

அம்மையே 452

அம்மொழி 47

அமலர்கேதீச் 328

அமிழ்தினு 543

அமைத்த பொன் 30

அயல்வாயல 247

அயில்கொளு 507

அரகரசிவ 178

அரத்தம் 298

அரவுக்கிளர்ந் 7

அரிதான 380

அரிந்ததலை 539

அரியஞானி 237

அரியபல் 238

அரியயர 367

அருணவிக 189

அருணனொடு 471

அருந்தவர் 19

அருந்துதிக் 114

அருப்பாகில 66

அருமையூ 379

அருவியோதை 110

அருவை 519

அருள்பழ 519

அருள்பெரு 236

அருளாயனு 529

அருளினெலா 407

அல்லலுறு 91

அலைகடல் 276

அலைமோது 515

அவ்வியம் 357

அவந்தனி 280

அவநாடி 338

அவிர்புன் 285

அவைகெழு 272

அள்ளிநின் 528

அளவிலாநிதியுட 507

அளவிலாப்பாவ 277

அளிதங்கிய 347

அற்பகலா 394

அற்புதமான 530

அறந்தெரி 83

அறநெறி 272

அறியாமை 493

அறியுமவ 546

அறிவாற்ற 382

அறிவான் 371

அறிவுக்கறி 197

அறைசெயு 341

அன்பதுவே 243

அன்பினாற் 59

அன்றதாக 401

அன்றிழ 500

அன்தொட்டி 448

அன்றுரை 321

அன்றொரு 492

அன்னகர் 351

அன்னங்கொடு 524

அன்னசாலை 237

அன்னத்தொ 374

அன்னதன் 71

அன்னநடை 216

அன்னநடைபிடி 457

அன்னப்பெடை 192

அன்னமெனு 217

அன்னவரன் 38

அனனவன் 457

அன்னனி 66

அன்னைபெயர் 413

அன்னையெங் 533

அன்னோனிட 260

அனந்தகோடி 532

அனற்கண் 508

அனாதிசைவ 237

அனாதியாம் 194

அனைத்துல 172

ஆக்கநய 453

ஆகந்தர 453

ஆகமநால் 451

ஆகம நூறெரி 103

ஆங்கமரித 273

ஆங்கரும்பு 30

ஆங்கொருபே 46

ஆசியுரை 502

ஆட்டாதே 494

ஆட்டுமூச 113

ஆடகச்சிலம் 101

ஆடகத்தமை 47

ஆடவர்போல் 385

ஆடுமணி 523

ஆண்டு கொண் 153

ஆணாய்ப்பிற 216

ஆணையிது 37

ஆதலாலுலகி 107

ஆதலினது 274

ஆதலினால் ஐவமு 513

ஆதலினால் ஐவிர் 512

ஆதலினாற் பல 384

ஆதவன் 441

ஆதிசதுர் 441

ஆதிசதுர் 147

ஆதிசிவ 263

ஆதிநாட்ட 276

ஆதிநாதன் 80

ஆதியாத்துமி 274

ஆதியென் 304

ஆதியே போற்றி 140

ஆநந்தந் 202

ஆம்பல்பற் 274

ஆம்பெரு 18

ஆய்ந்த பல 405

ஆய்ந்தவம் 283

ஆய்ந்துவரு 404

ஆயிரங்கண் 220

ஆயிரத்தோ 447

ஆயுளைக் 54

ஆரணத்து 388

ஆரணமாகம 262

ஆரணமுழ 31

ஆராவமு 312

ஆரியத் 439

ஆரியமு 458

ஆரூரனில்லை 223

ஆரேனுந்தொழு 63

ஆலய 324

ஆலைதாதி 114

ஆலையார்ப் 536

ஆவணவோலை 202

ஆவணி 23

ஆவது 351

ஆவியாய 349

ஆவியொன்று 168

ஆவியோம் 419

ஆழமுற் 360

ஆழியோதை 3க்ஷ289

ஆளும்படி 493

ஆற்றல்சார் 231

ஆறுடனே 283

ஆறுதாங்கு 287

ஆறுமுக 333

ஆறெனும் பேத 231

ஆன்றநஞ் 167

ஆனந்த கூப 273

ஆனியிலாடி 175

ஆனைக்கு 313

இக்கரம் 247

இகவாழ் 340

இங்கித 330

இங்கென்னை 511

இங்கேதான் 42

இச்செயலா 271

இட்டமாக 128

இட்டமுடன் 41

இட்டமெத் 65

இட்டிடு 20

இட்ந்தால 130

இடந்தானு 242

இத்தகை 386

இத்திருநா 541

இந்தநாட் 399

இந்தநூற 266

இந்த மொழி 512

இந்திரசீலை 127

இந்திரன் 533

இந்திரனல் 263

இந்துநுதற் 212

இந்நிலத் 416

இந்நிலம்படை 81

இப்படியே 512

இமயத் 501

இயம்பிய 19

இயலிசை 210

இரசிதமா 54

இரப்பார் 249

இரலைதேர் 25

இரவிகுலத் 39

இருபத் 209

இருபாற்படு 343

இரும்புண் 115

இருவருஞ் 211

இருள்கொள் 463

இலக்கண 399

இலங்குமா 30

இலங்கைமா 70

இலங்கையிரா 114

இலங்கையின் 71

இலங்கையீச 494

இலங்கொளி 127

இவ்வாறு 513

இவையோரொ 58

இழுத்திடுங் 118

இழுதுறு 442

இளங்கோ 444

இளைத்தநூன் 67

இற்றைவரை 476

இறும்பினுச் 121

இறைசேரு 374

இறையவ 308

இன்பதுன்ப 466

இன்பெடுத் 246

இன்றுதொட் 201

இன்றே சென்று 6

இன்றேன் 297

இன்னங்கலை 51

இன்னதாக 402

இன்னமன 298

இன்னலின்றி 49

இன்னவீழ 402

இன்னும்புவி 539

இன்னோனர 542

இனிதா 493

ஈங்கிவர் 507

ஈசனடியை 220

ஈசனிடப் 478

ஈசனொருவ 220

ஈசனொளி 413

ஈட்டினா 401

ஈயாவுலோ 249

ஈழமதி 328

ஈனமதாய் 358

உச்சியிற் 277

உடலுயிர் 534

உடலுயிரைச் 369

உடன்பொ 355

உடைமணி 482

உண்டுடனே 57

உண்ணப் 419

உண்பதுவு 214

உத்தமமாக 55

அத்தமர்க 190

உதித்தே 366

உந்தியு 246

உம்பர் 410

அருவமிள 313

உரைத்தசக 11

உரைத்தவாணி 111

உரைபுகர் 15

உலகணி 550

உலகமனைத் 169

உலகமாதா 477

உலகமேத் 315

உலகியலை 510

உலகிற்பழ 443

உலகினில் 107

உலகுதனி 369

உலகுதொழு 540

உலகுயி 414

உலகெலாந்தன் 307

உலகெலாமாகி 186

உலகெலாமுணர் 276

உலகெலாமொரு 406

உவந்தா 249

உழைமுக 69

உள்ளக் 438

உள்ளவளே 44

உள்ளுமுயர் 445

உள்ளேன் 514

உற்றதோ 19

உற்றமணி 390

உற்றவர்க் 531

உற்றுழி 219

உறங்கி 43

உறைவெண் 373

உன்தங்கை 513

உன்றன் 470

உன்னடி 415

உன்னரு 401

உன்னற்கரி 255

உன்னாநினை 143

உனக்குப்பிற 117

உனையேகட 530

ஊட்டுசெஞ் 49

ஊரார்சுண 199

ஊருமிணமா 301

ஊரும்மதி 44

ஊன்கொடுத் 65

ஊனவேல் 505

எங்கும்மாம 62

எங்கும்வியா 478

எங்கோதை 249

எட்டுவய 511

எடுத்தனன் 533

எண்டிசை 80

எண்டிருத்து 24

எண்ணரிய 435

எண்ணருஞ் 351

எண்ணற் 465

எணங்கன் 539

எத்தனை 434

எத்திசை 437

எதுக்கு 341

எதிர்கொண் 502

எதிர்த்து 515

எந்தவினை 412

எந்தை 355

எப்போதுமிப்போ 84

எப்போதுமுப்போ 34

எம்பரனி 525

எய்ச்சிலை 95

எரிந்தன 350

எல்லாநல 517

எல்லார்தமை 467

எல்லாருமே 246

எல்லாவுயி 469

எல்லாவுலகுமவ 258

எல்லாவுலகுமொரு 355

எல்லைகாண் 236

எல்லைவ 421

எலிமயி 385

எவ்வகை 480

எவ்வுயிர் 387

எவ்வௌர் 401

எவனொரு 382

எழிர்வாய் 52

எழுகிரண 35

எழுத்திற்கு 458

எழுத்தொடு 222

எழுதிய 458

எழும்பும் 300

எள்ளுக்கு 322

என்துயரை 411

என்நெஞ்ச 283

என்மனை 310

என்வீட்டு 311

என்றதுஞ் 367

என்றதுபோத 351

என்றநஞ் 348

என்றரசன் 501

என்றிடலு 368

என்றியா 533

என்றினைய 91

என்றுகொண் 349

என்றுசொல 38

என்றுதா 399

என்றுமுள் 398

என்னடா 447

என்னநய 323

என்னனை 211

என்னாசை 136

என்னாதர 509

என்னாவின் 546

என்னாவியுங் 248

என்னிதயந் 216

என்னுடலு 243

எனக்கிளை 511

எனக்கினி 350

எனவிங் 347

ஏகநாதன் 83

ஏகமாகித் 79

ஏங்குமாந் 82

ஏத்தாத 343

ஏத்துமடி 530

ஏதமில் 72

ஏதினன் 24

ஏந்திர 82

ஏர்செறி 321

ஏ‘மேவு 139

ஏரடிக்குங் 509

ஏரணமென் 384

ஏரேறு 180

ஏரைமள் 126

ஏவுதலி 358

ஏற்பவர் 528

ஏற்றுநாத 82

ஏற்றுயர் 483

ஏற்றைப்பூட் 126

ஐங்கர 354

ஐந்தருவு 21

ஐந்துகர 338

ஐந்துகோ 449

ஐந்துமே 474

ஐந்துவய 313

ஐந்துறை 266

ஐந்தெழுத் 412

ஐயநான் 413

ஐயனேயால 547

ஐயாநின் 344

ஐயாநீர் 512

ஐயாவு 355

ஐயைவிசா 259

ஒட்டிப் 116

ஒண்டரு 47

ஒப்பிலா 503

ஒருகோடி 520

ஒருதேய 448

ஒருவருட 310

ஒருவன்விழி 224

ஒருவனடை 525

ஒருவனர 227

ஒருவனருச்சித் 226

ஒருவனருச்சு 225

ஒருவனனு 223

ஒருவனாலி 226

ஒருவனியா 228

ஒருவனிழிகி 226

ஒருவனிழிம 257

ஒருவனுப 228

ஒருவனுயர்சுரு 228

ஒருவனுயர்நான் 227

ஒருவனுர 228

ஒருவனொருசர 227

ஒருவனோரிட 224

ஒருவாத 294

ஒரேழு 301

ஒழிந்தவ 349

ஒழுக்கத்தை 430

ஒழுக்கமா 233

ஒள்ளொளி 477

ஒளியிலா 401

ஒன்றுந் 315

ஒன்றோக 479

ஒன்னார்வெரு 251

ஓங்காரத் 520

ஓங்குகட 484

ஓங்குகரு 165

ஓங்குதா 450

ஓசைதரு 264

ஓதரிய 392

ஓதிமாய 209

ஓதியகபா 54

ஓதுறு 545

ஓயாம 406

ஓரிரவன் 215

கங்கம் 356

கங்காதரன் 221

கங்குன்மீது 127

கங்கையடை 417

கங்கைவளை 472

கச்சேரி 302

கசிவாக 408

கஞ்சத்த 257

கஞ்சமலரஞ்சி 472

கஞ்சமலரய 253

கஞ்சமுந் 126

கட்டித்தயி 175

கட்டுமளக 148

கடமார் 264

கடமெனு 369

கடவுளு 307

கடல்வளை 535

கடலான 106

கடலினானு 147

கடன்முக 181

கடனாரண 418

கடுகியு 515

கடுத்து 118

கடுப்பொதி 67

கடைச்சங் 383

கண்கண்ட 407

கண்டங்கரி 143

கண்டமாத் 274

கண்டவர் 351

கண்டவிடத் 219

கண்டாரெ 516

கண்டாலம 115

கண்டிக்கு 397

கண்டுஆற் 118

கண்டேன் 312

கண்ணகன்ஞா 388

கண்ணகன்ற 109

கண்ணனை 418

கண்ணாடி 497

கண்ணாறிர 251

கண்ணாலே 370

கண்ணிர 511

கண்ணிலா 49

கண்ணிற் 338

கண்ணுதல் 209

கண்ணைமறை 215

கணவன் 362

கணியமு 341

கணியார் 499

கத்தாக 418

கத்திபுகை 436

கத்துகடல் 475

கதித்திட 400

கதித்தெழு 41

கதியாக 417

கதிர்தரு 127

கதிருநாய 444

கதிரைக்கட 114

கந்தசட்டி 240

கந்தமார் 442

கந்தமுறு 336

கந்தரங் 548

கந்தவேள் 135

கந்தனுக்கு 411

கந்தா 479

கப்பல் 40

கம்பரது 383

கம்பை 452

கயமலர் 96

கயல்சேர் 260

கயல்வரை 112

கயற்குல 67

கயற்பிறங் 64

கர்த்தனு 308

கரம்பொ 398

கரமஞ்சரி 129

கரியாரை 550

கருக்குல 540

கருத்தை 445

கருதரும் 532

கரும்பன்று 419

கரும்புய 375

கருமந்தி 143

கருமறை 534

கருமானை 550

கருவலம் 114

கருவாறு 340

கருவிழா 163

கரைக்காற் 164

கல்லாய் 480

கல்லைப்பிள 521

கல்விநலம் 214

கல்விமிக 213

கலத்தினற் 418

கலமற் 391

கலைகிளர் 545

கவிதிரு 542

கவியலர் 298

கள்ளறா 64

கள்ளன் 83

கள்ளித் 495

கள்ளுறை 494

களமெலா 102

களித்து 117

கற்பகத்தா 453

கற்பகத்தை 223

கற்பகநாட் 481

கற்பினோ 71

கற்றநூலு 113

கற்றமாந் 535

கற்றவர் 208

கற்றவனை 219

கற்றாங்கமை 251

கற்றார் 268

கற்றோனில 260

கறங்குறு 350

கன்றிய 470

கன்னங்க 495

கன்னலின் 128

கன்னரை 549

கன்னலொ 336

கன்னன் 217

கன்னித் 522

கன்னிமா 82

கன்னிய 281

கனகந்த 115

கனகமா 13

கனமலர் 150

கனிபெற 438

காக்குமள் 126

காங்கேயன் 511

காசில்பொற் 61

காட்டலோ 470

காட்டில்வாழு 83

காட்டினி 315

காட்டுக்குயி 198

காடுவல்லை 119

காடெலாங் 48

காடெல்லாங் 108

காடேது 303

காண்டகு 48

காண்மின் 32

காணும்வெ 452

காணுமவ 370

காத்தவனே 201

காதலிற் 533

காந்தத்தில் 130

காந்திசேர் 112

காந்தியி 526

காப்பவிழ் 420

காமகச் 194

காமசரம் 196

காமரு 440

காமாரி 338

காய்கடும் 103

காய்ச்சுத் 63

காய்தரு 442

காயமது 403

காயமலர் 389

காயும்நெரு 117

காயுமா 287

கார்த்திசை 175

கார்படியு 163

காரேறுதண் 267

காரைசீவு 413

கால்வாசி 510

காலத்து 219

காலமெனு 436

காலன்றனை 178

காலனு 354

காலில்வீழ 66

காலுந்து 473

காலைக்குண 466

காலையந்தி 467

காவரசு 95

காவிதாமரை 102

காவிரிப்பூ 385

காவெலாம் 48

காவைப் 339

கான்குழ 67

கான்மரு 145

கான்றசோதி 113

கானவனா 355

கானவிலங் 464

கானாநங் 193

கானாவூர் 90

கானிரங்கு 42

கிழங்கு 325

கிளிநச்சி 398

கீதமளி 152

கீதமேம் 237

கீரனாம் 548

குகன்றா 250

குஞ்சரமு 43

குடியரசு 403

குடையிற் 340

குணக்கி 299

குதிக்கின்ற 197

குந்தல 194

குமைபடி 391

குரவுறு 233

குருக்க 83

குலங்குடி 492

குலத்தா 517

குலத்துளோர் 400

குலப்பதி 549

குலமணி 66

குவலய 124

குழையி 505

குறையும் 530

குன்றாக் 498

குன்றோடி 346

கூட்டிற் 214

கூடம்புடை 130

கூடலிழை 493

கூடிலுண் 347

கூடும் 316

கூதலுடை 96

கூறுசீ 319

கூறுசொற் 13

கூறுதனிற் 289

கூறுவேழ 65

கேட்பது 272

கைதாய் 248

கைவிரல் 376

கொங்கலர் 217

கொஞ்சிய 48

கொடியர்தம் 360

கொடியவெ 412

கொடியிடை 43

கொடியெடு 446

கொடிவள 134

கொண்டு 43

கொத்துடை 103

கொந்தக 234

கொம்பென 273

கொல்லுஞ் 467

கொழித 332

கொழும்பிவண் 513

கொழும்புக்கு 513

கொள்வதின் 348

கொள்ளுமுக் 55

கொள்ளுவ 492

கொற்றமிகு 96

கொன்றேன் 481

கோடிக்கதி 464

கோதிலா 519

கோரந்தோய் 109

கோலமா 113

கோவிற்கட 163

கோவிற்றன் 62

கோழிக்குல 466

கோனிருக்கு 404

சங்கத்தி 103

சங்கம்பொலி 498

சங்கமொடு 263

சங்கரனை 22

சங்குட 541

சண்டனை 253

சத்தார் 355

சத்தியந்தயை 527

சத்தியநூ 303

சத்தியநெ 323

சத்தியமான 530

சத்தியவே 84

சத்திரங் 518

சத்துச் 239

சந்தமு 252

சந்தமார் 440

சந்தமான் 536

சந்தனமரத்தினை 323

சந்தாப 310

சந்திர 193

சபாபதி 239

சம்பந்த 114

சரித்திர 385

சன்னாசி 84

சாதிநாகி 113

சாந்த 441

சாய்த்திடு 56

சாய்ப்பா 246

சாரங்க 388

சாரம்படு 298

சாருஞ் 451

சாலக்கனி 250

சாலிக்கு 115

சாவுக்கும் 513

சாவேது 303

சாற்றிய 18

சித்தத்தி 366

சித்தமுறு 24

சித்தாந்தசைவ 268

சித்தாந்தலை 239

சித்திர 154

சிந்தனை 531

சிந்துர 101

சிந்தைநீ 31

சிரத்தை 251

சிரமாலை 222

சிலையின்றி 549

சிலையினை 357

சிவசமய 308

சிவஞான 332

சிவஞாநம் 452

சிவம்புரி 211

சிமேபர 517

வி‘யநம 501

சிற்றம்ப 354

சிறந்தேனு 531

சிறுநுதல் 5

சிறுப்பிட்டி 397

சிறுவரை 363

சின்னத் 495

சினத்திய 68

சினவரி 19

சீதநறு 325

சீதையுங் 373

சீர்கொட்செ 60

சீர்கொண்டபர 189

சீர்கொண்டபுள் 267

சீர்கொண்டவோ 529

சீர்செறி 138

சீர்தங்கு 97

சீர்பூத்தகரு 184

சீர்பூத்ததென் 104

சீர்பூத்தமறைநான் 261

சீர்பூத்தமறைமுத 185

சீர்பூத்தவிவல 445

சீரிமலி 388

சீர்முந்துகாரை 451

சீர்முந்து‘ற் 245

சீர்மேவி 331

சீர்மேவுநதி 56

சீர்மேவுநவ 309

சீர்மேவுமாவை 373

சீர்வள 400

சீர்விளங்கு 135

சீரணங் 339

சீரணஞ் 314

சீரணி 335

சீரரச 137

சீரார்கதி 176

சீரார்வண் 389

சீரானஎந் 431

சீரானதேச 302

சீரிரகு 384

சீரிலங்கு 34

சீருறு 448

சீரேறுகரு 185

சீரேறுபர 264

சீரேறுமல 444

சீரேறுவண் 176

சீரோங்கு 351

சீலமாத 545

சீற்றத் 346

சீற்றரி 476

சுக்கிரீ 317

சுகமஞ்சு 390

சுடர்க்கொடி 143

சுத்தவான் 48

சுத்திபெற 160

சுந்தர 377

சும்மா 452

சுவையார் 516

சுற்றார் 518

சுன்னைக் 318

சுன்னைவாழ் 353

சூரியகிர 442

சூரியசந் 303

சூரியன்றன் 156

சூலமின் 348

சூலைசொ 325

சூலையெ•ன் 343

செங்கதிர் 439

செங்கமல 213

செங்கிர 475

செஞ்சடி 203

செட்டிகன் 232

செத்தார் 220

செந்தமிழ்க் 544

செந்தமிழ்ப்பா 352

செந்தமிழ்வாண 247

செந்தமிழஞ்சிங் 437

செந்தமிழுஞ்சூரி 452

செந்திருசேர் 326

செந்திருநிறை 53

நெந்திருவா 16

செந்தூர் 242

செந்தேன் 372

நெந்நெல்லும் 137

செந்நெற்பழ 138

செப்பருங் 507

செப்பற்கரி 210

செம்பொனா 14

செம்மலர் 387

செம்மான் 282

செம்மைய 355

செய்தபிழை 394

செய்தவர் 18

செய்தேயெடு 58

செய்யகங் 87

செய்யகேது 62

செய்யநோய் 82

செய்யமா 30

செல்லவிடு 382

செல்லாரு 260

செல்லினருள் 101

செல்லுஞ்சென் 112

செல்வஞ் 470

செல்வமை 106

செல்வமி 136

செல்வமில்லை 213

செல்வீர் 500

செவ்வித்திரு 103

செழுந்தமிழ் 521

செற்றயி 361

செறுவோர் 5

சென்னை 399

சேணுற்றி 260

சேயசெங் 69

செயூரம 339

சேயேமரி 202

சேயோனவ 547

சேர்ந்த 36

சேலாம்விழி 479

சேற்றிற் 326

சேறணிந்த 68

சேனையும் 12

சையநேரு 128

சைவம் 137

சொல்லணி 313

சொல்லரிய 34

சொல்லவந் 320

சொல்லுநூற் 327

சொல்லுமனு 256

சொல்லுயர் 398

சொல்லுரு 274

சொல்லுற்ற 33

சொற்கொண்ட 168

சொற்பத 102

சொன்னமொழி 42

சோரனென்று 44

சோரிக்க 371

சோலையவா 499

ஞாயிறுநாள 528

ஞாயிறுபோலு 364

ஞாலத்திலே 514

ஞானமிக 235

ஞானவொ 342

தக்கசோழ 505

தக்கதம் 544

தக்கரி 417

தக்கைதன் 195

தகரங்க 508

தங்கந்தனை 417

தங்கம்புரி 150

தங்கைச்சி 511

தஞ்சமெ 281

தண்டபாணி 110

தட்மி 341

தண்டலைத் 142

தண்ணமர் 48

தண்ணெனீர் 65

தடம்புகு 442

தடமறுகி 387

தடியென 549

தத்தஞ்சம 322

தத்தித்தோம் 41

தத்துபரி 195

தத்துவர் 301

தந்தனதான 201

தந்தாளிரண்டு 116

தந்தியின் 506

தந்திர 507

தந்தைதா 215

தந்தைமொழி 213

தந்தைய 367

தந்தையொரு 215

தம்புயும் 316

தம்பெருமை 214

தம்பைகாவல 12

கம்பையா 498

தம்மதநீத் 219

தம்மனைக் 216

தம்முடை 394

தம்மையே 243

தமிழ்ஞ’மி 527

தமிழேதொனி 523

தரளமாலை 292

தருபவனு 308

தருவளர் 158

தருவேமெரி 247

தவித்த 497

தற்பரஞ் 378

தற்பரமே 201

தன்கடவுட் 21

தன்மங்கல 137

தன்னாக்கம் 220

தன்னாடு 506

தன்னுயிர் 220

தன்னுறு 506

தன்னைவள 468

தனமுடை 403

தனிப்பணி 47

தனிவாழு 143

தனியாதரிக் 130

தாக்கணங் 418இ 495

தாங்கரிய 280

தாங்கரு 441

தாங்கனிந்து 102

தாடலைபோற் 208

தாதைந 541

தாதையு 532

தாதைய 315

தாமுழந் 491

தாயார் 325

தாயாரிட 517

தாயொடு 284

தார்கொண்ட 508

தாரகமா 372

தாரகை 314

தாரணியோர் 53

தாரமிஞ்சு 146

தாலக்கனி 199

தாவப்ப 396

தாவர 356

தாளம்வல் 41

தாளமிருக் 302

தாளினிற் 490

தானதிக பவ 38

தாதிகவரச 35

தானதிக வாரிதி 37

தானேஇய 41

தானேதா 303

திக்குவிச 502

திகர்தபெட் 113

திங்கண்முக 123

திங்கள்சூடி 368

திங்கள்தோறு 63

திங்களா 441

திடமாம 340

திணைமடந்தை 25

திமிரமெழு 57

திரங்கொண் 250

திராவிட 364

திரியதையுண் 55

திரிவரத 351

திருக்கினம் 187

திருஞானமறை 139

திருடினான 224

திருத்தவ 241

திருத்துங்க 238

திருத்தொண் 333

திருந்துசங் 439

திருந்துபுகழ் 40

திருநாவ 380

திருமகள் 203

திருமகனா 262

திருமருவி 261

திருமருவு 34

திருமறைப் 534

திருமாலுமல 263

திருமேவு 386

திருவளர் 33

திருவளர்மதுரை 52

திருவளர்மார் 531

திருவளரில 70

திருவளரும் 389

திருவாநல 240

திருவார்க 255

திருவாருநல்லை 134

திருவிளங் 324

திருவினாற் 237

திருவுலாங் 120

திருவுமெல் 344

திருவுற்ற 337

திருவெழுஞ் 16

திருவேய 344

திருவேளை 209

தின்னத்தின் 117

தினகர 418

தினமுமெரு 514

தீம்பலவி 212

தீயமரமொ 313

தீராதவிலை 519

துங்கக்குறவர் 128

துங்கராசா 82

துட்டாமட் 116

துடியிடை 276

துதிக்கும் 300

துய்யநதி 506

துய்யபர 386

துவரிதழ் 210

துழனிநன் 64

துறைநிலவு 173

துன்பமக 481

துன்றிலாப 14

துன்னல 516

தூக்கார 357

தூயோர்பர 517

தூவிமயின் 136

தெங்கங் 372

தெட்டு 350

தெரியாததொ 220

தெரிவரிய 229

தெருமருந்து 397

தெள்ளாவி 234

தெள்ளித் 522

தெளிக்குஞ் 295

தெளிவுறு 49

தென்கயிலை 329

தென்மயிலை 279

தென்மொழி 526

தென்னிரந்த 68

தேகசுக 285

தேங்கமழ் 103

தேங்குபுன 128

தேங்குமெய் 244

தேசாரிள 175

தேசிகராவர் 231

சேசுகந்த 472

தேடரிய 331

தேம்பொழி 541

தேமணக்கு 457

தேமாங்கனி 515

மேமேவு 265

தேமேவூமால 144

தேயமெல் 251

தேயும்பற்க 57

தேர்தருவிரா 273

தேர்•முதுதே 268

தேவதேவ 121

தேவபாடை 238

தேவமுனிவ 501

தேவமுனிவர் 561

தேவர்க 493

தேர்கோ 315

தேவரெலாங் 437

தேவன்மானிட 84

தேவாரம் 318

தேவியோர் 415

தேவுப்படி 467

தேவேயம 491

தேறுமெய் 450

தேன்-ய்த 479

தேனேர் 323

தேனைத்தாங் 126

தேனைநிகர் 395

தேனோகனி 268

தேனோங்கு 212

தையிட்டி 396

தொட்டவ 411

தொல்காப்பிய 444

தொலையாத 516

தோளாமணி 517

தோற்றுமா 81

தோன்றவென் 401

தோன்றாத் 357

தோன்றுமப் 65

நக்கர்நகு 285

நகுலமுனி 284

நகுலைப் 282

நகுலையாதி 286

நச்சியல் 396

நஞ்சம் 299

நஞ்சுபோல் 61

நட்டமே 401

நடந்தாளொரு 198

நத்தமூருங் 137

நத்தேபெற் 199

நதியரவ 121

நந்தாவன 136

நந்தாவிள 516

நந்திமகா 262

நம்பரை 452 நம்பியரு 448

நம்பிவந் 250

நரராசன 339

நல்லதொழு 503

நல்லயாழ் 242

நல்லவிநா 414

நல்லறிவில் 314

நல்லார்க 356

நல்லிருப்பு 425

நல்லைநக 223

நல்வனமார் 122

நலத்தோர் 496

நலம்புனை 257

நலமதாகவே 62

நவமாய 370

நள்ளார் 324

நளனை 324

நற்சங்கு 396

நற்கருணை 84

நற்புறுசுக 142

நற்றவஞ் 83

நறுமலர் 276

நன்மங் 312

நன்மைசெய் 161

நன்றே 344

நன்றேசெயி 46

நன்னகர் 352

நன்னட 318

நன்னடைப்பி 68

நன்னூலாம் 106

நன்னெடுங் 66

நாக்கு 313

நாங்கள் 511

நாங்கள் ஐவேம் 512

நாட்டமா 400

நாட்டுகின்ற 40

நாட்டுப்பொ 394

நாடும் நாட் 301

நாதநம்பகை 533

நாதபஞ் 371

நாதனே 275

நாமகணாவிற் 308

நாயினுங் 415

நாயேனை 342

நாராணனைப் 22

நாரந்தனை 396

நாவரசர் 519

நாவிநன் 71

நாவிலங்கை 70

நாவினாலுல 15

நாளவமே 39

நாளுந் 322

நாற்றமுத 497

நாற்றிசை 527

நானமணி 280

நானாசமய 221

நிகரில் 329

நித்திலத் 423

நிலங்கையி 527

நிலமேற் 285

நிறைந்திடு 236

நிறைநிலவு 172

நிறையுமுள்ள 68

நின்றகா 18

நினையாய்வாழி 6

நீ அடித்திட 117

நீக்குமா 67

நீங்கிய நீ 355

நீங்கியவெ 312

நீட்சியுட 404

நீடலுறழ் 95

நீண்டான் 339

நீண்டுயர் 425

நீணிலம 232

நீதியடைந் 246

நீதியும் பொறை 12

நீதிவித்த 107

நீயலாற் 31

நீராழி 390

நீரிலேபுண்ட 109

நீரேறு 354

நீலாம்புத 191

நீள்பெருவ் 507

நீறருட் 342

நுண்மையி 443

நும்வாழ் 498

நூறுநாலாறு 163

நெட்டையீல 218

நெடுநாளாக 310

நெஞ்சுநடிப் 284

நெற்சாதி 230

நேரான வெள்ளி 16

நேரியன்சர 112

நொச்சியம் 245

நோக்கினிய 425

நோயுமாரண 107

நோற்றலும் 64

பகுத்தவந் 112

பகுதியுந் 266

பங்கயச் 533

பங்கயன 386

பங்குனிசித் 175

பச்சடைப் 66

பச்சை 337

பசியால் 543

பஞ்சர 372

பஞ்சிதோய் 440

பட்டிடை 496

படநிரையர 127

படர்வேலை 211

படிகநிறத் 23

படியுணர் 273

படைத்தளித் 308

படைமடத்தை 137

படையெழு 449

பண்டத்திடு 118

பண்டைநற் 277

பண்டைய 234

பண்ணவர் 530

பண்ணார் 509

பண்ணாருந் 43

பண்ணியை 422

பண்ணிற்றோய 112

பண்ணுக் 340

பணமணி 277

பணியார் 280

பணிலம்வெண் 48

பத்தியரும் 496

பத்தியுடன் 254

பத்தினி 351

பதங்கஞ் 211

பதிக்கு 444

பதிபசுபாசம் 54

பந்தமுற 402

பம்பிய 540

பயம்புவிக் 120

பரதற்கு 502

பரப்புமேகலை 111

பரவுநல்லை 68

பரவுப 323

பரவுமால் 120

பரவையிடஞ் 210

பலவிதச்செந் 126

பவளத்திய 159

பவனந் 508

பழமறை 277

பள்ளக்கடற் 165

பன்னம 26

பன்னரிய 252

பன்னவு 400

பன்னாண் 13

பன்னிசைப் 67

பன்னிரண்டு 165

பன்னிருயா 213

பன்னுபுகழ் 458

பற்றினார் 548

பற்றுடனே 254

பறத்தலை 210

பறவைப் 464

பாகனசொல் 136

பாட்டளி 420

பாட்டுபட்டி 302

பாட்டும்பய 540

பாடலங்கந் 130

பாடிக்கரை 465

பாடுவன 446

பாண்டவர் 311

பாண்டிமன் 547

பாணியி 357

பாதகஞ் 395

பாதநூபுர 162

பாதபத் 317

பாதவத்தை 130

பாயசங்கண்டு 129

பார்த்தான் 43

பார்ப்பணை 250

பாரதியே 438

பாராய்நீ 44

பாரிலங்கு 29

பாரிலக்கதை 141

பாரிலுள்ள 20

பாரின்மேவு 56

பாரினல்ல 400

பாருநாக 30

பாருலகு 286

பாரேழு 539

பால்நினை 431

பாலகரை 363

பாலங்கொ 356

பாலர்முதி 411

பாலரவி 392

பாவனைப் 274

பாழ்வினை 366

பிங்கல 480

பிடிக்குள் 118

பிடியன்ன 143

பிணக்குப் 344

பிணமாக் 464

பித்தாளர் 346

பிள்ளைமதிச் 221

புகலிடநீ 201

புகழெலாம் 290

புண்டரிக 505

புண்டரீ 13

புண்ணியஞ் 310

புண்ணியப் 236

புண்ணியபாவ 530

புண்ணியமே 249

புத்தபிரா 436

புத்தபிரான் 446

புயங்கந் 299

புயனிக 506

புரக்குமந்தப் 40

புரங்களாறிய 65

புரட்டாதி 175

புரர்தெற 349

புலர்தரு 442

புலரிவந் 167

புலலியினெழு 544

புலவர்கள் 548

புலவரொவ் 548

புலிவாயமா 245

புவனியிற் 230

புவியேபெறு 51

புழுவும் 358

புன்வந் 145

புன்னைப்பொது 248

புன்னைமா 495

பூசிக்குமா 80

பூண்ட 496

பூதகணாதி 529

பூதமெடுத் 281

பூமணக்கு 446

பூமாதரு 142

பூமாதுபூவி 135

பூமேவு 377

பூமேவுசூரி 279

பூமேவுமாம் 208

பூமேவுவாவி 174

பூர்வகர் 411

பூரணஞா 450

பூவாண 345

பூவார்மலர் 241

பூவாழு 282

பூவிற்றமி 322

பூவின்மீதே 173

பூவின்மெய்ம் 222

பூவினன் 348

பூவுளோனரி 54

பூவெலாந் 31

பெண்ணருமை 214

பெண்ணை 497

பெண்மணியை 217

பெருகியவெகு 55

பெரும்புகழ் 320

பெற்றக 314

பெற்றதிரு 468

பெற்றபிள்ளை 412

பெற்றம்பறி 211

பெற்றவ­ 122

பெற்றவர் 531

பெற்றவரை 362

பேரம்பல 239

பேரானபாரா 84

பெறுபயன் 426

பைப்பணிப் 111

பொங்கரிடை 125

பொங்குகந்த 102

பொங்குகூளி 112

பொங்குவெவ் 441

பொதியமலை 71

பொய்ப்பொரு 493

பொருந்திய 442

பொருபூத 340

பொருவிலர 546

பொருளுங் 490

பொல்லா 419

பொல்லாத 378

பொற்பகமே 311

பொற்புதை 438

பொற்றாமரை 311

பொறிசால் 372

பொன்கதிரை 409

பொன்பூத்த 168, 186

பொன்பூத்தமணி 235

பொன்மேவி 311

பொனறவழ் 125

பொன்றிகழ் 374

பொன்னக 352

பொன்னங்கலை 137

பொன்னம் 516

பொன்னம்ப 334

பொன்னபலவ 517

பொன்னனை 136, 245

பொன்னருங் 514

பொன்னசை 250

பொன்னிரவி 45

பொன்னின்மா 316

பொன்னுலக 190

பொன்னுலவு 87

பொன்னுலோக 63

பொன்னூ 346

பொன்னைப் 397

பொன்னைப்பொ 199

பொன்னையு 416

போக்கிய 247

போகவிடா 40

போங்கா 354

போதக 356

போதநாண் 62

போதப்பொலி 136

போதேகிய 210

போய்விடுமே 58

போயினரே 42

போற்றிநா 325

போற்றுகம்வம் 269

போற்றுமடி 135

போற்றுமாதுளை 108

போற்றுமு 365

போனபின்ன 36

மக்கர்குரு 188

மங்கலமார் 262

மங்களழுது 258

மங்காதநீதி 87

மங்கைபே83

மங்கையர்கைப் 101

மங்கையி 394

மஞ்சஞ்சவ் 291

மஞ்சளாவிய 110

மஞ்சின்முத் 49

மட்டவிழு 253

மட்டிவண் 400

மட்டுவிலா 395

மடைகிடந் 49

மண்டலமுத 192

மண்டிய 440

மண்ணக 502

மண்ணாய் 465

மண்ணுலகி 216

மண்மேலு 311

மணக்குஞ்சர 129

மணப்பதும 69

மணிக்கழ 69

மணிகொண்ட 184

மணிதங்கு 17

மணிநிறக் 27இ 28

மணிமருள் 421

மணிவளர் 393

மணிவான் 248

மதிதங்கு 374

மதியணி 277

மதிநில 540

மதுமலர்119

மதுரமொழு 542

மதுரையி 352

மந்திரிகேளா 192

மரந்திக 374

மரணப் 465

மரபும்புகழ் 15

மருக்காவி 115

மருக்கோட் 127

மருதயி 298

மருந்தென 491

மருந்தே 357

மருமமதி 225

மருவலர் 549

மருவுகங்கை 127

மருவுநிழ 149

மருவுமஞ் 126

மருளுறு 546

மல்லாகமாதக 164

மல்லைகைசண் 212

மலர்ந்து 462

மலைகளுட் 330

மலையாங்கயிலை 142

மலைவைத்த 345

மற்குரிய 135

மற்படுகுன் 272

மற்றதனை 459

மற்றவர் 361

மற்றுமோர் 304

மறுவற்றில 199

மறைந்த 349

மறைமுடி 238, 272

மறைமுதலா 143

மறையவர் 233

மறையொரு 273

மன்றறுன்று 536

மன்னனா 70

மன்னனேமன் 192

மன்னர்மன் 25

மன்னார்மா 142

மன்னியவின் 31

மன்னியவள 393

மன்னுமா 387

மன்னோதன 419

மனமகிழ் 533

மனமதி 370

மாகத்தன் 82

மாகயப் 397

மாகாலாநய 287

மாகனலை 44

மாகாளர் 310

மாசிலா 353

மாணிக்கக் 86

மாணிக்கவா 238

மாணிலை 249

மாணிக்கவீர 254

மாணிலா 447

மாத்திரை 286

மாதங்கவரை 72

மாதர்மைந் 23

மாதண்டம் 166

மாதமதின் 36

மாதமும் 141

மாதரார் 214

மாதவனுநா 550

மாதயவாம் 38

மாதரை 498

மாதவத்தி 296

மாப்பாண 453

மாமலைவல் 481

மாலைப்பொ 466

மாலொளித் 550

மாயமாய் 381

மாயவஞ்சக் 62

மாயாவ 372

மாரசாயக 193

மாரிமேகந் 111

மாலைதோறு 110

மாவலிகங் 437

மாவெடுக்குஞ் 156

மாவையமா 191

மாறாதபுனல் 37

மாறில்பாளை 49

மாறில்லாதே 83

மாறுமுக 496

மான்கா 245

மானமகி 301

மானிட 480

மானின்க 437

மானினைக்கய 200

மானுரு 316

மானேமட 193

மானேறு 356

மானைக் கய 200

மிகுதரு 442

மிஞ்சுபிர 359

மிடிமைநோய் 141

மின்னஞ்சு 473

மின்னற்கொடி 193

மின்னிமுகில் 146

மின்னுங்காரும் 109

மின்னேரி 384

மின்னைநிகர் 196

மீதெழுந்து 37

மீனவனே 44

மீனனெடுங் 43

மீனுறு 507

முடிவிலாதுறை 164

முடிவேந் 493

முத்தாய் 503

முத்தவெண் 96

முத்துருவா 294

முத்தவட 293

முத்தலங்கத் 421

முதனடுவிறு 528

முதுமையுற 422

முதுவேனிற் 425

முதைச்சுவற் 4

முந்தமா 54

முந்திப்பிந் 469

முந்துங் 14

முந்தேறு 317

முந்தை 402

முந்தையாம் 273

முந்துமகங் 405

முந்துமோட்ச 82

முப்பத்து 327

முப்பரிநூன் 252

முப்பலுமப் 302

முரம்டையட 121

முருந்து நிரை 245

முழுமுதலை 211

முற்பட்டா 68

முற்றாவய 312

முன்னமொ 339

முன்னர் 353

முன்னவனோ 317

முன்னாட் 51

முன்னாளர 524

முனனாளிற் 319

முன்னீ 395

முன்னூலுணர் 13

முன்னைநாளி 111

மூடருக்கும் 213

மூவுலகும் 80

மூன்றேபதா 343

மெத்தும் 69

மெய்த்திகழ 232

மெய்ந்நூல்398

மெய்ப்புலவ 135

மெய்ம்மன 323

மெய்யறிவின்ப 187

மெய்யுரை 547

மேடமுகைப் 283

மேலுமுயிர் 405

மேலோர்புகழ் 145

மேலைமுனை 448

மேவுமலைமானை 144

மேழிக்கொடி 141

மேற்றிசை 449

மேனமறைப் 145

மேனிலாவெறி 30

மோகனசுந் 157

மைந்தன்விதை 218

மைப்பார் 259

யாக்கைவரு 298

யாதைமா 273

யாதையோது 402

யாதுரை 316

யாழ்ப்பாண 430

வசையறு 232

வஞ்சஞ் 346

வஞ்சமுற் 366

வஞ்ச வஞ்சி 61

வஞ்சியர் 379

வட்டவுரு 422

வட்டநிதம் 411

வட்டிக்கட 314

வட்டித் 256

வடநாட்டி 383

வடமலைச் 154

வடவேட்டிற் 40

வடாஅது 454

வடுமானிப் 396

வண்டாமரை 298

வண்டினந் 532

வண்டார்மா 200

வண்ணம் 491

வண்ணமலி 46

வண்ணவிளம் 216

வண்ணை 499

வண்டுநற 412

வண்டுற்ற 544

வணங்குமரன் 36

வந்தளி மது 53

வந்தளி மது 53

வந்தாயோடா 116

வந்திக்கு 508

வந்துடணிள் 202

வரச்சந் 115

வரந்தருந் 32

வரமுடைக் 61

வருகவென் 50

வருமெபூத் 274

வருவீரெ 346

வரையெலா 31

வரையெழு 473

வரையேறி 514

வல்லவிதி 220

வல்வழக் 496

வழங்குய் 376

வழுதியார் 345

வழுவுற 233

வள்கலேமுனி 103

வள்ளிபடர் 277

வள்ளியோரி 114

வள்ளுவ 443

வளமைசேர் 111

வள்மையர் 66

வன்றொண்ட 318

வன்னமாங் 125

வன்னிநாதன் 71

வனப்பதி 320

வனைதரூ 248

வனைந்துமா 23

வாக்கிர்சர 223

வாக்கிற் 494

வாங்கும்கரை 146

வாசமேவு 140

வாட்ட 347

வாடப்பதி 119

வாணிகம்மிக 141

வாதமுதன் 38

வாநதி 90

வாமமேகலை 111

வார்காட்டும் 137

வாரணஞ் 509

வாரணமெட்டும் 12

வாரிவளஞ் 35

வாருலவு 32

வாவிநீர் 3166

வாவிமண 451

வாவியின்கரை 113

வாவியெழு 317

வாழிபொற் 518

வாழியினி 454

வாழைநெருங் 531

வானகத்தி 425

வானத்திற 538

வானத்தின் 418

வானமதால் 87

வானமுகட் 469

வானமுறு 435

வானவன்மா 130

மானுலவும் 402

வானூர் 373

வி

விட்டுக்கட 302

விடத்தலை 395

விடியற் 469

விடுவதென் 40

விண்டட 565

விண்டல 239

விண்டுலாவிய 125

விண்டுவின் 415

விண்டொடு 459

விண்ணளவு 403

விண்ணளவை 324

விண்ணாடு 222

விண்ணிலிருந்து 86

விண்ணுலாவி 81

விண்ணொன்று 26

விண்புதைத் 69

விதம்பித 515

விதியின் 500

விதியின்முறை 147

விதிவலிமைப் 408

விந்தைசெறி 168

விம்மிதமுடை 547

வியர்வு 441

விரகனாமுத் 51

விரித்த 343

விருப்பந்தங் 151

விரைதவழ் 440

வில்லவ 356

வில்லாடன் 244

வில்லுயர் 248

விழாமை 356

வின்மேல்விடு 312

வீதியெங் 536

வெங்கண் 15

வெண்கவரி 280

வெண்ணிறு 343

வெய்யதா 348

வெய்யராவ 315

வெயிலேறிர 123

வெருவும்போர் 317

வெள்ளிய 247

வெள்ளைநிற 420

வெள்ளைப்பட் 547

வெள்ளைமாட 441

வெறியென 4

வேகமாகமு 284

வேடம்பல 219

வேண்டிய 32

வேண்டும் 543

வேண்டுவார்

வேணிச்சவ் 66

வேதத்தி 16

வேதநால் 231

வேதபாடை 537

வேதம்வலி 223

வேதமுரை 503

வேதவொலி 136

வேதநேர்வழி 295

வேதன்புவி 257

வேதணிழந் 285

வேந்தர்சம 141

வேயவேம் 505

வேற்றோர் 314

வைகும் 345

வையந் 347

வையமன்னு 25

****

முற்றும்